Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மரியா ஷரபோவாவிற்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடைக்காலம் குறைப்பு. மரியா ஷரபோவாவிற்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடைக்காலம் குறைப்பு. ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிற்கு விதிக்கப்பட்டிருந்த இரணடு வருட கால போட்டித் தடை 15 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஊக்கமருத்து பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டிற்காக மரியா ஷரபோவாவிற்கு இரணடு வருட கால போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடைக்கு எதிராக மரியா ஷரபோவா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டை அடுத்து அவரது தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமை அவர் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் போட்டிகளில் பங்குப…

  2. 3 வது ஒருநாள் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்டு தொடரை வென்றது பாகிஸ்தான். 3 வது ஒருநாள் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்டு தொடரை வென்றது பாகிஸ்தான். பாகிஸ்தான்,மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் 3 வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி அபுதாபியில் நிறைவுக்கு வந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் 111 ஓட்டங்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2 வது ஒருநாள் போட்டியில் 59 ஓட்டங்களாலும் ,இன்றைய போட்டியில் 136 ஓட்டங்களாலும் வெற்றிப்பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற நிலையில் தொடரை வென்றது. போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணியின் தலைவர் அசார் அலி முதலில் துடுப்பெட…

  3. கபடி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு தடை கபடி உலகக்கோப்பை அதிகாரபூர்வ லோகோ. | பிடிஐ. 12 நாடுகள் பங்கேற்கும் கபடி உலகக் கோப்பை போட்டிகள் இந்த வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இருநாட்டு உறவுகளில் பதற்றம் நீடிப்பதால் பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பையில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் கருதி பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளியன்று முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா-தென் கொரியா அணிகளும் ஈரான் அணி புதிய அணியான அமெரிக்க அணியுடனும் மோதுகின்றன. பாகிஸ்தான் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது குறித்து சர்வதேச கபடி கூட்டமைப்பு தலைவர் தியோராஜ் சதுர்வேதி கூறும்போது, “இர…

  4. உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் 48 நாடுகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் 48 நாடுகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் தலைவர் Gianni Infantino இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போது அளித்த வாக்குறுதிகளை விடவும் அதிகளவு எண்ணிக்கையிலான அணிகள் சேர்க்கப்பட வேண்டுமென அவர் தற்போது கோரியுள்ளார். 16 அணிகள் முதல் நொக்அவுட் சுற்றில் மோதிக் கொள்ள வேண்டுமெனவும் அதன் பின்னர் தற்போது காணப்படுவது போன்று 32 அணிகளைக் கொண்ட சாதாரண சுற்றுக்களை நடத்த முடியும் எனவும் அவர் யோசனை முன்வைத்துள்ளார். …

    • 0 replies
    • 280 views
  5. அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலும் அஸ்வின் 400 விக்கெட்டுகள் ராஸ் டெய்லர் விக்கெட்டைக் கைப்பற்றிய அஸ்வின். | படம்: ராய்ட்டர்ஸ். 38 டெஸ்ட்கள், 101 ஒருநாள் போட்டிகள், 45 டி20 சர்வதேச போட்டிகள் விளையாடியுள்ள அஸ்வின் தனது 400-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். கொல்கத்தாவில் இன்று இந்தியா வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியதோடு, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது. இதில் 2-வது இன்னிங்சில் நியூஸிலாந்து பொறுப்பு கேப்டன் ராஸ் டெய்லர் விக்கெட்டைக் கைப்பற்றிய போது அஸ்வின் தனது 400-வது சர்வதேச விக்கெட்டைக் கைப்பற்றினார். மொத்தம் 185 சர்வதேச போட்டிகளில் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து ஆடியுள்ள அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 38…

  6. பாடசாலை மட்ட சைக்கிளோட்டம் யாழ்.மாணவிகளும் பதக்கம் வென்றனர். அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட சைக்கிள் ஓட்டப் போட்டியில் யாழ்ப்பாண மாணவிகள் பதக்கங்கள் வென்றுள்ளனர். அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சைக்கிள்ஓட்டப்போட்டியானது கடந்த 30 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெற்றது. 24 கிலோமீற்றர் கொண்ட இந்த சைக்கிள் ஓட்டப் போட்டியில் யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் சகோதரிகள் வெள்ளி,வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றுள்ளனர். அந்த வகையில் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவி விதுசனா வெள்ளிப் பதக்கத்தினையும்,யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலைமாணவி வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டனர் என்பத…

  7. 2 வது ஒருநாள் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்டது பாகிஸ்தான். 2 வது ஒருநாள் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்டது பாகிஸ்தான். பாகிஸ்தான்,மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் 2வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நிறைவுக்கு வந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் 111 ஓட்டங்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி ,3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இன்றைய வெற்றிமூலமாக ஒருபோட்டி மீதமுள்ள நிலையில் தொடரை வென்றது. போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணியின் தலைவர் அசார் அலி முதலில் துடுப்பெடுத்தாட விருப்பம் வெளியிட்டார். அதனடிப்படையில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்க…

  8. தென் ஆபிரிக்க, அவுஸ்திரேலியா 2 வது ஒருநாள் போட்டி-142 ஓட்டங்களால் தென் ஆபிரிக்க அணி வெற்றி. தென் ஆபிரிக்க, அவுஸ்திரேலியா 2 வது ஒருநாள் போட்டி-142 ஓட்டங்களால் தென் ஆபிரிக்க அணி வெற்றி. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும்,பிளாசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிக்கும் இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இடம்பெற்று வருகின்றது. இந்த இரு அணிகளுக்கும் இடையில் தென் ஆபிரிக்காவின் ஜோகான்னஸ்பேர்கில் நிறைவுக்கு வந்த 2 வது ஒருநாள் போட்டியில் 142 ஓட்டங்களால் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று அவுஸ்திரேலியா அணியின் தலைவர் ஸ்மித் முதலில் களத்தடுப்பு முடிவை மேற்கொண்டார் . அத…

  9. இங்கிலாந்து பிறீமியர் லீக்: லிவர்பூல், செல்சி வெற்றி இங்கிலாந்து கால்பந்தாட்ட அணிகளுக்கிடையே இடம்பெறும் பிறீமியர் லீக் தொடரில், கடந்த சனிக்கிழமை (01) இடம்பெற்ற போட்டியில், லிவர்பூல், செல்சி ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளதுடன், வெஸ்ட் ப்ரோம், சந்தர்லேண்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் வட்போர்ட், போர்ண்மெத் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் வெஸ்ட் ஹாம், மிடில்ஸ்பேர்க் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது. லிவர்பூல், சுவான்சீ அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றிருந்தது. முதற்பாதியின் முடிவில் ஒரு கோல் பின்தங்கியிருந்த லிவர்பூல், இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில், ரொபேர்ட்டோ பெ…

  10. ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 100 வது வெற்றி பெற்றது பங்களாதேஷ். ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 100 வது வெற்றி பெற்றது பங்களாதேஷ். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் 141 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் அரங்கில் பங்களாதேஷ் அணி தனது 100வது வெற்றியை பதிவு செய்தது. பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டியின் முடிவில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தது. நேற்றைய 3 வது போட்டியில் முதலில் ஆடிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (118), சபிர் ரஹ்மான் (65) ஆகியோர் கைகொடுக்க பங…

  11. கோலூன்றிப் பாய்தலில் மீண்டும் சாதனை படைத்த யாழ் மாணவி அனித்தா யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி ஜே.அனித்தா , கோலூன்றிப் பாய்தலில் புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார். அனித்தா சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் படைத்திருந்த தேசிய சாதனையை தானே முறியடித்துள்ளார். இவர் சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 3.35 மீற்றர் உயரத்திற்கு கோலூன்றிப் பாய்ந்து சாதனை நிலைநாட்டியிருந்த நிலையில், இன்று ஆரம்பமான 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் 3.41 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனையை நிலைநாட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/11920

  12. குயிண்டன் டி கொக் அதிரடியில் உலக சாம்பியன்கள் அவுஸ்ரேலியாவை இலகுவாய் வெற்றிகொண்டது தென் ஆப்பிரிக்கா. குயிண்டன் டி கொக் அதிரடியில் உலக சாம்பியன்கள் அவுஸ்ரேலியாவை இலகுவாய் வெற்றிகொண்டது தென் ஆப்பிரிக்கா. தென் ஆபிரிக்காவுக்கு சென்றுள்ள ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும்,தென் ஆப்பிரிக்க அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று செஞ்சூரியனில் நிறைவுக்கு வந்துள்ளது. இளம் வீரர் குயிண்டன் டி கொக் அதிரடியில் மிரட்ட உலக சாம்பியன்கள் அவுஸ்திரேலிய அணியை இலகுவாக 6 விக்கெடுக்களால் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிகொண்டு அசத்தியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. …

  13. முதல் ஒருநாள் போட்டி ; ஆப்கானிஸ்தானிடம் பங்களாதேஷ் அதிர்ச்சி தோல்வி (படங்கள் இணைப்பு) பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 2 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணி சார்பில் மொஷ்டைக் ஹுசைன் 45 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 212 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அஸ்கார் ஸ்டனிக்ஷாய் 57 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார். http://www…

  14. டி.ஆர்.எஸ். முறைக்கு உடன்படாமல் நடுவர் தீர்ப்புகளை குறை கூறக்கூடாது: கோலி விராட் கோலி. | படம்: ஏ.பி. எதிர்காலத்தில் நிச்சயம் நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு (டி.ஆர்.எஸ்.) முறையை பயன்படுத்துவோம் என்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இது முந்தைய கேப்டன் தோனி மற்றும் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது (பிடி)வாதத்திலிருந்து நிச்சயம் வேறுபட்டதே. “இது குறித்து இங்கு உட்கார்ந்து கொண்டு நான் எதுவும் கூற முடியாது, ஆனால் டி.ஆர்.எஸ். குறித்து நாங்கள் விவாதித்துள்ளோம். இதில் சில பகுதிகளை விவாதிக்கலாம். குறிப்பாக பந்தின் தடம் காணும் தொழில் நுட்பம் மற்றும் ஹாக் ஐ ஆகியவை குறித்து விவாதித்து முடிவுக்கு வரலாம். …

  15. 111 ஓட்டங்களால் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்டது பாகிஸ்தான் 111 ஓட்டங்களால் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்டது பாகிஸ்தான். பாகிஸ்தான்,மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டி கள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி சார்ஜாவில் நிறைவுக்கு வந்திருக்கின்றது. இந்தப் போட்டிகளில் 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று T20 தொடர் போன்று ஒருநாள் தொடரிலும் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் கோல்டர் பாகிஸ்தான் அணியை முதலில் துடுப்பாட பணித்தார். அதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் 260 ஓட்டங்கள் பெற்ற …

  16. சிம்பாப்வேயுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு சிம்பாப்வே செல்கிறது இலங்கை அணி. சிம்பாப்வேயுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு சிம்பாப்வே செல்கிறது இலங்கை அணி. இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதாக சிம்பாப்வே கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடர் கைவிடப்பட்டு, முக்கோணத் தொடர் நடத்தும் முன்னாயத்தங்களே மேற்கொள்ளப்பட்ட நிலையில் இப்போது டெஸ்ட் போட்டிகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் அக்டோபர் 29 ம் திகதியும், 2வது டெஸ்ட் போட்டி நவம்பர் 6 ம் திகதியும் ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து …

  17. இளைய சகோதரருக்காக வெற்றி வாய்ப்பை தியாகம் செய்த ஒலிம்பிக் ட்ரைஅத்லன் சம்பியன் அலிஸ்டெயார் பிறவுண்லீ 2016-09-30 15:12:21 'ட்ரைஅத்லன்” (மூவம்ச ) போட்­டியில் ஒலிம்பிக் சம்­பி­ய­னான பிரித்­தா­னிய வீரர் அலிஸ்­டெயார் பிற­வுண்லீ, மெக்­ஸி­கோவில் அண்­மையில் நடை­பெற்ற உலக மூவம்ச விளை­யாட்டுப் போட்­டியில் (வேர்ல்ட் ட்ரைஅத்லன்) தனது இளைய சகோ­தரர் ஜோனி படும் அவஸ்­தையைக் கண்டு தனது வெற்றி வாய்ப்பை அலிஸ்­டெயார் பிற­வுண்லீ தியாகம் செய்த மனி­தா­பி­மான சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றது. நீச்சல், சைக்­கி­ளோட்டம், ஓட்டம் ஆகிய மூன்று நிகழ்ச்­சி­களைக் கொண்­டதே மூவம்ச விளை­யாட்டுப் போட்டி (ட்ரைஅத்லன்) ஆகும். மெக்­ஸி­கோவில் நடை­பெற்ற …

  18. பாகிஸ்தானோடு இந்தியா கிரிக்கெட் விளையாடாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு 660 கோடி நஷ்டம். பாகிஸ்தானோடு இந்தியா கிரிக்கெட் விளையாடாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு 660 கோடி நஷ்டம். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே முழுமையான இரு தரப்பு தொடர் கடைசியாக கடந்த 2007ம் ஆண்டில் நடந்தது. அதன்பின் 2015ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 6 தொடர்களில் விளையாட இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆனால் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக, பாகிஸ்தானுடன் விளையாடுவதை இந்தியா தவிர்த்து வருகிறது. இது தவிர கடந்த 6 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை அனைத்து முன்னணி அணிகளும் தவிர்த்து வருகின்றன. இதனால் பாகிஸ்தான் கிரிக…

  19. இலங்கை மகளிர் கபடி அணி வெண்கலப்பதக்கம் வென்றது. இலங்கை மகளிர் கபடி அணி வெண்கலப்பதக்கம் வென்றது. ஆசிய கரையோர விளையாட்டுப் போட்டியில் இலங்கை மகளிர் கபடி அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது. வியட்னாமில் நடைபெற்று வரும் ஐந்தாவது ஆசிய கரையோர விளையாட்டுப் போட்டியிலே இலங்கை அணி பதக்கத்தை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் 43-31 என்ற அடிப்படையில் வெற்றி பெற்ற இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. தாய்லாந்து அணி 2ம் இடத்தைப் பெற்றது. இதற்கு முன்னர் இடம்பெற்ற ஆடவருக்கான கபடி போட்டியிலும் இலங்கைக்கு வெண்கலப்பதக்கம் கிடைக்கப் பெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில் இதுவரை 16தங்கப்பதக்கங்களையும், 16 வெள்ளிப்பதக்கங்களையும்,22வெண்கலப்பதக்கங்களையும் …

  20. தந்தையின் அதிரடியை தொடரும் டில்ஷானின் மகன் ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரட்ன டில்ஷானின் மகன் ரேசாந்து திலகரட்ன அண்மையில் இடம்பெற்ற 13 வயதிற்குற்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 114 ஒட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியை பிரதிநிதித்துவம் படுத்தும் ரேசாந்து திலகரட்ன கோட்டை புனித தோமஸ் கல்லூரிக்கு எதிரான போட்டியிலேயே இவ்வாறு சதம் அடித்து, அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். சிறுவயதிலேயே இவ்வாறு திறமைகளை கொண்டுள்ள ரேசாந்து எதிர்காலத்தில் டில்ஸ்கூப்பை ஞாபகப்படுத்துவார் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/11895

  21.  அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா ஒ.நா.ச.போ. தொடர் -ச.விமல் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர், தென்னாபிரிக்காவில் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இந்த இரு அணிகளும் மோதும் போட்டிகள் எப்பவுமே விறுவிறுப்பாக அமையும். இவர்களுடைய வேகப்பந்து வீச்சு, சகலதுறை வீரர்கள், அதிரடி வீரர்கள் எனப் பல விடயங்கள் எதிர்பார்ப்புடையவையாக அமையும். கிரிக்கெட்டில் சொந்த நாட்டு ஆடுகளங்கள், மைதானத்தின் நிலைமைகள், இவற்றை எல்லாம் தாண்டி எந்த நாடாக இருந்தாலும் போட்டிகளில் வெற்றி பெறக்கூடிய அணிகள் இவை இரண்டும். தென்னாபிரிக்காவில் வைத்து எட்டுத் தொடர்களில் அவு…

  22. பாகிஸ்தான் , மே.தீவுகள் ஒ.நா.ச போட்டித் தொடர் -ச.விமல் இரண்டு கீழ் நிலை அணிகளுக்கிடையிலான தொடர் இது. இது கூட ஒரு விறுப்பைத் தரும் தானே? 92 புள்ளிகளுடன் எட்டாமிடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும், 87 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணியும் உள்ளன. தங்கள் இடங்களை மாற்றிக் கொள்ள அல்லது தமது இடங்களை நிலைநிறுத்திக் கொள்ள இந்த தொடர் இவர்களுக்கு முக்கியமானது. ஆனால் இந்த இரு அணிகளும் வேற எந்த அணியையும் முந்தவும் முடியாது. இந்த அணிகளை வேறு எந்த அணிகளும் முந்தவும் முடியாது. பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் தோல்வியைச் சந்தித்தால் மாத்திரம் இந்த அணிகளில் ஒன்று முன்னோக்கி செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெ…

  23. எவரெஸ்ற் கிண்ணத்தைக் கைப்பற்றியது குருநகர் பாடுமீன் எவரெஸ்ற் இன், பொன்விழா கிண்ணத்தைக் கைப்பற்றியது குருநகர் பாடுமீன். ஆவரங்கால் கிழக்கு லிங்கம் மத்திய சன சமூக நிலையம் மற்றும் எவரெஸ்ற் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வடமாகாணரீதியில் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடாத்தி இருந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு எவரெஸ்ற் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இவ் இறுதிப் போட்டியினை அன்றையதினம் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆரம்பித்து வைத்தார். இரவு 9 மணியளவில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுடன் மின்னொளியில் இவ் இறுதிப் போ…

  24. தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியில் ஊவாவை வெளியேற்றியது வடக்கு தேசிய கூடைப்பந்தாட்டத் தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் பிரிவு ஆட்டம் ஒன்றில் ஊவா மாகாண அணியை வீழ்த்தியது வடக்கு மாகாண அணி யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் வடக்கு மாகாண அணியை எதிர்த்து ஊவா மாகாண அணி மோதியது. நான்கு பகுதிகளைக் கொண்டதாக ஆட்டம் அமைந்திருந்தது. முதல் இரு பாதி ஆட்டங்கள் முறையே 24:12, 17:13 என்ற புள்ளிகளின் அட்டிப்படையில் கைப்பற்றிய வடக்கு மாகாண அணி முதல் பாதி முடிவில் 41:25 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது. மூன்றாவது கால் பாதியை 10:13 என்ற புள்ளிகள் அடிப்படையில் இழந்தது.ஆனால் நான்காவது கால் ப…

  25. தோனி, சச்சின் குறித்த கருத்து: சந்தீப் பாட்டீலுக்கு பிசிசிஐ தலைவர் கடும் கண்டனம் படம்.| கே.முரளிகுமார். தோனி, சச்சின் உள்ளிட்ட அணித் தேர்வு விவகாரங்களை வெளிப்படையாக பேசிய சந்தீப் பாட்டீலுக்கு பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் கண்டனம் வெளியிட்டுள்ளார். முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் சமீபத்தில் தோனியை கேப்டன்சியிலிருந்து அகற்றுவது பற்றியும், சச்சின் டெண்டுல்கர் பற்றியும் கூறிய கருத்துகளுக்கு பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது 2015 உலகக்கோப்பைக்கு முன்னதாக ‘தோனியின் பினிஷிங்’ பற்றியும் தோனியின் கேப்டன்சியைப் பறிப்பது பற்றியும் விவாதித்தோம் என்றும் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.