Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. முதல் ஒருநாள் போட்டி ; ஆப்கானிஸ்தானிடம் பங்களாதேஷ் அதிர்ச்சி தோல்வி (படங்கள் இணைப்பு) பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 2 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணி சார்பில் மொஷ்டைக் ஹுசைன் 45 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 212 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அஸ்கார் ஸ்டனிக்ஷாய் 57 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார். http://www…

  2. டி.ஆர்.எஸ். முறைக்கு உடன்படாமல் நடுவர் தீர்ப்புகளை குறை கூறக்கூடாது: கோலி விராட் கோலி. | படம்: ஏ.பி. எதிர்காலத்தில் நிச்சயம் நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு (டி.ஆர்.எஸ்.) முறையை பயன்படுத்துவோம் என்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இது முந்தைய கேப்டன் தோனி மற்றும் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது (பிடி)வாதத்திலிருந்து நிச்சயம் வேறுபட்டதே. “இது குறித்து இங்கு உட்கார்ந்து கொண்டு நான் எதுவும் கூற முடியாது, ஆனால் டி.ஆர்.எஸ். குறித்து நாங்கள் விவாதித்துள்ளோம். இதில் சில பகுதிகளை விவாதிக்கலாம். குறிப்பாக பந்தின் தடம் காணும் தொழில் நுட்பம் மற்றும் ஹாக் ஐ ஆகியவை குறித்து விவாதித்து முடிவுக்கு வரலாம். …

  3. 111 ஓட்டங்களால் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்டது பாகிஸ்தான் 111 ஓட்டங்களால் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்டது பாகிஸ்தான். பாகிஸ்தான்,மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டி கள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி சார்ஜாவில் நிறைவுக்கு வந்திருக்கின்றது. இந்தப் போட்டிகளில் 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று T20 தொடர் போன்று ஒருநாள் தொடரிலும் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் கோல்டர் பாகிஸ்தான் அணியை முதலில் துடுப்பாட பணித்தார். அதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் 260 ஓட்டங்கள் பெற்ற …

  4. சிம்பாப்வேயுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு சிம்பாப்வே செல்கிறது இலங்கை அணி. சிம்பாப்வேயுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு சிம்பாப்வே செல்கிறது இலங்கை அணி. இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதாக சிம்பாப்வே கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடர் கைவிடப்பட்டு, முக்கோணத் தொடர் நடத்தும் முன்னாயத்தங்களே மேற்கொள்ளப்பட்ட நிலையில் இப்போது டெஸ்ட் போட்டிகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் அக்டோபர் 29 ம் திகதியும், 2வது டெஸ்ட் போட்டி நவம்பர் 6 ம் திகதியும் ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து …

  5. இளைய சகோதரருக்காக வெற்றி வாய்ப்பை தியாகம் செய்த ஒலிம்பிக் ட்ரைஅத்லன் சம்பியன் அலிஸ்டெயார் பிறவுண்லீ 2016-09-30 15:12:21 'ட்ரைஅத்லன்” (மூவம்ச ) போட்­டியில் ஒலிம்பிக் சம்­பி­ய­னான பிரித்­தா­னிய வீரர் அலிஸ்­டெயார் பிற­வுண்லீ, மெக்­ஸி­கோவில் அண்­மையில் நடை­பெற்ற உலக மூவம்ச விளை­யாட்டுப் போட்­டியில் (வேர்ல்ட் ட்ரைஅத்லன்) தனது இளைய சகோ­தரர் ஜோனி படும் அவஸ்­தையைக் கண்டு தனது வெற்றி வாய்ப்பை அலிஸ்­டெயார் பிற­வுண்லீ தியாகம் செய்த மனி­தா­பி­மான சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றது. நீச்சல், சைக்­கி­ளோட்டம், ஓட்டம் ஆகிய மூன்று நிகழ்ச்­சி­களைக் கொண்­டதே மூவம்ச விளை­யாட்டுப் போட்டி (ட்ரைஅத்லன்) ஆகும். மெக்­ஸி­கோவில் நடை­பெற்ற …

  6. பாகிஸ்தானோடு இந்தியா கிரிக்கெட் விளையாடாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு 660 கோடி நஷ்டம். பாகிஸ்தானோடு இந்தியா கிரிக்கெட் விளையாடாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு 660 கோடி நஷ்டம். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே முழுமையான இரு தரப்பு தொடர் கடைசியாக கடந்த 2007ம் ஆண்டில் நடந்தது. அதன்பின் 2015ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 6 தொடர்களில் விளையாட இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆனால் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக, பாகிஸ்தானுடன் விளையாடுவதை இந்தியா தவிர்த்து வருகிறது. இது தவிர கடந்த 6 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை அனைத்து முன்னணி அணிகளும் தவிர்த்து வருகின்றன. இதனால் பாகிஸ்தான் கிரிக…

  7. இலங்கை மகளிர் கபடி அணி வெண்கலப்பதக்கம் வென்றது. இலங்கை மகளிர் கபடி அணி வெண்கலப்பதக்கம் வென்றது. ஆசிய கரையோர விளையாட்டுப் போட்டியில் இலங்கை மகளிர் கபடி அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது. வியட்னாமில் நடைபெற்று வரும் ஐந்தாவது ஆசிய கரையோர விளையாட்டுப் போட்டியிலே இலங்கை அணி பதக்கத்தை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் 43-31 என்ற அடிப்படையில் வெற்றி பெற்ற இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. தாய்லாந்து அணி 2ம் இடத்தைப் பெற்றது. இதற்கு முன்னர் இடம்பெற்ற ஆடவருக்கான கபடி போட்டியிலும் இலங்கைக்கு வெண்கலப்பதக்கம் கிடைக்கப் பெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில் இதுவரை 16தங்கப்பதக்கங்களையும், 16 வெள்ளிப்பதக்கங்களையும்,22வெண்கலப்பதக்கங்களையும் …

  8. தந்தையின் அதிரடியை தொடரும் டில்ஷானின் மகன் ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரட்ன டில்ஷானின் மகன் ரேசாந்து திலகரட்ன அண்மையில் இடம்பெற்ற 13 வயதிற்குற்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 114 ஒட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியை பிரதிநிதித்துவம் படுத்தும் ரேசாந்து திலகரட்ன கோட்டை புனித தோமஸ் கல்லூரிக்கு எதிரான போட்டியிலேயே இவ்வாறு சதம் அடித்து, அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். சிறுவயதிலேயே இவ்வாறு திறமைகளை கொண்டுள்ள ரேசாந்து எதிர்காலத்தில் டில்ஸ்கூப்பை ஞாபகப்படுத்துவார் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/11895

  9.  அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா ஒ.நா.ச.போ. தொடர் -ச.விமல் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர், தென்னாபிரிக்காவில் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இந்த இரு அணிகளும் மோதும் போட்டிகள் எப்பவுமே விறுவிறுப்பாக அமையும். இவர்களுடைய வேகப்பந்து வீச்சு, சகலதுறை வீரர்கள், அதிரடி வீரர்கள் எனப் பல விடயங்கள் எதிர்பார்ப்புடையவையாக அமையும். கிரிக்கெட்டில் சொந்த நாட்டு ஆடுகளங்கள், மைதானத்தின் நிலைமைகள், இவற்றை எல்லாம் தாண்டி எந்த நாடாக இருந்தாலும் போட்டிகளில் வெற்றி பெறக்கூடிய அணிகள் இவை இரண்டும். தென்னாபிரிக்காவில் வைத்து எட்டுத் தொடர்களில் அவு…

  10. பாகிஸ்தான் , மே.தீவுகள் ஒ.நா.ச போட்டித் தொடர் -ச.விமல் இரண்டு கீழ் நிலை அணிகளுக்கிடையிலான தொடர் இது. இது கூட ஒரு விறுப்பைத் தரும் தானே? 92 புள்ளிகளுடன் எட்டாமிடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும், 87 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணியும் உள்ளன. தங்கள் இடங்களை மாற்றிக் கொள்ள அல்லது தமது இடங்களை நிலைநிறுத்திக் கொள்ள இந்த தொடர் இவர்களுக்கு முக்கியமானது. ஆனால் இந்த இரு அணிகளும் வேற எந்த அணியையும் முந்தவும் முடியாது. இந்த அணிகளை வேறு எந்த அணிகளும் முந்தவும் முடியாது. பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் தோல்வியைச் சந்தித்தால் மாத்திரம் இந்த அணிகளில் ஒன்று முன்னோக்கி செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெ…

  11. எவரெஸ்ற் கிண்ணத்தைக் கைப்பற்றியது குருநகர் பாடுமீன் எவரெஸ்ற் இன், பொன்விழா கிண்ணத்தைக் கைப்பற்றியது குருநகர் பாடுமீன். ஆவரங்கால் கிழக்கு லிங்கம் மத்திய சன சமூக நிலையம் மற்றும் எவரெஸ்ற் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வடமாகாணரீதியில் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடாத்தி இருந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு எவரெஸ்ற் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இவ் இறுதிப் போட்டியினை அன்றையதினம் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆரம்பித்து வைத்தார். இரவு 9 மணியளவில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுடன் மின்னொளியில் இவ் இறுதிப் போ…

  12. தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியில் ஊவாவை வெளியேற்றியது வடக்கு தேசிய கூடைப்பந்தாட்டத் தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் பிரிவு ஆட்டம் ஒன்றில் ஊவா மாகாண அணியை வீழ்த்தியது வடக்கு மாகாண அணி யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் வடக்கு மாகாண அணியை எதிர்த்து ஊவா மாகாண அணி மோதியது. நான்கு பகுதிகளைக் கொண்டதாக ஆட்டம் அமைந்திருந்தது. முதல் இரு பாதி ஆட்டங்கள் முறையே 24:12, 17:13 என்ற புள்ளிகளின் அட்டிப்படையில் கைப்பற்றிய வடக்கு மாகாண அணி முதல் பாதி முடிவில் 41:25 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது. மூன்றாவது கால் பாதியை 10:13 என்ற புள்ளிகள் அடிப்படையில் இழந்தது.ஆனால் நான்காவது கால் ப…

  13. தோனி, சச்சின் குறித்த கருத்து: சந்தீப் பாட்டீலுக்கு பிசிசிஐ தலைவர் கடும் கண்டனம் படம்.| கே.முரளிகுமார். தோனி, சச்சின் உள்ளிட்ட அணித் தேர்வு விவகாரங்களை வெளிப்படையாக பேசிய சந்தீப் பாட்டீலுக்கு பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் கண்டனம் வெளியிட்டுள்ளார். முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் சமீபத்தில் தோனியை கேப்டன்சியிலிருந்து அகற்றுவது பற்றியும், சச்சின் டெண்டுல்கர் பற்றியும் கூறிய கருத்துகளுக்கு பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது 2015 உலகக்கோப்பைக்கு முன்னதாக ‘தோனியின் பினிஷிங்’ பற்றியும் தோனியின் கேப்டன்சியைப் பறிப்பது பற்றியும் விவாதித்தோம் என்றும் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் …

  14. உபாதைகளால் அவதிப்படும் டி வில்லியர்ஸ் இலங்கைக்கெதிரான தொடரில் விளையாடுவார்-தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை நம்பிக்கை. உபாதைகளால் அவதிப்படும் டி வில்லியர்ஸ் இலங்கைக்கெதிரான தொடரில் விளையாடுவார்-தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை நம்பிக்கை. தென் ஆபிரிக்க அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரம் ,ஒருநாள் போட்டி அணித்தலைவருமான AB De வில்லியர்ஸ் ,ஆஸ்திரேலிய அணிக்கெதிரான சொந்தமண்ணில் இடம்பெறவுள்ள 5 ஒருநாள் போட்டிகள் ,அதன்பின்னர் ஆஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாடடார் என்று அறிவிக்கப்பட்டது. உபாதைகளால் அவதிப்படும் AB De வில்லியர்ஸ்,முழங்கை உபாதைக்குப் பின்னர் சத்திர சிகிச்சை மேற்கொண்டு டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள இலங்கை அணியுடனான போட்டித…

  15. சங்காவும் ,மஹேலவும் ஒரே அணியில் பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில். சங்காவும் ,மஹேலவும் ஒரே அணியில் பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களும் முன்னணி துடுப்பாட்ட வீரர்களுமான சங்கா, மஹேல இருவரும் ஒன்றாக ஒரே அணியில் விளையாடுவதை காணும் சந்தர்ப்பம் வந்திருக்கின்றது. எதிர்வரும் நவமபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பங்களாதேஷில் இடம்பெறவுள்ள பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில்தான் இருவரும் ஒரே அணியில் விளையாடவுள்ளனர். டாக்கா டைனமைட்ஸ் அணிக்காக சங்கா, மஹேல இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர், அத்தோடு இலங்கையின் 7 வீரர்களும் இந்தப் போட்டிகளில் விளையாடவுள்ளனர். டஸுன் சாணக்க, திஸ்ஸர பெரேரா, நுவான் க…

  16. இந்தியாவின் 600-வது டெஸ்டுக்கு கேப்டன் யார்? 600 டெஸ்ட் போட்டிகளை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அடுத்த நூறு போட்டிகளில் இந்தியாவுக்கு தேவை என்ன? அதை தெரிந்து கொள்வதற்கு முன் இந்த 500 போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 500-வது போட்டியில் பெற்ற வெற்றி, இந்தியாவுக்கு 130வது டெஸ்ட் வெற்றி. தொடர்ந்து மூன்று மைல்கல் சதங்களையும் வெற்றியுடன் கடந்திருக்கிறது இந்திய அணி. முதல் போட்டி தொடங்கி சதம் கண்ட போட்டிகள் பற்றிய தகவலை கீழே காணலாம். 1980 களில் இருந்து சராசரியாக 10 ஆண்டுகளில் நூறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது இந்திய அணி. அதாவது ஆண்டுக்கு சராசரியாக 9 போட்டிகள். அதில் கடந்து 20…

  17. இங்கிலாந்து கால்பந்து அணியின் முகாமையாளர் சாம் அலார்டீஸ் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இங்கிலாந்து கால்பந்து அணியின் முகாமையாளர் சாம் அலார்டீஸ் பதவிநீக்கம் செய்யப்பட்டார் http://vilaiyattu.com/18638-2/

  18. ஈடன் கார்டனில் மணியடிக்கும் கபில்தேவ்: டாஸ் போடுவதற்கு தங்க நாணயம் கொல்கத்தாவில் நடைபெற உள்ள நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மணியடித்து தொடங்கி வைக்கிறார். இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டி இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் 250-வது ஆட்டமாகும். இதை யொட்டி இரு அணிகளை கவுரவிக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுதவிர போட்டியை பாரம் பரிய லார்ட்ஸ் மைதானம் போல மணியடித்து தொடங்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. போட்டி தினத் தன்று காலை கபில்தேவ், சிறப்பாக வ…

  19. இரண்டு வருடங்களின் பின் மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட இந்திய வீரர் இந்திய அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார். நியுஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த கே.எல். ராகுலுக்கு பதிலாக இவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவர் நியுஸிலாந்து அணிக்கெதிராக இடம்பெறவுள்ள மிகுதி டெஸ்ட் போட்டிகளுக்காக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கம்பீர் இறுதியாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்த நிலையில், இரண்டு வருடங்களுக்கு பிறகு இவர் மீண்டும் அணியில் இணைக்…

  20. T20 போட்டிகளில் அசுரபலம் காட்டும் ஆட்டக்காரர்களை அரபு தேசத்தில் அடிபணிய வைத்து வெள்ளையடிப்பு செய்தது பாகிஸ்தான் அணி. T20 போட்டிகளில் அசுரபலம் காட்டும் ஆட்டக்காரர்களை அரபு தேசத்தில் அடிபணிய வைத்து வெள்ளையடிப்பு செய்தது பாகிஸ்தான் அணி. T20 உலக சாம்பியன்களான மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் 3 வதும் இறுதியான T20 போட்டி அபுதாபியில் நிறைவுக்கு வந்திருக்கின்றது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று T20 போட்டிகளில் அசுரபலம் காட்டும் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரர்களை அரபு தேசத்தில் அடிபணிய வைத்து வெள்ளையடிப்பு செய்து தொடரை வென்றது பாகிஸ்தான் அணி. இப்போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற…

  21. ராகுல் அவுட், கம்பீர் இன்... ஒருநாள் அணியில் யுவராஜ்?... #SportsBytes கே.எல்.ராகுல் அவுட், கம்பீர் இன்... கான்பூர் டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர் கே.எல்.ராகுல் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். அவருக்குப் பதிலாக ஷிகர் தவன் ஃபீல்டிங் செய்தார். அநேகமாக ராகுல் கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. அவருக்குப் பதிலாக கவுதம் கம்பீர் அணியில் சேர்க்கப்படலாம் என்றும், அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இன்று ஃபிட்னஸ் தேர்வில் தேறி விட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் ராகுல் விலகல் குறித்தும், கம்பீர் வருகை குறித்தும் பிசிசிஐ இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கவில்லை…

  22. ஜிடானை வசை பாடிய ரொனால்டோ! தனக்குப் பதிலாக சப்ஸ்டிட்யூட் பிளேயரை களமிறக்கியதால், ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் ஜினாடின் ஜிடானை, நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்டபடி கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். ஸ்பெயினில் உள்ள கிளப் அணிகளுக்கு இடையே லா லிகா கால்பந்து தொடர் நடந்து வருகிறது. சனிக்கிழமை நடந்த போட்டியில் உலகின் செல்வாக்கு மிக்க அணியான ரியல் மாட்ரிட், லாஸ் பல்மாஸ் அணியை எதிர்கொண்டது. ரியல் மாட்ரிட் 2-1 என முன்னிலையில் இருந்தபோது, 72வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பதிலாக, மாற்று வீரரை களமிறக்கினார் பயிற்சியாளர் ஜினாடின் ஜிடான். இதனால் ரொனால்டோ கடும் அதிருப்தி அடைந்தார். களத்தில் இருந்து சிடுசிடு முகத்துடன் …

  23. வடமாகாண தடகளப்போட்டிகளுக்கான ஒத்திகை ஆரம்பம் வடமாகாண தடகள போட்டிக்கான ஒத்திகைப் பயிற்சிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 30 ஆம் திகதியிலிருந்து அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது இந் நிலையில் யாழ் .துரையப்பா விளையாட்டரங்கில் அதற்கான ஒத்திகைகள் நடைபெற்று வருகின்றன . 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன், வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராஜா, ஆகியோர் பங்குபற்றி நிகழ்வை ஆரம்பித்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கத…

  24. அரை இறுதியில் நுழைந்தது யாழ் புனித பத்திரிசியார் பிருந்தாபன் மூன்று பெனல்டிகளைத் தடுத்து நிறுத்தினார் 2016-09-27 09:53:27 (நெவில் அன்­தனி) 19 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்­கான கொத்­மலை கிண்ண கால் இறுதிப் போட்­டியில் யாழ். புனித பத்­தி­ரி­சியார் அணி கோல் காப்­பாளர் ஏ.பிருந்­தாபன் 3 சம­நிலை முறிப்பு பெனல்­டி­களை அடுத்­த­டுத்து தடுத்து நிறுத்­தி­யதன் பல­னாக ஹமீத் அல் ஹுசெய்னி அணியை 3–1 பெனல்டி அடிப்­ப­டையில் புனித பத்­தி­ரி­சியார் அணி வெற்­றி­கொண்டு அரை இறு­திக்கு முன்­னே­றி­யது. சிட்டி புட்போல் லீக் மைதா­னத்தில் நேற்று பிற்­பகல் கடும் உஷ்­ணத்­திற்கு மத்­தியில் நடை­பெற்ற இப் போட்­டியின் 3…

  25. முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் ; ஆரம்பித்து வைத்தார் சங்கா (படங்கள் இணைப்பு) இலங்கையிலுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களிடையே நட்புறவை பேணும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி தொடர்ந்தும் 5 ஆவது முறையாக நாளை (21) ஆரம்பமாகவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு நிலும்பியசவில் இன்று மாலை மூன்று மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார விசேட அதிதியாக கலந்துகொண்டு ஆரம்ப நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இந்நிலையில் இந்த போட்டிகள் இம்மாதம் 21 திகதி முதல் 25 ஆம் திகதிவரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.