Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இங்கிலாந்து கால்பந்து அணியின் முகாமையாளர் சாம் அலார்டீஸ் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இங்கிலாந்து கால்பந்து அணியின் முகாமையாளர் சாம் அலார்டீஸ் பதவிநீக்கம் செய்யப்பட்டார் http://vilaiyattu.com/18638-2/

  2. ஈடன் கார்டனில் மணியடிக்கும் கபில்தேவ்: டாஸ் போடுவதற்கு தங்க நாணயம் கொல்கத்தாவில் நடைபெற உள்ள நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மணியடித்து தொடங்கி வைக்கிறார். இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டி இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் 250-வது ஆட்டமாகும். இதை யொட்டி இரு அணிகளை கவுரவிக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுதவிர போட்டியை பாரம் பரிய லார்ட்ஸ் மைதானம் போல மணியடித்து தொடங்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. போட்டி தினத் தன்று காலை கபில்தேவ், சிறப்பாக வ…

  3. இரண்டு வருடங்களின் பின் மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட இந்திய வீரர் இந்திய அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார். நியுஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த கே.எல். ராகுலுக்கு பதிலாக இவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவர் நியுஸிலாந்து அணிக்கெதிராக இடம்பெறவுள்ள மிகுதி டெஸ்ட் போட்டிகளுக்காக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கம்பீர் இறுதியாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்த நிலையில், இரண்டு வருடங்களுக்கு பிறகு இவர் மீண்டும் அணியில் இணைக்…

  4. T20 போட்டிகளில் அசுரபலம் காட்டும் ஆட்டக்காரர்களை அரபு தேசத்தில் அடிபணிய வைத்து வெள்ளையடிப்பு செய்தது பாகிஸ்தான் அணி. T20 போட்டிகளில் அசுரபலம் காட்டும் ஆட்டக்காரர்களை அரபு தேசத்தில் அடிபணிய வைத்து வெள்ளையடிப்பு செய்தது பாகிஸ்தான் அணி. T20 உலக சாம்பியன்களான மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் 3 வதும் இறுதியான T20 போட்டி அபுதாபியில் நிறைவுக்கு வந்திருக்கின்றது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று T20 போட்டிகளில் அசுரபலம் காட்டும் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரர்களை அரபு தேசத்தில் அடிபணிய வைத்து வெள்ளையடிப்பு செய்து தொடரை வென்றது பாகிஸ்தான் அணி. இப்போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற…

  5. ராகுல் அவுட், கம்பீர் இன்... ஒருநாள் அணியில் யுவராஜ்?... #SportsBytes கே.எல்.ராகுல் அவுட், கம்பீர் இன்... கான்பூர் டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர் கே.எல்.ராகுல் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். அவருக்குப் பதிலாக ஷிகர் தவன் ஃபீல்டிங் செய்தார். அநேகமாக ராகுல் கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. அவருக்குப் பதிலாக கவுதம் கம்பீர் அணியில் சேர்க்கப்படலாம் என்றும், அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இன்று ஃபிட்னஸ் தேர்வில் தேறி விட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் ராகுல் விலகல் குறித்தும், கம்பீர் வருகை குறித்தும் பிசிசிஐ இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கவில்லை…

  6. ஜிடானை வசை பாடிய ரொனால்டோ! தனக்குப் பதிலாக சப்ஸ்டிட்யூட் பிளேயரை களமிறக்கியதால், ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் ஜினாடின் ஜிடானை, நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்டபடி கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். ஸ்பெயினில் உள்ள கிளப் அணிகளுக்கு இடையே லா லிகா கால்பந்து தொடர் நடந்து வருகிறது. சனிக்கிழமை நடந்த போட்டியில் உலகின் செல்வாக்கு மிக்க அணியான ரியல் மாட்ரிட், லாஸ் பல்மாஸ் அணியை எதிர்கொண்டது. ரியல் மாட்ரிட் 2-1 என முன்னிலையில் இருந்தபோது, 72வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பதிலாக, மாற்று வீரரை களமிறக்கினார் பயிற்சியாளர் ஜினாடின் ஜிடான். இதனால் ரொனால்டோ கடும் அதிருப்தி அடைந்தார். களத்தில் இருந்து சிடுசிடு முகத்துடன் …

  7. வடமாகாண தடகளப்போட்டிகளுக்கான ஒத்திகை ஆரம்பம் வடமாகாண தடகள போட்டிக்கான ஒத்திகைப் பயிற்சிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 30 ஆம் திகதியிலிருந்து அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது இந் நிலையில் யாழ் .துரையப்பா விளையாட்டரங்கில் அதற்கான ஒத்திகைகள் நடைபெற்று வருகின்றன . 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன், வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராஜா, ஆகியோர் பங்குபற்றி நிகழ்வை ஆரம்பித்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கத…

  8. அரை இறுதியில் நுழைந்தது யாழ் புனித பத்திரிசியார் பிருந்தாபன் மூன்று பெனல்டிகளைத் தடுத்து நிறுத்தினார் 2016-09-27 09:53:27 (நெவில் அன்­தனி) 19 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்­கான கொத்­மலை கிண்ண கால் இறுதிப் போட்­டியில் யாழ். புனித பத்­தி­ரி­சியார் அணி கோல் காப்­பாளர் ஏ.பிருந்­தாபன் 3 சம­நிலை முறிப்பு பெனல்­டி­களை அடுத்­த­டுத்து தடுத்து நிறுத்­தி­யதன் பல­னாக ஹமீத் அல் ஹுசெய்னி அணியை 3–1 பெனல்டி அடிப்­ப­டையில் புனித பத்­தி­ரி­சியார் அணி வெற்­றி­கொண்டு அரை இறு­திக்கு முன்­னே­றி­யது. சிட்டி புட்போல் லீக் மைதா­னத்தில் நேற்று பிற்­பகல் கடும் உஷ்­ணத்­திற்கு மத்­தியில் நடை­பெற்ற இப் போட்­டியின் 3…

  9. விரைவாக ரன்களை எடுக்க புஜாராவை வலியுறுத்தினோம்: விராட் கோலி படம்.| கே.பாக்யபிரகாஷ். டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து தானும் அனில் கும்ப்ளேவும் புஜாராவிடம் விவாதித்து அவர் வேகமாக ரன்களை எடுக்க வேண்டியுள்ளதை வலியுறுத்தினோம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். மே.இ.தீவுகளுக்கு எதிரான சமீபத்திய தொடரில்தான் சர்ச்சைக்குரிய முறையில் புஜாரா உட்கார வைக்கப்பட்டு ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டார். புஜாரா அங்கு 67 பந்துகளில் 16 ரன்களையும் பிறகு 159 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இந்த இரண்டும் கேப்டனையும், கும்ப்ளேவையும் அதிருப்திக்குள்ளாக்கியது. எந்தவொரு ‘நட்சத்திர’ வீரரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடத்தேர…

  10. யாழ். மண்ணின் முன்னாள் வீராங்கனையும் வீரரும் தேசிய விளையாட்டு விழா தீபத்தை ஏற்றவுள்ளனர் 2016-09-26 12:10:41 (நெவில் அன்­தனி) யாழ்ப்­பா­ணத்தில் முதல் தட­வை­யாக நடை­பெ­ற­வுள்ள தேசிய விளை­யாட்டு விழா­வுக்­கான தீபத்தை ஏற்றும் சந்­தர்ப்பம் யாழ். மாவட்­டத்தைச் சேர்ந்த முன்னாள் தேசிய விளை­யாட்டு வீராங்­கனை ஒரு­வ­ருக்கும் வீரர் ஒரு­வ­ருக்கும் கிடைத்­துள்­ளது. இலங்கை வலை­பந்­தாட்டம் மற்றும் மகளிர் கூடை­பந்­தாட்ட அணி­களில் இடம்­பெற்­ற­வரும் வலை­பந்­தாட்ட அணியின் முன்னாள் தலைவி மற்றும் ஆசி­யாவின் முன்னாள் அதி சிறந்த கோல்­போடும் வீராங்­க­னை­யு­மான ஜயன்தி சோம­சே­கரம் டி சில்­வா­வுக்கு விளை­யாட்டு விழா தீபத்தை ஏற்றும் அரிய சந்­தர்ப்ப…

  11. 21 ஆண்டுகால வக்கார் யூனுஸ் சாதனையை தகர்த்த அஸ்வின்,முரளியையும் முந்தினார். 21 ஆண்டுகால வக்கார் யூனுஸ் சாதனையை தகர்த்த அஸ்வின்,முரளியையும் முந்தினார். இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சூழல் பந்து வீச்சாளரான அஸ்வின் ,வேகமான 200 டெஸ்ட் விக்கெட் சாதனையை படைத்த இரண்டாவது வீரரானார். கான்பூர் மைதானத்தில் இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த டெஸ்ட்டுக்கு முன்னதாக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அஸ்வின், 193 டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய நிலையில் கான்பூர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும்,2 வது இன்னிங்ஸில் இதுவரை 3 விக்கெட்டுகளையும் கைப…

  12. பிரபல கொல்ப் வீரர் ஆர்னல்ட் பால்மர் காலமானார் பிரபல கொல்ப் (Golf) வீரர் ஆர்னல்ட் பால்மர் காலமானார். கொல்ப் விளையாட்டு வரலாற்றில் உலகின் தலைசிறந்த வீரராக கருதப்படும் பால்மர் தனது 87ம் வயதில் காலமானார். பால்மர் பென்சல்வேனியாவின் பிட்ஸ்பெர்க் வைத்தியசாலையில் காலமானார். மிக நீண்ட காலமாக கொல்ப் போட்டிகளில் பங்கேற்று வந்த பால்மர் சர்வதேச ரீதியில் 90 போட்டித் தொடர்களில் வெற்றியீட்டியுள்ளார். பால்மரின் இழப்புக்கு உலகின் கொல்ப் வீரர்கள் கொல்ப் ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136343/language/ta-IN/article.…

  13. 37 கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த பந்துவீச்சாளர்களில் அஸ்வின் 2-வது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் கிரிம்மேட் 36 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அஸ்வினின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் இந்திய அணியில் விளையாடும் தமிழரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு முன்னணி சுழல் பந்து வீச்சாளர் ஆவார். http://stats.espncricinfo.com/ci/content/records/283534.html

  14. இளையோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில்-ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவிப்பு. இளையோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில்-ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவிப்பு. 19 வயதுக்குட்பட்ட இளையோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ம் திகதி முதல் 22 ம் திகதிவரை இந்தப் போட்டிகள் இலங்கையின் 3 மாதானங்களில் இடம்பெற்றவுள்ளன. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச மைதானம், காலி சர்வதேச மைதானம், மாத்தறை உயன்வத்த மைதானம் ஆகியவற்றில் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தி…

  15. சாஹிப், தமிம் சாதனையோடு ஆப்கானிஸ்தான் அணியை போராடி வென்றது பங்களாதேஷ். சாஹிப், தமிம் சாதனையோடு ஆப்கானிஸ்தான் அணியை போராடி வென்றது பங்களாதேஷ். பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பலத்த போராட்டத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பங்களாதேஷ்அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 265 ஓட்டங்கள் பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் 80 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் அனைத்துவகை ஆட்டங்களிலும் சேர்த்து (டெஸ்ட்+ ஒருநாள்+T20) 9000 ஓட்டங்கள் கடந்தார்.ஒரு பங்களாதேஷ் வீரர் ஒருவர் அனைத்துவகை போட்டிகள் உள்ளடங்கலாக பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் எனும் சாதனை தமிம் இக்பால் வசமானது. பதிலுக்க…

  16. இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நிக் லீ இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேசிய பயிற்றுவிப்பாளராக நிக் லீ தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவர் பதவியை பொறுப்பேற்பார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/11758

  17. பிரபல கார்ப்பந்தய வீரர் மைக்கல் ஸுமார்க்கரால் நடக்க முடியாது-BBC செய்தி. பிரபல கார்ப்பந்தய வீரர் மைக்கல் ஸுமார்க்கரால் நடக்க முடியாது-BBC செய்தி. பிரபல கார்ப்பந்தைய வீரர் 47 வயதான மைக்கல் ஸுமார்க்கரால் நடக்க முடியாது என்று அவரது சட்டத்தரணி ஜெர்மனிய சஞ்சிகை ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. 7 முறை போர்முலா 1 கார்பந்தய போட்டிகளில் சாம்பியன் பட்டம் வெற்றிகொண்ட மைக்கல் ஸுமார்க்கர், 2013 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது விபத்தை சந்தித்தார். அவருடைய தலைப்பகுதியில் ஏற்பட்ட பலமான அடிக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் மைக்கல் ஸுமார்க்கர் ஆறு மாதங்…

  18. உலக சாம்பியன்களுக்கு எதிராக T20 தொடரை இலகுவாய் வெற்றிகொண்டது பாகிஸ்தான். உலக சாம்பியன்களுக்கு எதிராக T20 தொடரை இலகுவாய் வெற்றிகொண்டது பாகிஸ்தான். பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் 2வது போட்டி டுபாய் சர்வதேச மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கிறது. இந்தப் போட்டியில் 16 ஓட்ட்ங்கள் வித்தியாசத்தில் உலக சாம்பியன்கள் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்ட பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட T20தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 என்று தொடரை வென்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்று மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட பாகிஸ்தான் அணியைப் பணித்தது.அதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி,நிர்…

  19. பான்பாசிபிக் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றது சானியா ஜோடி டோக்கியோ: பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-செக். குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் சீனாவின் சென் லியாங் - ஜாவ்ஸுவான் யங் ஜோடியை எதிர்கொண்ட சானியா ஜோடி, 6-1, 6-1 என்ற நேர் செட்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் சானியா-பர்போரா ஜோடி கனடாவின் கேபிரில்லா டேப்ரோஸ்கி-ஸ்பெயினின் மரியா …

  20. புது மாற்றத்துடன் டி.ஆர்.எஸ். தென்னாபிரிக்கா – அயர்லாந்து மோதும் போட்டியில் அறிமுகம் ஐ.சி.சி. மாற்றம் செய்த புதிய டி.ஆர்.எஸ். விதி­முறை நாளை நடை­பெ­ற­வுள்ள தென்­னா­பி­ரிக்க -–- அயர்­லாந்து மோதும் ஒருநாள் போட்­டியில் இருந்து அமு­லா­கி­றது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்கள் நடத்தை மற்றும் நடுவர் முடிவை மறு­ப­ரி­சீ­லனை செய்யும் டி.ஆர்.எஸ். முறையில் மாற்­றங்­களை செய்து அறி­வித்­துள்­ளது. விதி­மு­றை­களை மீறும் வீரர்­க­ளுக்கு வழங்­கப்­படும் எச்­ச­ரிக்கை, அப­ராதம் மற்றும் இடை­நீக்கம் ஆகிய விதி­களில் எந்த மாற்­றமும் செய்­யப்­ப­ட­வில்லை. …

  21. ஆண்டின் சிறந்த இலங்கையராக குமார் சங்ககார தெரிவு தெரண ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்த சிறந்த இலங்கையர்களை கௌரவிக்கும் “Ada Derana Sri Lankan of the Year - 2016” மா பெரும் விருதுவழங்கும் நிகழ்வு நேற்று (23) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. பல்வேறு துறைகளில் நாட்டிற்கு பெருமை தேடித்தந்த இலங்கையர்கள் விருதி வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ரசிகர்களின் அதிக விருப்புக்களை வென்ற இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்ககார ஆண்டின் சிறந்த பிரபலமான இலங்கையராக தெரிவு செய்யப்பட்டார். இந்நிகழ்வில் விருதுகளை பெற்றுக் கொண்ட ஆண்டின் சிறந்த இலங்கையர்கள் விபரம் வருமாறு, Sports – Mathew Abeysinghe Global Entertainer - Jacqueline Fern…

  22. சரே அணியுடனான சங்கக்காரவின் ஒப்பந்தம் மேலும் ஒருவருடத்திற்கு நீடிப்பு இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார மேலும் ஒருவருடத்திற்கு சரே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை சரே கிரிக்கெட் அணியின் முகாமைத்துவம் நேற்று (23) அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் சரே அணிக்காக விளையாடிவரும் சங்கக்கார 2017 ஆம் ஆண்டுக்கும் சரே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரம் ஓட்டங்கள் பெற்றுக்கொண்டுள்ளதுடன், இவரின் டெஸ்ட் ஓட்டங்களின் சராசரி 57.40 என்பது குறிப்பிடத்தக்கது. சங்கக்கார சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், உள…

  23. பங்களாதேஷ் பந்து வீச்சாளர்களான தஸ்கின்,அரபாத் சன்னி ஆகியோருக்கு பந்து வீச ICC அனுமதி. பங்களாதேஷ் பந்து வீச்சாளர்களான தஸ்கின்,அரபாத் சன்னி ஆகியோருக்கு பந்து வீச ICC அனுமதி. பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அஹமெட் ,மற்றும் சூழல் பந்து வீச்சாளர் அரபாத் சன்னி ஆகியோருக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி வழங்கியது. T20 உலக கிண்ணப் போட்டிகளுக்கான பங்களாதேஷ் அணியில் இடம்பிடித்திருந்த இவ்விருவருக்கும் சர்வதேச கிரிக்கெட் பேரவை, முறையற்ற பந்து வீச்சு என்பதை காரணம் காட்டி தடை விதித்தது. நெதர்லாந்துக்ககெதிராக தரம்சாலாவில் இடம்பெற்ற உலக T20 கிண்ண போட்டியில் இருவரும் விளையாடிய போது இவர்களது பந்து வீ…

  24. கம்பீருடன் சண்டை...அனுஷ்காவுக்காக ட்விட்...விராட் கோலியின் "டிரிவன்” புத்தக ரகசியங்கள்! சமீபத்தில் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல். இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கையால் பள்ளி கிரிக்கெட்டில் விருது வாங்கும் பால் வடியும் முகம் கொண்ட சிறுவன் 10 வருடத்தில் ஆஷிஷ் நெஹ்ராவை ஆன் சைடில் நிற்காதீர்கள், கொஞ்சம் நகர்ந்து நில்லுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும்?. அந்த சிறுவன் தான் இந்திய அணிக்கான அண்டர் 19 உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டன். இந்திய அணிக்கு என்ட்ரி கொடுத்த சிறுவனுக்கு 6 வருடங்களில் அடுத்த சச்சின் என்ற பெயர். இந்தியாவின் அக்ரஸிவ் டெஸ்ட் கேப்டனின் இதுவரையிலான பயணம் ''ட்ரிவன் - தி விராட் கோலி ஸ்டோரி'' என்ற பெயரில் புத்தகமா…

  25. சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார் டோனி. சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார் டோனி. இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக செயல்பட்டு தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் இருப்பிடம் கொண்ட டோனி, இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தார் . டோனியின் வாழ்க்கை வரலாறை சித்தரித்து புனையப்பட்டுள்ள ‘MS Dhoni – The Untold Story’ என்ற திரைப்படம் அடுத்தவாரம் 30 ம் திகதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் விரிவாக்கல் நடவடிக்கைக்காக சென்னை சென்ற டோனி,சென்னை சத்யம் திரையரங்கில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த பின்னர் மேடையில் “என் வழி தனி வழி” என்ற ரஜினியின் வசனத்தைப் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.