விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
ரியோ பாராலிம்பிக்கில் மிதிவண்டி போட்டியில் விபத்து, போட்டியாளர் பலி பிராமன் கோல்பார்நெஸ்ஹாடு ரியோ பாராலிம்பிக்கில் ஆடவர் மிதிவண்டி போட்டியின்போது விபத்திற்குள்ளாகி இறந்த ஈரான் மதிவண்டி போட்டியாளரான பிராமன் கோல்பார்நெஸ்ஹாடுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது, 48 வயதான இந்த விளையாட்டு வீரர் திடீரென கீழே விழுந்து சாலையோர கல்லில் அவரது தலை மோதி கழுத்து எலும்பு உடைந்தது. பிராமன் கோல்பார்நெஸ்ஹாடு (இடது) தென் ஆப்ரிக்க வீரர் டானி வில்சனை முந்தி செல்ல துரத்தி செல்கிறார் கிராமன் கோல்பார்நெஸ்ஹாடுவின் இறப்பு உண்மையிலேயே இதயத்தை நெகிழச் செய்துள்ளது என்று கூறியிருக்கும் சர்வதேச பாராலிம்பிக் குழுவின் தலைவர் பிலிப் கிரேவன், இந்த சம்பவம் …
-
- 0 replies
- 402 views
-
-
500-வது டெஸ்ட் போட்டியை காண அசாரூதீனுக்கு பிசிசிஐ அழைப்பு அசாரூதீன் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இது இந்திய அணியின் 500-வது டெஸ்ட் போட்டியாகும். இதனை நினைவு கூரும் வகையில் இந்தப் போட்டியில் டாஸ் போடுவதற்கு வெள்ளி நாணயம் பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன்களை அழைத்து கவுரவப்படுத்தவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. முன்னாள் கேப்டன்களான சந்து போர்டே, வெங்சர்க்கார், கபில்தேவ், ரவிசாஸ்திரி, கவாஸ்கர், சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், காந்த், ராகுல் டிராவ…
-
- 0 replies
- 427 views
-
-
தினேஸ் சந்திமால் வைத்தியசாலையில்..! (படங்கள் இணைப்பு) இலங்கை கிரிக்கெட் அணியின் உபதலைவர் தினேஸ் சந்திமால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. நேற்று முன்னதினம் இடம்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது வலது கையில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உபாதைக்குள்ளான சந்திமாலுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு மேலும் பல மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவிக்கின்றது. மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னரே இவருடைய உடல் நலம் தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியும் எனவும் கிரிக்…
-
- 0 replies
- 570 views
-
-
ஆஸியுடன் மோதும் இலங்கை ; முதலாவது ஒருநாள் போட்டி நாளை இலங்கை மகளிர் மற்றும் ஆஸி மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை (18) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. ஆஸி மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் 4 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் ஆகியன இடம்பெறவுள்ளன. இதில் முதல் இரண்டு போட்டிகள் தம்புள்ளை ரங்கிரி மைதானத்திலும், இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்திலும் இடம்பெறவுள்ளதோடு டி20 போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்திலும் இடம்பெறவுள்ளன. இந்த போட்டியில் இலங்கை அணியின் தலைவராக சாமரி அதபத்து தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இந்நி…
-
- 0 replies
- 410 views
-
-
பிறீமியர் லீக்: செல்சியை வென்றது லிவர்பூல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெறும் பிறீமியர் லீக் தொடரின், நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியில், செல்சியை லிவர்பூல் தோற்கடித்துள்ளது. செல்சியை, 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் தோற்கடித்திருந்தது. லிவர்பூல் சார்பாக, டெஜான் லெவ்றோன், போட்டியின் 17ஆவது நிமிடத்தில் கோலைப் பெற்றிருந்ததுடன், அணித்தலைவர் ஜோர்டான் ஹென்டர்ஸன், 25 அடி தூரத்திலிருந்து, போட்டியின் 36ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்றிருந்தார். இந்நிலையில், பிரான்ஸின் பரிஸா ஜேமா கழகத்திலிருந்து 32 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு, மீண்டும் செல்சிக்கு திரும்பிய டேவிட் லூயிஸ் கொடுத்த பந்தை டியகோ கொஸ்டா கோலாக்கி, செ…
-
- 0 replies
- 344 views
-
-
ஓய்வுபெற்றார் சர்வான் மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் அணித்தலைவர் ராம்நரேஷ் சர்வான், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். 36 வயதான சர்வான், மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக 87 டெஸ்ட் போட்டிகளில் 15 சதங்கள் உள்ளடங்கலாக 40.01 என்ற சராசரியில் 5,842 ஓட்டங்களையும் 181 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 5 சதங்கள் உள்ளடங்கலாக 42.67 என்ற சராசரியில் 5,804 ஓட்டங்களையும் பெற்றதோடு, 18 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 2 அரைச்சதங்களையும் பெற்றார். இவற்றுக்கு மேலதிகமாக, 4 டெஸ்ட் போட்டிகள் உட்பட, 11 சர்வதேசப் போட்டிகளுக்கு, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குத் தலைமை தாங்கியிருந்தார். இறுதியாக, 2013ஆம் ஆண்டிலேயே சர்…
-
- 0 replies
- 440 views
-
-
ஊக்கமருந்து பயன்படுத்தினார்களாம் வில்லியம்ஸ் சகோதரிகள் வில்லியம்ஸ் சகோதரிகள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து அவர்களிடம் இருந்து பதக்கங்களை திரும்ப பெற்று நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்விகள் எழுந்துள்ளன. ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று, வில்லியம்ஸ் சகோதரிகள் மற்றும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமொன் பைல்ஸ் ஆகியோர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாகவும், அவர்கள் பயன்படுத்திய ஊக்கமருந்தின் பட்டியலையும் செய்தியாக வெளியிட்டிருந்தது. இதனையடுத்து வில்லியம்ஸ் சகோதரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட…
-
- 0 replies
- 464 views
-
-
பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு – டெஸ்ட் அணியில் மூன்று புது முகங்கள். பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு – டெஸ்ட் அணியில் மூன்று புது முகங்கள். அடுத்த மாதம் இங்கிலாந்து அணி, மூன்று ஒருநாள் சர்வதேச போட்டி மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கெடுக்க பங்களாதேஷ்க்கு செல்ல உள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ் தொடருக்கான இங்கிலாந்து அணியின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான அணி விபரங்களே அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்காக 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இளம் வீரர்களான அன்சாரி, பென் டக்கட், ஹசீப் ஹமீத் போன்ற இளம் வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. 2…
-
- 1 reply
- 355 views
-
-
திருப்பு முனை ஏற்படுத்தியது மைக் கேட்டிங்கிற்கு வீசிய பந்து அல்ல: ஷேன் வார்ன் கோப்புப் படம். | ராய்ட்டர்ஸ். ஷேன் வார்னின் ‘நூற்றாண்டின் சிறந்த பந்து’ என்று வர்ணிக்கப்பட்ட மைக் கேட்டிங்கை வீழ்த்திய அந்த பந்து தனது திருப்பு முனை அல்ல மாறாக அதற்கு 6 மாதங்கள் முன்னதாக ரிச்சி ரிச்சர்ட்சனை வீழ்த்திய பந்துதான் என்று கூறியுள்ளார் வார்ன். இது குறித்து அவர் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ரிச்சி ரிச்சர்ட்சனை வீழ்த்திய அந்தப் பந்து பற்றி குறிப்பிட்டுள்ளார். இது மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியாகும். அந்தத் தொடரின் முதல் டெஸ்டில் ஷேன் வார்ன் தேர்வு செய்யப்படவில்லை, போட்டி டிராவில் …
-
- 1 reply
- 389 views
-
-
'எம்.எஸ்.தோனி' படம் என் புகழ்பாடாமல் வாழ்க்கைப் பயணத்தையே பதிகிறது: தோனி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனி. | படம்: ஏ.பி, “எம்.எஸ்.தோனி-தி அன் டோல்ட் ஸ்டோரி” என்ற திரைப்படம் என் புகழ்பாட எடுக்கப்பட்டதல்ல, எனது போராட்டங்கள், பயணங்கள் பற்றியதே என்று இந்திய ஒருநாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இம்மாதம் 30-ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகும் இந்தத் திரைப்படத்தின் விளம்பர பரப்புதலுக்காக தன் மனைவி சாக்ஷி, படத் தயாரிப்பாளர் அருண் பாண்டே ஆகியோருடன் அமெரிக்கா சென்றுள்ளார் தோனி. திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தோனி, “நான் பாண்டேயிடம் ஒரு விஷயத்தை தெளிவாகக் கூறினேன், என்னை உய…
-
- 1 reply
- 535 views
-
-
ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்து ; ஒருவர் பலி பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். ஷகிப் அல் ஹசன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை விளம்பர படப்பிடிப்பில் இறக்கிவிட்ட பின்னர் டாக்கா நோக்கி பயணித்த குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹெலிகொப்டரில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக விபத்து விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து ஷகிப் அல் ஹசன் தரையிறங்கிய இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீற்றர் தூரத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஷகிப் அல் ஹசன் தா…
-
- 0 replies
- 454 views
-
-
கொடுத்தவனே பறித்துக்கொண்டான்டி... ஒருவர் அன்பாகக் கொடுப்பதை நாம் எப்பொழுதுமே அவர் நினைவாகப் பத்திரமாகப் பேணி வைப்பது வழமை. பொருளின் பெறுமதியை விட . அதை அன்போடு கொடுத்தவர்தான் எமக்கு முக்கியமானதாகின்றது. அதுவே எதிரியாகி விட்டால் கதை வேறு. தந்ததைத் திருப்பிக் கொடுப்பதில்தான் எம் கவனம் இருக்கும். நல்ல முறையான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்துஇ தந்ததிற்கு மேலாக முடிந்தால் இரண்டு மடங்காக திருப்பிக் கொடுக்கும்போதுதான் மனம் ஆறுதலடையும். இலங்கை விஜயம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கட் ஆட்டக்காரர்கள் தமது விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார்கள். இலங்கை கிரிக்கட் அணியைப் பற்றி பல விமர்சனங்கள் கொ…
-
- 0 replies
- 622 views
-
-
இரண்டு வகையான விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு உலக சாதனைகளுடன் தங்கங்கள் 2016-09-16 12:25:47 ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெற்றுவரும் பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பெரிய பிரித்தானியாவின் கதீனா கொக்ஸ் இரண்டு வகையான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றதுடன், அந்த இரண்டு போட்டிகளிலும் உலக சாதனைகளை நிலைநாட்டி பெருமை தேடிக் கொண்டார். ரி 38 - 400மீற்றரில் மாற்றுத்திறன் கொண்ட வீராங்கனைகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே இரண்டு வகையான விளையாட்டுக்களில் உலக சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். 25 வயதுடைய கதீனா, ஒலிம்பிக் விளையாட்டரங்கில் புதனன்று நடைபெற்ற ரி 38 பிரிவு…
-
- 0 replies
- 419 views
-
-
நியூஸிலாந்து - மும்பை மோதும் 3 நாள் கிரிக்கெட் இன்று தொடக்கம் நியூஸிலாந்து மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான 3 நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு நியூஸிலாந்து வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். படம்: ஆர்.வி.மூர்த்தி நியூஸிலாந்து - மும்பை அணி களுக்கிடையேயான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆட நியூஸிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக மும்பை அணிக்கு எதிராக அந்த அணி 3 நாள் கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ளது. இப்போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மை…
-
- 0 replies
- 376 views
-
-
கோலூன்றிப் பாய்தலில் யாழ் மாணவி புதிய சாதனை யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி, கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனையை படைத்துள்ளார். தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி கல்விபயிலும் ஜே. அனித்தா என்ற மாணவியே இலங்கை கோலூன்றிப் பாய்தலுக்கான சாதனையை புதுப்பித்துள்ளார். இவர் 3.35 மீற்றர் உயரத்திற்கு கோலூன்றிப் பாய்ந்து ஏற்கனவே இருந்த சாதனை புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இப் போட்டியிலேயே குறித்த சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/11357
-
- 5 replies
- 2.9k views
-
-
சர்வதேச கால்பந்து தரவரிசை அறிவிப்பு-ஆர்ஜண்டீனா முதலிடம். சர்வதேச கால்பந்து தரவரிசை அறிவிப்பு-ஆர்ஜண்டீனா முதலிடம். சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் புதிய தரவரிசையை FIFA அறிவித்துள்ளது, இந்தப் பட்டியலில் ஆர்ஜண்டீனா அணி முதலிடம் பிடித்துள்ளது. பெல்ஜியம், ஜெர்மனி அணிகள் 2 ம்,3 ம் இடத்தை பிடித்துள்ள நிலையில் கொலம்பியா அணி 4 வது இடத்தையும்,5 வது இடத்தை பிரேசில் அணியும் பிடித்துள்ளன. சிலி,போர்த்துக்கல், பிரான்ஸ்,உருகுவே, வேல்ஸ் ஆகிய அணிகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன http://vilaiyattu.com/சர்வதேச-கால்பந்து-தரவரி/
-
- 0 replies
- 349 views
-
-
முரளி ஹார்மணி' கிண்ணக் கிரிக்கெட் 21 அணிகள் களத்தில் 'முரளி ஹார்மணி' கிண்ணம் 2016 தொடரில் இம்முறை மொத்தம் 21 அணிகள் பங்குபற்றுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முரளி கிண்ணம் அபிவிருத்தி மற்றும் குறிப்பாக, இலங்கையின் கிராமப்புறங்களில் உள்ள பாடசாலை கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கவும் வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களிடையே கிரிக்கெட் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வும் இந்தத் தொடர் நடத் தப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான முரளி ஹார்மணிக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பொன்று அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இதில் முத்தையா முரளிதரன், மஹேல ஜயவர…
-
- 1 reply
- 522 views
-
-
சம்பியன்ஸ் லீக்: றியல், சிற்றி, லெய்செஸ்டர் வெற்றி ஐரோப்பிய கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின், நேற்றுப் புதன்கிழமை (14) இடம்பெற்ற போட்டிகளில், ஸ்பானியக் கழகமான றியல் மட்ரிட், இங்கிலாந்து கழகங்களான றியல் மட்ரிட், லெய்செஸ்டர் சிற்றி ஆகியன வெற்றி பெற்றுள்ளதோடு, மற்றொரு இங்கிலாந்துக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோல்வியைத் தளுவியது. தற்போதைய சம்பியன்ஸ் லீக் சம்பியன்களான றியல் மட்ரிட், போர்த்துக்கல் கழகமான ஸ்போர்ட்டிங் லிஸ்பன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இறுதி நிமிடங்களில் பெறப்பட்ட கோல்கள் காரணமாக றியல் மட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. றியல் மட்ரிட் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ, அல்வரோ மொரா…
-
- 0 replies
- 333 views
-
-
ஆஸியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக கிரேம் ஹிக் ஆஸி அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக முன்னாள் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரரான கிராம் ஹிக் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் நவம்பர் மாதம் தென்னாபிரிக்கா அணியுடனான தொடரிலிருந்து தனது பணியை ஆரம்பிக்கவுள்ளதாக ஆஸி கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இவர் தென்னாபிரிக்கா போட்டியிலிருந்து தனது பணியை முன்னெடுத்தாலும், அடுத்த வருடம் இந்தியவுடன் இடம்பெறவுள்ள 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு வீரர்களை தயார்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. காரணம் இலங்கையுடனான டெஸ்ட் போட்டியின் தோல்வியுடன் கடந்த 9 டெஸ்ட் போட்டிகளில் ஆஸி அணி தோல்வி…
-
- 0 replies
- 404 views
-
-
சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் மகாஜனாவின் டிலக்க்ஷனுக்கு தங்கப் பதக்கம்; நேற்று மேலும் 3 புதிய சாதனைகள் 2016-09-15 10:13:53 (தியகமவிலிருந்து நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக் ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் யாழ். மாவட்டப் பாடசாலைக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்தது. 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த எஸ். டிலக் ஷன் 4.30 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். …
-
- 0 replies
- 333 views
-
-
சர்ரே அணிக்காக 1000 ஓட்டங்கள் கடந்தார் சங்கக்கார. சர்ரே அணிக்காக 1000 ஓட்டங்கள் கடந்தார் சங்கக்கார. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆடடக்காரரான குமார் சங்ககாரா, சர்ரே அணிக்காக கழக மட்டப் போட்டிகளில் பங்கெடுத்து வருகின்றார். 2015 இல் இடம்பெற்ற உலக கிண்ணப் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்த சங்கா, இப்போது சர்ரே அணியிலும் சாதித்து வருகின்றார். இந்த பருவகாலத்தில் சர்ரே அணிக்காக 1000 ஓட்டங்கள் கடந்துள்ளார்.டேர்ஹாம் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் 30 ஓட்டங்கள் பெற்றபோதே சங்கா இந்த சாதனையைப் படைத்துள்ளார் http://vilaiyattu.com/சர்ரே-அணிக்காக-1000-ஓட்டங்கள/
-
- 0 replies
- 558 views
-
-
ரியோ பாராலிம்பிக்ஸ்: ஒலிம்பிக் வீரரை மிஞ்சிய பாராலிம்பிக் வீரர்கள்! ஒலிம்பிக் போட்டிகள் ரியோவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த கையோடு பாராலிம்பிக்ஸ் போட்டிகள் ரியோவில் துவங்கின. இதில் நேற்று பார்வையற்றோர்கான டி13 1500மீ ஒட்டப்பந்தையம் நடைபெற்றது. இதில் நிகழ்த்தப்பட்ட சாதனை உலகையே தரும்பி பார்க்க வைத்துள்ளது. அல்ஜீரியாவின் போவுட் பகா பந்தய தூரத்தை 3 நிமிடம் 49.84 நொடிகளில் கடந்தார். இது ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவர் ஓடிய நேரத்தை விட குறைவான நேரமாகும். ஒருவேளை இவர் ஒலிம்பிக்கில் ஓடி இருந்தால் இவருக்கே தங்கம் கிடைத்திருக்கும். ஏனேனில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமேரிக்காவின் மத்தியு சென்ட்ரொவிட்ஸ்-ஏ 1500மீ தூரத்தை கடக்க 3 நிமிடம் 50 நொடிகள்…
-
- 1 reply
- 605 views
-
-
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ‘லயன்’ மெஸ்ஸி ஹாட்ரிக்; 7-0 கோல்கணக்கில் பார்சிலோனா வெற்றி கெல்டிக் அணிக்கு எதிரான போட்டியில் நெய்மர் பாஸை கோலாக மாற்றிய மெஸ்ஸி. | படம்: ஏ.எஃப்.பி. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் கெல்டிக் அணியை 7-0 என்று பார்சிலோனா வீழ்த்துவதற்கு மெஸ்ஸியின் அபாரமான ஹாட்ரிக் உதவி புரிந்தது. அலவேஸ் அணிக்கு எதிராக பார்சிலோனா கடந்த சனிக்கிழமை அதிர்ச்சித் தோல்வி அடைந்தது, இதனையடுத்து பார்சிலோனா பயிற்சியாளர் லூயிஸ் ஹென்றிக் எந்த வித சோதனைகளையும் செய்ய விரும்பாமல் வலுவான அணியைக் களமிறக்கினார். ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே நெய்மரிடம் இருந்து பாஸைப் பெற்ற லயோனல் மெஸ்ஸி நெருக்கடியான ஒரு கோணத்திலிருந்து முதல…
-
- 0 replies
- 273 views
-
-
மே.இ.தீவுகள் அணி தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஃபில் சிம்மன்ஸ் நீக்கம் பில் சிம்மன்ஸ் நீக்கம். | படம்.பிடிஐ மே.இ.தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பில் சிம்மன்ஸ் நீக்கப்பட்டார். டி20 உலகக்கோப்பையை அந்த அணி வென்ற 6 மாதங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு மே.இ.தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட பில் சிம்மன்ஸ், தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரில் ஆட மே.இ.தீவுகள் துபாய் செல்லவுள்ள நிலையில் நீக்கப்பட்டுள்ளார். நீக்கப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணங்கள் எதையும் தெரிவிக்காத மே.இ.தீவுகள் வாரியம், “சமீப காலங்களில் அவர் பொதுவெளியில்…
-
- 0 replies
- 404 views
-
-
சேவக், ஹர்பஜன், உத்தப்பா, பவுல் அவுட் நியாபகம் இருக்கா பாஸ். இன்று தான் அது நடந்தது. #BowlOut #IndVsPak இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே, கண்டிப்பாக 2007-ம் ஆண்டு நடந்த டி20 போட்டிகள் நினைவிற்கு வரும்.ஃபைனலில் கோப்பை வென்றது ஒருபுறம் என்றால், அந்த பவுல் அவுட் போட்டி வேற லெவல். சமீபத்திய பேட்டி ஒன்றில் பாகிஸ்தானுக்கு எதிரான தனக்குப் பிடித்த போட்டி என பவுல் அவுட் போட்டியைத்தான் குறிப்பிட்டு இருந்தார் முன்னாள் வீரர் சேவக், "இரு பெரும் அணிகள் மோதும் முதல் போட்டி, இப்படி ட்ராவாகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.போட்டிக்கு முன்னராகவே பலமுறை ஸ்டம்ப்புகளை அடித்து பயிற்சி செய்துகொண்டு இருந்தோம். நான், உத்தப்பா, ஹர்பஜன் மூவரும் அதிகமுறை பவுல் அவுட்…
-
- 0 replies
- 599 views
-