Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ரியோ ஒலிம்பிக்கில் அம்பலமான கொள்ளை நாடகம்: அமெரிக்க நீச்சல் வீரருக்கு 10 மாதம் தடை கொள்ளை நாடகம் நடத்திய அமெரிக்க நீச்சல் வீரர்கள். | படம்: கெட்டி இமேஜஸ். சமீபத்தில் முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது தங்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வழிப்பறி செய்ததாக நாடகமாடிய அமெரிக்க நீச்சல் வீரர் ரயான் லோக்ட் விளையாட 10 மாதகாலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவருடன் நாடகம் அரங்கேற்றிய மற்ற 3 வீரர்களுக்கும் 4 மாதங்கள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு புடாபெஸ்டில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் லோக்ட் பங்கேற்க முடியாது என்று யு.எஸ்.ஏ. டுடே பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. இந்தத் தடை பற்றி அத…

  2. டி20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி டி20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வஹாப் ரியாஸ் ஆட்ட நாயகன் விருது பெறுகிறார். | படம்: கெட்டி இமேஜஸ். ஓல்ட் டிராபர்டில் நேற்று நடைபெற்ற ஒரே டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டிகளில் ஏற்பட்ட படுதோல்விகளை அடுத்து டி20 கிரிக்கெட் பாகிஸ்தான் அணிக்கு சர்பராஸ் அகமதுவை கேப்டனாக்கியது பாகிஸ்தான் அணி நிர்வாகம். டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களையே எடுத்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் ஷர்ஜீல் கா…

  3. 'அவரைப்போல ஃபினிஷிங்... சான்ஸே இல்ல..!’ அவரைத்தான் சொல்கிறார் லான்ஸ் குளூஸ்னர் தென்னாபிரிக்கா அணியை சேர்ந்த லான்ஸ குளூஸ்னரை அவ்வளவு எளிதில் கிரிக்கெட் ரசிகர்கள் மறந்து விட முடியாது. உலகக் கோப்பை அரையிறுதி போட்டிகளில் 'தி பெஸ்ட் திரில்லர்' என ரசிகர்கள் வர்ணிக்கும் 1999 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடியவர். இந்தியாவுக்கு எதிராக 1996 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கூட எடுக்க வில்லை ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் டெண்டுல்கர், டிராவிட் தவிர மற்ற அனைத்து இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டையும் வீழ்த்தினார். அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஒரு இன்னிங்ஸில் எட்டு விக…

  4. 'சாம்பியன்ஸ் தொடரில் இருந்து விலகுவோம்!' ஐ.சி.சி.யை மிரட்டும் பி.சி.சி.ஐ. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிதி குழு சந்திப்பு துபாயில் சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்றது. அந்த சந்திப்பிற்கு பி.ஸி.ஸி.ஐ அழைக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ராப்பி கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்காமல் போக வாய்ப்பு அமைந்துள்ளது. என்ன தான் நடந்தது? 2014ம் ஆண்டு ஸ்ரீநிவாசன் ஐ.ஸி.ஸி தலைவராக இருந்த போது "தி பிக் த்ரீ"(The Big Three) என்ற ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. இதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டு மிகவும் விரும்பிப் பார்க்கப்படும் நாடுகளான இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த …

  5. உலக கிண்ண கால்பந்து தகுதிசுற்று 32 அணிகள் பங்கேற்கும் உலக கிண்ண கால்பந்து போட்டி 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்தில் இருந்து 13 அணிகள் உலக கிண்ணத்துக்கு தகுதி பெறும். இதற்கான தகுதி சுற்றுகள் தொடங்கி விட்டன. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் 54 அணிகள் 9 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய சாம்பியனான போர்ச்சுகல் அணி நேற்று முன்தினம் தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் பாசல் நகரில் மோதியது. விறுவிறுப்பான இந்த மோதலில் சுவிட்சர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலுக்கு அதிர்ச…

  6.  சொன்னதைச் செய்துகாட்டிய மக்ஸ்வெல் அவுஸ்திரேலியாவின் கிளென் மக்ஸ்வெல், அதிரடியான - பல நேரங்களில் பொறுப்பற்றுவிளையாடும் - துடுப்பாட்ட வீரராக இருந்தாலும், சமூக ஊடக வலையமைப்புகளிலும் ஊடகங்களுடனான சந்திப்புகளிலும், நகைச்சுவையாகவும் எளிமையாகவும் பேசக்கூடிய ஒருவராவார். இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் நான்காவது போட்டியில், அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஆரொன் பின்ச், 18 பந்துகளில் அரைச்சதத்தைப் பெற்று, அவுஸ்திரேலியா சார்பாக பெறப்பட்ட வேகமான அரைச்சதம் என்ற சாதனையைச் சமப்படுத்தினார். அச்சாதனைக்கு சைமன் ஓ டொனல், கிளென் மக்ஸ்வெல் ஆகியோர் இதற்கு முன்னர் சொந்தக்காரர்க…

  7. கிறிஸ் கெய்லுக்கு தீபிகா படுகோனேவுடன் இப்படியும் ஒரு ஆசை ; அதிர்ச்சியில் ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற வேண்டும் என்று விரும்புவதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரரான கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடும் கெய்லின் அதிரடி ஆட்டமே பலரையும் ரசிகர்களாக்கி வைத்திருக்கிறது. இந்தியாவில் தமிழகத்தில் தற்போது இடம்பெற்றுவருகின்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் பிராவோ, கெய்ல் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சென்னை வேலம்மாள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கெய்ல் பங்கேற்றார். அப்போது மாணவர்கள் அவரிடம் சில கேள்விகளைக் கே…

    • 6 replies
    • 657 views
  8. பந்து தலையில் தாக்கி மயங்கிய பிரக்யான் ஓஜா : வைத்தியசாலையில் அனுமதிப்பு (காணொளி இணைப்பு) உள்ளூர் போட்டியொன்றில் விளையாடி வரும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவின் தலையில் பந்து பட்டமையால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போதே பந்து தலையில் தாக்கியுள்ளது. பந்து தாக்கிய பின்னர் மயக்கமடைந்த நிலையில் நிலத்தில் விழுந்தார். இதனையடுத்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பிரக்யான் ஓஜா நலமாக உள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/11097

  9. பார்சிலோனா குழந்தைகள் பயிற்சி அகாடமியில் மெஸ்ஸியின் மகன் தியாகோ படம்: ஏ.எஃப்.பி. ஃபுட்பால் கிளப் பார்சிலோனாவின் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டு தொடர்பான பயிற்சி ஆரம்பப்பள்ளியில் அர்ஜெண்டின நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி தனது மகன் தியாகோவை சேர்க்க முடிவெடுத்துள்ளார். எஃப்சிபிஇஸ்கோலா என்ற 6 வயது முதல் 18 வயது வரையிலான ஆடவருக்கும் பெண்களுக்கும் ஏற்கெனவே ஒட்டுமொத்த பயிற்சி அளித்து வருகிறது. இதன் பைலட் திட்டம்தான் தற்போது குழந்தைகளுக்கான விளையாட்டுப் பயிற்சிப் பள்ளி. பார்சிலோனா முதல் அணியின் வீரர்களின் குழந்தைகளுக்கென்றே இந்தப் பயிற்சிப் பள்ளி பிரதானமாக திறக்கப்படுகிறது, இதில் முதல் பெயராக லயோனல் மெஸ்ஸி மகன் பெயர் தியாக…

  10. இலங்கையுடன் இணையும் இந்தியா ; ஐ.சி.சிக்கு எதிர்ப்பு சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் “டு டையர் டெஸ்ட்” முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்திய கிரிக்கெட் சபையின் முடிவினை வரவேற்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் வாரியம் சர்வதேச அணிகளை இரண்டு பிரிவுகளாக பிரித்து டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது. எவ்வாறாயினும் இந்த தீர்மானத்தின் மூலம் டெஸ்ட் தரவரிசையில் பின்தங்கி இருக்கும் அணிகளுக்கு தீங்கு ஏற்படுவதோடு, ரசிகர்களின் ஆர்வம் குறைந்து வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என்ற காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் சபை குறித்த “டு டையர் டெஸ்ட்” முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. …

  11. ரியோ 2016 பராலிம்பிக் விளையாட்டு விழா இன்று ஆரம்பம்; மீட்பர் கிறிஸ்து அடிவாரத்தில் பிரமாண்டமான சமாதானக் கொடி 2016-09-07 09:50:25 கோடைக்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவின் 31ஆவது அத்­தி­யா­யத்தை கடந்த மாதம் வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்­றிய பிரே­ஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ, மாற்­றுத்­ தி­ற­னா­ளி­க­ளுக்­கான 15 ஆவது பரா­லிம்பிக் விளை­யாட்டு விழாவை இன்று நடை­பெ­ற­வுள்ள தொடக்­க­வி­ழா­வுடன் ஆரம்­பிக்­கின்­றது. பிரேஸில் தேசத்தின் பண்­பா­டுகள் உலகம் முழு­வதும் நினைவில் நிலைத்­தி­ருக்­கக்­கூ­டிய வகையில் கொண்­டாட்­டங்­க­ளுடன் மிகச் சிறப்­பான பரா­லிம்பிக் விளை­யாட்டு விழாவை நடத்­து­வ­தற்கு ரியோ 2016 ஏற்­பாட்டுக் குழு­வினர் உறு­தி­பூண்­டுள்­ளனர். …

  12. 308வது வெற்றியுடன் பெடரரை முந்தினார் செரீனா யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் கஜகஸ்தானின் ஷ்வெடோவாவை வீழ்த்திய செரீனா, கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் தனது 308வது வெற்றியை வசப்படுத்தி சாதனை படைத்தார். ஏற்கனவே முன்னாள் நட்சத்திரம் மார்டினா நவ்ரத்திலோவாவின் சாதனையை (306 வெற்றி) முறியடித்த செரீனா, ஆண்கள் பிரிவில் ரோஜர் பெடரர் 307 வெற்றிகள் பெற்று படைத்த சாதனையை சமன் செய்திருந்தார். தற்போது, 308வது வெற்றியுடன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிக வெற்றிகளை பதிவு செய்தவராக மகத்தான சாதனை படைத்துள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=243929

  13. டி 20 கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி உலகச் சாதனை டி 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை ஒன்றை படைத்துள்ளது. கிளென் மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம். இலங்கை அணிக்கு எதிராக கண்டி பலேகலே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி தமது இருபது ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ஓட்டங்களை எடுத்து இந்தச் சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் கென்ய அணிக்கு எதிராக இலங்கை அணி ஒரு போட்டியில் பெற்றிருந்த 260 ஓட்டங்களே டி 20 சாதனையாக இருந்தது. சிறப்பாக ஆடிய கிளென் மேக்ஸ்வெல் 65 பந்துகளில் 145 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சில நாட்கள் முன்னர்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 4…

  14. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூஸி. அணியில் ஜேம்ஸ் நீஷம் நியூஸிலாந்து ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம். | படம்: ராய்ட்டர்ஸ். இந்தியாவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க பயணிக்கும் நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் சேர்க்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 22-ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது, இதனையடுத்து கொல்கத்தா, இந்தூர் ஆகிய நகரங்களில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது. கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பன் மைதானத்தில் கடைசியாக டெஸ்டில் ஆடிய ஜேம்ஸ் நீஷம் மீண்டும் தன்னை நிரூபிக்க வாய்ப்பு பெற்றுள்ளார். நியூஸிலாந்து டெஸ்ட் அணி: கேன் வில்ல…

  15. 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்கு தெரிவாவதில் பாகிஸ்தானுக்கு சிக்கலாம் ஒருநாள் கிரிக் கெட் தர­வ­ரி­சையில் பாகிஸ்தான் இது­வரை இல்­லாத அளவில் பின்­ன­டைவை சந்­தித்­துள்­ளது. இதனால் பாகிஸ்தான் தன்­னிச்­சை­யாக 2019 உலகக் கிண்­ணத்­திற்கு தகுதி பெறு­வதில் சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது. இங்­கி­லாந்து– - பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்­கெட்­தொடர் முடி­வுக்கு வந்­தது. தொடர்ந்து 4 போட்­டி­களை வென்று 4–-0 என இங்­கி­லாந்து முன்­னி­லையில் இருந்­தது. கடைசிப் போட்­டியில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்று வைட் வொஷ்ஷை தவிர்த்­தது. இந்த தொடர் த…

  16. கிரிக்கெட் வீரர் லிண்ட்சே டக்கேட் காலமானார்.! தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பழமையான கிரிக்கெட் வீரர் லிண்ட்சே டக்கேட் (97) பிலோம்போண்டின் நகரில் நேற்று காலமானார். 1947 ஆம் ஆண்டு முதல் 1949 வரை தென் ஆப்பிரிக்கா அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த போட்டிகள் அனைத்தும் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடப்பட்டது. லிண்ட்சே தன்னுடைய காலத்தில் தென் ஆப்பிரிக்கா அணியின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார். 1947 ஆம் ஆண்டு நாட்டிங்காமில் நடைபெற்ற போட்டியில் டக்கேட் அறிமுகமானார். முதல் இன்னிங்சில் 37 ஓவர்கள் வீசி 68 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தன்னுடைய மொத்த சர்…

  17. இத்தாலியன் கிரான்ட் பிறிக்ஸ்: வென்றார் நிக்கோ இத்தாலியன் கிரான்ட் பிறிக்ஸில் வெற்றி பெற்ற மெர்சிடிஸ் அணியின் ஜேர்மனியச் சாரதியான நிக்கோ றொஸ்பேர்க் வெற்றி பெற்றார். இப்பந்தயத்தில் பெற்ற வெற்றி மூலம், தனக்கும், மெர்சிடிஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டனுக்குமிடையிலான சம்பியன்ஷிப் புள்ளிகள் வித்தியாசத்தை இரண்டாகக் குறைத்துக் கொண்டார். இதுவரையில், இந்த வருடத்தில், ஆறு பந்தயங்களில் வென்றுள்ள ஹமில்டன் 250 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இருக்கின்ற நிலையில், ஏழு பந்தயங்களில் வென்றுள்ள றொஸ்பேர்க், 248 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். ரெட் புல் அணியின் அவுஸ்திரேலியச் சாரதியான டானியல் றிக்கார்டோ, 161 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் காணப்படுகின்ற…

  18. அதிரடி மாற்றங்களுடன் களமிறங்குகிறது இலங்கை இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டி நாளை (06) கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் போட்டியில் இலங்கை அணி பல மாற்றங்களுடன் களமிறங்குகிறது. இலங்கை அணியின் டி20 குழாமின் விபரம் இதோ... 1.குசால் ஜனித் பெரேரா 2.குசால் மெண்டிஸ் 3.தினேஸ் சந்திமால் (அணித் தலைவர்) 4.திலகரட்ன டில்ஷான் 5.தனஞ்சய டி சில்வா 6.சாமர கபுகெதர 7.சச்சித்ர பத்திரன 8.மிலிந்த சிறிவர்தன 9.சுரங்க லக்மால் 10.திசர பெரேரா 11.சச்சித்ர சேனாநாயக்க 12.சீகுகே பிரசன்ன 13.தசுன் சானக 14.கசுன் ராஜித …

  19. டேவிட் வோர்ணருக்கு புது விருது அவுஸ்ரேலிய கிரிக்கட் அணித்தலைவர் ஸ்டீவ் சிமித் நாடு திரும்பியதால் ஒரு நாள் ஆட்டப் போட்டிகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்ட டேவிட் வோர்ணர் இலங்கை அணிக்கு எதிரான அடுத்தடுத்த வெற்றிகளால் தொடரை வெல்ல வழியமைத்துள்ளார்.. பிலிப்ஸ் நிறுவனம் வழங்கும் இந்த ஆண்டுக்கான விளையாட்டுத் துறையின் சிறந்த தந்தைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் இரண்டு பெண்குழந்தைகளுக்கு தந்தையாவார். இலங்கை அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் ஆட்டத்தில் ஒரு சதமடித்து இவர் அசத்தியுள்ளார். http://onlineuthayan.com/news/17178

  20. அகில இலங்கை பாடசாலைகள் மல்யுத்தப் போட்டி கிழக்கு மாகாணத்துக்கு ஒரு தங்கம், 2 வெள்ளிகள் (நெவில் அன்­தனி) கல்வி அமைச்சின் சுகா­தாரம், உடற்­கல்வி மற்றும் விளை­யாட்­டுத்­துறைப் பிரிவு நடத்தும் அகில இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழா­வுக்­கான மல்­யுத்தப் போட்­டியில் கிழக்கு மாகா­ணத்­துக்கு ஒரு தங்கப் பதக்­கமும் இரண்டு வெள்ளிப் பதக்­கங்­களும் கிடைத்­துள்­ளன. மல்­யுத்தப் போட்­டிகள் டொரிங்டன் உள்­ளக அரங்கில் கடந்த 2, 3, 4 ஆம் திக­தி ­களில் நடை­பெற்­றன. இறுதிப் போட்­டி களில் நேற்­றைய தினம் நடை­பெற்றன. மல்­யுத்தப் போட்­டி­களில் கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த எஸ். ரூபி­க­ர­னுக்கு தங்கப் பதக்­கமும் என். பிரகாஷ…

  21. ரியோ பராலிம்பிக்கில் 9 பேர் பங்கேற்பு "எமக்கு இரண்டு பதக்கங்கள் கிடைக்கும்" இம்முறை நடைபெறும் 15ஆவது பராலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்களை வென்றெடுக்க முடியும் என இலங்கை பராலிம்பிக் சபையின் செயலாளர் கேர்ணல் ராஜா குணசேகர வீரகேசரி வார வெளியீட்டு க்குத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவி க்கையில், ''ரியோ டி ஜெனீரோவில் நடைபெறும் பராலிம்பிக் போட்டியில் இலங்கையிலிருந்து 8 வீரர்கள் மற்றும் ஒரு வீராங்கனை அடங்கலாக 9 பேர் பங்குகொள்கின்றனர். இம்முறை இலங்கைக்கு இரண்டு பதக்கங்களை வெற்றி பெற முடியும் என நம்பிக்கைக் கொள்கிறேன். இலங்கை அணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அனில் பிரசன்ன ஜயலத் மற்றும் தினேஸ் பிரியன்த ஹேரத் ஆகிய இருவரும் பதக்கங்களை வென்று தரக்கூடியவ…

  22. ஓய்வு பெற்றார் இந்தியாவின் ''தங்க மகன்'' அபினவ் பிந்த்ரா ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளிலும் 100 கோடி மக்களைக் கொண்ட நாடு ஒரு தங்கப்பதக்கமாவது வெல்லாதா..? என்ற எதிர்பார்ப்பு அனைவரது கண்களிலும் இருக்கும். சிறிய நாடுகள் கூட இரட்டை இலக்கத்தில் தங்கம் அள்ளும். அப்படிப்பட்ட நாட்களில் ஒருநாள் தனி நபர் பிரிவில் ஒரு இந்தியர் தங்கப்பதக்கம் வென்றார். அதுவும் ஒலிம்பிக் போட்டியில் என்ற செய்தி அனைவரையுமே மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது என்பதில் சந்தேகமே இல்லை! ஆம், அபினவ் பிந்த்ரா எனும் துபாக்கி சுடும் வீரர்தான் இந்தியாவிற்காகத் தங்கம் வெல்லும் முதல் தனிநபர். ரியோ ஒலிம்பிக்கில் நான்காவது இடம் பிடித்த இவர். தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இருந்து ஓய்வை …

  23.  தென்னாபிரிக்காவில் வெள்ளையரல்லாதவர்கள் 6 பேர் கட்டாயம் தென்னாபிரிக்காவில் நிலவும் இன வேறுபாடுகளையும் கறுப்பினத்தவர்களும் வெள்ளையினத்தவரல்லாத ஏனையோரும் பின்தங்கியுள்ளமையை நிவர்த்தி செய்யுமுகமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியில், வெள்ளையரல்லாதவர்கள் 6 பேர் இடம்பெற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் நிர்வாக சபையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவு காரணமாக, நிற ஒதுக்கீடென்பது, உத்தியோகபூர்வமாக மாறியுள்ளது. இதில், வெள்ளையரல்லாத 6 பேரில் குறைந்தது இரண்டு பேர், நிச்சயமாக கறுப்பினத்தவர்களாக இருக்க வேண…

  24. ஜேர்மன் கால்பந்தாட்ட கழக அணியில் பிரகாசிக்கும் இலங்கை வீரர் வசீம் ராசிக் இலங்­கை­யி­லி­ருந்து புலம்­பெ­யர்ந்து சென்று உலக நாடு­களில் தங்­க­ளது திற­மை­களை நிரூ­பித்து சாத­னை­களை நிலை­நாட்டும் இலங்கையர்கள் அநேகம். அந்­த­வ­கையில் அண்­மையில் ேஜர்மன் சென்­றி­ருந்­த­போது இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசும் நப­ரொ­ரு­வரைச் சந்­திக்க வாய்ப்பு கிடைத்­தது. அவர் தான் இலங்­கை­யி­லி­ருந்து சென்று ஜேர்­மனில் கால்­பந்­தாட்­டக்­க­ழ­க­மொன்­றுக் குத் தெரி­வாகி அங்கு கலக்கி வரும் வசீம் ராசிக். அவர், தனது அனு­ப­வங்கள், சாத­னைகள், சவால்­களில் சில­வற்றைப் பற்றி பகிர்ந்­து­கொண்டார். இவர் ஜேர்­மனின் தலை­நகர் பேர்­லினில் தனது பெற்ற…

  25. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ-வை வீழ்த்தி இந்தியா ஏ கோப்பையை வென்றது கோப்பையை வென்ற இந்தியா ஏ. | படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நாற்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா ஏ அணியை 57 ரன்களில் வீழ்த்தி மணீஷ் பாண்டே தலைமை இந்தியா ஏ அணி கோப்பையை வென்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக 3-வது முறையாக கோப்பையை வென்ற்து இந்தியா ஏ அணி. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா ஏ அணி 209 ரன்களுக்குச் சுருண்டது. இந்தியா ஏ ஸ்பின்னர்கள் யஜுவேந்திர சாஹல் (4), கருண் நாயர் (2), அக்சர் படேல் (2) ஆகியோர் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.