விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
வங்கதேச பந்து வீச்சு பயிற்சியாளர் வால்ஷ் கோர்ட்னி வால்ஷ் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்ட்னி வால்ஷ், வங்க தேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்த தகவலை அதிகாரப் பூர்வமாக வெளியிடும் முன்னரே மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வால்ஷ் வரும் 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரை பந்துவீச்சு பயிற்சியாளராக நீடிப்பார். டெஸ்ட் போட்டிகளில் 519 விக்கெட்களும் ஒருநாள் போட்டியில் 217 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ள வால்ஷ், 2001-ம் ஆண்டு …
-
- 0 replies
- 436 views
-
-
வெற்றியுடன் விடைபெற்றார் ஸ்வாஞ்டைகர் ஜேர்மனி தேசிய கால்பந்தாட்ட அணியின் உணர்ச்சிபூர்வமான தலைவரான பஸ்டியான் ஸ்வாஞ்டைகர், வெற்றியுடன் சர்வதேசக் கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து விடைபெற்றார். ஜேர்மனி, பின்லாந்து அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ போட்டியே, 32 வயதான ஸ்வாஞ்டைகரரின் இறுதி சர்வதேசப் போட்டியாக அமைந்திருந்த நிலையி, இப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வின்போது ஸ்வாஞ்டைகர் அழுதிருந்தார். இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் மத்தியகள வீரராகவிருக்கும் ஸ்வாஞ்டைகர், 2004ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார். அது முதல் 121 போட்டிகளில் ஜேர்மனிக்காக பங்குகொண்டு 24 கோல்களை ஸ்வாஞ்டைகர் பெற்றார். போட்டியின் 66ஆவது நிமிடத்தில், மாற்று வீரரால் மா…
-
- 1 reply
- 626 views
-
-
குளிர்கால ஒலிம்பிக்கில் பங்குபற்றவும் ரஷ்யாவுக்கு தடை 2016-09-02 11:11:28 ரியோ பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றவதற்கு ரஷ்யாவுக்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்ட நிலையில் இப்போது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் பங்குபற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு அரச ஆதரவுடன் ஊக்கமருந்து வழங்கப்பட்ட குற்றத்தின் பேரிலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு தென் கொரியாவின் பியொங்சாங் நகரில் 2018இல் நடைபெறவுள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=…
-
- 0 replies
- 271 views
-
-
இங்கிலீஷ் பிரிமியர் லீக்: பல மில்லியன் டாலர்கள் புழக்கம் இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் உள்ள கால்பந்து கழகங்கள், கோடைக்கால சாளர மாற்று முறையின் கடைசி நாளில், புதிய வீரர்களை வாங்குவதில் 200 மில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவழித்துள்ளன. புதன்கிழமைதான் இதற்கான கடைசி நாள்; இரண்டு மாதங்களில் 1.5 பில்லியன் டாலர் கைமாறியுள்ளதாக பதிவாகியுள்ளது. பிரிமியர் லீக் மற்றும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களுக்கு மத்தியில் நடந்த லாபகரமான ஒப்பந்தம் இந்த அதிபடியான செலவுகள் செய்வதற்கு உதவியுள்ளது. பிரேசில் ஆட்டக்காரர் டேவிட் லுயிச், செல்சீ அணிக்கு திரும்ப வந்ததும், லிவர்பூலின் இத்தாலிய வீர்ர் மரியோ பலொடெலி, நீஸ் பிரான்ஸ் க்ளப் அணிக்கு மாறியதும் குறிப்பிடத்தக…
-
- 0 replies
- 495 views
-
-
'2015 உலகக்கோப்பை அரையிறுதியில் நடந்தது என்ன?' சுயசரிதையில் டி வில்லியர்ஸின் ஃப்ரீ ஹிட் ஒருமுறை இயக்குநர் சிகரம் பாலசந்தர், ரஜினியிடம் சுயசரிதை எழுதும் எண்ணம் உண்டா என கேட்டார். அதற்கு ரஜினி ‘நான் மகாத்மா காந்தி சுயசரிதை படிச்சிருக்கேன். சுயசரிதைன்னா உண்மை இருக்கனும். உண்மையை எழுதுனா பல பேரோட பகையை சம்பாதிக்க வேண்டி இருக்கும். ஸோ.. இப்போதைக்கு அந்த ஐடியா இல்லை’ என பதிலளித்திருப்பார். ரஜினி சொல்வது போல, சுயசரிதை என்பது சுயதம்பட்டமாக இல்லாமல், உண்மையை உள்ளபடி எடுத்துரைக்கும்படி இருக்க வேண்டும். இல்லையேல் பெரிதாகப் பேசப்படாது. எம்ஜிஆரின் ‘நான் ஏன் பிறந்தேன்’, கருணாநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’, கண்ணதாசனின் ‘வனவாசம்’ இந்த மூன்று சுயசரிதையில் எது பெஸ்ட…
-
- 0 replies
- 483 views
-
-
ஆஸ்திரேலிய அணியுடனான தொடரிலிருந்து விலகினார் அஞ்சேலோ மத்தியூஸ் ஆஸ்திரேலிய அணியுடனான தொடரிலிருந்து விலகினார் அஞ்சேலோ மத்தியூஸ். இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் தசைப்பிடிப்பு உபாதையால் அவுஸ்திரேலிய தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள இறுதி ஒருநாள் போட்டி மற்றும் 2 T20 சர்வதேசப் போட்டிகளிலும் அஞ்சேலோ மத்தியூஸ் பங்கு கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஸ்ரீலங்கா கிரிக்கட்’ இன்னும் அஞ்சேலோ மத்தியூஸ்ற்குப் பதிலாக மாற்று வீரரை அணிக்கு அழைக்காத நிலையில் உப்புல் தரங்க அணிக்கு அழைக்கப்படலாம் என்று அறியக் கிடைக்கிறது. அணித்தலைவர் மத்தியூஸ் நேற்றைய போட்டியில் 40 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் தசைப…
-
- 0 replies
- 418 views
-
-
ஐஸ்எஸ்எல் கால்பந்து: சென்னை அணியில் ஜமைக்கா வீரர் டுவைன் கெர் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் 3-வது சீசன் போட்டிகள் வரும் அக்டோபர் 1-ம் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ளும் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி அணிக்காக ஜமைக்கா கால்பந்து அணியின் டுவைன் கெர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள் ளார். கோல்கீப்பரான கெர் இந்த சீசனுக்காக மட்டும் சென்னை அணிக்காக விளையாட உள்ளார். 29 வயதான கெர் ஐஸ்லாந்தில் உள்ள கிளப் ஒன்றில் விளையாடி வந்தார். அந்த கிளப்பின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததை தொடர்ந்து சென்னை அணியில் இணைந்துள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு ஜமைக்கா அணிக்காக சர்வதேச போட்டிகளில் கெர் அறிமுகமானார். இதுவரை அவர் 15 …
-
- 0 replies
- 475 views
-
-
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 444 ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை படைத்தது இங்கிலாந்து 2016-08-30 23:01:49 பாகிஸ்தானுடனான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 444 ஓட்டங்களைக்குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்தின் நோட்டிங்ஹாம் நகரில் இன்று நடைபெறும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 444 ஓட்டங்களைக் குவித்தது. அலெக்ஸ் ஹேல்ஸ் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இது புதிய சாதனையாகும். 2006 ஆம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 443 ஓட்டங்களைக் குவித்தம…
-
- 4 replies
- 893 views
-
-
அக்ரமைக் கடந்த டேல் ஸ்டெய்ன் சாதனையுடன் டெஸ்ட் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா ராஸ் டெய்லரை வீழ்த்திய டேல் ஸ்டெய்ன். | படம்: ராய்ட்டர்ஸ். செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் டேல் ஸ்டெய்ன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 2-வது இன்னிங்சில் 195 ரன்களுக்குச் சுருண்டது நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை வென்றது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்று கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு சற்றே கடினமாக இருந்த நிலையில் கன மழை, மைதான நிலைமை காரணமாக கைவிடப்பட்டது. ரிச்சர்ட் ஹேட்லியை மீண்டும் பார்ப்பது போன்ற ஒரு அபாரமான ஸ்விங் பவுலிங்கை டேல் ஸ்டெய்ன் நேற்று வெளிப்படுத்…
-
- 0 replies
- 486 views
-
-
இந்தியா-மே.தீவுகள் டெஸ்ட் தொடர் -ச.விமல் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடர், 2-0 என்ற அடிப்படையில் இந்தியாவுக்கு வெற்றியை வழங்கியுள்ளது. எதிர்பார்த்த தொடர் வெற்றி என்ற போதிலும் இந்தியாவுக்கு இதை விட பெரிய தொடர் வெற்றி ஒன்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை இந்திய அணி அடையாமல் போய் விட்டதா என்ற கேள்வி தொக்கு நிக்கின்றது. இதை வைத்தே இந்த தொடரை ஆராய முடியும். இன்னுமோர் வெற்றி கிடைத்து இருந்தால் இந்தியா அணி தரப்படுத்தலில் முதலிடத்தை பெற்று இருக்க முடியும். ஆனால் இறுதிப் போட்டி மழையால் கழுவப்பட்டது. மழை இல்லாவிட்டால் இந்திய அணிக்கு வெற்றி கிடைத்து இருக்கும். முதலிட…
-
- 0 replies
- 450 views
-
-
ஒலிம்பிக்கில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட பிரெஞ்சு வீர, வீராங்கனைகளுக்கு தடை! 2016-08-31 11:51:29 ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்ட காரணத்துக்காக பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனம் தனது நாட்டைச் சேர்ந்த மூவருக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. டென்னிஸ் வீரர் பெனொய்ட் பாய்ரே, வீராங்கனைகளான கிறிஸ்டினா மிலாடேனோவிக், கரோலின் கார்சியா ஆகிய மூவரே தடைக்குள்ளானவர்களாவர். இந்த மூவரினதும் நடத்தை சம்மேளனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 366 views
-
-
தான் பந்து வீசியதிலேயே கடினமான பேட்ஸ்மென் யார்? - ஷோயப் அக்தர் கருத்து கொல்கத்தா, 1999, டெஸ்ட் போட்டியில் அக்தர் பந்தில் பவுல்டு ஆன சச்சின் டெண்டுல்கர். | கோப்புப் படம். வாசிம் அக்ரம் நடத்திய தி ஸ்போர்ட்ஸ்மென் என்ற ஷோ-வில் ஷோயப் அக்தர் தான் வீசியதிலேயே கடினமான பேட்ஸ்மென் யார் என்ற தகவலை வெளியிட்டார். “நிறைய பேட்ஸ்மென்களைக் கூற முடியும். ஆனால் அவர்களை விடவும் வீழ்த்துவதற்கு மிகவும் கடினமான வீரர் இன்சமாம் உல் ஹக்தான். அவரை நான் வலைப்பயிற்சியில் கூட வீழ்த்த முடிந்ததில்லை. அவரை விட என்னை சிறப்பாக ஆடிய வீரர் இல்லை என்றே கூறிவிடலாம். அவரது கால்நகர்த்தல்கள் விரைவாக இருக்கும். அவர் கிரீசில் பந்தை ஆட நிலைப்படுத்திக் கொள்ளும் விதம்…
-
- 0 replies
- 636 views
-
-
2018 உலக கிண்ணத்துடன் ஓய்வு பெறுகிறார் வெய்ன் ரூனி. 2018 உலக கிண்ணத்துடன் ஓய்வு பெறுகிறார் வெய்ன் ரூனி. இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான வெய்ன் ரூனி, 2018 இல் ரஸ்யாவில் இடம்பெறவுள்ள கால்பந்து உலக கிண்ணப் போட்டிகளுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 30 வயதாகும் வெய்ன் ரூனி, இப்போது உலக கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இங்கிலாந்து சார்பில் பங்கேற்று வருகின்றார்.2014 ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணியின் தலைவராக வெய்ன் ரூனி நியமனம் பெற்றார். அணித்தலைவராக நியமனம் பெற்றதன் பின்னர் இங்கிலாந்து அணி முக்கிய 6 தொடர்களில் பங்கெடுத்தது, ஆயினும் ஒன்றிலும் இங்கிலாந்து காலிறுதியை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில்தான் தனத…
-
- 0 replies
- 448 views
-
-
டில்ஷானின் இறுதிப் போட்டியால் எவ்வளவு இலாபம் கிட்டியது தெரியுமா? தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 28ம் திகதி இடம்பெற்ற போட்டியால், பெருமளவு இலாபம் கிட்டியுள்ளது. இதன்படி, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் இடம்பெற்ற குறித்த 3வது ஒருநாள் போட்டியில், நுழைவுச் சீட்டுக்கள் (டிக்கெட்டுக்கள்) விற்பனையால் 4.6 மில்லியன் இலாபம் கிடைத்துள்ளதாக, அந்த மைதானத்தின் பொறுப்பதிகாரி மற்றும் முகாமையாளர் சுஜீவ கொடலியத்த குறிப்பிட்டுள்ளார். இதேவேளை குறித்த போட்டியைப் பார்வையிட சுமார் 50,000 பேர் வருகை தந்த போதும், 20,000 பேருக்கு மாத்திரம் பார்வையிடும் வாய்ப்புக்கள் விளையாட்டரங்கில் செய்யப்பட்டிருந்தாக அவர் கூறியுள்ளார். ஓய்வை அறிவித்துள்ள, இலங்கை அணி…
-
- 0 replies
- 558 views
-
-
கிரிக்கெட்டில் புதிய நோ போல் சமிக்ஞை அறிமுகம் (வீடியோ இணைப்பு) சர்வதேச கிரிக்கெட் வாரியம் மூன்றாவது நடுவர் மூலமாக நோ போல் சமிக்ஞை வழங்குவதனை பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் வாரியம் மூன்றாவது நடுவர் மூலமாக நோ போல் சமிக்ஞை வழங்குவது தொடர்பில் தீர்மானித்த நிலையில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/10778
-
- 0 replies
- 361 views
-
-
இந்த ஆண்டு டெஸ்ட் சீசன் முடிவில் இந்திய அணி முதலிடத்தை பிடிக்கும்: ஒரு நாள் போட்டி கேப்டன் தோனி நம்பிக்கை தோனி. | படம்: பிடிஐ. இந்த ஆண்டு சீசன் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளுக்கான தர வரிசையில் முதலிடத்தை பிடிக்கும் என ஒருநாள் போட்டிக்கான கேப்டன் தோனி தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணி வரும் மாதங்களில் சொந்த மண்ணில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தற்போது டெஸ்ட் தர வரிசையில் 110 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள இந்திய அணி இந்த சீசன் முடிவில் முதலிடத்தை மீண்டும் பிடிக்கும் என தோனி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: …
-
- 0 replies
- 355 views
-
-
இந்திய கிரிக்கெட் அணி அடுத்து விளையாடும் டெஸ்ட்-ஒருநாள் தொடர்கள்! இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது மேற்கிந்தியத்தீவுகள் அணி. முதல் போட்டியில் அந்த அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆவது போட்டி மழையால் கைவிடப்பட்டதால், மேற்கிந்தியத் தீவுகள் தொடரை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வருடம் இந்தியாவில் நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய இரு அணிகள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளன. நியூசிலாந்து தொடர் இந்தியாவுடனான 3 டெஸ்ட் ஆட்டங்கள், 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்…
-
- 0 replies
- 459 views
-
-
இந்திய – மேற்கிந்திய இருபது20 தொடர் அமெரிக்காவில் நாளை ஆரம்பம் இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இருபது20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி அமெரிக்காவில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இரு போட்டிகள் இத்தொடரில் நடைபெறவுள்ளன. இவ்விரு போட்டிகளும் புளோரிடா மாநிலத்தின் ஃபோர்ட் லவ்டர்டேல் நகரிலுள்ள சென்ட்ரல் புரோவார்ட் ரீஜனல் பார்க் அரங்கில் சனி, ஞாயிறு தினங்களில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி இரவு 7.30) மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை பிரசித்தப்படுத்துவதற்கு இச்சுற்றுப்போட்டி உதவி…
-
- 8 replies
- 1.2k views
-
-
ஓய்வின்போது மனம் திறந்த டில்ஷான் (வீடியோ இணைப்பு) இலங்கை அணிக்கு தலைவராக செயற்பட்ட காலத்தில் அணியின் சில வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற இலங்கை அணியின் சகலதுறை வீரர் திலகரட்ண டில்ஷான் கூறியுள்ளார். நேற்று (28) ஆஸி அணிக்கெதிராக தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டி நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை அணியின் தலைமை பொறுப்பை ஏற்கும் எண்ணம் என்னிடம் இருக்கவில்லை. எனினும் அணியின் தலைவராக ஆறு மாதத்திற்கு மாத்திரம் …
-
- 0 replies
- 421 views
-
-
சோதனைக்கு மத்தியிலும் உலக சாதனை படைத்த M.S.டோனி சோதனைக்கு மத்தியிலும் உலக சாதனை படைத்த M.S.டோனி அமெரிக்காவின் கிரிக்கெடடை வளர்ப்பதன் நோக்கமாக கொண்டு புளோரிடாவில் இடம்பெற்றுவரும் இந்திய,மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் டோனி ஓர் உலக சாதனையை படைத்துள்ளார். இந்தியாவின் இளம் வீரர் லோகேஷ் ராஹுலின் அசத்தல் சதம் வீணாகிப்போக பரபரப்பான நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவை 1 ஓட்டத்தால் வெற்றிகொண்டது உலக சாம்பியன்கள் மேற்கிந்திய தீவுகள். நேற்றைய போட்டியில் இறுதி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவையான நிலையில்,இறுதி ஓவரை மிக துல்லியமாக வீசிய பிராவோ,இறுதி பந்தில் இந்தியாவின் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தார், …
-
- 0 replies
- 830 views
-
-
ஒரு நாள் போட்டிகளுக்கு இன்றோடு விடைகொடுக்கும் டில்ஷான் ; 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழப்பு இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப வீரரான திலகரட்ண டில்ஷான் இன்றுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு விடை கொடுக்கிறார். தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இன்று 2.30 க்கு இடம் பெறவுள்ள 3 வது ஒருநாள் போட்டியே டில்ஷானின் இறுதி ஒருநாள் ஆட்டமாக அமையவுள்ளது. 1999 ஆம் ஆண்டு சிம்பாவே அணிக்கெதிராக ஒருநாள் போட்டியில் புதுமுக வீரராக களமிறங்கிய டில்ஷான், இதுவரை இலங்கை அணிக்காக 329 ஒருநாள் போட்டிகளில் 22 சதம், 47 அரைச்சதம் அடங்கலாக 10,248 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதேவேளை பந்துவீச்சில் 329 ஒருநாள் போட்டிகளில் 106 விக்கெட்டுக…
-
- 0 replies
- 375 views
-
-
இலங்கை கிரிக்கட் அணியில் மற்றொரு புதுவரவு புதிய இளம் வீரர்களை அணிக்குள் உள்வாங்கும் பணியை, இலங்கை கிரிக்கெட் அணித் தேர்வுக் குழுவினர் தொடர்கிறார்கள். 19 வயதான வேகப் பந்து வீச்சாளர் லகிறு குமார என்ற இளம் கிரிக்கட் வீரரை 3ஆவது ஒருநாள் போட்டிக்கென தெரிவாகிய 16 பேரில் ஒருவராகத் தெரிந்தெடுத்துள்ளார்கள். கண்டி, ரினிற்றி கல்லூரி மாணவரான இவர் அண்மையில் இங்கிலாந்திற்கு விஜயம் செய்த 19 வயதுக்கு உட்பட்ட அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய ஒரு வீரராவார். தேசிய தெரிவுக்குழுவில் இரண்டாவது பதின்ம வயதினர் குமார என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 19வயதுக்கு உட்பட்ட அணியில் இங்கிலாந்திற்கு எதிராக விளையாடி அடுத்தடுத்து செஞ்சரிகள் அ…
-
- 0 replies
- 525 views
-
-
ஐரோப்பாவின் மிக சிறந்த கால்பந்து வீரர் விருதை வெற்றிகொண்டார் கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ. ஐரோப்பாவின் மிக சிறந்த கால்பந்து வீரர் விருதை வெற்றிகொண்டார் கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ. ஐரோப்பாவின் மிக சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ வெற்றிகொண்டுள்ளார். நேற்று இடம்பெற்ற விருது வழங்கல் விழாவில் இந்த விருதை 31 வயதான கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ பெற்றார்.இவரது சக போட்டியாளர்களான வேல்ஸ் அணியின் நட்சத்திரம் கெரேத் பேலே,பிரான்ஸ் அணியின் நட்ச்சத்திர வீரர் கிரீஸ்மான் ஆகியோரை தோற்கடித்தே ரொனால்டோ இந்த விருதை பெற்றார். ஐரோப்பாவை சேர்ந்த 55 நாடுகளின் ஊடகவியலாளர்கள் இந்த விருதுக்குரியவரை வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய…
-
- 1 reply
- 558 views
-
-
ஒலிம்பிக் பதக்கத்தை ஏழை சிறுவனின் மருத்துவ தேவைக்காக ஏலமிடும் போலந்து நாட்டின் வெள்ளை உள்ளம். ஒலிம்பிக் பதக்கத்தை ஏழை சிறுவனின் மருத்துவ தேவைக்காக ஏலமிடும் போலந்து நாட்டின் வெள்ளை உள்ளம். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நிறைவுக்கு வந்துள்ள 31 வது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் தான் பெற்றுக் கொண்ட பதக்கத்தை ஏழை சிறுவனின் மருத்துவ தேவைக்காக ஏலமிடத் துணிந்திருக்கிறார் போலந்து நாட்டை சேர்ந்த தட்டு எறிதல்(Discus Through ) வீரர் பியோட்டர் மலசோவ்ஸ்கி. 33 வயதான இந்த வீரர், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றார். இதனிடையே அந்த நாட்டை சேர்ந்த ஓலெக் என்ற 3 வயது சிறுவன் கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவனுக்கு உதவி புரிவதில் ஆர்வம் காட்டுகிறா…
-
- 0 replies
- 480 views
-
-
ஒலிம்பிக்கில்... வெல்லாத, வட கொரியா வீரர்களுக்கு கூலி வேலை.. ரேஷன் கார்டுகளும் பறிமுதல்! அதிபர் ஆவேசம்? பியோங்யாங்: ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வட கொரியா வீரர்களின் ரேஷன் கார்டுகளை பிடுங்கி வைத்துக்கொள்ளவும், அவர்களை சுரங்க தொழிலுக்கு கூலி வேலை செய்ய அனுப்பவும் அந்த நாட்டு சர்வாதிகார அதிபர் கிம் ஜோங் உன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், 2 தங்க பதக்கங்கள் உட்பட மொத்தம் 7 பதக்கங்களை வட கொரியா வென்றுள்ளது. அதேநேரம், வட கொரியாவின் பரம எதிரி நாடான தென் கொரியாவோ, 9 தங்கம் உட்ட 21 பதக்கங்களை வேட்டையாடியுள்ளது. 5 தங்க பதக்கங்களையாவது வெல்ல வேண்டும் என அதிபர் 'உத்தரவிட்டு' அனுப்பியிருந்த நிலையில், அதைவிட குறைந்த தங்கம் ப…
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-