Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தோல்விகளால் துவளும் அவுஸ்ரேலிய அணிக்கு புதிய தலைவர் நியமனம்,ஸ்மித் நாடு திரும்புகிறார்-வோர்னர் தலைவராகிறார் தோல்விகளால் துவளும் அவுஸ்ரேலிய அணிக்கு புதிய தலைவர் நியமனம்,ஸ்மித் நாடு திரும்புகிறார்-வோர்னர் தலைவராகிறார். இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 2 வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 82 ஓட்டங்ககளால் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இப்போது 2 போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், 1-1 என்று சமநிலை பெற்றுள்ளது, இந்த நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்த தொடருக்காக புதிய அணித்தலைவரை அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அணியின் அனைத்து வகையான போட்டிகளுக்கும் தலைவரா…

  2. இலங்கை வருகிறார் அதிரடி மன்னன் கிளென் மக்ஸ்வெல் . T20 யிலாவது மீண்டெழுமா ஆஸ்திரேலியா? இலங்கை வருகிறார் அதிரடி மன்னன் கிளென் மக்ஸ்வெல் . T20 யிலாவது மீண்டெழுமா ஆஸ்திரேலியா? இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான தொடரின் T20 போட்டிகளுக்கான குழாமில் ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் என புகழப்படும் மக்ஸ்வெல் இணைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இலங்கைக்கான சுற்றுலாவுக்காக தேர்வு செய்யப்பட்ட அணியிலிருந்து மக்ஸ்வெல் நீக்கப்பட்டிருந்தார். அவர் பங்கெடுத்த இறுதி 10 ஒருநாள் போட்டிகளில் போதிய திறமை வெளிப்பாடுகளை காட்டவில்லை எனும் அடிப்படையில், அவர் நீக்கப்பட்டு அணிக்கு ட்ரெவ்ஸ் ஹெட் சேர்க்கப்பட்டார். சூழல் பந…

  3. பாகிஸ்தான் vs இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி-டக்வோர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து அணி வெற்றி. பாகிஸ்தான் vs இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி-டக்வோர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து அணி வெற்றி. இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியில் 44 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி டக்வோர்த் லூயிஸ் முறையில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் அசார் அலி முதலில் துடுப்பாடும் விருப்பை வெளியிட்டார். அதன…

  4. யூசெய்ன் போல்ட்டுடன் இரவைக் கழித்த பிரேஸில் யுவதி 'அவமானத்தினால் சாகிறேன்' என்கிறார் 2016-08-24 15:12:43 உலகின் அதிவேக மனிதரான ஜெமெய்க்காவின் யூசெய்ன் போல்ட்டுடன் இரவைக் கழித்த யுவதி, 'நான் அவமானத்தில் சாகிறேன்' எனக் கூறியுள்ளார். 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டத்தில் ஒலிம்பிக் சம்பியனாகவும் உலக சம்பியனாகவும் திகழும் யூசெய்ன் போல்ட் கடந்த ஞாயிறன்று தனது 30 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். யூசெய்ன் போல்ட், காதலி கெசி பெனட் ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் கடைசி நாளாகவும் அது அமை ந்தது. அன்றைய இரவில் பிரேஸிலைச் சேர்ந்த ஜேடி துவார்ட்டே என் பவருடன் இரவைக…

  5. முதலிடத்தில் பாகிஸ்தான்: எழுந்து நின்று பாராட்டுங்கள் -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அண்மைக்கால வரலாற்றில், இரண்டு தினங்கள் முக்கியமானவை. முதலாவது, மார்ச் 4, 2009 - பாகிஸ்தானுக்குச் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தினம்: இரண்டாவது, ஓகஸ்ட் 28, 2010 - பாகிஸ்தானின் அப்போதைய தலைவர் சல்மான் பட் உட்பட மூன்று வீரர்கள், பணத்துக்காக ஸ்பொட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டார்கள் என்பது வெளிப்படுத்தப்பட்ட தினம். ஏனைய நாடுகளாக இருந்திருந்தால், இந்த இரண்டு சம்பவங்களாலும் ஏற்பட்ட விளைவுகளால், மோசமான நிலைமையை அடைந்திருக்கும். ஆனால், இரண்டாவது சம்பவம் இடம்பெற்று 6 ஆண்டுகள் ஆகுவதற்கு 6 நாட்கள் முன்னதாக,…

  6. உபாதையிலும் களத்தில் குதித்தார் மலிங்க (படங்கள் இணைப்பு) இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நேற்று (23) ஆர். பிரேமதாச மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு இவ்வருடம் விளையாட முடியாது என்றாலும் அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வருட ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடச் சென்ற மலிங்கவை கிரிக்கெட் சபை இலங்கைக்கு அழைத்திருந்தது. இதன்படி மருத்துவ பரிசோதனையின் பின்னர் இந்த வருடத்தில் எந்த போட்டிகளிலும் பங்கேற்க கூடாது என ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்து இடம்பெறவுள்ள தென்னாபிரிக்கா அணிக்கெதிரான போட்டியிலும் மலிங்க பங்கேற்க மாட்டார் என கிரிக்கெட் …

  7. லோக்கல், கலக்கல், செம தில்! அமர்க்களம் ஆரம்பம் #TNPL-T20 வேஷ்டி சட்டையில் மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து, திருநெல்வேலியில் இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டு, சங்கம் தியேட்டரில் சினிமா பார்த்து, பார்ட் டைம் தமிழனாகவே வலம் வந்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மேத்யூ ஹைடன். தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) டி&20 தொடரை ப்ரமோட் செய்வதற்கான நிகழ்ச்சிகளில்தான் இந்த அமர்க்களம். பயிற்சியாளர் அவதாரம் எடுத்துள்ள லான்ஸ் க்ளூஸ்னர், மைக்கேல் பெவன், பிரட் லீ இனி தங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகின்றனரோ? ‘எதிரணியைச் சேர்ந்தவர் என்றாலும், களத்தில் சாதித்தால் ஆராதிப்பர் என்பதால் சென்னை ரசிகர்கள் மீது எனக்கு தனி பிரியம்’ என்றார் இந்திய ஒருநாள் அண…

  8. ரியோ ரியல் ஹீரோஸ்! எப்போதும் போலவே இந்த முறையும் அமெரிக்காவும் சீனாவும் தங்க வேட்டை யாட, ரியோ ஒலிம்பிக்-2016 இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. எண்ணற்ற மகிழ்ச்சிகள், அதிர்ச்சிகள், பிரிவுகள், உறவுகள், வேதனைகள், சாதனைகள் என கலந்துகட்டிய உணர்வுத் திருவிழாவில் இருந்து விறுவிறு ஹைலைட்ஸ் இங்கே! கோல்டு ஃபிஷ் பசிகொண்ட திமிங்கலம் போல பாய்கிறார் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். அள்ளிக்கோ அசத்திக்கோ என ஆடித் தள்ளுபடி ஆஃபர் போல தங்கப்பதக்கங்களை வரிசையாகக் கபளீகரம் பண்ணுகிறார் பெல்ப்ஸ். போட்டி தொடங்கிய இரண்டே நாட்களில் நான்கு தங்கங்களை வீட்டுக்கு கூரியர் பண்ணிவிட்டார். ஒரு போட்டிக்கு முன்னர், முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அந்…

  9. கிரிக்கெட் போட்டியில் ஹோர்ன் ஒலிக்கு தடை இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் ஹூட்டர்ஸ் ஒலி மற்றும் ஹோர்ன் ஒலி பயன்படுத்துவதை தடை செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/10566

  10. சங்காவின் சதத்தின் துணையுடன் சர்ரே அணி அரை இறுதிக்கு தகுதி சங்காவின் சதத்தின் துணையுடன் சர்ரே அணி அரை இறுதிக்கு தகுதி. இங்கிலாந்தின் கழக மட்ட அணிகளுக்கு இடையில் நடைபெறும் ரோயல் லண்டன் கிண்ணத்தின் 3 ஆவது காலிறுதிப் போட்டியில் இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர் சங்காவின் ஆட்டமிழக்காத சதத்தின் துணையுடன் சர்ரே அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. நோர்த்தம்டம்ஷயார் மற்றும் சர்ரே அணிகள் மோதிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நோர்த்தம்டம்ஷயார் அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தீர்மானித்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய நோர்த்தம்டம்ஷயார் அணி 49 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றது. சர்ரே அணியின் பந…

  11. 2016/2017 பருவகால லா லிகா(LA Liga) போட்டிகள் ஆரம்பமானது-ஓர் அலசல். 2016/2017 பருவகால லா லிகா(LA Liga) போட்டிகள் ஆரம்பமானது-ஓர் அலசல். 1929 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் கழகங்களுக்கிடையிலான முதற்தர காற்பந்து தொடராக ஆரம்பிக்கப்பட்ட லா லிகா போட்டிகள் உலகின் தலை சிறந்த காற்பந்து கழக அணிகளை உருவாக்குவதில் முன்னிலையில் உள்ளது. பார்சிலோனா, ரியல் மாட்ரிட் என உலகப் புகழ் பெற்ற அணிகளின் தாயகமாக லா லிகா தொடர் விளங்குகின்றது. 1929 பார்சிலோனா அணி ‘லா லிகா’ தொடரின் முதலாவது சாம்பியன் பட்டம் வென்றது. ரியல் மாட்ரிட் தனது முதல் சாம்பியன் பட்டத்தை 1932 ஆம் ஆண்டு பெற்றது. ஆரம்ப காலகட்டத்தில் அத்லெடிகோ பில்பாவோ தொடர் வெற்றிகளை பெற்று கிண்ணங்களை பெற்றிருந்தாலும் பிற கா…

  12. “இலங்கை கிரிக்கெட் விருதுகள்-2016”;உங்களுக்கு பிடித்த வீரர் யார்?:நாளை வாக்களிப்பு ஆரம்பம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் அரங்குகளில் நிலைநாட்டப்படும் மிகவுயர்ந்த சாதனைகளுக்கான விருதாக திகழும் “ டயலொக் இலங்கை கிரிக்கெட் விருதுகள் 2016 ” நிகழ்வு அண்மையில் மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு எதிர்வரும் செப்டெப்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. வீரர்களை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நாளை 24 ஆம் திகதி நண்பகல் 12 மணியில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் ட…

  13. சச்சின், சேவக் சாதனையை முறியடித்தார் அஸ்வின்! மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று முன்னிலை வகித்தது.நான்காம் போட்டி வியாழன் அன்று தொடங்கியது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாட ஆரம்பித்தார்கள். முதல் நாள் அரை மணி நேரம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட போட்டியில் மழை குறுக்கிட 22 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. அடுத்த நான்கு நாட்கள் மழை பெய்யாத போதும் ஆட்டம் நடைபெறவில்லை. மழையால் சேதமடைந்த மைதானத்தை, மீட்டெடுக்க முடியாமல் தொடர்ந்து நான்கு நாட்களும் வெறுமனே கழிந்தது. இறுதியாக , போட்டி டிராவில் முடித்துக்கொள்வதாக அறிவிக்க…

  14. மழையால் இந்தியா-மே.இ.தீவுகள் டெஸ்ட் டிரா: நம்பர் 1 நிலைக்கு முன்னேறியது பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை டிரா செய்த மகிழ்ச்சியில் பாகிஸ்தான் அணி. | படம்: ஏ.பி. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனதை அடுத்து இந்தியா 2-0 என்று வெற்றி பெற்றாலும் டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் நம்பர் 1 நிலைக்கு முதன் முறையாக முன்னேறியது. இங்கிலாந்துக்கு எதிராக தொடரை 2-2 என்று டிரா செய்த பாகிஸ்தான் கடந்த வாரம் 2-ம் நிலையில் இருந்தது, இந்தியா கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றிருந்தால் பாகிஸ்தான் அதிலேயே நீடித்திருக்கும், ஆனால் மழை இந்தியாவின் முதல் நிலையைத் தக்கவைப்பில் புகுந்து விளையாடி விட்டது. மே.இ.தீவுகளுக்கு எதிரா…

  15. நல்ல வேளை ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றீர்கள்; நான் கொஞ்சம் ரன் அடிக்கலாம்: ஹெராத்திடம் கூறிய ஸ்டீவ் ஸ்மித் இலங்கைக்கு எதிராக 0-3 என்று ஒயிட்வாஷ் ஆன ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் தான் அவுட் ஆன ஷாட், ஹெராத்தின் அபாரப் பந்து வீச்சு குறித்து விரிவாகப் பேசினார். அப்போது ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து நீங்கள் ஓய்வு பெற்றது நல்லதே, நான் கொஞ்சம் ரன்கள் அடித்துக் கொள்கிறேன் என்று ரங்கனா ஹெராத்திடம் நட்பு முறையில் நகைச்சுவையாகக் கூறியதாக ஆஸி. கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தியில் ஸ்மித் கூறியிருப்பதாவது: குறைந்தது ஒருநாள் போட்டிகளில் ரங்கனா ஹெராத் இல்லை என்பதை அறிகிறேன். அவர் ஒருநாள் கிரிக்கெட்டில…

  16. மின்னல் வேகத்தில் ஓடி ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கங்களை அள்ளிய உசைன் போல்ட் காதலியை ஏமாற்றிவிட்டு, பிளே போய் போல பிற பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. ரியோ ஓலிம்பிக்கில் 4x100 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் தங்கம் வென்ற ஜமைக்காவின் உசைன் போல்ட், அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை தனது 30 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தின்போது பெண் ஒருவருடன் உசைன் போல்ட், ஆபாச நடனம் ஆடிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதற்கு மறுநாளே மற்றொரு பெண்ணுடன் படுக்கையில் மிகவும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானது. பெண்ணின் கன்னத்தில் உசைன் போல்ட் முத…

  17. . இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் தனஞ்சய டி சில்வாவின் விக்கெட்டினைக் கைப்பற்றியபோது, 19 வருடங்களாக நீடித்த சாதனையை மிற்செல் ஸ்டார்க் தகர்த்தார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் வேகமாக 100ஆவது விக்கெட்டினைக் கைப்பற்றியவர் என்ற சாதனையையே ஸ்டார்க் படைத்திருந்தார். தனது 52ஆவது போட்டியில் ஸ்டார்க் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த நிலையில், இதற்கு முன்னர் 53 போட்டிகளிலேயே சக்லைன் முஸ்டாக் 100 விக்கெட்டுகளை 1997ஆம் ஆண்டு கைப்பற்றியிருந்தார். http://tamil.wisdensrilanka.lk/article/4035

    • 0 replies
    • 481 views
  18. "அது" தட்டியதால் பறிபோன ஜப்பான் வீரரின் பதக்கம்... ஒலிம்பிக்கில் சோகம்! ரியோ : ஒலிம்பிக் போட்டிகளில் சுவராஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. விபத்துகளில் சிக்கி பலரும் பதக்க வாய்ப்பை இழந்துள்ளனர். உயரம் தாண்டும் போட்டியில் பங்குபெற்ற ஜப்பான் வீரரின் பதக்கக்கனவு அவரது ஆணுறுப்பினால் பறிபோன சோகம் நிகழ்ந்துள்ளது. ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து பல வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றுவருகின்றனர். இந்த போட்டிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகி வருகின்றன. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்றும் தீவிரமான பயிற்சி ஈடுபட்டு போட்டியிலும் பங்கேற்று வருகின்றனர். ஜப்பானை சேர்ந்த ஹிரோகி ஒஜிடா எனும் வீரர் போல் வால்ட்…

  19. ஒலிம்பிக் போட்டிகளில் தங்களுக்கு கிடைத்த பதக்கங்களை வாயில் வைத்து கடிப்பது போன்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதை நம்மில் பலரும் அவதானித்துள்ளோம். தற்போது இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் மட்டுமல்ல ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்த வழக்கம் இருக்கத்தான் செய்கின்றது. பதக்கங்களை கடிப்பதற்கான பதிலை பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இதற்கான பதில் தற்போது வெளிவந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில், சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் தலைவராக இருந்த டேவிட் வெலனஷ்கி கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளில் இவ்வாறு பதக்கங்களை கடிப்பது வழக்கமாக மேற்கொள்ளபடுகின்றது. இதற்காக ஒலிம்பிக் கட்டுபாடோ, சட்டமோ விதிக்கவில்லை. ஒருவகையில் புகைப்படவியலாளர்கள் …

  20. முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை 263 ரன்களுக்கு சுருட்டியது நியூஸிலாந்து அற்புதமாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய டிரெண்ட் போல்ட். | படம்: ஏ.எப்.பி. டர்பனில் நேற்று தொடங்கிய தென் ஆப்பிரிக்கா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 2-ம் நாளான இன்று தென் ஆப்பிரிக்கா தனது மீதமுள்ள 2 விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்களை எடுத்துள்ளது. நேற்று போதிய வெளிச்சமின்மையால் 77.4 ஓவர்களில் ஆட்டம் முடிக்கப்பட்ட போது தென் ஆப்பிரிக்கா 236/8 என்று இருந்தது, இன்று காலை வந்தவுடனேயே டேல் ஸ்டெய்ன் 2 ரன்களில் சவுதி பந்தில் பவுல்டு ஆனார். ரபாதா 32 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ பியட் 9 ரன்களில் போல்ட்டிடம் வீழ்ந்தார். 87.4 ஓவர்களில் 263 ரன்களுக்கு தென் …

  21. ஒலிம்பிக் 4X100மீ ரிலேவிலும் ஹாட்ரிக் தங்கம்: சாதனையுடன் விடைபெற்றார் உசைன் போல்ட்! 3 முறை 3 தங்கம் வென்று டிரிப்பிள் டிரிப்பிள் அடித்த உசைன் போல்ட். | படம்: ராய்ட்டர்ஸ். வெற்றிக்களிப்பில் உசைன் போல்ட். | படம்: ஏ.எஃப்.பி. ரியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆடவர் தடகளப ்பிரிவில் 4X100மீ ரிலே ஓட்டத்தில் கடைசி 100மீ ஓட்டத்தில் அபாரமாக ஓடி ஜமைக்கா அணி தங்கம் வெல்ல பெரும் பங்களித்தார் உசைன் போல்ட். இவரிடம் பேட்டனை கடைசி 100மீட்டருக்காக அளித்தவர் மற்றொரு ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் நிகெல் ஆஷ்மீட் என்பவராவார், அவரிடமிருந்து பேட்டனை பெற்ற உசைன் போல்ட் தனது போல்ட் ரக ஓட்டத்தில் முதலிடம் பிடிக்க ஜமைக்கா அணி 37.27 விநாடிகளில் இலக்கைக் கடந்து தங்கம் வென்றது. இதன்மூல…

    • 5 replies
    • 773 views
  22. கொள்ளை நாடகம் நடத்திய அமெரிக்க நீச்சல் வீரர்கள். | படம்: கெட்டி இமேஜஸ். ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்க நீச்சல் வீரர்கள் 3 பேர் தாங்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறியது நாடகம் என்று அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து பிரேசிலுக்கு களங்கம் விளைவிக்கும் இத்தகைய குற்றச்சாட்டு தவறு என்று நிரூபிக்கப்பட்டதால் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி பிரேசிலிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. உண்மையில் விசாரணையில் தெரிய வந்தது என்னவெனில் அமெரிக்க நீச்சல் வீரர்களில் 4 பேர் குடிபோதையில் எரிவாயு நிலையத்தில் நுழைந்து சூறையாடியுள்ளனர். இதனையடுத்து இவர்களை பிடித்து வைத்த பெட்ரோல் பங்க் பாதுகாவலர்கள் சேதாரத்திற்கு பணம் செலுத்திவிட்டு இங்கிருந்து செல்லுங்கள…

  23. ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்க உங்களுக்கு எத்தனை வயது ஆகியிருக்க வேண்டும்? குதிரைகள் எவ்வாறு குதிரைச்சவாரி நிகழ்வுகளில் பங்கேற்கின்றன?ஒலிம்பிக்ஸ் குறித்து நீங்கள் கேட்க வேண்டும் என்று எண்ணிய கேள்விகளுக்கு எங்களிடம் பதில்கள் உள்ளன. பிற தடகள வீரர்களைப் போல, குதிரைகளும் விமானத்தில் பயணித்து வந்து சேருகின்றன. விமானத்தில் உயர் வகுப்புக்கு இணையான வசதியான முறையில், ஐக்கிய ராஜ்யத்தில் இருந்து ரியோ டி ஜெனிரோவிற்கு குதிரைகள் வந்து சேர்ந்தன. விமானத்தில் குதிரைகளுக்கான ஓர் அடைப்பில் இரண்டு குதிரைகள் பயணித்தன. ஆனால் ஓர் அடைப்பில் மூன்று குதிரைகள் பயணிக்க முடியும். தரையில், குதிரைகள் தொழுவ அடைப்பிற்குள் அனுப்பட்டு பின் விமானத்தில் ஏற்றப்படுகின்றன. அந்த குதிரைகள் நின்று கொண்டுதா…

    • 0 replies
    • 524 views
  24. பதக்கங்களைத் தாண்டி இதயங்களை வெல்லும் நிகழ்வுகள்: காதல் களமானது ஒலிம்பிக் மைதானம் ஒலிம்பிக் மைதானத்தில் பதக்கங்களைத் தாண்டி இதயங்களை வெல்லும் நிகழ்வுகளும் இடம்பெற்று அவை அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. சீனாவின் முன்னணி நீச்சல் வீராங்கனைகளில் ஒருவரான ஹே சி (25), கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 3 மீட்டர் ஸ்ப்ரிங்போர்ட் பிரிவு நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். வெள்ளி வென்ற அவருக்கு வைரம் பரிசாகக் கிடைக்கும் என அவர் நினைக்கவில்லை. வெள்ளிப் பதக்கம் பெற்றுவிட்டு மைதானத்தின் நடுவே வந்து நின்ற ஹே சி அருகே சென்ற அவரது காதலர் கின் காய் (30) ஒற்றைக் காலால் மண்டியிட்டு ஒரு வைர மோதிரத்தை எடுத்து ஹே சி-யிடம் நீட்டி திருமண பந்தத்திற்கு அனுமதி கோரினார். …

  25. எனது இலக்கு தங்கம்..!' - சிந்து உற்சாகம் சாக்‌ஷி மாலிக் வெண்கலம் வென்று ஆரம்பித்து வைத்த இந்தியாவின் பதக்கப்பட்டியலை, மேலும் அழகூட்ட இருக்கிறார் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து. நேற்று நடந்த பேட்மிட்டன் போட்டியில் அனல் பறந்தது. ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தார் சிந்து. உலகின் நம்பர் ஒன் வீரரான கரோலினா மரினை, இன்று மாலை 6.55 மணிக்கு இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறார் சிந்து. 49 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில், 21-19,21-10 என்ற நேர் செட் கணக்கில் வென்றார் சிந்து. இரண்டாவது செட்டில் திடீரென பி.வி.சிந்து விஸ்வரூபம் எடுத்தார். 11-10 என்ற நிலையில் இருந்து அடுத்த பத்து புள்ளிகளை தொடர்ச்சியாக வென்றார் சிந்து. முடிவில், 21-10 என இரண்டாவது செட்டையும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.