விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7861 topics in this forum
-
கோலியின் கேப்டன்சி தவறுகளை சுட்டிக்காட்டிய சவுரவ் கங்குலி கங்குலி. | கோப்புப் படம்: அசோக் சக்ரவர்த்தி. ராஸ்டன் சேஸின் அபாரமான சதம், பிளாக்வுட்டின் அதிரடி ஆட்டம், டவ்ரிச், ஹோல்டரின் இரும்பு போன்ற உறுதியினால் 2-வது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அபார எழுச்சி பெற்று டிரா செய்தது. ஆனால் கோலியின் கேப்டன்சியில் சில தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளார் சவுரவ் கங்குலி. இது குறித்து தனியார் சேனல் ஒன்றில் கங்குலி கூறியிருப்பதாவது: அமித் மிஸ்ராவுக்கு முன்பாகவே அஸ்வினை பந்து வீச அழைத்திருக்க வேண்டும். அதே போல் உமேஷ் யாதவ்வை கோலி இன்னும் கூட நன்றாகப் பயன்படுத்தலாம். அவருக்கு அளித்த ஓவர்கள் எண்ணிக்கையை விட அவரது பந்து வீச்சு திறமை சிறப்பானது…
-
- 0 replies
- 281 views
-
-
இலங்கை - அவுஸ்திரேலிய தொடரின் போது மிகப்பெரிய உள்ளக கிரிக்கெட் மையத்தை திறக்க ஏற்பாடு கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மிகப்பெரிய உள்ளக கிரிக்கெட் மையத்தை அவுஸ்திரேலிய - இலங்கை தொடரின் போது திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுவருவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. குறித்த உள்ளக கிரிக்கெட் மையத்தின் கட்டுமான வேலைகளை, இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, ஐ.சி.சி.யின் பிரதம நிறைவேற்றதிகாரி டேவிட் ரிச்சட்சன் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவுடன் விஜயம் செய்து பார்வையிட்டனர். குறித்த உள்ளக கிரிக்கெட் மையம் இலங்கை கிரிக்கெட் ச…
-
- 0 replies
- 328 views
-
-
டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் சாதனைகள் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் சாதனைகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கெதிராக விளையாடும் இலங்கை அணி, தனது 250 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. 1981/82 பருவகாலங்களில் இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடத் தொடங்கிய இலங்கை அணி, அண்ணளவாக 35 வருடங்களாக தனது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் போட்டிகளில் கலக்கிய வீரர்கள், மற்றும் இலங்கை அணி செய்த சாதனைகளை இந்த கட்டுரை இயம்பவுள்ளது. இதுவரை இலங்கை அணி விளையாடிய போட்டிகளில் 76 வெற்றிகளையும், 81 சமநிலைகளையும், 92 தோல்விகளையும் கடந்துள்ளது. இந்திய அணிக்கெதிராக பிரேமதாச மைதானத்தில் 97/98 பருவகாலத்தில், இனிங…
-
- 0 replies
- 358 views
-
-
மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக கிரிக்கெட் விளையாடிய அவுஸ்ரேலிய பிறிஸ்பன் A.A.Potoroos அணி மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக அவுஸ்ரேலியா பிறிஸ்பன் A.A.Potoroos கிரிக்கெட் அணி மற்றும் மட்டக்களப்பு மைக்கல்மென் இணைந்து 30 ஓவர் கொண்ட நட்புறவு கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று இன்று நடைபெற்றது. மைக்கல்மென் அணி மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையில் ஆரம்பமான கிரிக்கெட் போட்டி உத்தியோகபூர்வமாக கிழக்கு பல்கலைகழகத்தின் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் ஆரம்பத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா அணி களத்தடுப்பை தீர்மானித்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய மைக்கல்மென் அணி முப்பது ஓவர் முடிவில் நான்கு பேர் ஆட்டமிழப்பு…
-
- 0 replies
- 614 views
-
-
10 ஆண்டுகளில் கனவும் நிஜமும்: கோலி நெகிழ்ச்சி பகிர்வுக்கு திராவிட் மகிழ்ச்சி பதில் கோலி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த படம். கிரிக்கெட்டில் தலைமுறைகள் மாறலாம்; ஆனால் ஊக்கமளித்தவர்களை மறக்காத இளம் தலைமுறை ஆரோக்கியமானதாகும். அவ்வகையில் விராட் கோலி ராகுல் திராவிடுடன் இருந்த இரண்டு புகைப்படங்களை நெகிழ்ச்சியுடன் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். ஒன்று 10 ஆண்டுகளுக்கு முன்பாக திராவிடின் பார்வைக்கு ஏங்கிய ஆச்சரியமான கண்களுடன் இளம் விராட் கோலி, இன்னொன்று அதே திராவிட், டெஸ்ட் கேப்டன் விராட் கோலியை பேட்டி எடுத்தது. முதல் படத்தில் சிறுவனாக தோற்றமளிக்கும் விராட் கோலி, தனது லட்சிய ஆளுமையான திராவிட்டையே உற்று நோக்க, மற்ற வீரர்…
-
- 0 replies
- 373 views
-
-
அமெரிக்காவில் இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் T20 போட்டி. அமெரிக்காவில் இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் T20 போட்டி. T20 உலக கிண்ண சாம்பியன்களான மேற்கிந்திய தீவுகள் , மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 T20 போட்டிகள் கொண்ட தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் இடம்பெறவுள்ளன. இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான குறித்த T20 தொடரை அமெரிக்காவில் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் இணங்கியுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது. அமெரிக்காவின், பூளோரிடாவில் உள்ள சென்ட்ரல் புரோவார்ட் பூங்கா மைதானத்தில் இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் இடையிலான T20 தொடர் நடைபெறவுள்ளது. தற்போது இதே மைதானத்தில்தா…
-
- 0 replies
- 396 views
-
-
ரங்கன ஹேரத்தின் புதிய பாதை இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் சமுக வலைத்தளமான உத்யோகப்பூர்வ டிவிட்டர் தளத்தில் நேற்று (02) இணைந்தக்கொண்டுள்ளார். இவரின் முதலாவது டுவிட்டாக மெத்தியுஸ், சந்திமல் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவுசெய்து பகிர்ந்துள்ளார். http://www.virakesari.lk/article/9729
-
- 0 replies
- 466 views
-
-
முத்தரப்புத் தொடராகின்றன டெஸ்ட் போட்டிகள்? சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியன கொண்ட தொடரில் டெஸ்ட் போட்டிகள், முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடராக மாறுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தொடர், ஒக்டோபரிலும் நவம்பரிலும் இடம்பெறவிருந்த நிலையிலேயே, இலங்கையும் சிம்பாப்வேயும் மேற்கிந்தியத் தீவுகளும் விளையாடும் முத்தரப்புத் தொடராக மாற்றப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையுடனான டெஸ்ட் தொடரின் மூலமாகக் கிடைக்கும் வருமானம், போதுமானளவில் இருக்காது என்பதால், டெஸ்ட் தொடரை விளையாடும் எண்ணத்தை, சிம்பாப்…
-
- 0 replies
- 324 views
-
-
ஹிட்லர் அணிந்த ஒலிம்பிக் முகமூடி! ஒலிம்பிக் டைரி குறிப்புகள் 1. ஹிட்லரின் ஒலிம்பிக்ஸ்! முதல் உலகப் போர் நடக்கக் காரணம் யார்?... அதனால் உலகமே சீரழிந்து கிடக்கிறதே, அனைத்துக்கும் காரணம் யார்? அந்தக் கொடூரக் குற்றவாளி யார்?... முதல் உலகப் போருக்கு ‘நன்றி’ கார்டு போட்ட சமயத்தில், இந்தக் கேள்விகள் எழுந்தபோது இதற்கான ஒற்றை பதிலாக சகல திசைகளிலிருந்தும் ஆள்காட்டி விரல்கள் ‘ஜெர்மனி’யை நோக்கித்தான் நீண்டன. ஜெர்மனி, முதல் உலகப்போரில் சந்தித்த இழப்புகளைவிட, அடுத்த 10 ஆண்டுகளில் போர்க் குற்றவாளியாக ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு சந்தித்த பேரிழப்புகளே மிக அதிகம். 'ப்ச்... என்னதான் இருந்தாலும் ஜெர்மனி பாவம். பொருளாதார ரீதியாக சோம்பிப் போய்க் கிடக்கிறது…
-
- 20 replies
- 4.7k views
-
-
லீமனின் ஒப்பந்தம் நீடிப்பு அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுநர் டெரன் லீமனின் பயிற்றுநர் பதவிக்கான ஒப்பந்தம், 2019ஆம் ஆண்டுவரை நீடிக்கப்பட்டுள்ளது. அவ்வாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணம், ஆஷஸ் தொடர் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே, இந்த ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட டெரன் லீமன், 2019ஆம் ஆண்டுடன் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெற்ற ஆஷஸ் தொடருக்குச் சில நாட்கள் முன்பாக, அவுஸ்திரேலியாவின் பயிற்றுநராக அறிவிக்கப்பட்ட டெரன் லீமன், அடுத்ததாக இடம்பெற்ற ஆஷஸ் தொடரை வென்றதோடு, தென்னாபிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கெதிர…
-
- 0 replies
- 360 views
-
-
சொந்த மண்ணில் இராமகிருஸ்ணா முதலிடம் -வடிவேல் சக்திவேல் மட்டக்களப்பு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட உறவுகளின் ஞாபகார்த்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் சொந்தமண்ணிலே முதலிடத்தினை பெற்றுக்கொண்டது. மேற்படி கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 26கழகங்கள் பங்கேற்று, இறுதிப்போட்டிக்கு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகமும் கல்லடி யூத் கழகமும் தெரிவாகியிருந்தன. போட்டியின் வழமையான நேரத்தில் இரு அணிகளும் எவ்விதமான கோல்களையும் இடாத சந்தர்ப்பத்தில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்காக பெனால்டி மத்தியஸ்தரினால் வழங்கப்பட்டது. பெனால்டியில், இராமகிருஸ்ணா வெற்றி பெற்று …
-
- 0 replies
- 296 views
-
-
தேசிய மட்ட கராட்டி போட்டிகளில் தமிழ் பிரதேசங்களிலிருந்து நால்வர் -வி.சுகிர்தகுமார் தேசிய மட்ட கராட்டி சுற்றுப்போட்டிகளுக்காக அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களிலிருந்து நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவில் ஒருவரும், ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் இருந்து மூவரும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டனர். திருகோணமலை சென்.ஜோசப் கல்லூரியில் கடந்த 23ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாணமட்ட கராட்டி சுற்றுப்போட்டிகளில் கலந்து கொண்ட இவ்வீரர்களே தேசியமட்ட போட்டிகளுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிசாந்தன் தெரிவித்தார். …
-
- 0 replies
- 239 views
-
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை.... இலங்கை - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பல்லேகலையில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதற்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹேரத்தும் முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் 49 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அவர், 2-வது இன்னிங்சில் 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். 9 விக்கெட்டுக்கள் கைப்பற்றியதால் ஹேரத் ஐ.சி.சி.யின் தரவரிசையி்ல 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். தற்போது அவர் 749 புள்ளிகளுடன் அந்த இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர் அஸ்வின் 876 புள்ளிகளுடன் முதல் இடத்திலும…
-
- 1 reply
- 513 views
-
-
இங்கிலாந்துச் சம்பியன்களை வீழ்த்திய பிரெஞ்சுச் சம்பியன்கள் இங்கிலாந்தின் கால்பந்தாட்டச் சம்பியன்களான லெய்செஸ்டர் சிற்றி அணியை எதிர்கொண்ட பிரான்ஸின் சம்பியன்களான பரிஸ் செய்ன்ட் ஜேர்மைன் அணி, மிக இலகுவான வெற்றியொன்றைப் பெற்றுக் கொண்டது. லொஸ் ஏஞ்சலஸில் இடம்பெற்ற கண்காட்சிப் போட்டியொன்றில், 25,667 இரசிகர்கள் மைதானம் முழுவதும் காணப்பட, இரு நாட்டுச் சம்பியன்களும் மோதினர். ஆரம்பத்திலிருந்தே ஆக்ரோஷமாக விளையாடிய பரிஸ் செய்ன்ட் ஜேர்மைன் அணி, 26ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியூடாக, கோல் எண்ணிக்கை ஆரம்பித்தது. எடின்சன் கவானியினால் அந்தக் கோல் பெறப்பட்டது. பின்னர், முதற்பாதி முடியும் நே…
-
- 0 replies
- 286 views
-
-
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு – கிளென் மக்ஸ்வெல் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு – கிளென் மக்ஸ்வெல் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலியா அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதை தொடர்ந்து நடைபெறவுள்ள 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடருக்கான ஆஸி அணியின் விபரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், இம்முறை அவுஸ்திரேலியாவின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட, ஆஸியின் ஒருநாள் அணிக்கு முதல் தெரிவாக தெரிவுசெய்யப்படும் கிளென் மக்ஸ்வெல்க்கு இடம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேர்வுக்குழ…
-
- 19 replies
- 1.4k views
-
-
திண்டுக்கல்லில் அஸ்வின், கோவையில் முரளி விஜய்..! ஏலம் போன கிரிக்கெட் வீரர்கள் தமிழ்நாடு பிரிமீயர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் இன்று நடைபெற்றது. அஸ்வினை திண்டுக்கல் அணியும், முரளி விஜயை கோவை அணியும், தினேஷ் கார்த்திக்கை தூத்துக்குடி அணியும் ஏலம் எடுத்துள்ளன. முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளுக்கான வீரர்கள் ஏலம், சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, காரைக்குடி, கோவை ஆகிய 8 அணிகளின் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது அணிக்கான வீரர்களை தேர்வு செய்தனர். இந்திய கிரிக்கெட்…
-
- 0 replies
- 412 views
-
-
கடலில் நீந்தி கிரேக்கம் சென்ற அகதி ஒலிம்பிக்ஸில் பங்கேற்கிறார் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் 'அகதிகள் அணி' என்கிற பெயரில் ரியோ ஒலிம்பிக்ஸில் கலந்துக்கொள்ள விருக்கும் அணியின் வீராங்கனை, பதினெட்டு வயது யஸ்ரா மர்தினி. சிரியாவிலிருந்து வெளியேறிய இவர், ஐரோப்பா வருவதற்காக துருக்கியிலிருந்து கிளம்பினார். ஆனால் இவர் வந்த படகு கடலில் மூழ்கத் தொடங்கியது. அவரும் அவரது சகோதரியும் கிரேக்கத்தை நோக்கி நீச்சலடித்து சென்று சேர்ந்தார்கள். பல மாதங்களுக்குப்பின் ஜெர்மனியில் உள்ள அவர், ரியோ ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் நம்பிக்கையுடன் உள்ளார். http://www.bbc.com/tamil/multimedia/2016/07/160729_refugee_team?ocid=socialflow_facebook%3FSThi…
-
- 0 replies
- 685 views
-
-
ஹஷிம் ஆம்லா, ஏ.பி.டிவில்லியர்ஸ் தடுப்பாட்ட சாதனையை முறியடித்த ஆஸி. ஜோடி மாரத்தான் தடுப்பாட்டம் ஆடிய பீட்டர் நெவில். | படம்: ஏ.பி. பல்லக்கிலேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றாலும், ஆஸ்திரேலிய பேட்டிங் ஜோடி புதிய டெஸ்ட் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். 5-ம் நாளான இன்று 268 ரன்கள் வெற்றி இலக்கை எட்டும் கனவுடன் 83/3 என்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 157/8 என்று தவிர்க்க முடியாத தோல்வி நிலைக்குச் சென்றது, ஆனால் மழையை எதிர்நோக்கிய ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில் மற்றும் ஓ’கீஃப் ஜோடி எப்பாடுப்பட்டாவது போட்டியை டிரா செய்யலாம் என்ற பெரு முயற்சியில் ஈடுபட்டனர். இவர்கள் செய்த இந்த மாரத்தான் முயற்சி ‘ப்ளாக்க…
-
- 0 replies
- 320 views
-
-
ஓய்வு பெற்றார் ஜெர்மன் கால்பந்து நட்சத்திர வீரர் ஸ்வெயின்ஸ்டெய்கர் ஷ்வெய்ன்ஸ்டெய்கர் ஓய்வு பெற்றார். | படம்: கெட்டி இமேஜஸ். ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நடுகள வீரரான இவர் தலைமையில் கடந்த 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை ஜெர்மனி வென்றது. இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அரையிறுதியில் பிரான்ஸிடம் 0-2 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஜெர்மனி அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் …
-
- 0 replies
- 368 views
-
-
கிழக்கின் சமர் கால்பந்தாட்டம் 'கிழக்கின் சமர்" என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை, அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி எதிர்வரும் முதலாம் திகதி பிற்பகல் 3.30மணியளவில் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. அக்கரைப்பற்று ஸ்ரீஇராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் அதிபர் எம். கிருபைராஜா தலைமையில் நடைபெறும் போட்டி நிகழ்வுகளில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளார். இரண்டாவது வருடமாக …
-
- 0 replies
- 385 views
-
-
சானியா சாதித்த ரகசியம்! #AceAgainstOdds #SaniaAutobiography அது 2003 ம் ஆண்டு. சான்யா மிர்சா, நைஜீரியாவில் தன் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு பதக்கங்களுடன் நாடு திரும்புகிறார். அந்த ஆப்பிரிக்க மண்ணில் அவர் அடைந்த வெற்றி, அவருக்கு நிறைய தன்னம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. அவர் அங்கிருந்து மும்பையை நோக்கி பயணிக்கும் போது, அவருக்குப் பல கனவுகள். 'நம் மக்கள் நம்மை உச்சிமுகர்ந்து வரவேற்கப் போகிறார்கள், தங்கள் அன்பால் நம்மை திக்குமுக்காட வைக்கப் போகிறார்கள்...' என்ற கனவுகளுடன் இந்தியாவை நோக்கி பயணிக்கிறார். அவர் கனவுகளிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. ஏனென்றால், அந்த சமயத்தில் சானியா இந்தியாவில் பிரபலமடைந்து இருந்தார். ஏற்கெனவே, அவருக்கு அத்தகைய வரவேற்…
-
- 0 replies
- 863 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக நிக் போதஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் நிக் போதஸ் நியமிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. நிக் போதஸ் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதியில் இருந்து இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்பார். 42 வயதான நிக் போதஸ், தென்னாபிரிக்க அணியின் விக்கெட் காப்பளரும் துடுப்பாட்ட வீரரும் ஆவார். கடந்த 2011 ஆம் ஆண்டு நிக் போதஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 11 ஆயிரம் ஓட்டங்களையும் 50…
-
- 0 replies
- 258 views
-
-
கிரிக்கெட் அணிகளும் பயிற்றுநரின் தேசிய அடையாளமும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்று பயிற்றுநர்களின் தேசிய அடையாளங்கள் குறித்து எந்த அணிகளும் அக்கறை கொண்டதாகவோ அதனால் கவலை கொண்டதாகவோ தெரியவில்லை. ஆனால் இலங்கை இந் நிலைமை தலைகீழாக இருக்கின்றது. லோர்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வெல்ல மென்ச்செஸ்டர், ஓல்ட் ட்ரபோர்ட் டெஸ்டில் அதே அணி பாகிஸ்தானினால் பதம் பார்க்கப்பட்டது. ஓல்ட் ட்ரபோர்ட் டெஸ்ட் முடிவில் பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்கும் இங்கிலாந்து பயிற்றுநர் சக்லெய்ன் முஷ்தாக்கும் ஆர்வ மிகுதியுடன் உரையாடியவண்ணம் இருந்தனர். …
-
- 0 replies
- 345 views
-
-
என்னதான் வேண்டும் அர்ஜுனவுக்கு? -பேரின்பராஜா திபான், கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கைக்கு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தவரும் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க, நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில், இலங்கை கிரிக்கெட் சபை பற்றியும் இலங்கையில் கிரிக்கெட் பற்றியும் தனது கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். இலங்கையின் சாதனை வீரரான முத்தையா முரளிதரனைத் "துரோகி"யாக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில், அர்ஜுனவின் கலந்துரையாடல், முக்கியமானதாகக் கருதப்பட்டது. ஆனால், அர்ஜுனவின் வழக்கமான பாணியிலான முறைப்பாடுகளே, இதன்போது காணப்பட்டன. …
-
- 0 replies
- 457 views
-
-
கஜிஸ்கோ றபடாவுக்கு விருது மழை தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ந்துவரும் இளம் வீரரான கஜிஸ்கோ றபடா, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் வருடாந்த விருதுகளை அள்ளியெடுத்துக் கொண்டார். 21 வயதான றபடா, இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளிலும் 20 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 16 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் மாத்திரமே விளையாடியுள்ள போதிலும், அவ்வணியின் முக்கிய வீரராக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. விருது விவரம்: சிறந்த கிரிக்கெட் வீரர்: கஜிஸ்கோ றபடா சிறந்த டெஸ்ட் வீரர்: கஜிஸ்கோ றபடா சிறந்த ஒ.நா.ச.போ வீரர்: கஜிஸ்கோ றபடா சிறந்த இ-20 ச.போ வீரர்: இம்ரான் தாஹிர் வீரர்களின் சிறந்த வீரர்: கஜிஸ்கோ றபடா இரசிகர்களின் சிறந்த வீரர்:…
-
- 0 replies
- 297 views
-