விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7861 topics in this forum
-
இத்தாலி பகிரங்க டென்னிஸில் அண்டி மறே, செரீனா சம்பியன்கள்: 85 வருடங்களின் பின்னர் பிரித்தானிய ஆடவர் சம்பியன் இத்தாலி பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை அண்டி மறேயும் மகளிர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை செரீனா வில்லியம்ஸும் சுவீகரித்தனர். மட்றிட் பகிரங்க டென்னிஸ் போட்டியில் நொவாக் ஜோகோவிச்சிடம் அடைந்த தோல்வியை ரோம் பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் அண்டி மறே நிவர்த்தி செய்துகொண்டார். மழை காரணமாக டென்னிஸ் அரங்கு ஆபத்தைத் தோற்றுவிக்கலாம் என ஜோகோவிச் முறைப்பாடு செய்த போதிலும் போட்டியைத் தொடருமாறு மத்தியஸ்தர் ஸ்டெய்னர் கேட்டுக்கொண்டார்.…
-
- 0 replies
- 337 views
-
-
ஸ்டார்க், ஹேசில்வுட்டுடன் கமின்ஸும் இணைந்தால் ஆஸி.யை கண்டு எதிரணிகள் அஞ்சும்: ரியான் ஹாரிஸ் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் பேட் கமின்ஸ். | படம்: ஏ.எஃப்.பி. காயத்தினால் பாதிக்கப்பட்டு அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்து வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கமின்ஸ் தற்போது முழுமையாக குணமடைந்து விட்டார். விரைவில் அஸ்திரேலியா ஏ அணிக்காக பேட் கமின்ஸ் மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்குரிய பந்தில் வீச வருகிறார் என்று அவர் காயத்திலிருந்து மீளவும் தனது பழைய வேகப்பந்து வீச்சை மீண்டும் பெறவும் உதவிய வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ் தெரிவித்துள்ளார். பேட் கமின்ஸ் ஓடிவந்து பந்தை வீசும் விதம் காயங்கள் ஏற்பட பெரும் காரணமாக அமைந்ததையடுத்து ரியான் ஹா…
-
- 0 replies
- 256 views
-
-
14-வது பட்டம் வென்றது சானியா - ஹிங்கிஸ் ஜோடி இத்தாலி ஓபனில் பட்டம் வென்ற சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி. படம்: கெட்டி இமேஜஸ். ரோம் நகரில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் நம்பர் ஒன் ஜோடியான இந்தியாவின் சானியா மிர்சா, ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. இந்த ஜோடி வெல்லும் 14-வது பட்டம் இதுவாகும். இறுதிப்போட்டியில் சானியா ஜோடி 6-1, 6-7(5), 10-3 என்ற செட்கணக்கில் போராடி ரஷ்யாவின் கேத்ரினா மகரோவா, எலினா வெஸ்னினா ஜோடியை தோற்கடித்தது. சிவப்பு நிற களிமண் தரையில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வெல்வது இதுவே முதன்முறை. இந்த ஆண்டில் களிமண் தரை ஆடுகளத்தில் நடைபெற்ற போட்டியில் இருமுறை…
-
- 0 replies
- 450 views
-
-
விராட் கோலியின் ‘மாஸ்டர் கிளாஸ்’ மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்: ஸ்டீவ் ஸ்மித் விராட் கோலியை பாராட்டும் ஸ்மித். | படம்: ஏ.பி. சமீபத்தில் முடிந்த உலகக்கோப்பை டி20 போட்டித் தொடரில் ஆஸ்திரேலியாவை வெளியேற்றிய கோலியின் அருமையான 82 ரன் இன்னிங்ஸ் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். அன்று விராட் கோலி 39 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார், அதன் பிறகு 12 பந்துகளில் மேலும் 32 ரன்களை விளாசி 5 பந்துகள் மீதமுள்ள நிலையில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தார், ஆஸ்திரேலியா வெளியேறியது. இந்த இன்னிங்ஸில் 2 சிக்சர்களையே கோலி அடித்தார். இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு ஸ்மித் கூறியதாவது: அன்று கோலி ஆடிய இன்னிங்…
-
- 0 replies
- 324 views
-
-
சம்பியன்ஸ் லீக்கில் மன்செஸ்டர் சிற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வந்த பிறீமியர் லீக்கின் இறுதி நாள் ஆட்டங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிலையில், மன்செஸ்டர் சிற்றியின் சம்பியன்ஸ் லீக் தகுதி ஏறத்தாள உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்துடன் ஆர்சனல் முடித்துக் கொண்டது. மன்செஸ்டர் சிற்றி, சுவான்சீ சிற்றி அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்று போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் 66 புள்ளிகளைப் பெற்று மன்செஸ்டர் சிற்றி நான்காமிடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று பௌர்ண்மௌத் உடனான போட்டியில் 19-0 என்ற கோல்கண…
-
- 0 replies
- 317 views
-
-
ஹமில்டனும் றொஸ்பேர்க்கும் மோத வென்றார் மக்ஸ் வெர்ஸ்ட்டப்பன் ஸ்பானிஷ் கிரான்ட் பிறிக்ஸில் மெர்சிடிஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டனும் ஜெர்மனியச் சாரதியான நிக்கோ றொஸ்பேர்க்கும் மோதிக் கொள்ள, ரெட் புல் அணியின் பெல்ஜியச் சாரதியான மக்ஸ் வெர்ஸ்ட்டப்பன், போர்மியுலா வண் வரலாற்றின் இளம் வெற்றியாளராக மாறினார். மேற்படி பந்தயத்தின் முதலாவது சுற்றிலேயே றொஸ்பேர்க்கை முந்த முயன்ற தற்போதைய போர்மியுலா வண் சம்பியனான ஹமில்டன் புற்தரைக்கு சென்று சுழன்று றொஸ்பேர்க்குடன் மோதியதில் அதன் பின்னர் இப்பந்தயம் ரெட்புல்லுக்கும் பெராரிக்குமிடையிலானதாக மாறியிருந்தது. இந்நிலையில்,…
-
- 0 replies
- 414 views
-
-
இலங்கையில் பாக்.–மே.தீ.வுகள் தொடர் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான தொடர் ஒன்றை இலங்கையில் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் நிலவுகின்ற பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக சர்வதேச கிரிக்கெட் அணிகள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதற்கு அச்சம் தெரிவித்துவருகின்றன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தான் அணி தொடர்களை நடத்திவருகிறது. எனினும் அங்கு போட்டிகளை நடத்துவதால் ஈட்டப்படுகின்ற வருமானம் போதா நிலை காண…
-
- 0 replies
- 434 views
-
-
இங்கிலாந்து மகளிர் எவ். ஏ. கிண்ண கால்பந்தாட்டத்தில் ஆர்சனல் கழகம் 14ஆவது தடவையாக சம்பியனானது 2016-05-16 12:01:29 இங்கிலாந்தின் மகளிர் எவ். ஏ. கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ஆர்சனல் மகளிர் அணி 14ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது. இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்கத்தினால் 46ஆவது வருடமாக நடத்தப்பட்ட மகளிர் எவ். ஏ. கிண்ண கால்பந்தாட்ட இறுதி ஆட்டத்தில் செல்சி மகளிர் அணியை லண்டன் வெம்ப்ளி விளையாட்டரங்கில் எதிர்கொண்ட ஆர்சனல் மகளிர் அணி 1 – 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிகொண்டு கிண்ணத்தை சுவீகரித்தது. போட்டியின் 18ஆவது நிமிடத்தி…
-
- 0 replies
- 344 views
-
-
வெற்றியுடன் நிறைவுசெய்த பயேர்ண் மியூனிச் ஜேர்மனி கால்பந்தாட்டத் தொடரான புண்டெஸ்லீகாவின் இறுதி லீக் போட்டியில் வெற்றிபெற்ற அந்த லீக்கின் சம்பியன்களான பயேர்ண் மியூனிச், அவ்வணியின் பயிற்றுநரான பெப் கார்டியோலாவின் இறுதிப் போட்டியை, வெற்றியுடன் முடித்தது. இப்போட்டிக்கு முன்னதாக சம்பியன்களாகத் தெரிவாகியிருந்த பயேர்ண் மியூனிச் சார்பாக, றொபேர்ட் லெவன்டொவ்ஸ்கி ஒரு கோலையும் கோட்ஸே 2 கோல்களையும் பெற்றுக் கொடுக்க, எதிரணியான ஹன்னோவெர் அணி தடுமாறியது. அவ்வணியால், ஒரேயொரு கோலையே பெற இயலுமாக அமைய, 3-1 என்ற கோல் கணக்கில் அவ்வணி வெற்றிபெற்றது. இதன்படி, போட்டிக்கான புள்ளி அட்டவணையில், இரண்டாமி…
-
- 0 replies
- 428 views
-
-
வடக்கின் நீலங்களின் சமர் வெற்றிக்கிண்ணம் கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் கையில் கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் இரண்டு கல்லூரிகளுக்கு இடையே வருடந்தோறும் நடைபெறுகின்ற வடக்கின் நீலங்களின் சமர் கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியானது நேற்று முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி சமரின் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது நேற்று முன்தினம் நாணய சுழற்சியில் வெற்றி ஈட்டிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி களத்தடுப்பை தீர்மானித்து களமிறங்கியது இரண்டு நாட்களைக் கொண்டு நடத்தப்பட்ட டெஸ்ட் கடினப்பந்து போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி 35.வது பந்து பரிமாற்றத்தின் நான்காவது பந்து …
-
- 0 replies
- 281 views
-
-
"நம்ம தல தோனி" இந்த கிரிக்கெட்ல பேட்ஸ்மேன அவுட் ஆக்க மட்டுமே பந்து வீசுவாங்க... ஆனா அதை தடுத்து, ரன் எடுக்கிறதுலதான் பேட்ஸ்மேனோட வெற்றி அடங்கி இருக்கு. அந்த கிரிக்கெட்ல கிறுக்குத்தனமான ஒரு வெறியும், ஒரு புத்திசாலித்தனமான திறமையும் இருந்தால், ஒரு நாள் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கிற இண்டர்நேஷனல் மேட்ச்சையும் ஆட முடியும். இதற்கு எடுத்துக்காட்டு நம்ம 'தல' தோனி. தொடரும்....
-
- 33 replies
- 2k views
-
-
ருவான்டா கிரிக்கெட் வீரர் உலக சாதனை சிறிய ஆப்ரிக்க நாடான ருவாண்டாவின் கிரிக்கெட் அணியின் தலைவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். சாதனைப் படைத்துள்ள எரிக் துசீங்கிஸிமானா வலைப்பயிற்சியில் இதுவரை சாதனையாக இருந்த 51 மணி நேரத்தை எரிக் துசீங்கிஸிமானா முறியடித்துள்ளார். ருவாண்டாவில் முதலாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை கட்டுவதற்கு நிதி திரட்டும் நோக்கிலேயே தொடர்ச்சியாக அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மேலும் ஒரு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகின்றது. இப்படியான நடவடிக்கைகள் மூலமாக ருவாண்டாவில் மேலும் பலர் கிரிக்கெட் விளையாட்டை முன்னெடுக்க …
-
- 0 replies
- 606 views
-
-
தவணுக்கு பதில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு தரவேண்டியது ஏன்?- ஒரு பார்வை இலங்கைக்கு எதிராக தனது 2-வது டெஸ்ட் சதத்தை லோகேஷ் ராகுல் எடுத்த போது மட்டையை உயர்த்தும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி. இந்திய அணியில் ஒரு சில வீரர்களுக்கு கூடுதலாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஷிகர் தவணும் ஒருவர். ஆனால் தற்போது குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் இவருக்குப் பதிலாக கவுதம் கம்பீரை கொண்டு வர வேண்டும் என்று குரல்கள் எழுந்து வருகின்றன. கவுதம் கம்பீர் மன உறுதி படைத்த வீரர், அனுபவமிக்கவர், ஆக்ரோஷமானவர் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. ஆனால் ஷிகர் தவணுக்குப் பதிலாக 3 வடிவங்களிலும் கே.எல்.ராகுல் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதில் கூடுதல் நன்மைகள் ஏற்…
-
- 0 replies
- 433 views
-
-
17ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டி; வலல்ல மாணவி ஹர்ஷிகா தேசிய சாதனை, அருணோதயாவின் ஜொய்சனுக்கு தங்கம் (நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான 17ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் ஒரு தேசிய சாதனையும் 3 புதிய சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன. 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.34 மீற்றர் உயரத்தை தாவிய வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஹர்ஷனி தர்மரத்ன புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினர். இதற்கு முன்னைய சாதனை 3.33 மீற்றராக இருந்தது. இப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த ஜே. அனிதா 3.00 மீற்றர் உயரம் தாவி இ…
-
- 1 reply
- 380 views
-
-
ஒரு மில்லியன் டொலரை நஷ்ட ஈடாக கேட்க உள்ளோம் : கிரிக்கெட் சபை இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கு ஐ.சி.சி.யால் தடை விதிக்கப்பட்டிருந்தமையால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சர்வதேச கிரிக்கெட் சபையிடம் ஒரு மில்லியன் டொலரை நஷ்டஈடாக கேட்க உள்ளோம் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. குசேல் ஜனித் பெரேரா தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பாவித்ததாக கூறி ஐ.சி.சி.யால் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் ஆய்வில் அது பொய்யானது. எனவே நஷ்டஈடு கேட்கும் உரிமை எமக்குள்ளது. இதற்கு முன்னதாக குசல் ஜனித் பெரேராவை இலங்கை அணியில் இணைத்து நாட்டுக்காக விளையாட வாய்ப்பளிப்பதே முக்கிய நோக்கமாகும். http://www.virakesari.lk/article/6340
-
- 2 replies
- 886 views
-
-
ஐ.சி.சி. கிரிக்கெட் குழுவின் அங்கத்தவரானார் மஹேல இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் குழுவின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/6343
-
- 0 replies
- 501 views
-
-
ஐஸ் ஹொக்கியில் கலக்கிய புட்டின் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஐஸ் ஹொக்கியில் தனது திறமைகளை வெளிக்காட்டினார். 2014ஆம் ஆண்டு சோச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்ற மைதானமொன்றில் இடம்பெற்ற சிநேகபூர்வப் போட்டியொன்றிலேயே, அவர் இவ்வாறு சிறப்பான திறமையை வெளிக்காட்டினார். அதிகாரிகள், வணிகர்கள், முன்னாள் வீரர்கள் உள்ளடங்கிய அணியை வழிநடத்திய புட்டின், தொழில்முறையல்லாத வீரர்கள் அடங்கிய அணிக்கெதிராக இப்போட்டியில் விளையாடியிருந்தார். இப்போட்டியில், புட்டினின் அணி, 9-5 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்தது. சிவப்பு நிற ஜேர்சியை அணிந்திருந்த புட்டின், கோல் பெறுவதற்கான இரண்டு உதவிகளை வழங்கியிருந்தார். அவரது ஜேர்சியின் பின்புறத்த…
-
- 0 replies
- 285 views
-
-
பிரபல கிரிக்கட் வர்ணனையாளர் உயிரிழப்பு கிரிக்கட்டின் குரல் என்று அனைவராலும் போற்றப்பட்ட வர்ணனையாளர் டோனி கோசியர் உடல்நிலை பாதிப்பால் நேற்று மரணம் அடைந்தார். உயிரிழக்கும் போது அவருக்கு 75 வயது. சமீபகாலமாக கழுத்து, கால் பகுதியில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளார். மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த டோனி கோசியர் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எழுத்தாளரர், பத்திரிகையாளர், வர்ணனையாளர் என பன்முக திறன் கொண்டவராக திகழ்ந்தார். 1965ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி அவுஸ்திரேலியா சென்ற போது தனது வர்ணனையாளர் பணியை தொடங்கிய அவர் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வர்ணனை மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். டோனி கோசி…
-
- 0 replies
- 359 views
-
-
டோனியின் ஓய்வு குறித்து முடிவெடுக்க அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் தலைவர் பொறுப்பில் இருந்து டோனியை மாற்றி விட்டு விராட் கோலியை நியமிக்க இதுவே சரியான தருணம் என்று இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி கருத்து தெரிவித்து இருந்தார். இது குறித்து முன்னாள் தலைவர் அசாருதீனிடம் கருத்து கேட்ட போது, ‘அது கங்குலியின் தனிப்பட்ட கருத்தாகும். அதனை நான் மதிக்கிறேன். எப்போது ஓய்வு பெறுவது என்பது குறித்து முடிவு எடுக்கும் வாய்ப்பை டோனிக்கு அளிக்க வேண்டும். அந்த வாய்ப்பு வழங்ககப்படுவதற்கு டோனி தகுதியானவர். டோனி சிறந்த தலைவராக விளங்கி வருகிறார். அவரது தலைமையில் இந்திய அணி உலக கோப்பை போட்டிகளில் வென்று இருப்பதுடன், இந்தியா ம…
-
- 1 reply
- 252 views
-
-
மென்செஸ்டர் யுனைட்டட் கழக பஸ்ஸை தாக்கியவர்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை மென்செஸ்டர் யுனைட்டட் அணியின் பயிற்றுநர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரசிகர்களுக்கு வாழ் நாள் தடை விதிக்கப்படும் என வெஸ்ட் ஹாம் கழகம் எச்சரித்துள்ளது. மென்செஸ்டர் யுனைட்டட் அணியினர் பயணம் செய்த பஸ் வண்டியின் யன்னல் ஒன்றும் தாக்கி நொறுக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் காரணமாக மென்செஸ்டர் யூனைட்டட் அணிக்கும் வெஸ்ட் ஹாம் அணிக்கும் இடையிலான போட்டி 45 நிமிடங்கள் தாமதித்தே ஆரம்பமானது. ‘‘பொலியென் மைதானத்திற்கு வெளியில் சில ஆதரவாளர்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட…
-
- 0 replies
- 273 views
-
-
கேப்டன் பதவியை திணிக்கக்கூடாது: சுனில் கவாஸ்கர் சுனில் கவாஸ்கர். | கோப்புப் படம். 2019 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தோனி தான் வழிநடத்த வேண்டுமா என்பதை தேர்வுக்குழுவினர் இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்று கங்குலி கருத்து தெரிவித்திருந்தார். மேலும் குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிக்கும் கோலியை கேப்டனாக நியமிப்பது குறித்து தேர்வுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக சுனில் கவாஸ்கர் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் “அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விராட் கோலியை கேப்டனாக இருக்க சொல்லி நிர்பந்தத்தை ஏற்படுத்தக் கூடாது. கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில…
-
- 0 replies
- 303 views
-
-
குசல் பெரேராவின் தடை நீக்கம் இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட்காப்பாளருமான குசல் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு,மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குசல் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் குறித்த தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த தடைக்கு எதிராக குசல் பெரேரா சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். இதற்கமைய குசல் பெரேராவுக்கு ஊக்க மருந்து சோதனையை நடத்திய கட்டாரைத் தளமாக கொண்ட நிறுவனம், தாம் முன்வைத்த அறிக்கை பிழைய…
-
- 2 replies
- 529 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் சர்லோட் எட்வேர்ட்ஸ் இங்கிலாந்து பெண்கள் அணியின் தலைவியான சர்லோட் எட்வேர்ட்ஸ், தனது இருபதாண்டு விளையாடும் காலத்துக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதில், பத்தாண்டுகள் அணியின் தலைவியாக இருந்துள்ளார். வீரர்களிலோ அல்லது வீராங்கனைகளிலோ இங்கிலாந்து அணியை 200க்கு மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் தலைமை தாங்கிய முதலாமவராக கடந்த வருடம் மாறியிருந்தார். பெண்களின் விளையாட்டு நடைபெறுகின்றது என்றும் வீராங்கனையாகவும் அணித்தலைவியாகவும் தனது பங்களிப்பு தொடர்பில் மிகுந்த பெருமையுடன் தான் விடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். 23 டெஸ்ட் போட…
-
- 0 replies
- 236 views
-
-
ஹாங்காங் உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீகில் மைக்கேல் கிளார்க் மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.எஃப்.பி. ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஹாங்காங் உள்நாட்டு டி20 லீக் கிரிக்கெட்டில் விளையாடவிருக்கிறார். இந்த மாத இறுதியில் ஹாங்காங் பிளிட்ஸ் அணியில் மைக்கேல் கிளார்க் ஆடவுள்ளார். 2015-ல் ஓய்வு பெற்ற மைக்கேல் கிளார்க், மீண்டும் கிரிக்கெட்டுக்குள் நுழைய கடுமையான பயிற்சிகளுடன் முயன்று வருகிறார், ஆனால் இவர் கடைசியாக டி20 ஆடியது 2012-ம் ஆண்டு, இதனால் பிக் பாஷ் லீக் அணிகள் கூட மைக்கேல் கிளார்க் மீது ஆர்வம் காட்டவில்லை. மேலும் டி20 கிரிக்கெட்டில் மைக்கேல் கிளார்க் பெயர் இதுவரை பெரிதாக தடம்பதியவில்லை. இந்நிலையில் எங்கிர…
-
- 0 replies
- 435 views
-
-
பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பிக்க மறுத்ததை வசிம் அக்ரம் விமர்சிக்கிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் பதவிக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் விண்ணப்பிக்க மறுத்ததையிட்டு வசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் இதற்கான வாயில் திறக்கப்பட்டிருந்தபோதிலும் அவர்கள் அது குறித்து கரிசணை காட்டாதது கவலை தருகின்றது என்றார் அக்ரம். தலைமைப் பயிற்றுநர் தேர்வுக்கான குறும்பட்டியலைத் தயார் செய்தவர்கள் குழாமில் வசிம் அக்ரமும் ஒருவராக இடம்பெற்றிருந்தார். உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் பிரகாசிக்காததை அடுத்…
-
- 0 replies
- 199 views
-