விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
இந்திய அணியில் ’இவர்கள்’ தேர்வு செய்யப்படுவார்களா? நடப்பு ஐபிஎல் தொடரில் கவுதம் கம்பீர், ராபின் உத்தப்பா, பார்த்திவ் படேல், அக்சர் படேல், மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் நன்றாக ஆடி வருகின்றனர். இந்நிலையில் இளம் வீரர்களுக்கும் அனுபவ வீரர்களுக்கும் மீண்டும் வாய்ப்பளித்து வரும் இந்திய அணித்தேர்வுக்குழு இவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக கம்பீர் இருக்கும் ஃபார்ம் அவரை முரளி விஜய்யுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட தொடக்க வீரராக மீண்டும் களமிறக்கலாம் என்ற அளவுக்கு கம்பீர் ரசிகர்கள் நினைக்கின்றனர். அதுவும் ஷிகர் தவண் ஒரு போட்டியில் அடித்தால் பிறகு 5-6 போட்டிகளில் தொல்வியடைகிறார், மேலும் சமீபத்த…
-
- 0 replies
- 507 views
-
-
கோலிக்கு இந்த வாரம் அபராத வாரம்! இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கு இவ்வாண்டு மிகவும் அற்புதமான ஆண்டு. தொட்டதெல்லாம் பொன் என்பதுபோல் ரன் மழையாகப் பொழிந்து வருகிறார். டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்றார். இப்போது ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசமே வைத்துள்ளார். ஆனால் இந்த வாரம், ஏனோ தெரியவில்லை கோலிக்கு பிரச்சனைகள் படையெடுத்த வண்ணம் உள்ளன. கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மெதுவாகப் பந்துவீசியதால் கேப்டன் கோலிக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இணை உரிமையாளராக உள்ள ஐ.எஸ்.எல் கால்பந்து அணியான கோவா அணிக்கு தற்போது 11 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெரிதும…
-
- 0 replies
- 488 views
-
-
பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மிக்கி ஆதர் நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக 48 வயதான தென்னாபிரிக்காவின் மிக்கி ஆதர் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. மிக்கி ஆதர் 2005-2010 வரை தென்னாபிரிக்க அணியின் பயிற்சியாளராகவும் 2011 முதல் 2013 வரை அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராகவும் கடமையாற்றியுள்ளார். பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக டீன் ஜோன்ஸ், பீட்டர் மூர்ஸ், என ஆரம்பத்தில் செய்திகள் வெளிவந்தாலும் பின்னர் ஸ்டுவார்ட் லோ அந்த பதவியில் அமர்த்தப்படப் போகிறார் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இறுதியில் மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் அணியின் தலைமை பயி…
-
- 0 replies
- 369 views
-
-
கிரிக்கெட் வீரர்கள் ஒரு நிமிடத்திற்கு வாங்கும் அடேங்கப்பா சம்பளம்! உலகளவில் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகின்றனர் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. 1) வீராட் கோலி (இந்தியா)- ரூ.5811.21 2) மகேந்திர சிங்டோனி (இந்தியா) - ரூ. 3638.30 3) கிறிஸ் கெய்ல்(மேற்கிந்திய தீவு) - ரூ.950.34 4) ஷாகித் அப்ரிடி(பாகிஸ்தான்) - ரூ. 798.19 5) வீரேந்திர ஷேவாக் (இந்தியா) - ரூ. 734.71 6) ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா) - ரூ. 696.71 7) டிவில்லியர்ஸ்(தென் ஆப்பிரிக்கா) - ரூ. 696.71 8) கவுதம் கம்பீர் (இந்தியா)- ரூ. 633.15 9) யுவராஜ் சிங் (இந்தியா) - ரூ. 481.19 10) மைக்கேல் கிளார்க்(ஆஸ்திரேலியா) - ரூ. 367.57 http://www.…
-
- 0 replies
- 430 views
-
-
பிராவோவும், பொல்லார்டும் ஒருநாள் போட்டிகளில் ஆடவேண்டும்: பிரைன் லாரா விருப்பம் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக பொல்லார்டும், டுவைன் பிராவோவும் மீண்டும் ஆடவேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் லாரா கூறியுள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரின்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தத் தொடர் பாதியில் கைவிடப்பட்டது. இதன் காரணமாக பொல்லார்ட், டுவைன் பிராவோ ஆகியோரை ஒருநாள் தொடரில் அந்த அணியின் தேர்வுக்குழு சேர்க்கவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா மோதும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் த…
-
- 0 replies
- 329 views
-
-
சூதாட்ட வீரர்கள் 10 பேரின் பெயரை வெளியிடும் கிரிக்கெட் வாரியம். ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் கமிட்டி விசாரணை நடத்தியது. இந்த விசாரணை குழு தனது அறிக்கையை ஏற்கனவே சுப்ரீம்கோர்ட்டில் சமர்பித்து இருந்தது. இதில் நிர்வாகிகள், வீரர்கள் என மொத்தம் 13 பேரது பெயர்கள் இடம் பெற்று இருந்தன. இதில் 3 பேரது பெயர் மட்டுமே வெளியிடப்பட்டன. முத்கல் கமிட்டியின் அறிக்கையில் உள்ள 10 வீரர்களின் பெயர் விவரத்தை சுப்ரீம் கோர்ட்டு இதுவரை வெளியிடாமல் இருந்தது. இந்த 10 வீரர்களின் பெயர் விவரத்தை வெளியிட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தற்போது விருப்பம் தெரிவித்துள்ளது. லோதா…
-
- 0 replies
- 373 views
-
-
கிரிக்கட் புள்ளி முறைமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல – மைக்கல் வோகன் கிரிக்கட் புள்ளி முறைமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என மைக்கல் வோகன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கட் நிர்வாகம் கிரிக்கட் புள்ளி முறைமை ஒன்றை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது. இந்த முறைமையை இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கட் வர்ணணையாளருமான வோகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவன்ரி20 போட்டிகளுக்கு புள்ளி வழங்கும் முறையைமானது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். இந்த முறையைமானது சிக்கல் நிறைந்தது எனவும் அதனை அறிமுகம் செய்ய வேண்டியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கிர…
-
- 0 replies
- 541 views
-
-
சச்சினின் சாதனையை முறியடிப்பாரா குக்? இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் அலாஸ்டர் குக் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கக் காத்திருக்கிறார். 31 வயதாகும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான அலாஸ்டர் குக் டெஸ்ட் போட்டிகளில் 10000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்ட அவருக்கு இன்னும் 36 ஓட்டங்களே தேவை. இந்த மைல்கல்லை சச்சின் டெண்டுல்கர் 2005ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் எட்டினார். அப்போது அவருக்கு வயது 32. இந்நிலையில் இலங்கைக்கு எதிராக நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் குக் 10,000 ஓட்டங்கள…
-
- 1 reply
- 341 views
-
-
'நியூசிலாந்து அணிக்கு நஞ்சூட்டப்பட்டது' 1995ஆம் ஆண்டு இடம்பெற்ற றக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னதாக, நியூசிலாந்து அணி வீரர்களுக்கு நஞ்சூட்டப்பட்டதாக, நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மெய்ப்பாதுகாவலரொருவர் தெரிவித்துள்ளார். சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்தப் போட்டி தொடர்பாக, இது மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த இறுதிப் போட்டியில், ஜோனா லொமு தலைமையிலான நியூசிலாந்து அணி, அதிக வெற்றிவாய்ப்புகளைக் கொண்ட அணியாகக் களமிறங்கியிருந்தது. ஆனால், இறுதிப் போட்டியில் வைத்து தென்னாபிரிக்காவிடம் 12-15 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்திருந்தது. இறுதிப் போட்டிக்கு 48 மணிநேரங்கள் முன்னதாக, நியூசிலாந்து அணி வீரர்களில் பலர், உணவு நஞ்சானதன் காரணம…
-
- 0 replies
- 392 views
-
-
எம்.சி.சி தலைவராக மத்தியூ பிளெமிங் தெரிவு கிரிக்கெட் விதிகளை உருவாக்கும் பொறுப்பை வகிக்கும் மரில்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி) தலைவராக, இங்கிலாந்து அணியினதும் கென்ற் அணியினதும் முன்னாள் சகலதுறை வீரரான மத்தியூ பிளெமிங் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 51 வயதான பிளெமிங், இவ்வாண்டு ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து, தனது தனது பொறுப்பை ஏற்கவுள்ளார். லோர்ட்ஸில் இடம்பெற்ற கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தின்போது, தற்போதைய தலைவரான றொஜர் நைட்டினால் பிரேரிக்கப்பட்டதையடுத்தே, தலைவர் பதவியை மத்தியூ பிளெமிங் ஏற்கவுள்ளார். எம்.சி.சியின் கிரிக்கெட்டுக்கான தலைவராகத் தற்போது பதவி வகிக்கும் மத்தியூ பிளெமிங், கடந்த 36 ஆண்டுகளில், அக்கழக…
-
- 0 replies
- 388 views
-
-
ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்க நிறைவேற்றுக் குழுவில் முதலாவது பெண் உறுப்பினராக ஃபுளொரென்ஸ் தெரிவு ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தில் முதலாவது பெண் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த ஃப்ளொரென்ஸ் ஹார்டுய்ன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தின் பொதுச் சபை மாநாட்டில் நடத்தப்பட்ட வாக்களிப்பு மூலம் ஃப்ளொரென்ஸ் தெரிவு செய்யப்பட்டார். இப்பதவிக்கான வாக்கெடுப்பில் 33 – 21 என்ற வாக்குகள் அடிப்படை யில் நோர்வேயின் முன்னாள் சர்வதேச வீரர் கரென் எஸ்பெலண்டை ஃப்ளொரென்ஸ் வெற்றி கொண்டார். …
-
- 0 replies
- 298 views
-
-
‘‘துணிச்சலான அணுகுமுறையுடன் இங்கிலாந்தை எதிர்கொள்வோம்’’– ஏஞ்சலோ மெத்யூஸ் (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிரான தொடர்கள் அனைத்திலும் துணிச்சல் மிக்க அணுகுமுறைகளுடன் விளையாட சகல வீரர்களும் தயாராக இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் தொடரை எதிர்கொள்ளவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் கூறினார். இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ள அணி எந்தளவு நம்பிக்கையுடன் இருக்கின்றது என அவரிடம் கேட்டபோதே அவர் இந்தப் பதிலை வெளியிட்டார். இங்கிலாந்துக்கான கிரிக்கெட் பயணத்தை ஆ…
-
- 0 replies
- 352 views
-
-
இங்கிலாந்து சென்றது இலங்கை இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான முழுமையான கிரிக்கெட் தொடரொன்றுக்காக, இங்கிலாந்து நோக்கி இலங்கை அணி, இன்று புறப்பட்டுச் சென்றது. இங்கிலாந்து அணிக்கெதிரான 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியனவற்றிலும், அயர்லாந்துக்கெதிரான இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது. இந்தத் தொடருக்காக விளையாடுவதற்கு முன்னர், இலங்கை அணியின் வீரர்கள், சுற்றுலா ஒப்பந்தமொன்றில் இலங்கை கிரிக்கெட் சபையுடன் கைச்சாத்திட்டனர். இலங்கை வீரர்களின் வருடாந்த ஒப்பந்தம், இவ்வாண்டு பெப்ரவரியிலேயே நிறைவடைந்த போதிலும், ஏப்ரல் வரை அது நீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையி…
-
- 1 reply
- 638 views
-
-
சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் அத்லெட்டிகோ மட்ரிட் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் சம்பியன்ஸ் லீக் தொடரின், ஜெர்மனியின் கால்பந்தாட்டக் கழகமான பெயார்ண் முனிச்சின் மைதானத்தில் ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகமான அத்லெட்டிகோ மட்ரிட், பெயார்ண் முனிச் ஆகிய அணிகளுக்கிடையிலான இரண்டாம் சுற்று அரையிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் பெயார்ண் முனிச் அணி வெற்றி பெற்று 2-2 என்ற ரீதியில் கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியபோதும் பெயார்ண் முனிச் மைதானத்தில் அத்லெட்டிகோ மட்ரிட் அணி பெற்ற கோலின் காரணமாக அவ்வணி இறுதிப் போட்டிக்குள் நுழையவுள்ளது. இப்போட்டியின் 31ஆவது நிமிடத்தில் ஸ்கெபி அலோன்ஸோ பெற்ற கோலின் மூலம் அத்லெட்டிகோ ம…
-
- 0 replies
- 440 views
-
-
சிம்பாப்வே செல்கிறது இந்தியா மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், மூன்று இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடருக்காக எதிர்வரும் ஜூன் மாதம் சிம்பாப்வேக்கு இந்தியா செல்கிறது. இது, கடந்த ஆறு ஆண்டுகளில் நான்காவது முறையாக இந்தியா, சிம்பாப்வேக்கு செல்லும் தருணமாகும். மேற்படி போட்டிகள் யாவும் ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் 12 நாட்களுக்குள் இடம்பெறவுள்ளன. முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, ஜூன் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் இறுதி இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஜூன் 22ஆம் இடம்பெறவுள்ளது. எதிர்கால சுற்றுப்பயணங்களுக்கான திட்டத்தின்படி இரண்டு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டியொன்றை விளையாட வேண்டுமென்ற நிலையில், மூன்று இருபதுக்கு-2…
-
- 0 replies
- 451 views
-
-
ஐ.சி.சி டெஸ்ட் தரப்படுத்தல்: முதலிடத்தில் அவுஸ்திரேலியா; 7ஆம் இடத்தில் இலங்கை சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ஐ.சி.சி) டெஸ்ட் தரப்படுத்தலில், ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் இற்றைப்படுத்தலைத் தொடர்ந்து, புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் மேற்கொள்ளப்படும் இற்றைப்படுத்தலைத் தொடர்ந்தே, இந்தத் தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தனது முதலிடத்தில் தொடர்ந்தும் காணப்படும் அவுஸ்திரேலிய அணி, இரண்டாமிடத்திலுள்ள அணியுடனான தனது இடைவெளியை, ஆறாக அதிகரித்துக் கொண்டது. இரண்டாவது இடத்தில் இந்திய அணி தொடர்ந்தும் காணப்படும் நிலையில், மூன்றாமிடத்தில் காணப்பட்ட தென்னாபிரிக்க அணி, 3 இடங்கள் பின்தங்கி, ஆறாவது இடத்துக்குப்…
-
- 0 replies
- 301 views
-
-
இந்திய ஒலிம்பிக் அணியின் நல்லெண்ண தூதராக சச்சின் நியமனம் சச்சின் டெண்டுல்கர். | படம்: பிடிஐ. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலில் நியமிக்கப்பட்டார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இந்த முடிவை முன்னாள் தடகள வீரர் மில்கா சிங், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் உள்ளிட்ட பலரும் எதிர்த்தனர். இந்நிலையில் மேலும் பலரை இந்திய அணியின் நல்லெண்ண தூதர்களாக நியமிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் திட்டமிட்டது. இந்திய அணியின் நல்லெண்ண…
-
- 0 replies
- 294 views
-
-
பிறீமியர் லீக் பட்டத்தை வென்றது லெய்செஸ்டர் சிற்றி இங்கிலாந்து கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் போட்டிகளில், டொட்டென்ஹாம் ஸ்பர்ஸ், செல்சி ஆகிய அணிகளுக்கிடையில் கடந்த திங்கட்கிழமை (02) இடம்பெற்ற போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், பிறீமியர் லீக் பட்டத்தை லெய்செஸ்டர் சிற்றி கைப்பற்றியுள்ளது. கடந்த பருவகாலத்தில் பிறீமியர் லீக்கிலிருந்து ஏறத்தாள வெளியேறும் நிலையிலிருந்த லெய்செஸ்டர் சிற்றி, இந்தப் பருவகாலத்தின் ஆரம்பத்தில், பிறீமியர் லீக் பட்டத்தை அவ்வணி கைப்பற்றுவதற்கான வாய்ப்பு, 5,000-1 என்ற நிலையிலிருந்து தற்போது பிறீமியர் லீக் பட்டத்தை வென்றமையானது விளையாட்டு வரலாற்றின் சிறந்ததோறு தருணமாகக் கருதப்படுகி…
-
- 2 replies
- 516 views
-
-
ஐபிஎல்: பந்துவீச்சில் மாயாஜாலம் காட்டும் குஜராத் வீரர்! (வீடியோ) ஐபில் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணியில் இடம்பெற்றிருக்கும் ஷிவில் கவ்ஷிக்கின் பந்து வீச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்புரில் பிறந்த ஷிவில் கவ்ஷிக்கின் வயது 20. இதுவரை முதல் தர கிரிக்கெட் போட்டியில் கூட விளையாடாத இவர், ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியில் இடம் பெற்றுள்ளார். இடக்கை சுழற்பந்து வீச்சாளரான இவர், தனது உடலை வளைத்து, தலையை குனிந்தபடி பந்தினை வீசுகிறார். இது தென் ஆப்பிரிக்க முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பால் ஆடம்சின் பந்துவீச்சு போன்று இருப்பதாக அனைவரும் தெரிவிக்கின்றனர். இவரின் இந்த வித்தியாசமான பந்துவீச்சு முறை அனைவரையும் கவர்ந்துள்ளது. ஐபிஎல் ப…
-
- 0 replies
- 350 views
-
-
8 கேப்டன்களை உருவாக்கிய தோனி! - #TheRealKingmaker சிலர் கிங்காக இருப்பார்கள், இன்னும் சிலர் கிங் மேக்கர்களாக இருக்கார்கள். கிங்காகவும், கிங் மேக்கராகவும் இருக்க முடியும் என்றால், அவர் இரண்டு உலகக் கோப்பையை வென்றிருக்க வேண்டும். இக்கட்டான சூழலில் அணியை கூலாக வெற்றிக்கு அழைத்து செல்பவராக அவர் இருக்க வேண்டும். அதற்கு அவரது பெயர் மஹேந்திர சிங் தோனியாகவும் இருக்க வேண்டும். கிரிக்கெட் என்ற விளையாட்டு இருக்கும் காலம் வரை அதில் சிறந்த கேப்டன் பட்டியலில் தோனி முதல் வரிசையில் இருப்பார். ஹெலிகாப்டர் ஷாட் கிங், கடைசி பந்தில் சிக்ஸர் என எத்தனையோ சாதனைகளை அடுக்கினாலும் கோப்பையை வாங்கி இளம் வீரர்களிடம் கொடுத்து விட்டு, ஒரு ஓரமாக நின்று அவர்களின் சந்தோசத்தை கண்டு மகிழ்வதை பார…
-
- 0 replies
- 377 views
-
-
இலங்கை தேசிய அணியில் தமிழ் வீரர் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஷ்ட கபடி வீரரும் முன்னணி கபடி பயிற்றுவிப்பாளருமான துரைசாமி மதன்சிங் இலங்கைக்கான தேசிய கபடி அணியில் தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார். 3 ஆவது ஆசிய கபடி (Circle Kabbadi) போட்டிகளில் பங்குபற்றும் இலங்கைக்கான தேசிய கபடி அணியிலேயே துரைசாமி மதன்சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டுக்கான ஆசிய circle கபடி சுற்றுப் போட்டியானது இம்மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கோலாகலமாக ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த சுற்றுப்போட்டியில் பங்குகொள்ளும் இலங்கை அணி அண்மையில் பாகிஸ்தான் நோக்கி பு…
-
- 0 replies
- 508 views
-
-
தோனி அணி சொதப்ப யார் காரணம்? இந்திய அணியின் கேப்டன், தென்னாபிரிக்க அணியின் கேப்டன், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன், உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர், ஐ.பி.எல்லின் சிறந்த துவக்க ஆட்டக்காரர்கள் என நட்சத்திர அந்தஸ்துடன், இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்லும் அணிகளில் முக்கியமான அணி என எல்லோராலும் கருதப்பட்ட ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கிடையில் வரிசையாக பல வீரர்கள், காயத்தால் தொடரில் இருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். 2008 முதல் 2015 வரை எட்டு சீசனிலும் சென்னை அணிக்கு கேப்டனாக இருந்து அரையிறுதிக்கு வழிநடத்திய தோனிதான் புனே அணிக்கும் கேப்டன் என அறிவிக்கப்பட்ட போது ரசிகர்கள் உற்சாகமானார்கள்.…
-
- 0 replies
- 533 views
-
-
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நான்காம் திகதி இங்கிலாந்து பயணமாகவுள்ளது. அடுத்த மாதம் 19 ஆம் திகதி மூன்று போட்டிகள் அடங்கிய தொடர் ஆரம்பிக்கவுள்ளது. பயிற்சிப் போட்டிகள் எட்டாம் திகதியும், 13 ஆம் திகதியும் ஆரம்பிக்கவுள்ளன. இந்த தொடருக்கான இலங்கை அணி ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இலங்கை அணியின் அண்மைக்கால வீழ்ச்சி மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாக மாற்றம் என்பன இந்த எதிர்பார்ப்புக்கு காரணங்கள். சரி அவை எவ்வாறு அமைந்தாலும் இந்த அணி பற்றி வீரர்கள் பற்றி அவர்களின் தெரிவுகள் பற்றி இந்தக் கட்டுரை அலசப்போகின்றது. இங்கிலாந்து ஆடுகளங்களுக்கு ஏற்றாற்போல் இந்த அணி தெரிவு …
-
- 0 replies
- 405 views
-
-
400மீ. ஓட்டத்தில் சாதனை அமெரிக்காவில் உள்ள லேவா நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஓட்டப்பந்தயத்தில் கிரெனடாவை சேர்ந்த கிரானி ஜேம்ஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் சாதனை படைத்தார். அவர் பந்தயத் தூரத்தை 44.08 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம் அவர் அதிவேகத்தில் 400 மீட்டர் ஓட்டத் தூரத்தை கடந்தவர் என்ற சாதனையை படைத்தார். http://www.virakesari.lk/article/5839
-
- 0 replies
- 533 views
-
-
இந்தியாவுக்கு சார்பாக செயற்படுவதாக ஐ.சி.சி. மீது விவியன் றிச்சர்ட்ஸ் குற்றச்சாட்டு இந்தியாவில் நடைபெற்ற உலக இருபது கிரிக்கெட் போட்டியில் சம்பியனானதைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை கடிந்துரைத்துள்ளதை மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் மேதைகளில் ஒருவரான சேர் விவியன் றிச்சர்ட்ஸ் கண்டித்துள்ளார். அத்துடன் இந்தியாவுக்கு பகுதியளவில் அல்லது பக்கசார்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவை செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அணித் தலைவர் டரன் சமி, மார்லன் சமுவேல்ஸ் ஆகியோர் உலக இருபது 20 வெற்றிக்குப் பின்னர் நடந்துகொண்ட விதம் குறித்து துபாயில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தின்போது சர்வதேச கிர…
-
- 0 replies
- 339 views
-