விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
இலங்கை அணிக்கு எந்த விதமான போட்டியாக இருந்தாலும் ஒரு தலைவர்தான் இனிவரும் அனைத்து விதமான போட்டிகளுக்கும் இலங்கை அணிக்கு ஒரு தலைவர் முறைமை கடைப்பிடிக்கப்படவுள்ளது. அதேநேரம் தலைவராக அஞ்சலோ மெத்தியூஸும் உப தலைவராக தினேஷ் சந்திமாலும் நீடிப்பர் என இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 என 3 வகையான போட்டிகளிலும் இனி ஒரே தலைவர் தான் செயற்படு வார். இதுதான் எமக்கு சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். இலங்கை அணியின் தலைவர் மற்றும் உப தலைவர்களை எடுத்து பார்த்தால் அவர்களிடம் சிறந்த…
-
- 0 replies
- 436 views
-
-
கரீபியன் பீரிமியர் லீக் தொடரில் பார்படோஸ் அணியை விலைக்கு வாங்கிய மல்லையா April 14, 2016 இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்து விட்டதலைமறைவாக உள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, கரீபியன் பீரிமியர் லீக் தொடரில் பார்படோஸ் அணியை விலைக்கு வாங்கியுள்ளார். ஐபிஎல் தொடரில் பெங்களூர் றொயல்சேலஞ்சர்ஸ் அணியின் முக்கிய பொறுப்புகளிலிருந்து விலகியதையடுத்து, கடந்த பெப்ரவரி மாதம் இந்த புதிய அணிக்கு பங்குதாரர் ஆகியிருப்பதாக மல்லையா கூறியுள்ளார். இதற்காக இந்திய மதிப்பில் சுமார் 6 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே செலவழித்துள்ளதாக தெரிவித்த மல்லையா, அந்த அணியின் மதிப்பு சுமார் ரூ.130 கோடியாக உள்ள நிலையிலும், மற்ற உரிமையாளர்கள் தன்னையும் பங்குதாரராக இணை…
-
- 0 replies
- 521 views
-
-
திரைப்படமாக சச்சினின் சுயசரிதையை வெளிவரவுள்ளது சச்சினின் சுயசரிதையை இங்கிலாந்தை சேர்ந்த இயக்குநர் ஜேம்ஸ் எர்ஸ்கைன் திரைப்படமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் சச்சின் முதன்முறையாக நடித்துள்ளார். இதன் போஸ்டரில், கிரிக்கெட் மட்டை ஒன்றை சுமந்து கொண்டு கால்கவசம் அணிந்தபடி மைதானத்தில் சச்சின் நடந்து செல்வது போன்ற காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. இது குறித்து டுவிட்டரில் சச்சின் வெளியிட்டுள்ள செய்தியில், பல வருடங்களாக என் மீது அன்பு செலுத்தி, ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி! ஏப்ரல் 14 ஆம் திகதி மதியம் 1 மணி அளவில் வெளியாகும் டீசரை காணுங்க…
-
- 0 replies
- 506 views
-
-
’’எனக்கு சவாலாக விளங்கியது 5 பந்துவீச்சாளர்கள்’’ மக்கல்லம் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் தனக்கு சவாலாக விளங்கிய 5 பந்துவீச்சாளர்கள் பற்றி நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரண்டன் மெக்கலம் கூறியுள்ளார். நியூசிலாந்து அணியின் அதிரடி வீரரான மெக்கல்லம் எதிரணிக்கு எப்போதும் சவாலாகவே இருப்பார். அவரை தொடக்கத்தில் இருந்தே கட்டுப்படுத்த எதிரணி பந்துவீச்சாளர்கள் திணறுவர். அப்படிப்பட்டவரே தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தனக்கு 5 பந்துவீச்சாளர்கள் சவாலாக விளங்கியதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இலங்கை அணியின் முரளிதரன் எனக்கு எப்போது தொல்லை கொடுத்தார். அவர் என்ன பந்துவீசுகிறார், அது எங்கு சுழன்று வரும் என்பது யாருக்கும் தெரியாது. பிரா…
-
- 0 replies
- 474 views
-
-
இலங்கை வருகிறது அவுஸ்திரேலியா இவ்வாண்டு ஜூலை மாதத்தில், முழுமையான கிரிக்கெட் தொடரொன்றுக்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு வரவுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் அடங்கிய தொடருக்காகவே, அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு வரவுள்ளது. இந்தத் தொடர், ஜூலை 26ஆம் திகதி ஆரம்பித்து, செப்டெம்பர் 9ஆம் திகதி நிறைவடையவுள்ளது. அவுஸ்திரேலிய அணி இறுதியாக, 2011ஆம் ஆண்டே, டெஸ்ட் தொடரொன்றுக்காக இலங்கைக்கு வந்திருந்த நிலையில், 5 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு வரவுள்ளது. அண்மைக்காலமாக சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திவரும் அவுஸ்திரேலிய அணி, உலக டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாமிடத்தில் காணப்படுவதோடு, இலங்கை அணி தடு…
-
- 0 replies
- 392 views
-
-
'குசால் இன்னமும் தடை செய்யப்படவில்லை' இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குசால் ஜனித் பெரேரா, இன்னமும் தடைக்குள்ளாக்கப்படவில்லை என, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். குசால் பெரேரா தடை செய்யப்பட்டுள்ளார் என முன்னர் செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே, இந்தத் தகவலை மஹேல ஜெயவர்தன வெளியிட்டுள்ளார். தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியமை காரணமாக சர்வதேச கிரிக்கெட் சபையின் விசாரணைகளுக்கு முகங்கொடுத்துவரும் குசால் ஜனித் பெரேரா, டிசெம்பர் 7ஆம் திகதி, இடைக்காலத் தடைக்குள்ளாக்கப்பட்டார். எனினும், ஏனையோரைப் போலன்றி, குசால் பெரேராவின் விசாரணை தொடர்பான முடிவு, இதுவரை வெளிவரவில்லை. …
-
- 0 replies
- 548 views
-
-
நமீபியாவுக்கெதிராக ஆப்கானிஸ்தானுக்கு இனிங்ஸ் வெற்றி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவிலுள்ள கிரேட்டர் நொய்டா விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் ஆப்கானிஸ்தான், நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 36 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. நான்கு நாட்களைக் கொண்ட இப்போட்டியானது கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) ஆரம்பித்திருந்தது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக பிக்கி யா பிரான்ஸ் 46 ஓட்டங்களைப் பெற்றார்.…
-
- 0 replies
- 364 views
-
-
பிரபல பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வீதி விபத்தில் பலி இந்தியாவின் முன்னணி பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான ஜெய்பூரைச் சேர்ந்த வேணு பலிவால் வீதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 44 வயதான வேணு பாலிவால் மத்திய பிரசேத மாநிலம் விதிஸா மாவட்டத்தில் உள்ள கையாராஸ்பூர் அருகே தனது ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த அவர் வீதியில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளார். இவ்விபத்தில் பலத்த காயமடைந்த அவர், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக விதிஸா மாவட்ட மருத்துவமனைக்கு க…
-
- 0 replies
- 603 views
-
-
இருதயக் கோளாறு: 26 வயதிலேயே இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் டெய்லர் ஓய்வு இருதயக் கோளாறினால் 26 வயதிலேயே ஓய்வு பெற்றார் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் டெய்லர். | கெட்டி இமேஜஸ். இருதயக் கோளாறுகள் காரணமாக இங்கிலாந்து பேட்ஸ்மென், நாட்டிங்கம்ஷயர் வீரர் ஜேம்ஸ் டெய்லர் தனது 26-வது வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற நேரிட்டுள்ளது. இருதயத்தின் வலது அறையில் தசை சுருங்கி விரிவதில் இவருக்கு தீவிர பிரச்சினைகள் இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்தது. இருதய தசை சுருங்கி விரிவதில் பிரச்சினைகள் இருந்தால் அது மாரடைப்பில் போய் முடியும். இந்நிலையில் அவர் ஓய்வு அறிவித்துள்ளார். கடந்த மார்ச் 2012-ல் கால்பந்து வீரர் பாப்ரிஸ் மும்பா இதே …
-
- 0 replies
- 450 views
-
-
மீண்டும் பீட்டர்சன் சர்வதேச கிரிக்கெட் களத்தில் ஆனால் இங்கிலாந்திற்கு இல்லை இங்கிலாந்தின் நட்சத்திர துடுப்பாட்ட வீரான கெவின் பீட்டர்சன் மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட தீர்மாணித்துள்ளார். இங்கிலாந்து அணியின் வெளியேற்றப்பட்ட கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் எதிர்காலத்தில் தனது சொந்த நாடான தென் ஆப்ரிக்காவிற்காக விளையாட நினைத்து வருவதாக தெரிவித்துள்ளார். ஐசிசி விதிகளின் படி, ஒரு வீரர் ஒரு நாட்டிற்காக டெஸ்ட் போட்டியில் களமிறங்கி நான்கு ஆண்டுகளுக்கு பின்னரே வேறு ஒரு அணியை பிரதிநிதித்துவம் செய்ய முடியும். அதனடைப்படையில் 2014 ஆம் ஆண்டு ஜனவரியில் பீட்டர்சன் சர்வதேச ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் கலந்துக்கொண்டார்.இதுவே இவர் கலந…
-
- 0 replies
- 419 views
-
-
2.2 ஓவர்களில் ஓட்டமெதுவுமின்றி 6 விக்கெட்களை வீழ்த்திய வீரர் 2016-04-12 09:55:25 இந்தியாவில் இளம் கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு சாதனைகளையும் மைல்கல்களையும் அண்மைக்காலமாக நிலைநாட்டி வருகின்றனர். ஊட்டி ஜே எஸ் எஸ் இன்டர்நெஷனல் ஸ்கூலை சேர்ந்த சன்க்ருத் ஸ்ரீராம் என்ற மாணவன் 2014 ஆம் ஆண்டில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியில் 486 ஓட்டங்களைக் குவித்து சாதனை புரிந்திருந்தார். அவரைத் தொடர்ந்து இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் மும்பை கே சி காந்தி பாடசாலை மாணவனான பிரனவ் தனவாடே ஆட்டமிழக்காமல் 1009 ஓட்டங்களைப் பெற்று சாதனை நிலைநாட்டினார். இ…
-
- 0 replies
- 400 views
-
-
என்னதான் நடக்குது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில்? “ஊருக்குள்ள சக்கரவர்த்தி, ஆனால் உண்மையில்ல மெழுகுவர்த்தி” – இந்தப் பாடல்தான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர்களின் தற்போதைய ரிங் டோனாக இருக்கும். 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை, மகளிர் டி20 உலகக்கோப்பை, ஆண்கள் டி20 உலகக்கோப்பை என அனைத்தும் அவர்கள் வசம்தான். ஆனால் என்ன செய்ய...? உள்ளுக்குள்ள ஆயிரம் களேபரம். வீரர்களுக்கு ஊதியம் ஒழுங்காகத் தருவதில்லை என வீரர்கள் போர்க்கொடி தூக்க, வழக்கம் போல் மௌனம் சாதிக்கிறது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு. மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சங்கத்திற்கும் வீரர்களுக்கும் பிரச்னை நடப்பது இது முதல் முறை அல்ல. 2014 -ம் ஆண்டே ஊதியப் பிரச்னையில் உடன்பாடு ஏற…
-
- 0 replies
- 553 views
-
-
‘பல சமயங்களில் அஷ்வின் என்னை மீட்டெடுத்துள்ளார்’ உலகின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான இரவிச்சந்திரன் அஷ்வின், தான் இறுதியாக விளையாடிய மூன்று இருபதுக்கு-20 போட்டிகளில் ஐந்து ஓவர்களை மட்டுமே வீசியுள்ள நிலையில், இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோணி, இன்னமும் இரவிச்சந்திரன் அஷ்வினை தனது துருப்புச்சீட்டாக கருதுகிறாரா என்று கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போதும் இரவிச்சந்திரன் அஷ்வினே தனது துருப்புச்சீட்டு எனத் தெரிவித்துள்ள மகேந்திரச சிங் டோணி, இரவிச்சந்திரன் அஷ்வின் எந்த நேரத்திலும் சிறப்பாக செயற்பாடுவார் எனத் தெரிவித்துள்ளார். தான் கூறியது போன்று, முதல் ஆறு ஓவர்களிலோ அல்லது அதிக ஓட்டங்கள் பெறப்படும் இறு…
-
- 0 replies
- 533 views
-
-
பரிசுத்தொகையில் ஒரு பகுதியை அன்னை தெரேசா இல்லத்திற்கு வழங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி மேற்கிந்தியத் தீவுகள் அணி இறுதிபோட்டியில் கிடைத்த பரிசுத்தொகையின் ஒரு பகுதியை கொல்கத்தாவில் அமைந்துள்ள அன்னை தெரேசா இல்லத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் வழங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக் கிண்ண இருபதுக்கு - 20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட்டால் வெற்றிபெற்று சம்பியனானது. இந்நிலையில் ஐ.சி.சி. சம்பியனான அணிக்கு ஒருதொகை பணப்பரிசு வழங்கி கௌரவித்தது. அதில் ஒரு பகுதியை மேற்கிந்தியத் தீவுகள் அணி கொல்கத்தாவில் அமைந்துள்ள அன்னை தெரேசா தொண்டு இல்லத்திற்கு வழங்கியுள்ளது. இதனை மேற்கிந்திய…
-
- 2 replies
- 603 views
-
-
ஒவ்வொரு அணியின் ப்ளஸ், மைனஸ் என்ன..? - டி20 உலகக் கோப்பை உணர்த்திய உண்மைகள்! முன்னணி அணிகளை துவம்சம் செய்து யாருமே எதிர்பார்க்காத வண்ணம் இங்கிலாந்து - வெஸ்ட் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதிபெற, பைனலில் கடைசி ஓவரில் நம்பமுடியாத ஷாக் தந்து, கோப்பையை கைப்பற்றி 'சாம்பியன்' டான்ஸ் போட்டார்கள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். கோப்பையை வெல்லும் அணிகள் என கருதப்பட்ட இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா சறுக்கியது எப்படி? அரையிறுதியில் நியூசிலாந்துக்கு ஏன் அதிர்ச்சி தோல்வி? இங்கிலாந்து எப்படி ஃபைனலுக்கு வந்தது? ஆப்கானிஸ்தான் விஸ்வரூபம் எடுத்தது எப்படி? ஒவ்வொரு அணியின் பிளஸ் -மைனஸ் பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.... 1. வங்கதேசம் பிளஸ் : இந்த உலகக்கோப்பையில…
-
- 0 replies
- 577 views
-
-
'தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்' உலக இருபதுக்கு-20 தொடரில் இலங்கை அணிக்குப் பெறப்பட்ட தோல்விகளுக்கும் அத்தொடருக்காக இலங்கைக் குழாமில் லஹிரு திரிமான்ன சேர்க்கப்பட்டமைக்குமான பொறுப்பை ஏற்பதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம தேர்வாளரும் இலங்கையின் முன்னாள் அணித்தலைவரான அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். உலக இருபதுக்கு-20 தொடரில், நடப்புச் சம்பியன்களாகக் களமிறங்கிய இலங்கை அணி, சுப்பர் 10 சுற்றோடு வெளியேற்றப்பட்டது. அதில், 4 போட்டிகளில் பங்குபற்றி, ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் மாத்திரமே அவ்வணி வெற்றிபெற்றிருந்தது. இந்தத் தொடருக்கான குழாமைத் தெரிவுசெய்வதற்கான பொறுப்பு, இத்தொடருக்காக இலங…
-
- 0 replies
- 481 views
-
-
கவாஸ்கரை நீக்கியது இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வர்ணனையாளராக இவர் பணியாற்றி வருகிறார். ஹர்சா போக்லேயுடன் இணைந்து கிரிக்கெட் வாரிய மேம்பாட்டில் ஈடுபட்டு வருகிறார். கவாஸ்கரின் வர்ணனையாளர் ஒப்பந்தம் ஏப்ரல் – மே மாதத்துடன் முடிகிறது. அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்க கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கவாஸ்கருக்கு கொடுக்கப்படும் பணம் மிகவும் அதிகமாக இருப்பதால் அவரை வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து கிரிக்கெட் வாரியம் நீக்கலாம் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா – தென்ஆப்…
-
- 0 replies
- 569 views
-
-
பதவி விலகினார் வக்கார் யுனிஸ் பாகிஸ்தான் அணியின் பயிற்றுநரான வக்கார் யுனிஸ், தனது பதவியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார். அவரது பதவிக்காலம் நிறைவுபெறுவற்கு 3 மாதங்கள் முன்னதாகவே, அவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடர், பங்களாதேஷில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகள் உட்பட, அண்மைக்காலமாக பாகிஸ்தான் அணி, சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்காத நிலையிலேயே, தனது பதவியிலிருந்து அவர் விலகியுள்ளார். உலக இருபதுக்கு-20 தொடர் நிறைவடைந்த பின்னர், பாகிஸ்தான் அணியின் தோல்விகள் தொடர்பாக, அணித்தலைவர் ஷகிட் அப்ரிடி உட்பட கிரிக்கெட் சபை, கிரிக்கெ…
-
- 0 replies
- 584 views
-
-
ட்ரிபிள் ஹிட் சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்..! டி20 உலகக்கோப்பையின் இறுதியாட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 156 என்ற இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியனாக மகுடம் சூடியது.முன்னதாக நடந்த மகளிர் டி20 உலகக்கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது டி 20: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி கொண்டாட்டம்: புகைப்படத் தொகுப்பு.. க்ளிக் செய்க... கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்ட…
-
- 0 replies
- 456 views
-
-
இன்பத்திலும் என் மனதில் துயரமே ; கார்லோஸ் பிரத்வெய்ட் நடந்து முடிந்த ஆறாவது இருபதுக்கு இருபது உலக கிண்ண இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இறுதி ஓவரில் 6 பந்துகளுக்கு 19 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில், உலக கிண்ணத்தை தம் வசப்படுத்த தொடர்ந்து நான்கு பந்துகளுக்கும் ஆறு ஓட்டங்களை விளாசி கார்லோஸ் பிரத்வெய்ட் குறித்த போட்டி தொடர்பாக நேற்று ஊடகத்திற்கு கருத்து தெரிவித்தார். இதன் போது அவர், இறுதிப் போட்டியில், இறுதி ஓவரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துடுப்பாட்ட வீரர் மாலன் சாமுவேலினால் இறுதி ஓவரை எதிர்கொள்ள முடியவில்லை வெற்றிபெற 19 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இருந்த போது, மாலன் சமுயுலவர்ஸ் தனக்கு எவ்வாறு துடுப்பாட வேண்டும் என உபதேசங்கள் வழங்கிய…
-
- 0 replies
- 386 views
-
-
சிக்ஸர்கள் சம்பியன்கள்! மிடுக்கோடு எழுந்த மேற்கிந்தியத் தீவுகள் Comments A.R.V.லோஷன் www.arvloshan.com உலகக்கிண்ணத்தை (50 ஓவர்கள்) முதன்முறையாக இரண்டு தடவை தனதாக்கிய சாதனையை நிகழ்த்திய அதே மேற்கிந்தியத் தீவுகள் அணி, உலக T20 கிண்ணத்தையும் இரண்டு தடவைகள் வென்ற முதலாவது அணி என்ற பெருமையை நேற்றுப் பெற்றுக்கொண்டது. நேற்றைய வெற்றி இன்னொரு வகையில் மேலும் சரித்திரப் பிரசித்தி பெற்றதாக மாறியுள்ளது. 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணம், இதற்கு முன்னதாக நேற்றுப் பிற்பகல் நடந்த மகளிர் உலக T20 கிண்ணம் இவற்றோடு மூன்றாவது 'உலகக்கிண்ணம்', இரு மாத கால இடைவெளியில் மேற்கிந்தியத் தீவுகளின் …
-
- 0 replies
- 721 views
-
-
கடைசி ஓவரில் நான்கு சிக்சர்களை விளாசிய கார்லோஸ் பிராத்வெய்ட் யார்? சாமுவேல்ஸ், பிராத்வெய்ட். | படம்: பிடிஐ. உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் சற்றும் எதிர்பாராத விதமாக 4 மிகப்பெரிய சிக்சர்களை அடித்த அந்த நெடிய, வலுவான வீரர் பிராத்வெய்ட் பார்படாஸைச் சேர்ந்தவர். இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி ஓவர் வரை இங்கிலாந்தே வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தனர், பிராத்வெய்ட் இப்படியொரு ராட்சத ஹிட்டராக இருப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். முதல் பந்தே ஸ்டோக்ஸ் லெக்ஸ்டம்பில் ஹாஃப்-வாலி லெந்தில் வீச டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசைக்குப் பறந்தது. ஆனால் அடுத்த பந்து ஃபுல் லெந்த் என்று கூற மு…
-
- 0 replies
- 556 views
-
-
ஐசிசி டி20 உலக அணியின் கேப்டன் விராட் கோலி; அணியில் தோனி இடம்பெறவில்லை விராட் கோலி. | படம்: ஏ.எஃப்.பி. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட விராட் கோலிக்கு ஐசிசி டி20 உலக அணியின் கேப்டன் என்ற கவரவத்தை ஐசிசி வழங்கியுள்ளது. ஆனால் இந்த அணியில் தோனி இடம்பெறவில்லை. இன்னொரு முக்கிய விடுபடல் என்னவெனில் கிறிஸ் கெய்லும் இந்த அணியில் இடம்பெறவில்லை. வங்கதேசத்தில் நடைபெற்ற முந்தைய உலகக்கோப்பை டி20 முடிந்த பிறகு இறுதிப் போட்டியில் இந்திய அணி நுழைந்ததையடுத்து அறிவிக்கப்பட்ட ஐசிசி ஆல்ஸ்டார்ஸ் அணிக்கு தோனிதான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த அணியில் 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர், தற்போது இது 2-ஆக குறைந்…
-
- 0 replies
- 400 views
-
-
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்.... 20க்கு 20 ஒவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இம்முறை, பிரிவு-1-ல் கடந்த டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் செம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கஅணி, மே.இ.தீவுகள் அணி, இங்கிலாந்துஅணி ஆகியவற்றுடன் தகுதிச் சுற்றிலிருந்து தகுதி பெறும் மற்றொரு அணியும், பிரிவு-2-ல் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வென்று தகுதி ப…
-
- 357 replies
- 24.6k views
- 1 follower
-
-
அணி வீரர்களுக்கு சீருடை வாங்க கடன் கொடுத்த டி20 சாம்பியன் கேப்டன்! "டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாட, அணி வீரர்களுக்கு சீருடை வாங்க நான்தான் கடன் கொடுத்தேன்" என்று சாம்பியன் பட்டத்தை வென்ற மேற்கிந்திய தீவு அணி கேப்டன் டேரன் சமி வேதனை தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவு அணி, இங்கிலாந்தை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த நிலையில், தனது அணியின் வெற்றி குறித்து மேற்கிந்திய தீவு அணி கேப்டன் டேரன் சமி கூறுகையில், "எங்கள் அணிக்கு ரவ்லே லீவிஸ் என்பவர் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு எந்த அணியிலும் அவர் மேலாளராக இருந்து அனுபவமே இல்லாதவர். எங்களுக்கு சீருடையோ, சீருடை மீதான பிரிண்டிங்க…
-
- 0 replies
- 541 views
-