விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ஐ.பி.எல்.ஏலம் நாளை February 5, 2016 11:20 am 9–வது ஐ.பி.எல். போட்டி வருகிற ஏப்ரல் 9 ம் திகதி முதல் மே 23 ம் திகதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஐதராபாத், புதிய அணிகளான ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ், குஜராத் லயன்ஸ் (ராஜ்கோட்) ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 2 ஆண்டு தடை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்கவில்லை. சென்னை அணியில் இருந்து தலைவர் டோனி, அஸ்வின், டுபிளசிலிஸ், ராஜஸ்தானில் இருந்து ஸ்டீவன் சுமித், ரகானே ஆகியோர் புனே அணிக்கும், ராஜ்கோட் அணிக்கு ரெய்னா, ஜடேஜா, மேக்க…
-
- 5 replies
- 903 views
-
-
கால்பந்து ராஜாவுக்கு இன்று பிறந்த நாள் : ரொனால்டோ மதுவுக்கு 'நோ 'சொல்லிவிடுவது ஏன்? மூன்று முறை உலகின் தலைசிறந்த வீரருக்கான ‘பல்லான் டி ஓர்’ விருது ரொனால்டோவுக்கு இன்று பிறந்த தினம். களத்தில் இவரை சுற்றி சர்ச்சைகள் இருந்தாலும் ரொனால்டோ ஒரு கல்லுக்குள் ஈரம். ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப்பிற்காக விளையாடி வரும் 31 வயதான ரொனால்டோ, போர்ச்சுக்கல் நாட்டின் மதீரா நகரில் பிறந்தவர்.நவீன கால்பந்து உலகின் முடிசூடா மன்னர்கள் மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும்தான். இருவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் முட்டி மோதிக்கொள்ள, இருவரும் களத்தில் சாகசங்கள் நிகழ்த்துபவர்கள். இருவருக்குமென தனிச்சிறப்புகள் உண்டு. மெஸ்ஸியை விட ரொனால்டோவிற்கும்,ரொனால்டோவைவிட மெஸ்ஸிக்கும் சில …
-
- 0 replies
- 594 views
-
-
யுவி... இனி அவ்வளவுதான் என்றவர்கள் வாயடைத்து நிற்கிறார்கள் ஏன்? விடாமுயற்சியும், போராட்டக் குணமும் நிறைந்த ஒரு வீரனால் புற்றுநோய் தாக்கிய சூழ்நிலையிலும் தன்னை நிருபிக்க முடியும் என்பதற்கு யுவராஜ் சிங் ஒரு உதாரணம். ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் என உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த யுவிதான் கடந்த , 2014ம் ஆண்டு உலகக் கோப்பையின் தொடர் நாயகன். சமீபத்திய ஆஸி தொடரில் கடைசி டி20 போட்டியில் கடைசி ஓவரில் சிக்சர், பவுண்டரி என விளாசி 'தெறி' காட்டவும் செய்தார். நுரையீரல் புற்று நோய் தாக்கியவுடன் யுவி இனி அவ்வளவுதான் என கூறியவர்கள். இப்போது அவரை பார்த்து வாயடைத்து நிற்கிறார்கள். இனி யுவராஜ் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் பார்வையாளர்தான் என்ற கருத்தும் இப்போது மறைந்…
-
- 0 replies
- 634 views
-
-
கால்பந்து வாழ்க்கையில் 500வது கோல் அடித்தார் லயனல் மெஸ்சி கோபா டெல்ரே கால்பந்து தொடரின் அரையிறுதி முதல் லெக் ஆட்டம் நேற்று கேம்ப் நியூ மைமானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் பார்சிலோனா 7-0 என்ற கோல் கணக்கில் வாலென்சியா அணியை வீழ்த்தியது. பார்சிலோனாவின் லூயீஸ் சவுரஸ் 4 கோல்களும் லயனல் மெஸ்சி 3 கோல்களும் அடித்தனர். இந்த போட்டியில் லயனல் மெஸ்சி தனது கால்பந்து வாழ்க்கையில் 500வது கோலை அடித்தார். இதில் பார்சிலோனாவுக்காக 435 கேல்களும் அர்ஜென்டினாவுக்காக 49 கோல்களும் அர்ஜென்டினா 23 வயதுக்குட்பட்டோருக்காக அணிக்காக 2 கோல்களும் அர்ஜென்டினா 20 வயதுக்குட்பட்ட அணிக்காக 20 கோல்களும் அடங்கும் http://www.vikatan.com/news/sports/58540-lionel-me…
-
- 0 replies
- 389 views
-
-
இரு கையாலும் ஸ்பின் வீசும் பந்துவீச்சாளர்: புலம்பும் வர்ணணையாளர்கள்! (வீடியோ) ஒரு பந்துவீச்சாளர் பந்துவீச வருகிறார். இவர் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் என வர்ணணை சொல்லப்படுகிறது. வந்தவர் 4 பந்து இடது கையில வீசுகிறார். 5வது பந்தை வலது கையில் வீசினால் என்ன செய்வீர்கள். இப்படியும் ஒருத்தர் இலங்கை அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறார். இலங்கை அணியில் 19 வயதுக்குட்பட்ட அணியில் உள்ள கமிண்டு மெண்டிஸ்தான் இப்படி ஒரு காரியத்தை செய்து பேட்ஸ்மேன்களை கதி கலங்க வைக்கிறார். அதாவது வலது கை பேட்ஸ்மேன் என்றால் இடது கையாலும் இடது கை பேட்ஸ்மேன் என்றால் வலது கையாலும் பந்துவீசி கமிண்டு அசத்துகிறார். ஏன்யா இப்படினு கேட்டால் ''கிரிக்கெட்டில் வலது கை பேட்ஸ்மேன் திடீரென்று இடத…
-
- 0 replies
- 374 views
-
-
ஓய்வு பெற நிர்ப்பந்திக்கப்பட்டேன்’ – சந்தர்போல் 2016-02-04 12:30:48 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள மேற்கிந்தியத் தீவுகளின் ஷிவ்நரேன் சந்தர்போல், உள்ளூர் கிரிக்ெகட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவில்லை எனக் கூறியுள்ளார். கயானா கிரிக்கெட் அணிக்காக இன்னும் இரண்டு வாரங்களில் மீண்டும் விளையாட உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைபெற்றுவரும் மாஸ்டர்ஸ் சம்பியன்ஸ் லீக் கிரிக்ெகட் போட்டிகளில் விளையாடும் பொருட்டு ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை பெறுவதற்காகவே சர்வதேச கிரிக்கெட் ஓய்வை அறிவிக்க நிர்ப்…
-
- 0 replies
- 415 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேமராவால் கவர் செய்ய முடியாத சிக்ஸ் அடித்த குப்தில் ( வீடியோ) ஆக்லாந்தில், சேப்பல் ஹார்ட்லி ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. முதலில் விளையாடிய நியூசிலாந்து 307 ரன்கள் அடித்தது. மார்ட்டின் குப்தில் 90 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த போட்டியில், கானே ரிச்சர்ட்சன் பந்தில் குப்தில் அடித்த அபார சிக்சர், 113 மீட்டர் தொலைவு போய் ஸ்டேடியத்தின் மேற் கூரையில் விழுந்தது. இந்த போட்டியில் தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 24.2 ஓவரில் 148 ரன்களில் ஆல் அவுட்டாகி 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. http://www.vikatan.com/news/sports/58517-martin-guptill-hits-six-onto-eden-park-roof.art
-
- 0 replies
- 423 views
-
-
இனிமேல் தயவு செய்து கரித்துக் கொட்டாதீர்கள் : சான்ஸே இல்லை சானியா! சானியா மிர்சா.. சாதனைகளும், சர்ச்சைகளும் சரிசமமாக அடிக்கடி உரிமைகோரும் ஒரு பெயர். இந்திய விளையாட்டில் பல பெண்களுக்கு இன்ஸ்பிரேஷன். மகளிர் இரட்டையர் பிரிவில் தற்போது உலகின் நம்பர் 1டென்னிஸ் வீராங்கனை. நிச்சயமாக கடந்த ஆண்டு, சானியா மிர்சாவின் விளையாட்டு வாழ்க்கையில் பொற்காலம் என்றே கூறலாம். அடுத்தடுத்து அணிவகுத்தது வெற்றிகள். சாதனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. கடந்த ஒரு வருடமாக சானியா செய்தவை என்ன? வெற்றியுடன் துவங்கிய 2015 : உடல் நிலை காரணமாக, ஒற்றையர் பிரிவில் விளையாடாமல் இரட்டையர் பிரிவில் மட்டுமே தற்போது, விளையாடி வருகிறார் சானியா.2015 ம் ஆண்டில் , இரட்டையர் பிரிவி…
-
- 0 replies
- 762 views
-
-
ஹபீஸுக்கு பந்துவீச தடை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான மொஹமட் ஹபீஸுக்கு ஒருவருட காலம் பந்து வீசுவதற்கு ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது. விதிமுறைகளை மீறி ஹபீஸ் பந்துவீசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்தே அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாகிஸ்தானில் ஆரம்பமாகியுள்ள சுப்பர் லீக் போட்டியில் ஹபீஸின் பந்து வீச்சில் தவறுகள் இருப்பது தொடர்பாக ஐ.சி.சி. முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த குற்றச்சாட்டின் ஆரம்ப கட்ட அவதானிப்புகளில் ஹபீஸின் பந்துவீச்சில் தவறுகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. குறித்த தீர்…
-
- 0 replies
- 817 views
-
-
விராட் கோலியின் கோபத்துக்கு பின்னால் சிம்மராசியா? களத்தில் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் தன்னுடைய குணம், தனது குடும்பத்திலிருந்தே தனக்கு வந்ததாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லுடனான ஜாலி உரையாடலின் போது கோலி இவ்வாறு தெரிவித்தார். மேலும் சச்சினே தான் கிரிக்கெட் விளையாட வந்ததற்கு மிகப்பெரிய காரணம் என்றும் அவர் கூறினார். நடந்து முடிந்த இந்திய-ஆஸ்திரேலிய தொடரில் வீரர்கள் பேட்டிகளிலும், போட்டிகளிலும் மோதிக்கொண்டாலும், கோலியும் மேக்ஸ்வெல்லும் சகஜமாகவும் ஜாலியாகவும் உரையாடிக்கொண்டனர். இந்திய அணியின் செயல்பாடு, கோலி – ஃபால்க்னர் உரையாடல், சச்சின், ஐ.பி.எல் என மேக்ஸ்வெல் கேட்ட கேள்விகளுக்கு கோலி பத…
-
- 4 replies
- 697 views
-
-
இலங்கை அணியை கட்டியெழுப்பும் ஆற்றல்மிக்க பயிற்றுநர் கிறஹம் ஃபோர்ட் - ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால சர்வதேச கிரிக்கெட் பயிற்றுநர்கள் பன்னிருவருடன் நடத்திய கலந்தாலோசனைகளின் பின்னர் அதிசிறந்தவரை தெரிவு செய்ததாக, இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக கிறஹம் போர்ட் ஃபோர்ட் நியமிக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடான சந்திப்பில் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். …
-
- 1 reply
- 269 views
-
-
நியூஸிலாந்து வேகத்தில் மடிந்து விழுந்த ஆஸி.- 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி ஸ்மித் ஆட்டமிழந்ததை கொண்டாடும் நியூஸி. வீரர்கள் - படம்: ஏ.எஃப்.பி நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. நியூஸிலாந்தின் வேகப் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆஸி. வீரர்கள் திணறி வீழ்ந்தனர். 308 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸி. 10 ஓவர்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. மார்ஷ், ஸ்மித், வார்னர், மேக்ஸ்வெல் என நட்சத்திர வீரர்கள் ஒவ்வொருவராக, நியூஸிலாந்தின் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். நியூஸி. பந்துவீச்சாளர்கள் போல்ட், ஹென்றி இருவரும் தங்கள் வேகத்தாலும்…
-
- 0 replies
- 275 views
-
-
நாளை ஆரம்பிக்கிறது தென்னாபிரிக்கா-இங்கிலாந்து ஒ.நா.ச.போ தொடர் தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் தொடரை, 2க்கு 1 என்ற ரீதியில் கைப்பற்றியிருந்த நிலையில், ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர், இலங்கை நேரப்படி மாலை ஐந்து மணிக்கு நாளை ஆரம்பிக்கவுள்ளது. டெஸ்ட் தொடரின் ஆரம்பத்தில் தடுமாறியிருந்த தென்னாபிரிக்க அணி, இறுதிக் கட்டத்தில் சிறப்பாக விளையாடியிருந்தது மட்டுமல்லாமால், தாம் இறுதியாக பங்கேற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இந்தியாவை வென்றும் இருந்தது. எனவே அவ்வணி இத்தொடரை மறுபுறம் வெல்லக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. மறுபுறத்தில், ஒருநாள் சர்வதேசப் …
-
- 0 replies
- 379 views
-
-
நாளை ஆரம்பிக்கிறது சப்பல்-ஹட்லி தொடர் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, மூன்று, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட இறுதி சப்பல்-ஹட்லி தொடரில் விளையாடவுள்ள நிலையில், இத்தொடரின் முதலாவது போட்டி, இலங்கை நேரப்படி காலை 6.30 மணிக்கு ஒக்லாந்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இரண்டு அணிகளிலுமே அதிரடி வீரர்கள் இருக்கின்ற நிலையில, பந்து ஸ்விங் ஆகாமல் விட்டால், நியூசிலாந்திலுள்ள சிறிய மைதானங்களில் இரண்டு அணிகளும் 350 ஓட்டங்களை இலகுவாக தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணி, தனது விளையாடும் பதினொருவரை ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், காயமடைந்த ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஆரோன் பின்ஞ்க்கு ப…
-
- 0 replies
- 436 views
-
-
இன்னும் எத்தனை போட்டிகளை வெல்லப்போகிறீர்கள்?' - சானியா பேட்டி ஹைதராபாத்தில் தனது ஜூப்ளி ஹில்ஸ் இல்லத்தில் சானியா மிர்சா. | படம்: மொகமது யூசுப். மகளிர் இரட்டையர் டென்னிஸ் ஆட்டத்தில் தற்போது உச்சத்தில் இருந்து வரும் சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி 2015-ம் ஆண்டை அற்புதமாக முடித்ததோடு, 2016-ம் ஆண்டை ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்று அபாரமாகத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் மெல்பர்னிலிருந்து மகிழ்ச்சியுடன் திரும்பிய சானியா மிர்சா அளித்த பேட்டி வருமாறு: "எப்போதும் வேட்டையாடப்படுவதை விட, வேட்டையாடுபவராக இருப்பது ஒரு சிறப்பான தருணம்தானே. உயர்மட்டத்தில் சீராக வெற்றிகளை குவிப்பது என்பது உடல், மனம் ஆகியவற்றுக்கு விடுக்கப்படும் பெரிய சவால். …
-
- 0 replies
- 407 views
-
-
இங்கிலாந்துக்கு ஓடியது ஏன்?: தென்ஆப்ரிக்காவில் பீட்டர்சனை போட்டுத் தள்ளிய இந்திய வம்சாவளி! கெவின் பீட்டர்சன்... தந்தை நாடான தென்ஆப்ரிக்காவில் இருந்து வெளியேறி, தாய் நாடான இங்கிலாந்து அணியில் ஏன் இணைந்தார். கடந்த 16 ஆண்டுகளாக கிரிக்கெட் ரசிகர்கள் மண்டையை போட்டு உடைத்துக் கொள்ளும் விஷயம் இது. கெவினின் தந்தை தென்ஆப்ரிக்காக்காரர். தாய் இங்கிலாந்து நாட்டவர். அந்தவகையில் கெவினுக்கு இங்கிலாந்துடன் தொடர்பு இருந்தது. கடந்த 2000 ஆம் ஆண்டு வாக்கின் கெவின் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தார். சரி... இங்கிலாந்துதான் அவருக்கு பிடித்திருக்கிறது என பெற்றோர்கள் விட்டு விட்டனர். கொஞ்ச காலம் கவுண்டி கிரிக்கெட்டில் கெவின் பீட்டர்சனின் காலம் கழிந்தது. அடுத்த நான்கே ஆண்டுகளில் …
-
- 0 replies
- 527 views
-
-
ராகுல் டிராவிட்டின் தயாரிப்பு : அடுத்த தோனி வங்கதேசத்தில் இருக்கிறார்! இளையோர் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம். அபாரமான விக்கெட் கீப்பிங் திறமை... என தோனியின் கலவையாகத் தெரிகிறார் ரிசாப் பன்ட். அதிரடி வீரர் கில்கிரிஸ்ட்தான் நம்ம ரிசப்பிற்கும் ரோல் மாடல். அதிரடியிலும் அவரை போல்தான் என்பதை நேபாளத்திற்கு எதிராக பின்னி பிடலெடுத்தை பார்த்த போதே தெரிந்தது. நேபாளத்திற்கு எதிராக 24 பந்துகளில் 78 ரன்களை விளாசிய இந்த பன்ட் யார்? இளையோர் உலகக் கோப்பையின் விளையாடும் இந்திய அணியின் துணை கேப்டன்தான் இந்த பன்ட். இடது கை ஆட்டக்காரர். கூடவே விக்கெட் கீப்பர் என களத்தில் இரு கடினமான பணிகள். நமக்கு தோனியாக பன்ட் தெரிந்தாலும் அவருக்கு ஹீரோ கில்கிறிஸ்ட்தான். முதல் பந…
-
- 0 replies
- 594 views
-
-
மான்செஸ்டர் சிட்டி பயிற்சியாளராக பெப் கார்டியாலோ பேயர்ன், பார்சிலோனா அணிகளின் முன்னாள் பயிற்சியாளர் பெப் கார்டியாலா பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கிறார். இதுவரை அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த மனுவேல் பெல்கிரினியின் ஒப்பந்தம் இந்த ஜுன் மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து உலகின் பணக்கார கால்பந்து அணிகளுல் ஒன்றான மான்செஸ்டர் சிட்டி, கார்டியாலா கைக்கு வருகிறது. இந்த அணிக்காக பெப் கார்டியாலா 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பார்சிலோன அணிக்காக பெப் 4 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்த போது அந்த அணி 14 கோப்பைகளை வென்றது. இதில் 3 ஸ்பானீஷ் லீக் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள…
-
- 0 replies
- 417 views
-
-
செய்தித்துளிகள் $ ஸ்பானிஷ் கால்பந்து லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 6-0 என்ற கோல்கள் கணக்கில் இஸ்பான் யால் அணியை வீழ்த்தியது. இதில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார். ----------------------------------------- $ ஐபிஎல் டி 20ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராக சேவாக் நியமிக்கப்பட்டுள்ளார். ----------------------------------------- $ அமெரிக்காவின் ஒகியோ நகரில் நடைபெற்று வரும் கிளீவ்லன்ட் கிளாசிக் ஸ்குவாஸ் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் தோல்வியடைந்தனர். ----------------------------------------- $ இந…
-
- 0 replies
- 422 views
-
-
மெஸியின் கடவுச்சீட்டு படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட துபாய் பொலிஸ் உத்தியோகத்தருக்கு சிறை; ஆப்கான் சிறுவனை சந்திக்க மெஸி ஆர்வம் 2016-02-02 10:33:11 ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணித்தலைவரான லயனல் மெஸியின் கடவுச்சீட்டு புகைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட்ட துபாய் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு ஒரு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெய்னின் பார்ஸிலோனா கழகத்துக்காகவும் விளையாடும் லயனல் மெஸி கடந்த வருடம் குளோபல் சொக்கர் அவார்ட்ஸ் விருதை வென்றார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் கடந்த டிசெம்பர் 27 ஆம் திகதி இவ்விருது வழங்கல் விழா நடைபெற்றது. …
-
- 0 replies
- 536 views
-
-
ரியோ ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டவாறு நடத்தப்படும் - பிரேசில் [ Tuesday,2 February 2016, 06:59:47 ] ஸீகா வைரஸ் பரவி வருகின்ற போதிலும் ரியோ டி ஜெனைரோ ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டவாறு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸீகா வைரஸ்சினால் மெய்வல்லுநர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 2016 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோ டி ஜெனைரோ நகரில் நடைபெறவுள்ளது. ஸீகா வைரஸ் பரவலை உலகளாவிய பொதுசுகாதார அவரச நிலைமையாக உலக சுகாதார ஸ்தாபனம் நேற்றைய தினம் பிரகடனப்படுத்தியிருந்தது. கர்பிணி அல்லாவிடின் எந்தவொரு ஆபத…
-
- 0 replies
- 373 views
-
-
களத்தில் தல டோனி... தளபதி யுவி... இப்போ வாங்க பங்காளிகளா..! இந்திய அணி வென்ற மிகச் சிறந்த சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட் போட்டிகள் என பட்டியலிட்டால், அதில் பல போட்டிகளில் துருப்புச்சீட்டாக யுவராஜ் சிங் கண்டிப்பாக இருந்திருப்பார். 1983-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற பின்னர், கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக இந்திய அணி, அயல்மண்ணில் இறுதி போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்த சமயம் அது. 2002 -ம் ஆண்டு நடந்த நாட்வெஸ்ட் கோப்பைக்கான முத்தரப்பு போட்டியின் இறுதி போட்டியில், இந்தியாவுக்கு 326 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. ஷேவாக், கங்குலி, டெண்டுல்கர், மோங்கியா, டிராவிட் என முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டமிழக்க, 24 ஓவர…
-
- 0 replies
- 747 views
-
-
கரீபியன் லீக் T 20 போட்டியிலும் சங்கக்காரா February 01, 2016 இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா, மேற்கிந்திய தீவுகளில் நடக்கும் கரீபியன் லீக் டி20 போட்டியிலும் கலக்கவுள்ளார். சங்கக்காரா கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அவரது ஆட்டத்திறன் மெருகேறிக் கொண்டே தான் செல்கிறது. சச்சின்- வார்னே நடத்திய ஆல் ஸ்டார்ஸ் டி20 தொடரில் பங்கேற்ற சங்கக்காரா பட்டையை கிளப்பினார். இதனையடுத்து அவுஸ்திரேலியாவில் நடந்த பிக் பாஷ் டி20 தொடரிலும் பங்கேற்றார். மேலும், தற்போது ஓய்வு பெற்றவர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் அதிரடி ஆட்டத்தை காட்டி வருகிறார். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெ…
-
- 0 replies
- 374 views
-
-
டி20 பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி முதலிடம் விராட் கோலி. | படம்: கெட்டி இமேஜஸ். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விராட் கோலி தனது கனவு பார்மில் இருந்து வருகிறார். இந்நிலையில் டி20 தொடரில் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட விராட் கோலி டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய டி20 கேப்டனும், தொடக்க வீரருமான ஏரோன் பிஞ்ச்சை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்தார். மூன்று டி20 போட்டிகளில் 90 நாட் அவுட், 59 நாட் அவுட், 50 ஆகிய ஸ்கோர்களை எடுத்தார் விராட் கோலி. இதன் மூலம் 47 தரவரிசைப் புள்ளிகளைக் கூடுதலாகப் பெற்று முதலிடம் சென்றார். டேவிட் வார்னர் 6 இடங்கள் பின்னடைவு கண்டு 18-வது இடத…
-
- 0 replies
- 356 views
-
-
இலங்கை பெண்ணிடம் அசிங்கப்பட்ட கோலி அவுஸ்திரேலிய உணவகமொன்றில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி இலங்கை பெண்ணிடம் வசமாக சிக்கியுள்ளார். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் காலை உணவிற்காக இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் உணவருந்துவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு கோலியுடன் வந்த அவரது முகாமையளார், குறித்த இலங்கைப் பெண்ணைப் பார்த்து “ காலை உணவின் போது இல்லை ” என தெரிவித்துள்ளார். இதையடுத்து நகைச்சுவையான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி குறித்த பெண்ணின் கணவர் தனது முகப்புத்தகத்தில் நகைச்சுவையாக தரவேற்றியுள்ளார். சம்பவம்…
-
- 0 replies
- 836 views
-