விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
நெய்மருக்கு ரூ.76 லட்சம் அபராதம் January 31, 2016 வரி ஏய்ப்பு விவகாரத்தில் பிரேசில் கால்பந்து அணியின் தலைவர் நெய்மருக்கு ரூ.76 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் தேசிய கால்பந்து அணியின் தலைவரும், நட்சத்திர வீரருமான நெய்மர் 2007 மற்றும் 2008ம் ஆண்டு வரி ஏய்ப்பு செய்து வந்ததாக குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ரூ.76 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. http://www.onlineuthayan.com/sports/?p=8627&cat=11
-
- 0 replies
- 667 views
-
-
கோஹ்லி ரசிகர் என்பதற்காக பத்து ஆண்டுகள் ஜெயில் தண்டனையா? கிரிக்கெட்டைப் பொறுத்தவரை வேறொரு நாட்டின் டீமைப் பிடிக்கவில்லை என்றாலும்கூட, அந்த நாட்டின் ஏதோ ஒரு திறமையான விளையாட்டு வீரர் நம் மனத்தை வெகுவாகக் கவர்ந்திருப்பார். அப்படித்தான் பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் உமர் டிராஸ் என்பவருக்கும். பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியாவின் விராட் கோஹ்லி என்றால் உமருக்கு உயிர். பாகிஸ்தானும், இந்தியாவும் மோதும் மேட்ச்சில்கூட, லேசாக அவரது மனம் விராட் கோஹ்லி மீதே இருக்குமாம். ‘‘விராட் கோஹ்லி திறமைக்கு நான் அடிமை. அவரின் டை ஹார்டு ஃபேன். அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். ஆனால், அதுவே எனக்கு இப்படி ஜெயில் தண்டனை வாங்கித் தரும் என்று நினைக்கவில…
-
- 1 reply
- 523 views
-
-
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கேப்டன் தோனி புதிய சாதனை சனி, 30 ஜனவரி 2016 (17:52 IST) ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 1-4 என்ற கணக்கில் தோற்றது. இதனால் இந்திய கேப்டன் தோனி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் அந்த அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் நடந்து முடிந்த இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது தோனி தலைமையிலான அணி. மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் தோனி வசம் இரண்டு சாதனைகள் வந்துள்ளன. ஏற்கனவே தோனி அதிக வெற்றிகள் பெற்ற இந்திய கேப்டன் என்ற கங்குலியின் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் …
-
- 0 replies
- 547 views
-
-
ஏ.பி. டி. இனி ஃபுல் டைம் கேப்டன்! தென்ஆப்ரிக்க அணி டெஸ்ட் அணியின் கேப்டனாக டி வில்லியர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்து வந்த ஹாசிம் ஆம்லா, அண்மையில் அந்த பதவியில் இருந்து விலகினார். இந்தியாவுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் தோல்வி, இங்கிலாந்துக்கு எதிராக 3-1 என்ற கணக்கில் தோல்வி கண்டது, ஆம்லாவை பதவியில் இருந்து விலக வைத்தது. ஹாசிம் ஆம்லாவின் ராஜினாமாவுக்கு பின், டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டனாக டி வில்லியர்ஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்ஆப்ரிக்க அணியின் டெஸ்ட் அணிக்கு, டி வில்லியர்ஸ் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் அணிக்கும் ஏ.பி.டி ஏற்கனவே கேப்டனாக உள்ளார். http://ww…
-
- 0 replies
- 365 views
-
-
அலன் போடர் பதக்கத்தை வென்றார் டேவிட் வோணர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான, ஆண்டின் சிறந்த வீரருக்கான அலன் போடர் பதக்கத்தை, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர் வென்றார். தலைவரான ஸ்டீவன் ஸ்மித்தை முந்தியே, இக்கௌரவத்தை அவர் பெற்றுக் கொண்டார். ஆண்டின் டெஸ்ட் வீரருக்கான விருதையும், டேவிட் வோணரே வெற்றிகொண்டார். சிறந்த வீராங்கனைக்கான மெலின்டா கிளார்க் விருதை, எலைஸ் பெரி வெற்றிகொண்டார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சிறந்த வீரர் விருதை, கிளென் மக்ஸ்வெல், சிறந்த உள்ளூர் பெறுபேறுகளுக்கான விருதை அடம் வோஜஸ், சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருதை, அலெக்ஸ் றொஸ்-உம் வென்றனர். - See more at: http://www.tamilmirror.lk/164832/%E0%AE%85%E0%AE%B2…
-
- 1 reply
- 452 views
-
-
எப்போ, எப்படி செய்யனும் என்று அவருக்கு மட்டும்தான் தெரியும்.. டோணி பற்றி சங்ககாரா சென்னை: கேப்டன் பொறுப்பை எப்போது விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது டோணிக்கு நன்கு தெரியும் என்று இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா தெரிவித்தார். நிருபர்கள் கேள்விக்கு சங்ககாரா அளித்த பதில்களின் தொகுப்பை பாருங்கள்: இலங்கையில் ஒன்டே-டெஸ்ட் போட்டிகளுக்கு மேத்யூசும், டி20 போட்டிகளுக்காக சண்டிமாலும் இலங்கை அணி கேப்டன்களாக செயல்படுகிறார்கள். அதே வியூகத்தை இந்திய அணியில் புகுத்தலாமா என்பது பற்றி நான் பதில் சொல்ல முடியாது. அதேநேரம் டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுவது ஒரு கலை. டெஸ்ட் ஆடும் வீரர்களில் அதிகம்பேர் டி20 போட்டிகளில் ஆடுவது பொருத்தமாகாது. டோணிக்கு தெர…
-
- 0 replies
- 334 views
-
-
முதன்முதலாக ஆஸி.க்கு எதிராக கிரிக்கெட் தொடரை வென்று இந்திய மகளிர் அணி சாதனை 2016 Getty Images இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. | கெட்டி இமேஜஸ். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்த வகை கிரிக்கெட் ஆட்டத்திலும் முதல் முதலாக தொடரை வென்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை புரிந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மிதாலி ராஜ் தலைமை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2-0 என்று கைப்பற்றியது. மெல்போர்னில் நடைபெற்ற இன்றைய 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலில் ஆஸ்திரேலிய அணியை பேட் செய்ய அழைத்தார். ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. மழையால் பாதிக்கப்பட்ட…
-
- 0 replies
- 365 views
-
-
இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக கிரகம் போர்ட் இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக கிரகம் போர்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 01ம் திகதி முதல் 45 மாதங்களுக்கு அவர் இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=76495
-
- 1 reply
- 308 views
-
-
செய்துத் துளிகள்: வீழ்த்தும் உரிமை உள்ளது- அஸ்வின் அஸ்வின். | கோப்புப் படம். இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறும்போது, "ஆஸி. தொடர் பேட்ஸ்மேன்களின் தொடர் என்றே கருதுகிறேன். எனவே சரியான இடங்களில் பந்து வீசுவது அவசியம். ஆஸ்திரேலிய வீரர்கள் எனது பந்துகளை ஆக்ரோஷமாக எதிர்கொள்ள உரிமை பெற்றவர்கள் என்றால் எனக்கு அவர்களை வீழ்த்தும் உரிமை உள்ளது. ஒரு பந்து வீச்சாளரை குறிவைத்து அடிப்பது என்பது ஆட்ட திட்டத்தின் ஒரு பகுதி. இந்த சவாலை மகிழ்ச்சியுடன் சந்திக்க தயாராகவுள்ளேன். இதனை முறியடிக்க போதுமான திறமைகள் என்னிடத்தில் உள்ளது" என்று தெரிவித்தார். ------------------------------------------------------------ இந்த…
-
- 0 replies
- 322 views
-
-
சென்னையில் களமிறங்கும் ஜூனியர் ஷூமேக்கர்! ஃபார்முலா ஒன் கார்பந்தயத்தில், ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கரின் மகன் மிக் ஷூமேக்கர். இவர், இந்தியாவில் நடக்கவிருக்கும் எம்.ஆர்.எஃப் சேலஞ்ச் கார் பந்தயப் போட்டியில் பங்கேற்கவுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் நடக்கும் இப்போட்டியில், பல முன்னாள் வீரர்களின் வாரிசுகளும் பங்கேற்கவுள்ளனர். ஃபார்முலா ஒன் வரலாற்றில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ஷூமேக்கர், பனிச்சறுக்கின்போது தலையில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென்று மீண்டவர். அவரது மகனான 16 வயது மிக், இதுவரை 22 'ஃபார்முலா 4' பந்தயங்களில் பங்கேற்று, 1 பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளார். ‘வேன் அமர்ஃபூட் ரேசிங்’ அணிக்காக பங்கேற…
-
- 0 replies
- 685 views
-
-
ஆசியக்கோப்பை டி20: பிப்ரவரி 27-ல் இந்திய-பாக். போட்டி 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தானுடன் இந்தியா மோதிய போட்டியில் ரசிகர்கள் உற்சாகம். | கெட்டி இமேஜஸ். வங்கதேசத்தில் நடைபெறும் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 27-ம் தேதி மோதுகிறது. 11 போட்டிகள் கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்த முறை டி20 போட்டிகளாக நடைபெறுகிறது. இதில் இந்தியா வங்கதேச அணியை பிப்ரவரி 24-ம் தேதியும், பாகிஸ்தான் அணியை பிப்ரவரி 27-ம் தேதியும் சந்திக்கிறது. பிப்ரவரி 24-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை வங்கதேசத்தில் ஆசியக் கோப்பை டி20 தொடர் நடைபெறுகிறது. மார்ச் 1-ம் தேதி இலங்கைக்கு எதிராக இந்திய அணி களமிறங்க…
-
- 1 reply
- 394 views
-
-
லீக் கிண்ண இறுதியில் லிவர்பூல் - சிற்றி லீக் கிண்ண (கப்பிற்றல் வண் கிண்ணம்) இறுதிப் போட்டிக்கு, மன்செஸ்டர் சிற்றி அணி தகுதிபெற்றுள்ளது. எவேர்ட்டன் அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில், சர்ச்சைக்குரிய விதத்தில் வெற்றிபெற்றே, அவ்வணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. இப்போட்டியின் 18ஆவது நிமிடத்தில், எவேர்ட்டனின் றொஸ் பார்க்லேயும், சிற்றியின் 24ஆவது நிமிடத்தில் பெர்ணான்டின்ஹோவும் கோல்களைப் பெற்றனர். அதன் பின்னர், 70ஆவது நிமிடத்தில், சிற்றியின் றஹீம் ஸ்டேர்லிங், பந்தைக் களத்துக்கு வெளியே கொண்டுசென்றதை, போட்டி மத்தியஸ்தர் கவனிக்க மறக்க, அந்தப் பரிமாற்றம் மூலமாக, கெவின் டி புரையுன், கோலைப் பெற்றார். பின்னர், 77ஆவது நிமிடத்தில் …
-
- 0 replies
- 270 views
-
-
ஆமிருக்கு ஏளனம்: அறிவிப்பாளருக்குக் கண்டனம் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3ஆவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிரை ஏளனம் செய்த மைதான அறிவிப்பாளருக்கு, நியூசிலாந்து கிரிக்கெட் சபை, உத்தியோகபூர்வக் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டு, தனது தண்டனைக் காலத்தைப் பூர்த்தி செய்த பின்னர், நியூசிலாந்துத் தொடரிலேயே ஆமிர், முதன்முறையாகப் பங்குபற்றியிருந்தார். இதில், ஆமிர் பந்துவீசும்போது, பெட்டியில் பணம் வீழ்வது போன்றதான ஒலியை எழுப்பியிருந்தார். இதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முகாமைத்துவத்திடம் முதலில் மன்னிப்புக் கோரியிருந்த நியூசிலாந்து கிரிக…
-
- 0 replies
- 414 views
-
-
ஆடுகளத்தில் தொழில்நுட்ப தொந்தரவு: ஸ்மித் ஆட்டமிழப்பும் சர்ச்சையும் பந்துவீச்சாளர் ஃபால்க்னருடன் ஆஸி. கேப்டன் ஸ்மித் | கோப்புப் படம் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் ஆட்டமிழந்தது குறித்து சர்ச்சை உருவாகியுள்ளது. களத்தில் ஆடிக்கொண்டிருந்த ஸ்மித்துடன் மைக்கில் வர்ணணையாளர்கள் பேசிக் கொண்டிருந்தால் தான் கவனச்சிதறலில் ஸ்மித் ஆட்டமிழக்க நேரிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி, அடிலெய்டு நகரில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் போது, களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்…
-
- 0 replies
- 286 views
-
-
வீட்டில் இந்திய தேசியக்கொடியை பறக்க விட்ட விராட் கோலியின் பாகிஸ்தான் ரசிகர் கைது! இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு உலகம் முழுக்க லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பாகிஸ்தானிலும் ஏராளமான ரசிகர்கள் விராட் கோலிக்கு உண்டு. பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த, பிஷ்மா மருஃவா கூட நம்ம கோலியின் தீவிர ரசிகைதான். இந்திய கிரிக்கெட் அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானிலும் ஏராளமான விராட் கோலி ரசிகர்கள் பார்த்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் ஓகாரா மாவட்டத்தில், உமர் ட்ராஸ் என்பவர் விராட் கோலியின் தீவிர ரசிகர். நேற்றையை போட்டியில் தனது ஹீரோ ஆஸ்திரேலிய பந்துவீச்சை விளாசி தள்ளியதாலும் அதனால், இந்திய…
-
- 0 replies
- 493 views
-
-
சைக்கில் ஓட்டியபடி 'ரூபிக்ஸ் கியூப்' விளையாட்டில் சாதனை! (வீடியோ) சாதனை புரிவதே கடினம்; அதிலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவது என்பது இன்னும் கடினம். அந்த வகையில், சி எம் சி மருத்துவக்கல்லூரியில் Msc மெடிக்கல் ஃபிசிக்ஸ் பயின்று வரும் வேலூரை அடுத்து பாகாயத்தை சேர்ந்த வின்பிரண்ட்ஸ் மைக்கேல் என்பவர், 'ரூபிக்ஸ் கியூப்' என்ற விளையாட்டில், உலகளவில் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன் பெங்களூரை சேர்ந்த ஒருவர், 2014-ல் ரூபிக்ஸ் விளையாட்டில், 1 மணி நேரத்தில் 66 முறை செய்ததே கின்னஸ் புத்தகத்தில் சாதனையாக இடம் பிடித்தது. இந்த போட்டியில் தகுதி பெற வேண்டும் என்றால், 1 மணி நேரத்தில் 30 முறை செய்து முடிக்க வேண்டும். ஆனால் பாகாயம் மைதானத்தில்,…
-
- 0 replies
- 573 views
-
-
டென்னிஸ் மோசடிகள்:சுயாதீன மறுஆய்வுக் குழு அமைப்பு டென்னிஸ் விளையாட்டில் ஊழல் மோசடிகளுக்கு எதிரான தமது செயல்பாடுகள் எப்படியுள்ளன என்பது குறித்து சுயாதீன மறுஆய்வு செய்யவுள்ளதாக உலக டென்னிஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சுயாதீன மறுஆய்வு குறித்த அறிவிப்பு மெல்பர்ணில் வெளியானது போட்டிகளில் பந்தய நிர்ணய மோசடிகள் நடைபெற்றன என்பதற்கான சான்றுகள் முன்வைக்கப்பட்ட பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து சுயாதீன மறுஆய்வுக்கான இந்த முன்னெடுப்பு செய்யப்பட்டுள்ளது. மெல்பர்ண் நகரில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளின்போதே இந்த அறிவிப்பு வெளியானது. விரர்கள் கண்காணிப்பு வட்டத்தில் இரு…
-
- 0 replies
- 352 views
-
-
தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து முதல் டெஸ்ட்:டர்பனில் இன்று தொடக்கம் கோப்பையுடன் இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக், தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹசிம் ஆம்லா. தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் சனிக்கிழமை தொடங்குகிறது. "பாக்ஸிங் டே'வில் தொடங்கும் இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றிப் பாதைக்கு திரும்புவதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன. தென் ஆப்பிரிக்க அணி கடைசியாக விளையாடிய இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட…
-
- 22 replies
- 1.6k views
-
-
இறுதிப் போட்டியில் தமிழ் யூனியன் கழகத்தை வீழ்த்தி ஏ.ஐ.ஏ. கிண்ண சம்பியனானது இலங்கை இராணுவம் (நெவில் அன்தனி) ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் ஏ.ஐ.ஏ. கிண்ணத்திற்காக நேற்று நடைபெற்ற ப்றீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் அசேல குணரட்னவின் அதிரடியின் உதவியுடன் தமிழ் யூனியன் கழகத்தை 5 விக்கெட்களால் இராணுவம் வெற்றிகொண்டு சம்பியனானது. சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது அரை இறுதியில் சிங்களவர் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்திய இராணுவம் நேற்றைய தினம் தமிழ் யூனியனை வெற்றிகொண்டது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்த…
-
- 0 replies
- 341 views
-
-
பாகிஸ்தானை வீழ்த்தியது சரிவிலிருந்து மீண்ட நியூஸிலாந்து முதல் ஒருநாள் போட்டியில் வெலிங்டனில் பாகிஸ்தானை வீழ்த்திய நியூஸிலாந்து அணி. | படம்: ஏ.எஃப்.பி. வெலிங்டனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சரிவிலிருந்து மீண்டு பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸிலாந்து அணி. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூஸிலாந்து 1-0 என்று முன்னிலை பெற்றது. நல்ல பவுன்ஸ் பிட்சில் டாஸ் வென்ற அசார் அலி முதலில் நியூஸிலாந்தை பேட் செய்ய அழைத்த முடிவு சரியே என்று கூறும் விதமாக நியூஸிலாந்து 23-வது ஓவரில் 99/6 என்று சரிவு கண்டது. ஆனால் அதன் பிறகு ஹென்றி நிகோல்ஸ் என்ற வீரர் (தனது 2-வது போட்டியில் ஆடுகிறார்) 111 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்து ஒருமுனையை தக…
-
- 1 reply
- 350 views
-
-
கேப்டனாகவும் வீரராகவும் பங்களிப்பு செய்ய தோனியிடம் இன்னமும் திறமை உள்ளது: மைக்கேல் கிளார்க் மைக்கேல் கிளார்க். | கோப்புப் படம். தொடர்ந்து 3-வது ஒருநாள் தொடரை இழந்ததையடுத்து தோனியின் கேப்டன்சி பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் அவரிடம் இன்னமும் அணியை வழிநடத்தவும் வீரராக பங்களிப்பு செய்யவும் திறமை உள்ளதாக மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். சிட்னியில் இது குறித்து கிளார்க் கூறும்போது, “தோனியிடம் இன்னமும் நிறைய கிரிக்கெட் திறன் மீதமுள்ளது. அவர் விரும்பினால் கேப்டனாகத் தொடரலாம் ஏனெனில் அதற்கான உரிமையை அவர் வென்றெடுத்துள்ளார். அவர் தொடர்ந்து கேப்டன்சியில் சிறந்து விளங்குவதாகவே நான் கருதுகிறேன். இந்திய அணி நீண்ட காலம் வெற்றிப்…
-
- 0 replies
- 381 views
-
-
ஆடவர் கிரிக்கெட் அணிக்கு கேப்டனான இங்கிலாந்து பெண்! டெர்பிசெயரைச் சார்ந்த இங்கிலாந்து கிரிக்கெட் கிளப்பான சாவ்லி அன்ட் லாங் ஈடன் ஆண்கள் கிரிக்கெட் அணி, ராச்செல் ஹோப்கின்ஸ் என்ற பெண்ணை தனது இரண்டாம் தர அணியின் கேப்டனாக நியமித்துள்ளது. இதன் மூலம், 250 ஆண்டு கால டெர்பிசெயர் கிரிக்கெட் வரலாற்றில் ஆண்கள் அணியை வழிநடத்தப்போகும் முதல் பெண் என்ற சரித்திரத்தைப் படைத்துள்ள ஹோப்கின்ஸ், வெற்றிக்குப் பாலினம் ஒரு பொருட்டே அல்ல என்று நிரூபித்துள்ளார். இதுவரை ஆண்கள் அணியை மிகவும் சொற்ப பெண்கள் மட்டுமே வழிநடத்தியுள்ளனர். அந்தப் பெருமை தற்போது ஹோப்கின்சுக்கும் கிடைத்துள்ளது. கிரிக்கெட்டில் ஆண்கள் பெண்கள் என இருவருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டாலும…
-
- 0 replies
- 541 views
-
-
தனி ஒருவனை கிரிக்கெட் உலகம் மிஸ் செய்ய 7 காரணங்கள்! இந்த வெஸ்ட் இண்டீஸ் வீரரை தெரியாமல் யாரும் இருக்க முடியாது. களத்தில் இவரது வினோதமான பேட்டிங் ஸ்டைலை ரசிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். மூன்று ஸ்டெம்புகளையும் காட்டி நிற்கும் மனிதர் பந்து வீச்சாளரின் வேகத்துக்கு ஏற்ப ஸ்டெம்புகளை நோக்கி நகர்ந்து பந்தை பவுண்டரிக்கு விரட்டுவது கிரிக்கெட்டின் கிளாசிக் ஷாட்களில் ஒன்று. இதற்கு சொந்தக்காரர் இந்திய வம்சாவளியை சேர்ந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிவ் நாராயண் சந்தரபால் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு கிளாசிக் கிரிக்கெட்டர். அவர் ஓய்வை அறிவித்துள்ளார். இவரை கிரிக்கெட் உலகம் இந்த 7 காரணங்களுக்காக கட்டாயம் மிஸ் செய்யும். தனி ஒருவன்! மிகப்பெரிய ஜாம்பவான்களை கொண்ட வெஸ்ட் இ…
-
- 0 replies
- 526 views
-
-
யாழில் கிரிக்கெட் பயிற்சி முகாம்! தேசிய சுதந்திர விளையாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தின் பாடசாலை மாணவர்களுக்கிடையில் கிரிக்கெட் பயிற்சி முகாமும், பயிற்சிப்பட்டறையும் நடாத்தும் வகையிலான பயிற்சி செயலமர்வு நேற்று யாழ். மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.. இப்பயிற்சி முகாமை ஆரம்பிப்பதற்காக பிரதம அதிதியாக அமைச்சரும் முன்னாள் டெஸிட் அணி தலைவருமாகிய அரஜீன ரணதுங்க கலந்து கொண்டு இவ் பயிற்சி முகாமை ஆரம்பித்து வைத்தார். இலங்கையில் அதிக விளையாட்டு துறையில் சிறந்து விளங்கக் கூடியவர்கள் யாழ். மாவட்டத்திலே காணப்படுகின்றனர். அதனால் அவ்வாறான துறையினை எமது பாடசாலை மாணவர்களும் பெற்று…
-
- 2 replies
- 489 views
-
-
உலகக்கிண்ண T-20 தொடரில் நரேன் January 24, 2016 எதிர்வரும் உலகக்கிண்ண T-20 தொடர் மூலம் சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்குள் நுழைவதே தனது நோக்கம் என மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கட் விதிமுறைகளை மீறி பந்து வீசியதாக 27 வயதுடைய சுனில் நரைனிற்கு சர்வதேச கிரிக்கட் சபையால் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் உலகக்கிண்ண T-20 தொடரிற்கு முன்னர் மீண்டும் பந்து வீச்சு பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதால், உலகக்கிண்ண T-20 தொடரில் பங்கேற்க முடியும் என நம்புவதாக சுனில் நரைன் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் இலங்கையுடன் நடைபபெற்ற ஒருநாள் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியி…
-
- 0 replies
- 449 views
-