விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
டோனி வயதாகி வரும் ஒரு குத்துச் சண்டை வீரர் January 24, 2016 இந்திய அணிக்காக டோனி, கடந்த 2007ம் ஆண்டு டி20 உலகக்கிண்ணம், 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கிண்ணம், 2013ல் மினி உலகக்கிண்ணம் என வென்று கொடுத்தாலும், சமீப காலமாக ஒரு வெற்றி கூட பெற முடியாமல் தடுமாறி வருகிறார். இந்நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஏற்பட்ட தொடர் தோல்வி டோனியின் பதவி விலகல் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பலரும் அவரது ஆட்டம் மற்றும் அணித்தலைவர் பதவி குறித்து விமர்சித்து வருகின்ற நிலையில், டோனி மவுனம் காத்து வருகிறார். இந்நிலையில், கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தனது ட்விட்டர் பதிவில், “டோனி வயதாகி வரும் ஒரு குத்துச் சண்டை வீரர், அவருக்கு வழிமுறைகள் தெர…
-
- 0 replies
- 589 views
-
-
IPL லில் பங்கேற்பதற்கு 714 வீரர்கள் விண்ணப்பம் January 24, 2016 இந்தியன் பிரீமியர் லீக் 2016 ஆம் ஆண்டு தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பதற்கு 714 வீரர்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பதாவது ஐபிஎல் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறவுள்ளது. இத் தொடருக்கான வீரர்களை தெரிவு செய்யும் வீரர்கள் ஏலம் எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் நாளை வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 714 வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 300 வீரர்கள் மாத்திரமே ஏலத்தில் தெரிவு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பித்துள்ள வீரர்களில் பாகிஸ்தான் மற்றும் இ…
-
- 0 replies
- 557 views
-
-
ஆஸி.க்கு எதிரான டி 20 தொடரை 3-0 என வென்றால் இந்தியாவுக்கு முதலிடம் தோனி. | படம்: ஏ.பி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை 3-0 என வென்றால் இந்திய அணி டி 20 தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி 20 போட்டி கொண்ட தொடர் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. டி 20யின் ஐசிசி தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி தற்போது 110 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. ஆஸி. அணி 118 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸி.க்கு எதிரான தொடரை இந்தியா 3-0 என கைப்பற்றும் பட்சத்தில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடிக்கும். அதேவேளையில் ஆஸி. அணி 110 புள்ளிகளுடன் 8வது இடத்துகு …
-
- 0 replies
- 301 views
-
-
இன்று ஆரம்பிக்கிறது பிக் பாஷ் லீக் அவுஸ்திரேலியாவின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான பிக் பாஷ் லீக் தொடர், இன்று ஆரம்பிக்கவுள்ளது. 8 அணிகள் பங்குபற்றும் இந்தத் தொடர், ஐ.பி.எல் போன்ற வடிவமைப்பில் இடம்பெறுகின்ற போதிலும், ஓர் அணியில், வெளிநாட்டு வீரர்கள் இருவருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும். அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ், பிறிஸ்பேண் ஹீற், ஹொபார்ட் ஹரிகேன்ஸ், மெல்பேண் றெனிகேட்ஸ், மெல்பேண் ஸ்டார்ஸ், பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ், சிட்னி சிக்ஸர்ஸ், சிட்னி தண்டர் ஆகிய அணிகளே இதில் பங்குபற்றவுள்ளன. இன்றைய முதற்போட்டியில், சிட்னி தண்டர்ஸ் அணியும் சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் மோதவுள்ளன. அணிகளின் விவரம்: அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர…
-
- 15 replies
- 1.2k views
-
-
அவுஸ்திரேலிய ஆடுகளங்களை விமர்சிக்கிறார் ஸ்மித் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், அவுஸ்திரேலிய ஆடுகளங்கள் குறித்துத் தன்னுடைய விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவுஸ்திரேலியாவின் இப்பருவகாலத்தில், டெஸ்ட் போட்டிகளும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளும், தட்டையான ஆடுகளங்களைக் கொண்டனவாக அமைந்திருந்தன. குறிப்பாக, அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான தொடரின் 5 போட்டிகளில், மொத்தமாக 3,159 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன. 5 போட்டிகளில் 3,000க்கும் மேற்பட்ட குவிக்கப்பட்டமையை 'மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று" எனக் குறிப்பிட்ட அவர், 'என்னைப் பொறுத்தவரை, எங்களது ஆடுகளங்களின் பண்பே, ஏமாற்றம் தருவதாக அமைந்தது. பிறிஸ்பேண், பேர்த் ஆடுளங…
-
- 0 replies
- 348 views
-
-
இது தான் கடைசி போட்டியா ஆஸி நிருபரின் கேள்விக்கு தோனியின் பதில் என்ன? ஆஸ்திரேலிய தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. கடைசி போட்டியில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது இந்தியா. போட்டிக்கு பின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இந்திய கேப்டன் தோனியிடம் 'இது தான் உங்கள் கடைசி ஒருநாள் போட்டியா என்ற கேள்வியை ஆஸி நிருபர் ஒருவர் எழுப்பினார். அதற்கு தோனி அளித்த பதில் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த கேள்வியை முதல் கேள்வியாக எதிர்கொண்ட தோனி சிரித்துக்கொண்டே ' இதற்கு நீங்கள் பொது விருப்ப மணு தாக்கல் செய்து தான் கேட்க வேண்டும். இதற்கு என்னிடம் பதிலில்லை என பதிலளித்து கேப்டன் கூலாக தன்னை நிருபித்துள்ளார். மேலும் மணீஷ் பாண்டே குறித்தும், பூமராஹ் பந்…
-
- 1 reply
- 583 views
-
-
கேப்டன் பொறுப்பில் தோனி சற்று அதிக காலம் நீடித்து வருகிறார்: இயன் சாப்பல் தோனி, குர்கீரத் சிங் மான். | படம்: ஏ.எஃப்.பி. இந்திய ஒருநாள் அணி கேப்டன் தோனி முன்பு வலுவான தலைவராக திகழ்ந்தார், இப்போது யோசனைகள், திட்டங்கள் இன்றி தவிக்கிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் கூறியுள்ளார். ஈ.எஸ்.பி.என் - கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் இது பற்றி கூறும்போது, அலிஸ்டர் குக், மார்க் டெய்லர், கிரெக் சாப்பல் ஆகிய கேப்டன்களின் காலக்கட்டத்தை விரிவாக அலசி தோனி பற்றிய தனது கருத்தை தெரிவித்தார். அலிஸ்டர் குக் தனது பலவீனமான கேப்டன்சி மற்றும் பேட்டிங் என்ற ஒரு காலக்கட்டத்திலிருந்து திறம்பட எழுச்சியுற்ற கேப்டன் என்…
-
- 0 replies
- 364 views
-
-
ஆஸ்திரேலியா தலைமை பயிற்சியாளர் டேரன் லேமன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லேமன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. இதில் இந்தியா 49.4 ஓவரில் 331 ரன்கள் எடுத்து 330 ரன்னை சேஸிங் செய்தது. ஆஸ்திரேலிய மண்ணில் அதிகபட்ச சேஸிங் இதுவாகும். இதனிடையே ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லேமனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிட்னியில் உள்ள ராயல் பிரின்ஸ் ஆல்பர்ட் மருத…
-
- 0 replies
- 339 views
-
-
”நியூசிலாந்து வெற்றி பெற முடியும் என்று நினைக்கவில்லை” மகல January 23, 2016 இலங்கை அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் பற்றி முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தனே கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து தொடரையும் மோசமாக இழந்தது. இதனால் இலங்கை அணியில் சில மாற்றங்களை செய்யவும், மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் ஒருவரை தலைவராக நியமிக்கவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது. இது பற்றி இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தனே கூறுகையில், ”நியூசிலாந்து அணி வலிமையான அணி. அந்த அணியில் துடுப்பாட்ட வரிசையும், தாக்குதல் பந்துவீச்சும் சிறப்பாக உள்ள…
-
- 0 replies
- 332 views
-
-
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு மெல்போர்ன் மைதானம். | கோப்புப் படம். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஷேன் வாட்சன், நேதன் லயன் ஆகியோர் இடம்பெறவில்லை. ஷேன் வாட்சன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறார். இந்நிலையில் பிக்பாஷ் லீகில் சொல்லிக்கொள்ளும்படியான இன்னிங்ஸ் எதையும் ஆடவில்லை. அணியில் ஒரே பகுதி நேர ஸ்பின்னராக கிளென் மேக்ஸ்வெல் மட்டுமே 13 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்த அணிக்கு ஸ்டீவ் ஸ…
-
- 53 replies
- 3.4k views
-
-
லாராவின் சாதனையை எட்ட 86 ரன்களே தேவை : சங்கடத்துடன் விடைபெற்றார் சந்தர்பால் ! மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஷிவ்நாராயண் சந்தர்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். சுமார் 22 வருடங்கள் கிரிக்கெட்டுடன் பயணித்த அவருக்கும் பெரும்பாலான கிரிக்கெட்டர்களை போல, ஓய்வு பெறும் தருணம் இனிப்பாக இல்லை. கடந்த 1994-ம் ஆண்டு சந்தர்பால், கினியாவில் நடந்த போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இங்கிலாந்து அணிக்கு எதிராக முதன் முறையாக களம் இறங்கினார். இந்த போட்டியில் சந்தர்பால் அரை சதம் அடித்தார். மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியில், 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவரது இறுதி டெஸ்ட் போட்டியும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவே அ…
-
- 1 reply
- 464 views
-
-
அம்மாடியோவ்... 50 ஓவரில் 485 ரன்கள்! - இளம் இந்திய அணி அசத்தல் ஆட்டம்! ஆஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிகளை தடுத்து நிறுத்தி, அதன் மண்ணிலேயே அந்த அணியை 329 ரன்களை சேஸ் செய்தது, 6 இந்திய வீரர்கள் சென்சுரி அடித்தது உள்ளிட்ட பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது சீனியர் அணி. அதே போல இன்று 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியும் மெகா சாதனை நிகழ்த்தியிருக்கிறது. யுவராஜ் , விராட் கோலி என பல வீரர்கள் இந்திய அணியில் நுழைந்தது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பையில் பிரகாசித்ததன் மூலம்தான். தற்போது 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு பயிற்சியாளராக டிராவிட் இருக்கிறார். வருங்காலத்தில் சீனியர் இந்திய அணி, உலக அரங்கில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக இப்போதே இளம் வீரர்களை பட்டை தீட…
-
- 0 replies
- 611 views
-
-
நான் நிரபராதி என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு அளியுங்கள்: டானிஷ் கனேரியா வேண்டுகோள்! பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அனில் தல்பாட்டுக்குப் பிறகு இந்து மதத்தை சேர்ந்தவர் என்ற பெருமை பெற்றவர் டானிஷ் கனேரியா. கடந்த 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில், ஸ்பாட் பிக்சிங் புகாரில் சிக்கிய இவருக்கு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு வாழ்நாள் தடை விதித்தது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முழுமையாக ஏற்றுக் கொண்டது. இதனை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் கனேரியா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இந்த விவகாரத்தில் தனக்கு உதவி செய்யும்படி டானிஷ், பி.சி.சி.ஐ.யிடம் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில…
-
- 0 replies
- 395 views
-
-
கேப்டனாக தோனியின் கடைசி இன்னிங்ஸா இது? - மூன்று அதிர்ச்சி காரணங்கள் ஏழ்மையானவர்கள் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்து, தடதடவென சாதனைகளை உடைத்து நொறுக்கி, இந்திய அணியை புரட்டிப்போட்டு , தனது அதிரடி அபார ஃபினிஷிங் மற்றும் அட்டகாசமான கேப்டன்ஷிப் துணை கொண்டு, இந்திய அணிக்கு குறுகிய காலத்தில் டி20, ஒருநாள் உலககோப்பைகள், சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை வென்று, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை தரவரிசையில் முதல் இடத்துக்கு உயர்த்தி , உலகில் எந்தவொரு கிரிக்கெட் கேப்டனும் செய்யாத சாதனைகளை படைத்தவரும், உலகின் வெற்றிகரமான கேப்டன்களில் டாப் இடத்தில் இருப்பவருமான மகேந்திர சிங் தோனிக்கு இன்று கடைசி ஒரு தின போட்டியாக அமையக்கூடும் என தகவல்கள் கசிகின்றன. அதற…
-
- 0 replies
- 421 views
-
-
யூரோ 2016 : கோல் லைன் டெக்னாலஜி அறிமுகம்; யூஃபா அறிவிப்பு (வீடியோ) யூரோ 2016 கால்பந்து தொடர் மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் 'கோல் லைன் டெக்னாலஜி' நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக ஐரோப்பிய கால்பந்து சம்மேளனமான யூஃ பா அறிவித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் போது ஜெர்மனிக்கு எதிரான 2வது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பிராங்க் லேம்பர்ட் அடித்த பந்து கிராஸ் பாரில் பட்டு எல்லைக் கோட்டைத் தாண்டியது. ஆனால் நடுவரால் சரியாக அதனை கணித்து கோல் என்று அறிவிக்க முடியவில்லை. கடந்த 2012ஆம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை போட்டியின் போது இங்கிலாந்து அணிக்கு எதிராக உக்ரேன் வீரர் ஷிவ்சென்கோ அடித்த கோலும் இதே கோலும் இதே போல் …
-
- 1 reply
- 435 views
-
-
’’ அனைவருக்கும் நன்றி ’’ கெய்ல் January 21, 2016 மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், தன்னை விமர்சனம் செய்த அனைவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார். பிக்பாஷ் தொடரில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியாவில் முகாமிட்டிருந்த கிறிஸ் கெய்ல் அங்கு தனது ஆட்டங்கள் முடிந்ததைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். சமீபத்தில் அவர் பெண் செய்தியாளரிடம் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார். இதனால் அவருக்கு 10,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், முன்னாள் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் இயான் சேப்பல், கெய்லை யாரும் விளையாட அனுமதிக்கக் கூடாது. அவருக்கு சர்வதேச அளவில் தடை விதிக்க வேண்டும் என்று அதிகமாகவே கொந்தளித்தார்.…
-
- 0 replies
- 562 views
-
-
விவ் ரிச்சர்ட்ஸ் ஒரு மிகப்பெரிய வீரர், அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள்: விராட் கோலி விராட் கோலி. | கெட்டி இமேஜஸ். விராட் கோலியின் ஆட்டத்தில் தன்னுடைய ஆட்டத்தின் சில சுவடுகள் தெரிவதாக மே.இ.தீவுகள் ‘கிரேட்’ விவ் ரிச்சர்ட்ஸ் கூறியதையடுத்து ரிச்சர்ட்ஸ் மிகப்பெரிய வீரர், அவர் எங்கே, நான் எங்கே... என்று விராட் கோலி தன்னடக்கம் காண்பித்துள்ளார். ஏற்கெனவே கடந்த ஆண்டு அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் கடைசி நாளன்று பெரிய இலக்கைத் துரத்திய போது அபார சதம் கண்ட விராட் கோலியின் ஆட்டம் விவ் ரிச்சர்ட்ஸ் போன்று இருந்ததாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர், தற்போது விவ் ரிச்சர்ட்ஸே இப்படி கூறுவது உண்மையில் கோலிக்குப் பெருமை சேர்ப்பதாகு…
-
- 0 replies
- 410 views
-
-
விராட் கோலி சதத்தை விமர்சித்த மேக்ஸ்வெல்: ஸ்மித், பிஞ்ச் ஆதரிக்கவில்லை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் அவர் சதமெடுப்பதற்காக தனது அதிரடி வழியிலிருந்து திசைதிரும்புகிறார் என்று ஆஸ்திரேலிய வீர்ர் கிளென் மேக்ஸ்வெல் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் கிளென் மேக்ஸ்வெல் கருத்தை ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், ஏரோன் பிஞ்ச்சும் ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே மேக்ஸ்வெல், ‘இந்திய பேட்ஸ்மென்கள் சதம் என்ற மைல்கல்லை மட்டுமே குறிவைத்து ஆடுகின்றனர் என்று நான் நினைக்கிறேன். சிலர் மைல்கல்லை நோக்கி ஆடுகின்றனர், சிலர் அப்படி ஆடுவதில்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார்…
-
- 0 replies
- 471 views
-
-
ஃபிஃபா நடுவரின் வீடு இதுதான் : வறுமையும் பொறுமையும் ரூபாதேவியின் அடையாளம்! பூட்டுக்கும் பிரியாணிக்கும் மட்டும் திண்டுக்கல் பெயர் போன ஊர் கிடையாது. கால்பந்தும் இங்கும் வெகு பிரபலம். தடுக்கி விழுந்தால் ஒரு கால்பந்து வீராங்கனையை இங்கு சந்திக்கலாம். இதே திண்டுக்கல் இப்போது சூரிச் வரை பேசப்படுகிறது என்றால் அதற்கு காரணம் ரூபாதேவி என்ற கால்பந்து வீராங்கனை. தமிழகத்தில் இருந்து முதன் முறையா ஃபிஃபாவின் அங்கீகரிக்கப்பட்ட நடுவராக இவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்தியாவில் கால்பந்து ஏழ்மையும் துயரமும் கலந்த விளையாட்டுதானே. அதற்கு ரூபாதேவியும் தப்பவில்லை. கூரை வேயப்பட்ட வீடு. அதுவும் ஆங்காங்கே பிய்ந்து தொங்குகிறது. ஆனால் ரூபாதேவிக்கு இன்று உலகின் பணக்கார அமை…
-
- 0 replies
- 528 views
-
-
தொடரை இழந்தது பாகிஸ்தான் January 22, 2016 வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தானை 95 ரன்கள் வித்தியாசத்தில் நொறுக்கியது நியூஸிலாந்து. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூஸிலாந்து 2-1 என்று கைப்பற்றியது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுக்க இலக்கை விரட்டிய பாகிஸ்தான் 16.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. மார்டின் கப்தில் 19 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 42 ரன்கள் எடுக்க, வில்லியம்சன் 33 ரன்களை எடுத்தார். ஆனால் கோரி ஆண்டர்சன் 42 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 82 ரன்கள் விளாசி கடைசி வரை நாட் அவ…
-
- 0 replies
- 415 views
-
-
செய்தித் துளிகள்: அரையிறுதியில் தீபிகா பல்லிகல் தீபிகா | கோப்புப் படம் கிரானைட் ஓபன் ஸ்குவாஸ் போட்டி டொரான்டோவில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதியில் தரவரிசையில் 17வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல், எகிப்தின் சல்மா ஹனி இப்ராஹிமை எதிர்த்து விளையாடினார். இதில் 27வது இடத்தில் உள்ள சல்மாவை 12-10, 11-2, 11-4 என்ற செட் கணக்கில் தீபிகா பல்லிகல் தோற்கடித்தார். இந்த ஆட்டம் 34 நிமிடங்களில் முடிவடைந்தது. அரையிறுதியில் 6ம் நிலை வீராங்கனையான கயானாவின் நிக்கோலேடி பெர்ணான்டஸை சந்திக்கிறார் தீபிகா. ------------------------------------------------------------- இந்தியா-இலங்கை டி 20-ல் மோதல் ஆசிய கோப்ப…
-
- 0 replies
- 434 views
-
-
முதற்தடவையாக இருபதுக்கு 20 ஆசியக்கிண்ணம் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 தொட ரும், அதனைத் தொடர்ந்து இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரும் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய– இலங்கை அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட இ20 தொடரில் விளையாட முடிவு செய்துள்ளன. இந்த மூன்று போட்டிகள் நடைபெறும் திகதி மற்றும் இடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டி பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி புனேவில் தொடங்குகிறது. பெப்ரவரி 12ஆம் திகதி டெல்லியில் 2ஆவது போட்டியும், பெப்ரவரி 14ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் 3ஆ-வது மற்றும் கடைசி போட்டியும் நடக்கிறது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்…
-
- 0 replies
- 422 views
-
-
உலக கிண்ண 20 க்கு 20 தொடருக்கான அயர்லாந்து அணிக்கு வாஸ் உதவி வழங்கவுள்ளார் [ Thursday,21 January 2016, 16:54:43 ] உலக கிண்ண 20 க்கு 20 கிரிக்கெட் தொடருக்கென தயாராகும் அயர்லாந்து அணிக்கு ஸ்ரீலங்கா அணியின் முன்னாள் இடதுகர வேகப்பந்துவீச்சாளர் சமிந்தவாஸ் உதவி வழங்கவுள்ளார். சமிந்த வாஸ் பந்துவீச்சு பயிற்றுவிப்பு ஆலோசகராக செயற்படவுள்ளதாக அயர்லாந்து கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் அயர்லாந்து அணியுடன் இணையவுள்ள 41 வயதான சமிந்த வாஸ், தொடர் முடிவுடையும் வரை அணியுடன் இணைந்து செயற்படவுள்ளார். மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் ஏப்ரல் 3 ஆம் திகதி இந்தியாவில் உலக கிண்ண 20 க்கு 20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. அயர்லாந…
-
- 0 replies
- 228 views
-
-
தோள் பட்டை வலிக்காக டேல் ஸ்டெயினுக்கு வித்தியாசமான சிகிச்சை! தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள வலிக்காக, தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினுக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வரும் தெனாப்பிரிக்க பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. தோள்பட்டை வலி காரணமாக அந்த போட்டியில் இருந்து அவர் விலகினார். அடிக்கடி தோள்பட்டை வலியால் அவதிப்படுவதால், இந்த முறை டெல் ஸ்டெயினுக்கு ஹைபெர்பெரிக் முறையிலான ஆக்சிஜன் தெரபி சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, முழுவதும் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட ஒரு தனி சேம்பரில் டேல் ஸ்டெயின் அடைக்கப்பட்டார். இந்த ச…
-
- 0 replies
- 500 views
-
-
பெண்ணுக்கு உதவிய சோங்கா : பாராட்டும் இணைய உலகம் பந்து எடுத்து கொடுக்கும் இளம்பெண்ணுக்கு செய்த உதவியால் சமூக வலைதளங்களில் புகழ்ந்து பேசப்படும் வீரராக டென்னிஸ் வீரர் ஜோ-வில்பிரட் சோங்கா காணப்படுகின்றார். டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 9ஆம் இடத்தில் உள்ள பிரெஞ்சு வீரர் ஜோ-வில்பிரட் சோங்காவுக்கும் அவுஸ்திரேலியா வீரர் ஒமர் ஜெசிகாவுக்கும் இடையேயான போட்டி அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்தது. இந்த போட்டியின் போது, ‘போல் கேர்ள்’ என்று அழைக்கப்படும் வீரர்களுக்கு பந்தை எடுத்துக் கொடுக்கும் பணியில் உள்ள இளம்பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதை புரிந்து கொண்ட ஜோ, அவருக்கு ஆறுதல் கூறி மைதானத்திற்கு வெளியே கொண்டு சென்று பணியாளர்களிடம…
-
- 0 replies
- 420 views
-