Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கலக்க காத்திருக்கும் கோல்கீப்பர் : வயசு 16....மதிப்பு 12ஆயிரம் கோடி? பதினாறு வயசுல நாம என்ன செஞ்சிட்டு இருந்திருப்போம்? மாங்கு மாங்குனு பத்தாம் கிளாஸ் தேர்வுக்கு படிச்சிட்டு இருப்போம். இல்ல தெருவுல கிரிக்கெட் விளையாடிட்டு இருந்துருப்போம். கொடி நாளுக்கு 5 ரூபாய் கொடுங்கனு ஸ்கூல்ல கேட்டா, அதுக்கே அம்மாகிட்டயும் அப்பாகிட்டயும் போய் நிப்போம். ஆனால் இத்தாலியைச் சார்ந்த கோல்கீப்பரான 16 வயதே நிரம்பிய கியான்லூகி டொன்னருமாவுடைய மதிப்பு இப்பொழுது 170 மில்லியன் யூராக்களாம் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 12ஆயிரம் கோடி). இவரை இத்தாலி அணியின் கேப்டனும் உலகின் தலைசிறந்த கோல்கீப்பர்களுள் ஒருவருமான பஃப்னோடு ஒப்பிட்டுக் கொண்டாடுகின்றனர் இத்தாலி ரசிகர்கள். யாரு …

  2. இந்தியா-தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர்: உள்ளூர் சாதகம் என்னும் பொன் முட்டையிடும் வாத்து நாக்பூரில் வெற்றி நடைபோட்ட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. இந்திய மண்ணில் இந்தியாவுக்கு அதிக சவால்களை ஏற்படுத்திவரும் அணி தென்னாப்பிரிக்காதான். உலகின் எல்லா அணிகளையும் மிரட்டிவந்த 1990களின் ஆஸ்திரேலிய அணிகூட இந்தியாவில் திணறியது. புத்தாயிரத்தின் தொடக்கத்தில் ஸ்டீவ் வா தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலகிலேயே சிறந்த அணியாகக் கருதப்பட்டது. அந்த அணிகூட இந்தியாவில் தோற்றுத்தான்போனது. ஆனால் கிட்டத்தட்ட அதே சமயத்தில் இந்தியா வந்த தென்னாப்பிரிக்க அணி அனாயாசமாகத் தொடரை வென்றது. அதன் பிறகும் ஒரு முறைகூட இந்தியாவில் தென்னாப்பிரிக்கா தொடரை இழந்ததில்லை…

  3. 5 நாட்கள் ஆட்டம் 3 நாட்களில் முடிவதால், ஸ்டார் இந்தியாவுக்கு ரூ. 80 கோடி இழப்பு கிரிக்கெட் ரசிகர்கள் நிறைந்த இந்தியாவில் அதுவும் உள்நாட்டில் நடக்கும் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பி, ஸ்டார் இந்தியா தொலைகாட்சி ரூ.80 கோடி வரை இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது. தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மொகாலி டெஸ்ட் 3 நாட்களில் இந்தியா வெற்றி பெற்று விட, பெங்களுர் டெஸ்ட் மழையால் 4 நாட்கள் ஆட்டமும் கைவிடப்பட்டு சமனில் முடிந்தது. நாக்பூர் ஆடுகளமும் சுழற்பந்துக்கு சாதகமாக அமைக்கப்பட, தென்ஆப்ரிக்க அணி சுருண்டு விழுந்தது. இந்த ஆட்டமும் 3 நாட்களில் முடிந்து விட, இந்தியா மீண்டும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. தென்ஆப்ரிக்க அணியி…

  4. நியூசிலாந்தை இலகுவாக வீழ்த்துவோம்- மத்தியூஸ் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடரைக் கைப்பற்றுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் இலங்கை அணித்தலைவர் மத்தியூஸ். இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 ரி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் ஆட்டம் அடுத்த மாதம் 10ஆம் திகதி தொடங்குகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றுவோம் என்று இலங்கை அணியின் தலைவர் மத்தியூஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ‘மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் நியூசிலாந்தில் நிலைமை வேறு வி…

  5. டுவென்டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தி அப்ரிதி புதிய சாதனை l டெல்லி: பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிதி டுவென்டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான் கண்டெடுத்த அபாரமான கிரிக்கெட் வீரர்களில் அப்திரிக்கு முக்கியத்துவம் உண்டு. எதிரணியினரும் மதிக்கக் கூடிய திறமையாளர் அப்ரிதி. தற்போது தனது 86வது டுவென்டி 20 போட்டியில் அவர் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் அவர் டுவன்டி 20 போட்டிகளில் 86 விக்கெட்களைச் சாய்த்து டுவென்டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ள வீரராக உருவெடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டி துபாயில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டுவென்டி 20 போட்டியில்தான் இந்த …

  6. பிராட்மேனுக்கு எதிரான 'பாடி-லைன்' உத்தியுடன் கோலியின் உத்தியை ஒப்பிட்டு பேடி காட்டம் நாக்பூர் பிட்ச் விவாதம் இன்னும் முடிந்துவிடவில்லை, ஏற்கெனவே எரியும் நெருப்பில் முன்னாள் கேப்டன், சுழற்பந்து வீச்சாளர் பிஷன் பேடி எண்ணெய் வார்த்துள்ளார். மும்பை, மிட் டே பத்திரிகைக்கு அவர் கூறும்போது, “வெள்ளைச் சீருடையைக் கழற்றி விட்டு மல்யுத்த உடைகளை அணிந்து கொண்டு ஆடுங்கள் இந்தக் குழியில். உள்நாட்டில் விளையாடுவதன் அனுகூலம் இதுதான் என்று என்னை நம்பச் சொல்கிறீர்களா? முதல் நாளே திரும்புவதற்கானதல்ல ஆடுகளம் என்பது. வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான கடினமான, பவுன்ஸ் பிட்ச் அமைக்க குறிப்பிட்ட மண் தன்மை பற்றிய அறிதல் அவசியம். ஆனால் இங்கு எதுவுமே தே…

  7. அதே இரத்தம் அப்படித்தான் இருக்கும் November 27, 2015 மும்பையில் நடைபெற்ற 16வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் டில் சச்சினின் மகன் அர்யுன் சதம் விளாசியுள்ளார். கவாஸ்கர் லெவனுக்கு எதிராக விளையாடிய அவர், ரோகித் சர்மா லெவனுக்கு எதிராக 106 ஓட்டங்களை எடுத்தார். அர்யுன் இடது கைப் பழக்கமுடைய துடுப்பாட்ட வீரரும் வேகப்பந்து வீச்சாளருமாவார். அர்யுன் இந்திய அணியில் விரைவில் இடம்பிடிப்பார் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரான பொண்டிங், டொனி, ரோகித் சர்மா, குக் போன்ற கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/sports/?p=4053&cat=2

  8. மன்னாரில் ஆரம்பமாகியது 41 ஆவது தேசிய விளையாட்டு விழா மன்னாரிலுள்ள வட மாகாண சபை உள்ளரங்க விளையாட்டு அரங்கில் 41 ஆவது தேசிய விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இவ் தேசிய விளையாட்டு ஆரம்ப விழாவுக்கு மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய பிரதம அதிதியாகவும் தேசிய விளையாட்டுத் துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ரி.எம்.எஸ்.பி.பண்டார, மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ஸ்ரணி டீ மெல், வட மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் எஸ்.எம்.ராஜா ரணசிங்க, மன்னார் பிரதேச செயலாளர் வசந்தகுமார், முசலி பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் …

  9. பங்களாதேஷ் பிரீமியர் லீக் : டைனமைட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான நிலையில், முதல் நாளில் நடைப்பெற்ற கொம்மிலா விக்டொரியன்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில், டாக்கா டைனமைட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இப் போட்டியானது, நேற்று மிர்பூர் மைதானத்தில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற, கொம்மிலா விக்டொரியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன் படி முதலில் களமிறங்கிய கொம்மிலா விக்டொரியன்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களை குவித்தது. அணியின் அதிகபட்ச ஓட்டமாக மஸ்ரபீ மோடார்ஸா 26 பந்தில் இரு சிக்சருடன்…

  10. வெற்றிக்கு வழிவகுக்காமல் 55 ரன்கள் சராசரி வைத்திருந்து என்ன பயன்?: விராட்(கோலி) விளாசல் விராட் கோலி. | படம்: அகிலேஷ் குமார். நாக்பூர், மொஹாலி பிட்ச்கள் பற்றிய விமர்சனங்கள் பெரிய அளவில் எழுந்ததையடுத்து விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். பிட்ச்கள் பற்றி நாங்கள் முன்னாள் புகார் எழுப்பியதில்லை, எதிர்காலத்திலும் புகார் எழுப்ப மாட்டோம் என்று கூறினார் கோலி. 9 ஆண்டுகளாக அயல்நாட்டில் டெஸ்ட் தொடரை இழக்காமல் சாதித்து வந்த தென் ஆப்பிரிக்கா இந்திய ‘குழி பிட்ச்களில்’ சிக்கி சுழலில் சின்னாபின்னமாகி தொடரை இழந்தது. இதனையடுத்து நாக்பூர் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி கூறியிருப்பதாவது: …

  11. மாற்றம்... முன்னேற்றம்... கிரிக்கெட்... களம் இறங்கும் பெண் நடுவர்கள்! கிரிக்கெட்டின் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் நடுவர்களை நியமித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது ஐ.சி.சி. இன்று முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரை, தாய்லாந்தில் நடக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு, இந்நால்வரும் நடுவர்களாக செயல்படவுள்ளனர். உள்ளூர் மகளிர் போட்டிகளில் மட்டும் அதிகப்படியாக பெண் நடுவர்கள் செயல்பட்டு வந்த நிலையில், ஒரு சர்வதேச தொடருக்கு நான்கு பெண் நடுவர்களை ஐ.சி.சி நியமிப்பது இதுவே முதல் முறையாகும். இவங்கதான் அந்த நாலு பேரு நியூசிலாந்தைச் சார்ந்த கேத்தி கிராஸ், ஆஸ்திரேலியாவின் க்ளேர் பொலோசக், இங்கிலாந்தின் சுயூ ரெட்ஃபெர்ன் மற்…

  12. 'சுழல் தமிழன்' அஸ்வினின் ஐம்பெரும் சாதனைகள்! அஸ்வின் | படம்: ஏ.எஃப்.பி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற 3வது டெஸ்டில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என தன்வசமாக்கியது. வெளிநாட்டு தொடர்களை கடந்த 9 ஆண்டுகளாக இழக்காமல் இருந்த வந்த தென் ஆப்பிரிக்க அணியின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆட்ட நாயகனாக 12 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் தேர்வானார். 2006-க்குப் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 15 தொடர்களை வென்றது. தற்போது முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு அஸ்வினின் பந்துவீச்சு முதன்மைக் காரணம். இத்துடன்…

  13. நவம்பர் 27 கிரிக்கெட்டின் கறுப்பு தினம்: இளம் வீரர் ஹியூக்ஸ் உயிரை பறித்த பந்து! அன்று வரை கிரிக்கெட் உலகின் பிரசித்தி பெற்ற மைதானமாக விளங்கியது சிட்னி கிரிக்கெட் மைதானம் அன்று வரையிலான அதன் வரலாறு, ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனையும் உற்சாகப்படுத்தியதாகவே இருந்தது. ஆனால், அந்நாள் அதன் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி வைத்தது. அது, நவம்பர் 27, 2014. பவுன்சர் பந்தால் தலையில் காயம்பட்டு சிகிச்சையில் இருந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் தனது ஆயுட்காளத்தை 25 ஆண்டுகளோடு நிறைவு செய்துகொண்ட தினம். இன்று. கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விளையாடுபவர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனின் கண்ணிலும் ஈரம் படர வைத்தது இத்துயர சம்பவம். தான் மிகவு…

  14. இந்திய பிட்ச்கள் மோசமானவையா? கொதிக்கும் ரசிகர்கள்! இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாக்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 215 ரன்களை சேர்த்தது. இந்த டெஸ்ட் தொடரில், ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவிக்கப்பட்டது நேற்றுதான். 215 ரன்கள் குவித்ததே சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா, நேற்று இரண்டு விக்கெட்டுகளை இழந்து 11 ரன்களை எடுத்திருந்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரையே அஸ்வினிடம் கொடுத்தார் கேப்டன் விராட் கோலி. இன்று முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் எல்கர் ஆட்டமிழந்தார். இதையடுத்து அடுத்தடுத்த ஓவர்களிலேயே…

  15. இலங்கை அணியில் நான்கு தமிழ் வீரர்கள் November 25, 2015 கெவின் பீற்றர்சன் கிரிக்கெட் பவுண்டேசனினால் நடத்தப்படும் துடுப்பாட்டத் தொடரில் பங்குபற்றும் இலங்கை அணியில் நான்கு தமிழ் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த தொடர் எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 3ஆம் திகதி வரை டுபாயில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான அணி நேற்று முன்தினம் டுபாய் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. நடப்பு வருடத்தில் வடமாகாணத்தில் இடம் பெற்ற முரளி கிண்ணத் தொடரில் சிறந்த பெறுபேற்று வெளிப்படுத்திய 12 வீரர்கள் ஒரு அணியாகத் தெரிவுசெய்யப்பட்டனர். இதில் வவுனியா மாவட்ட இணைந்த அணியில் விளையாடிய கிரிதரன், சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியில் விளையாடிய …

  16. 'பகலிரவு டெஸ்ட்'- எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் 6 விஷயங்கள்! உலகில் அதிகம் பேர் தொலைக்காட்சி வாயிலாக ரசிக்கும் விளையாட்டு எது தெரியுமா? கால்பந்து, டென்னிஸ் போட்டிகளுக்கு அடுத்ததாக கிரிக்கெட்தான். அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற பெரிய நாடுகள் இன்னும் கிரிக்கெட்டில் பெரிய அளவில் கால்பதிக்கவில்லை. ஆனால் உலகில் அதிக மக்கள் கிரிக்கெட் போட்டிகளை ரசிக்கின்றனர் என்கிறது புள்ளிவிவரங்கள். ஏனெனில் கிரிக்கெட் உடல் மற்றும் மனஉறுதி ஆகிய இரண்டையும் சோதிக்கும் அற்புத விளையாட்டு. எதிர்பார்க்கவே முடியாத பல ஆச்சர்யங்கள் கிரிக்கெட்டில் நிகழும். பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர், வார்னே, லாரா, காலிஸ், சேவாக், தோனி, டி வில்லியர்ஸ் என பல ஜாம்பவான்கள் கோலோச்சிய விளையாட்ட…

  17. 7 டெஸ்ட் கிரிக்கெட் நாடுகளுக்கு தலா 10 மில்லியன் டொலர்கள் பூரண அங்­கத்­துவ அந்­தஸ்­து­டைய ஏழு கிரிக்கெட் சபை­க­ளுக்கு அடுத்த எட்டு வரு­டங்­க­ளுக்கு மொத்­த­மாக 10 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) வழங்­க­வுள்­ளது. இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபை, இங்­கி­லாந்து கிரிக்கெட் சபை, கிரிக்கெட் அவுஸ்­தி­ரே­லியா நிறு­வனம் ஆகிய 'முப்­பெரும் சக்தி' கிரிக்கெட் ஆளுமை சபையை கடந்த வருடம் பொறுப்­பேற்­ற­போது இது குறித்த அறி­விப்பை விடுத்­தி­ருந்­தது. இந்த 'முப்­பெரும் சக்­திகளை விட பூரண அங்­கத்­துவம் பெற்ற மற்­றைய ஏழு நாடு­க­ளுக்கு அடுத்த வருடம் முதல்…

  18. மீண்டும் ஆட வாருங்கள் ஜோன்சனுக்கு அழைப்பு November 25, 2015 அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வேகப்புயல் மிட்சல் ஜோன்சனை, அணியின் முதன்மைப் பயிற்சியாளரான டரன் லேமன் மீண்டும் விளையாட அழைப்பு விடுத்துள்ளார். அவுஸ்ரேலிய அணியின் வேகப் புயல் மிட்சல் ஜோன்சன், எதிரணித் துடுப்பாட்டக்காரர்களைத் தனத் தனித்துவமான பந்து வீச்சால் அச்சுறுத்தி வந்தவர். இதனிடையே தமக்கு விளையாட்டின் மீது இருந்த ஈடுபாடு குறைந்து விட்டது என்ற காரணம் கூறி திடீரென அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்தார் மிட்சல் ஜோன்சன். ஆனால் ஸ்டார்க், ஹசல் வுட் போன்ற அனுபவமில்லாத வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் ஆஸ்திரேலிய அணி தீவிர ஆலோசனையில் உள்ளது. இதனையடுத்து, மிட்சல் ஜோன்சனைத்…

  19. இலங்கை எறிபந்து அணியில் முதல் முறை தமிழ் வீரர்கள் November 25, 2015 இலங்கை எறிபந்து அணியில் 19 வயது ஆண்கள் பிரிவில் ஆர்.பிரவீன், பெண்கள் பிரிவில் பி.கிருத்திகா, கே.சபரி சாமிகா ஆகியோர் டிசெம்பர் 27ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதிவரை மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றவுள்ளனர். இதேபோன்று இன்று புதன்கிழமை மலேசியாவில் நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை கலிலியா கிறசன் கழகம் சார்பாக என்.திவ்வியநாத், எஸ். தரன், எஸ்.அபிநயன், பி.சாருஜன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எறிபந்துப் போட்டியில் தமிழ் வீரர்கள் கலந்து கொள்வது இதுவே முதல் முறை ஆகும். http://www.onlineuthayan.com/sports/?p=3940&cat=3

  20. ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டுக்கு இடமளிக்கப்படுமா? சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சாட்சன் சமீபத்தில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.சி.சி) தலைவரை சந்தித்து பேசினார். அப்போது ஒலிம்பிக் போட்டியில் 20 பேர் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார். இதுபற்றி ‘‘ரிச்சாட்சன் கூறும்போது, ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுவதற்காக சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு ஐ.ஓ.சி. தலைவரிடம் கேட்டுக் கொண்டேன். 2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தேன். கிரிக்கெட் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அவ்வளவு எளிது அல்ல’’ என்றார். …

  21. சோதனைகளில் சாதித்த இம்ரான் கான் - சிறப்பு பகிர்வு.. உலகக்கோப்பையில் ஆசிய அணிகளின் ஆதிக்கத்தை கபில் தேவ் துவங்கி வைத்தார் என்றால் அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர் இம்ரான் கான். அவரின் பிறந்த தினம் நவம்பர் 25. 92 ஆம் வருடம் உலககோப்பையை பாகிஸ்தான் அணி வென்றதே எதோ ஒரு தேவதைக்கதை போல மாயங்களும்,அதிர்ஷ்டங்களும்,அற்புதமான சுவாரசியங்களும் நிரம்பியது. இம்ரான் கான் தான் அணியின் தலைவர். அம்மாவுக்கு கேன்சர் வந்து இறந்து போயிருக்க அவரைப்போல துன்பப்படும் எண்ணற்ற பிரஜைகளுக்கு உதவும் மருத்துவமனையை கட்டிக்கொண்டு இருந்தார் அதற்கு பணம் தேவைப்பட்டது. நாற்பது வயதில் அணியின் கேப்டனாக அந்த ஆசையோடு பொறுப்பேற்றுக்கொண்டார். வேகப்புயல் வக்கார் யூனிஸ் போட்டிக்கு சில வாரங்கள…

  22. பிளட்டர், பிளட்டினிக்கு 7 வருடத் தடை? இடைக்காலத் தடைக்குள்ளாக்கப்பட்டு உள்ளவர்களான, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவரான செப் பிளட்டருக்கும் ஐரோப்பிய கால்பந்தட்டாச் சங்கங்களின் ஒன்றியத் தலைவர் மைக்கல் பிளட்டினிக்கும், ஏழு வருடத் தடை விதிக்கப்படலாமெனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களிருவரின் மேலும் விதிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டாலேயே, இந்தத் தண்டனை வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. பிளட்டரின் ஆலோசகராக 2002ஆம் ஆண்டில் செயற்பட்டமைக்காக, 2011ஆம் ஆண்டில் பிளட்டினிக்கு வழங்கப்பட்ட 1.35 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்கள் தொடர்பாகவே, அவர்களுக்கெதிரான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆலோசனைப் பணிக்கா…

  23. ரியல் மெட்ரிட் பயிற்றுநரை நீக்காவிட்டால் தான் விலகப்போவதாக ரொனால்டோ எச்சரிக்கை! ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழ­கத்­தி­லி­ருந்து பயிற்­றுநர் ரபாயெல் பெனிட்­டஸை நீக்க வேண்டும் எனவும் இல்­லா­விட்டால் அக்­க­ழ­கத்­தி­லி­ருந்து தான் வில­கப்­போ­வ­தா­கவும் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ எச்­ச­ரித்­துள்ளார் என தகவல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. போர்த்­துக்கல் வீரரான கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ (30) 2009 ஆம் ஆண்டு முதல் ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழ­கத்தில் விளை­யாடி வரு­கிறார். ஆனால், கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற லா லீகா போட்­டியில் ரியல் மெட்ரிட் கழ­கத்தை பார்ஸிலோனா கழகம் 4:0 கோல்­களால் வென்­றது. இத்­தோல்­வி­யினால், லா லீ…

  24. 19 வயதின்கீழ் இலங்கை குழாமில் சனோகீத் சண்முகநாதன் பத்­தொன்­பது வய­துக்­குட்­பட்ட இலங்கை கிரிக்கெட் குழாமில் கண்டி திரித்­துவ கல்­லூரி சக­ல­துறை வீரர் ஷனோகீத் சண்­மு­க­நாதன் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார். துடுப்­பாட்­டத்­திலும் சுழல்­பந்­து­வீச்­சிலும் சிறந்து விளங்கும் இவ­ருக்கு கிரிக்கெட் விளை­யாட்­டுத்­து­றையில் பிர­கா­ச­மான எதிர்­காலம் இருப்­ப­தாக கிரிக்கெட் விமர்­ச­கர்கள் கூறு­கின்­றனர். இங்­கி­லாந்து, இந்­தியா, இலங்கை ஆகிய நாடு­களின் 19 வய­துக்­குட்­பட்ட அணி­க­ளுக்கு இடையில் அடுத்த மாதம் 11ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் கிரிக்கெட் மும்­முனை தொடரை முன்­னிட்டு இலங்க…

  25. வெளிநாட்டுக்கு கிரிக்கெட் வீரர்கள் ஏற்றுமதியை தொடங்கியது சீனா! விளையாட்டுத்துறையில் சீனா கொடி கட்டி பறக்கும் நாடு. ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டிகளில் சீனாவின் ஆதிக்கம்தான் மேலோங்கியிருக்கும். ஜிம்னாஸ்டிக் , பளுதூக்குதல் போன்ற பிரிவுகளில் சீன வீரர்- வீராங்கனைகளை அடித்துக் கொள்ள முடியாது. ஆனால் அந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடையாது. இந்தியாவின் அண்டைநாடாக இருந்த போதிலும், சீனர்கள் கால்பந்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கிரிக்கெட்டுக்கு கொடுப்பது இல்லை. ஹாங்காங் உள்ளிட்ட சில நகரங்களில் கிரிக்கெட் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது உண்டு. அந்த வகையில் முதல்முறையாக சீனாவை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.