விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
'யூரோவை ரத்து செய்தால், தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகி விடும்'- ஃபிரான்ஸ் கருத்து ஃபிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியை ரத்து செய்தால் அது தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகி விடும் என்று போட்டியை நடத்தும் குழு கருத்து தெரிவித்துள்ளது. ஃபிரான்ஸில் அடுத்த ஜுன் 10 முதல் ஜுலை 10-ம் தேதி வரை, ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் முதன் முறையாக 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. போட்டிக்காக முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தலைநகர் பாரிஸில் உள்ள ஸ்டேட் டி ஃபிரான்ஸ், பார்க் டி பிரின்ஸஸ் , மைதானங்களிலும் மார்செலி, லில்லி,போர்டியாக்ஸ், லியோன், நீஸ், லென்ஸ் உள்ளிட்ட நகரங்களில் என ம…
-
- 0 replies
- 206 views
-
-
மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி மிட்செல் ஸ்டார்க் சாதனை! ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதன் முறையாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்துள்ளார். பெர்த் நகரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் அவர் இத்தகைய மைல் கல்லை எட்டினார். 21வது ஓவரில் 4வது பந்தை ஸ்டார்க் 160.4 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசினார். இந்த யாக்கர் பந்தை நியூசிலாந்து பேட்ஸ்மேன் ராஸ் டெயிலர் எதிர் கொண்டார். இதற்கு முன், சர்வதேச அளவில் 4 பந்துவீச்சாளர்கள் மட்டும்தான் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசியுள்ளனர். கட…
-
- 2 replies
- 494 views
-
-
பாரிஸ் குண்டுத் தாக்குதல்களினால் ஃபீஃபா பதில் தலைவர் அதிர்ச்சி பாரிஸ் நகரிலும் ஸ்டேட் டி ஃப்ரான்ஸ் விளையாட்டரங்கை சூழவுள்ள பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களையிட்டு பெரும் அதிர்ச்சி அடைவதாக சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனத்தின் (ஃபீஃபா) பதில் தலைவர் ஈசா ஹயாட்டூ தெரிவித்துள்ளார். பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். பிரான்ஸ் அணிக்கும் ஜேர்மனி அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கையில் இந்தத் தாக்குதல்கள்…
-
- 0 replies
- 260 views
-
-
எலைட் சம்பியன்ஷிப்’ என்ற புதிய பெயரில் மூவகை முதல் தர உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் முதல் தர கிரிக்கெட் விளையாட்டுத்துறையின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் மூவகை ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் எலைட் சம்பியன்ஷிப் போட்டிகள் என அழைக்கப்படவுள்ளன. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்களுடான சந்திப்பின்போது இந்தத் தகவலை இடைக்கால நிருவாக சபைத் தலைவர் சிதத் வெத்தமுனி தெரிவித்தார். கொழும்பை பிரதான இடமாகக் கொண்டு விளையாடப்பட்டு வரும் கிரிக்கெட் விளையாட்டுத்துறை நாட்டின் சகல பாகங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் …
-
- 0 replies
- 312 views
-
-
யுஏஇ-யில் ஆடுவதில் என்ன பிரச்சினை?: பிசிசிஐ-க்கு பாக். கிரிக்கெட் வாரியம் கேள்வி கோப்புப் படம்: ஏ.பி. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவில் வந்து விளையாட பிசிசிஐ தலைவர் ஷஷாங்க் மனோகர் விடுத்த அழைப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கவில்லை. “இந்தியாவில் விளையாடும் பேச்சுக்கே இடமில்லை” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஷஹார்யார் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். “ஏன் யுஏஇ-யில் ஆட முடியாது என்ற காரணத்துக்காக நான் இன்னும் காத்திருக்கிறேன். நாங்கள் 2007 மற்றும் 2012-ல் இந்தியா சென்று விளையாடினோம், மீண்டும் முடியவே முடியாது. இது எங்கள் தொடர் எனவே எங்கள் நாட்டில்தான் விளையாடுவோம், அதாவது யுஏஇ-யில் தான் விளையாடுவோம். …
-
- 0 replies
- 352 views
-
-
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபல்யப்படுத்த சர்வதேச கிரிக்கெட் முன்னை நாள் நட்சத்திரங்கள் பங்குபற்றும் Cricket All Stars கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நாளை இரவு 9.30க்கு - அணிகளின் விபரங்கள்
-
- 16 replies
- 497 views
-
-
இந்த 11 காரணங்களுக்காகவே.. ஆல்ஸ்டார்ஸ் கிரிக்கெட் அடிக்கடி நடக்கணும்! 1. 30 ஸ்டார்கள்! கிட்டத்தட்ட இன்றைய தலைமுறை கிரிக்கெட் பார்க்க துவங்கிய நாட்களில் கிரிக்கெட்டில் கில்லிகள் என்றால் இவர்கள் தான் என கூறப்பட்ட 30 பேர்களும் ஒரே அணியில் என்ற செய்தியே போதும் இந்த போட்டியை ரசிக்க. அதனை தாண்டி ஐபிஎல், பிக் பேஷ் போட்டிகளில் வெளிநாட்டு வீரர் இந்திய வீரருக்கு பந்து வீசுவது. வார்னே பந்தில் சச்சின் சிக்ஸ் அடிப்பது என்பதை பார்த்திருந்தாலும். லாரா, ஆம்ப்ரோஸ், வால்ஷ் போன்ற வீரர்களின் க்ளாஸிக் ஆட்டத்தை மீண்டும் பார்ப்பது டைம் மிஷின் ட்ரீட் தான்! 2.சச்சின் - கங்குலி - சேவாக் சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி மூன்று ஆட்டங்களில் தோற்றிருந்தாலும் சச்சிந்சேவக்-கங்குலி மூன்ற…
-
- 0 replies
- 519 views
-
-
உமர் அக்மல் கைது November 15, 2015 சொகுசு பங்களாவில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் உமர் அக்மல் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான உமர் அக்மல், கைதராபாத் நகரில் உள்ள சொகுசு பங்களாவில் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகத் தெரிகிறது. உடனடியாக இது குறித்து பங்களாவிற்கு அருகில் வசிப்பவர்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது உமர் அக்மலுன் அங்கிருந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள உமர் அக்மல், அவர்கள் நண்பர்கள் என்றும் விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்ததன் பேரிலே சென்றதாகவும் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 321 views
-
-
சானியா நம்பர் ஒன் ஆனது எப்படி ? - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு இன்றைய தேதியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் டென்னிஸ் உலக தரவரிசைபட்டியலில் முதலிடம் இருப்பது யார் என உங்களுக்கு தெரியுமா? சானியா மிர்சா தான். கிரிக்கெட்டுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்தத்துவம் எப்போதுமே மற்ற விளையாட்டுகளுக்கு கொடுப்பதே இல்லை, அதனால் சானியாவின் சாதனை பலருக்கு தெரியாமல் போயிருக்கலாம். ரோஹித் ஷர்மா 264 ரன்கள் அடித்தால் கொண்டாடும் நாம், டென்னிஸ் உலகத்தில் நம்பர் ஒன் வீரராக இருப்பவரை கொண்டாடியிருக்க வேண்டாமா? சானியா எளிதில் முதலிடத்தை பிடிக்கவில்லை இதற்கு பின்னர் 20 ஆண்டுகால உழைப்பு இருக்கிறது. சர்ச்சைகளை உடைத்தது தடைகளை தகர்த்து சானியா எப்படி நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் என பார்…
-
- 0 replies
- 368 views
-
-
காயம் காரணமாக சர்கர் விலகல் November 07, 2015 சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் பங்களாதேஸ் அணியின் நட்சத்திர வீரரான சர்கர். நடப்பு வருடத்தில் இதுவரை 672 ஓட்டங்களை குவித்துள்ள சர்கர் இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளை பங்களாதேஸ் வீழ்த்த முக்கிய காரணமாக திகழ்ந்தவர். தற்போழுது சிம்பாப்வே அணி பங்களாதேஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் இரண்டு ரி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. ஒருநாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகிறது. இதற்காக சர்கர் நேற்றுமுன்தினம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பந்து வீசி பயிற்சி எடுக்கும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்காக அவர் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுக…
-
- 6 replies
- 998 views
-
-
பிபா தலைவர் தேர்தல் பிளாட்டினிக்கு மறுப்பு November 14, 2015 சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (பிபா) தலைவருக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதப்பகதியில் நடைபெறவுள்ள நிலையில், குறித்த தலைமைப் பதவிக்கான வேட்பாளர்களில் ஒரவரான பிளாட்டினியின் விண்ணப்பம் பிபாவால் நிராகரிக்கப்பட்டுள்ளது. பிபா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊழலில் சிக்கி தவித்தது. இந்த ஊழல் தொடர்பாக அமைப்பின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அதன் தலைவரான செப் பிளாட்டரும் சங்கடத்திற்கு உள்ளானார். ஆனால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மீறி சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற தேர்தலில் 5ஆவது முறையாக வெற்றி பெற்றார். ஆனால், பிபா தலைவர் பதவியில் இருந்து பிளாட்டர் விலக வேண்டும் என்று …
-
- 0 replies
- 317 views
-
-
ரஷ்ய தடகள சம்மேளனம் சர்வதேசப் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்து பயன்பாட்டை ரஷ்யா தடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டுகள் ஊக்க மருந்து பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது. லண்டனிலிருந்து தொலைக்காட்சி வழியாக நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய தடகள வீரர்கள் பங்கேற்க முடியாது. மேலும் எவ்விதமான சர்வதேச தடகளப் போட்டிகளையும் ரஷ்யா நடத்த முடியாது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய தடகள வீரர்கள் பங்கேற இயலாது ஊக்க ம…
-
- 0 replies
- 183 views
-
-
தீவிரவாதிகள் தாக்குதல்: 80 ஆயிரம் கால்பந்து ரசிகர்கள் தப்பியது எப்படி? பாரிஸில் கால்பந்து போட்டி நடந்த ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நெரிசல் ஏற்பட்டிருந்தால், ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் இறந்து போயிருப்பார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. நேற்று 7 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில், 153 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே மற்றோரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாரிஸின் அடையாளங்களுள் ஒன்றாக கருதப்படும் ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நேற்று உலகச் சாம்பியன் ஜெர்மனி அணியுடன் பிரான்ஸ் அணி நட்பு முறையிலான கால்பந்து போட்டியில் விளையாடிக…
-
- 0 replies
- 185 views
-
-
டி வில்லியர்ஸ் ஒரு ஏலியனா? - சிறப்பு பதிவு தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் இன்று பெங்களூருவில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 100வது ஆட்டம் ஆகும். எந்த நாட்டை சேர்ந்த ரசிகராக இருந்தாலும் அவர்களுக்கு டி வில்லியர்சை பிடிக்கும். யாராலும வெறுக்க முடியாத கிரிக்கெட்டரும் கூட. அதானல்தான் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று டி வில்லியர்ஸ் மைதானத்திற்குள் வந்த போது, அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று வரவேற்பளித்ததை காண முடிந்தது. ஏம்பா அவன் மனுசனே இல்லப்பா..அப்டிங்கற வார்த்தைய இப்போ மீண்டும் கேட்க முடிகிறது. ஆனால் உண்மையிலேயே இந்த தென்ஆப்ரிக்க கேப்டன் தன்னலமற்ற அற்புதமான கிரிக்கெட் வீரன்தான்...அதற்கான காரணங்களை அடுக்கின…
-
- 0 replies
- 425 views
-
-
சச்சின் டெண்டுல்கரிடம் முழுப்பெயரை கேட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்: ரசிகர்கள் கொந்தளிப்பு சச்சின் டெண்டுல்கர். | படம்: ராய்ட்டர்ஸ். சச்சின் டெண்டுல்கர் குடும்பத்தினர்களுக்கு இருக்கைகள் மறுக்கப்பட்டது மற்றும் அவரது லக்கேஜை தவறாக வேறு இடத்துக்கு அனுப்பியது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் ஆவேசமாக கருத்தைப் பதிவு செய்ய சச்சினுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்துள்ளனர். அமெரிக்காவில் ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட்டுக்காக சச்சின் சென்றுள்ள நிலையில், அவரது குடும்பத்தினரின் பயண நெருக்கடி பற்றி கோபமாக சச்சின் ட்வீட் செய்தார்: “எனது குடும்ப உறுப்பினர்களின் வெய்ட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் உறுதி…
-
- 1 reply
- 284 views
-
-
பிரபல நடிகையை மணக்கும் யுவராஜ்? ரெய்னா, ஹர்பஜன் சிங்கை அடுத்து யுவராஜ் சிங்கும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 33 வயதான யுவராஜ் சிங், இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்ட நடிகை மற்றும் மாடல் அழகி ஹேஷல் கீச்சை வரும் பெப்ரவரி மாதம் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே யுவராஜும் ஹேசல் கீச்சும் நெருக்கமாக பழகி வந்தனர். சமீபத்தில் நடைபெற்ற ஹர்பஜன் சிங் வரவேற்பில் யுவராஜ்-ஹேசல் கீச் ஜோடியாக வந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=74134
-
- 4 replies
- 1.9k views
-
-
இந்தியாவில் விளையாடலாம்; ஆனால், வருவாய் யாருக்கு?- அப்ரீடி கேள்வி ஷாகித் அப்ரீடி. | கோப்புப் படம். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை இந்தியாவில் நடத்தலாம் என்று பிசிசிஐ விருப்பம் தெரிவித்ததாக எழுந்த ஊடகச் செய்திகளை அடுத்து பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரீடி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திலோ அல்லது பாகிஸ்தானிலோ விளையாடும் சாத்தியமில்லை என்று பிசிசிஐ நேற்று தெளிவாகக் கூறியிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் விளையாடினால் 50-50 வருவாய் பகிர்வுக்கான உத்தரவாதம் இருந்தால் விளையாடலாம் என்று அப்ரீடி கருத்து தெரிவித்துள்ளார். ஜியோ சூப்பர் சானலில் அவர் கூறியதாவது: இந்தியாவுக்குச் செ…
-
- 0 replies
- 279 views
-
-
அறிவிக்கப்பட்டது இலங்கை அணி October 24, 2015 மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் மூன்று அறிமுக வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர் செகான் ஜெயசூரிய, சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வண் டர்சே மற்றும் சகலதுறை வீரர் தனுக குணதிலக ஆகியோரே அறிமுக வீரர்களாக களமிறங்க உள்ளனர். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 2 ரி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நவம்பர் மாதம் 1ஆம் திகதி ஆரம்பமாகிறது. மூன்று அறிமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளமை மாத்திரம் இன்றி மலிங்க. டில்சான் ஆகிய அனுபவ வீரர்களும் அணிக்கு திரும்புகின்றனர். டெஸ்ட் தொடரில் தடுமா…
-
- 40 replies
- 2.6k views
-
-
ஓய்வுபெறுவது குறித்துச் சிந்திக்கிறேன்: ஜோன்சன் கிரிக்கெட் வாழ்வில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஜோன்சன், ஒவ்வொரு போட்டியுமே தனது இறுதி டெஸ்ட் போட்டியாக அமையுமென்ற எண்ணம் காணப்படுவதாக ஒத்துக் கொண்டுள்ளார். 34 வயதான மிற்சல் ஜோன்சன், இங்கிலாந்தில் இடம்பெற்ற ஆஷஸ் தொடருடன் ஓய்வுபெறுவது பற்றிச் சிந்தித்திருந்ததை ஏற்றுக் கொண்டிருந்தார். குறிப்பாக, மைக்கல் கிளார்க், பிரட் ஹடின், ஷேன் வொற்சன், றயன் ஹரிஸ், கிறிஸ் றொஜர்ஸ் ஆகியோர் ஓய்வுபெற்ற நிலையில், அந்த எண்ணம் அதிகரித்ததாகத் தெரிவித்திருந்தார். எனினும், தொடர்ந்தும் விளையாடிவரும் ஜோன்சன், நியூசிலாந்துக்கெதிராக பிறிஸ்பேணில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி…
-
- 0 replies
- 207 views
-
-
மீண்டும் பில் சிமன்ஸ் முடிவடைந்த மேற்கிந்திய தீவுகள், இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான மேற்கிந்திய தீவுகளின் குழாம் தேர்வு செய்யப்பட்டிருந்தமை குறித்து, தனது மகிழ்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்தியதன் காரணமாக, மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த பில் சிமன்ஸ், மீண்டும் மேற்கிந்திய தீவுகளின் பயிற்சியாளராக மேற்கிந்திய கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் பில் சிமோன்ஸ் பொது வெளியில் தெரிவித்த முறையற்ற கருத்துகளுக்கு, அவருக்கு வழங்கப்பட எச்சரிக்கையுடன் கூடிய கடிதம், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையிடமும் அவரால் குற்றஞ்சாசாட்டப்பட்டவர்கள் என நம்பப்படுபவர்க…
-
- 0 replies
- 253 views
-
-
ஒருநாள் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றார் யூனிஸ் கான் இங்கிலாந்துக்கு எதிராக புதன் அன்று நடைபெறும் ஒருநாள் போட்டியே கடைசி போட்டி. யூனிஸ் கான் ஓய்வு. | படம்: ஏ.பி. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் அறிவித்துள்ளார். இன்று (புதன்) அபுதாபியில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியே தனது கடைசி ஒருநாள் போட்டி என்று பாகிஸ்தான் மூத்த வீரர் யூனிஸ் கான் அறிவித்துள்ளார். இந்த பகலிரவுப் போட்டியில் விளையாடுவதோடு தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்வை முடித்துக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். “டி20 மற்று ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை விளையாடும்போதே எ…
-
- 0 replies
- 231 views
-
-
பந்துகள் அதிவேகத்துடன் எகிறும் பிட்ச்: பெர்த்தில் தயாரிப்பு பெர்த் மைதானம். | படம்: கெட்டி உலகின் அதிவேக பிட்ச் என்று கருதப்படும் பெர்த் இடையில் சில காலங்கள் அதன் மரபான வேகத்தையும், எகிறு பந்தையும் இழந்திருந்தது. ஆனால் தற்போது நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கு பழைய அதிவேக பிட்ச் பெர்த்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடைசியாக பெர்த்தில் நடைபெற்ற 8 டெஸ்ட் போட்டிகளிலும் முடிவு தெரிந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா 5 போட்டிகளில் வென்றுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நியூஸிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா மோதும் 2-வது டெஸ்ட் போட்டிக்காக பழைய அதிவேக பெர்த் பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மைதானத்தின் பிட்…
-
- 0 replies
- 280 views
-
-
பங்களாதேஷ் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டி 16 ஒப்பந்த வீரர்களுக்கு அனுமதி இல்லை? பங்களாதேஷ் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு மத்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள 16 இலங்கை வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. மாறாக இங்கு நடைபெறவுள்ள ப்றீமியர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் விளையாடுமாறு குறிப்பிட்ட வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயற்பாட்டு அதிகாரி கார்ல்டன் பேர்னாடஸ் குறிப்பிட்டுள்ளார். பங்களாதேஷ் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகும் அதே …
-
- 0 replies
- 186 views
-
-
நெய்மர், சுவாரஸின் ஆட்டத்தால் வில்லாரியலை வீழ்த்தியது பார்சிலோனா பார்சிலோனா அணியில் கடந்த சில வாரங்களாக லயனல் மெஸ்ஸி காயம் காரணமாக விளையாடாமல் உள்ளார். ஆனால், அவர் இல்லாத குறையை நெய்மர் மற்றும் சுவாரஸ் ஆகியோர் சிறப்பான முறையில் சரிசெய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-ஆவது பாதி நேரத்தில் 60-ஆவது நிமிடத்தில் நெய்மர் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 10ஆ-வது நிமிடத்தில் சுவாரஸ் ஒரு கோல் அடித்து அசத்தினார். 85ஆ-வது நிமிடத்தில் நெய்மர் மேலும் ஒரு கோல் அடிக்க, பார்சிலோனா …
-
- 0 replies
- 190 views
-
-
ரஹானேவுக்கு ரூ.1 கோடி சம்பளம்: ரெய்னா, புவனேஷ்வர் குமாருக்கு பாதியாக குறைந்தது அஜிங்க்ய ரஹானே இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஒவ்வொரு ஆண்டும் வீரர்களை அவர்களின் தகுதி நிலைக்கு ஏற்ப 3 பிரிவுகளாக ஒப்பந்தம் செய்யும். இதன்படி 2015-2016ம் ஆண்டுக்காக வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி அஜிங்க்ய ரஹானே ஏ பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். ரஹானே தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணி ஜிம்பாப்வே தொடரை வென்றிருந்தது. மேலும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். இதே பிரிவில் தோனி…
-
- 1 reply
- 318 views
-