விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
பிபா தலைவர் தேர்தல் பிளாட்டினிக்கு மறுப்பு November 14, 2015 சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (பிபா) தலைவருக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதப்பகதியில் நடைபெறவுள்ள நிலையில், குறித்த தலைமைப் பதவிக்கான வேட்பாளர்களில் ஒரவரான பிளாட்டினியின் விண்ணப்பம் பிபாவால் நிராகரிக்கப்பட்டுள்ளது. பிபா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊழலில் சிக்கி தவித்தது. இந்த ஊழல் தொடர்பாக அமைப்பின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அதன் தலைவரான செப் பிளாட்டரும் சங்கடத்திற்கு உள்ளானார். ஆனால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மீறி சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற தேர்தலில் 5ஆவது முறையாக வெற்றி பெற்றார். ஆனால், பிபா தலைவர் பதவியில் இருந்து பிளாட்டர் விலக வேண்டும் என்று …
-
- 0 replies
- 317 views
-
-
ரஷ்ய தடகள சம்மேளனம் சர்வதேசப் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்து பயன்பாட்டை ரஷ்யா தடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டுகள் ஊக்க மருந்து பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது. லண்டனிலிருந்து தொலைக்காட்சி வழியாக நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய தடகள வீரர்கள் பங்கேற்க முடியாது. மேலும் எவ்விதமான சர்வதேச தடகளப் போட்டிகளையும் ரஷ்யா நடத்த முடியாது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய தடகள வீரர்கள் பங்கேற இயலாது ஊக்க ம…
-
- 0 replies
- 183 views
-
-
தீவிரவாதிகள் தாக்குதல்: 80 ஆயிரம் கால்பந்து ரசிகர்கள் தப்பியது எப்படி? பாரிஸில் கால்பந்து போட்டி நடந்த ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நெரிசல் ஏற்பட்டிருந்தால், ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் இறந்து போயிருப்பார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. நேற்று 7 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில், 153 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே மற்றோரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாரிஸின் அடையாளங்களுள் ஒன்றாக கருதப்படும் ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நேற்று உலகச் சாம்பியன் ஜெர்மனி அணியுடன் பிரான்ஸ் அணி நட்பு முறையிலான கால்பந்து போட்டியில் விளையாடிக…
-
- 0 replies
- 185 views
-
-
டி வில்லியர்ஸ் ஒரு ஏலியனா? - சிறப்பு பதிவு தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் இன்று பெங்களூருவில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 100வது ஆட்டம் ஆகும். எந்த நாட்டை சேர்ந்த ரசிகராக இருந்தாலும் அவர்களுக்கு டி வில்லியர்சை பிடிக்கும். யாராலும வெறுக்க முடியாத கிரிக்கெட்டரும் கூட. அதானல்தான் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று டி வில்லியர்ஸ் மைதானத்திற்குள் வந்த போது, அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று வரவேற்பளித்ததை காண முடிந்தது. ஏம்பா அவன் மனுசனே இல்லப்பா..அப்டிங்கற வார்த்தைய இப்போ மீண்டும் கேட்க முடிகிறது. ஆனால் உண்மையிலேயே இந்த தென்ஆப்ரிக்க கேப்டன் தன்னலமற்ற அற்புதமான கிரிக்கெட் வீரன்தான்...அதற்கான காரணங்களை அடுக்கின…
-
- 0 replies
- 425 views
-
-
சச்சின் டெண்டுல்கரிடம் முழுப்பெயரை கேட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்: ரசிகர்கள் கொந்தளிப்பு சச்சின் டெண்டுல்கர். | படம்: ராய்ட்டர்ஸ். சச்சின் டெண்டுல்கர் குடும்பத்தினர்களுக்கு இருக்கைகள் மறுக்கப்பட்டது மற்றும் அவரது லக்கேஜை தவறாக வேறு இடத்துக்கு அனுப்பியது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் ஆவேசமாக கருத்தைப் பதிவு செய்ய சச்சினுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்துள்ளனர். அமெரிக்காவில் ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட்டுக்காக சச்சின் சென்றுள்ள நிலையில், அவரது குடும்பத்தினரின் பயண நெருக்கடி பற்றி கோபமாக சச்சின் ட்வீட் செய்தார்: “எனது குடும்ப உறுப்பினர்களின் வெய்ட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் உறுதி…
-
- 1 reply
- 285 views
-
-
பீல்டிங், பந்து வீச்சு அபாரம்; ஹபீஸ் சதம்: இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் பாகிஸ்தான் வெற்றியில் சதம் கண்ட ஆட்ட நாயகன் ஹபீஸ் ஸ்வீப் ஆடும் காட்சி. | படம்: ஏ.எப்.பி. ஆக்ரோஷமாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மொகமது இர்பான். | படம்: ஏ.எப்.பி. அபுதாபியில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 216 ரன்களுக்கு இங்கிலாந்தை சுருட்டி பிறகு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 217 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது பாகிஸ்தான். பாகிஸ்தான் வெற…
-
- 5 replies
- 751 views
-
-
இந்தியாவில் விளையாடலாம்; ஆனால், வருவாய் யாருக்கு?- அப்ரீடி கேள்வி ஷாகித் அப்ரீடி. | கோப்புப் படம். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை இந்தியாவில் நடத்தலாம் என்று பிசிசிஐ விருப்பம் தெரிவித்ததாக எழுந்த ஊடகச் செய்திகளை அடுத்து பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரீடி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திலோ அல்லது பாகிஸ்தானிலோ விளையாடும் சாத்தியமில்லை என்று பிசிசிஐ நேற்று தெளிவாகக் கூறியிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் விளையாடினால் 50-50 வருவாய் பகிர்வுக்கான உத்தரவாதம் இருந்தால் விளையாடலாம் என்று அப்ரீடி கருத்து தெரிவித்துள்ளார். ஜியோ சூப்பர் சானலில் அவர் கூறியதாவது: இந்தியாவுக்குச் செ…
-
- 0 replies
- 280 views
-
-
ஓய்வுபெறுவது குறித்துச் சிந்திக்கிறேன்: ஜோன்சன் கிரிக்கெட் வாழ்வில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஜோன்சன், ஒவ்வொரு போட்டியுமே தனது இறுதி டெஸ்ட் போட்டியாக அமையுமென்ற எண்ணம் காணப்படுவதாக ஒத்துக் கொண்டுள்ளார். 34 வயதான மிற்சல் ஜோன்சன், இங்கிலாந்தில் இடம்பெற்ற ஆஷஸ் தொடருடன் ஓய்வுபெறுவது பற்றிச் சிந்தித்திருந்ததை ஏற்றுக் கொண்டிருந்தார். குறிப்பாக, மைக்கல் கிளார்க், பிரட் ஹடின், ஷேன் வொற்சன், றயன் ஹரிஸ், கிறிஸ் றொஜர்ஸ் ஆகியோர் ஓய்வுபெற்ற நிலையில், அந்த எண்ணம் அதிகரித்ததாகத் தெரிவித்திருந்தார். எனினும், தொடர்ந்தும் விளையாடிவரும் ஜோன்சன், நியூசிலாந்துக்கெதிராக பிறிஸ்பேணில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி…
-
- 0 replies
- 208 views
-
-
மீண்டும் பில் சிமன்ஸ் முடிவடைந்த மேற்கிந்திய தீவுகள், இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான மேற்கிந்திய தீவுகளின் குழாம் தேர்வு செய்யப்பட்டிருந்தமை குறித்து, தனது மகிழ்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்தியதன் காரணமாக, மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த பில் சிமன்ஸ், மீண்டும் மேற்கிந்திய தீவுகளின் பயிற்சியாளராக மேற்கிந்திய கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் பில் சிமோன்ஸ் பொது வெளியில் தெரிவித்த முறையற்ற கருத்துகளுக்கு, அவருக்கு வழங்கப்பட எச்சரிக்கையுடன் கூடிய கடிதம், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையிடமும் அவரால் குற்றஞ்சாசாட்டப்பட்டவர்கள் என நம்பப்படுபவர்க…
-
- 0 replies
- 253 views
-
-
ஒருநாள் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றார் யூனிஸ் கான் இங்கிலாந்துக்கு எதிராக புதன் அன்று நடைபெறும் ஒருநாள் போட்டியே கடைசி போட்டி. யூனிஸ் கான் ஓய்வு. | படம்: ஏ.பி. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் அறிவித்துள்ளார். இன்று (புதன்) அபுதாபியில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியே தனது கடைசி ஒருநாள் போட்டி என்று பாகிஸ்தான் மூத்த வீரர் யூனிஸ் கான் அறிவித்துள்ளார். இந்த பகலிரவுப் போட்டியில் விளையாடுவதோடு தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்வை முடித்துக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். “டி20 மற்று ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை விளையாடும்போதே எ…
-
- 0 replies
- 232 views
-
-
பந்துகள் அதிவேகத்துடன் எகிறும் பிட்ச்: பெர்த்தில் தயாரிப்பு பெர்த் மைதானம். | படம்: கெட்டி உலகின் அதிவேக பிட்ச் என்று கருதப்படும் பெர்த் இடையில் சில காலங்கள் அதன் மரபான வேகத்தையும், எகிறு பந்தையும் இழந்திருந்தது. ஆனால் தற்போது நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கு பழைய அதிவேக பிட்ச் பெர்த்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடைசியாக பெர்த்தில் நடைபெற்ற 8 டெஸ்ட் போட்டிகளிலும் முடிவு தெரிந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா 5 போட்டிகளில் வென்றுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நியூஸிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா மோதும் 2-வது டெஸ்ட் போட்டிக்காக பழைய அதிவேக பெர்த் பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மைதானத்தின் பிட்…
-
- 0 replies
- 281 views
-
-
பங்களாதேஷ் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டி 16 ஒப்பந்த வீரர்களுக்கு அனுமதி இல்லை? பங்களாதேஷ் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு மத்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள 16 இலங்கை வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. மாறாக இங்கு நடைபெறவுள்ள ப்றீமியர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் விளையாடுமாறு குறிப்பிட்ட வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயற்பாட்டு அதிகாரி கார்ல்டன் பேர்னாடஸ் குறிப்பிட்டுள்ளார். பங்களாதேஷ் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகும் அதே …
-
- 0 replies
- 187 views
-
-
நெய்மர், சுவாரஸின் ஆட்டத்தால் வில்லாரியலை வீழ்த்தியது பார்சிலோனா பார்சிலோனா அணியில் கடந்த சில வாரங்களாக லயனல் மெஸ்ஸி காயம் காரணமாக விளையாடாமல் உள்ளார். ஆனால், அவர் இல்லாத குறையை நெய்மர் மற்றும் சுவாரஸ் ஆகியோர் சிறப்பான முறையில் சரிசெய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-ஆவது பாதி நேரத்தில் 60-ஆவது நிமிடத்தில் நெய்மர் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 10ஆ-வது நிமிடத்தில் சுவாரஸ் ஒரு கோல் அடித்து அசத்தினார். 85ஆ-வது நிமிடத்தில் நெய்மர் மேலும் ஒரு கோல் அடிக்க, பார்சிலோனா …
-
- 0 replies
- 191 views
-
-
ஆரம்ப ஏலம் ரூ.40 கோடி: ஐபிஎல் அணியை வாங்குகிறார் தாேனி? புதுடெல்லி: டிசம்பர் 8ம் தேதி புதியதாக ஏலம் விடப்பட உள்ள ஐபிஎல் அணிகளில் ஒன்றை வாங்க இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை, ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த இரு அணிகளுக்கும் பதிலாக புதிய அணிகளை தேர்வு செய்ய ஐபிஎல் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது. புதிதாக சேர்க்கப்படும் 2 அணிகள் குறித்த விவரம் டிசம்பர் 8-ம் தேதி தெரிய வரும். ஏனெனில் அன்றைய தினம்தான் ப…
-
- 0 replies
- 305 views
-
-
ரஹானேவுக்கு ரூ.1 கோடி சம்பளம்: ரெய்னா, புவனேஷ்வர் குமாருக்கு பாதியாக குறைந்தது அஜிங்க்ய ரஹானே இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஒவ்வொரு ஆண்டும் வீரர்களை அவர்களின் தகுதி நிலைக்கு ஏற்ப 3 பிரிவுகளாக ஒப்பந்தம் செய்யும். இதன்படி 2015-2016ம் ஆண்டுக்காக வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி அஜிங்க்ய ரஹானே ஏ பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். ரஹானே தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணி ஜிம்பாப்வே தொடரை வென்றிருந்தது. மேலும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். இதே பிரிவில் தோனி…
-
- 1 reply
- 318 views
-
-
நரைனின் பந்தில் மீண்டும் சந்தேகம் November 10, 2015 இலங்கைக்கு எதிரான இறுதி ஒரு நாள் ஆட்டத்தில் நரைனின் பந்து வீச்சில் தவறு இருப்பதாக மீண்டும் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 14 நாள்களுக்குள் அவர் தனது பந்து வீச்சில் பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வருட ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக நரைன் கலந்துகொண்டார். அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, பந்து வீச தடை விதிக்கப்பட்டது. ஆனால், கொல்கத்தாவின் மிரட்டலால் அவர் பந்து வீச அனுமதிக்கப்பட்டார். ஆனால், நரைன் தனது கையை அனுமதிக்கப்பட்ட 15 டிகிரிக்கு மேல் வளைப்பதாக பரவலான கருத்துக்கள் வெளிவந்தன. இதனால் நடப்பு வருட உலகக்கிண்ணத் தொடரில் இருந்து அவர் விலகியிருந்தார்…
-
- 5 replies
- 476 views
-
-
மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் சங்கத்தின் உபதலைவர்களில் ஒருவராக தமிழர் November 09, 2015 இலங்கை தேசிய மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் சங்கத்தின் 2016-2017ஆம் ஆண்டுக்கான நிர்வாக சபையில் உப தலைவர்களில் ஒருவராக தெரிவாகியுள்ளார் கே. விஜிதரன். நேற்றுச சனிக்கிழமை கொழும்பு விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிர்வாகத் தெரிவில் யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான கே. விஜிதரன் உபதலைவர்களில் ஒருவராக தெரிவாகியுள்ளார். இவர் சர்வதேச மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் தரம்1, தரம்2 பரீட்சைகளில் சித்தியடைந்துள்ளார். மற்றும் இலங்கை தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தில் டிப்ளோமா, உயர் டிப்ளோமா பயின்றுள்ளார். வவுனியா மாவட்ட மெய்வன்மை பயி…
-
- 0 replies
- 239 views
-
-
உலகில் மிகவும் பிரபலமான துடுப்பு மட்டை November 09, 2015 கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமான துடுப்பு மட்டை எது தெரியுமா? நியூயோர்க்கில் நடைபெற்ற முதலாவது சகல நட்சத்திரங்களின் ஆட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நட்சத்திரங்களும் கையொப்பமிட்ட இந்த துடுப்புமட்டைதான். நியூயோர்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப் படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.onlineuthayan.com/sports/?p=3224&cat=2
-
- 1 reply
- 875 views
-
-
ஐசிசி தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் நீக்கம் சீனிவாசன் | கோப்புப் படம்: ஜோதி ராமலிங்கம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் நீக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவரைத் திருப்பி அழைத்தது. சீனிவாசனுக்குப் பதிலாக தற்போதைய பிசிசிஐ தலைவர் ஷஷாங் மனோகர் ஐசிசி தலைவர் ஆகிறார். மும்பையில் நடைபெற்ற 86-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் மீதான சீனிவாசனின் பிடி முடிவுக்கு வந்தது. கடந்த ஜூன் மாதம் ஐசிசி தலைவராக சீனிவாசன் பொறுப்பேற்றார். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. எனவே, மீதமுள்ள பதவிக்காலத்…
-
- 1 reply
- 621 views
-
-
நிர்வாக மாற்றங்களுடன் பிசிசிஐ களங்கம் துடைப்பு நடவடிக்கை சீனிவாசன், ரோஜர் பின்னி மற்றும் ரவி சாஸ்திரி | கோப்புப் படங்கள் கடந்த ஐபிஎல் போட்டிகளில் நடந்த ஸ்பாட் பிக்சிங் உள்ளிட்ட ஊழல்களினால் பிசிசிஐ மீது படிந்த கறையை அகற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது 86-வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. முதல் நடவடிக்கையாக, ஐசிசி தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் நீக்கப்பட்டார். | அதன் விவரம் - ஐசிசி தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் நீக்கம் | மும்பையில் இன்று நடைபெற்ற 86-வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பிசிசிஐ மேலும் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. பிசிசிஐ-யின் முக்கிய பிரச்சினைய…
-
- 0 replies
- 192 views
-
-
ஒ.நா.ச போட்டிகளில் இவ்வருடத்தில் 101 சதங்கள் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இவ்வருடத்தில் மாத்திரம் 101 சதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. நேற்று இடம்பெற்ற போட்டிகளில் இரண்டு சதங்கள் குவிக்கப்பட்ட நிலையிலேயே, 101 சதங்கள் என்ற மைல்கல் எட்டப்பட்டுள்ளது. பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியில் முஷ்பிக்கூர் ரஹீம் பெற்ற சதமே 100ஆவது சதமாகவும், இலங்கைக்கெதிராக மார்லன் சாமுவேல்ஸ் பெற்ற சதம், 101ஆவது சதமாகவும் அமைந்திருந்தது. வருடமொன்றில் 100 சதங்கள் எட்டப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதோடு, இரண்டாமிடத்தில் காணப்படும் 2014ஆம் ஆண்டை விட, 22 சதங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதில், 2014ஆம் ஆண்டில் 121 ஒருநாள் சர்வதேசப் போட்டிக…
-
- 0 replies
- 205 views
-
-
கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்த விஷபாம்பு ; அதிர்ச்சியில் ரஞ்சி வீரர்கள் கொல்கத்தாவில் மேற்கு வங்க மற்றும் விதர்பா அணிகளுக்கிடையேயான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. ஜே.யு சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் 2வது நாளான இன்று, விதர்பா அணி வீரர்கள் பீல்டிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பந்துவீச்சாளர் ஸ்வான்பில் பண்டிவார் பந்து வீசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிரே பாம்பு ஒன்று ஊர்ந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டது. வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். தொடர்ந்து மைதான பராமரிப்பாளர்கள் கம்பு கட்டையுடன் ஓடி வந்து பாம்பை அடிக்க முற்பட்டனர். ஆனால் அந்த பாம்பு அவர்களுக்…
-
- 2 replies
- 452 views
-
-
ரஞ்சி கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் அடித்து வாசிம் ஜாபர் சாதனை! ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை விதர்பா அணி வீரர் வாசிம் ஜாபர் பெற்றுள்ளார். கொல்கத்தாவில் மேற்கு வங்க - விதர்பா அணிகளுக்கிடையேயான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் மேற்கு வங்க அணி 334 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து விதர்பா அணி பேட் செய்யத் தொடங்கியது. இந்த போட்டியில் விதர்பா அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வாசிம் ஜாபர் 7 ரன்கள் எடுத்த போது, ரஞ்சி டிராபியில் 10 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ரஞ்சி டிராபியை பொறுத்த வரை 126 போட்டிகளில் 196 இன்னிங்ஸ்களில் விளையாடி …
-
- 0 replies
- 202 views
-
-
காயம் காரணமாக சர்கர் விலகல் November 07, 2015 சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் பங்களாதேஸ் அணியின் நட்சத்திர வீரரான சர்கர். நடப்பு வருடத்தில் இதுவரை 672 ஓட்டங்களை குவித்துள்ள சர்கர் இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளை பங்களாதேஸ் வீழ்த்த முக்கிய காரணமாக திகழ்ந்தவர். தற்போழுது சிம்பாப்வே அணி பங்களாதேஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் இரண்டு ரி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. ஒருநாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகிறது. இதற்காக சர்கர் நேற்றுமுன்தினம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பந்து வீசி பயிற்சி எடுக்கும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்காக அவர் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுக…
-
- 6 replies
- 998 views
-
-
யார்கிட்ட...செல்போனை திருடிய நபரை விரட்டி பிடித்த செரீனா ! உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள சீன உணவகம் ஒன்றில், தனது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டே உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது செரீனாவின் மேஜை அருகே வந்த நபர் ஒருவர், அவரது மேஜையில் வைக்கப்பட்டிருந்த செல்போனை எடுத்து விட்டு சென்று விட்டார். சில வினாடிகள் கழித்து தனது மேஜையில் வைக்கப்பட்டிருந்த செல்போனை காணாமல் போனதை கவனித்த செரீனா, அவரை பின்னாடியே விரட்டி சென்று செல்போனை திரும்ப கேட்டு வாங்கி விட்டார். அப்போது தெரியாமல் எடுத்து வந்துவிட்டீர்களா? என்றும் செரீனா அந்த நபரிடம் கேட்டா…
-
- 0 replies
- 190 views
-