விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
பிரிமியர் லீக் கால்பந்து போட்டி: மீண்டெழுந்த சாம்பியன்கள்: சென்ற ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றாலும், இம்முறை தொடர்ந்து சொதப்பி வந்த செல்சி, ஜுவன்டஸ் அணிகள், சென்ற ஆண்டு சொதப்பினாலும் இந்த முறை முன்னணியில் இருக்கும் இன்டர் மிலன்,டார்ட்மண்ட் அணிகள், இரண்டு சிவப்பு அட்டைகள் பெற்று தோல்வியைத் தழுவிய அர்சனல் என இந்த வார பிரிமீயர் லீக் கால்பந்து போட்டிகள் எப்பொழுதும் போல் அமர்க்களமாகவே அமைந்தன அட்டைகளால் ஆட்டம் கண்ட அர்சனல் பிரிமியர் லீக்கின் இருபெரும் அணிகளான அர்சனலும், செல்சியும் ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. செல்சி அணி இந்த சீசனில் தொடர்ந்து சொதப்பி வருவதால், அர்சனல் அணியின் கையே ஓங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் …
-
- 0 replies
- 509 views
-
-
பெக்கமின் தந்தையுடன் காரில் பயணித்த மஹேல இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் டேவிட் பெக்கமின் தந்தையுடன் மஹேல ஜெயவர்தன கால்பந்து போட்டியை பார்க்க காரில் பயணித்துள்ளார். அண்மையில் இங்கிலாந்தில் இடம்பெற்ற இருபதுக்கு-20 கிரிக்கெட் காட்சிப் போட்டியில் மஹேல பங்கேற்று விளையாடியிருந்தார். இந்நிலையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரின் சவுத்தம்ப்டன் - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதிய போட்டியை பார்க்க மஹேல, இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் டேவிட் பெக்கமின் தந்தை உடன் சென்றுள்ளார். இருவரும் காரில் அமர்ந்திருப்பது மற்றும் மைதானத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் மஹேல ஜெயவர்தன வெளியிட்டுள்ளார். …
-
- 0 replies
- 625 views
-
-
மெஸ்ஸி 100 ஆர்ஜென்ரினா அணியின் தலைவரும் பார்ஸிலோனா அணியின் நட்சத்திர வீரருமான மெஸ்ஸி பார்ஸிலோனா அணிக்காக தனது 100ஆவது ஆட்டத்தினை நேற்றுமுன்தினம் நிறைவு செய்தார். வெற்றி மேல் வெற்றி குவித்து வரும் மெஸ்ஸிக்கும் பார்ஸி லோனாவுக்கும் ஏனோ தெரியவில்லை இந்த ஆட்டம் வெற்றியைக் கொடுக்கவில்லை. மெஸ்ஸியின் நூறாவது ஆட்டத்தில் உரோமா அணியுடன் பார்ஸிலோனா மோதியது. இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் பார்ஸி லோனாவின் ஆதிக்கம் இருந்த போதிலும் உரோமாவின் முன்களவீரர் ஒருவர் மைதானத்தின் மத்திய பகுதியில் வைத்து பதில்கோலை விளாச ஆட்டம் 1-1 என்று முடிவடைந்தது. உரோமாவை மிக இலகுவாக பார்ஸிலோனா வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட காரணத்தினால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தமையானது கிட்டத்தட்ட பார்ஸிலோனாவின் தோல்வி…
-
- 2 replies
- 324 views
-
-
வர்த்தக கிரிக்கெட் வித்தகர்: டால்மியா ஒரு சகாப்தம் கோல்கட்டா: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் ஜக்மோகன் டால்மியா மாரடைப்பால் மரணமடைந்தார். இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவராக இருந்தவர் கோல்கட்டாவின் ஜக்மோகன் டால்மியா, 75. வயது முதிர்வின் காரணமாக, இவரது உடல்நிலையில் ஞாபக மறதி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. வாரத்துக்கு இரு முறை கோல்கட்டா கிரிக்கெட் சங்கத்துக்கு வருகை தந்த இவர், சமீப காலமாக முக்கிய கூட்டங்களில் மட்டுமே பங்கேற்று வந்தார். இதனிடையே கடந்த 17ம் தேதி இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. கோல்கட்டா பி.எம்.பிர்லா இருதய ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு, ‘ஆஞ்சியோகிராபி’ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவரத…
-
- 1 reply
- 416 views
-
-
மூன்றாவது தடவையாக ஒரே அணிகள் இறுதியில் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் என அழைக்கப்படும் ஜே.பி.எல் இருபது – 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் 3 ஆவது தடவையாகவும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியும் சென்றலைட்ஸ் அணியும் மோதவுள்ளன. இறுதிப்போட்டி நாளை சனிக்கிழமை (19) யாழ்;ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜே.பி.எல் இருபது – 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 3 ஆவது பருவகால போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்னெல் மைதானங்களில் நடைபெற்றது. கடந்த ஆண்டுப் போட்டியில் காலிறுதி வரையில் …
-
- 2 replies
- 356 views
-
-
கிண்ணத்தை கைப்பற்றியது குளொசெஸ்டெயர்ஷையர் இங்கிலாந்தின் பிராந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டிகளுக்கான ரோயல் லண்டன் கிண்ணத்தை, குளொசெஸ்டெயர்ஷையர் அணி கைப்பற்றியுள்ளது. பதினொரு வருடங்களின் பின் அவ்வணி கைப்பற்றும் முதலாவது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான கிண்ணம் இதுவாகும். இலண்டன் ஓவலில் இடம்பெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சரே அணி, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய குளொசெஸ்டெயர்ஷையர் அணி, 47.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 220 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அவ்வணி சார்பாக தனது இறுதிப்போட்டியில் விளையாடிய ஜெரைன்ற் ஜோன்ஸ், 50 ஓட்டங்களைப் பெற்றார். கரெத் றொட்ரிக் 39, பந்துவீச்சாளர் ஜக் டெய்லர…
-
- 0 replies
- 219 views
-
-
பிபிஎல் நவம்பரில் தொடக்கம் இரண்டு வருடங்கள் இடைவேளையின் பின், பங்களாதேஷ் பிறிமியர் லீக்கின் மூன்றாவது பருவகாலம், எதிர்வரும் நவம்பர் மாதம் 24ஆம் ஆரம்பிக்கவுள்ளது. இந்தத் தொடரானது ஆறு அணிகளைக் கொண்டதாக அமையவுள்ளதுடன், மூன்று புதிய அணி உரிமையாளர்களும் பங்கெடுக்கவுள்ளனர். டாக்கா அணியானது பெக்சிம்கோ குழுமத்தாலும், சிட்டகொங் அணியானது டிபிஎல் குழுமத்தாலும், பரிசல் அணியானது அக்ஸிம் டெக்னோலஜிஸாலும் நிர்வகிக்கப்படுகின்ற நிலையில், ராஜஸ்தானி, குளுநா ஆகிய அணிகளே இந்த வருடம் உரிமையாளர்கள் இல்லாமல் உள்ளன. மூன்று பழைய அணி உரிமையாளர்களை மட்டுமே அனுமதித்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, 2013 ஆம் இடம்பெற்ற போட்டிகளுக்கான மிகுதி பணத்தை செலுத்துபவர்களுக்கும், மூன்றாவது பருவகாலத்துக்…
-
- 0 replies
- 328 views
-
-
'மின்னல் மனிதர்' என்று செல்லமாக அழைக்கப்படும் தடகள வீரர் உசேன் போல்ட், தான் படித்த பள்ளிக்கு ரூ. 6 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளார். ஜமைக்காவை சேர்ந்த உசேன் போல்ட் 100 மற்றும் 200 ஓட்ட பந்தயங்களில் அசத்தி வருபவர். அண்மையில் பெய்ஜிங் நகரில் நடந்த உலகத் தடகளத்திலும் உசேன் போல்ட் இந்த இரு பிரிவிலும் தங்கம் வென்று அசததினார். ஐமைக்காவில் உள்ள ட்ரெலானி என்ற சிறிய நகரத்தில் பிறந்த உசேன் போல்ட் , அங்குள்ள வில்லியம் நிப் என்ற பள்ளியில் படித்தார். இந்த பள்ளிதான் உசேன் போல்ட் சிறந்த தடகள வீரராக உருவாக அடித்தளமிட்டது. தற்போது தடகள உலகின் மன்னனாக திகழும் உசேன் போல்ட், தான் படித்த இந்த பள்ளிக்கு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு ஈடான பல்வேறு விளையாட…
-
- 1 reply
- 288 views
-
-
இந்திய அணி இன்று தேர்வு தென் ஆப்பிரிக்காவுக்கு எதி ரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளை யாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி பெங்களூரில் இன்று தேர்வு செய்யப்படுகிறது. இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள தென் ஆப்பிரிக்க அணி, இந்தி யாவுக்கு எதிரான 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. டி20 தொடர் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கவுள்ள நிலை யில், தேர்வுக் குழுவினர் பெங்களூரில் இன்று கூடி இந்திய அணியை தேர்வு செய்கின்றனர். டி20 தொடரில் விளை யாடும் அணியும், முதல் 3 ஒருநாள் போட்டிகளில் விளை யாடும் அணியும் மட்டுமே இன்று தேர்வு செய்யப்படும் என தெரிகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அதை க…
-
- 2 replies
- 294 views
-
-
‘‘யார் என்ன கூறினாலும் டென்னிஸை தொடர்வேன்’’ சானியா மிர்சா ‘‘யார் என்ன கூறுகின்றார்கள் என்பதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. டென்னிஸ் விளையாட்டை நான் தொடர்வேன்’’ என இவ் வருடம் ஐக்கிய அமெரிக்க பகிரங்க மக ளிர் இரட்டையர் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்த இந்தியாவின் சானியா மிர்ஸா கூறியுள்ளார். இந்த வெற்றியுடன் மகளிர் இரட்டையருக்கான உலக டென்னிஸ் தரப்படுத்தல் நிலை யில் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ள சானியா மிர்ஸா, அரங்குக்கு வெளியே அநாவசிய சர்ச்சைகளை எதிர்கொண்டார். ஐக்கிய அமெரிக்க மகளிர் இரட்டையர் பட்டத்தை வெல்வதற்கு சில வாரங்களுக்கு முன்னர், சானியா மிர்ஸாவுக்கு இந்தியா வின் அதி உயர் விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுவ…
-
- 1 reply
- 428 views
-
-
தேசியமட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பம் வடமாகாண கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். ஆறு மைதானங்களில் நடைபெறும் இப்போட்டிகள் ஆண்l பெண் இருபாலருக்கும் நான்கு பிரிவுகளாக இடம்பெறவுள்ளன. இதற்கமைய 15, 17,19 வயது ஆகிய பிரிவுகளில் 108 அணிகள் இப்போட்டிகளில் மோதுகின்றன. இப்போட்டிகளின் இறுதிப்போட்டிகள் எதிர்வரும் 21ம் திகதி யாழ் மத்திய கல்லூரி மைதானத்திலும் சென் ஜோண்ஸ்…
-
- 0 replies
- 251 views
-
-
இந்தியாவிடம் ஏன் கெஞ்ச வேண்டும்...? -சாகித் அப்ரிடி கோபம் இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடுவதற்கு பதிலாக வேறு நாட்டு அணிகளை பாகிஸ்தானுக்கு அழைத்து வந்து போட்டிகளை நடத்தலாம் என்று பாகிஸ்தான் அணி வீரர் சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். எல்லையோரத்தில் தாக்குதலை நிறுத்தினால் மட்டும்தான் பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாடுவது பற்றி யோசிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலளித்து விட்டது. ஆனால் பாகிஸ்தான் வாரியம், டிசம்பரில் அமீரகத்தில் வைத்து இந்திய அணியுடன் போட்டித் தொடரை நடத்த யோசித்து வருகிறது. 2015-2023 ஆம் ஆண்டுகளுக்கிடையே 6 தொடர்கள் வரை விளையாட இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. பல பிரச்னைகள் காரணமாக இதற்கு இந்திய அர…
-
- 0 replies
- 274 views
-
-
பிரிட்டன் ராணுவத்துக்காக டி20 காட்சிப் போட்டியில் விளையாடும் தோனி தோனி, சேவாக். | கோப்புப் படம். காயமடைந்த மற்றும் உடல்நலம் குன்றிய பிரிட்டன் ராணுவ வீரர்களுக்கு நிதி திரட்டும் காட்சி டி20 போட்டியில் இந்திய ஒருநாள் கேப்டன் தோனி விளையாடுகிறார். வியாழக்கிழமை, லண்டன் கியா ஓவல் மைதானத்தில் 'கிரிக்கெட் ஃபார் ஹீரோஸ்' என்ற நிதிதிரட்டு காட்சி போட்டியில் தோனி, சேவாக், ஷாகித் அப்ரீடி, ஹெர்ஷல் கிப்ஸ் ஆகியோர் ஒரு அணியில் விளையாடுகின்றனர். ஹெல்ப் ஃபார் ஹீரோஸ் அணியின் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ். இந்த அணிக்கும் உலக லெவன் அணிக்கும் டி20 காட்சிப் போட்டி நடைபெறுகிறது. இந்த அணியில் பிரெண்டன் மெக்கல்லம், ஹெய்டன், ஜெயவர்தனே, கிரேம் ஸ்மித், முன்னாள் நியூஸிலாந்து வீரர்கள் ஸ்காட் ஸ்டைரிஸ், …
-
- 3 replies
- 419 views
-
-
பெண் நிருபரால் தாக்கப்பட்ட சிரிய அகதி ஸ்பெயினில் கால்பந்து பயிற்சியாளர் ஆனார்! கடந்த சில நாட்களுக்கு முன் சிரியாவில் இருந்து ஹங்கேரிக்கு சென்ற அகதிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பெண் வீடியோகிராபரான பெட்ரோ லஸ்லா என்பவரால் ஒசமாக அகமது என்ற அகதி காலை இடறி கீழே விழ வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்படியே தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகியது. இந்த சம்பவத்தை தொலைகாட்சிகளில் பார்த்த மக்கள், அந்த பெண் நிருபரின் செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நிருபர் பெட்ரோ லஸ்லாவை அவர் வேலை பார்த்து வந்த நிறுவனமும் பணியை விட்டு நீக்கியது. பெண் நிருபரால் தாக்கப்பட்ட சிரிய அகதி ஒசமா அப்துல் சிரிய நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து அணிகளுக்கு…
-
- 4 replies
- 450 views
-
-
ஃபிபாவில் உருளும் தலைகள் : பொதுச் செயலர் ஜெரோம் வால்கி 'சஸ்பெண்ட்' உலக கால்பந்து சம்மேளனமான ஃபிபா பொதுச் செயலர் ஜெரோம் வால்கி திடீரென்று நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஃபிபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், '' ஜெரோம் வால்கி அவரது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மறுஉத்தரவு வரும் வரை அவர் பணிகளை தொடர தடை உள்ளது '' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்? என்ற காரணம் தெரிவிக்கப்படவில்லை. கடந்த 2014ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது, டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்தாகவும் அதில் ஜெரோம் வால்கிக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பிஃபா எதிக்ஸ் கமிட்டி விசாரித்து வருவதாகவும் தெரிகிறது. பி…
-
- 0 replies
- 286 views
-
-
சங்கா, மஹேல மீது அர்ஜுன காட்டம் இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோர் மீது, அமைச்சரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜுன ரணதுங்க, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இருவருமே அண்மையில் ஓய்வுபெற்றுள்ள போதிலும், அவர்கள் ஓய்வுபெறும் வரை தங்களது துடுப்பாட்ட நிலையை மாற்றி, இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார். 'இன்று, வீரர்களின் ஒழுக்கமென்பது முழுமையாக அழிவடைந்துள்ளது. நான்காம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக விளையாடிய நான், எனது கிரிக்கெட் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கினேன். துடுப்பாட்ட இடமொன்றில் ஏனைய இளைய வீரர்கள் பரிச்சயத்தைப் பெறுவதற்கே அதைச் செய்தேன்"…
-
- 3 replies
- 545 views
-
-
தோனிதான் உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர் என்கிறார் லான்ஸ் குளூஸ்னர் தோனி. | படம்: சஞ்ஜய் கோஷ். முன்னாள் தென் ஆப்பிரிக்க அதிரடி ஆல்ரவுண்டர் லான்ஸ் குளூஸ்னர், கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டர் தோனிதான் என்று கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்கா இந்தியாவில் கிரிக்கெட் பயணம் மேற்கொள்வதையடுத்து ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர் கூறும் போது இதனை தெரிவித்தார். "ஆல்-ரவுண்டர்கள் இருக்கின்றனர், இல்லையென்று கூறவில்லை. ஆனால் நீண்ட ஆண்டுகள் என்ற அளவில் அவர்கள் நிரூபிக்க முடியவில்லை. ஜாக் காலீஸ், ஷான் போலாக் எங்களுக்கு கிடைத்தது அதிர்ஷ்டமே. ஆல்ரவுண்டர்கள் வரிசையில் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென்களையும் சேர்க்க வேண்டும். தோனி, கில்கிறிஸ்ட் ஆகியோர் மதிப்பு மிக்க ஆல் ரவுண்டர்கள். ஆனாலும் கடந்த சில ஆண்டு…
-
- 0 replies
- 338 views
-
-
கிறிஸ்டியானோ ரொனால்டோ உட்பட மெஸ்ஸிக்கு யாரும் இணையாக முடியாது: பார்சிலோனா பயிற்சியாளர், வீரர்கள் புகழாரம் அட்லெடிகோஸ் மாட்ரிட் அணிக்கு எதிரான போட்டியின்போது, எதிரணி வீரர்களை அநாசயமாக வீழ்த்தி கோலடிக்கும் பார்சிலோனாவின் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ் பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு யாரும் இணையாக மாட்டார்கள் என பார்சிலோனா பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக், தடுப்பாட்டக்காரர் ஜோர்டி அல்பா ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர். சாம்பியன்ஸ் லீக் போட்டியை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது பார்சிலோனா. கடந்த 1990-ம் ஆண்டு ஏசி மிலன் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை தொடர்ந்து இரண்டு முறை வென்றது. அதன்பிறகு எந்த அணியும் வெற்றிக்கோப்பையைத் தக்கவைத்ததில்லை. கடந்த மே மாதம் நடந்த இறுதிப்போ…
-
- 0 replies
- 298 views
-
-
வடமாகாண சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சால் வடமாகாண மாவட்ட அணிகளுக்கிடையே இடம்பெற்ற கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ். மாவட்ட அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் யாழ். மாவட்ட அணியும் முல்லைத்தீவு மாவட்ட அணியும் மோதிக் கொண்டன. இரு அணிகளும் ஆரம்பத்தில் சற்று பலமான நிலையில் விளையாடிய போதிலும், தொடர்ந்து யாழ். மாவட்ட அணி முன்னணியில் திகழ்ந்தது. இறுதியில் யாழ்.மாவட்ட அணி 72: 57 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியனானது. http://onlineuthayan.com/news/393
-
- 0 replies
- 278 views
-
-
குமார் சங்ககாரா மீண்டும் சதம் இங்கிலாந்து surrey கவுன்டி அணிக்காக ஆடிவரும் குமார் சங்ககாரா County Championship போட்டியில் Lancashire அணிக்கு எதிராக 118 ஓட்டங்கள் எடுத்து உள்ளார். Surrey 480 & 283/7d Lancashire 272 & 22/0 (7.0 ov) Lancashire require another 470 runs with 10 wickets http://www.espncricinfo.com/county-championship-div2-2015/engine/match/804433.html
-
- 0 replies
- 421 views
-
-
இங்கிலாந்து பயிற்றுநர் குழாமில் மஹேல, கொலிங்வுட் பாகிஸ்தானுக்கு எதிரான மூவகை கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு மஹேல ஜயவர்தன, போல் கொலிங்வுட் ஆகியோரை விசேட பயிற்றுநர்களாக இங்கிலாந்து நியமித்துள்ளது. இதன் மூலம் தனது நிபுணத்துவ பயிற்றுநர் குழாமை இங்கிலாந்து பலப்படுத்திக்கொண்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யும் இங்கிலாந்து அணியின் பயிற்சிப் போட்டியின் போதும் பாகிஸ் தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போதும் இங்கிலாந்து அணிக்கு துடுப்பாட்டப் பயிற்சிகளை மஹேல ஜயவர்தன வழங்கவுள்ளார். ஆசிய கண்ட ஆடுகளங்களின் தன்மையை நன்கு அறிந்துள்ள மஹேல ஜயவர்தன, இந்த ஆடுகளங்களில் திறமையை …
-
- 0 replies
- 272 views
-
-
பார்சிலோனா அணிக்கு எதிராக ரோமா வீரர் அடித்த அசத்தல் கோல் (வீடியோ) சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று ரோம் நகரில் நடந்த ஆட்டத்தில், பார்சிலோனா- ஏ.எஸ். ரோமா அணிகள் மோதின. இந்த போட்டியின் போது பார்சிலோனா அணியின் சுவாரஸ் 21வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். மெஸ்சி கொடுத்த கிராசை தலையால் முட்டி சுவாரஸ் கோலாக்கினார். 31வது நிமிடத்தில் ரோமா அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணியின் ஃபுளோரன்சி 60 அடி தொலைவில் இருந்து அடித்த பந்து மிக நேர்த்தியாக வளைக்குள் வந்து தஞ்சமடைந்தது. பார்சிலோனா அணியின் கோல்கீப்பர் ஸ்டெகன் கோல்கம்பத்தை விட்டு சற்று முன்னால் நின்று கொண்டிருந்ததை கவனித்த ஃபுளோரன்சி அந்த சமயத்தை பயன்படுத்தி மிக நேர்த்தியாக இந்த கோலை…
-
- 0 replies
- 233 views
-
-
சானியாவின் அடுத்த ஜோடி யார்? கடந்த 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில், இந்திய டென்னிஸ் அணித் தேர்வில் யார்-யாருடன் ஜோடி சேருவது என்பதில் ஒரு களேபரமே நடந்தது. இறுதியில் 7 பேர் கொண்ட இந்திய டென்னிஸ் குழுவினர் வெறுங்கையுடன் திரும்பியது தான் மிச்சம். இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, லியாண்டர் பெயசுடன் சேர்ந்து விளையாடினார். இந்த நிலையில் 2016-ம் ஆண்டு ரியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் போது சானியா மிர்சா யாருடன் ஜோடி சேருவார் என்ற கேள்வி இப்போதே எழத் தொடங்கி விட்டது. சானியா சூப்பர் பார்மில் இருப்பதால் கலப்பு இரட்டையர் பிரிவு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்திய முன்னணி வீரர் ரோகன் போபண்ணாவிடம் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்திய…
-
- 0 replies
- 461 views
-
-
தேசிய மட்ட கபடிப் போட்டிகளில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் சாதனை படைத்துள்ளன. 15 வயது பிரிவில் கிளிநொச்சி சிவபுரம் அ.த.க பாடசாலை முதலிடத்தினையும், 19 வயது பிரிவில் கிளிநொச்சி இந்து கல்லூரி இரண்டாம் இடத்தினையும் பெற்று மாவட்டத்திற்கும், வடமாகாணத்திற்கும் புகழ் தேடி தந்துள்ளனர். கிளிநொச்சி இந்துக்கல்லூரி 19 வயது பிரிவு மாணவர்கள் திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய மட்ட கபடி போட்டியில் அனுராதபுரம் மக்குளாவ மகாவித்தியாலயத்தை எதிர்த்து தேசிய மட்டத்திற்கான இறுதிப்போட்டியில் போட்டியிட்டு பத்திற்கு இருபது எனும் விகிதத்தில் இரண்டாம் நிலையினை பெற்றுக்கொண்டார்கள். இப்போட்டியில் பிரகாசித்த இரு வீரர்களான க.தசப்பிரியன், எஸ்.சிவராஜ் ஆகியோர் தேசிய கபடி அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறி…
-
- 0 replies
- 255 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு மிஸ்பா உல் ஹக். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. ஐக்கிய அரபு அமீரகத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இடது கை பேட்ஸ்மென் ஃபவாத் ஆலம் சேர்க்கப்பட்டுள்ளார். 2009-ம் ஆண்டில் நியூஸிலாந்துக்கு எதிராக பவாத் ஆலம் கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடியதால் அவர் அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொழும்புவில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸில் 168 ரன்களை அடித்தார் பவாத் ஆலம். பாகிஸ்தான் டெஸ்ட் அணி வருமாறு: மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), அகமது ஷெசாத், ஷான் மசூத்…
-
- 0 replies
- 288 views
-