விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
இலங்கை - இந்தியத் தொடர் அலசல்: இளம் அணியின் சாதனைகளும் சிக்கல்களும் விராட் கோலி | படம்: ராய்ட்டர்ஸ் இலங்கையில் வெற்றிகரமாகத் தன் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டுத் திரும்பியிருக்கும் இந்திய அணி அடுத்த மாதத்திலி ருந்து தொடங்கவிருக்கும் நீண்ட பயணத்துக்காகக் காத்துக்கொண் டிருக்கிறது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரே லியா முதலான அணிகளின் சவாலை எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணி, அதற்கான மன வலிமையை இந்தத் தொடரிலிருந்து பெற்றிருக்கிறது என்று சொல்லலாம். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்னும் கணக்கில் இந்தியா வென்றிருக்கிறது. 3-0 என்றுகூட இந்த முடிவு இருந்திருக்கலாம் என்னும் அளவுக்குத் தோற்ற போட்டியிலும் சிறப்பாகவே ஆடியது. ஒரே ஒரு கட்டத்தில் ஆடிய மோசமான ஆட்டத்தால் அந்தப் போட…
-
- 0 replies
- 185 views
-
-
கைது செய்யப்படுவாரா வங்கதேச கிரிக்கெட் வீரர் தாகா: தனது வீட்டில் வேலை செய்த சிறுமியை துன்புறுத்திய பிரச்னையில் சிக்கிய வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகாதத் ஹுசைன் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. வங்கதேச அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷகாதத் ஹுசைன், 29. இதுவரை 38 டெஸ்ட் (72 விக்.,), 51 ஒரு நாள் (47), 6 ‘டுவென்டி–20’ (4) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவரது வீட்டில் வேலை செய்ததாக கூறப்படும் 11 வயதான சிறுமி ஒருவர் போலீசில் புகார் அளித்தார். இதில், ஷகாதத் மற்றும் அவரது மனைவி சேர்ந்து தன்னை அடித்து காயப்படுத்தியதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டது. இது குறித்து அப்பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்வர் ஹுசைன் கூறுகையில்,‘‘ சிறுமியை மீட்கும்போது அழுது கொண்ட…
-
- 0 replies
- 200 views
-
-
யூரோ கோப்பை கால்பந்து: ஐஸ்லாந்து, செக்.குடியரசு தகுதி பந்தை கடத்திச் செல்லும் செக்.குடியரசின் பாவெல் கடேராபெக்கை (இடது) கட்டுப்படுத்தும் முயற்சியில் லத்வியா வீரர்கள். படம்: ஏ.எப்.பி. ஐரோப்பிய நாடுகள் இடையில் நடைபெறும் யூரோ கோப்பை கால்பந்து போட்டிக்கு ஐஸ்லாந்து, செக்.குடியரசு ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. 15-வது யூரோ கோப்பை போட்டி அடுத்த ஆண்டு பிரான் ஸில் நடைபெறவுள்ளது. இதில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. போட் டியை நடத்தும் பிரான்ஸ் நேரடித் தகுதி பெற்றுள்ளது. எஞ்சிய 23 அணிகள் தகுதிச்சுற்றின் மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறும். தகுதிச்சுற்று பல்வேறு நாடு களில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 53 அணிகள் பங்கேற் றுள்ளன. அவை 9 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவ…
-
- 1 reply
- 263 views
-
-
தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுநர் போட்டி இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு தங்கம் தாய்லாந்தின் பாங்கொக், தமாசாத் பல்கலைக்கழக விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 61ஆவது தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுநர் வல்லவர் போட்டிகளில் இலங்கையின் நிலானி ரத்நாயக்க தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை நேற்று வென்றெடுத்தார். பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய நிலானி ரத்நாயக்க அப்போட்டியில் 10 நிமிடங்கள் 36.35 செக்கன்களில் ஓடிமுடித்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அத்துடன் ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் அரவிந்த சத்துரங்க (52.90 செக்.) தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். கோலூன்றிப் பாய்த…
-
- 0 replies
- 261 views
-
-
பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழா இலங்கைக்கு இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் சமோவாவின் ஏப்பியா பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐந்தாவது பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் இலங்கைக்கு இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆண்களுக்கான உயரம் பாய்தலில் போட்டியிட்ட இலங்கையின் ரொஷான் தம்மிக்க ரணதுங்க 2.11 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். இப் போட்டியில் 2.14 உயரம் தாவிய இந்தியாவின் தேஜாஸ்வின் ஷங்கர் தங்கப் பதக்கத்திற்கு சொந்தக்காரரானார். ஜெமெய்க்காவின் லாஷேன் வில்சன் 2.11 மீற்றர் தாவி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். பெண்களுக்கான 48 கிலோ கிராம் எடைப் பிரிவுக்கான பளுதூக்கலில் …
-
- 0 replies
- 336 views
-
-
ரூ.60 லட்சத்துக்கு விலை போன பிராட்மேன் சட்டை! சிட்னி: ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் விளையாட்டின்போது அணிந்த சட்டை ரூ.60 லட்சத்துக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் மறைந்த பிராட்மேன் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் அந்நாட்டு அரசு அருங்காட்சியகத்தில் பத்திரமாக பாதுகாத்து வருகிறது. இதில் உள்ள பிசேர் எனப்படும் பச்சை கலர் மேல் சட்டை 60 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. 1936–37ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆசஷ் டெஸ்ட் தொடரில் பிராட்மேன் பயன்படுத்தி இருந்த மேல் சட்டைதான் அது. தற்போது அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளது. http://www.vikatan.com/news/article.php?aid=52117
-
- 0 replies
- 461 views
-
-
ரோயல் இலண்டன் ஒரு நாள் கிண்ண அரை இறுதி போட்டியில் சரே அணிக்காக ஆடிவரும் குமார் சங்ககார 138 பந்துகளில் 166 ஓட்டங்கள் எடுத்தார். குமார் சங்ககாரவின் சதத்துடன் சரே அணி 50 ஓவர்களில் 300/5 பெற்றது. தொடர்ந்து ஆடி வரும் நொட்டின்காம்சயர் அணி 170/4 (35.1 ov) பெற்று உள்ளது. http://www.espncricinfo.com/royal-london-one-day-cup-2015/engine/match/804867.html
-
- 9 replies
- 362 views
-
-
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்தியத் தீவுகள் அணி மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இலங்கை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக ஜோசன் ஹோல்டர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கை வந்தடையும். அதைத் தொடர்ந்து 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை 3 நாள் பயிற்சிபோட்டியில் விளையாடவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி 14ஆம் திகதி முதல் 18ஆம்திகதிவரை காலியிலும்இ இரண்டாவது டெஸ்ட் போட்டி 22ஆம் திகதி முதல் 26ஆம் திக…
-
- 0 replies
- 216 views
-
-
குட்டி சனத் ஜயசூரியவின் துடுப்பாட்டம்! (Video) இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவின் துட்ப்பாட்ட திறமையை இந்த உலகமே அறிந்தது. இவரது துடுப்பாட்டத்தை “மாஸ்டர் பிளாஸ்டர்” என அழைப்பர். அந்த வகையில் தற்போது அவரது குட்டி மகன் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சனத் ஜயசூரிய போன்று இவரும் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து தனது திறமையை வெளிக்காட்டுவாரா ? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…. http://tamil.adaderana.lk/kisukisu/?p=4405&utm_source=rss&utm_medium=rss
-
- 0 replies
- 248 views
-
-
இனிமேல் ஓடப்போவதில்லை – உசைன் போல்ட் அதிரடி அறிவிப்பு உலகிலேயே நான்தான் அதிகவேகமாக ஓடக்கூடியவர் என்பதை மீண்டும் சீனாவில் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்று நிரூபித்தார் உசைன் போல்ட். அத்துடன் 200 மீ்ட்டர் மற்றும் 4 x 100 தொடர் ஓட்டத்திலும் தங்க பதக்கம் வென்றார். இந்த போட்டிக்கு முன் காயம் காரணமாக சிகிச்சை மேற்கொண்டார் உசைன் போல்ட். இதனால் அவர் மீண்டும் ஜொலிப்பாரா என்ற கேள்வி எழும்பியது. ஆனால், திறமையாக செயல்பட்டு வெற்றி வாகை சூடினார். இந்நிலையில் இந்த ஆண்டு இதற்குமேல் ஓடமாட்டேன் என்று உசைன் போல்ட் கூறியுள்ளார். இதுகுறித்து உசைன் போல்ட் தனது பேஸ்புக் பக்கத்தில் ‘‘சமீபத்தில் மகிழ்ச்சியளித்த சீனாவில் நடைபெற்ற உலகச் சாம்ப…
-
- 0 replies
- 231 views
-
-
பென் ஸ்டோக்ஸுக்கு அநீதி இழைத்ததை ஆஸி. வீரர்கள் ஒரு நாள் உணர்வர்: மெக்கல்லம் நியூஸி. கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம். | படம்: ராய்ட்டர்ஸ். பென் ஸ்டோக்ஸின் சர்ச்சைக்குரிய அவுட் விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் தவறிழைத்து விட்டார் என்கிறார் பிரெண்டன் மெக்கல்லம். களத்தடுப்புக்கு இடையூறு செய்ததாக 2-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அவுட் கொடுக்கப்பட்டது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் மீது நியூஸிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் அதிருப்தி தெரிவித்துள்ளார். டெய்லி மெயிலில் மெக்கல்லம் இது பற்றி எழுதிய பத்தியில், “ஸ்மித் முறையீடு செய்ய வேண்டாம் என்ற முடிவை எடுத்திருக்கலாம், இதன் மூலம் அவரது தலைமையில் கிரிக்கெட் ஆட்டத்தை அதன் நல்லுணர்வுடன…
-
- 0 replies
- 323 views
-
-
இலங்கை அணிக்கு இடைக்கால பயிற்றுவிப்பாளர் நியமனம் இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜெரோம் ஜெயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் திங்கட்கிழமை(07) அறிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடருக்காகவே ஜெரோம் இடைக்கால பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/153612/இலங-க-அண-க-க-இட-க-க-ல-பய-ற-ற-வ-ப-ப-ளர-ந-யமனம-#sthash.eONVxbBP.dpuf
-
- 0 replies
- 243 views
-
-
மாறுவேடத்தில் தெருவில் விளையாடிய கால்பந்து ஜாம்பவான்! (வீடியோ) நம்ம ஊரில் பிரபலமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் தனியாக தெருக்களில் நடந்து சென்றால் தேனீக்கள் போல் தொற்றி கொள்வார்கள் ரசிகர்கள். அதுவும், பிரபல கால்பந்து ஜாம்பவான் தனியாக தெருவில் விளையாடியால் விட்டு வைப்பார்களா ரசிகர்கள். போர்ச்சுக்கல்லை சேர்ந்த கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தன்னை யாரும் அடையாளம் தெரியாமல் இருக்க மாறுவேடத்தில் ஸ்பெயினில் உள்ள தெருவில் கால்பந்து விளையாடி அசத்தியுள்ளார். கடைசி வரை யாரும் அவரை அடையாளம் காணமுடியவில்லை. இறுதியாக சிறுவன் ஒருவனிடம் விளையாடிய ரொனால்டோ, தனது மாறுவேடத்தை கலைத்துவிட்டார். அவர் தனது வேஷத்தை கலைத்ததுதான் மிச்சம். ரசிகர்கள் அவரை சூழ்ந்து கெ…
-
- 0 replies
- 220 views
-
-
பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் மெத்தியூஸ்- மலிங்க பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தலைவரான அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் இருபதுக்கு 20 ஓவர் போட்டி அணித் தலைவர் லசித் மலிங்கவும் ஒப்பந்தமாகியுள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து எல்லா நாட்டு கிரிக்கெட் சபைகளும் 20 ஓவர் லீக் தொடரை நடத்த முன்வந்துள்ளன. அதிக அளவு வருமானம் ஈட்டப்படுவதால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தியாஇ மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலிய கிரிக் கெட் சபைகளையடுத்து பாகிஸ்தானும் இதில் குதித்துள்ள…
-
- 0 replies
- 326 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார் ஷேன் வாட்சன் டெஸ் கிரிக்கெட்டுக்கு குட்-பை கூறிய ஷேன் வாட்சன். | படம்: ராய்ட்டர்ஸ். ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது ட்விட்டரில் நேற்று இரவு பதிவிட்டிருந்தது. ஷேன் வாட்சன், பாகிஸ்தானுக்கு எதிராக 2005-ல் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சிட்னியில் அறிமுகமானார். இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 3731 ரன்களை 35 ரன்கள் என்ற சராசரியின் கீழ் பெற்றுள்ளார். அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 176. 75 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 3 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 45 கேட்ச்களை பிடித்துள்ளார்.…
-
- 0 replies
- 298 views
-
-
மோர்னி மோர்கெலை ஹூக்கில் சிக்ஸ் அடித்து சதம்: சச்சினுக்குக் ஏற்பட்ட முன்-காட்சி அனுபவம் சச்சின் டெண்டுல்கர் ஹூக் ஷாட். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் மோர்னி மோர்கெல் பந்தை ஹூக் செய்து சிக்ஸ் அடித்து சதம் எடுத்தார் சச்சின். ஆனால் டெஸ்ட் போட்டிக்கு 3 நாட்களுக்கு முன்னரே தனக்கு அந்தக் காட்சி மனக்கண் முன் தோன்றியது என்கிறார் சச்சின் டெண்டுல்கர். deja vu என்பது பலரும் அறிந்ததே. முதல் முறையே அனுபவிக்கும் ஒரு நிகழ்வு, ஒரு விஷயம் ஏற்கெனவே நாம் கண்டது போலவே இருப்பதை உணர்த்தும் நிலை. இது நம்மில் பலருக்கு பொது அனுபவம். ஒரு இடத்துக்கு அப்போதுதான் முதல் முறையாகச் சென்றிருப்போம், ஆனால் ஏற்கெனவே அங்கு வந்து புழங்கியது போன்ற நினைவு ஒன…
-
- 0 replies
- 426 views
-
-
ஊர்காவற்றுறையில் பாரம்பரிய படகுப் போட்டி September 05, 2015 ஊர்காவற்றுறை, தம்பாட்டி காந்திஜி சனசமூக நிலையத்தின் 66ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காந்திஜி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் பாரம்பரியப் போட்டியான பாய்மரம் விரித்து படகோட்டும் போட்டி இடம்பெற்றது. இப்போட்டியினை வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் பல போட்டியாளர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இதன்போது பார்வையாளர்கள் பலர் பிற படகுகளில் ஏறி கடலுக்குள் சென்று போட்டியினை நேரில் கண்டுகளித்திருந்தனர். குறித்த பாரம்பரிய படகோட்டும் போட்டிக்கு கடற்தொழிலாளர் சங்கத்தினர் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/sports/?p=676
-
- 3 replies
- 391 views
-
-
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை: சச்சின் கொச்சி: ‘‘எனது தந்தை அறிவுரைப்படி புகையிலை, மதுபான பொருட்கள் தொடர்பான விளம்பரங்களில் தோன்றுவதில்லை,’’ என, சச்சின் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், 42. பல பொருட்களுக்கு விளம்பர ‘மாடலாக’ உள்ளார். புகையிலை, மது விளம்பரங்களில் மட்டும் தோன்றியது கிடையாது. இது குறித்து கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் சச்சின் கூறியது: புகையிலை, மது உள்ளிட்ட போதை தரும் பொருட்களுக்கு எப்போதுமே விளம்பரம் செய்ய மாட்டேன். இவற்றை ஊக்கப்படுத்த கூடாது என மறைந்த எனது தந்தை அறிவுறுத்தினார். இதற்கேற்ப, இப்பொருட்களில் இருந்து விலகியே உள்ளேன்.இளைஞர்கள் தங்களது இலக்கை எட்டும் வரை போராட வேண்டும். நான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் பல சவால்களை சந்தித்த…
-
- 0 replies
- 439 views
-
-
ரகானேவின் விருப்பம் என்ன மும்பை: ‘‘இந்திய விமானப்படையில் பணியாற்ற விருப்பம் இருந்தது,’’ என, இந்திய வீரர் ரகானே கூறினார். இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் அஜின்கியா ரகானே, 27. இதுவரை இவர், 18 டெஸ்ட் (1353 ரன்கள்), 58 ஒருநாள் (1705), 13 சர்வதேச ‘டுவென்டி–20’ (273) போட்டிகளில் விளையாடியுள்ளார். இளமை பருவத்தில் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அனுபவம் குறித்து ரகானே கூறுகையில், ‘‘ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது, எதிரணி வீரர் வீசிய ‘பவுன்சர்’ பந்து எனது தலையில் தாக்கியது. அதன்பின் தொடர்ச்சியாக 5 பவுண்டரி விளாசினேன். இளமை பருவத்தில் இந்திய விமானப்படையில் அதிகாரியாக வேலை பார்க்க விரும்பினேன். ஒருவேளை நான் கிரிக்கெட் போட்டியை தேர்வு செய்யாமல் இருந்திருந்தால்…
-
- 0 replies
- 304 views
-
-
புதிய கேப்டன் ஹோல்டர் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு நாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், 23. இதுவரை 8 டெஸ்ட் (380 ரன், 16 விக்.,), 33 ஒரு நாள் (317, 46), 3 ‘டுவென்டி–20’ (5 விக்.,) போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்நிலையில், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸ், இலங்கை செல்கிறது. முதல் போட்டி வரும் அக்டோபர் 14ம் தேதி துவங்குகிறது. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ராம்தினுக்குப்பதில் ‘ஆல்–ரவுண்டரான’ ஹோல்டர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றம்: இது குறித்து தேர்வுக்குழு தலைவர் கிளைவ் லிலாய்டு கூறுகையில்,‘‘ மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டதாக உணர்ந்தோம். இதனால் ஹோல்டர் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரரான இவர் அறிவுக்கூர்மையானவர். சக வீரர்களிடம் எப்…
-
- 0 replies
- 315 views
-
-
தெல்லிப்பழை யூனியன்ஸ் வெற்றி கனகநாயகம் சுயந்தன் ஆட்டமிழக்காது பெற்ற சதம் மற்றும் எஸ்.ஜனோசன் பெற்ற அரைச்சதம் மூலம் யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் 50 ஓவர்கள் மட்டுப்படுத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில், தெல்லிப்பழை யூனியன்ஸ் விளையாட்டுக் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற போட்டியில், பருத்தித்துறை ஹாட்லிஸ் விளையாட்டுக் கழகமும் தெல்லிப்பழை யூனியன்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹாட்லிஸ் விளையாட்டுக் கழகம், 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றது. பிரதீப் 46, ஹரிஹரன் 31, தீபன் 27, சத்திய…
-
- 0 replies
- 228 views
-
-
நல்ல பேட்ஸ்மேனை 3-ம் நிலைக்கு தியாகம் செய்தோம்: ரஹானே சார்பாக சுனில் கவாஸ்கர் இலங்கைக்கு எதிராக சதம் எடுத்த போது ரஹானே. | படம்: ஏ.எஃப்.பி. முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ராவின் 'இன்சைடர்' என்ற கிரிக்கெட் புத்தக அறிமுக விழாவில் ராகுல் திராவிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாடும் போது விவாதத்தின் மையம் அஜிங்கிய ரஹானேயை 5-ம் நிலையிலிருந்து 3-ம் நிலைக்கு மாற்றியது பற்றியதாகவே இருந்தது. ரோஹித் சர்மா அந்த டவுனில் திணறுகிறார் என்பதற்காக ரஹானேயை களமிறக்கியது இந்திய அணி நிர்வாகம், கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் 2-வது இன்னிங்ஸில் அடித்த மேட்ச் வின்னிங் சதம் தவிர அவர் 3-ம் நிலையில் சோபிக்கவில்லை. இந்நிலையில், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ராகுல் திராவிட் அருகே ரஹான…
-
- 0 replies
- 303 views
-
-
வாரிசுகள் ஜொலிப்பதில்லை... சச்சினின் அர்ஜுனும், ராகுலின் சமீத்தும் வரலாற்றை மாற்றுவார்களா? இந்திய கிரிக்கெட்டில் மட்டுமல்ல.. உலகளவில் ஹீரோவாக வலம் வந்த விளையாட்டு வீரர்களின் வாரிசுகளும் தங்கள் தந்தையரின் சாதனையில் பாதியைக் கூட எட்டுவதில்லை. கால்பந்து ஜாம்பவான் பீலே தொடங்கி இந்திய கிரிக்கெட்டர்கள் ஸ்ரீகாந்த், கவாஸ்கர் ஆகியோரின் வாரிசுகள் வரை பல உதாரணங்களை கூற முடியும். ஆனாலும் வாரிசுகள் மீது நாம் வைக்கும் நம்பிக்கை மட்டும் ஒரு போதும் குறைந்து போவதில்லை. புலிக்கு பிறந்தது குறைந்தபட்சம் பாய்ச்சலாவது காட்ட வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பு. இந்நிலையில் இதுவரை மிரட்டாத வாரிசுகள், இனிமேல் மிரட்டும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பவர்…
-
- 0 replies
- 402 views
-
-
மஹேல எதிர்ப்பு பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்துவதால் டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரிய மரபுகள் மீறப்படுவதாக தெரிவித்திருக்கிறார் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட ஜாம்பவானுமாகிய மஹேல ஜயவர்தன. கிரிக்கெட் வரலாற்றில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. டெஸ்ட் போட்டியை காணமைதானத்திற்கு ரசிகர்கள் கூட்டத்தை அதிகரிக்கும் வகையில், சில கவர்ச்சியான அம்சங்களை புகுத்த பல ஆண்டு காலமாக ஐ.சி.சி. முனைந்து வந்தது. பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவது இதில் முக்கியமானது. பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசித்து வந்தது. இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சே…
-
- 0 replies
- 288 views
-
-
கேரளாவில் சச்சின் பெயரில் கிரிக்கெட் ஸ்டேடியம்! கேரளாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு சச்சின் தெண்டுல்கர் பெயர் சூட்டப்படவுள்ளது. இது குறித்து கேரள கிரிக்கெட் சங்கத் தலைவர் மேத்யூ கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில், வீரர்கள் பெவிலியனுக்கு ஏற்கனவே சச்சின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது வயநாட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கிரிக்கெட் ஸ்டேடியத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த மைதானத்திற்கோ அல்லது கேரள கிரிக்கெட் சங்கத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள புதிய ஸ்டேடியத்துக்கோ சச்சின் பெயர் சூட்டப்படும் . இது தொடர்பாக சச்சினிடமும் பேசி முடிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார். வயநாட்டில் இயற்கை எழில் …
-
- 0 replies
- 351 views
-