விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
இளம் பேட்ஸ்மென்களிடம் இன்னிங்சை கட்டமைக்கும் பொறுமை இல்லை: ராகுல் திராவிட் ராகுல் திராவிட். | கோப்புப் படம். இளம் பேட்ஸ்மென்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஷாட் ஆடுவதில் வல்லவர்களாக இருந்தாலும், ஒவ்வொரு ரன்னாக எடுத்து எதிர்முனை பேட்ஸ்மெனை விளையாடச் செய்து, பந்துவீச்சின் பொறுமையை சோதித்து, ஜோடியாக நின்று பெரிய இன்னிங்ஸ்களை கட்டமைக்கும் பொறுமை இல்லாதவர்களாக உள்ளனர் என்று கூறியுள்ளார். இது குறித்து ஈ.எஸ்.பி.என்.-கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் அவர் கூறியதாவது: ஷாட் ஆடுவதில் இளம் தலைமுறையினர் அபாரமாகத் திகழ்கின்றனர். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மேலேறி வந்து சிக்சர்கள் அடிக்கும் படைப்பூக்கம் அபாரமானது, ஆனால் இந்திய கிரிக்கெட்டை பொறுத்த வரை பிரச்சினை என்னவெனில் இரு அணு…
-
- 0 replies
- 260 views
-
-
யாழ். அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டிகள் யாழ். மாவட்ட அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டிகள் நேற்று ஆரம்பமாகின. முதலாவது போட்டியாக கரம் போட்டி யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று ஆரம்பமானது. இன்றும் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. பூப்பந்தாட்டம் எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதி அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்திலும் யாழ். இராணுவ நீதிமன்ற மைதானத்திலும், கால்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் யாழ். குருநகர் பாடுமீ ன் விளையாட்டு மைதானத்திலும் பாசையூர் சென். அன்டனி மைதானத்திலும் நடைபெறவுள்ளன. வலைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 22ஆம் திகதி நாயன்மார்க்கட்டு பாரதி வ…
-
- 0 replies
- 347 views
-
-
குசல் மன உறுதியுடன் ஆற்றலை வெளிப்படுத்தினார்.-ஏஞ்சலோ மெத்யூஸ் 2015-09-04 12:00:05 குசல் ஜனித் பெரேரா மன உறதியுடன் துடுப்பெடுத்தாடி தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பற்றிப்பிடித்துக்கொண்டார் எனக் கருதுவதாக இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் குறிப்பிட்டார். ''அவர் ஓர் ஆற்றல்மிக்க வீரர். எந்தவகையான சூழ்நிலையிலும் அவர் மன உறுதியுடன் விளையாடக்கூடியவர். எமது துடுப்பாட்ட வரிசையைப் பற்றி நாங்கள் பல விடயங்கள் பற்றி கலந்துரையாடினோம். மத்திய வரிசையில் விரைவாக ஓட்டங்களைப் பெறக்கூடிய ஒருவர் எமக்குத் தேவைப்பட்டது. அதனால்தான் குசலை 7ஆம் இலக்க வீரராக கொண்டுவந்தோம்'' என இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது …
-
- 0 replies
- 321 views
-
-
சங்ககராவுக்கு ‘டுவிட்டரில் ஷாக்’ புதுடில்லி: இலங்கை அணி முன்னாள் வீரர் சங்ககராவின் ‘டுவிட்டர்’ கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டது. இலங்கை அணி முன்னாள் வீரர் சங்ககரா, 37. இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன், சர்வதேச அரங்கிலிருந்து விடை பெற்றார். தற்போது இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், இவரின் ‘டுவிட்டர்’ கணக்கை யாரோ ஒருவர் ‘ஹேக்’ செய்துவிட்டார். தவிர, இதில் ஆபாச படமும் ஏற்றப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சங்ககரா ரசிகர்களிடம் உடனடியாக இதை தெரிவித்தார். இது குறித்து சங்ககரா ‘டுவிட்டரில்’ வெளியிட்ட அறிக்கையில்,‘‘என் ‘டுவிட்டர்’ கணக்கை ‘ஹேக்’ செய்துவிட்டனர். இதற்கு முன் வந்த செய்திகளை அழ…
-
- 1 reply
- 419 views
-
-
‘கெட்ட பையனா’ இஷாந்த் சர்மா புதுடில்லி: ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை இஷாந்த் சர்மா உணராதவராக இருக்கிறார். களத்தில் இவரது ஆக்ரோஷம் எல்லை மீறுவது ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, 28. களத்தில் இவரை சீண்டி விட்டால் போதும், மோதலில் இறங்கி விடுவார். கடந்த 2012ல் பாகிஸ்தானுக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில் கம்ரான் அக்மலுக்கு இவர் பவுலிங் செய்தார். அப்போது கம்ரான் ஏதோ கூற, உடனடியாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. ஆஸ்திரேலிய மண்ணில் சமீபத்தில் நடந்த பிரிஸ்பேன் டெஸ்டில், ஸ்மித்தை தகாத வார்த்தைகளால் திட்டிய இஷாந்த் சர்மாவுக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது இலங்கை மண்ணில் அளவுக்கு அதிகமாக …
-
- 1 reply
- 524 views
-
-
அத்தபத்து இராஜினாமா இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மார்வன் அத்தப்பத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். அண்மைய சில தொடர்களாக இலங்கையணி சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்காததையடுத்து, அவர் மீதான அழுத்தங்கள் காணப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே, அவர் சமர்ப்பித்த இராஜினாமாக் கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாக சபை ஏற்றுக்கொண்டுள்ளது. http://tamil.wisdensrilanka.lk/article/1930
-
- 0 replies
- 365 views
-
-
சாதித்துக் காட்டிய கோஹ்லி - நெருக்கடியில் தோனி மிகவும் ‘கூலாக’ செயல்படும் தோனிக்கு நேர்மாறாக உள்ளார் கோஹ்லி. களத்தில் ‘ஹாட்’ தலைவராக காணப்படும் இவர், டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்கு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். டெஸ்டில் களமிறங்கும் அணிகள் பெரும்பாலும் நான்கு முக்கிய பந்துவீச்சாளர்கள், 6 துடுப்பாட்ட வீரர்கள், ஒரு விக்கெட் காப்பாளர் என்ற ரீதியில் தான் களமிறங்கும். முந்தைய தலைவர் தோனி கூட இப்படித் தான் செய்தார். இவ் விஷயத்தில் தலைவர் கோஹ்லி, தாக்குதல் பாணியில் ஐந்து துடுப்பாட்ட வீரர்கள், ஐந்து பந்துவீச்சாளர்கள், ஒரு விக்கெட் காப்பாளர் என களமிறங்கினார். இத்திட்டம் காலி டெஸ்டில் கடைசி நேரத்தில் காலை வாரி விட்டது. இருப்பினும், தனது முடிவில் உறுதியாக இருந்த கோஹ்லி, அடுத்…
-
- 0 replies
- 352 views
-
-
இலங்கை மண்ணில் இந்தியா வென்றதில்லை கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ள இந்திய அணி, இலங்கை மண்ணில் கடந்த 22 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற கவலையை நீடித்துக்கொண்டே இருக்கிறது. தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் உட்பட பல்வேறு சிறந்த பந்து வீச்சாளர்களை கொண்ட இந்திய அணி தரவரிசையில் முதலிடத்தை எட்டிப்பிடித்துள்ளது. வெளிநாடுகளில் தங்களுடைய சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சால் அசத்தியுள்ள இந்திய அணி இலங்கையில் மட்டும் ஜொலித்ததில்லை. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இலங்கையில் இந்திய அணி 6 முறை சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் கடந்த 1993ஆ-ம் ஆண்டு மட்டுமே டெஸ்ட் தொடரை வென்றுள்ள…
-
- 77 replies
- 9.4k views
-
-
ஐபிஎல் சூதாட்ட வழக்கில் விடுவிக்கப்பட்ட வீரர்களுக்கு எதிராக மேல்முறையீடு! புதுடெல்லி: ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் விடுவிக்கப்பட்ட 36 வீரர்களுக்கு எதிராக டெல்லி காவல்துறை மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் உள்ளிட்ட 36 விளையாட்டு வீரர்கள், குற்றம் செய்ததற்கான போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி, அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்நிலையில், பாட்டியாலா நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 36 விளையாட்டு வீரர்களுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில், டெல்லி காவல்துறை மேல்முறை…
-
- 0 replies
- 178 views
-
-
வார்த்தைகளால் தனது ஆக்ரோஷத்தை விற்பனை செய்கிறார் கோலி: பிஷன் பேடி காட்டம் வெற்றி பெற்று விட்டோம் அதற்காக அதனை நாராசமாக கொண்டாடுவதா? என்று கேட்கிறார் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி. | கோப்புப் படம்: வி.வி.சுப்ரமணியம். தேவையற்ற ஆக்ரோஷம் இசாந்த் சர்மாவின் தடையில் பரிதாபமாக முடிவடைந்துள்ளது என்று கூறிய முன்னாள் இந்திய கேப்டன் பிஷன் சிங் பேடி, விராட் கோலி தனது ஆக்ரோஷம் பற்றிய பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் பிஷன் சிங் பேடி கூறியதாவது: “ஆக்ரோஷம் பற்றிப் பேசிப் பேசியே கடைசியில் அது இசாந்த் சர்மாவின் தடையில் முடிந்துள்ளது. இதுதான் கிரிக்கெட் களத்திலிருந்து நாம் விரும்புவதா? இது பரிதாபமிக்க ஆக்ரோஷ வெளிப்பாடு. இன்னொன்றை…
-
- 0 replies
- 277 views
-
-
முதல் தர போட்டியிலாவது அனுமதியுங்கள்: கெஞ்சும் சல்மான் பட் பாகிஸ்தான் கிரிக் கெட் அணி 2010-ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்தது. அப்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சல்மான் பட், முகமது ஆசிப் மற்றும் முகமது சமி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு ஐந்து வருடங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த தடை இன்றுடன் முடிவடைகிறது. இவர்கள் மூன்று பேரும் உடனடியாக சர்வதேச அணியில் சேர்த்துக்கொள்ள தகுதி பெறமாட்டார்கள் என்று கடந்த புதன்கிழமை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்தது. மேலும், அவர்களுக்கான விரிவான நடவடிக்கை திட்டத்தையும் அறிவித்தது. அ…
-
- 0 replies
- 399 views
-
-
சந்திமால், இசாந்துக்கு தடை, லகிரு, தம்மிக்கவுக்கு அபராதம் September 1, 2015 09:03 pm தினேஷ் சந்திமால் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோருக்கு தலா ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இன்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது. கடந்த 28ம் திகதி ஆரம்பமான, இந்த போட்டியின் 4-வது நாள் ஆட்டமான நேற்று 2-வது இன்னிங்சில் இந்தியா துடுப்பெடுத்தாடிய போது, 10-வது விக்கெட்டாக இசாந்த் சர்மா களம் இறங்கினார். இதன்போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக பிரசாத் இசாந்த் சர்மாவிற்கு தொடர்ந்து பவுன்சராக வீசினார். இதனால் கோபம் அடைந்த இசாந்த் சர்மா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.…
-
- 1 reply
- 250 views
-
-
19வயதிற்குட்பட்ட கால்பந்தாட்ட அணியில் இரண்டு யாழ். வீரர்கள் ஆசிய பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதிற்குட்பட்ட 43ஆவது சர்வதேச கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடர் சீனாவில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதிமுதல் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதிவரை நடைபெறும் இப்போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணி நேற்றுமுன்தினம் சீனாவுக்கு பயணமானது. சீனா சென்ற 19வயதிற்குட்பட்ட இலங்கை கால்பந்தாட்ட அணியில் யாழ். ஹென்றிக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் மன்னார் சேவியர் கல்லூரியின் மாணவரும் இடம்பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம், இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் செபமாலைநாயகம் யூட்சுபன் மற்றும் அமலதாஸ் மதுஸ்ரன் ஆகிய இரு மாணவர்களுமே யாழ். மாவட்டத்தில…
-
- 4 replies
- 1k views
-
-
60 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய இந்திய அணி: சுவையான தகவல்கள் இலங்கை அணியை அனைத்து இன்னிங்ஸ்களிலும் ஆல் அவுட் செய்த இந்திய அணி. | படம்: ஏ.எஃப்.பி. உலகக் கோப்பை 2015-ன் போது எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் (அரையிறுதி நீங்கலாக) இந்திய அணியினர் வீழ்த்தியது போல் தற்போது இலங்கைக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளிலும் அந்த அணியை 6 முறை ஆல் அவுட் செய்து 60 விக்கெட்டுகளை இந்திய அணியினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கைக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் 117 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 2-1 என்று கைப்பற்றி 22 ஆண்டுகளூக்குப் பிறகு இலங்கை மண்ணில் சாதனை புரிந்துள்ளது, இந்த தொடர் சார்ந்த முக்கிய புள்ளி விவரங்கள் வருமாறு: 1988-89 நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா அந…
-
- 0 replies
- 315 views
-
-
33 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து ஒரு ஓவர் வீசி திரும்பிய ஆஸ்திரேலிய வீரர்! இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டி20 கிரிக்கெட் போட்டி அயர்லாந்தில் உள்ள கார்டீப் நகரில் நடைபெற்றது. இந்த ஒரே ஒரு போட்டிக்கான டி20 ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்துவீச்சாளர் கேமரான் பாயிஸ் இடம் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரிஸ்பேன் நகரில் இருந்து கார்டீப் நகருக்கு 33 ஆயிரம் கிலோ மீட்டர் பறந்து வந்து கேமரான் பாயிஸ் போட்டியில் பங்கேற்றார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் அவர் இடம் பெற்றிருக்கவில்லை. அடுத்து நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிக்கான அணியிலும் கேமரான் பாயிஸ் இடம் பெறவில்லை.எனவே இந்த டி 20 போட்டி முடிந்தவுடன் அவர் உடனடியாக தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். …
-
- 0 replies
- 974 views
-
-
பந்தை நேரா தலைக்கு வீசினா போய் சேந்துருவேன்லா... இஷாந்த் சர்மா செய்கையால் பரபரப்பு! இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவை இலங்கை பந்துவீச்சாளர் தம்மிகா பிரசாத் விரட்டி சென்றதால் கொழும்பு மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கொழும்பு நகரில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தொடர்ந்து இலங்கை வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இலங்கை அணி பேட்டிங் செய்த போது ஹெராத்துடன் வாய் தகராறில் ஈடுபட்ட இஷாந்த், நேற்றும் இலங்கை வீரர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்தார். நேற்றைய ஆட்டத்தில் தம்மிகா பிரசாத் 76வது ஓவரை வீசிய போது, தொடர்ச்சியாக 3 பவுன்சர்கள் வீசினார். இதனைத் தொடர்ந்து கோபமடைந்த இஷாந்த், பந்தை 'எனது ஹெல்மெட்டுக்கு போடு' என்ற…
-
- 1 reply
- 350 views
-
-
டி20: ஸ்டீவ் ஸ்மித் அதிரடி வீண்; ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து கடைசி ஓவரை அருமையாக வீசிய பென் ஸ்டோக்ஸ். | படம்: ராய்ட்டர்ஸ். கார்டிப் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஒரே டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை, இங்கிலாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. மொயின் அலி 46 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 72 ரன்கள் விளாசி நாட் அவுட்டாக திகழ, கேப்டன் மோர்கன் 39 பந்துகளில் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 74 ரன்களை வெளுத்துக் கட்டினார். இருவரும் இணைந்து 74 பந்துகளில் 135 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் கூல்டர் நைல், கமின்ஸ் சிக்கனம் க…
-
- 0 replies
- 278 views
-
-
ஆஸ்திரேலியாவில் டாக்சி டிரைவரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்! பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அர்ஷாத் கான் தற்போது ஆஸ்திரேலியாவில் டாக்சி டிரைவராக மாறியுள்ளார். கடந்த 1997ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமான அர்ஷாத் கான், சுழற்பந்துவீச்சாளர் ஆவார். 2005 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 58 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். கொச்சியில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது இவரது அதிகபட்ச சாதனை ஆகும். கடந்த 2001ஆம் ஆண்டு வரை அர்ஷாத் கானுக்கு பாகிஸ்தான் ஒருநாள் அணியில் இடம் கிடைத்து வந்தது. அதற்கு பின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. தொடர்ந்து 2005ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவர், சிட்னி நகருக்க…
-
- 0 replies
- 308 views
-
-
சூழ்நிலையின் அழுத்தம் காரணமாக நோ-பால்கள் வீசி விடுகிறேன்: இசாந்த் சர்மா இசாந்த் சர்மா. | படம்: ராய்ட்டர்ஸ். கொழும்பு டெஸ்ட் போட்டியில் தொழில்நேர்த்தியான வேகப்பந்து வீச்சில் நேற்று 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இசாந்த் சர்மா, தான் அதிகம் நோ-பால்கள் போடுவது பற்றி கருத்து கூறியுள்ளார். இந்த 5 விக்கெட்டுகள் மூலம் இசாந்த் சர்மா தனது 65-வது டெஸ்ட் போட்டியில் 197-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். இந்நிலையில் தனது பவுலிங் குறித்து இசாந்த் சர்மா கூறும்போது, “நாங்கள் எந்த இலக்கையும் நிர்ணயிக்கவில்லை. 2-வது இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுக்கலாம் என்பது இலக்காக இருக்கலாம். நான் பந்து வீசும் போது ஒரு பவுலர் மட்டுமே. பந்துவீச்சு வரிசையின் தலைவர் அல்ல. எனக்குத் தெரிந்ததை நான் மற்றவர்களிட…
-
- 0 replies
- 375 views
-
-
வெளிநாட்டு மண்ணில் சிலை அமைக்கப்பட்ட ஒரே இந்திய விளையாட்டு வீரர் தயான்சந்த்! ஹாக்கி ஜாம்பவான் தயான்சந்தின் 110வது பிறந்த தினமான இன்று, இந்திய விளையாட்டுத்தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தருணத்தில் தயான் சந்த் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை பார்க்கலாம் இந்திய ராணுவத்தின் தனது 16வது வயதில் இணைந்த தயான்சந்த், நிலவொளியில் ஹாக்கி பயிற்சியில் ஈடுபடும் வழக்கம் கொண்டவர். இதனால்தான் தயான் சிங் என்ற இயற்பெயருடன் 'சந்த்' என்ற பெயரும் ஒட்டிக் கொண்டது.' சந்த் 'என்றால் ஹிந்தி மொழியில் நிலவு என்று அர்த்தம். 'சந்த் பாய்' என்று சக வீரர்கள் அழைக்க, இவர் பெயரான தயான் சிங்கில் இருந்து, சிங் மறைந்து தயான் சந்த் என்று ஆகி விட்டது. 1928ஆம் ஆண்டு, ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஒலிம்பிக் போட்டியி…
-
- 1 reply
- 749 views
-
-
கென்ய வீரருக்கு பயிற்சியாளரான யூடியூப்: உலகத் தடகளத்தில் தங்கம் வென்றார்! யூடியூப் வீடியோக்களின் பயன் பற்றி விளக்கத் தேவையில்லை. ஆனால் தற்போது பயிற்சியாளர் எவரும் இல்லாமல் யூடியூப் வீடியோ காட்சிகளை பார்த்து பயிற்சியில் ஈடுபட்டு, உலகத் தடகளத்தில் வீரர் ஒருவர் தங்க பதக்கம் வென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. பெய்ஜிங் நகரில் நடந்த உலகத் தடகளப் போட்டியில் கென்யா 7 தங்கம் உள்பட 16 பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்தது. கென்ய வீரர் ஜுலியஸ் எகோ, ஈட்டி எறிதல் போட்டியில் 92. 72 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஜுலியஸ் தனக்கென்று தனியாக எந்த பயிற்சியாளரையும் வைத்துக் கொள்ளவில்லை. யூடியூப்பில் மற்ற வீரர்களின் சாதனைகளை பார…
-
- 0 replies
- 318 views
-
-
சாம்பியன்ஸ் லீக் ஒரே பிரிவில் பேயர்ன்மியூனிச், ஆர்சனல்! இந்த ஆண்டுக்கான (2015-16) சாம்பியன்ஸ் லீக் தொடர் அட்டவணை விபரம் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 'எப்' பிரிவில் ஜெர்மனி ஜாம்பவான் பேயர்மியூனிச் அணியுடன் ஆர்சனல், ஒலிம்பிகாஸ் மற்றும் டைனமோ சக்ரப் அணிகள் இடம் பெற்றுள்ளன. சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டம் நடைபெறவுள்ள சான்சிரோ மைதானம் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி' ஈ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் பேயர் வெவர்கியூசன், ரோமா, பாடே போரிசவ் அணிகள் இருக்கின்றன.' ஏ 'பிரிவில் சக்தர் டொனாஸ்க், ரியல்மாட்ரிட், மால்மோ,பாரீஸ் செயின்ட் ஜெர்மயின் அணிகளும் 'பி ' பிரிவில் மான்செஸ்டர் யுனைடெட், பி.எஸ்.வி என்டோவன், சி.எஸ்.கே. மாஸ்கோவா, வுல்ஸ்பர்க் ஆகிய அ…
-
- 0 replies
- 277 views
-
-
உலக தடகளம்: 16 பதக்கங்களுடன் கென்யா முதலிடம் மகளிர் ஈட்டி எறிதலில் இலக்கை நோக்கி எறிகிறார் ஜெர்மனியின் கேத்தரினா மாலிட்டர். படம்: ஏ.எப்.பி. சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற 15-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. 9 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் கென்யா 7 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. ஜமைக்க அணி 7 தங்கம் உள்பட 12 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், அமெரிக்கா 6 தங்கம் உள்பட 18 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன. போட்டியை நடத்திய சீனா ஒரு தங்கம் உள்பட 9 பதக்கங்களுடன் 11-வது இடத்தைப் பிடித்தது. 17 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஒரு பதக்கம்கூட கிடைக்கவில்லை. கடைசி நாளான நேற்று நடைபெற்ற ஆடவர் 4x400 …
-
- 2 replies
- 996 views
-
-
உசேன் போல்ட்டை கீழே தள்ளிவிட்ட கேமராமேன் (வீடியோ): பெய்ஜிங் அதிர்ச்சி சம்பவம் சீனாவின் பெய்ஜிங் நகரில் உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் 9.79 வினாடிகளில் கடந்து சாம்பியன் ஆனார். இந்நிலையில் 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார். வெற்றி உற்சாகத்தில் மைதானத்தில் குழுமி இருந்த ரசிகர்களுக்கு கைகொடுத்த வண்ணம் போல்ட் வந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்வை படம் பிடித்த டி.வி. கேமராமேன் ஒருவர் தவறுதலாக பின்பக்கத்தில் போல்ட் மீது மோதிவிட்டார். இதில் நிலைதடுமாறிய போல்ட் தலைகுப்புற கீழே விழுந்தார். ஆனாலும் தனது ஸ்டைலில் 'டைவ்' அடித்து எழுந்த உசேன் போல்ட், மீண்டும் சாதாரணமாக ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று சென்றார். http://www.vik…
-
- 0 replies
- 197 views
-
-
கத்தாரில் இந்தியர்களை நம்பி களமிறங்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்! பாகிஸ்தானின் சூப்பர் லீக் போட்டியின் முதல் சீசன், கத்தார் நாட்டில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குட்டி நாட்டில் லட்சக்கணக்கான இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் வசிப்பதால், இந்த போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்புகிறது. இந்தியாவின் ஐ.பி.எல். போட்டியை போல, பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முயற்சி எடுத்து வருகிறது. அடுத்த ஆண்டு, இந்த தொடரின் முதல் சீசனை நடத்தி விட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த தொடரை பாகிஸ்தானில் நடத்தாமல் வளைகுடா நாடுகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் இ…
-
- 0 replies
- 307 views
-