விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
சிஎஸ்கே- வுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு 'தடை' விதிக்க நீதிமன்றம் மறுப்பு! ஐபிஎல் தொடரில் 2 வருடங்கள் விளையாட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்த வழக்கில், தடையை நீக்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சூதாட்ட விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க தலா 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அணியின் குருநாத் மெய்யப்பன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட ஆயுட்கால தடையும் விதித்து லோதா கமிட்டி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் , சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடெட் வழக்கு தொ…
-
- 0 replies
- 264 views
-
-
சங்கக்காரவின் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று ஆரம்பமாகிறது 2015-08-20 09:38:22 இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கொழும்பு பி.சரவணமுத்து அரங்கில் இன்று ஆரம்பமாகவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில், காலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 63 ஓட்டங்களால் வெற்றியீட்டியதால் தற்போது 1:0 விகிதத்தில் இலங்கை அணி முன்னிலையில் உள்ளது. அதேவேளை, இப்போட்டியானது இலங்கையின் தலைசிறந்த கிரிக்கெட் ஜாம்பவான்களின் ஒருவரான குமார் சங்கக்காரவின் இறுதி டெஸ்ட் போட்டியாகவும் இலங்கையின் சார்பில் அவர் விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாகவும் அமையவுள்ளது. 2000 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு…
-
- 23 replies
- 1k views
-
-
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் அடில் ரஷித், ஸ்டீவன் பின் வாய்ப்பு பெற்றனர். இங்கிலாந்து வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, வரலாற்று சிறப்புமிக்க 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் ஜூலை 8ல் கார்டிப் நகரில் துவங்குகிறது. இப்போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் அறிமுக சுழற்பந்துவீச்சாளராக அடில் ரஷித், 27, சேர்க்கப்பட்டார். இவர், இதுவரை 11 ஒருநாள், 6 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் விளையாடி உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பின், வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவன் பின், 26, மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். …
-
- 82 replies
- 5.8k views
-
-
'எனது சாதனைகளுக்கு பெற்றோரே ஊக்க சக்தியாக அமைந்தனர்!'- சங்ககாரா உருக்கம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சங்ககாராவுக்கு, இங்கிலாந்துக்கான இலங்கை தூதர் பதவி வழங்க தயாராக இருப்பதாக பிரிவுபச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை அதிபர் சிறிசேன தெரிவித்தார். சங்ககாராவை வழியனுப்பும் விதமாக கொழும்பு டெஸ்டின் கடைசி நாளான இன்று, சங்ககாராவின் பெற்றோர், மனைவி, நண்பர்கள், இலங்கை அதிபர் சிறிசேனா , பிரதமர் ரணில் உள்ளிட்டோர் கொழும்பு சாரா ஓவல் மைதானத்திற்கு வந்திருந்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியின் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய இலங்கை அதிபர் சிறிசேன…
-
- 2 replies
- 523 views
-
-
உசேன் போல்ட் மீண்டும் சாம்பியன் : இடுப்பு வலி சிறுத்தையின் வேகத்தை குறைக்கவில்லை ! சீனாவில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் மீண்டும் தங்கம் வென்றார். சீனாவின் பெய்ஜிங் நகரில் 15வது உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட், அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினுக்கிடையே கடும் போட்டி நிலவியது. எனினும் பந்தய தலைவை 9.79 வினாடிகளில் கடந்து உசேன் போல்ட் மீண்டும் சாம்பியன் ஆனார். கடந்த சில மாதங்களாக உசேன் போல்ட் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் 100 மீட்டர் ஓட்டத்தை 10 வினாடிகளுக்குள் அவர் கடந்து விடுவாரா? என்ற கேள்வி அவரது ரசிகர்களுக்…
-
- 0 replies
- 325 views
-
-
இலங்கையில் டெஸ்ட் போட்டிகளில் 10 கேட்ச்கள்: ரஹானே சாதனை; மேலும் சுவையான தகவல்கள் இலங்கை மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 10 கேட்ச்கள் பிடித்து ரஹானே சாதனை. | படம்: ஏ.எப்.பி. இலங்கையில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் 10 கேட்ச்களைப் பிடித்த முதல் இந்திய பீல்டர் ஆனார் அஜிங்கிய ரஹானே. ஆனால் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஒரு தொடரில் 10 கேட்ச்களை அசாருதீனும் எடுத்துள்ளார், ஆனால் அது இந்தியாவில் 1993-94-ல் நடைபெற்ற தொடரின் போது என்பது குறிப்பிடத்தக்கது. அமித் மிஸ்ரா 3-வது முறையாக ஒரு இன்னிங்சில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பாக ஆஸ்திரேலியா, வங்கதேசத்துக்கு எதிராக 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மிஸ்ரா. இன்று அவ…
-
- 0 replies
- 291 views
-
-
''அர்ஜென்டினாவுக்காக மெஸ்சி விளையாடக் கூடாது'' !-சக வீரர் கருத்தால் சர்ச்சை தாய்நாட்டுக்காக சோபிக்க முடியாத மெஸ்சி அர்ஜென்டினா அணிக்காக இனிமேல் விளையாடக் கூடாது என்று சக வீரர் கார்லெஸ் டவெஸ் விமர்சித்துள்ளார். பார்சிலோனா அணிக்காக விளையாடும் போது ஜொலிக்கும் மெஸ்சி அர்ஜென்டினா அணிக்காக விளையாடும் போது மட்டும் சொதப்புகிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. அண்மையில் முடிவடைந்த கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் சிலி அணியிடம்அர்ஜென்டினா தோல்வி கண்ட போதும் இந்த விமர்சனம் எழுந்தது. அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான மரடோனா, அர்ஜென்டினா அணியின் தற்போதைய பயிற்சியாளர் மார்ட்டினோ ஆகியோரும் கூட தேசிய அணிக்காக விளையாடும் போது மெ…
-
- 0 replies
- 792 views
-
-
டெஸ்ட் அரங்கில் ஆயிரம் சிக்சர் அடித்து இந்தியா சாதனை! இந்தியா- இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி தற்போது கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 393 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியாவின் நம்பிக்கை வீரர் ரோஹித் சர்மா 5 பவுண்டரி 3 சிக்சருடன் 79 ஓட்டங்கள் எடுத்தார்.இதில் ஹெராத் வீசிய 52வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு விளாசினார். இந்த சிக்சர் டெஸ்ட் போட்டியில் இந்தியா அடித்த ஆயிரமாவது சிக்சர் ஆகும். தொடர்ந்து இந்த போட்டியில் ரோகித் சர்மா மேலும் 2 கிச்சர்களை அடித்தார். இதனால் தற்போது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடித்துள்ள சிக்சர்களின் எண்ணிக்கை 1002 ஆக உள்ளது. கடந்த 1932ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்தி…
-
- 0 replies
- 792 views
-
-
கிரிக்கெட்டை தொடர்ந்து ஆகாயத்திலும் தோனி ராஜ்யம் !( வீடியோ) இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதிக்க பயிற்சி பெற்று வருகிறார். இதற்காக ஆக்ராவில் உள்ள பாராட்ரூப்பர்ஸ் பயிற்சி மையத்தில் அவர் பிரத்யேக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று அவர் முதல் முறையாக, பறக்கும் விமானத்தில் இருந்து பாராசூட்டில் தரையிறங்கி சாகசம் செய்தார். இதற்காக ஏ.என். 32 ரக ராணுவ விமானத்தில், 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தரையை நோக்கி குதித்தார். தரையில் இருந்து ஆயிரத்து 250 அடி உயரத்தில், அவர் பாராசூட்டை இயக்கி மிக நேர்த்தியாக தரையிறங்கினார். தோனியுடன் சில ராணுவ வீரர்களும் பாராசூட்டில் தரையிறங்கினர். இது போன்று இன்னும் 4 முறை அவர் பாராசூட்டில் …
-
- 1 reply
- 723 views
-
-
சச்சினுக்கு பிறகு சங்ககாராவுக்கு நடுவர்களும் மரியாதை! இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் உலகின் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவருமான குமார் சங்கக்கராவுக்கு இந்தியாவுக்கு எதிரான இந்த 2வது டெஸ்ட் போட்டியோடு தனது 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். கொழும்பு சாரா ஓவல் மைதானத்தில் சொந்த மண்ணில் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய சங்கக்காரா, தனது சொந்த மண்ணிலே உறவினர் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் விடைபெறுகிறார். போட்டி முடிந்ததும் இலங்கை கிரிக்கெட் வாரியம் இவருக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி கவுரவப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியா சார்பில் பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர் கொழும்புவுக்கு நேரில் சென்று சிறப்பு பரிசு வழங்கி சங்ககாராவை கவுரவப…
-
- 0 replies
- 354 views
-
-
கிரிக்கெட்: இந்தியாவை எதிர்த்து இங்கிலாந்தில் ஆர்ப்பாட்டம்! கிரிக்கெட் விளையாட்டை இந்தியா, ஆஸ்திரேலிய நாடுகளின் வாரியங்கள் அழித்து வருவதாக, ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் ஓவல் மைதானத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன், இங்கிலாந்து எம்.பி டெமியன் கோலின்ஸ் தலைமையில், 100க்கும் மேற்பட்டவர்கள் ஓவல் மைதானத்திற்கு வெளியே திரண்டனர். பின்னர் கிரிக்கெட் விளையாட்டை இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய நாட்டு வாரியங்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமென்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து தலா ஒரு நாட்டுக்கு ஒரு நிமிடம் வீதம் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செல…
-
- 0 replies
- 362 views
-
-
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தடையை நீக்ககோரி மனு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை அணியின் மேலாளர் ஜோர்ஜ் ஜான் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிகாரி ஒருவர் செய்த தவறுக்காக அணியை முடக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் தடையால் முக்கிய வீரர்கள் அணியை விட்டு சென்றுவிடுவார்கள் என்றும் வீரர்களை மீண்டும் அணிக்கு கொண்டுவருவது கடினமானது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் சூதாட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அமைத்த ஆர்.எம் லோதா தலைமையிலான குழு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் 2 ஆண்டுகளுக்கு போட்டியில் …
-
- 0 replies
- 426 views
-
-
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்? - செப்டம்பர் மாதத்தில் முடிவு படம்: ஏ.எஃப்.பி. புதிய பயிற்சியாளர் குறித்த முடிவை சச்சின், லஷ்மன், கங்குலி ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு எடுக்கும் என்று பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் குறித்த முடிவு செப்டம்பர் மாதத்தில் உறுதியாக எடுக்கப்பட்டு விடும் என்று அனுராக் தாக்கூர் உறுதி தெரிவித்தார். அதாவது தென் ஆப்பிரிக்க அணியின் நீண்ட தொடருக்கு முன்பாக பயிற்சியாளர் குறித்த முடிவெடுக்கப்படும் என்றார் அனுராக் தாக்கூர். இது குறித்து அவர் கூறும்போது, “எந்த ஒரு அணிக்கும் முழு நேர பயிற்சியாளர் தேவை. நாங்கள் சிறிது கால அவகாசம் எடுத்துக் கொள்கிறோம், செப்டம்பர் மாதம் பயிற்சியாளர…
-
- 0 replies
- 207 views
-
-
தப்பாக டெலிவரி செய்த ஹோட்டல் ஊழியர்.. தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு வியூகம் பேஸ்புக்கில் லீக்கானது செஞ்சூரியன்: நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எந்த மாதிரியான பந்துகளை வீச வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க பவுலர் டேல் ஸ்டெயினுக்கு அனுப்பப்பட்ட ஐடியாக்கள் அடங்கிய டிப்ஸ், வேறு ஒருவரின் கையில் சிக்கி தற்போது அம்பலமாகியுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியரினில் நடக்கிறது. இதையடுத்து, நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை சமாளிக்க தென் ஆப்பிரிக்க முன்னணி பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினுக்கு வியூகம் அமைத்து கொடுத்தார் கோச். இதற்காக ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் எந்த இடத்தில் பந்து வீச வேண்டும், அவ…
-
- 1 reply
- 241 views
-
-
நிர்வாக மாற்றத்துடன் சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஐ.பி.எல்.லில் தொடரும்? தடை விதிக்கப்பட்ட சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளின் நிர்வாகத்தை மாற்றிவிட்டு ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கவைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சூதாட்ட விவகாராத்தால் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கத் தடை விதித்து லோதா கமிட்டி உத்தரவிட்டது. இந்த அணிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டணை குறித்து ஐ.பி.எல். அமைத்துள்ள குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர். ஐ.பி.எல். தொடரை பொறுத்த வரை சென்னை, ராஜஸ்தான் அணிகள் முக்கிய இடம் வகிப்பவை. இந்த அணிகள் தொடரில் இடம் பெறாவிட்டால் ஐ.பி.எல். தொடரின் மவுசு பாதிக்கப்படும் என்று ஐ.பி.எல். நிர்வாகக் குழு கருதுகிறது. எனவே இந்த இரு அண…
-
- 1 reply
- 244 views
-
-
இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் எவ்வளவு? இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள பட்டியலை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. வீரர்களின் ஊதியம் ஏ, பி, சி என்ற மூன்று நிலைகளில் பிரிக்கப்படுகிறது. வீரர்களின் செயல்பாடு, அனுபவம் ஆகியவற்றை வைத்து வீரர்களுக்கு வீரர் சம்பளம் வேறுபடும். அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் தோனி, டெஸ்ட் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களின் அடிப்படை ஊதியம் ஒரு கோடி ஆகும். 'ஏ' பிரிவில் டோனி, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 1 கோடி வழங்கப்படும். 1 டெஸ்ட் போட்டிக்கு ரூ. 5 லட்சமும், ஒருநாள் போட்டி ஒன்றுக்கு 3 லட்சமும் சம்பளமாக வழங்கப்படுகிறது. பிரிவு 'பி'யில் ஓஜ…
-
- 0 replies
- 308 views
-
-
எனது குடும்பமே ஒரு விளையாட்டு குடும்பம். அதுக்காக நாங்கள் எல்லாருமே பெரிய விளையாட்டு வீரர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. எந்த விளையாட்டு என்றாலும் இரசிப்போம். ( அந்த விளையாட்டையும் என்று அர்த்தப்படக்கூடாது ) அப்பா மாணவப் பருவத்தில் தனது கல்லூரிக்காக விளையாடியவர். தொலைக்காட்சியில் எந்த விளையாட்டு ஒளிபரப்பினாலும் இரசித்து பார்ப்பார். பொருளாதாரத்தடை மின்சாரம் இல்லாத நேரத்தில் கூட ஏதாவது முயற்சி செய்து துடுப்பாட்ட வர்ணனை கேட்காவிட்டால் அவருக்கு தூக்கம் வராது . அப்படிப்பட்டவருக்கு பிள்ளையாக பிறந்த எங்களுக்கும் அவரது பயித்தியம் தொற்றிக் கொண்டது . (நேரம் வரும் போது தொடர்வேன். அதுவரை கிளார்க் தொடர்பான செய்திகளை படங்களை விரும்பினால் யாரவது இணைக்கலாம் . நன்றி, )
-
- 0 replies
- 315 views
-
-
ஐ.எஸ்.எல்.லில் நான் விளையாடுவதை அம்மா பார்க்க வேண்டும்: சென்னையின் எப்.சி. வீரர் கணேஷ் ஆசை கணேஷ் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டபோது, சென்னை சார்பில் களமிறங்கிய சென்னையின் எப்.சி. அணியில் தமிழர்கள் யாரும் இல்லையே, கால்பந்துக்கு பெயர் பெற்ற சென்னையில் இருந்து ஒருவர்கூட அணியில் சேர்க்கப்படவில்லையே என சென்னை ரசிகர்களும், கால்பந்து ஆர்வலர்களும் ஆதங்கப்பட்டனர். ஆனால் இந்த முறை சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த டி.கணேஷ் மூலம் அந்த குறை தீர்ந்துள்ளது. மத்திய நடுகள வீரரான கணேஷின் ஆட்டத்தைப் பார்க்க வியாசர்பாடியில் உள்ள அவருடைய பெற்றோர்களும், உறவினர்களும், நண்பர்களும், அவருடன் விளையாடிய சக வீரர்களும், கால்பந்து ரசிகர்களும் காத்துக்கொ…
-
- 0 replies
- 215 views
-
-
சங்கக்காராவின் கடைசி டெஸ்ட் போட்டி: இந்திய அணிக்கு காத்திருக்கும் உண்மையான சவால் படம்: ராய்ட்டர்ஸ். இந்திய அணியின் பிரச்சினைகளை வீரர்களை பதிலீடு செய்வதன் மூலம் நிவர்த்தி செய்ய முடியாது. பிரச்சினை மேலும் ஆழமானது, அமைப்பு ரீதியானது. கொழும்புவில் வியாழனன்று சரவணமுத்து ஓவல் மைதானத்தில் இலங்கையை இந்திய அணி தனது 2-வது டெஸ்ட் போட்டியில் எதிர்கொள்கிறது. இந்த டெஸ்ட் போட்டியுடன் சங்கக்காரா ஓய்வு பெறுகிறார், அதற்காக இலங்கை தயாராகி வருகிறது. எனவே தொடரை வென்று அவரை சிறந்த முறையில் வழியனுப்ப இலங்கை அணி தீவிரமாக முனைப்பு காட்டும் என்பதால் இந்திய அணிக்கு பெரும் சவால் காத்திருக்கிறது என்றே கூற வேண்டும். இதற்காக ஒருவேளை பேட்டிங் சாதக ஆட்டக்களம் இடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை…
-
- 0 replies
- 215 views
-
-
கிங்ஸ் லெவன் வீரர்கள் சூதாட்டம்: பத்திரிகை செய்திகளை கடுமையாக மறுத்த பிரீத்தி ஜிந்தா சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிங்ஸ் லெவன் வீரர்களை அணியின் சக உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா கடுமையாக கண்டித்ததாக வெளிவந்த பத்திரிகை செய்திகள் குறித்து அவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி பிசிசிஐ பணிக்குழு கூட்டத்தில் கிங்ஸ் லெவன் வீரர்களில் சிலர் அணியைத் தோற்கடிக்கும் சூதாட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசியதாக ஊடகங்களில் சில பிரிவினர் செய்தி வெளியிட்டனர். அதாவது ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் வீரர்கள் சிலர் அணியை சூதாட்டப் பணத்துக்காக தோற்கடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டதாகவும் அவர்களை பிரீத்தி ஜிந்தா கண்டித்ததாகவும், அதனை பிசிசிஐ கூட்டத்தில் ஜிந்தா தெரிவித்ததாகவும், …
-
- 0 replies
- 304 views
-
-
ஒரே நாளில் ஓயப் போகும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் இலங்கை அணியின் சங்கக்கார, அவுஸ்திரேலிய அணியின் தலைவர் கிளார்க் மற்றும் அந்த அணியின் தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகிய நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுக்கு நாளை ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்டி அவர்களின் இறுதிப் போட்டியாக அமையவுள்ளது. சங்கக்கார நாளை கொழும்பு பி.சாரா மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தியாவிற்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டிக்குப்பின் ஓய்வு பெறுகிறார். உலக்கிண்ணப் போட்டிக்குப்பின் ஓய்வு பெற இருந்த அவரை இலங்கை கிரிக்கெட் சபை பாகிஸ்தான்இ இந்தியாவிற்கு எதிரான தொடரில் விளையாடும்படி கேட்டுக்கொண்டது. அதன்படி பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தலா இரண்டு போட்டிகளில் வி…
-
- 0 replies
- 363 views
-
-
சங்காவை முந்தினார் மெத்தியூஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதன்படி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 860 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தை பெற்றுள்ளார். அதே சமயம் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் அணியின் முன்னாள் தலைவருமான குமார் சங்கக்கார 851 புள்ளிகள் பெற்று 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இலங்கை விக்கெட் காப்பாளர் சந்திமால் (646 புள்ளிகள்) 23ஆவது இடத்திலும், திரிமான்ன 4 இடங்கள் முன்னேறி 78ஆவது இடத்தையும் பிடித்த…
-
- 0 replies
- 229 views
-
-
இந்திய கால்பந்து வீரர்கள் செய்ய முடியாததை நிகழ்த்திக் காட்டிய வீராங்கனை! இங்கிலீஸ் பிரீமியர் லீக் அணியான வெஸ்ட் ஹாம் யுனைடெட்டின் மகளிர் அணியில் இடம் பிடித்து இந்திய அணியின் கோல்கீப்பர் அதிதி சவுகான் புதிய சாதனை படைத்துள்ளார். இங்கிலீஸ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இதுவரை ஒரு இந்தியர் கூட விளையாடியது இல்லை. இந்த தொடரில் விளையாடி வரும் வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணி புகழ்பெற்ற கால்பந்து அணியாகும். இதன் மகளிர் அணியில் விளையாட இந்திய அணியின் கோல்கீப்பர் அதிதி சவுகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியை சேர்ந்த அதிதி கடந்த 2013ஆம் ஆண்டு தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற உதவினார். இன்ஷியான் ஆசியப் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருந…
-
- 0 replies
- 563 views
-
-
உதவும் மனப்பான்மை விளையாட்டு வீரர்கள்: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இடம் இல்லை! உதவும் மனப்பான்மை கொண்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கூட வீரர் கூட இடம் பெறவில்லை.அதே வேளையில் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி இடம் பெற்றுள்ளார். கருணை உள்ளத்துடன் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் விளையாட்டு வீரர்களில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார். அண்மையில் குழந்தையின் மூளை அறுவைசிகிச்சைக்கு 83,000 அமெரிக்க டொலர்கள் வழங்கினார். சிகிச்சை பெற்ற குழந்தை தற்போது பூரண குணமடைந்து நலமாக இருக்கிறது. அதுபோல் பல்வேறு நலப்பணிகளுக்காக ரொனால்டோ நன்கொடை வாரி வழங்கி வருகிறார். 'டூசம்திங்' என்ற அமைப்பு உலகில் தொண்டுள்ளத்துடன் செயல்ப…
-
- 0 replies
- 186 views
-
-
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்–தீபிகா பல்லிக்கல் திருமணம்! (படங்கள்) சென்னை: கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்– ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணி வீரரான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும், சென்னையை சேர்ந்த இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல்லும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக காதலித்து வந்தனர் காதலர்களாக வலம் வந்தவர்கள், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2013 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து விளையாட்டு பங்கேற்கும் சூழல் இருந்ததால் அவர்கள் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது இந்நிலையில், தினேஷ் கார்த்திக்–தீபிகா பல்லிக்கல் திருமணம் …
-
- 0 replies
- 513 views
-