விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
இந்திய அணியை விட தென் ஆப்பிரிக்கா கடினமான அணி: மஷ்ரபே மொர்டசா இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டிக்கு முன்னதான பயிற்சியின் போது கைகொட்டிச் சிரிக்கும் மஷ்ரபே மொர்டசா. | படம்: ஏ.பி. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியதையடுத்து வங்கதேச அணியின் கேப்டன் மொர்டசா தன்னம்பிக்கையின் உச்சத்துக்குச் சென்றுள்ளார். பிடி நியூஸ்24.காம் தளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இந்திய அணியை விட அடுத்ததாக தாங்கள் சந்திக்கும் தென் ஆப்பிரிக்கா நிச்சயமாக கடினமான அணியே என்று கூறியுள்ளார். இத்தனைக்கும், ஐசிசி ஒருநாள் போட்டி அணிகள் தரவரிசையில் இந்திய அணி 2-ம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 4-ம் இடத்திலும் உள்ளது. மேலும் வங்கதேசத்தின் கடும் வெயிலில் தென் ஆப்பிரிக்கா தொ…
-
- 0 replies
- 307 views
-
-
வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன்தான் உலகிலேயே சிறந்த ஆல்ரவுண்டர்! வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியிலும் சிறந்த ஆல்ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.சி.சி ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இலங்கை வீரர் தில்ஷன் திலகரத்னேவை பின்னுக்கு தள்ளி, 4 புள்ளிகள் அதிகம் பெற்று சாதித்தார் ஷாகிப் அல் ஹசன். இந்தியாவுக்கு எதிரான தொடரில், வங்கதேச அணிக்காக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 123 ரன்களை (52,51,20) சாகிப் அல் ஹசன் அடித்தார். அதேபோல் இந்த 3 ஒருநாள் போட்டியிலும் 99 ரன்களை விட்டுக் கொடுத்து, 3 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியிருந்தார். இதில் முதல் ஒருநாள் போட்டியில் 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அ…
-
- 1 reply
- 246 views
-
-
குரங்குச் சேட்டை செய்பவர் கேப்டனாக இருக்க முடியாது.. கோஹ்லிக்கு கிர்மானி "நறுக்" பெங்களூரு: கேப்டன் டோணிக்கு முன்னாள் இந்திய விக்கட் கீப்பர் சையத் கிர்மானி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கேப்டன் என்றால் இவரைப் போலத்தான் இருக்க வேண்டும். மைதானத்தில் குரங்குச் சேட்டை செய்பவர் கேப்டனாக இருக்க முடியாது என்றும் அவர் மறைமுகமாக விராத் கோஹ்லியை கண்டித்துள்ளார். வருங்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக வருபவர்கள், டோணியைப் பின்பற்ற வேண்டும் என்றும் கிர்மானி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்த கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தவர் கிர்மானி. ஒன்இந்தியாவுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: டோணிதான் பெஸ்ட்…
-
- 0 replies
- 290 views
-
-
நமக்குத் தேவை வேகப்பந்து வீச்சாளர்களா? நல்ல பந்து வீச்சாளர்களா?: தோனி வேகப்பந்து வீச்சாளர்கள் மீது தோனி சாடல். | கோப்புப் படம். வங்கதேசத்துக்கு எதிராக 1-2 என்று ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணியின் கேப்டன் தோனி, ஆட்டம் முடிந்த பிறகு கேள்விகளுக்கு பதில் அளித்தார். பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய தோனி, 'நமக்குத் தேவை வேகப்பந்து வீச்சாளர்களா, அல்லது நல்ல பந்து வீச்சாளர்களா என்பதை முடிவெடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். நேற்றைய ஆறுதல் வெற்றி குறித்து தோனி, கூறும் போது, “ரன்கள் இருந்தால் வெற்றி நிச்சயம், இந்தப் போட்டியில் ரன்கள் குவித்தோம். நமது பவுலர்களுக்கு கூடுதலாக 10-15 ரன்களைக்கான சவுகரியம் அளிக்கும் போது ஆட்டம் சுவாரசியமாகிறது. சில வேளைகளில் இத்தகைய, பந்துகள் மெத…
-
- 0 replies
- 331 views
-
-
ஒருநாள் போட்டி பவுலிங் தரவரிசை: டாப்-10-ல் அஸ்வின் ரவிச்சந்திரன் அஸ்வின். | படம்: ஏ.பி. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பவுலிங் பிரிவில் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் டாப்-10-ல் நுழைந்தார். அஸ்வின் 2 இடங்கள் முன்னேறி 10-ம் இடம் பிடித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி 4-ம் இடத்தில் உள்ளார். ஷிகர் தவண் 7-ம் இடத்திலும் கேப்டன் தோனி 8-ம் இடத்திலும் உள்ளனர். சுரேஷ் ரெய்னா 2 இடங்கள் முன்னேறி 18-ம் இடத்திற்கு வந்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் டிவில்லியர்ஸ் 902 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார், அவரை விட 42 புள்ளிகள் குறைவாக உள்ள சங்கக்காரா 2-ம் இடத்தில் உள்ளார். ஆம்லா, விராட் கோலி, தில்ஷன், வில்லியம்சன், ஷிகர் தவண், தோனி, ராஸ் டெய்லர், கிளென்…
-
- 0 replies
- 367 views
-
-
'' எனக்கு பின்னால் சுரேஷ் ரெய்னா இருப்பதால் தனி தைரியம் பிறந்தது!'' -தோனி வங்கதேசத்துக்கு எதிராக நடந்த தொடரில் சுரேஷ் ரெய்னா 6வது நிலையில் களமிறங்கினார். இதனால் இந்திய அணிக்கு அந்த இடத்தில் விளையாட ஒரு அனுபவ வீரர் கிடைத்துள்ளதாக கேப்டன் தோனி கூறியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி முடிந்த பிறகு தோனி செய்தியாளர்களிடம் கூறுகையில், '' என்னை பொறுத்த வரை 4-வது விக்கெட்டுக்கு அதிகமாக களமிறங்கியதில்லை. 5 வீரர்களுக்கு அப்புறமும் அனுபவம் வாய்ந்த ஒரு வீரர் தேவைப்பட்டார்.. இதனால்தான் சுரேஷ் ரெய்னாவை பின்னால் களமிறக்க முடிவெடுத்தோம். இதன் மூலம் 6-ம் நிலையில் ஒரு அனுபவ வீரர் ரெய்னா மூலம் அணிக்கு கிடைக்கிறார். இவரைப் போலவே 7-வது விக்கெட்டாக களமிறங்க நல்ல வீ…
-
- 0 replies
- 270 views
-
-
பேட்டிங் தரவரிசையில் முதல் 10க்குள் கோலி, தவான், தோனி! ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான சிறந்த வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடத்திற்குள் இந்திய வீரர்கள் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். பட்டியலில் வழக்கம்போல் தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார். இவர் 902 புள்ளிகளை பெற்றுள்ளார். அடுத்த இடத்தில் இலங்கை வீரர் குமார சங்கக்காரா மற்றும் ஹாசிம் ஆம்லா இடம் பெறுகின்றனர். தொடர்ந்து இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலி, 802 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடிக்கிறார். வங்கதேச தொடரில் இந்தியா அணிக்காக 158 ரன்கள் எடுத்த ஷிகர் தவான் 777 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு பிடிக்கிறார். கடந்த தரவரிசை பட்டியலில் தவான் …
-
- 0 replies
- 282 views
-
-
ஒரு தொடரை இழந்தால் தோனிக்குள்ள மரியாதை போய் விடுமா? - சுரேஷ் ரெய்னா கேள்வி! ஒரு தொடரை இழந்தவுடன் தோனிக்குள்ள மரியாதை போய் விடுமா? என்று இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா கேள்வி எழுப்பியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை, இந்திய அணி 2-1 என்று இழந்தாலும், கடைசி போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதால், வொயிட் வாஷில் இருந்து தப்பியது. கடைசி ஒருநாள் போட்டியில் 21 பந்துகளில் 38 ரன்கள் விளாசிய சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனிக்கு களத்திலும் வெளியேயும் எப்போதும் பக்கபலமாக இருப்பவர். வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததும் தோனி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில், ''தோனி எப்போதும் பாசிட்டிவான போக…
-
- 0 replies
- 294 views
-
-
பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஜாகிர் அப்பாஸ் ஐ.சி.சி. புதியதலைவர்! பார்படோஸ்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாகீர் அப்பாஸ், ஐசிசி-யின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணியிடம் வங்கதேச அணி தோல்வியடைந்தது. இதையடுத்து, ஐ.சி.சி. சேர்மன் ஸ்ரீநிவாசனின் உத்தரவின்பேரில்தான் நடுவர்கள், இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக அப்போது ஐ.சி.சி. தலைவராக இருந்த வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தபா கமால் குற்றம் சாட்டியதோடு, பதவியில் இருந்தும் விலகினார். இதையடுத்து அந்த பதவிக்கு தற்போது பாகிஸ்தானை சேர்ந்த ஜாகிர் அப்பாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளில் உள்ள பார்படோசில் நடைபெற்று வருத் ஐ.சி.சி. வருடாந்திர ஆலோசனை கூட்டத்த…
-
- 0 replies
- 311 views
-
-
கிரிக்கெட்டை விடுத்து டென்னிசை பிடிக்கும் கேரள அரசு... ஏன்? திருவனந்தபுரம்: கேரள சுற்றுலா மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்கான விளம்பர தூதராக புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெர்மனியை சேர்ந்த ஸ்டெஃபி கிராஃப் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான முடிவு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ஆனால் ஸ்டெஃபி கிராஃபுக்கு அளிக்கப்படும் சம்பளம், சலுகைகள் என்னவென்று அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பான அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.பாலிவுட் நடிகர் ஷாருக்கான் போன்ற சில பிரபலங்களையும் கேரள மாநில சுற்றுலாத் துறையை மேம்படுத்த அம்மாநில அ…
-
- 0 replies
- 346 views
-
-
இங்கிலாந்து வெற்றி : நியூசி., ஏமாற்றம் மான்செஸ்டர்: நியூசிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி-20’ போட்டியில் இங்கிலாந்து அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்ற நியூசிலாந்து அணி ஒரே ஒரு ‘டுவென்டி-20’ போட்டியில் பங்கேற்றது. மான்செஸ்டரில் நடந்த இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். ஜோ ரூட் அரைசதம்: இங்கிலாந்து அணிக்கு ராய் (23), ஹேல்ஸ் (27) சுமாரான துவக்கம் அளித்தனர். பின் வந்த ஜோ ரூட் அதிரடியாக ரன்கள் சேர்த்தார். பேரிஸ்டோவ் (1), கேப்டன் மார்கன் (4) ஆகியோர் நிலைக்கவில்லை. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் அதிரடியாக ரன்கள் சேர்த்த ரூட், ‘டுவென்டி-20’ அரங்கில் தனது இரண்டாவது அரைசதத…
-
- 0 replies
- 228 views
-
-
பந்து தாக்கியதில் பின்ச் காயம் பர்மிங்காம்: இங்கிலாந்து கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டியில் வேகப்பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் படுகாயம் அடைந்தார். இங்கிலாந்தில் கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன. இதில் நாட்டிகாம்ஷயர், யார்க்சயர் செகண்டு லெவன் அணிகள் மோதிய போட்டி பர்மிங்காமில் நடக்கிறது. இதில் யார்க்சயர் அணிக்காக ஆஸ்திரேலிய வீரர்கள் ஆரோன் பின்ச், மேக்ஸ்வெல் துவக்கம் கொடுத்தனர். பின்ச் 19 ரன் எடுத்த நிலையில், கிறிஸ் ரசல் வீசிய வேகப்பந்து வீச்சை முன் வந்து வேகமாக அடித்து விளையாட முயன்றார். அப்போது பந்து பின்ச் மார்பில் தாக்கியது. வலியால் துடித்த அவர் உடனடியாக களத்தை விட்டு திரும்பினார். பிறகு துப்பிய போது ரத்தமும் சேர்ந்து வந்தது. உடனடியாக…
-
- 0 replies
- 249 views
-
-
ஒலிம்பிக் போட்டிகளுக்கு சிக்கலாம் ஒலிம்பிக் (2016) போட்டிக்கான பல்வேறு மைதானங்கள் இன்னும் தயாராகாமல் உள்ளன. உலக விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி. நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கின்றது. கடைசியாக 2012இல் இங்கிலாந்தில் இப்போட்டி நடந்தது. அடுத்து 2016இல் 31ஆவது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கவுள்ளது. இதற்காக மொத்தம் 14 புதிய மைதானங்களை கட்டுவது, புதுப்பிப்பது என, ரூ.120 ஆயிரத்து 518 கோடி வரை பிரேசில் அரசு செலவிடுகிறது. போட்டி ஆரம்பிக்க இன்னும் 13 மாதங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் பெரும்பாலான பணிகள் முடியாமல் உள்ளன. இங்குள்ள ஒலிம்பிக் பார்க் மைதானம் 44 ஏக்கரில் தயாராகிறது. ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, ச…
-
- 0 replies
- 361 views
-
-
வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மானை சென்னை அணிக்கு ஒப்பந்தம் செய்ய தோனியிடம் பரிந்துரை! இந்திய அணிக்கு எதிராக நடந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாபீசூர் ரஹ்மானை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்ய அந்த அணியின் கேப்டன் மோர்டசா, தோனியிடம் பரிந்துரை செய்துள்ளார். மிர்பூரில் நடந்த முதல் போட்டியில் வங்கதேசத்தின் இளம் பந்துவீச்சாளர் முஸ்தாபீசூர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2வது ஒருநாள் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இரு போட்டியிலும், மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி, முஸ்தாபீசூர் ரஹ்மான் ஆட்டநாயகன் விருதை பெற்றார். முதல் ஒருநாள் போட்டியின்போது தோனி ரன் எடுக்க சென்ற போது, பிட்சின்…
-
- 0 replies
- 299 views
-
-
தோனி சொன்னால் களத்திலேயே செத்துப் போவேன்..ஓவர் உணர்ச்சியைக் காட்டும் அஷ்வின்.. டாக்கா: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி மரணமடையச் சொன்னால், களத்திலேயே அதைச் செய்வேன் என்று, சுழற்பந்து வீச்சாளரும் தமிழக வீரருமான அஷ்வின் தெரிவித்துள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான தொடர் தோல்வியால் நெருக்கடி ஏற்பட்டுள்ள ஒரு நாள் இந்திய அணி கேப்டன் தோனிக்கு, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார். தோனி மிகப்பெரிய நட்சத்திர வீரர் என்றும், அவர் நாட்டிற்காக பல சாதனைகளை செய்துள்ளார் என்றும் அஷ்வின் கூறியுள்ளார். நாட்டிற்காக தோனி செய்ததை நாம் மறக்கக்கூடாது என்றும், ஒட்டு மொத்த இந்திய அணியின் செயல்பாட்டுக்கு தோனியை மட்டுமே குற்றம் சொல்லக் கூடாது எனவும் அஸ்வின் கூறினார். தன்ன…
-
- 2 replies
- 398 views
-
-
இலங்கை சுழல்பந்து வீச்சாளர்கள் திறமையை வெளிப்படுத்தவில்லை என்கிறார் மெத்யூஸ் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான காலி ஆடுகளத் தில் பாகிஸ்தான் சுழல்பந்து வீச்சாளர்களான யசிர் ஷாவும் ஸுல்ஃபிகார் பாபாரும் தனது சுழல்பந்துவீச்சாளர்களை விஞ்சிவிட்டதை இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்களால் தோல்வியடைந்த பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் மெத்யூஸ் கருத்து வெளியிட்டார். யசிரும் பாபாரும் தங்களிடையே 13 விக்கெட்களைப் பகிர்ந்துகொண்டதுடன் மொஹமத் ஹஃபீஸ் இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆனால் இலங்கையின் முன்னணி சுழல்பந்துவீச்ச…
-
- 0 replies
- 246 views
-
-
மொஹமத்ஹவீஸின் பந்துவீச்சு முரணானது என அறிவிப்பு இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியின்போது மொஹமத் ஹவீஸின் பந்துவீச்சுப் பாணி விதிகளுக்கு முரணானது என மத்தியஸ்தர்களால் முறையிடப்பட்டுள்ளது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் முகாமைத்துவம் உறுதி செய்துள்ளது. இந்தப் போட்டியில் ஹவீஸ் 10 ஓவர்கள் பந்துவீசி 2 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். சர்வதேச கிரிக்கெட் பேரவை விதிகளின் பிரகாரம் ஒரே வருடத்தில் ஒரு பந்துவீச்சாளரது பந்துவீச்சுப் பாணி தவறானது என்பது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தது ஒரு வருடம் பந்து வீசத் தடை விதிக்கப்படும். அதன் பின்னரே அவர் மீண்டும் பந்துவீசுவதற்கான மேன்முறையீட்டைச் …
-
- 0 replies
- 222 views
-
-
உலகின் மிகச்சிறந்த முஸ்லீம் விளையாட்டு வீரர் யார் தெரியுமா? பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜினடேன் ஜிடேனுக்கு இன்று 43வது பிறந்தநாள். இந்த தருணத்தில் அவரை பற்றிய சில அரியத் தகவல்கள் இங்கே... ஜினடேன் ஜிடேன் பிரான்ஸ் நாட்டின் ஹீரேவாக கருதப்படுபவர். கடந்த 1998ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியிலும், 2000ஆம் ஆண்டு ஐரோப்பா கோப்பை கால்பந்து போட்டியிலும் இவர் தலைமையில் பிரான்ஸ் கோப்பையை வென்றது ஜினடேனுக்கு பெரிய அளவில் மத நம்பிக்கை கிடையாது. ஆனாலும் உலகின் மிகச்சிறந்த முஸ்லீம் விளையாட்டு வீரர்களில் ஒருவராக ஜிடேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜிடேன் தனது மனைவி வெரோனிகா ஃபெர்னான்டசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 17 வயதில் ஜிடேன் வெரோனிக்காவை சந்தித்ததார். இந்த த…
-
- 1 reply
- 297 views
-
-
கிளென் மெக்ராவின் டாப் 5 பேட்ஸ்மென்கள் 2000-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கிளென் மெக்ராவை 'கவனிக்கும்' சச்சின் டெண்டுல்கர். | கோப்புப் படம்: வி.வி.கிருஷ்ணன். சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட். | கோப்புப் படம். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் சிறப்பு நேர்காணலில் தன் காலத்திய சிறந்த 5 பேட்ஸ்மென்கள் யார், ஏன் என்பதை காரணங்களுடன் விளக்கியுள்ளார் மெக்ரா. ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் இந்நாளைய எம்.ஆர்.எப். வேகப்பந்து அகாடமியின் இயக்குநருமான கிளென் மெக்ரா, 5 பெரிய பேட்ஸ்மென்களை பட்டியலிட்டுள்ளார். இது குறித்து ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் சிறப்பு பேட்டியளித்த போது சச்சின், லாரா, பாண்டிங், திராவிட், ஸ்டீவ் வாஹ் ஆகிய 5 பேட்ஸ்ம…
-
- 0 replies
- 306 views
-
-
இந்திய அணியின் பிரிவினைக்கு காரணம் 'சென்னை'! இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றி, வங்கதேச அணி வரலாற்று சாதனை படைத்து விட்டது. நாளை 3வது ஒருநாள் போட்டியில் இந்திய-வங்கதேச அணிகள் மீண்டும் மோதவுள்ளன. தோல்வியை அடுத்து கேப்டன் பதவியில் இருந்து இறங்கத் தயார் என்று கேப்டன் தோனி அறிவித்துள்ளார். இந்திய அணிக்குள் வீரர்கள் தோனி தலைமையிலும், கோலி தலைமையிலும் இரு குழுவாக பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணிக்குள் ஒற்றுமை இல்லாமல் மோதல் நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது தோனிக்கு எதிராக வீரர்கள் பலர் அணி திரள்வதற்கு, இரு முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படுகிறது. நீண்ட காலமாக அவர் பேட்டிங் பார்மில் இல்லை என்பது முதல் காரணமாக இருக்கிறது. உலகக் கோப்பை போட்டிக…
-
- 0 replies
- 235 views
-
-
21ஆம் நுாற்றாண்டின் இணையற்ற கிரிக்கெட் வீரராக சச்சின் தேர்வு! மெல்பர்ன்: 21 ஆம் நுாற்றாண்டின் மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக சச்சின் தெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையதளத்தில் நடத்திய வாக்கெடுப்பில் அவர் முதலிடம் பிடித்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பிற்கு முன்னதாக, கடந்த 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு கிரிக்கெட்டில் சாதித்த, 100 வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இருந்து சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதில் சச்சினுக்கு 23 சதவீத வாக்கு கிடைத்தது. இரண்டாவது இடத்தை இலங்கை வீரர் சங்கக்காரா 14 சதவீத வாக்குகளுடன் பெற்றார். மூன்றாவது இடத்தை கி…
-
- 0 replies
- 241 views
-
-
கோலி பிரி ஹிட்டை அடிக்காதது ஏன்?...தோனி மீது வெளியில உருக்கம் உள்ளுக்குள் 'கா'! தோனி டிரெஸ்சிங் அறையில் இல்லாதது என்னை என்னவோ செய்தது என்றெல்லாம் துணை கேப்டன் விராட் கோலி உருகி வந்தாலும் அது சும்மா பேருக்குதானாம். உள்ளுக்குள் விராட் கோலி தோனியை சிக்க வைப்பதில்தான் குறியாக இருக்கிறாம். வங்கதேச தொடருக்கு முன்னமே இந்திய அணி இரண்டாக உடைந்து கிடக்கிறதாம். தோனிக்கு ஆதரவாக சென்னை அணி வீரர்கள் சுரேஷ் ரெய்னா, அஸ்வின், மோகித் மோகித் சர்மா மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோர் உள்ளனராம். கோலிக்கு ஷிகர் தவான், முரளி விஜய் . ரோகித் சர்மா உள்ளிட்டோர் ஆதரவாக இருக்கின்றனராம். அணி இரண்டாக உடைந்து கிடப்பதால்தான் வங்க தேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியால் வெற்றி பெறவில்லை என்றும…
-
- 0 replies
- 325 views
-
-
என்ன நடந்ததென்று தெரியும் முன்பே இந்திய அணியை ஊதியது வங்கதேசம்: பிஷன் பேடி தோனி முன்பு போல் கேப்டன் கூல் இல்லை. அவர் அமைதியிழக்கிறார் என்று பிஷன் பேடி கூறியுள்ளார். | படம்: ஏ.பி. என்ன நடந்தது என்று தெரியும் முன்பே வங்கதேசம் இந்திய அணியை ஒருநாள் தொடரில் ஊதித் தள்ளியது என்று பிஷன் சிங் பேடி கூறியுள்ளார். மேலும் பேடி கூறும்போது, கேப்டன் தோனி முதன்முறையாக அமைதி இழந்து காணப்படுவதாகக் கூறினார். “முதல் முறையாக அவரது பேச்சில் அர்த்தமின்மை தெரிகிறது. அவர் இனி ‘கேப்டன் கூல்’ இல்லை என்பது தெரியவருகிறது. அவர் அமைதி குலைந்துள்ளார். இதைக் கூறும்போதே, இன்னொன்றையும் கூறிவிடுகிறேன், நான் எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் குறைகூற விரும்பவில்லை. பவுலர் (முஸ்தபிசுர் ரஹ்மான்) இடித்துத் த…
-
- 0 replies
- 222 views
-
-
இயன் சாப்பலின் உலகளாவிய மனித நேயம்: தெரியாத இன்னொரு முகம் 2002-ம் ஆண்டு கிழக்கு தைமூரில் முகாம்களில் அகதிகளை சந்தித்த இயன் சாப்பல். | படம்: ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் கேப்டனும் தற்போதைய வர்ணனையாளரும், கிரிக்கெட் ஆட்டத்தின் நுட்ப, விஷயஜீவியுமான இயன் சாப்பலின் இன்னொரு உலகளாவிய மனிதநேயவாத முகம் பலரும் அறியாததே. அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பில் இவர் ஆஸ்திரேலியாவுக்கான சிறப்பு பிரதிநிதியாக இவர் 2001-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமையன்று சிட்னியில் விருந்து ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கடந்த சனிக்கிழமை உலக அகதிகள் தினத்தையொட்டி அவருக்கு இந்த சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இவர் இந்த பொறுப்பை ஏற்றவுடன், தெற்கு ஆஸ்திரேல…
-
- 0 replies
- 416 views
-
-
ஜிம்பாப்வேயிலும் போய் கேவலப்பட தயாராக இல்லை.. இந்திய அணியின் பயணம் திடீர் ரத்து! டெல்லி: வங்கதேசத்திடம் மிக கேவலமாக தோற்று தொடரை இழந்து அவமானப்பட்டது தொடராமல் இருப்பதற்காகவோ என்னவோ இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே பயணத்தை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக ரத்து செய்துவிட்டது. வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலே அத்திப்பூத்தாற் போல ஜெயிப்பதும் பெரும்பாலும் தோற்பதும்தான் இந்திய கிரிக்கெட் அணியின் வாடிக்கையாக இருந்து வருகிறது. தற்போது வங்கதேச நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, அந்த நாட்டின் சுண்டைக்காய் அணியிடம் படுகேவலமாக தோற்று தொடரை இழந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் ஜிம்பாப்வேயில் இந்திய அணி விளையாட இருந்தது…
-
- 0 replies
- 370 views
-