Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தன்னம்பிக்கை பெறுவது பற்றி தோனி எங்களுக்கு கற்றுக் கொடுத்தார்: அஜிங்கிய ரஹானே தன்னம்பிக்கையுடன் செயல்படுவது எப்படி என்பதை கேப்டன் தோனி இளம் வீரர்களுக்கு கற்றுக் கொடுத்தார் என்று அஜிங்கிய ரஹானே பாராட்டு தெரிவித்துள்ளார். "தோனியின் கீழ் விளையாடும் போது இளம் வீர்ர்களான நாங்கள் நிறையக் கற்றுக் கொண்டோம். அவர் எங்களுக்கு பெரிய அளவில் தன்னம்பிக்கையை ஊட்டினார். டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் என்று எதுவாக இருந்தாலும் அவர் எங்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது பற்றியும் ஒவ்வொரு சூழலிலும் எப்படி வினையாற்ற வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தார்” என்றார் அஜிங்கிய ரஹானே. விராட் கோலி பற்றி.. விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுபவர், எதிரணியினர் ஆஸ்திரேலியாவாக …

  2. 300 கி.மீ வேகத்திலும் கீரிப்பிள்ளையின் உயிரை காப்பாற்றிய எப் 1 வீரர்களின் கருணை! ( வீடியோ) எப்1 கார்பந்தயத்தில் கனடா கிராண்ட் ப்ரீ போட்டி நேற்று மான்ரியல் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பந்தய கார்கள் சுமார் 324 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து கொண்டிருக்கும் போது, பந்தய பாதையில் நரி ஒன்று குறுக்கே பாய்ந்தது. எனினும் கார்கள் நெருங்குவதற்குள் அந்த நரி, பந்தய பாதையை கடந்து விட்டதால் உயிர் பிழைத்தது. அதேபோல் ஸ்பெயின் வீரர் ஃபிலிப் மாசாவின் பந்தய கார் மின்னல்வேகத்தில் வந்து கொண்டிருந்த போது, கீரிப்பிள்ளை ஒன்றும் பந்தய பாதையை கடக்க முயன்றது. பந்தய பாதை அருகே கார்களின் இரைச்சலில் கீரிப்பிள்ளை பயந்து அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் ம…

  3. உலகின் குட்டி நாட்டு கிரிக்கெட் அணி இது...! உலகின் மிகச்சிறிய நாடு வாட்டிகன். கத்தோலிக்க மதத் தலைவர் போப் ஆண்டவரின் தலைமையகம் இதுதான். போப் ஆண்டவருக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த குட்டி நாட்டின் நிர்வாகமும் போப் ஆண்டவரின் கையில்தான்.110 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 822 பேர்தான். ஆனால் இந்த குட்டி நாட்டிலும் ஒரு கிரிக்கெட் அணி இருப்பதுதான் ஆச்சர்யமானது. ஐரோப்பாவை பொறுத்தவரை இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடையாது. வாட்டிகன் இருப்பதோ இத்தாலி தலைநகரான ரோம் நகருக்கு மத்தியில். இத்தாலி, கிரிக்கெட் வாடை என்பதே அறவே இல்லாத நாடு. இந்நிலையில்தான் வாட்டிகன் நகரில…

  4. ஃபிஃபா தயாரித்த முதல் படத்தை தியேட்டருக்கு பார்க்க வந்த ஒரே ஒரு ரசிகர்! சர்வதேச கால்பந்து சம்மேளனம் உருவான வரலாற்றை மையமாக வைத்து ஃபிஃபா தயாரிப்பில் வெளி வந்த 'யுனைடெட் ஃபேஷன்ஸ்' என்ற திரைப்படம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை பீனிஸ் டவுட்டன் நகரில் பிலிம்ஃபேர் திரையரங்கில் ஒரே ஒரு ரசிகர்தான் பார்க்க வந்துள்ளார். எனினும் அவருக்காக அந்த படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ஊழல் புகார் காரணமாக ஃபிஃபா தலைவர் ஜோசப் பிளேட்டர் அண்மையில் பதவி விலகினார். இவர் பதவியில் இருந்த காலத்தில்தான், யுனைடெட் ஃபேஷன்ஸ் என்ற ஹாலிவுட் படம் தயாரிக்க நிதியுதவி செய்யப்பட்டது. ஃபிஃபா தயாரித்த முதல் படம் என்பதால் இந்த படத்துக்கு அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆன…

  5. ‘தளராத’ கால்பந்து தாத்தா சர்வதேச கால்பந்து நிர்வாகத்தில் கொடி கட்டிப்பறந்த செப் பிளாட்டர், பெண்கள் விஷயத்தில் ரொம்ப ‘வீக்’. மூன்று முறை திருமணம் செய்த இவரது வலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் காதலியாக இருந்த இரினா ஷெய்க் சிக்கியது தான் ‘லேட்டஸ்ட்’ செய்தி. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின்(பிபா) தலைவராக 5வது முறையாக சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் செப் பிளாட்டர், 79, தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவிக் காலத்தில் அரங்கேறிய பல்வேறு ஊழல்கள் அம்பலமாக, ‘பிபா’ தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது இவரது மன்மத லீலைகளும் தெரிய வந்துள்ளன. வறுமையான குடும்பத்தில் பிறந்த பிளாட்டர், முதலில் உள்ளூர் பெண் லிலியான் பினரை திருமணம் செய்தார். இவர்களுக்கு கொரின் என்ற மகள் உண்டு.…

  6. பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஞாயிறன்று ஆரம்பம்: ஒற்றையர் சம்பியன்களுக்கான பணப்பரிசு 26 கோடி ரூபா உலக டென்னிஸ் அரங்கில் வரு­டாந்தம் நடத்­தப்­படும் நான்கு மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) போட்டிகளில் இரண்­டா­வ­தான பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டி பாரிஸில் அமைந்­துள்ள றோலண்ட் கெரொஸ் டென்னிஸ் அரங்­கு­களில் நாளை­ மறுதினம் (ஞாயிற்­றுக்­கி­ழமை) ஆரம்பமாகின்­றது. வரு­டத்தில் ஜன­வரி மாதம் மெல்­பேர்னில் நடை­பெறும் அவுஸ்­தி­ரே­லிய பகிரங்க டென்னிஸ் போட்­டி­களைத் தொடர்ந்து இரண்­டா­வ­தாக நடை­பெறும் களி­மண்­தரை டென்னிஸ் போட்­டி­யான பிரெஞ்சு பகி­ரங்க போட்டி இம்மாதம் 24ஆம் திகதி ஆரம்­ப­மாகி ஜூன் 7ஆம் திகதி நிறை­வ­டை­ய­வுள்­ளது. இப்போட்­டிகள் 1925 முதல் 1967 வரை சாதா­ரண பிரெஞ்…

  7. விதிமுறைப்படி கிரிக்கெட் விளையாட்டுக்கு விக்கெட் கீப்பர் தேவையில்லை...! இங்கிலாந்தில் நார்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியின் போது வொர்செஸ்டர்ஷைர் அணி கடைசி நேரத்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் ஆடி வியக்க வைத்தது. நாட்வெஸ்ட் டி20 போட்டியில் நடந்த ஆட்டத்தில் நார்தாம்ப்டன்ஷைர்- வொர்செஸ்டர்ஷைர் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வொர்செஸ்டர்ஷைர் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய நார்தாம்ப்டன்ஷைர் இலக்கினை வேகமாக விரட்டினர். அந்த அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதனால் நார்தம்டன்ஷைர் அணி வெற்றி பெறும் சூழல் இருந்தது. இந்த சமயத்தில்தான் வொர்செஸ்டர்ஷைர் அணி …

  8. தலைமை பயிற்சியாளர் தேவையா: ரவி சாஸ்திரி விளக்கம் கோல்கட்டா: ‘‘இந்திய அணியில் 3 பயிற்சியாளர்கள் உள்ளனர். இதனால் தற்போது தலைமைப்பயிற்சியாளராக வேறு யாரும் வேண்டாம்,’’என, இந்திய அணியின் ரவி சாஸ்திரி கூறினார். வங்கதேசம் செல்லும் இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. பதுல்லாவில் வரும் 10ம் தேதி டெஸ்ட் துவங்குகிறது. இதற்கான இடைக்கால பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். தவிர, அணி இயக்குனர் பதவியிலும் இவர் தொடர்வார். இதில் பங்கேற்கும் கோஹ்லி தலைமையிலான இந்திய வீரர்கள், கோல்கட்டாவில் இரண்டு நாள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். நாளை வங்கதேசம் புறப்படுகின்றனர். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் அணி இயக்குனர் ரவி சாஸ்திரி கூறு…

  9. பவுன்சரில் காயமேற்பட்டு கண் பார்வை பாதிக்கப்பட்ட கீஸ்வெட்டர் ஓய்வு அறிவித்தார் 2011-ம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் செய்த இங்கிலாந்து அணியில் விளையாடிய கீஸ்வெட்டர். | கோப்புப் படம். பவுன்சரில் காயமேற்பட்டதால் கண்பார்வை பாதிப்படைந்து 27 வயதில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கீஸ்வெட்டர் ஓய்வு அறிவித்தார். முன்னாள் இங்கிலாந்து அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர் கிரெய்க் கீஸ்வெட்டர் கடந்த ஆண்டு கவுண்டி போட்டி ஒன்றில் பவுன்சரில் கண்களில் காயமடைந்தார். இதிலிருந்து அவரால் சரியாக மீள முடியவில்லை. இதனால் 27 வயதில் ஓய்வு அறிவித்தார் கீஸ்வெட்டர். இங்கிலாந்து அணிக்காக இவர் தொடக்க வீரராக களமிறங்கியதுடன், விக்கெட் கீப்பராகவும் செயலாற்றியுள்ளார். இதனையடுத்து அவர் கிரிக்கெட்டில…

  10. கிரிக்கெட்டில் இப்படியும் சாதனை படைத்த மதுரை மருத்துவ மாணவர்! மதுரை: மருத்துவக்கல்லூரி மாணவர் கிரிக்கெட் மட்டையால் தொடர்ந்து 6 மணிநேரம் 14 நிமிடம் கீழே விழாமல் பந்தை தட்டி புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் கவுதமநாராயணன். இவர், மதுரை மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கிரிக்கெட் வீரரான இவருக்கு, வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் பல ஆண்டுகளாக இவரது மனதில் இருந்துள்ளது. இதை தொடர்ந்து, பந்து கீழே விழாமல் மட்டையால் தொடர்ந்து தட்டும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அதை நண்பர்கள், உறவினர்கள், கல்லூரி நண்பர்கள், விளையாட்டு பயிற்ச்சியாளர் என எல்லோர் முன்பும் செய்து காட்டினார். இதனால் கவுதமநாராயணனை எல…

  11. உலகக் கோப்பை தகுதி சுற்று :இந்திய அணியில் இடம் பிடித்தார் தமிழக வீரர் தனபால் கணேஷ்! ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் பங்கேற்கவுள்ள சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணியை, பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டைன்டைன் அறிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த தனபால் கணேசுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. வரும் 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான 2வது கட்ட தகுதி சுற்று ஆட்டங்கள், 11ஆம் தேதி தொடங்கவுள்ளது. 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில், ஓமன் அணியுடன் விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து குவாம் அணியை எதிர்த்து 16ஆம் தேதி களமிறங்குகிறது. இந்த இரு போட்டிகளுக்கான 26 பேர் கொண்ட இந்திய அணி அ…

  12. கெய்ல் மீண்டும் விளாசல் டான்டன்: ஹாம்ஷயர் அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில் கிறிஸ் கெய்ல் அதிரடியாக ரன் குவிக்க சாமர்சட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தில், உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் நாட்வெஸ்ட் ‘வென்டி–20’ தொடர் நடக்கிறது. டான்டனில் நடந்த லீக் போட்டியில் சாமர்சட், ஹாம்ஷயர் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த ஹாம்ஷயர் அணிக்கு கேப்டன் வின்ஸ் (64*), எர்வின் (30*) கைகொடுத்தனர். ஹாம்ஷயர் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. கெய்ல் புயல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சாமர்சட் அணிக்கு டிரஸ்கோதிக் (1) ஏமாற்றினார். பின் இணைந்த கிறிஸ் கெய்ல், டிரிகோ ஜோடி ஹாம்ஷயர் பந்துவீச்சை வெளுத்துவாங்கியது. அபா…

  13. வரி ஏய்ப்பு.. பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மார் மீது புகார்! ரியோ டி ஜெனீரோ: பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மார் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்துள்ளது. பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மார், பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடி வருகிறார். இந்நிலையில், பிரேசிலின் சாந்தோம் கிளப் அணியில் இருந்து ஸ்பானிஷ் கிளப் அணிக்காக அவர் பரிமாற்றம் செய்யப்பட்டதில், தனக்கு அளிக்கப்பட்ட தொகையில் நெய்மார் வரி ஏய்ப்பு செய்ததாக பிரேசிலை சேர்ந்த வார இதழ் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. நெய்மாருக்கு சொந்தமான அனைத்து சொத்துகளின் மதிப்புகளையும் தணிக்கை செய்யுமாறும் சண்டோஸ் நகர் மத்திய அரசு வழக்கறிஞர்கள் உத்தரவிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் மீதான குற்றச்சாட்டு …

  14. இந்தியா-ஏ, அண்டர்-19 பயிற்சியாளராக திராவிட் நியமனம் இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் திராவிட் இந்தியா-ஏ மற்றும் இந்தியா அண்டர்-19 அணிகளுக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பிசிசிஐ ஆலோசனைக் குழுவில் சச்சின், லஷ்மண், கங்குலி இடம்பெற ராகுல் திராவிட் ஏன் இல்லை என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர், ‘அனைவரையும் ஒரே நிலையில் இணைக்க முடியாது’ என்றும் ராகுல் திராவிட் போன்ற ஒரு வீரரை எதாவது ஒரு நிலையில் நிச்சயம் பிசிசிஐ பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராகவே அவர் நியமிக்கப்படுவார் என்று யூகங்கள் எழுந்தன, ஆனால் பயிற்சியாளராக முழுநேரம் தன்னால் இப்போதைக்கு செலவிட முட…

  15. 35 வயதில் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கி சதமடித்து உலக சாதனை படைத்த ஆடம் வோக்ஸ்! மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தனது 35வது வயதில் ஆஸ்திரேலிய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஆடம் வோக்ஸ் சதமடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டி வரலாற்றில் அறிமுக ஆட்டத்திலேயே அதிக வயதில் சதமடித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் ஏற்படுத்தினார். ஆஸ்திரேலிய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ரோசவ் நகரில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 148 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்தாக பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு 5வது விக்கெட்டாக ஆடம் வோக்ஸ் களமிறங்கினார். 35 வயதான இவருக்கு தற்போதுதான் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியி…

  16. டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை நாட்-அவுட்: சந்தர்பாலின் சாதனை சந்தர்பாலின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் சாதித்தது என்னவெனில் சீரான முறையில் ரன்களை எடுத்திருந்ததே. 115 டெஸ்ட்களில் 28 சதங்கள் என்பது குறைந்தது 4 டெஸ்ட்களுக்கு சதம் என்ற அளவில் சீரான முறையில் அமைந்துள்ளது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் எதிரணியினரால் வீழ்த்த முடியாமல் அதிக முறை நாட் அவுட்டாக இருந்திருக்கிறார் சந்தர்பால். மொத்தம் 164 டெஸ்ட் போட்டிகளில் 278 இன்னிங்ஸ்களில் 49 முறை நாட் அவுட்டாகத் திகழ்ந்து முதலிடம் வகிக்கிறார் சந்தர்பால். சந்தர்பாலின் நாட் அவுட் சாதனை வித்தியாசமானது ஏனெனில் அவர் சக பேட்ஸ்மென்களின் துணையில்லாமல் தனி நபராக ஒரு முனையில் போராடியது மிகவும் அதிகம். உதாரணத்துக்கு ஒரு …

  17. இவரும் ஒரு கிரிக்கெட் அணியின் கேப்டன்தான்...! கென்யாவில் ஒரு கிரிக்கெட் அணி உள்ளது. இந்த அணிக்கு பெயர் மசாய் கிரிக்கெட் வாரியர். கென்யாவில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டு வரும் பழங்குடி இளைஞர்கள் இணைந்து தோற்றுவித்த அணி, அவர்கள் அணிந்த ஆடைகளால் அகில உலக பாப்புலரானது. கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும் சமயத்தில் இவர்களது கிரிக்கெட் பயிற்சி ஆரம்பமாகும். பயிற்சினா சும்மாலாம் கிடையாது. தொலைவில் உள்ள சிங்கம், சிறுத்தைகளை குறிவைத்து கல்கொண்டு அடித்து விரட்டுவதுதான் இவர்களது பயிற்சி. பின்னர் இதே பகுதியில் தொடங்கப்பட்ட இந்த கிரிக்கெட் அணியால், பழங்குடி மக்களிடையே எச்.ஐ.வி பாதிப்பு குறைந்ததுதான் இந்த செய்தியின் ஹைலைட். இந்த அணியின் கேப்டனாக இருப்பவர்தான் நிசான் ஜோனதான் ஒலி மெசாமி. …

    • 1 reply
    • 476 views
  18. சிறந்த வீரர் டிவிலியர்ஸ் ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர் விருதை, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வென்றார் டிவிலியர்ஸ். தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு (சி.எஸ்.ஏ.,) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் 2014ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக டிவிலியர்சிற்கு, 27, கிடைத்தது. தவிர, நிடினிக்குப் (2005, 2006) பின், அடுத்தடுத்த ஆண்டுகளில் சிறந்த வீரர் விருது பெற்ற இரண்டாவது வீரர் ஆனார் டிவிலியர்ஸ். இதற்கு முன் காலிஸ் (2004, 2011), ஆம்லா (2010, 2013) தலா 2 முறை இவ்விருது வென்றனர். இத்துடன், சிறந்த ஒருநாள் போட்டி வீரர், தென் ஆப்ரிக்க ரசிகர்களின் மனம் கவர்ந்தவர், மிகவும் சிறந்த வீரர…

  19. விபத்தில் தப்பிய வங்கதேச கேப்டன் தாகா: மிர்புரில் ஏற்பட்ட விபத்தில், வங்கதேச ஒருநாள் அணி கேப்டன் மொர்டசா அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார், வங்கதேச அணியின் ‘சீனியர்’ வீரர் மொர்டசா, 30. ஒருநாள் அணிக்கு கேப்டனாக உள்ளார். வரும் 18ம் தேதி துவங்கும் இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடருக்காக தயாராகி வருகிறார். இதற்கான பயிற்சிக்காக சைக்கிள் ரிக் ஷாவில், தனது வீட்டில் இருந்து மிர்புர் மைதானத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பஸ்சின் டயர் வெடித்து, ரிக் ஷா மீது பலமாக மோதியது. கீழே குதித்தார்: இதற்குள் சுதாரித்துக் கொண்ட மொர்டசா, ரிக் ஷாவில் இருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அப்போது, இவரத…

  20. பிசிசிஐ ஆலோசனை குழுவில் சச்சின், சவுரவ் கங்குலி, லஷ்மண் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைக் குழுவில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லஷ்மண் ஆகிய முன்னாள் வீர்ர்கள் சேர்க்கப்பட்டனர். கிரிக்கெட் தொடர்பான அனைத்து முடிவு எடுக்கும் தீர்மானங்களிலும் இனி இந்த மூவர் கூட்டணியின் ஆலோசனையும், வழிகாட்டுதலும் இருக்கும் என்று பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா, செயலர் அனுராக் தாக்கூர் ஆகியோர் கிரிக்கெட் குறித்த மிக முக்கியமான முடிவுகள் அனைத்திலும் இவர்களை ஆலோசித்தே முடிவு எடுப்பார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%…

  21. ஐசிசி நடுவர்கள் குழுவில் தமிழர் ஐசிசி உயர்மட்ட நடுவர்கள் (எலைட் பேனல்) குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.ரவி இடம்பெற்றுள்ளார். எஸ்.வெங்கட்ராகவனுக்குப் பிறகு ஐசிசி நடுவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள 2-வது இந்தியர் ரவி என்பது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்தைச் சேர்ந்த மூத்த நடுவர் பில்லி பவுடன், ஓய்வு பெற்ற நடுவர் ஸ்டீவ் டேவிஸ் ஆகியோருக்குப் பதிலாக எஸ்.ரவி, நியூஸிலாந்தைச் சேர்ந்த கிறிஸ் கெஃபானி ஆகியோர் நடுவர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. 2015-16-க்கான நடுவர் குழுவில் ரவி, கெஃபானி தவிர அலீம் தார், குமார் தர்மசேனா, மராய்ஸ் எராஸ்மஸ், இயான் குட், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்போரா, நிகெல் லாங், பால் ரீபிள், ரோட் டக்கர், புரூஸ் …

  22. இந்தியாவின் உண்மையான முதல் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்: ஆன்டி ராபர்ட்ஸ் பாராட்டு இந்தியாவின் உண்மையான முதல் வேகப்பந்து விச்சாளர் உமேஷ் யாதவ்தான் என்று மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் அச்சுறுத்தல் வேகப்பந்து விச்சாளர் ஆன்டி ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார். டிசம்பர் 1975-76-ல் ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகளுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆன்டி ராபர்ட்ஸ். | கோப்புப் படம். பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ராபர்ட்ஸ் கூறும்போது, "உமேஷ் யாதவ் என்னை மிகவும் கவர்கிறார். இந்தியாவின் முதல் உண்மையான வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்தான். இவருக்கு முன்பாக இந்தியாவில் உண்மையான வேகம் வீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததாக நான் கருதவில்லை. மொகமது ஷமியும் நன்றாக வீ…

  23. தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வெற்றி இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தால் சிங்கர் வெற்றிக் கிண்ணத்துக்காக பாடசாலைகளின் 15 வயது பிரிவு 3 அணிகளுக்கிடையில் நடத்தி வரும் 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி, ஒரு ஓட்டத்தால் வெற்றியீட்டியது. தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற இப்போட்டியில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியை எதிர்த்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி மோதியது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனக் கல்லூரி அணி, 39.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது. எஸ்.சதுர்சன் 29, எம்.பகீரதன் 20 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில…

  24. என் கேப்டன் ஸ்டைலை நான் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்: கோஹ்லி டெல்லி: அணியை வழிநடத்தும் தனது தலைமை குணத்தை மாற்றிக் கொள்ளுமாறு யாரும் கேட்டாலும் மாற்ற மாட்டேன் என இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். கேப்டன் டோணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கோஹ்லியை டோணி போன்று விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் இருக்குமாறு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாவ் கேட்டுக் கொண்டார். இது குறித்து கோஹ்லி கூறுகையில், மாட்டேன் நான் யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன். யா…

  25. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டோணி ஓய்வு பெற்றதும் குமுறிக் குமுறி அழுத கோஹ்லி டெல்லி: டோணி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதும் தான் அழுததாக கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டோணி டிசம்பர் மாதம் 30ம் தேதி அறிவித்தார். அதன் பிறகு நடந்தவை குறித்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், ஆச்சரியம் டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை கேட்டு நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம். அவர் தலைமையில் தான் இத்தனை நாட்கள் விளையாடினோம். அவர் இளம் வீரர்களை வளர்த்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.