விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7843 topics in this forum
-
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 7,000 ரன்கள்: டிவிலியர்ஸ் புதிய சாதனை ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் தெ.ஆ. கேப்டன் ஏ.பி. டிவிலியர்ஸ். பெர்த்தில் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டிவிலியர்ஸ் 7,000 ரன்களைக் கடந்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனையை நிகழ்த்தினார். 166 இன்னிங்ஸ்களில் அவர் 7,000 ரன்களைக் கடந்து உலக சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனையை வைத்திருந்தவர் சவுரவ் கங்குலி. இவர் 174 இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்தார். ஆனாலும் டிவிலியர்ஸ் சாதனை குறுகிய காலமே நீடி…
-
- 0 replies
- 339 views
-
-
கேட்ச்களை கோட்டைவிட்ட தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது பெர்த்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை, ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை வகித்தது. நல்ல பேட்டிங் பிட்சில் தெ.ஆ. கேப்டன் டிவிலியர்ஸ் முதலில் பீல்ட் செய்ய முடிவெடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா அபாரமாக விளையாடி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 48.1 ஓவர்களில் 268 ரன்களுக்குச் சுருண்டது. பெய்லிக்கு மட்டும் தவறவிடப்பட்ட 4 கேட்ச்கள்: தென் ஆப்பிரிக்கா அணியின் பீல்டிங் இன்று படு மோசமாக இருந்தது. ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் க…
-
- 5 replies
- 859 views
-
-
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜோன்சன், ஐ.சி.சி.யின் சிறந்த டெஸ்ட் வீரர் மற்றும் 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் ஆகிய இரு விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளார். இதில் முக்கிய விருதுகள் எதையும் இலங்கை அணி வீரர்களில் ஒருவர் கூட பெறவில்லை. இந்த ஆண்டிற்கான மக்கள் விருப்ப விருதுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஐ.சி.சி. ஒருநாள் அணியில் இலங்கை வீரர்கள் சார்பாக அஜந்த மெண்டிஸின் பெயர் மாத்திரமே இடம்பெற்றுள்ளது. ஒருநாள் அணித்தலைவராக இந்திய அணித் தலைவர் டோனி அறிவிக்கப்பட்டுள்ளார். விருது பெற்ற…
-
- 0 replies
- 474 views
-
-
ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள்: சேவாக் உலக சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த ரோகித் சர்மா, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது இரட்டைச்சத சாதனையுடன் சேவாகின் சாதனையையும் முறியடித்தார். மேலும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 250 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார் ரோகித் சர்மா. கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். மேலும் சேவாக் மே.இ.தீவுகளுக்கு எதிராக எடுத்த 219 ரன்களையும் கடந்து சாதனை புரிந்தார். எரங்கா பந்தை லாங் ஆஃப் திசையில் மிகப்பெ…
-
- 12 replies
- 6.5k views
-
-
அருமையாக பிடியெடுத்த பார்வையாளருக்கு பணப்பரிசு கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த பார்வையாளர் ஒருவர் அப் போட்டியில் அடித்து சிக்ஸருக்கு சென்ற பந்தை அருமையாக பிடியெடுத்ததால் அவருக்கு ரூபா 2.5 இலட்சம் ரூபா பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து ஹமில்டன் செட்டன் பார்க் மைதானத்தில் அந்நாட்டு ஓடாகோ அணிக்கும், வெலிங்டன் அணிக்கும் இடையே இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது. குறித்த போட்டியில் ஓடாகோ வோல்ஸ் அணி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் பந்தை சிக்சருக்கு விளாசினார். அப்போது மைதானத்திற்கு வெளியே போட்டியை ரசித்து கொண்டு இருந்த ஹென்ரூட் மைக்கல் என்ற கிரிக்கெட் ரசிகர் ஓடி வந்து பந்தை ஒற்றை கையால் மிகவும் அருமையாக பிடியெடுத்தார். இந்நில…
-
- 0 replies
- 846 views
-
-
தொடக்க வீரராக களமிறங்க ஆசைப்படும் மஹேல அடுத்த வருடம் ஆரம்பமாகவுள்ள உலக கிண்ணத்துடன் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ள இலங்கை அணியின் மூத்த வீரர் மஹேல ஜெயவர்த்தன (37 வயது) மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்காக ‘என்னை தொடக்க ஆட்டக்காரராக விளையாட அனுமதிக்கும்படி தேர்வாளர்களிடம் மண்டியிட்டு கேட்க முடியாது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர் வரிசை எனக்கு பொருத்தமானது என்று உணர்கிறேன். அதனால் உலக கிண்ணத்தில் அந்த வரிசையில் ஆட வேண்டும் என்று நினைக்கிறேன். அதே நேரத்தில் தேர்வாளர்கள், மிடில் வரிசையில் போதிய அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் இல்லை. எனவே அந்த வரிசையில் நான் ஆட வேண்டும் என்று விரும்புகிறார்கள். மேல…
-
- 0 replies
- 323 views
-
-
டோனியின் உபாதை புதன்கிழமை, 12 நவம்பர் 2014 இந்திய கிரிக்கெட் அணியின் தலைர் மகேந்திர சிங் டோனியின் வலது கை பெருவிரலில் ஏற்பட்டுள்ள உபாதையே அவர் இலங்கை கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் விளையாடாமைக்கு காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன. தனது விருப்பத்தின் பெயரில் அவர் தனக்கு ஓய்வு தேவை என்ற நிலையில் ஓய்வினை எடுத்துக்கொண்டார் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் முதற்ப் போட்டியில் உபாதை காரணமாக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. உபாதை குணமடையும் வாய்ப்புக்கள் உள்ள போதும் உலகக்கிண்ணத்தை குறி வைத்து அவரை மேலும் உபாதையடையாமல் பாதுகாக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய கிர…
-
- 0 replies
- 390 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ட்ரவர் பென்னி நியமனம் புதன்கிழமை, 12 நவம்பர் 2014 இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ட்ரவர் பென்னி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக இருந்து நீக்கப்பட்டு ட்ரவர் பென்னி, இந்திய கிரிக்கெட் சபையின் தேசிய கிரிக்கெட் அக்கடமியில் கடமையாற்ற மறுத்ததை அடுத்து, குறித்த பதவிக்கு இலங்கை கிரிக்கெட் அவரை நியமித்துள்ளது. இம்மாதம் 20 ஆம் திகதி முதல் எதிர்வரும் மார்ச் மாதம் வரை பதவியில் இருக்கும் படியாக அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுளளது. உலகக்கிண்ணத்தை கருத்திற்கொண்டு இந்த நியமனம் ட்ரவர் பென்னி இற்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மனோதத்துவ நிபுணர் ஜெரமி சினப் 17 நாட்களுக்…
-
- 0 replies
- 304 views
-
-
150வது ஆண்டு விழா - எத்தனை கோடி இன்பம் வைத்தாய் ஈடன் கார்டன்ஸ்! கிரிக்கெட் வரலாற்றில் மூன்று மைதானங்கள்தான் மற்ற எல்லா மைதானங்களை விடவும் அதிக அங்கீகாரமும் கவுரவமும் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் (எம்.சி.ஜி), இங்கிலாந்தின் லார்ட்ஸ் மற்றும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ். இந்தியாவின் பெருமைமிக்க மைதானமான ஈடன் கார்டன்ஸூக்கு இந்த வருடத்தோடு 150 வயது. அதற்குச் சிறப்பு சேர்ப்பதற்காகத்தான் இந்தியா, இலங்கை இடையிலான ஒருநாள் போட்டி நாளை (வியாழன்) இங்கு நடக்கிறது. மைதானமான பூந்தோட்டம் ஒரு பூந்தோட்டம், ஆடுகளமாக மாற்றப்பட்டதுதான் ஈடன் கார்டன்ஸ். 1836 முதல் 1842 வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஆக்லாண்ட் பிரபுவின் தங்கைகள் எமிலி மற்றும் ஃபேனி ஈடன் ஆகிய இருவரும்…
-
- 0 replies
- 413 views
-
-
கள நடுவர்கள் 3-வது நடுவருடன் பேசுவதை ரசிகர்கள் கேட்க ஐசிசி அனுமதி கிரிக்கெட் போட்டியின் போது கள நடுவர்கள், 3-வது நடுவரிடம் மேல்முறையீடு செய்யும் போது நடக்கும் உரையாடலை ரசிகர்கள் கேட்க ஐசிசி அனுமதி ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கும் ஒருநாள் தொடரின் போது, களநடுவர்கள், டிவி நடுவரிடம் தீர்ப்புகளை முறையிடும் போது நடக்கும் உரையாடலை ரசிகர்களும் கேட்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஐசிசி இந்த பரிசோதனைக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது. டி.ஆர்.எஸ். முறையில் அவுட் தீர்மானம், ஆலோசனைகள் மற்றும் வீரர்கள் 3ஆம் நடுவரிடம் மேல்முறையீடு செய்யும் தருணங்களை இந்தத் தொடரில் ரசிகர்களும் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடுவர் தீர்ப்புகளை பார்வையாளர்களும் புரிந்து…
-
- 0 replies
- 267 views
-
-
பேட்டில் பட்டு.. அனுஷ்காவை எட்டிய முத்தம்.. சாதனையுடன் "ஹாஃப்" அடித்ததைக் கொண்டாடிய கோஹ்லி! ஹைதராபாத்: விராத் கோஹ்லுக்கு மட்டுமல்ல, அவரது காதலியா அனுஷ்கா சர்மாவுக்கும் நேற்று மறக்க முடியாத நாள். ஹைதராபாத்தில் தன்னால்தான் இப்படி முடங்கிப் போய் விட்டார் என்ற அவச் சொல்லுக்குள்ளான விராத் கோஹ்லி புதிய சாதனையுடன் அரை சதம் போட்டு இந்தியாவின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்த தருணத்தை அனுஷ்கா சர்மா நிச்சயம் வாழ்க்கையில் மறக்க மாட்டார். கூடவே, விராத் கோஹ்லி, தனக்குக் கொடுத்த பறக்கும் முத்தத்தையும் மறக்கவே மாட்டார்.... வெட்கப் புன்னகை தவழ அதை அவர் வாங்கியதை மனதோடு போட்டு புதைத்து வைத்திருப்பார் காலா காலமும்! ஹைதராபாத்தில் நேற்று இலங்கைக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியிலும் நே…
-
- 4 replies
- 925 views
-
-
உலக செஸ்: ஆனந்த் முதல் வெற்றி * மூன்றாவது சுற்றில் பதிலடி நவம்பர் 11, 2014. சோச்சி: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது சுற்றில், ஆனந்த், ‘நடப்பு சாம்பியன்’ கார்ல்சனை வீழ்த்தினார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ரஷ்யாவின் சோச்சி நகரில் நடக்கிறது. மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியில், ஐந்து முறை (2000, 2007, 2008, 2010, 2012) உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ‘நடப்பு சாம்பியன்’ நார்வேயின் மாக்னஸ் கார்ல்சனை சந்திக்கிறார். முதல் இரு சுற்று முடிவில், ஆனந்த் 0–5–1.5 என்ற புள்ளிக்கணக்கில் ஆனந்த் பின்தங்கி இருந்தார். நேற்று மூன்றாவது சுற்று நடந்தது. துவக்கமே நெருக்கடி: வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், முதல் சுற்றில் விளையா…
-
- 14 replies
- 940 views
-
-
வேகப்பந்து வீச்சு ஆட்டக்களங்களில் இந்திய வீரர்கள் சமாதானக் கொடியை தூக்கிப் பிடிப்பர்: ஸ்டுவர்ட் கிளார்க் கேலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் தோனி விளையாட முடியாததை அடுத்து இந்தியாவுக்கு டெஸ்ட் தொடரில் அக்கறை இல்லை என்ற தொனியில் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று சாடியுள்ளது. சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஒரு பத்தியில் இந்தியா உலகக் கோப்பையையே எதிர் நோக்குகிறது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அதிக நாட்டம் காட்டுவதில்லை என்று அந்தப் பத்தியில் இந்திய அணியைப் பற்றி சாடப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் நடப்பது பிரிஸ்பன் மைதானத்தில், இந்த மைதானம் உலகிலேயே அதிவேக ஆட்டக்களம் கொண்டது என்பதை அனைவரும் அறிவர். இதில் 26 ஆண்டுகளுக்கு முன்ப…
-
- 1 reply
- 374 views
-
-
தோனியிலிருந்து வேறுபட்டவர் என்பதை காண்பிக்க கோலிக்கு வாய்ப்பு: திராவிட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாகச் செயல்படவுள்ள விராட் கோலிக்கு, தோனியை விட தான் வேறுபட்டவர் என்பதை நிரூபிக்க வாய்ப்பு உள்ளது என்று ராகுல் திராவிட் கூறியுள்ளார். இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் திராவிட் கூறும்போது, “தோனி இல்லாததால் விராட் கோலி தன் கேப்டன்சி தோனியின் பாணியிலிருந்து வேறுபட்டது என்பதை நிரூபிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. டெஸ்ட் போட்டியில் அணியை வழி நடத்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. விராட் கோலி நிச்சயம் இந்த பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார் என்றே நான் கருதுகிறேன். ஒருநாள் கிரிக்கெட், மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரை சற்ற…
-
- 0 replies
- 283 views
-
-
கோஹ்லிக்கு 4 வேணாம்.. 3 ஓ.கே... "ஆர்டர்" போடுகிறார் ஸ்ரீகாந்த்! மொஹாலி: விராத் கோஹ்லி தற்போது ஒரு நாள் போட்டிகளில் 4வது இடத்தில் இறங்குகிறார். ஆனால் அவர் 3வது இடத்தில் இறங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இங்கிலா்து தொடரில் சொதப்பிய விராத் கோஹ்லி தற்போது இலங்கை தொடரில் சிறப்பாக ஆடி வருகிறார். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் கூட அவர் நன்றாகவே ஆடினார். கோஹ்லிக்கு 4 வேணாம்.. 3 ஓ.கே... இந்த நிலையில் கோஹ்லியின் ஆர்டரை மாற்ற வேண்டும். மாற்றினால் அவருக்கும், அணிக்கும் நல்லது என்று ஸ்ரீகாந்த் ஆலோசனை கூறியுள்ளார். இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில்,இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்தாக கோஹ்லி உள்ளார். 2009 ம் ஆண்டு ச…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரேசில் ‘பார்முலா–1’: ராஸ்பர்க் சாம்பியன் நவம்பர் 10, 2014 , சாவ் பாலோ: பிரேசிலில் நடந்த ‘கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா–1’ கார்பந்தயத்தில், ‘மெர்சிடஸ்’ அணியின் ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பர்க் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பிரேசிலில் உள்ள சாவ் பாலோ நகரில், நடப்பு ஆண்டின் 18வது சுற்று ‘கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா–1’ கார்பந்தயம் நடந்தது. இதில் பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 32 நிமிடம், 58.710 வினாடிகளில் கடந்த ‘மெர்சிடஸ்’ அணியின் ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பர்க், முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இது, இந்த ஆண்டு இவர் வென்ற 5வது பட்டம். பந்தய துாரத்தை கடக்க, ராஸ்பர்க்கை விட 1.4 வினாடிகள் கூடுதலாக எடுத்துக் கொண்ட ‘மெர்சிடஸ்’ அணியின் பிரிட்டன் வீரர் லீவிஸ…
-
- 0 replies
- 381 views
-
-
உலகக்கிண்ணத்தில் சுப்பர் ஓவர் நீக்கம் : பரிசுத் தொகை ரூபா 60 கோடி 2015 ஆம்ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் நொக் அவுட் சுற்றில் சுப்பர் ஓவர் நீக்கப்பட்டுள்ளதுடன் பரிசுத் தொகையாக ரூபா 60 கோடி வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 29ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) நேற்று ஆலோசனை செய்தது. இதன்படி உலகக் கிண்ண நொக்அவுட் சுற்றில் சுப்பர் ஓவரை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. காலிறுதியிலோ அல்லது அரை இறுதியிலோ ஆட்டம் சமநிலையி…
-
- 827 replies
- 43.9k views
-
-
பேர்த்தில் கிரிக்கட்டில் கலக்கும் நம்மவர்கள்! (படங்கள்) புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் ஏதோ ஒரு விதத்தில் தமது திறமையை வெளிக்காட்டிகொண்டுதான் இருக்கிறார்கள். மேற்கு அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் இளைஞர்கள் ASSeTTS என்னும் அரச சார்பற்ற நிறுவனத்துக்காக கிரிகட் விளையாடி வருகின்றனர். பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த நிறுவனத்தில் தமிழ் இளைஞர்களின் முயற்சியால் முதல் முறையாக கிரிகட் அணி- ASSeTTS CRICKET CLUB- – உருவாக்கப்பட்டுள்ளது. இக்கிரிக்கட் அணியின் நிருவுனராக கபில் தேவ் இருந்ததோடு , அவரே தற்போதைய அணியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர்கள் தற்போது LAST MAN STAND என்னும் சர்வதேச ரீதியிலான சுற்று போட்டி ஒன்றில் விளையாடி வருகிறார்கள். தற்போது மேற்கு…
-
- 3 replies
- 700 views
-
-
யூனிஸ் கான், மிஸ்பா சதம்: வலுவான நிலையில் பாக்., நவம்பர் 10, 2014. அபுதாபி: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் யூனிஸ் கான், கேப்டன் மிஸ்பா சதம் அடித்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 566 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) சென்றுள்ள பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. முதல் டெஸ்ட் அபுதாபியில் நடக்கிறது. முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்திருந்தது. ஷேசாத் அபாரம்: நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணிக்கு அகமது ஷேசாத், அசார் அலி ஜோடி நம்பிக்க…
-
- 14 replies
- 1.1k views
-
-
பறந்து வந்த காதலி நவம்பர் 09, 2014. காதலி சொரஜாவை அழைத்து வர தனி ‘ஜெட்’ விமானத்தை அனுப்பி அசத்தினார் பிரேசில் வீரர் நெய்மர். பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர், 22. களத்தில் மட்டுமல்ல, காதல் விளையாட்டிலும் அசத்தி வருகிறார். சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில், காயம் காரணமாக காலிறுதியுடன் வெளியேறினார். அப்போது இவருடன் பிரேசில் நடிகை புருனா மார்குயிஜின், 19, என்ற பெண், ‘தோழியாக’ இருந்தார். கடந்த ஆக., மாதம் இருவரும் ஸ்பெயினின் இபிஜா என்ற தீவுக்கு சென்றனர். முதல் சந்திப்பு: இருவருக்கும் என்ன பிரச்னை ஏற்பட்டது எனத் தெரியவில்லை. நெய்மர் புருனாவை பிரிந்தார். இங்கு வைத்து, தன்னை விட 6 வயது மூத்தவரான செர்பிய அழகி சொரஜாவை, 28, நெய்மர் சந்தித்துள்ளார்…
-
- 2 replies
- 726 views
-
-
முதல் டெஸ்ட்டிற்கு தோனி இல்லை: ஆஸி. தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோனி விளையாடவில்லை. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கபட்டுள்ளது. பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி கேப்டனாக செயலாற்றுவார். வலது கை மணிக்கட்டு காயம் காரணமாக இலங்கைக்கு எதிராக முதல் 3 போட்டிகளில் விளையாடாத தோனி, பிறகு கடைசி 2 போட்டிகளிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது இந்த நிலையில் டிசம்பர் 4-ஆம் தேதி பிரிஸ்பன் மைதானத்தில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோனி விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸி. தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி: தோனி (கேப்டன்), விராட் கோலி, ஷிகர் தவன், முரளி விஜய், கே.எல். ராக…
-
- 1 reply
- 430 views
-
-
ஆஸ்திரேலிய தோல்விகளை ஆய்வு செய்யும் சென்னை நிறுவனம் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் போட்டியில் 2-0 என்று படுதோல்வி தழுவியது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் பிரச்சினை என்னவென்பதை ஆய்வு செய்ய கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியை நாடியுள்ளது. சென்னையில் உள்ள கிரிக்கெட் 21 என்ற ஆய்வு நிறுவனம் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் தொடரை முழுமையாக ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளது. இதற்காக, முன்னாள் இந்திய முதல் தர கிரிக்கெட் வீரர்கள் பலரை பணியில் அமர்த்தியுள்ளது சென்னையைச் சேர்ந்த கிரிக்கெட் 21 நிறுவனம். துணைக்கண்ட பிட்ச்களில் ஆஸ்திரேலியாவின் பிரச்சினைகள் என்ன என்பதை முழுதும் ஆய்வு செய்ய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் உயர் செயல் திறன் கமிட்டியின் தலை…
-
- 0 replies
- 412 views
-
-
அசார் அலியின் நண்பர்கள் பாக். ஓய்வறையில் உள்ளனர்: ஸ்மித்தை எச்சரித்த மைக்கேல் கிளார்க் சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டன் மைக்கேல் கிளார்க் எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் ஆடி வந்த போது, பேட்ஸ்மென் அசார் அலியுடன் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஏதோ உரையாடியுள்ளார். அதனைத் தவறாகப் புரிந்து கொண்ட ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், ஸ்மித்தை அழைத்து, ‘அசார் அலியின் நண்பர்கள் பாக். ஓய்வறையில் உள்ளனர். களத்தில் நட்பு தேவையில்லை’ என்று எச்சரித்ததாக ஆஸ்திரேலிய ஊடகச் செய்தி ஒன்று கூறியுள்ளது. கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது செய்கையை தவறாகப் புரிந்து கொண்டார் என்று ஸ்மித் பெர்த் நகரில் செ…
-
- 0 replies
- 451 views
-
-
மானிப்பாய் இந்து கல்லூரி அணி சம்பியன் வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014 யாழ்.மாவட்ட பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையில் நடைபெற்ற கால்;பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக மானிப்பாய் இந்து கல்லூரி அணி சம்பியனாகியது. யாழ் மாவட்டப் பாடசாலைகள் விளையாட்டு சங்கம், பிரித்தானியா நாட்டின் இலங்கை தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தின் ஆதரவுடன் வருடாந்தம் நடத்தும் யாழ் மாவட்ட பாடசாலைகளின் 19 வயதுப் பிரிவு அணிகளுக்கிடையிலாக கால்ப்பந்தாட்ட போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்து கல்லூரி மைதானங்களில் இடம்பெற்றது. முதற்சுற்றுப்போட்டிகள் முடிவடைந்து இறுதிப்போட்டி வியாழக்கிழமை (06) யாழப்பாணம் மத்திய கல்லூரி ம…
-
- 1 reply
- 582 views
-
-
ரொனால்டோவுக்கு மீண்டும் தங்கக் காலணி விருது 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான தங்கக் காலணி விருது போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது. 29 வயதான ரொனால்டோ இந்த விருதை மூன்றாவது முறையாக பெற்றுள்ளார். ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் நடை பெற்ற விழாவில் ரியல் மெட்ரிட் அணியின் தலைவர் புரோரின்டோ பீரிஸ் இந்த விருதை ரொனால்டோவுக்கு வழங்கினார். அப்போது பேசிய ரொனால்டோ, முதல் முறையாக இந்த விருதைப் பெறுவது போன்ற உணர்வு ஏற்படுவதாகக் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:விளையாட்டில் இன்னும் சில காலம் வெற்றிக்கொடி நாட்ட முடியும் என நினைக்கின்றேன். ஆனாலும் ஓய்வுபெறும்போது உலகின் தலைசிறந்த கால்பந்து …
-
- 1 reply
- 507 views
-