Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி ஒரு கோடி வரை மோசடி: கிரிக்கெட் வீரருக்கு சிறை! இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிப்ப்பதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணமோசடி செய்த இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்தை சேர்ந்த சோமர்செட்,லாங்ஷயர், டெர்பிஷயர் ஆகிய அணிகளுக்காக விளையாடி வந்தவர் ஆன்டி ஹேஹர்ஸ்ட். தற்போது 52 வயதான இவர் கிரிக்கெட்டில் பல்வேறு நிதிமோசடிகளில் சிக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் லாங்ஷயர் கிரிக்கெட் போர்டு இயக்குனராக இருந்த போது 77 ஆயிரத்து 800 அமெரிக்க டாலர்களை வரை மோசடி செய்த புகாரில் சிக்கினார். அதுபோல் வோர்ஸ்லி கிரிக்கெட் அணிக்காக விளையாடிய போது இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதா…

  2. மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ-யின் நிதியை நிறுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவு லோதா கமிட்டி சீர்த்திருத்தங்களுக்கு உடன்படுவதாக தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ நிதியளிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிசிசிஐ-யின் கீழ் இயங்கும் 25 மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ அளிக்கும் நிதியை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு, பிசிசிஐ செப்டம்பர் 30-ம் தேதியன்று சிறப்புக் கூட்டத்தில் முடிவெடுத்த 13 மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு தலா ரூ.16.73 கோடி அளிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்து…

  3. தமிழகத்தை சேர்ந்த அஸ்வினுக்கு அர்ஜுனா விருது ! இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு அர்ஜுனா விருதை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் நேற்று வழங்கினார். தமிழகத்தை சேர்ந்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விருது வழங்கும் விழாவில் அவர் பங்கேற்கவில்லை. இங்கிலாந்தில் நடந்த ஒரு தொடரில் பங்கேற்றதால், விருது வழங்கும் விழாவில் அவரால் பங்கேற்க இயலவில்லை. இந்நிலையில் , அவருக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், அர்ஜுனா விருதை அஸ்வினுக்கு வழங்கினார். இந்திய அணிக்காக அஸ்வின் 25 டெஸ்ட் போட்டிகளில் விளைய…

  4. ஸ்பெயின் கால்பந்து வீரர் டேவிட் சில்வா ஓய்வு டேவிட் சில்வா. ஸ்பெயின் கால்பந்து மூத்த வீரர்களில் ஒருவரான டேவிட் சில்வா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஸ்பெயின் கால்பந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருந்தவர் டேவிட் சில்வா. 32 வயதான சில்வா, தற்போது மான்செஸ்டர் சிட்டி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை ஸ்பெயின் அணிக்காக 125 போட்டிகளில் பங்கேற்று 35 கோல்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார். சமீபத்தில் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் நாக்அவுட் சுற்றோடு வெளியேற்றம் கண்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் டேவிட் சில்வாவும் ஓய்வு …

  5. 13 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் படுதோல்வி; தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் செயிண்ட் ஜார்ஜில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தை 177 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் 247/7 என்று முடிய, வங்கதேசம் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட் செய்ய அழைத்தார். கிறிஸ் கெய்ல் தனது அனாயாச மட்டைச் சுழற்றலில் இறங்கினார். ஆனால் கர்க் எட்வர்ட்ஸ் அல் அமின் ஹுசைன் பந்தில் ஸ்டம்ப்களை இழந்தார். டேரன் பிராவோ, கிறிஸ் கெய்ல் இணைந்து 2வத…

  6. இளையோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில்-ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவிப்பு. இளையோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில்-ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவிப்பு. 19 வயதுக்குட்பட்ட இளையோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ம் திகதி முதல் 22 ம் திகதிவரை இந்தப் போட்டிகள் இலங்கையின் 3 மாதானங்களில் இடம்பெற்றவுள்ளன. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச மைதானம், காலி சர்வதேச மைதானம், மாத்தறை உயன்வத்த மைதானம் ஆகியவற்றில் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தி…

  7. கடலூரில் கபடி வீரர் மரணம்: விளையாட்டின்போது நம் ஆரோக்கியத்தில் எதையெல்லாம் கவனிக்க வேண்டும்? க. சுபகுணம் பிபிசி தமிழ் 26 ஜூலை 2022, 05:01 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடலூர் மாவட்டம் காடாம்புலியூரை அடுத்த புரங்கணி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர், கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த களத்திலேயே மயங்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு விளையாட்டு வீரர்கள் என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியத்தை பேண வேண்டும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. என்ன நடந்தது? கபடி வீரர் விமல், கபடி போட…

  8. ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கு போராடும் சந்திமாலின் எதிர்பார்ப்பு இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் இரு அணிகளினதும் தலைவர்களின் சிறப்பான ஆட்டம் மற்றும் வழிநடத்தலால் விறுவிறுப்புடன் நிறைவுக்கு வந்தது. இதில் இலங்கை அணி சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராக அணித்தலைவர் தினேஷ் சந்திமால் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டாலும், அண்மைக்கால ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்ற காரணத்தால் இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக ஓட்டக்குவிப்பில் அசத்தி வருகின்ற சந்திமால், ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்காக…

  9. கிரிக்கெட் துறை வளர்ச்சி சார்ந்த கேள்விகளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும் – குமார் சங்கக்கார 2016-04-25 08:30:33 இலங்கை கிரிக்கெட் துறை வளர்ச்சி சார்ந்த விட­யங்­களில் எழும் பல கேள்­வி­க­ளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் பதில் அளித்­தாக வேண்டும் என இலங்கை கிரிக் கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்­கக்­கார தெரிவித்­துள்ளார். இங்­கி­லாந்தில் முதல்­தர பிராந்­திய கிரிக்கெட் போட்­டி­களில் சரே அணிக்­காக விளை­யா­டி­வரும் குமார் சங்­கக்­கார, பி.பி.சி உலக சேவையின் “ஸ்டம்ப்ட்” சேவையில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற நேர்­கா­ண­லி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார். …

  10. கள நடுவர்கள் 3-வது நடுவருடன் பேசுவதை ரசிகர்கள் கேட்க ஐசிசி அனுமதி கிரிக்கெட் போட்டியின் போது கள நடுவர்கள், 3-வது நடுவரிடம் மேல்முறையீடு செய்யும் போது நடக்கும் உரையாடலை ரசிகர்கள் கேட்க ஐசிசி அனுமதி ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கும் ஒருநாள் தொடரின் போது, களநடுவர்கள், டிவி நடுவரிடம் தீர்ப்புகளை முறையிடும் போது நடக்கும் உரையாடலை ரசிகர்களும் கேட்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஐசிசி இந்த பரிசோதனைக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது. டி.ஆர்.எஸ். முறையில் அவுட் தீர்மானம், ஆலோசனைகள் மற்றும் வீரர்கள் 3ஆம் நடுவரிடம் மேல்முறையீடு செய்யும் தருணங்களை இந்தத் தொடரில் ரசிகர்களும் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடுவர் தீர்ப்புகளை பார்வையாளர்களும் புரிந்து…

  11. மென்செஸ்டர் யுனைட்டட் கழக பஸ்ஸை தாக்கியவர்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை மென்­செஸ்டர் யுனைட்டட் அணியின் பயிற்­றுநர் தாக்­கப்­பட்ட சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய இர­சி­கர்­க­ளுக்கு வாழ் நாள் தடை விதிக்­கப்­படும் என வெஸ்ட் ஹாம் கழகம் எச்­ச­ரித்­துள்­ளது. மென்­செஸ்டர் யுனைட்டட் அணி­யினர் பயணம் செய்த பஸ் வண்­டியின் யன்னல் ஒன்றும் தாக்கி நொறுக்­கப்­பட்­டுள்­ளது. இந்தத் தாக்­குதல் சம்­பவம் கார­ண­மாக மென்­செஸ்டர் யூனைட்டட் அணிக்கும் வெஸ்ட் ஹாம் அணிக்கும் இடை­யி­லான போட்டி 45 நிமி­டங்கள் தாம­தித்தே ஆரம்­ப­மா­னது. ‘‘பொலியென் மைதா­னத்­திற்கு வெளியில் சில ஆத­ர­வா­ளர்கள் அடா­வ­டித்­த­னத்தில் ஈடு­பட…

  12. நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்டில் ஒரே ஓவரில் 30 ரன்கள் விளாசிய ஆரோன் பிஞ்ச் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட்டில் ஆரோன் பிஞ்ச் ஒரே ஓவரில் 30 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் சுர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சுர்ரே அணி, சசக்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் சுர்ரே அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராயும், ஆரோன் பிஞ்சும் களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ராய் 33 பந்தில் 1 பவுண்டரி, 4 சிக்சருடன…

  13. ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி தென் ஆப்ரிக்கா தரவரிசையில் முதலிடம்! ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை அப்டேட் செய்து வெளியிட்டிருக்கிறது. இதில் தென் ஆப்ரிக்க அணி, ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறது.தென் ஆப்ரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று கடைசி போட்டி நடந்தது. இதில் நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா. இதையடுத்து 3-2 என தொடரையும் ஜெயித்தது தெ.ஆப்ரிக்கா. "இலங்கை தொடரை வென்றாலும், இந்த தொடர் கடுமையான சவால் அளிக்கக் கூடியதாக இருக்கும். இதை வென்றால் மட்டுமே சாம்பியன்ஸ் டிராஃபிக்கு நாம் தயார் என அறிவிக்க முடியும் என நினை…

  14. மரதன் ஓட்டப் போட்டியில் எலியுட் கிப்போக் ( Eliud Kipchoge ) அபார வெற்றி மரதன் ஓட்டப் போட்டியில் சாதனை நேரப் பெறுதியுடன் எலியுட் கிப்போக் ( Eliud Kipchoge ) அபார வெற்றியீட்டியுள்ளார். இரண்டு மணித்தியாலங்களுக்குள் 26.2 மைல்களை கடந்து பயண தூரத்தை கடந்து எலியுட் கிப்போக் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இதன்மூலம் உலகில் மிகவும் கடினமான உலக சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் மரதன் ஓட்டப் போட்டியின் நேரப் பெறுதி சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் சாதனை நேரப் பெறுதியை பதிவு செய்துள்ள எலியுட் கிப்போக் இரண்டு மணித்தியாலங்கள் இருபத்து ஐந்து செக்கன்களில் ஓட்ட தூதுரத்தை முடித்து சாதனை படைத்துள்…

  15. ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் தரவரிசை: 4-வது இடத்திற்கு சரிந்தது இந்தியா; முதல் இடத்தில் நியூசிலாந்து வருடாந்திர முடிவில் வெளியிடப்பட்டுள்ள ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா 6 புள்ளிகளை இழந்து நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது. நியூசிலாந்து முதல் இடத்தில் உள்ளது. வருடந்தோறும் மே 1-ந்தேதி வருடாந்திர தரவரிசையை ஐ.சி.சி. வெளியிடப்படும். அதன்படி டி20 கிரிக்கெட் அணிக்கான தரவரிசை வெளியிடப்பட்டது. இதில் இந்தியா 6 புள்ளிகளை இழந்து 118 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. 125 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்…

  16. இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் சிலருக்கு கொழுப்பு அதிகமாம் எமது நாட்டில் இனி­வரும் காலங்­களில் உடல் ­த­கு­திகாண் பரி­சோ­த­னையில் சித்­தி­ய­டையும் வீரர்கள் மட்­டுமே சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வார்கள். வயிற்றில் 12 வீதத்­திற்கு மேல் கொழுப்பை கொண்­டி­ருக்கும் வீரர்கள் எவ்­வ­ளவு திற­மையைக் கொண்­டி­ருந்­தாலும் கிரிக்கெட் போட்­டி ­களில் விளை­யா­டு­வ­தற்கு தகு­தி­யா­ன­வர்களாக கரு­தப்­ப­ட­மாட்­டார்கள். இந்த விட­யத்தில் மிகவும் கண்­டிப்­பாக இருக்­கின்றேன் என்று விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அ…

  17. இலங்கை, வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் பயணம்: 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது இலங்கை மற்றும் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. கராச்சி: 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று விளையாடிய போது மைதானத்துக்கு செல்லும் வழியில் அணியின் பஸ் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இலங்கை வீரர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். அதன் பிறகு பெரிய அணிகள் எதுவும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. 2015-ம் ஆண்டில் ஜிம்பாப்வே அணி மட்டும் ஒரு முறை சென்று விளையாடியது. எல்லா அணிகளும் செ…

  18. இந்தியாவுக்கு வரும் இலங்கை அணி: 37 நாள்களில் 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள்! அடுத்த மாதம், இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது இலங்கை அணி. 3 டெஸ்டுகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள். இவை அனைத்தும், 37 நாள்களில் முடியவுள்ளன! நவம்பர் 16 அன்று கொல்கத்தாவில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. டிசம்பர் 6 அன்று டெல்லி-யில் மூன்றாவது டெஸ்டுடன் டெஸ்ட் தொடர் நிறைவு பெறுகிறது. தர்மசாலாவில் டிசம்பர் 10 அன்று முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 17 அன்று மூன்றாவது போட்டியுடன் ஒருநா…

  19. இந்­திய மகளிர் அணி­யு­ட­னான இரு­பது20 தொடரில் மேற்­கிந்­திய மகளிர் அணி வெற்றி 2016-11-21 11:28:56 இந்­திய மகளிர் அணி­யு­ட­னான சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடரின் இரண்­டா­வது போட்­டியில் மேற்­கிந்­திய மகளிர் அணி 31 ஓட்­டங்­களால் வெற்­றி­யீட்­டி­யது. இந்­தி­யாவின் ஆந்­திர மாநி­லத்­தி­லுள்ள விஜ­ய­வாடா நகரில் நேற்று இப்­போட்டி நடை­பெற்­றது. நாணயச் சுழற்­சியில் இந்­திய மகளிர் அணி வெற்றி பெற்­றது. அதை­ய­டுத்து மேற்­கிந்­திய மகளிர் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தா­டு­மாறு பணிக்­கப்­பட்­டது. அவ்­வ­ணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீராங்­க­னை­க­ளான ஹெய்லி மெத்திவ்ஸ் 27 ஓட்­டங்­க­ளையும் அணித்­…

  20. இரண்டு வருடங்களின் பின் மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட இந்திய வீரர் இந்திய அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார். நியுஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த கே.எல். ராகுலுக்கு பதிலாக இவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவர் நியுஸிலாந்து அணிக்கெதிராக இடம்பெறவுள்ள மிகுதி டெஸ்ட் போட்டிகளுக்காக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கம்பீர் இறுதியாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்த நிலையில், இரண்டு வருடங்களுக்கு பிறகு இவர் மீண்டும் அணியில் இணைக்…

  21. மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்த லெதம், கொன்வே சதங்கள் குவித்து அசத்தல் 18 Dec, 2025 | 06:27 PM (நெவில் அன்தனி) மெற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மௌன்ட் மௌங்கானுய் பே ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து ஓட்ட மழை குவித்து பலமான நிலையில் இருக்கிறது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து, ஆரம்ப வீரர்கள் பெற்ற சதங்களின் உதவியுடன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 334 ஓட்டங்களைக் குவித்திருந்தது. அணித் தலைவர் டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 323 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்க…

  22. ஜப்பான் பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம் ஜப்பானில் நடந்த பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 306 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். சுஜுகா : இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 16-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி அங்குள்ள சுஜுகா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரமான 307.471 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப் பாய்ந்தனர். முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட மூன்று முறை சாம்பியனான இங்கில…

  23. தேசியமட்ட சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சியிலிருந்து 49 மாணவர்கள் தெரிவு இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் 2017 ம் ஆண்டுக்கான தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 49 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆதரவுடன் கடந்த 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட இளையோர் சதுரங்கப் போட்டிகளில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தெரிவுசெய்யப்பட்டவர்கள் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை கொழும்பு டீ.எஸ். சேனநாயக்கா கல்லூரியில் நடைபெறவ…

  24. உபாதைகளால் அவதிப்படும் டி வில்லியர்ஸ் இலங்கைக்கெதிரான தொடரில் விளையாடுவார்-தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை நம்பிக்கை. உபாதைகளால் அவதிப்படும் டி வில்லியர்ஸ் இலங்கைக்கெதிரான தொடரில் விளையாடுவார்-தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை நம்பிக்கை. தென் ஆபிரிக்க அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரம் ,ஒருநாள் போட்டி அணித்தலைவருமான AB De வில்லியர்ஸ் ,ஆஸ்திரேலிய அணிக்கெதிரான சொந்தமண்ணில் இடம்பெறவுள்ள 5 ஒருநாள் போட்டிகள் ,அதன்பின்னர் ஆஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாடடார் என்று அறிவிக்கப்பட்டது. உபாதைகளால் அவதிப்படும் AB De வில்லியர்ஸ்,முழங்கை உபாதைக்குப் பின்னர் சத்திர சிகிச்சை மேற்கொண்டு டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள இலங்கை அணியுடனான போட்டித…

  25. மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஷரபோவா வெற்றி ஸ்பெயினில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஷிய வீராங்கனை மரிய ஷரபோவா, குரோஷியாவின் மிர்ஜனா லுசிச் பரோனியை தோற்கடித்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார். மாட்ரிட் : மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. ஊக்கமருந்து சர்ச்சையால் 15 மாத கால தடையை அனுபவித்த ரஷிய வீராங்கனை மரிய ஷரபோவா, இந்த போட்டியில் ‘வைல்டு கார்டு’ சலுகை மூலம் பங்கேற்றுள்ளார். முதல் சுற்றில் குரோஷியாவின் மிர்ஜனா லுசிச் பரோனியை எதிர்கொண்டார். பரபரப்பான இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.