Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பாகிஸ்தான்-இலங்கை கிரிக்கெட் போட்டி: சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது! இந்தூர்: பாகிஸ்தான்-இலங்கை அணிகள் விளையாடிய டி-20 கிரிக்கெட் போட்டியன்று பணம் வைத்து சூதாட்டம் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோடிய டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியை மையமாக வைத்து மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரில் பணம் வைத்து ‘ஆன்லைன்’ மூலம் சூதாட்டம் நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, கட்ஜு காலனியில் உள்ள ஒரு வீட்டை போலீசார் சுற்றிவளைத்து சோதனையிட்டனர். அப்போது, அங்கிருந்தபடி ஆன்லைன் மூலம் சூதாட்டத்துக்கான பணப் பரிவர்த்தனையை செய்து கொண்டிருந்த அஜய் பர்யானி (34) என்பவரை போலீசார் கைது செய்த…

  2. பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் சங்கக்கார பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் , இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இணைந்துள்ளார். கிறிஸ் கெயில், கெரான் பொலார்ட், டுவைன் பிராவோ, கெவின் பீற்றர்சன், ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஒப்பந்தம் செய்துள்ளது. இவர்கள், 5 அணிகளால் ஒப்பந்தம் செய்யப்படுவர். சங்கக்காரவின் ஒப்பந்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் தலைவர் நஜம் சேதி, 'சங்கக்கார, உலகத்தரம் மிக்க ஒர வீரர். அவரை இணைத்துக் கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஏராளமான அனுபவத்தை அவர் இந்தத் தொடருக்குக் கொண்டு வருகின்றார். அவரது இணைப்பானது, தொடரின் வீரர் தெ…

  3. உசேன் போல்ட்டை கீழே தள்ளிவிட்ட கேமராமேன் (வீடியோ): பெய்ஜிங் அதிர்ச்சி சம்பவம் சீனாவின் பெய்ஜிங் நகரில் உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் 9.79 வினாடிகளில் கடந்து சாம்பியன் ஆனார். இந்நிலையில் 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார். வெற்றி உற்சாகத்தில் மைதானத்தில் குழுமி இருந்த ரசிகர்களுக்கு கைகொடுத்த வண்ணம் போல்ட் வந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்வை படம் பிடித்த டி.வி. கேமராமேன் ஒருவர் தவறுதலாக பின்பக்கத்தில் போல்ட் மீது மோதிவிட்டார். இதில் நிலைதடுமாறிய போல்ட் தலைகுப்புற கீழே விழுந்தார். ஆனாலும் தனது ஸ்டைலில் 'டைவ்' அடித்து எழுந்த உசேன் போல்ட், மீண்டும் சாதாரணமாக ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று சென்றார். http://www.vik…

  4. கட்டாக்கில் சர்வதேச போட்டி நடத்த 2 ஆண்டு தடை விதிக்க வேண்டும்: ரசிகர்களின் ரகளையால் கவாஸ்கர் காட்டம் கோப்புப் படம். கட்டாக் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த 2 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்தபோது கோபமடைந்த ரசிகர்கள், தண்ணீர் பாட்டில்களை மைதானத்துக்குள் எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் ஆட்டம் பாதிப்புக்குள்ளானது. ரசிகர்களின் இந்த செயலால் கோபமடைந்த கவாஸ்கர் மேலும் கூறியிருப்பதாவது: ரசிகர்கள் பாட்டிலை தூக்கி எறிந்தபோது போலீஸார் அதை வேடிக்…

  5. பார்சிலோனாவை விமர்சிக்கிறார் நேமர் பரிஸ் செய்ன்ட் ஜேர்மா அணியின் புதிய ஒப்பந்தமான நேமர், தனது முன்னைய கழகமான பார்சிலோனாவின் பணிப்பாளர்கள் மீது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "பார்சிலோனாவுக்கு, இதைவிடச் சிறப்பான விடயங்கள் கிடைக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார். பார்சிலோனாவின் நட்சத்திர வீரராகக் காணப்பட்ட நேமர், உலக சாதனைத் தொகையான 222 மில்லியன் யூரோக்களுக்கு, பரிஸ் கழகமான பரிஸ் செய்ன்ட் ஜேர்மாவால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், தனது புதிய கழகத்துக்கான அறிமுகப்போட்டியில், 2 கோல்களைப் பெற்ற நேமர், 6-2 என்ற கோல் கணக்கில், தௌலோஸ் அணியை வீழ்த்துவதற்கு உதவியிருந்தார். …

  6. சூடுபிடிக்கும் ஐ.சி.எல். சூதாட்ட வழக்கு : பிரன்டென் மெக்கல்லம் நீதிமன்றத்தில் சாட்சி! ஐ.பி.எல். போட்டிகளுக்கு முன்னதாக, இந்தியாவில் ஐ.சி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த தொடர், இரு சீசன்கள் மட்டுமே நடைபெற்றது. பின்னர் பி.சி.சி.ஐ.யின் நெருக்கடி காரணமாக அழிந்து போனது. இந்த தொடரில் நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயிர்ன்ஸ் சண்டிகார் லயன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். இவர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து, லலித் மோடி மீது கிறிஸ் கெயிர்ன்ஸ் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2.4 மில்லியன் அமெரிக்க டா…

  7. கோலூன்றிப் பாய்தலில் டுப்லான்டிஸ் 6.22 மீற்றர் உயரம் தாவி புதிய உலக சாதனை Published By: DIGITAL DESK 5 28 FEB, 2023 | 02:21 PM (நெவில் அன்தனி) பிரான்ஸில் க்ளேர்மொன்ட் ஃபெராண்ட் உள்ளக அரங்கில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற All Star Perche, World Athletics Indoor Tour Silver போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 6.22 மீற்றர் உயரம் தாவிய சுவீடன் வீரர் மொண்டோ டுப்லான்டிஸ் தனது சொந்த உலக சாதனையை முறியடித்தார். ஒலிம்பிக் சம்பியனும் உலக சம்பியனுமான 23 வயதான டுப்லான்டிஸ், பெப்ரவரி மாத முற்பகுதியில் உப்சலாவில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் உலக சாதனையைப் புதுப்பிக்க முயற்சி செய்தார். நடப்பு …

  8. கப்தில், வில்லியம்சன் அதிரடியில் தொடரைக் கைப்பற்றியது நியூஸிலாந்து பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை 2-0 என்று வென்று டிராபியுடன் காட்சியளிக்கும் நியூஸிலாந்து அணி. | படம்: ஏ.எப்.பி. தோல்வியின் விரக்தியில் பாகிஸ்தான். | படம்: ஏ.எப்.பி. ஆக்லாந்தில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை டக்வொர்த் லூயிஸ் முறையில் வீழ்த்திய நியூஸிலாந்து ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 48 ஓவர்களில் 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணிக்கு மழைகாரணமாக திருத்தியமைக்கப…

  9. அதிக விக்கெட்: வாசிம் அக்ரமை பின்னுக்குத் தள்ளினார் ஹெராத் அ-அ+ வங்காள தேசத்திற்கு எதிரான டாக்கா டெஸ்டில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியன் மூலம் வாசிம் அக்ரம் சாதனையை முறியடித்தார் ஹெராத். #BANvSL வங்காள தேசம் - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் நடைபெற்றது. இதில் 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காள தேசம் 123 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை அணி 215 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.…

  10. பெண் அளித்த புகாரில் கைதான அமித் மிஸ்ரா ஜாமீனில் விடுவிப்பு இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா | கோப்புப் படம் தன்னைத் தாக்கியதாக பெண் ஒருவர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அசோக் நகர் காவல் நிலையத்தில் அமித் மிஸ்ராவிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் பெங்களூரு மாநகர (மத்திய) துணை காவல் ஆணையர் சந்தீப் பாட்டீல் தெரிவித்தார். கடந்த செப்டம்பர் மாத இறுதியில் பெங்களூருவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பங்கேற்றார். அப்போது பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியி…

  11. உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனிக்கு 9வது இடம் உலகிலேயே அதிக மதிப்புள்ள விளையாட்டு வீரர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு 9வது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு பின்னரே கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார்கள் ரொனால்டோ, லயனல் மெஸ்சி இந்த பட்டியலில் வருகின்றனர். லண்டன் ஸ்கூல் ஆப் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் முதல் இடத்தை பிடித்துள்ளார். கால்பந்து வீரர்கள் ரொனால்டோ, மெஸ்சி ஆகியோரை விட இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு சந்தையில் அதிக மதிப்பு இருக்கிறது. தோனியின் ஆண்டு வருமானம் 31 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில் விளம்பரங்கள் மூலம் கிடை…

  12. 836 நிமிடங்கள் பேட் செய்து அலிஸ்டர் குக் புதிய சாதனை: 263 ரன்கள் குவித்து பாக். பந்துவீச்சைக் காய்ச்சி எடுத்தார் அபுதாபி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை காய்ச்சிய அலிஸ்டர் குக் 263 ரன்கள் குவிப்பு. | படம்: ஏ.பி. அபுதாபி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் 263 ரன்கள் என்ற மாரத்தான் இன்னிங்ஸை ஆட, இங்கிலாந்து 8 விக். இழப்புக்கு 569 ரன்கள் எடுத்துள்ளது. அபுதாபியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து தன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 569 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தானைக் காட்டிலும் 46 ரன்கள் முன்னிலை பெற்றது. முழுதும் பேட்டிங்குக்குச் சாதகமான மண் ஆட்டக்களத்தில் அலிஸ்டர் குக் பாகிஸ்தான…

  13. டி20 தொடர்: அணிக்கு திரும்பினார் ரெய்னா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா சுமார் ஓராண்டுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார். கடைசியாக அவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றிருந்தார். அதன் பிறகு உடற்தகுதி பிரச்னைகள் காரணமாக அணிக்கு திரும்பாமல் நீடித்து வந்தவர், சமீபத்தில் சையது முஷ்டாக் அலி டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். அத்துடன், உடற்தகுதிக்கான "யோ யோ' சோதனையிலும் தேர்ச்சி பெற்ற நிலையில் தற்போது அணிக்குத் திரும்பியுள்ளார். அவரோடு, இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட…

  14. இலங்கை கால்பந்தாட்ட அணியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர்கள் இருவருக்கு இடம் ஈரானின் சிராஸ் நகரில் எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 18 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான கால் பந்தாட்டத் தொடரில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் தமிழ் வீரர்கள் இருவர் இடம்பிடித்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஆர்.ரெம்சன், எஸ்.சயந்தன் ஆகியோரே அவ்வாறு இடம் பிடித்த வீரர்களாவர். http://newuthayan.com/story/18963.html

  15. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: நியூஸிலாந்து அணியில் ஜேம்ஸ் நீஷம் ஜேம்ஸ் நீஷம் ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய நியூஸிலாந்து அணியோடு ஒப்பிடுகையில், இப்போது ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. நீல் வாக்னருக்குப் பதிலாக ஜேம்ஸ் நீஷம் சேர்க்கப்பட்டுள்ளார். முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய ஆல்ரவுண்டரான நீஷம், தனது முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. நீஷமின் வருகை பேட்டிங்கிற்கு மட்டுமின்றி வேகப்பந்து வீ…

  16. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி 20-ல் 3 ரன்களில் வெற்றி: பதிலடி கொடுத்தது தென் ஆப்ரிக்கா தென் ஆப்பிரிக்கா வெற்றி. | படம்.| ஏ.எஃப்.பி. இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நல்ல பார்மில் இருந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேசன் ராய், பீல்டிங்குக்கு இடையூறு செய்ததாக குற்றம் சாட்டி வெளியேற்றப்பட்டதால் (ரன் அவுட்) அந்த அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. கவுன்டி கிரிக்கெட் மைதானமான டான்டனில் நேற்று முன்தினம் நடந்த 2-வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 174 …

  17. விராட் கோலியின் கேப்டன் திறமை தீயாக பரவுகிறது: ரவி சாஸ்திரி புகழாரம் ரவி சாஸ்திரி, விராட்கோலி (கோப்புப் படம்) கேப்டன் விராட் கோலியின் திறமை நாளுக்கு நாள் தீ போல் வளர்ந்து, அணியில் பரவி வருகிறது என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். தென் ஆப்பிரிக்க பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும் 5-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி வெற்றியுடன் நாடு திரும்பியது. கடந்த 1992-ம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பல முறை தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட போதிலும் ஒருமுறைகூட தொடரை வென்றதில்லை. முகம்…

  18. 19 வயதின்கீழ் ஆசிய இளையோர் கிண்ண கிரிக்கெட்: நடப்பு சம்பியன் இந்தியாவுடன் இலங்கையும் ‘அவுட்’ அரை இறுதிகளில் நேபாளம், ஆப்கானிஸ்தான் மலே­ஷி­யாவின் கின்­ரா­ரா­விலும் பயொ­மா­ஸிலும் நடை­பெற்­று­வரும் 19 வய­துக்­குட்­பட்ட ஆசிய இளையோர் கிரிக்கெட் போட்­டி­களில் நடப்பு சம்­பியன் இந்­தி­யாவும் கடந்த வருடம் இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்­கையும் அரை இறுதி வாய்ப்­பு­களை இழந்து ஏமாற்­றத்­துடன் நாடு திரும்­ப­வுள்­ளன. பாகிஸ்தான் மற்றும் பங்­க­ளா­தே­ஷுடன் முற்­றிலும் எதிர்­பா­ராத நாடு­க­ளான ஆப்­கா­னிஸ்­தானும், நேபா­ளமும் அரை இறு­தி­க­ளுக்கு முன்­னே­றி­யுள்­ளன. பாகிஸ்­தானும், பங்­க­ளா­தேஷும் ஏற்­க­னவே அரை இறுதி வாய்ப்­பு­களைப் பெற்­று­விட்ட நிலையில் ஆப்­கா­னிஸ்­தானும் …

  19. உலகக் கோப்பை டி20 இறுதி ஆட்டம்: புல்லரிக்க வைத்த கடைசி ஓவர் (வீடியோ) கடந்த 2007ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்ட உலகக் கோப்பை டி20 போட்டியில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் விளையாடிய இந்திய அணி, 157 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் அணி, 145 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தது. மிஷ்பா களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இந்த சமயத்தில் ஜோகிந்தர் சர்மா வீசிய கடைசி ஓவரை மறக்க முடியாது. முதல் பந்தை ஜோகிந்தர் சிங், வைடாக வீசி ரன் கொடுத்தார். அடுத்த பந்தை சரியாக வீசினார் மிஷ்பாவால் அடிக்க முடியவில்லை. அதற்கு அடுத்த பந்தை மிஷ்பா உல் ஹக் சிக்சருக்கு விளாச, இந்…

  20. சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பு பறிபோகும் அச்சம்: ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது பாகிஸ்தான் பாகிஸ்தான் அணி வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடவிருந்தது. இந்நிலையில், அந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு வெளிப்படையான காரணம் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், 2017-ம் ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால்தான் இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ‘பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நடைபெற்ற இதுதொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில், இம்முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது. இரு வாரியங்களுமே, வேறு…

  21. பாக். கிரிக்கெட் வாரியத்தின் மீது சாடிய யூனிஸ் கான் மீது நடவடிக்கை பாய்கிறது யூனிஸ் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் துக்கு எதிராக கருத்து தெரிவித்த மூத்த பேட்ஸ்மேனான யூனிஸ் கான் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹாரியார் கான் தெரிவித் துள்ளார். இதன்மூலம் அவர் மீது நடவடிக்கை பாய்வது உறுதியாகி யுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு தன்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைக்கவில்லை எனக் கூறிய யூனிஸ் கான், வாரியத்தின் மீது கடுமையாக சாடினார். இந்த நிலையில் அது தொடர்பாக சஹாரி யார் கான் கூறியதாவது: யூனிஸ் கான் மீது நான் மிகுந்த மரியாதை வை…

  22. சாதனை படைத்த சாம்பியன்கள்: 2025-ல் கிரிக்கெட் உலகில் நடந்த 10 முக்கிய நிகழ்வுகள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் 2025-ஆம் ஆண்டின் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டோம். கிரிக்கெட் அரங்கை திரும்பிப் பார்க்கும்போது சர்வதேச மற்றும் உள்ளூர் அரங்கில் பல்வேறு விஷயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒருசில உலகக் கோப்பைகள், இன்னும் சில பிரதான ஐசிசி தொடர்கள் நடந்திருக்கின்றன. டி20 லீகுகளில் வழக்கம்போல் எதிர்பார்ப்புகளை மிஞ்சிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அதேபோல். டெஸ்ட் போட்டிகளிலும் கூட பல முக்கியமான தொடர்கள் பெரும் கவனம் ஈர்த்தன. ஒட்டுமொத்தமாகவே இந்த ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. பெரும் வெற்றிகள், சா…

  23. ஐ.பி.எல். தொடரில் வெளிநாட்டு அணிகள் பங்கேற்க எதிர்ப்பு சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக வெளிநாட்டு அணிகளை ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று வந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளின் உரிமையாளர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அந்த அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஐ.பி.எல் போட்டியில் மேலும் இரு அணிகளை உருவாக்கும் நிலைக்கு பி.சி.சி.ஐ தள்ளப்பட்டுள்ளது. வரும் ஐ.பி.எல். போட்டியில் 8 அணிகள் பங்கேற்க வைப்பதற்கான நடவடிக்கைகளில் ஐ.பி.எல் நிர்வாகக் குழு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் உள்ளிட்ட டி20 தொடர்களில் விளையாடும் இரு அணிகளை ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க வைக்கலாம் என்ற ஆலோசன…

  24. வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் போட்டியில் 10 பதங்கங்களை ஊர்காவற்றுறை யா/தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சுவீகரித்தள்ளது. வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் போட்டி கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றது. இதில் 3 முதலிடங்களையும், 4 இரண்டாமிடங்களையும், 3 மூன்றாமிடங்களையும், 5 நான்காமிடங்களையும் குறித்த பாடசாலை மாணவர்கள் பெற்றுள்ளனர். முதல் மூன்று இடங்களைப் பெற்று வெற்றி பெற்ற 10 மாணவர்கள் தேசிய மட்ட நீச்சல் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர். https://thinakkural.lk/article/271004

  25. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அதிரடி 'சஸ்பெண்ட்' மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. எல்டைன் பாப்டைஸ்ட் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொடருக்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் தேர்வு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதையடுத்து அவர் மீது இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி மிகுவேல், சிம்மன்சுக்கு சஸ்பெண்ட் தொடர்பான தகவலை இமெயில் மூலம் அனுப்பியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான தொடர் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்குகிறது. அங்கு இரண்டு டெஸ்ட், 3 ஒர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.