விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் பெருமிதம் ; ஏனைய மக்களுக்கும் எடுத்துக்காட்டு ! இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் செயல்கள் ஏனைய மக்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளது. இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி நேற்றைய தினம் கொழும்பு, ஆர்.பிரேமதாஸா விளையாட்டாரங்களில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி மெத்தியூஸின் அதிரடியினாலும் அகில தனஞ்சயவின் அசத்தலான பந்து வீச்சின் காரணத்தினாலும் 178 ஓட்டங்களினால் தென்னாபிரிக்காவை மண்டியிட வைத்தது. இதனையடுத்து போட்டியை காணவந்த இலங்கை அணியின் ரசிகர்கள் போட்டியின் நிறைவி…
-
- 1 reply
- 693 views
-
-
டிஎன்பிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மதுரை - திண்டுக்கல் அணிகள் இன்று மோதல்: பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடி பரிசு சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பை. சங்கர் சிமெண்ட் டிஎன்பிஎல் தொடரின் 3-வது சீசன் இறுதிப் போட்டியில் இன்று திண்டுக்கல் டிராகன்ஸ் - சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத் தில் இரவு 7.15 மணிக்கு நடை பெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. திண்டுக்கல் அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. கேப்டன் என்.ஜெகதீசன் இந்த சீசனில் 345 ரன்கள் சேர்த்துள்ளர். தொடக்க வீரரான ஹரி நிஷாந்த், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆர்.விவேக் …
-
- 4 replies
- 672 views
-
-
மெத்தியூஸின் அதிரடியால் தென்னாபிரிக்காவுக்கு வெற்றியிலக்கு 300 மெத்தியூஸின் அசத்தலான துடுப்பாட்டம் காரணமாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களை பெற்று, தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 300 ஓட்டங்களை நிர்ணியித்துள்ளது. இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமானதுமான போட்டி இன்று கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி இலங்கை அணி சார்பில் களமிறங்கிய நிரோஷன் திக்வெல்ல மற்றும் உபுல் த…
-
- 1 reply
- 881 views
-
-
லார்ட்ஸ் டெஸ்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஆண்டர்சன் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆண்டர்சன், லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். #ENGvIND #JamesAnderson லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய இங்க…
-
- 0 replies
- 579 views
-
-
லார்ட்ஸ் மைதானத்துக்கு வெளியே ரேடியோ விற்ற அர்ஜுன் டெண்டுல்கர் அ-அ+ இந்திய 19 வயதுக்கு உள்பட்டோர் அணி வீரரும், சச்சின் டெண்டுல்கரின் மகனுமான அர்ஜுன் டெண்டுல்கர் லார்ட்ஸ் மைதானத்தின் வெளியே ரேடியோ விற்பனை செய்துள்ளார். #ENGvIND #Lords #ArjunTendulkar லண்டன்: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடி வருகிறார். தற்போது,…
-
- 0 replies
- 430 views
-
-
பார்சிலோனா அணியின் முழுநேர கேப்டனாக மெஸ்ஸி நியமனம்! பார்சிலோனா அணியின் கேப்டனாக லயோனல் மெஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார். கால்பந்து உலகின் நாயகனாக வலம் வருபவர் லயோனல் மெஸ்ஸி. இவர் ஸ்பெயினின் பார்சிலோனா கிளப் அணிக்காக கடந்த 2005ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து, இந்த அணியின் கேப்டனாக இருந்து வருபவர் ஆன்ட்ரே இனியஸ்டா. இந்த அணியின் துணை கேப்டனாக லயோனால் மெஸ்ஸி செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இனியஸ்டா கடந்தாண்டு பார்சிலோனா அணியிலிருந்து 2017-18 சீசனுடன் விலகுவதாக அறிவித்திருந்தார். அவர் ஜப்பானின் வெசல் கோப் அணிக்காக விளையாட இருக்கிறார். இதையடுத்து, துணை கேப்டனாக இருந்த லயோனால் மெஸ்ஸி தற்போது பார்சிலோனா அணியின் க…
-
- 0 replies
- 459 views
-
-
தனுஸ்கவும் வன்டர்சேயும் மீண்டும் இலங்கைக்காக விளையாடுவார்கள் - ஹத்துருசிங்க அணியின் விதிமுறைகளை மீறியதற்காக தடைகளை அனுபவித்துவரும் தனுஸ்க குணதிலகவும் ஜெவ்ரி வன்டர்சேயும் மீண்டும் அணியில் இடம்பெறுவார்கள் என இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்க மீண்டும் தெரிவித்துள்ளார் இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றமை குறித்து நான் ஏமாற்றமடைந்துள்ளேன், என தனுஸ்க குணதில ஜெவ்ரி வன்டர்சேயின் விவகாரம் குறித்து ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். இது கடந்த காலங்களிலும் இடம்பெற்றது,எங்கள் கலாச்சாரம் வித்தியாசமானது, எங்களால் இதனை சகித்துக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் ஒரு இரு நபர்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தவி…
-
- 0 replies
- 386 views
-
-
40 பந்துகளில் சதம் & ஹாட்ரிக்: அசத்திய ரஸ்ஸல்! போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் டி20 ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் கொடுத்துவைத்தவர்கள். டாஸ் வென்ற ஜமைக்கா டல்லவாஸ், டிரின்பேகோ நைட் ரைடர்ஸ் அணியைப் பேட்டிங் செய்யச் சொன்னது. அந்த அணி 20 ஓவர்களில் 223 ரன்களைக் குவித்தது. மன்ரோ 61, மெக்கல்லம் 56 ரன்கள் எடுத்தார்கள். மொத்தம் 14 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. கடைசி ஓவரை வீசிய ரஸ்ஸல், ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்தார். கடினமான இலக்கை எதிர்கொண்ட ஜமைக்கா அணி, ஒருகட்டத்தில் 6.1 ஓவர்களில் 41 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அந்தக் கணத்தில் ஆட…
-
- 0 replies
- 412 views
-
-
டி20 போட்டியில் 62 பந்தில் 202 ரன்கள் விளாசிய 12 வயது சிறுவன் அ-அ+ தென்ஆப்பிரிக்கா கேப்டவுனில் நடைபெற்ற டி20 போட்டியில் 12 வயது சிறுவன் 62 பந்தில் 202 ரன்கள் குவித்துள்ளார். #T20Cricket தென்ஆப்பிரிக்காவில் கேப்டவுன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று டி20 போட்டியில் பிரைம்ரோஸ் ஹப் அணிக்காக 12 வயது சிறுவன் கீரன் பொவர்ஸ் விளையாடினார். இவர் 62 பந்தில் 202 ரன்கள் குவித்தார். இதன்மூலம் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும்…
-
- 0 replies
- 312 views
-
-
"வயது ஒரு தடையில்லை; எப்படி விளையாடுகிறோம் என்பதுதான் முக்கியம்": சச்சின் மனம் திறந்த பேட்டி சச்சின் டெண்டுல்கர் : கோப்புப்படம் ஒரு அணிக்காக நாம் எப்படி பேட் செய்கிறோம், பந்துவீசுகிறோம் விளையாடுகிறோம் என்பதுதான் முக்கியமேத் தவிர, வீரருக்கு வயது ஒரு தடையில்லை என்று மாஸ்டர் பிளாஸ்டரும் முன்னாள் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். எஸ்பின்கிரிக்இன்போ சேனலுக்கு சச்சின் டெண்டுல்கர் பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் இங்கிலாந்து அணியில் இளம் வீரர்கள் ஆலிவர் போப், சாம் கரன் ஆகியோர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள், சர்வதேச பந்துவீச்சை இளம் வீரர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தாவது: …
-
- 0 replies
- 302 views
-
-
தென்னாபிரிக்காவுடனான T-20 போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு தற்பொழுது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியுடனான ஒரு போட்டியைக் கொண்ட T-20 தொடருக்கான இலங்கை குழாம் இன்று (08) அறிவிக்கப்பட்டுள்ளது அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான இந்த குழாமில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலும் உள்வாங்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாமில் உள்வாங்கப்படாத நிலையிலேயே சந்திமால் T-20 குழாமில் பெயரிடப்பட்டுள்ளார். இறுதியாக, கடந்த வருடம் இந்தியாவுடனான T-20 போட்டியில் விளையாடிய அஞ்செலோ மெதிவ்ஸ், உபாதை காரணமாக தொடர்ந்து இடம்பெற்ற பங்களாதேஷ் அணியுடனான T-20 தொடர் மற்றும் சுதந்திரக் கிண்ணத் தொடர் என்பவற்றில்…
-
- 0 replies
- 542 views
-
-
தோனி, டிராவிட், கோலி போன்ற நல்ல குணமுள்ளவர்கள்ள் கிரிக்கெட்டுக்குத் தேவை: ஐசிசி புகழாரம் ஐசிசி நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சார்ட்ஸன் : கோப்புப்படம் வாழ்க்கையில் நல்ல குணமும், நல்ல ஒழுக்கமான நடவடிக்கையும் கொண்ட வீரர்கள் கிரிக்கெட்டுக்கு மிகவும் அவசியம். அதிலும் தோனி, டிராவிட், கோலி போன்ற வீரர்கள் கிரிக்கெட்டுக்கு அவசியம் என்று ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சார்ட்சன் புகழாரம் சூட்டியுள்ளார் லண்டன் லாட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சார்ட்சன் பங்கேற்றார். அவர் பேசியதாவது: இன்றைய…
-
- 0 replies
- 443 views
-
-
டெஸ்ட் தொடரில் சாதித்த இலங்கை ஒரு நாள் தொடரிலும் சாதிக்குமா? விருந்தினர்களாக இலங்கைக்கு வந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் தொடரில் வைட்வொஷினை பரிசளித்த இலங்கை அணி, “யாரையும் எளியோர் என்று எண்ணிவிடாதே” என்ற முதுமொழியை உண்மைப்படுத்தியிருக்கின்றது. கிரிக்கெட்டின் நீண்ட ஓவர்கள் கொண்ட வகைப் போட்டிகளில் இப்படியாக மிகவும் திறமையாக இருக்கும் கிரிக்கெட் அணியொன்றை தோற்கடித்த இலங்கை அணிக்கு, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலும் தமது திறமையை நிரூபிக்க தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடர் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அந்தவகையில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐ…
-
- 20 replies
- 2.6k views
-
-
தேசிய கால்பந்தாட்டம் – வல்வையைச் சேர்ந்த இரண்டு வீரர்களுக்கு இடம் இலங்கை சிறப்புத் தேவையுடையோர் கால்பந்தாட்ட அணிக்கு வல்வையைச் சேர்ந்த இரு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த வீரர்களான கர்ணன் மற்றும் மயூரன் ஆகியோரே அவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் மற்றும் அண்மையில் இடம்பெற்ற ஆட்டங்களில் சிறப்பாக செயற்பட்ட இவர்கள் இலங்கை தேசிய அணிக்கான தெரிவு குழுவின் கவனத்தை ஈர்த்திருந்தனர். http://…
-
- 0 replies
- 524 views
-
-
பார்சிலோனாவில் இணைந்தார் விடல் @AFP சிலி கால்பந்து அணியின் மத்தியகள வீரர் ஆர்டுரோ விடல் மருத்துவ சோதனைகளுக்குப் பின்னர் பயேர்ன் முனிச் கழக அணியில் இருந்து ஸ்பெயினின் பலம்மிக்க பார்சிலோனா கழகத்தில் திங்கட்கிழமை (06) உத்தியோகபூர்வமாக இணைந்தார். விடல், லா லிகா சம்பியனான பார்சிலோனாவுடன் கடந்த வெள்ளிக்கிழமை (03) மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். எனினும், அவரது ஒப்பந்தத் தொகை வெளியிடப்படவில்லை. அது 20 தொடக்கம் 30 மில்லியன் யூரோ என செய்திகள் வெளியாகியுள்ளன. தற்பொழுது 31 வயதுடைய விடல் இன்டர் மிலான் கழகத்துடன் இணைவதற்கு நெருங்கிய போதே கடைசி நேரத்தில் அவரை பார்சிலோனா தனதாக்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 485 views
-
-
“டெஸ்ட் போட்டியில் இப்படித்தான் பேட்டிங் செய்வார்களா?” ஷிகர் தவணை திட்டித் தீர்த்த சுனில் கவாஸ்கர் ஷிகர் தவண் தன்னுடைய பேட்டிங்கை மாற்றிக்கொள்வது போல் தெரியவில்லை, டெஸ்ட் போட்டிக்கு ஏற்றார்போல் அவர் பேட்டிங் செய்யவிட்டால் வெற்றி பெற முடியாது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். பர்மிங்ஹாமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்களில் பரிதாபமாகத் தோல்வியுள்ளது. இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலியைத் தவிர மற்ற எந்த வீரர்களும் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்படவில்லை. இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்ததும், தேவையில்லாத பந்து…
-
- 0 replies
- 379 views
-
-
தொடரிலிருந்து வெளியேறுகிறார் டூப்பிளஸ்ஸி தென்னாபிரிக்க அணித் தலைவர் டூப்பிளஸ்ஸியின் வலது தோள் பட்டையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் இலங்கைக்கு எதிரான இறுதி இரு ஒரு நாள் போட்டிகளிலும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளிலும் விளையாட மாட்டார் என தென்னாபிரிக்க அணியின் முகாமையாளர் மெஹமட் முசாஜி தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது தென்னாபிரிக்க அணி வீசிய 10 ஓவரில் பிடியெடுப்பு ஒன்றுக்கான முயற்சியொன்றை மேற்கொண்டபோது அவர் கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் வலது தோல்பட்டை பாதிப்புக்குள்ளானதில். இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சைக்களுக்குப் பின்னர் மரு…
-
- 0 replies
- 410 views
-
-
கிரிக்கெட்டின் நேர்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு- ஐசிசி தலைவர் பந்தை சேதப்படுத்துவது மற்றும் எதிரணி வீரர்களை வார்த்தைகளால் நிந்திப்பது போன்ற விடயங்கள் கிரிக்கெட்டின் கௌரவத்திற்கும் நேர்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என தெரிவித்துள்ள ஐசிசி தலைவர் டேவிட் ரிச்சட்சன் சமீபத்தைய மோசமான நடத்தைகளை வீரர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். நேர்மையே கிரிக்கெட் மரபனு என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பல விடயங்கள் சமீபத்தில் இடம்பெற்றுள்ளன இதனை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிரணி வீரர்களை வார்த்தைகளால் நிந்திப்பது அவர்களை வார்த…
-
- 0 replies
- 284 views
-
-
மீண்டும் மலிங்க? இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க எமது அவதானிப்பில்தான் இருக்கிறார் என்று இலங்கையின் துடுப்பாட்டப் பயிற்சியாளர் திலான் சமரவீர தெரிவித்துள்ளார். ஆனால் அவர் எதிர்வரும் போட்டிகளில் விளையாடுவாரா, இல்லையா என்பதை நான் தீர்மானிக்க முடியாது என்றும் அநேகமாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் லசித் மலிங்க களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் திலான் சமரவீர குறிப்பிட்டார். நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க அணியிலிருந்து கடந்த சில காலங்களாக ஓரம் கட்டப்பட்டே வருகிறார். ஆனாலும் அவரும் சளைக்காமல் தன் திறமைக…
-
- 0 replies
- 604 views
-
-
இன்ஸ்டாகிராம் பதிவுக்கு நான் பொறுப்பல்ல! ட்விட்டரில் கங்குலி தகவல் தன் பெயரில் உள்ள இன்ஸ்ட்ராகிராம் போலியானது அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் ‘தாதா’ என வர்ணிக்கப்படும் சவுரவ் கங்குலி ஓய்வுக்குப் பின்னரும் அணிக்காக பல்வேறு பங்களிப்பை வழங்குகிறார். சமூகவலைதளமான ட்விட்டரில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் பந்துவீச்சாள…
-
- 0 replies
- 450 views
-
-
‘சச்சினுக்கு தூக்கத்தில் நடக்கும் நோய் இருக்கிறதா?’-கங்குலி வெளியிட்ட சுவாரஸ்ய தகவல் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி : கோப்புப்படம் சச்சின் டெண்டுல்கர் இரவில் தூங்கும்போது நடக்கும் நோய் உள்ளவரா என்பது குறித்து அவரின் நண்பரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி சுவாரஸ்யத் தகவலை வெளியிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரும், சவுரவ் கங்குலியும் இரு வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் கூட, கிரிக்கெட் போட்டிகளில் சிறுவயதில் ஒன்றாகப் பயிற்சி எடுத்தவர்கள். அதுமட்டுமல்லாமல், இந்திய அணிக்குள் இருவரும் தேர்வு செய்யப்பட்டபின் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். உலக அணிகள…
-
- 0 replies
- 365 views
-
-
ரஸல் போராட்டம் வீண்: லிட்டன் தாஸின் ‘காட்டடி பேட்டிங்கில்’ டி20 தொடரை வென்றது வங்கதேசம் வங்கதேசம் சார்பில் அதிரடியாக அரை சதம் அடித்த லிட்டன் தாஸ் - படம் உதவி: ட்விட்டர் லிட்டன் தாஸின் ’காட்டடி பேட்டிங்’, முஸ்தபிசுர் ரஹ்மானின் பந்துவீச்சு ஆகியவற்றால் புளோரிடாவில் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம் அணி. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் அணி வென்றது. ஏற்கெனவே ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றிய நிலையில், இப்போது டி20 தொரையும் தனதாக்கியுள்ளது. வங்கதேசத்தின் தொடக்க ஆட்…
-
- 0 replies
- 390 views
-
-
ஏ.சி மிலனிடம் தோற்றது பார்சிலோனா சர்வதேச சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், இன்று காலை இடம்பெற்ற போட்டியில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனிடம் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா தோற்றது. இப்போட்டியில், ஏ.சி மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்ட்ரே சில்வா பெற்றிருந்தார். இதேவேளை, குறித்த தொடரின் மற்றொரு போட்டியில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவன்டஸை 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வென்றிருந்தது. றியல் மட்ரிட் சார்பாக, மார்கோ அஸென்ஸியோ இரண்டு கோல்களையும் கரித் பேல் ஒரு கோலையும் பெற்றனர். ஜுவன்டஸின் கோல் ஓவ்ண் கோல் மூலமாகவே கிடைக்கப் பெற்றிருந்தது. …
-
- 0 replies
- 285 views
-
-
3வது ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 302 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம் செயிண்ட் கிட்சில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 302 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது வங்காளதேசம் அணி. #WIvBAN செயிண்ட் கிட்ஸ்: வங்காளதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒ…
-
- 3 replies
- 565 views
-
-
விராட் கோலி : சச்சினுக்கு பிறகு டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் முதலிடம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைPHILIP BROWN விராட் கோலி இன்று வெளியிடப்பட்ட ஐசிசி தரவரிசை பட்டியலில் டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடம் பிடித்த்துள்ளார். இந்திய அணி சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 194 ரன்களை துரத்…
-
- 0 replies
- 332 views
-