Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. நெருங்கிவரும் 2019 உலகக் கிண்ணத்தில் திசரவிடம் நம்பிக்கை கொள்ளும் இலங்கை 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு வலுவான அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இலங்கை, திசர பெரேரா மீது அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்துள்ளது. கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்திருக்கும் அந்த போட்டிக்கு இன்னும் 18 மாதங்களே எஞ்சியிருக்கும் நிலையில், சகலதுறை வீரரான அவர் போட்டிகளை வெற்றிபெறச் செய்பவராக வருவார் என்ற நம்பிக்கை தற்பொழுது அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பரில் திசர பெரேராவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணித் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டபோது அது குறைந்த அளவிலோ அல்லது அதிக அளவிலோ தவறாக இருந்தது. அப்போது அணியில் அவரது இடம் பற்றி கேள்வி எழுந்…

  2. வாய்ப்புக்காக காத்திருப்பது கடினமாக உள்ளது: மனம் திறக்கும் மணீஷ் பாண்டே மணீஷ் பாண்டே - THE HINDU அணியில் நிரந்தர இடம் பிடிப்பதற்கு என்ன தேவையோ அது தன்னிடம் இருக்கிறது என்ற போதிலும் ஆங்காங்கே எப்போதாவது வாய்ப்புகள் கிடைக்கும் போது அதற்காகக் காத்திருத்தல் கடினமாக உள்ளது என்று மணீஷ் பாண்டே தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி 20 ஆட்டத்தில் மணீஷ் பாண்டே 48 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்ததுடன் தோனியுடன் இணைந்து அருமையான கூட்டணி அமைத்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தினாலேயே இந்திய அணி 188 ரன்கள் வரை குவிக்க முடிந்தது. இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு மணீஷ் பாண்டே கூ…

  3. மகாஜனா - ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிகள் மோதும் கிரிக்கெட் சமர் இன்று வடக்கின் பிர­பல பாட­சா­லை­க­ளான மகா­ஜனா கல்­லூரி மற்றும் சுன்­னாகம் ஸ்கந்­த­வ­ரோ­தயா கல்­லூரி அணி­க­ளுக்­கி­டை­யி­லான மாபெரும் கிரிக்கெட் சமர் இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இன்று ஆரம்­ப­மா­கும் இப்­போட்­டி­யா­னது தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூரி மைதா­னத்தில் இரு நாட்கள் நடை­பெ­ற­வுள்­ளது. கடந்த 2000ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இவ்­விரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான கிரிக்கெட் சம­ரா­னது இம்­முறை 18ஆவது முறை­யா­கவும் நடத்­தப்­ப­டு­கின்­றது. இவ்­விரு அணி­க­ளுக்­கி­டையில் இது­வ­ரை 17 பெரும் சமர் மோதல்கள் இடம்­பெற்­றுள்­ளன. அவற்றில் மகா­ஜனா கல்­லூரி அணி 5 முறையும் ஸ்கந்­த…

  4. உலக கிண்ண கால்பந்தாட்டம் 2018 செய்திகள், ஆய்வுகள், கருத்து பகிர்வுகள் கால்பந்தாட்ட உலகக் கிண்ணம் 2018 - ரஷ்யா - ச. விமல் கால்பந்தாட்ட உலகக் கிண்ணம், இவ்வாண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் ஒவ்வொரு அணி பற்றிய விபரங்களும் தமிழ் மிரரின் விளையாட்டு கட்டுரைகள் பகுதியில் தொடர்ச்சியாக வெளியாகவுள்ளன. அதன்படி 32 அணிகளது கடந்த காலங்கள், இம்முறை உலகக் கிண்ணம் எவ்வாறு அமையப்போகிறது என்ற விடயங்கள் அடங்கலான தகவல்களை தரவுள்ளோம். இந்த கட்டுரையின் முதல் அணியாக உலகக் கிண்ணத்தை நடாத்தும் ரஷ்ய அணி பற்றிய கட்டுரை இங்கே தொடர்கிறது. முதற் தடவையாக ரஷ்யா உலகக் கிண்ணத் தொடரை நடாத்துகின்றது. 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் சோவியத் ஒன…

  5. பத்தாவது விம்பிள்டன், களிமண் தரையில் முத்திரை, செரினாவை விஞ்சுவது... இதெல்லாம் நடக்குமா ஃபெடரர்?! “வயசானாலும்... உன் திறமையும் ஸ்டைலும் குறையவே இல்ல” என்று நீலாம்பரியைப் போல நம்மால் ஃபெடரரைப் பார்த்துக் கூற முடியும். 36 வயதிலும் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்வது என்பது இயல்பான செயலல்ல. ரோட்டர்டாம் ஓபனில் ராபின் ஹாசை வீழ்த்தியதன் மூலமாக, 33 வயதில் ஆண்ட்ரே அகாசி செய்திருந்த சாதனையை முறியடித்திருக்கிறார் ஃபெடரர். இன்னும் கொஞ்சம் தீராத வேட்கையோடு போராடினால் ஃபெடரர் மேலும் பல சாதனைகள் செய்யலாம். அவை என்னென்ன? “இப்பொழுதும் எப்பொழுதும் எனக்கு மிகவும் விருப்பமான போட்டி விம்பிள்டன். இங்கு விளையாடுவது எனக்குப் பெருங்கனவு. இது என்னுடைய கடைசி…

  6. ஆடுகளத்தில் மணீஷ் பாண்டேவைக் கடிந்துகொண்ட தோனி! ரசிகர்கள் ஆச்சர்யம்! (விடியோ) கேப்டன் கூல் என்று பெயர் வாங்கிய தோனி கோபமடைந்து, சக வீரர்களைக் கடிந்துகொண்ட காட்சியைப் பார்த்ததுண்டா? நேற்று அத்தகைய காட்சி ஒன்றைக் காண நேர்ந்த ரசிகர்கள், தோனியா இது என ஆச்சர்யப்பட்டார்கள். இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொத்தம் 3 ஆட்டங்களைக் கொண்ட இந்த டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா. இந்நிலையில், சென்சுரியனில் 2-ஆவது டி20 ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்…

  7. விராட் கோலி, டி வில்லியர்ஸ், கேன் வில்லியம்சன் யுக்திகளை காப்பி அடித்தேன் - ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட விராட் கோலி, டி வில்லியர்ஸ், கேன் வில்லியம்சின் யுக்திகளை காப்பி அடித்தேன் என ஸ்மித் கூறியுள்ளார். #Smith #SAvAUS ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்டீவன் ஸ்மித் டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 61 போட்டிகளில் 111 இன்னிங்சில் பேட்டிங் செய்து 6057 ரன்கள் குவித்துள்ளார். தலா 23 சதம், அரைசதங்களை பதிவு செய்துள்ள இவர், 63.75 சராசரி வைத்துள்ளார். இப்போதைய காலக்கட்டத்தில் அவரது சராசரியை யாரும் தொட முடியவில்லை. …

  8. பாகிஸ்தானுக்கு ஆடினால் காலைத்தான் வாரிவிடுவார்கள்: ஆஸி.க்குச் சென்ற ஸ்பின் லெஜண்ட் அப்துல் காதிர் மகன் பாகிஸ்தான் முன்னாள் லெக் ஸ்பின்னர் அப்துல் காதிர் மகன் உஸ்மான் காதிர். - படம். | சிறப்பு ஏற்பாடு. பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தில் உள்ள ‘அரசியல், ஊழல்’ காரணமாக முன்னாள் லெக் ஸ்பின் ‘லெஜண்ட்’ அப்துல் காதிர் மகன் உஸ்மான் காதிர் ஆஸ்திரேலியாவுக்கு ஆடப்போவதாகத் தெரிவித்துள்ளார். 24 வயது உஸ்மான் காதிரும் தந்தை வழியில் தயாரான ஒரு லெக் ஸ்பின்னர்தான். தனது இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளக் கணக்கில் ஆஸி.ஜெர்சி போன்ற ஒன்றை அணிந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 2020-ல் நட…

  9. சென். ஜோன்ஸ் கல்லூரியின் இன்னிங்ஸ் வெற்றிக்கு உதவிய அபினாஷ், தனுஜன் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி மற்றும் யாழ்ப்பாணத்தின்மற்றுமொரு பாடசாலையான யாழ் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான பாரம்பரிய கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 59 ஓட்டங்களால் சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. சென்.ஜோன்ஸ் கல்லூரியின் சொந்த மைதானத்தில் திங்கட்கிழமை (19) ஆரம்பமாகிய இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த சென்.ஜோன்ஸ் வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து கொண்டனர். அதற்கமைய முதலில் ஆடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி வீரர்களுக்கு ஆரம்ப வீரரான C.P. தனுஜன் அப…

  10. வரலாற்று சாதனை படைத்த தமிழக மகளிர் கால்பந்தாட்ட அணி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சென்னை ஆவடி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கும் விளையாட்டு வீரர் நந்தினி (22) தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். முதல்முறையாக தேசிய அளவிலான கோப்பையை வென்ற தமிழக மகளிர் கால்பந்தாட்ட அணியின் தலைவர்தான் நந்தினி. Image captionநந்தினி எளிமையான குடும்ப பின்னணி, அரசுப்பள்ளியில் படித்து, வ…

  11. செல்சீயின் தவறு... இனியஸ்டாவின் மேஜிக் ... 730 நிமிடக் காத்திருப்புக்குப் பின் மெஸ்ஸியின் கோல்...! #UCL #Messi #CHEBAR எட்டு பார்சிலோனா வீரர்கள் கோல்போஸ்ட் அருகில் டிஃபண்ட் செய்துகொண்டிருக்கிறார்கள். மொத்த மிட்ஃபீல்ட் யூனிட்டும் பாக்ஸுக்கு அருகில்தான் இருந்தது. வில்லியனின் காலில் பந்து. ஏற்கெனவே சிலமுறை பார்சிலோனா வீரர்களை ஏமாற்றி கோல் பகுதியை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தார். அதனால், அனைத்து பார்கா வீரர்களும் கீழே இறங்கி ஆடினார்கள். இடதுபுறமிருந்து வலது நோக்கி முன்னேறுகிறார் வில்லியன். பாக்ஸுக்கு வெளியே இருந்து ஷாட் அடிக்கிறார். தன் நீண்ட கால்கள் கொண்டு அதைத் தடுக்க முற்படுகிறார் செர்ஜியோ பொஸ்கிட்ஸ். ஆனால், முடியவில்லை. …

  12. பேட்ஸ்மென் அடித்த ஷாட் பவுலர் தலையில் பட்ட பிறகு சிக்ஸ்: நியூஸி. கிரிக்கெட்டில் வினோதம்; ஆபத்திலிருந்து தப்பிய பவுலர் படம். | ட்விட்டர். நியூஸிலாந்தின் உள்நாட்டு 50 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பேட்ஸ்மென் ஆக்ரோஷமாக அடித்த ஷாட் ஒன்று பவுலர் தலையில் பட்டு பிறகு சிக்ஸருக்குச் சென்ற வினோதச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆக்லாந்து பேட்ஸ்மென் ஜீத் ராவல், ஆண்ட்ரூ எல்லிஸ் என்ற பவுலரின் பந்தை நேராக ஆக்ரோஷமாக அடிக்க பந்து பவுலர் தலையில் பட்ட பிறகும் சிக்சருக்குப் பறந்தது. கேண்டர்பரி அணியைச் சேர்ந்தவர் பவுலர்/கேப்டன் எல்லிஸ். பந்து தலையில் பட்டதையடுத்து பரிசோதனை மேற்கொண்டார். …

  13. முத்தரப்பு டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி தொரை கைப்பற்றி உள்ளது. #t20cricket #AustraliavsNewZealand #triseriesfinal ஆக்லாந்து: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதியது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, ந…

  14. வடக்கிற்கு பயணித்துள்ள ரக்பி விளையாட்டு ‘ரக்பியில் இணைவோம்’ (Get into Rugby) திட்டத்தின் ஐந்தாவது நிகழ்ச்சி யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானங்களில் பெப்ரவரி 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெற்றன. இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் ரக்பி விளையாட்டை விரிவுபடுத்தும் நோக்கில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சி பாடசாலை மாணவர்களுக்கு அப்பால் பெரியவர்கள் பலரையும் கவர்ந்தது. கடந்த வாரத்தின் ‘ரக்பியில் இணைவோம்’ நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்வாக (14) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இராணுவ அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் இளையவர்கள், பெரியவர்கள் உட்பட 300க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.…

  15. ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை- 900 புள்ளிகளுக்கு மேல் பெற்று கோலி சாதனை அ-அ+ ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் 900 புள்ளிகளுக்கு மேல் பெற்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். #ViratKohli #ICCRankings இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 3 சதங்கள் உள்பட 558 ரன்கள் குவித்திருந்தார். இதன் ஒருநாள் போட்டிக்கான ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில் வரலாற்று உச்சத்தை பெற்றுள்ளார். ஐசிசி இன்று ஒருநாள் போட்டிக்கான தரவரிசைகளை வெளியிட்டது. இதி…

  16. இளம் வயதில் முதல் இடத்தை பிடித்து ஆப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 19 வயதிலேயே ஒருநாள் பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடம் பிடித்து வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். #ICCRankings ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். இவர் சமீப காலமாக சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயை எதிர்த்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் ஆப்கானிஸ்தான் 4-1 என வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகளில் ரஷித் கான் 1…

  17. கிரிக் இன்போ விருதுகள் அறிவிப்பு: சாஹல், குல்தீப் சாதனைகளுக்கு அங்கீகாரம் யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ். - THE HINDU 2017-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கான விருதை கிரிக் இன்போ இணையதளம் அறிவித்துள்ளது. இதில் இந்திய ரிஸ்ட் ஸ்பின்னர்களான யுவேந்திரா சாஹல், குல்தீவ் யாதவ் ஆகியோர் விருதை தட்டிச் சென்றுள்ளனர். மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் சிறப்பாக பேட் செய்த இந்திய வீராங்கனை ஹர்மான்பிரித்தும் விருதை கைப்பற்றி உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்மான்பிரித் க…

  18. மீள்வதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்: தென் ஆப்பிரிக்க கேப்டன் ஜேபி டுமினி கருத்து ஜேபி டுமினி - AFP இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் மோசமாக அமைந்தது. அதிலும் ரிஸ்ட் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் வீழ்ச்சி கண்டிருந்தனர். இந்நிலையில் தென் ஆப்பிக்க அணியின் தோல்வி தருணங்கள் தற்போது டி 20 தொடருக்கும் வியாபிக்கத் தொடங்கி உள்ளது. ஜோகன்னஸ்பர்க்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் டி 20 ஆட்டத்தில் இந்திய அணியிடம் 28 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி கண்டது. இந்த ஆட்டம் முடிவடைந்ததும் அந்த அணியின் கேப்டன் ஜேபி…

  19. சுதந்திரக் கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கை - இந்தியா இலங்­கையின் 70ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு நடத்­தப்­படும் சுதந்­திரக் கிண்ண முத்­த­ரப்பு கிரிக்கெட் தொடரின் போட்டி அட்­ட­வணை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அதன்­படி இத் தொடரின் முதல் போட்­டியில் இலங்கை மற்றும் இந்­திய அணிகள் பலப்­ப­ரீட்சை நடத்­து­கின்­றன. இலங்­கையின் 50ஆவது சுதந்­திர தினத்­தை முன்­னிட்டு நடத்­தப்­பட்ட சுதந்­திரக் கிண்ண கிரிக்கெட் தொட­ரா­னது தற்­போது 20 வரு­டங்­க­ளுக்குப் பிறகு மீண்டும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளது. இலங்கை -– இந்­தியா – பங்­க­ளாதேஷ் அணிகள் மோதும் இந்த சுதந்­திரக் கிண்ண முத்­த­ரப்பு போட்டித் தொட­ரா­னது இரு­ப­துக்கு 20 …

  20. வம்புக்கு இழுத்த கிப்ஸ்; சூதாட்டத்தில் நான் சம்பாதிக்கவில்லை: அஸ்வின் காட்டம் அஸ்வின், கிப்ஸ் (கோப்புப் படம்) இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை கிண்டல் செய்து ட்வீட் செய்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஹெர்சல் கிப்ஸ் பதிவிட்டதற்கு, கோபமடைந்த அஸ்வின் சரியான பதிலடி கொடுத்து அதிர்ச்சி அடைய வைத்தார். இந்திய ஆல்ரவுண்டர் அஸ்வின் நைக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஷூ குறித்த வீடியோவை ட்விட்டரில் இன்று பதிவிட்டார். அதில், ''நண்பர்களே என்னிடம் புதிய நைக் ஷூ இருக்கிறது. இந்த ஷூவின் வடிவமைப்பு, நிறம், ஃபோம் தொழில்நுட்பத்தின் ம…

  21. சங்ககராவின் சாதனையை முறியடித்துள்ள டோனி இருபதுக்கு இருபது போட்டியில் 134 பந்துகளை பிடித்ததன் மூலம் மகேந்திர சிங் டோனி, இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்ககராவின் சாதனையை முறியடித்துள்ளார். இந்தியா – தென்ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் நேற்றைய முதல் போட்டியில் இந்தியா 28 ஓட்டவித்தியாசத்தில் வெற்றியீட்டியிருந்தது. இந்தப் போட்டியின் போது புவனேஸ்வர் குமார் வீசிய பந்தை ஹென்றிக்ஸ் அடித்தபோது மேல்நோக்கி சென்ற பந்தினை டோனி பிடித்திருந்தார். இதன்மூலம் இருபதுக்கு இருபது போட்டியில் 134 பந்துகளை பிடித்து சங்ககராவின் சாதனையை முறியடித்தார்.சங்ககரா 254 போட்டிகளில் 134 பிடிகளை பிடித்துள்ளார். டோனி 275 …

  22. வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 கால்பந்தாட்டத் தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ராஸ்பேர்க் அணியுடனான போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, எடின்சன் கவானி இரண்டு கோல்களையும் ஜூலியன் ட்ரெக்ஸ்லர், நேமர், அஞ்சல் டி மரியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். ஸ்ராஸ்பேர்க் சார்பாக, ஜீன் யூட்ஸ் அஹொலெள, ஸ்டெபனே பஹொகென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஐபாரை வென்றது பார்சிலோனா ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிக…

  23. உங்களது சொந்த இன்னல்களில் திசரவை பாருங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தனது எடை பற்றி பிரித்தானிய பத்திரிகைகள் நையாண்டியாக குறிப்பிட்டபோது, அன்ட்ரூ பிளிண்டொப் தனது சந்தர்ப்பம் வந்ததும் அதற்கு சரியான பதிலடி கொடுத்தார். இது இன்னல்களின்போது எப்படி முகம் கொடுப்பது என்று சகலதுறை வீரர்களுக்கு பாடம் கற்பித்து கொடுப்பது போல இருந்தது. 2001 ஆம் ஆண்டு குளிர்கால சுற்றுப் பயணத்தின்போது கிறிஸ்ட்சர்ச்சில் (Christchurch) 137 ஓட்டங்களை விளாசிய பிளின்டொப், தான் இங்கிலாந்தின் மிகச் சிறந்த சகலதுறை வீரரான செர் இயன் பொத்தமுடன் ஒப்பிட்டு பேசப்படுவதை கண்டார். அப்போது, ‘எடை அதிகரித்திருப்பதை மோசமாக கருதவில்லை’ என்று அவர் பிரித்தானிய பத்திரிகைகளுக்கு பதிலடியாக குறிப…

  24. ஒலிம்பிக் கனவுகளுடன் தமிழகத்தில் உருவாகும் நம்பிக்கை கீற்று 'கோலேசியா' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தந்தையை இழந்து மிக எளிய பின்னணியில் தாய் மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வரும் 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவியான கோலேசியாவுக்கு 2024 பாரீஸ் ஒலிம்பிஸ் மட்டும்தான் கனவு. தனது கனவை அடைய அவர் செய்த தியாகங்கள் என்ன? கோலேசியாவின் ஒருநாள் வாழ்க்கை எப்படி? அதிகாலை 5 மணிக்கு எ…

  25. முத்தரப்பு டி 20 தொடர்: இறுதிப் போட்டியில் நுழைந்தது நியூஸிலாந்து முத்தரப்பு டி 20 தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எனினும் நெட் ரன்ரேட் அடிப்படையில் நியூஸிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. கேப்டன் மோர்கன் 46 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 80 ரன்களும், டேவிட் மலான் 36 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் விளாசினர். நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.