விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
`கூல்’ கேப்டன் தோனி கோபப்பட்ட`ஆங்ரி பேர்ட்' தருணங்கள்! ஆக்ரோஷ ஆக்ஷன்கள் எல்லாம் தன் அகராதியிலேயே இல்லை என்பதுதான் தோனியின் கேரக்டர். கடந்த 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், மகேந்திர சிங் தோனியின் அணுகுமுறை என்பது புத்திக்கூர்மைகொண்ட ஒரு புல்லட் புரூஃப் ஜாக்கெட் போன்று தக்க பாதுகாப்பானதாக இருக்கும். ஆம், எதிரணிகளின் ஸ்லெட்ஜிங் பிரெஷர் பூச்சாண்டி எல்லாவற்றையும் பில்டப் இல்லாமல் ஹேண்டில் பண்ணுவதுதான் தோனியின் சிறப்பம்சம்! அதேசமயம், அவ்வப்போது சிங்கத்தைச் சீண்டிப்பார்க்கும் சில வீரர்களை தண்டிக்கவும் தவறியதில்லை. `தோனியின் `கோபம்'ங்கிறது வேலூர் வெயில்ல குளிர்க்காய்ச்சல் வருவது மாதிரி ஒவ்வொருத்தரையும் வித்தியாசமா டீல் செய்யும்.' 2016-…
-
- 0 replies
- 631 views
-
-
சிந்திக்க முடியாதது, ஏற்றுக் கொள்ள முடியாதது, மன்னிக்க முடியாதது: கிரெக் சாப்பலை விளாசிய ‘தாதா’ கங்குலி கங்குலி, கிரெக் சாப்பல். - கோப்புப் படம். | வி.கணேசன். ‘எ செஞ்சுரி இஸ் நாட் இனஃப்’ என்ற சுயசரிதை புத்தகத்தில் இந்திய முன்னாள் கேப்டன் ‘தாதா’ கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கிரெக் சாப்பலை கடுமையாகச் சாடியுள்ளார். கிரெக் சாப்பல் பயிற்சியாளராக வருவதை பெரிதும் விரும்பியவர் கங்குலி, ஆனால் கங்குலி கேப்டன்சி போனதோடு, அணியிலும் நீடிக்க முடியாத நிலை கிரெக் சாப்பல் பயிற்சி காலக்கட்டத்தில் அவருக்கு ஏற்பட்டது. 2005 முதல் 2007 உலகக்கோப்பை வரை …
-
- 0 replies
- 319 views
-
-
`விடைபெறுகிறது தென்னாப்பிரிக்க வேகம்' - மோர்னே மார்கல் அதிர்ச்சி! சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாகத் தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மார்கல் அறிவித்துள்ளார். தனது வேகப்பந்துவீச்சால் பல்வேறு அணிகளைத் திணறடித்தவர் தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மார்கல். 2006-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர், பிற்காலத்தில் ஸ்டெய்னுடன் கூட்டணி அமைத்து எதிரணிகளைத் திணறடித்தார். கடந்த 12 வருடங்களாக வெற்றிகரமான பௌலராக இருந்த இவர், இதுவரை 83 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 294 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மூன்றுவிதமான போட்டிகளிலும் சேர்த்து 529 வீழ்த்தியுள்ள இவர் தற்போது தனது ஓய்…
-
- 0 replies
- 419 views
-
-
சங்கக்காரா, மிஸ்பா, அப்ரீடி, மலிங்கா வரிசையில் இணைந்த ரோஹித் சர்மா வெற்றிக்களிப்பில் ரோஹித் சர்மா. - படம். | ஏ.பி. முதுகுவலி காரணமாக விராட் கோலி ஆடவில்லை என்பதால் கேப்டன்சி செய்த ரோஹித் சர்மா கேப்டன்சியில் தானும் சளைத்தவரல்ல என்பதை அறிவுறுத்தும் விதமாக சிறு சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். நேற்று கேப்டவுனில் தென் ஆப்பிரிக்காவை இந்திய அணி 7 ரன்களில் வீழ்த்தி டி20 தொடரையும் கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் ரோஹித் சர்மா கேப்டனாக 4வது டி20 போட்டியில் வென்றுள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், ஷாகித் அஃப்ரீடி, சர்பராஸ் அகமட், இலங்கையின் குமார் சங்கக்…
-
- 0 replies
- 347 views
-
-
மாறுவேடத்தில் சென்று கங்குலி ருசித்த கபாப்: தனியே செல்லாதீர்கள், அன்புடன் கண்டித்த பர்வேஸ் முஷாரப் சவுரவ் கங்குலி, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் - கோப்புப் படம் பாகிஸ்தானில், மாறுவேடத்தில் சென்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கபாப், பிரியாணி சாப்பிட்டுள்ளார். தனியாக செல்லாதீர்கள் என்று முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் தொலைபேசியில் கங்குலியை அழைத்து கண்டித்துள்ள ஸ்வரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, தனது சுயசரிசையை எழுதியுள்ளார். “ ஏ சென்சுரி இஸ் நாட் எனப்” என்ற தலைப்பில் அந்த நூல் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த …
-
- 0 replies
- 316 views
-
-
இந்திய அணிக்கு ஐசிசி டெஸ்ட் விருது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதுக்கு தேர்வு பெற்றதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுக்கான கதாயுதத்தை கேப்டன் விராட் கோலியிடம் வழங்கும் (இடமிருந்து) இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கிரீம் பொல்லாக். இந்திய கிரிக்கெட் அணிக்கு ஐசிசி-யின் டெஸ்ட் சாம்பியன் ஷிப் விருது வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்த ஆண்டு முதலிடம் பிடித்த இந்திய கிரிக்கெட்…
-
- 0 replies
- 363 views
-
-
டெய்லர் சதம், லாதம் 79-க்குப் பின் சாண்ட்னரின் எதிர்பாரா அதிரடியில் நியூஸி. வெற்றி சதமெடுத்த ராஸ் டெய்லர். - படம். | ஏ.எஃப்.பி. ஹாமில்டனில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி இங்கிலாந்து அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய இங்கிலாந்து அணிக்கு மீண்டும் உற்சாகமாகத் திரும்பியுள்ள அதிரரி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 12 ரன்களில் சாண்ட்னரிடம் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, ரூட்- 71 பட்லர் அதிரடி 79 ஆகியவற்றுடன் 50 ஓவர்க…
-
- 0 replies
- 246 views
-
-
குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது - நார்வே முதலிடம் தென்கொரியாவின் பியாங்சங் நகரில் நடைபெற்று வந்த 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக நிறைவடைந்தன. #WinterOlympics2018 #Closingceremony #Pyeongchanggames பியாங்சங்: 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (23-வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்) தென்கொரியாவின் பியாங்சங் நகரில் கடந்த 8-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 93 நாடுகளை …
-
- 0 replies
- 282 views
-
-
சமிந்த வாஸிடமிருந்து இலங்கை வேகப்பந்துவீச்சாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர கிண்ண முத்தரப்பு டி20 தொடர் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளின் பங்குபற்றலுடன் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு இலங்கையில் நடாத்தப்படுகின்ற மிகப் பெரிய போட்டித் தொடராக இது அமையவுள்ளது. எனினும், இப்போட்டித் தொடரில் இலங்கை அணியுடன் மோதவுள்ள பிரபல இந்திய அணி, இலங்கை அணியை அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அண்மைக்காலமாக வீழ்த்தி ஆதிக்கம் …
-
- 0 replies
- 238 views
-
-
மகாஜனா - ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிகள் மோதும் கிரிக்கெட் சமர் இன்று வடக்கின் பிரபல பாடசாலைகளான மகாஜனா கல்லூரி மற்றும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் இப்போட்டியானது தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மைதானத்தில் இரு நாட்கள் நடைபெறவுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்விரு அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சமரானது இம்முறை 18ஆவது முறையாகவும் நடத்தப்படுகின்றது. இவ்விரு அணிகளுக்கிடையில் இதுவரை 17 பெரும் சமர் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் மகாஜனா கல்லூரி அணி 5 முறையும் ஸ்கந்த…
-
- 3 replies
- 550 views
-
-
நாளை டி20 கிரிக்கெட்- இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில், நாளை ஜோகன்னஸ்பர்க்கில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. #SAvIND இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 5-1 என கைப்பற்றியது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய நேரப்படி நாளை மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. ஒருநாள் தொடரைப் போல் டி20 கிரிக்கெட் தொடரிலும் இந்தியா ஆதிக்கம் செ…
-
- 16 replies
- 1.1k views
-
-
38 வயதிலும் அபார கேட்ச் பிடித்த அப்ரிடி: குவியும் பாராட்டுக்கள் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, லீக் போட்டி ஒன்றில் பிடித்த கேட்ச்சின் மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி. ஆல்ரவுண்டரான இவர், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், தற்போது பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில், பாகிஸ்தான் பிரிமியர் லீக் போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகின்றன. இதில், கராச்சி அணிக்காக அப்ரிடி விளையாடி வருகிறார். நேற்று நடந்த போட்டியில், கராச்சி கிங்ஸ் அணியும், குவட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதின. குவாட்டா அணி துடுப்பாட்டத்த…
-
- 0 replies
- 366 views
-
-
நெருங்கிவரும் 2019 உலகக் கிண்ணத்தில் திசரவிடம் நம்பிக்கை கொள்ளும் இலங்கை 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு வலுவான அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இலங்கை, திசர பெரேரா மீது அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்துள்ளது. கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்திருக்கும் அந்த போட்டிக்கு இன்னும் 18 மாதங்களே எஞ்சியிருக்கும் நிலையில், சகலதுறை வீரரான அவர் போட்டிகளை வெற்றிபெறச் செய்பவராக வருவார் என்ற நம்பிக்கை தற்பொழுது அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பரில் திசர பெரேராவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணித் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டபோது அது குறைந்த அளவிலோ அல்லது அதிக அளவிலோ தவறாக இருந்தது. அப்போது அணியில் அவரது இடம் பற்றி கேள்வி எழுந்…
-
- 0 replies
- 216 views
-
-
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவில் தொடக்கம்: 92 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென் கொரியாவில் நாளை கேலாகலமாக தொடங்குகிறது. தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கேலாகலமான தொடக்க விழாவுடன் நாளை தொடங்குகின்றன. 23-வது குளிர்கால ஒலிம்பிக் தொடரான இதில் 92 நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். தென் கொரியாவுடன், தீவிர பகை நாடான வட கொரியாவும் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தொடக்க விழா நிகழ்ச்சிகள் நாளை நடைபெற்றாலும் ஒருசில பிரிவுகளில்…
-
- 9 replies
- 410 views
-
-
வாய்ப்புக்காக காத்திருப்பது கடினமாக உள்ளது: மனம் திறக்கும் மணீஷ் பாண்டே மணீஷ் பாண்டே - THE HINDU அணியில் நிரந்தர இடம் பிடிப்பதற்கு என்ன தேவையோ அது தன்னிடம் இருக்கிறது என்ற போதிலும் ஆங்காங்கே எப்போதாவது வாய்ப்புகள் கிடைக்கும் போது அதற்காகக் காத்திருத்தல் கடினமாக உள்ளது என்று மணீஷ் பாண்டே தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி 20 ஆட்டத்தில் மணீஷ் பாண்டே 48 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்ததுடன் தோனியுடன் இணைந்து அருமையான கூட்டணி அமைத்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தினாலேயே இந்திய அணி 188 ரன்கள் வரை குவிக்க முடிந்தது. இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு மணீஷ் பாண்டே கூ…
-
- 0 replies
- 275 views
-
-
பத்தாவது விம்பிள்டன், களிமண் தரையில் முத்திரை, செரினாவை விஞ்சுவது... இதெல்லாம் நடக்குமா ஃபெடரர்?! “வயசானாலும்... உன் திறமையும் ஸ்டைலும் குறையவே இல்ல” என்று நீலாம்பரியைப் போல நம்மால் ஃபெடரரைப் பார்த்துக் கூற முடியும். 36 வயதிலும் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்வது என்பது இயல்பான செயலல்ல. ரோட்டர்டாம் ஓபனில் ராபின் ஹாசை வீழ்த்தியதன் மூலமாக, 33 வயதில் ஆண்ட்ரே அகாசி செய்திருந்த சாதனையை முறியடித்திருக்கிறார் ஃபெடரர். இன்னும் கொஞ்சம் தீராத வேட்கையோடு போராடினால் ஃபெடரர் மேலும் பல சாதனைகள் செய்யலாம். அவை என்னென்ன? “இப்பொழுதும் எப்பொழுதும் எனக்கு மிகவும் விருப்பமான போட்டி விம்பிள்டன். இங்கு விளையாடுவது எனக்குப் பெருங்கனவு. இது என்னுடைய கடைசி…
-
- 0 replies
- 197 views
-
-
ஆடுகளத்தில் மணீஷ் பாண்டேவைக் கடிந்துகொண்ட தோனி! ரசிகர்கள் ஆச்சர்யம்! (விடியோ) கேப்டன் கூல் என்று பெயர் வாங்கிய தோனி கோபமடைந்து, சக வீரர்களைக் கடிந்துகொண்ட காட்சியைப் பார்த்ததுண்டா? நேற்று அத்தகைய காட்சி ஒன்றைக் காண நேர்ந்த ரசிகர்கள், தோனியா இது என ஆச்சர்யப்பட்டார்கள். இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொத்தம் 3 ஆட்டங்களைக் கொண்ட இந்த டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா. இந்நிலையில், சென்சுரியனில் 2-ஆவது டி20 ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்…
-
- 0 replies
- 445 views
-
-
விராட் கோலி, டி வில்லியர்ஸ், கேன் வில்லியம்சன் யுக்திகளை காப்பி அடித்தேன் - ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட விராட் கோலி, டி வில்லியர்ஸ், கேன் வில்லியம்சின் யுக்திகளை காப்பி அடித்தேன் என ஸ்மித் கூறியுள்ளார். #Smith #SAvAUS ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்டீவன் ஸ்மித் டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 61 போட்டிகளில் 111 இன்னிங்சில் பேட்டிங் செய்து 6057 ரன்கள் குவித்துள்ளார். தலா 23 சதம், அரைசதங்களை பதிவு செய்துள்ள இவர், 63.75 சராசரி வைத்துள்ளார். இப்போதைய காலக்கட்டத்தில் அவரது சராசரியை யாரும் தொட முடியவில்லை. …
-
- 0 replies
- 212 views
-
-
முத்தரப்பு டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி தொரை கைப்பற்றி உள்ளது. #t20cricket #AustraliavsNewZealand #triseriesfinal ஆக்லாந்து: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதியது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, ந…
-
- 1 reply
- 191 views
-
-
வம்புக்கு இழுத்த கிப்ஸ்; சூதாட்டத்தில் நான் சம்பாதிக்கவில்லை: அஸ்வின் காட்டம் அஸ்வின், கிப்ஸ் (கோப்புப் படம்) இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை கிண்டல் செய்து ட்வீட் செய்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஹெர்சல் கிப்ஸ் பதிவிட்டதற்கு, கோபமடைந்த அஸ்வின் சரியான பதிலடி கொடுத்து அதிர்ச்சி அடைய வைத்தார். இந்திய ஆல்ரவுண்டர் அஸ்வின் நைக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஷூ குறித்த வீடியோவை ட்விட்டரில் இன்று பதிவிட்டார். அதில், ''நண்பர்களே என்னிடம் புதிய நைக் ஷூ இருக்கிறது. இந்த ஷூவின் வடிவமைப்பு, நிறம், ஃபோம் தொழில்நுட்பத்தின் ம…
-
- 3 replies
- 526 views
-
-
சென். ஜோன்ஸ் கல்லூரியின் இன்னிங்ஸ் வெற்றிக்கு உதவிய அபினாஷ், தனுஜன் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி மற்றும் யாழ்ப்பாணத்தின்மற்றுமொரு பாடசாலையான யாழ் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான பாரம்பரிய கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 59 ஓட்டங்களால் சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. சென்.ஜோன்ஸ் கல்லூரியின் சொந்த மைதானத்தில் திங்கட்கிழமை (19) ஆரம்பமாகிய இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த சென்.ஜோன்ஸ் வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து கொண்டனர். அதற்கமைய முதலில் ஆடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி வீரர்களுக்கு ஆரம்ப வீரரான C.P. தனுஜன் அப…
-
- 1 reply
- 440 views
-
-
பேட்ஸ்மென் அடித்த ஷாட் பவுலர் தலையில் பட்ட பிறகு சிக்ஸ்: நியூஸி. கிரிக்கெட்டில் வினோதம்; ஆபத்திலிருந்து தப்பிய பவுலர் படம். | ட்விட்டர். நியூஸிலாந்தின் உள்நாட்டு 50 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பேட்ஸ்மென் ஆக்ரோஷமாக அடித்த ஷாட் ஒன்று பவுலர் தலையில் பட்டு பிறகு சிக்ஸருக்குச் சென்ற வினோதச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆக்லாந்து பேட்ஸ்மென் ஜீத் ராவல், ஆண்ட்ரூ எல்லிஸ் என்ற பவுலரின் பந்தை நேராக ஆக்ரோஷமாக அடிக்க பந்து பவுலர் தலையில் பட்ட பிறகும் சிக்சருக்குப் பறந்தது. கேண்டர்பரி அணியைச் சேர்ந்தவர் பவுலர்/கேப்டன் எல்லிஸ். பந்து தலையில் பட்டதையடுத்து பரிசோதனை மேற்கொண்டார். …
-
- 4 replies
- 335 views
-
-
பாகிஸ்தானுக்கு ஆடினால் காலைத்தான் வாரிவிடுவார்கள்: ஆஸி.க்குச் சென்ற ஸ்பின் லெஜண்ட் அப்துல் காதிர் மகன் பாகிஸ்தான் முன்னாள் லெக் ஸ்பின்னர் அப்துல் காதிர் மகன் உஸ்மான் காதிர். - படம். | சிறப்பு ஏற்பாடு. பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தில் உள்ள ‘அரசியல், ஊழல்’ காரணமாக முன்னாள் லெக் ஸ்பின் ‘லெஜண்ட்’ அப்துல் காதிர் மகன் உஸ்மான் காதிர் ஆஸ்திரேலியாவுக்கு ஆடப்போவதாகத் தெரிவித்துள்ளார். 24 வயது உஸ்மான் காதிரும் தந்தை வழியில் தயாரான ஒரு லெக் ஸ்பின்னர்தான். தனது இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளக் கணக்கில் ஆஸி.ஜெர்சி போன்ற ஒன்றை அணிந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 2020-ல் நட…
-
- 0 replies
- 216 views
-
-
இளம் வயதில் முதல் இடத்தை பிடித்து ஆப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 19 வயதிலேயே ஒருநாள் பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடம் பிடித்து வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். #ICCRankings ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். இவர் சமீப காலமாக சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயை எதிர்த்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் ஆப்கானிஸ்தான் 4-1 என வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகளில் ரஷித் கான் 1…
-
- 1 reply
- 424 views
-
-
வரலாற்று சாதனை படைத்த தமிழக மகளிர் கால்பந்தாட்ட அணி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சென்னை ஆவடி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கும் விளையாட்டு வீரர் நந்தினி (22) தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். முதல்முறையாக தேசிய அளவிலான கோப்பையை வென்ற தமிழக மகளிர் கால்பந்தாட்ட அணியின் தலைவர்தான் நந்தினி. Image captionநந்தினி எளிமையான குடும்ப பின்னணி, அரசுப்பள்ளியில் படித்து, வ…
-
- 0 replies
- 690 views
-