அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
விக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்? வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவார கால ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியா சென்றிருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் ஐந்து மாதங்களே இருக்கின்ற நிலையில், அவர் இருவார கால விடுப்பில் சென்றிருப்பதானது, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. முதலமைச்சரின் பயணத்துக்கு, ஆன்மீக அடையாளம் வழங்கப்பட்டாலும், அது அரசியல் நோக்கங்களும் கொண்டதாகவே இருக்க முடியும். அவர், டெல்லி வரை சென்று வருவார் என்று தெரிகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், வடக்கு மாகாண சபைத் தேர்தலைத் தமிழ் மக்கள் எதிர்கொண்…
-
- 1 reply
- 681 views
-
-
அரச தலைவர் தேர்தலில் மகிந்த தரப்பு வேட்பாளர்? அரச தலைவர் தேர்தலில் மகிந்த தரப்பு வேட்பாளர்? அடுத்த அரச தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு இன்னமும் 18 மாதங்கள் கால அவகாசமுள்ளது. ஆனால் அது குறித்த வாதப் பிரதிவாதங்கள், எதிர்வு கூறல்கள் என அரசியல் நிலமை இப்பொழுதே பரபரப்பாகி வருகின்றது. இன்றைய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குற…
-
- 0 replies
- 587 views
-
-
தடம்மாறும் ஐ.அமெரிக்க - பாகிஸ்தான் உறவுகள் - ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இவ்வாண்டின் உறவு, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு ஐ.அமெரிக்கா வழங்க இருந்த உதவித்தொகையை நிறுத்திவைத்தல், பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு உதவுகின்றது என்ற தொனிப்பொருளிலான ஒரு டுவிட்டர் செய்தியுடன் தொடங்கியிருந்தது. எது எவ்வாறிருந்த போதிலும், பாகிஸ்தான் - ஐ.அமெரிக்கா இடையிலான உறவானது, 30 ஆண்டுகளுக்கும் மேலானது என்பது ஒருபுறமிருக்க, எல்லாவற்றுக்கும் மேலாக, ஐ.அமெரிக்காவின் இராஜதந்திர நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்தல், பிராந்தியத்தில் செல்வாக்கைப் பேணுதல் என்பனவற்றுக்…
-
- 0 replies
- 408 views
-
-
நிறைவேற்று அதிகாரமும் இனப்பிரச்சினை தீர்வும் வரும் செவ்வாய்கிழமை பாராளுமன்றம் கூடும் போது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கும், வகையிலான, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை முன்வைக்கவுள்ளதாக ஜே.வி.பி. அறிவித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்த்தன உருவாக்கிய அரசியலமைப்பின் மூலம், தோன்றியது தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி. ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர, மற்றெல்லா அதிகாரங்களும் இந்த ஜனாதிபதி பதவி மூலம் தமக்குக் கிடைத்திருப்பதாக - பின்னர்…
-
- 0 replies
- 376 views
-
-
விக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்? சி.அ.யோதிலிங்கம் மாகாணசபைத் தேர்தல்களை அரசாங்கம் இந்த வருடம் நடாத்துமோ என்னவோ தமிழ் அரசியலில் அதற்கான பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தீர்மானம் எடுக்கும் சக்திகளாக உள்ள சம்பந்தனோ, சுமந்திரனோ புலிகளை ஏற்றவர்கள் அல்லர். புலிகள் அழிக்கப்பட்ட போது சுமந்திரன் அதனை இயற்கை நீதி என்றார். இன்று தேர்தல் பயத்தில் தமிழரசுக்கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் புலிகளைத் தலையில் தூக்கத் தொடங்கியுள்ளனர். வடமராட்சியில் இடம்பெற்ற மே தினத்தில் புலிகளின் எழுச்சிப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. முக்கியஸ்தர்கள் பலர் புலிகளின் சிவப்பு, மஞ்சள் சால்வையை அணிந்திருந்தனர். எல்லாவற்றிற்கும் விக்னேஸ்வரன் கொடுத்த அதிர்ச்சி வ…
-
- 0 replies
- 535 views
-
-
2018 இல் ஸ்ரீலங்கா சு. கட்சி எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் அரசியல் பாதையில் முக்கியமான திருப்பு முனையில் உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவில்லாப் பிரச்சினை இலங்கையின் ஜனநாயகத்திலும் தாக்கத்தை செலுத்துகிறது. ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது தவறுகள் மற்றும் தோல்விகளுக்கு மத்தியில் இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகத்தை நிறுவியதுடன் நாட்டில் அரசியல் கட்சி முறையையும் வலுப்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆயுட்கால பிரச்சினையை எதிர்கொள்கிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான அண்மைய நம்பிக்கையில்லா தீர்மான முடிவுகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதன் உள்ளார்ந்த பிரச…
-
- 0 replies
- 450 views
-
-
http://www.kaakam.com/?p=1116 விக்கினேசுவரனைப் புறக்கணிப்பதன் மூலம் தமிழினக்கொலையாளி இந்தியாவுக்கு சாட்டையால் அடிக்கத் தமிழீழ மக்கள் விழிப்படைய வேண்டிய காலமிது –மறவன்- சிறிலங்காவின் நீதியரசர் விக்கினேசுவரன் என்பவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பான அவரின் பின்னணி என்ன? தமிழ் மக்களின் அரசியலை தமது மேட்டுக்குடி நலன்களுக்கான பேரம்பேசலுக்குப் பயன்படுத்தி, தமிழ் மக்களை ஏய்த்து அதிகார வர்க்கங்களிற்கு நல்ல முகவர்களாக வாழ்ந்து வந்தவர்களின் தளமாகிய கொழும்பு 7 இனை பிறப்பிடமாகவும் வாழிடமாகவும் கொண்டவர் இந்த விக்கினேசுவரன். இவரது தாத்தா சிங்களவர்களால் குதிரையில் ஏற்றிக் கொண்டாடப்பட்ட சேர். பொன். இராமநாதனின் மைத்துனராவார். இவரின் ஒரு மகன் வாசுதேவ நாணயக்காரவின…
-
- 3 replies
- 746 views
-
-
எதிரணியின் தவறுகளால் தமிழர்களுக்கு நன்மைகள்!! எதிரணியின் தவறுகளால் தமிழர்களுக்கு நன்மைகள்!! தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை யில்லாத் தீர்மான விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விதித்துள்ள நிபந்தனைகள், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூட்டு எதி।ரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. எதிரணியின் பக்கமிருந்து …
-
- 0 replies
- 465 views
-
-
பொன்சேகாவின் நெருக்கடியும் கோத்தாவுக்கு உள்ள சவாலும் கடந்தவாரம் நிகழ்ந்த அமைச்சரவை மாற்றத்தின்போது, எதிர்பார்ப்புக்குரியதாக இருந்த சில விடயங்களில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்குரிய பதவியும் ஒன்றாகும். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பதவிக்குப் பதிலாக, சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு பரவலாகக் காணப்பட்டது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியில் இருந்து, சாகல ரத்நாயக்க விலகிய பின்னர், அந்தப் பதவி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது என்பதை விட, அவரை அந்தப் பதவிக்கு நியமிப்பதே பொருத்தம் என…
-
- 0 replies
- 427 views
-
-
நாங்கள் தான் கொள்கைக்கு நேர்மையாக இருக்கின்றோம்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
-
- 0 replies
- 466 views
-
-
ஜனாதிபிதியின் கொள்கை விளக்கமும் யதார்த்தமும் ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பாராளுமன்றில் ஜனாதிபதி ஆற்றவுள்ள உரையானது அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய கொள்கைப்பிரகடன உரையாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்தவுரையானது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த உரையாக எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கு அரசியல் சாசன ரீதியில் தீர்வு காணுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதும் அந்த முயற்சிகள் அண்மைக்காலமாக முடங்கிய நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்துக்கு ஜனாதிபதி இவ்வுரையின் மூலம் ஏதாவது சமி…
-
- 0 replies
- 604 views
-
-
புன்னகை இராஜதந்திரத்தின் வெற்றி வடகொரிய அதிபர் கிம் இவ்வருட பிறப்பின் போது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு வாழ்த்தொன்றை தெரிவித்து உலகை திடுக்கிட வைத்தார். அணு குண்டுகளை அழுத்தும் கருவி எனது மேசைமேல் உள்ளது. அழுத்தினால் அமெரிக்கா அழிந்துவிடும் என்றார். இதற்கு முன்னதாக வடகொரிய அதிபர் அணுஆயுத பரிசோதனைகளை தொடர்ச்சியாக பரீட்சித்துப் பார்ப்பதுவுமாக உலக சமாதானத்துக்கு ஊறுவிளைவிப்பவராக தென்பட்டார்.அமெரிக்க அதிபரும் கொரிய தீபகற்பப் பிரதேசத்தில் தாட் ஏவுகணை தாங்கி கப்பல்களை தயார் நிலையில் வைத்திருந்தார்.அமெரிக்க அதிபரும் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டிருந்தார்.ஐ.நா. சபை மூலம் வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளையும் ஏற்படுத்தியிருந்தார். கொரிய…
-
- 1 reply
- 772 views
-
-
தொடர்ந்தும் மறுக்கப்படும் நீதி யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் மிக மோசமான அடக்குமுறைகளுக்கும் நெருக்குதல்களுக்கும் ஆளாகியிருந்த பத்திரிகை சுதந்திரம் இப்போது முன்னேற்றம் அடைந்திருக்கின்றது. இதனை எவரும் மறுக்க முடியாது. அதேவேளை யுத்தத்தின் பின்னர் நிலைமாறு கால நீதி பற்றிப் பேசப்படுகின்ற சூழலில் இது போதியளவில் முன்னேற்றம் அடையவில்லை என்பதையும் மறுக்க முடியாது. இலங்கையின் பத்திரிகை சுதந்திரம் முன்னைய ஆண்டிலும் பார்க்க சிறிது முன்னேறியிருக்கின்றது என்பதை ஆர்.எஸ்.எப். என்ற அமைப்பு அகில உலகளாவிய தனது ஊடக சுதந்திர நிலைமை குறித்த வருடாந்த மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது. ஊடக…
-
- 0 replies
- 364 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார்? ஜனாதிபதித்தேர்தல் 2020 ஆம் ஆண்டு நடக்குமா? அல்லது நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமா? போன்ற கேள்விகளுக்கு இதுவரை சரியான பதில்கள் கிடைக்காமல் இருக்கின்ற சூழலில் அடுத்த ஜனாதிபதித்தேர்தலில் என்ன நடக்கப்போகின்றது என்பது குறித்து தற்போது அனைத்துத் தரப்பினரும் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். அதாவது அடுத்த ஜனாதிபதித்தேர்தலை இலக்குவைத்து தற்போது அரசியல் காய்நகர்த்தல்களை அரசியல் கட்சிகள் ஆரம்பித்து விட்டதை காண முடிகின்றது. ஜனாதிபதித்தேர்தல் நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு சாரார் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை தொடர்பில் காய்நகர்த்தல்கள…
-
- 1 reply
- 489 views
-
-
ஆட விரும்பாதவனுக்கு நிலம் கோணல் இந்தியா கொடுத்த வாக்கை மீறக் கூடாது என அண்மையில் சம்பந்தன் அழுத்தமாகக் கூறியிருந்தார் அல்லவா? அது சூரியநாராயணனின் தளம்பல் கருத்துகளுக்குப் பதிலாகவே அமைந்திருந்தது. இதைத்தான் நான் சென்ற கட்டுரையில் இப்போதைக்கு 13 ஆம் ஷரத்து விடயத்தில் ஓய்ந்து இருந்தபோதும் அதை இப்போதும் இந்தியா உயிர்ப்பிலேயே வைத்திருக்கிறது. அதன் உயிர்ப்பை அழிக்க இடமளிக்காதிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தேன். சம்பந்தனின் கருத்தை எதிர்த்து பேரினவாதத்தின் பிதா மகன்மாரில் ஒருவரான குணதாச அமரசேகர என்ன கூறுகிறார் தெரியுமா? 13 ஆம் ஷரத்தை வலுப்படுத்தி இந்தியாவை நாடி, சம்பந்தன் ஈழத்தை…
-
- 0 replies
- 497 views
-
-
தவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…! சிவ.கிருஸ்ணா- வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைய இன்னும் 4 மாதங்களே உள்ளது. உடனடியாகவே வடக்கு மாகாண சபை மற்றும் ஏற்கனவே பதவிக் காலம் முடிவடைந்துள்ள ஏனைய மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. மைத்திரி – ரணில் கூட்டரசாங்கத்தினால் தேர்தல் திருத்தச் சட்ட மூலம் கொண்டு வரப்பட்டு அதன் அடிப்படையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் ஆட்டம் காண வைத்துள்ளதுடன், பல்வேறு குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஊழலை ஒழிப்பதாக கூறும் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட தேர்தல் திருத்தம் ஆட்…
-
- 0 replies
- 869 views
-
-
ஆடைகளும் நிர்வாணங்களும் ஒரு கதை சொல்லவா? ‘முஸ்லிம் பாடசாலையொன்று உள்ளது. அங்கு தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியரொருவர், சேலையுடுத்திக் கொண்டு கடமைக்காக வருகிறார். அப்போது, அந்தப் பெண் ஆசிரியரைக் குறித்த பாடசாலையின் அதிபர் அழைத்து, “உங்கள் ஆடை முறை சரியில்லை. நீங்கள் இங்கு சேலை உடுத்திக் கொண்டு வர முடியாது. இது முஸ்லிம் பாடசாலை என்பதால், எங்களுக்கென்று இங்கு ஒரு கலாசாரம் உள்ளது. எனவே, இங்கு கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் உடுத்தியுள்ளமை போன்று, நீங்களும் ஹபாயா அணிந்துதான் வர வேண்டும். முடியாது விட்டால், எங்காவது இந்துக் கல்லூரியொன்றுக்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டு சென்று விடுங்கள்” என்று கூறுகிறார். இப்போது, த…
-
- 7 replies
- 2.2k views
-
-
ஐ.தே.க மறுசீரமைப்பு தேர்தல் வெற்றிக்கு உதவாது அரசாங்கமும் ஆளும் கட்சியிலுள்ள இரண்டு பங்காளிக் கட்சிகளும், கடந்த சில வாரங்களாகக் குறிப்பாக, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெற்ற பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல், நாட்டு மக்களை முற்றாக மறந்து விட்டன போலும். அவற்றுக்குள்ளே தோன்றியுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவே, அவற்றுக்கு நேரம் போதாது போல்தான் தெரிகிறது. அவ்வாறு இருக்க, அரசாங்கத்தினதும் அவ்விரண்டு கட்சிகளினதும் தலைவர்கள், எவ்வாறு மக்களைப் பற்றிச் சிந்திக்கப் போகிறார்கள்? நீண்ட காலமாக, அரசாங்கத்துக்குள் நிலவி வந்த முரண்பாடுகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்து, மோதலாக மாறி, பிளவாகவும் மாறி வருகிறது. அரசாங்கத்திலிருந்த ஜ…
-
- 0 replies
- 287 views
-
-
மாநில சுயாட்சியை முன்வைத்து மோடிக்கு எதிர்ப்பு அணி? தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், சென்னையில் தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து உடல் நலம் விசாரித்து விட்டுப் பின்னர், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினுடன், மதிய உணவுடன் கூடிய ஆலோசனையை நடத்தியிருக்கிறார். மத்தியில் ஆளுங்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கின்ற நேரத்தில் எல்லாம், மத்திய அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு, பெரும்பாலான மாநிலங்களில் சர்ச்சைக்குள்ளாகும். குறிப்பாக, மாநிலங்களின் அதிகாரங்கள், மத்திய அரசாங்கத்தால் கைப்பற்றப்படும் நிகழ்வுகள் அரங்கேறும். அதிலும் குறிப்பா…
-
- 0 replies
- 946 views
-
-
கூட்டமைப்பின் மே தின பிரகடனமும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கையும் தமிழ் மக்களின் இறையாண்மை, சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் சமஷ்டி கட்டமைப்பில் தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியல்யாப்பு அமையவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதுடன் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இவ்வாண்டுக்குள் காணப்படவேண்டும் என்று அரசாங்கத்திடமும் அரசியல் கட்சிகளிடமும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலும் கிழக்கில…
-
- 0 replies
- 364 views
-
-
“உங்கள் எளிமையும், மனித வாஞ்சையும் உங்களை எங்கள் சனங்களின் ஜனாதிபதி ஆக்கிவிடாது” குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் மைத்திரிபால சிறிசேன குறித்து மகிந்த ராஜபக்சவின் தரப்பினர் கடுமையான விமர்சனம் செய்தனர். மைத்திரபால சிறிசேன ஈழத்தையே வழங்கப்போகிறார் என்றும் தென்னிலங்கையில் அவர்கள் பிரச்சாரம் செய்தனர். அப்போது தமிழ் மக்களின் இன்றைய முதன்மைப் பிரதிநிதியான இரா. சம்பந்தன் கூறுகையில் மைத்திரிபால சிறிசேனவை ஒரு நெல்சன் மண்டேலா ஆக்கும் முயற்சியிலும் ஒரு மகாத்மா காந்தி ஆக்கும் முயற்சியிலும் இறங்கியிருப்பதாகவும் அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றுக் கொடுக்கக்கூடிய முன்னுதாரணமான நடவடிக்கைகளில் தாமும் அரசும் ஈடுபடுவ…
-
- 0 replies
- 571 views
-
-
அரசியல் ரீதியான சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் ‘வெசாக்’ பி.மாணிக்கவாசகம் வெசாக் பண்டிகை நாட்டின் பல பகுதிகளிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது. இது பௌத்த மதத்தின் முக்கியமான பண்டிகையாகும். உலக நாடுகளில் பௌத்தர்கள் வாழும் இடங்களில் இது சிறப்பாகக் கொண்டாடப்;படுகின்றது. இலங்கையில் அதிக முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின் இது. அரசாங்க பண்டிகையாக மிகப் பரந்த அளவில் கொண்டாடப்படுகின்றது. ஆனால், அந்தக் கொண்டாட்டம் பௌத்த மதக் கலாசாரத்தைப் பின்பற்றி அதனை, பேணி பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ள போதிலும், அது எல்லையைக் கடந்து அதனை சிறப்படையச் செய்கின்ற ஒரு நடவடிக்கையாக அமைந்திருக்கின்றது. நாட்டின் பிரதான மதத்தவர்கள…
-
- 1 reply
- 680 views
-
-
முள்ளிவாய்க்காலில் தரித்து நிற்கும் தமிழர் அரசியல் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானைச் சேர்ந்த முன்னாள் போராளியொருவர், புற்றுநோய்த் தாக்கத்துக்குள்ளாகி, நேற்று முன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்திருக்கின்றார். கடந்த காலத்தில், பெரும் கவனத்தைப் பெற்றிருந்த முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள், இன்றைக்குப் பெட்டிச் செய்திகளாகச் சுருங்கிவிட்டன. பரபரப்புக்காக மாத்திரம், முன்னாள் போராளிகளின் பிரச்சினைகளைக் கையிலெடுக்கும் தரப்புகளும் அந்தப் பரபரப்பு அடங்கியதும், அவர்களை அப்படியே கைவிட்டு, இன்னொரு பரபரப்பைத் தேடிச் சென்றுவிடுகின்றன. மாய்மாலங்களைத் தாண்டிப் பேசினால், முன்னாள் போராளிகள் தொடர்பிலான உரையாடல்…
-
- 0 replies
- 443 views
-
-
நல்லிணக்கமோ பக்கத்தில்; தமிழர்களோ துக்கத்தில் இலங்கைத் தீவின் பல்லின மக்கள் பலவகையாகப் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடினாலும், புதுவருடத்துக்குத் தனியிடம் உண்டு. தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பு என்றே, விழித்துக் கூறப்படுகின்றது. நாட்டின் இரு தேசிய இனங்கள் கொண்டாடும், ஒரு விழாவாகும். சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் வருடப் பிறப்பு, பெருமெடுப்பில் கொண்டாடப்பட்டது. அவர்கள், பெரும் மகிழ்வுடனும் உற்சாகத்துடனும் புதுவருடத்தை வரவேற்றனர்; விருப்புடன் கொண்டாடினர். மறுவளமாக, அதே புதுவருடக் கொண்டாட்டங்கள் தமிழர் பிரதேசங்களில் சிறப்பாகக் களை கட்டவில்லை. முக்கியமாகப் புதுவருடத்தைக் கொண்டாடும் வகையி…
-
- 0 replies
- 437 views
-
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் சமஷ்டியும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாமலாக்கும் ஒரு பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி வெகுவிரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் இச்செயற்பாட்டை ஆட்சேபித்து முன்னாள் எம்.பி.யும் கூட்டு எதிரணியின் முக்கியஸ்தருமான கெஹெலிய ரம்புக்வெல்ல மாகாண சபைகளை இரத்துச் செய்தாலன்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது சாத்தியமல்ல என்கிறார். இதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கையில் யாப்பின் 13 ஆம் ஷரத்தை நீக்காமல்அதைச் செய்வது ஆபத்து என்கிறார். இதை 20 ஆம் ஷரத்தாக மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வருவது பற்றி கூட்டு எத…
-
- 0 replies
- 587 views
-