அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
பஞ்சாயத்தில் முடிவுறவுள்ள தமிழர் அரசியல்! இலங்கைதீவில் தேர்தல்! உள்ளுராட்சி மன்ற தேர்தலிற்கான பிரச்சார மேடைகள் முழங்குகின்றன. தெற்கில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் கட்சியினர் கூறுகிறார்கள் - போரை வென்றோம், பயங்கரவாதத்தை ஒழித்தோம்! நல்லாட்சி என கூறப்படும் அரசின் கட்சியினர் கூறுகின்றனர் - குடும்ப ஆட்சியை ஒழித்தோம், ஊழலை ஒழித்தோம், நல்லாட்சியை ஏற்படுத்தினோம். முஸ்லீம் அரசியல் கட்சியினர் கூறுகின்றனர் - எமது பிரதேசங்களில் மக்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றினோம். எமது மக்களிற்காக இரவு பகலாக உழைக்கிறோம். மலையக அரசியல் கட்சிகள் கூறுகின்றன, எமது மக்களின் ஏழ்மை நிலைகளை ஒழிக்கிறோம், வாழ்விடங்களை புதுப்பிக்கின்றோம் இன்னும் பல செய்வோம்.…
-
- 0 replies
- 448 views
-
-
யேமனில் தொடரும் மனிதாபிமான அவலம் - ஜனகன் முத்துக்குமார் உலகிலேயே மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடியில், யேமன் இப்போது சிக்கியுள்ளது. 2.9 மில்லியனுக்கும் மேலான பொதுமக்கள், வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ள இந்நிலையில், 21 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் -- அதாவது சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேலானவர்களுக்கு -- அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது என, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கச் செயற்குழு அறிவித்துள்ளது. கடந்தாண்டு மே மாதம், வாந்திபேதி பரவியதிலிருந்து, 911,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர் எனப் பதிவாகியுள்ள நிலையில், அதில் குறைந்தது 2,195 பேர் வரை இறந்திருந்தமை பதியப்பட்டுள்ளது. இவ்வெண்ணிக்கை, உண்மையான நிலைவரத்தைப்…
-
- 0 replies
- 291 views
-
-
அடிமை யுகம் அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டு வெற்றிகரமாக சீனாவின் கொடியும் அங்கு பறக்கவிடப்பட்டுவிட்டது. அந்தக் கொடியை பார்த்து இலங்கை கவலைப்பட்டதோ என்னவோ நிச்சயம் இந்தியா கடும் கோபத்தில் உள்ளது. நல்லாட்சி அரசாங்கம் இந்தியா சார்பானதாக இருக்குமென அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மஹிந்த காலத்தில் இருந்ததை விட, பன்மடங்கு சீன ஆதிக்கத்தை நல்லாட்சி அரசு விரும்புகின்றது. அதற்கு பல உதாரணங்களை கூறிவிடலாம். முதலில் கொழும்புத் துறைமுக நகரத்தை இடைநிறுத்திவிட்டுச் சீனாவுடன் முரண்பட்டாலும் அந்த முரண்பாட்டை ஈடுசெய்வதற்காக தற்போது அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை தாரைவார்த்துள்ளது என்றே சொல்லவேண்டும். 9…
-
- 0 replies
- 354 views
-
-
தமிழக அரசியலும் ரஜினிகாந்தின் முடிவும் ச.திருமலைராஜன் சினிமா என்னும் மாய வலையில் பின்னப் பட்ட தமிழக அரசியல் தமிழக அரசியல் பிற இந்திய மாநில அரசியல்களில் இருந்து வித்தியாசமானதும் வினோதமானதும் ஆகும். சுதந்திரம் கிடைத்த பிறகு காங்கிரஸுக்கு இருந்த இயல்பான வரவேற்பாலும் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தக் கட்சி என்பதினாலும் 17 வருடங்கள் வரை காங்கிரஸ்ன் தாக்குப் பிடித்து விட்டது. அதன் பிறகு இன்று வரையிலும் இனி எதிர்காலத்திலும் கூட சினிமா இல்லாத தமிழக ஆட்சி என்பது கிடையாது என்பதே தமிழகத்தின் நிலை. காங்கிரஸ் ஆட்சியின் பொழுது தமிழகத்தை நன்கு அறிந்த தமிழகத்தின் பூகோளம், சமூக வரலாற்றுப் பிரச்சினைகள் அறிந்த அதன் உண்மையான தேவைகள் அறிந்த ராஜாஜி, காமராஜ் போன்றோர் முதலமைச்சர்களாக…
-
- 6 replies
- 841 views
-
-
அரசியல் களம் - சட்டத்தரணி மணிவண்னன் - தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனி
-
- 0 replies
- 397 views
-
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல் – இடைக்கால அறிக்கையின் மீதான வாக்கெடுப்பு? நிலாந்தன்:- இடைக்கால அறிக்கையை மக்கள் முன் கொண்டு சென்று வாக்குக் கேளுங்கள் என்ற தொனிப்பட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது கட்சி ஆட்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார். அண்மையில் வடமராட்சியில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வின் போது அவர் மற்றொரு விடயத்தையும் கூறியுள்ளார். அதாவது வரவிருக்கும் தேர்தலில் கூட்டமைப்புத் தோற்றால் அது யாப்புருவாக்க முயற்சிகளைப் பாதிக்கும் என்ற தொனிப்பட. எனவே தமிழரசுக்கட்சியானது இடைக்கால அறிக்கையை முன்வைத்து மக்களாணையை கேட்கப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனப்படுவது உள்ளூர் தலைமைத்துவங்களைக் கட்டியெழுப்பு…
-
- 0 replies
- 323 views
-
-
கூட்டு ஆட்சித் தலைவர்களது வாக்குறுதிகளின் கதி என்னாச்சு? கூட்டு ஆட்சித் தலைவர்களது வாக்குறுதிகளின் கதி என்னாச்சு? கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நாட்டில் நடைபெற்ற அரச தலைவர் தேர்தலில் முன்னாள் அரசதலைவர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தமிழ்மற்றும் முஸ்லிம் மக்களின் அதிகப்படியான ஆதரவு வாக்குகளால் பெரு வெற்றியீட்டி அரசதலைவராகப் பதவியேற்று மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டன. …
-
- 0 replies
- 263 views
-
-
தர்மலிங்கம் சித்தார்த்தன் - தலைவர், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ( புளொட் )
-
- 1 reply
- 526 views
-
-
இலங்கை தமிழரசு கட்சியின் மேலாதிக்கம் தொடருமா? யதீந்திரா தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னரான கடந்த எட்டு ஆண்டுகளாக இலங்கை தமிழரசு கட்சியே தமிழ் அரசியலில் மேலாதிக்கம் செலுத்துவருகிறது. இந்த மேலாதிக்கத்தின் மையமாக இருப்பவர் இரா.சம்பந்தன். இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கின்ற தருணம் வரையில், சம்பந்தன் என்னும் மனிதர்தான் தமிழரசு கட்சியின் ஒரேயொரு பலமாக இருக்கின்றார். சம்பந்தன் இவ்வாறானதொரு இடத்திற்கு அவரது திறமையின் காரணமாக மட்டும் வரவில்லை. சம்பந்தனின் காலத்தை ஒட்டிய பலர் உயிரோடு இல்லாத ஒரு சூழலில்தான் சம்பந்தன் தமிழ் மக்கள் மத்தியில் வாழ்பவர்களில் முக்கியமானவர் என்னும் தகுதியை பெற்றார். இன்று அவர் இலக…
-
- 0 replies
- 393 views
-
-
மறக்கப்பட்ட விவகாரம் – ஏக்கத்துடன் அரசியல் கைதிகள் – பி.மாணிக்கவாசகம்:- தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை மாதத்தின் பின்னராவது தங்களது விடுதலைக்கு வழி பிறக்காதா என்று நாடடின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் ஏகக்த்துடன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ், பெரும் எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் கைது செய்யப்பட்டார்கள். விடுதலைப்புpகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குத் துணை புரிந்தார்கள் அல்லது அவர்களுடன் இணைந்து செயற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும், அத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முஸ்…
-
- 0 replies
- 357 views
-
-
உயர்நீதிமன்றின் கையில் மைத்திரியின் வாள் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரைப் போலவே, தமது பதவிக்காலம் குறித்த சட்டவிளக்கத்தை உயர்நீதிமன்றத்திடம் கோரியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. தமது பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறதா அல்லது 2021 வரை, இந்தப் பதவியில் நீடிக்க முடியுமா என்பதற்கு, 14ஆம் திகதிக்குள் வியாக்கியானம் அளிக்குமாறு, அவர் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்புக்கு எழுத்துமூலமான ஒரு கோரிக்கையை விடுத்திருக்கிறார். சந்திரிகா குமாரதுங்கவும், மஹிந்த ராஜபக்ஷவும் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்கள். ஆனால், அவர்கள் அப்போதிருந்த அரசமைப்பு நடைமுறைக்கு அமைய, 12 ஆண்டுகள் பதவியில் இர…
-
- 0 replies
- 234 views
-
-
இலங்கை தாயக அரசியல் களம் இலங்கை உள்ளுராட்சி சபை தேர்தல் தமிழ் மக்கள் பேரவை | மாற்று அரசியல் கூட்டமைப்பு
-
- 1 reply
- 417 views
-
-
புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (ஆர்.ராம்) 16 ஆம் நூற்றாண்டிலிருந்து போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்ற அந்நியர் ஆட்சிக்கு இலங்கைத்தீவு உட்பட்டிருந்தது. 1802 ஆம் ஆண்டு முதல் இலங்கை முடிக்குரிய ஒரு குடியேற்ற நாடாக மாறியது. இதிலிருந்து இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் சிவில் நிர்வாகம், நீதிப்பரிபாலனம், நிர்வாக விடயங்கள் பிரித்தானிய அரசினால் இலங்கையில் நியமிக்கப்பட்டிருந்த தேசாதிபதியால் நிறைவேற்றப்பட்டன. அதனைத்தொடர்ந்து 1833இல் பிரித்தானியரால் கோல்புறுக் கமரன் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது நாட்டின் அரசியலமைப்பு துறையில் அடித்தளத்…
-
- 32 replies
- 6.7k views
-
-
கலக்கப்போவது யாரு குட்டித் தேர்தலுக்கான அரசியல் சூழலோடு புதிய வருடத்தை வரவேற்கத் தயாராகிவிட்டனர் இலங்கை மக்கள். 2018ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல் களத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்க வாய்ப்பே இல்லை. எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல், அதன் பின்னர் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல், அதன் பின்னர் நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் புதிய அரசியல் அமைப்பு என வருடம் முழுவதும் இலங்கையின் அரசியல் நிலைவரங்கள் வழமையைவிட சற்று பரபரப்பாகவே காணப்படப்போகின்றன, என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சிகளுக்கு (கூட்டணிகளு…
-
- 0 replies
- 825 views
-
-
ஈரோஸ் அமைப்பின் அருளர் எனப்படும் அருள்பிரகாசம் அவர்களின் செவ்வி
-
- 0 replies
- 481 views
-
-
முஸ்லிம் அரசியலும் பள்ளிவாசல்களும் முஸ்லிம்களின் வரலாற்றில் அரசியல், சமூகம், பொருளாதாரம் என்று எல்லா விடயங்களிலும் பள்ளிவாசல்களுக்கு முக்கிய இடமிருக்கின்றது. பள்ளிவாசல்கள் ஊடாக முஸ்லிம்கள் வழிப்படுத்தப்படுவதும் அதை மையமாகக் கொண்டு, ஒரு குடையின் கீழ் சமூகம் வருவதும் முன்னொருபோதும் நிகழ்ந்திராத ஒன்றல்ல. அரசியல்வாதிகளுக்கு பயந்து கொண்டும் பள்ளி நிர்வாகத்தின் வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் நின்றுகொண்டும் பள்ளிவாசல்கள் செயற்படுவதால், அல்லது பள்ளியில் அரசியல் கதைப்பது வேண்டத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைப்பதால், கடந்த பல வருடங்களாகப் பெரும்பாலும் பள்ளிவாசல்களில் வாராந்த குத்பா (நல்லுபதேச) பிரசங்கம் உள்ளடங்கலாக…
-
- 0 replies
- 383 views
-
-
ஈரான் கிளர்ச்சி: அரங்கேறாத ஆட்டம் அரங்கேறுவதற்காகவே ஆட்டங்கள் ஆரம்பிக்கின்றன. ஆனால், ஆட்டங்கள் எல்லாம் அரங்கேறுவதில்லை. ஆட்டங்கள் பலவகை; அதில் அரங்காடிகள் பலவகை. ஆட்டங்கள் அரங்கேறுவது அவ்வளவு இலகல்ல. அதற்கு அரங்காடிகளின் பங்களிப்பு முக்கியம். அரங்காடிகள் இருந்தாலும் ஆட்டம் அரங்கேறும் என்பதற்கான உத்தரவாதம் எதையும் தரவியலாது. அரங்குகள் சரியில்லாவிடின் ஆட்டம் அரங்கேறாது. ஆட்டம் அரங்கேறுவதற்கு விருப்பு மட்டும் போதாது. அதற்குப் பல அம்சங்கள் ஒருங்கே அமைய வேண்டும். அடி சறுக்கினால் ஆட்டமே ஆட்டங்காணும். ஈரானில் பலநாட்கள் நீடித்த மக்கள் கிளர்ச்சி, இவ்வாண…
-
- 1 reply
- 611 views
-
-
‘சிறுபான்மைகளை’ ஒதுக்கும் அரசியல் இலங்கையின் அரசியல் கலாசாரமென்பது, முற்றுமுழுதாக ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தைக் கொண்டது என, யாரும் கூறிவிட முடியாது. நேரடியான இனவாதமும் மதவாதமும் பாலின ஒதுக்குதலும் காணப்படாவிட்டாலும், சுதந்திரம் பெறப்பட்ட பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும், இவை அனைத்தையும் கண்டே வந்திருக்கிறோம். இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலும், சிறுபான்மைகளை அல்லது சிறுபான்மைகள் என நாம் கருதுகின்ற சில பிரிவுகளை ஒதுக்கும் ஒன்றாகவே காணப்படுகிறது என்பது, வருத்தத்துக்குரியதாகவே இருக்கிறது. முன்னைய அனைத்துத் தேர்தல்களையும் விட, இத்தேர்தல் மிக வேறானது என்பது, திரும்பத் திரும்பக் கூறப்பட…
-
- 0 replies
- 302 views
-
-
முன்னோடி பலப்பரீட்சை http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-10#page-18
-
- 0 replies
- 300 views
-
-
கொடிய ஆயுதங்களோடு வென்றோரும் புனித ஆன்மாக்களோடு தோற்றோரும் கடந்த வருட இறுதிப் பகுதியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ‘எலிய’ என்ற சிங்களப் பெயரை உடைய ‘ஒளி மயமான அபிலாஷைகள்’ என்ற தமிழ்க் கருத்து கொண்டதுமான புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. “2009 ஆம் ஆண்டு, மே மாதம் 19ஆம் திகதி காலை 10.30 மணிக்கு, வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொலை செய்த பின்னர், தீவிரவாதம் தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை” என, அந்த அமைப்பை ஆரம்பித்து வைக்கும் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இவ்வாறாகக் கருத்துத் தெரிவித்த ஓய்வு பெற்ற தளபதி, பிரபாகரன் …
-
- 0 replies
- 313 views
-
-
முன்னணியின் முக்கியமான மாற்றம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஸ்தாபிக்கப்பட்டு சுமார் எட்டு ஆண்டுகளாகின்றன. இந்த எட்டு ஆண்டுகளுக்குள் முன்னணி இரண்டு பொதுத் தேர்தல்களில் மாத்திரம் போட்டியிட்டிருக்கின்றது. ஓர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் இரண்டு மாகாண சபைத் தேர்தல்களைப் புறக்கணித்திருக்கின்றது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை. மாறாக, வேட்பாளர்களைத் தேடுவதில் ஏற்பட்ட சிக்கல்களினால் போட்டியிடவில்லை என்று முன்னணி தற்போது கூறிவருகின்றது. ஆக, மாகாண சபைத் தேர்தல்களை மாத்திரம் முன்னணி புறக்கணித்ததாகக் கொண்டு இந்தப் பத்தி மேலே செல்கின்றது. 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான ஆசனப்பங்கீட…
-
- 0 replies
- 273 views
-
-
இனவாதமும் தேர்தலும் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலானது தனிஈழத்தை உருவாக்குவதற்கு மீண்டும் ஒரு மக்கள் ஆணையை பெறும் தேர்தலாக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பயன்படுத்தப்படவுள்ளது. இதை கவனத்தில் கொண்டு பேரின சமூகம் இந்த தேர்தலில் தாமரை மொட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோல்வி அடையுமானால் இலங்கை பிளவுபட்டு தனித்தமிழ் ஈழம் உருவாகுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என அடித்து கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ. அவருடைய இனவாத கூக்குரலானத…
-
- 0 replies
- 407 views
-
-
தமிழர் அரசியல் புலத்தில் விடை தெரியாத கேள்விகள் - க. அகரன் ‘சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த’ கதையாகியுள்ளது வடக்கு, கிழக்கு அரசியல் நிலைமைகள் என்றால் மறுப்பதற்கில்லை. தமிழர்களது போராட்ட வரலாறுகளும் அதனூடான உரிமைக்கான குரலும் ஓங்கி ஒலித்த காலத்தில் இருந்த திடமான அரசியல் களம், தற்போது தடம்புரளும் வங்குரோத்தில் செல்கின்றமை ஆரோக்கிமானதாக இல்லை. விடுதலைப் புலிகளினால் உருவாக்கம் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று ஆரம்பகால தார்ப்பரியங்களை மறந்து செயற்படுவதாகப் பல்வேறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அந்தப் பந்தையக் குதிரையில் பயணிப்போர் தமிழர் நிலைப்பாட்டை உணர்ந்துள்ளனர…
-
- 0 replies
- 507 views
-
-
தெற்கின் ஆளுமையும் தமிழ் தலைமையின் கையறுநிலையும் நாட்டு மக்கள் எதிர்பார்த்ததைப் போன்றும் இந்த பத்தி ஏற்கனவே சுட்டிக் காட்டியதைப் போன்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினுடைய முழுமையான கட்டுப்பாட்டை தன்னகத்தே கொண்டு வந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுத் தளத்தை குறைக்கும் வகையிலும் ஜனாதிபதி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே இது நடைபெறும் என்று எதிர்பார்த்த போதிலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகி, வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இருவேறு ஆணைக்குழுக்களின் அறிக்கை ஜனாதிபதிடம் கையளிக்கப்பட்டு அந்த அறிக்கைகளின் பேரில் ஜனாதிபதி தனது கருத்துக்களையும், …
-
- 0 replies
- 304 views
-
-
சுமந்திரனும் மூக்கும் மென்வலுவும் இலங்கையின் தமிழ் அரசியல் பரப்பை, அண்மைய சில நாட்களாக ஆக்கிரமித்த மிக முக்கியமான விடயமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்குமிடையில் இடம்பெற்ற, தொலைக்காட்சி விவாதம் அமைந்திருந்தது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நெருங்குகின்ற போதிலும், அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை தொடர்பானதாகவே, அவ்விவாதம் அமைந்திருந்தது. நடுநிலை நோக்கிலிருந்து அல்லது தமிழ்த் தேசிய அரசியல் நோக்கிலிருந்து அவ்விவாதத்தை அவதானித்த போது, இரண்டு சட்டத்தரணிகளுக்குமிடையிலான அவ்விவாத…
-
- 2 replies
- 556 views
-