யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  6,826
 • Joined

 • Last visited

 • Days Won

  9

பெருமாள் last won the day on December 17 2018

பெருமாள் had the most liked content!

Community Reputation

1,559 நட்சத்திரம்

1 Follower

About பெருமாள்

 • Rank
  Advanced Member

Contact Methods

 • MSN
  perumaal1212@gmail.com
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

7,044 profile views
 1. அதே போல் இலங்கை முஸ்லீம் அகதிகள் எனும் பெயரில் மேற்கத்தேய நாடுகளில் அசேலம் அடித்தவர்களின் பின்புலங்களை திரும்பவும் இங்குள்ள பாதுகாப்பு தரப்புக்கள் சரி பார்ப்பது நல்லது முக்கியமான தீவிரவாதிகள் குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே உருவாகின்றார்கள் எனும் கருத்தை இன்றைய தாக்குதல்கள் உடைத்து விட்டு சென்றுள்ளது .
 2. புனித நாளில் இறந்தவர்களுக்கு அஞ்சலிகள்! கோத்தாவோ ராஜபக்சவோ உடுக்கடிச்சு இந்த லூசு கூட்டம் திடிரென வந்து குண்டு வைத்து இருக்கமாட்டினம் கண்ணுக்கு தெரியாமால் இன்னும் எத்தனை குண்டுகளுடன் வரபோகினமோ தெரியாது.
 3. இந்த கூட்டம் எப்போதுமே இப்படித்தான் உலகத்திலேயே வீட்டிலை வெளியிலை கதைப்பது எழுதும் மொழியை அளவுகடந்து வெறுக்கும் இனம் என்றால் இந்த இந்த இலங்கை சோனகர் என்று சொல்லிக்கொண்டு திரியும் கூட்டம் இவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை(அப்துல் கமீத் ) தவிர மற்றதுகள் கதைக்கும் மொழியை கூட வன்மத்துடன் பார்க்கும் லூசு கூட்டம் .
 4. நெடுக்கரை தேடுறன் குமரா சாமி நெடுக்குதான் இதுக்கு சரியான விளக்கம் குடுக்கும் ஆள் அவர்தான் அவரின் முகப்பு படத்திலே இந்த வில்லங்கம் பிடிச்ச பூனையும் இருக்கு இப்ப குரங்கு .
 5. இந்த ஆராய்ச்சி தவறானது என்று ஒரு குழுவும், அறிவியலில் இதுவொரு முக்கியமான ஆய்வு என்றும் இரு வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்தப் பரிசோதனை பொறுப்பற்றது. மரபணு மாற்றத் தொழில்நுட்பத்துக்கான நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனித வரலாற்றில் நவீன கால அறிவியல் கொண்டுவந்துள்ள முக்கியமான ஆராய்ச்சிகளுள் ஒன்று மரபணு ஆராய்ச்சி. நமது மூதாதையர்களைப் புரிந்துகொள்ள, மனிதனின் உயிர்க்கூறு பண்புகளைத் தெரிந்துகொள்ள, நோய்களை எதிர்கொள்ள எனப் பல்வேறு வகைகளில் இந்த மரபணு ஆராய்ச்சி நமக்குக் கைகொடுத்துவருகிறது. மனிதர்களின் இயல்பையே மாற்றும் அளவுக்கு வல்லமை வாய்ந்த ஆராய்ச்சி இது என்பதால், எப்போதும் இதுகுறித்த சர்ச்சைகளும் வந்துகொண்டே இருக்கும். ஒருபக்கம் விஞ்ஞானிகள் ஆதரிப்பதும் இன்னொருபக்கம் எதிர்ப்பதுமாக அந்த விவாதங்கள் இருக்கும். தற்போது மீண்டும் அப்படி ஒரு ஆராய்ச்சி உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. சீன விஞ்ஞானிகள், மனித மூளையின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய மரபணுக்களைக் குரங்குகளில் செலுத்தி சோதனை செய்திருக்கிறார்கள். இதன்மூலம் மனித மூளையில் ஏற்படும் வளர்ச்சிகளைப் போலவே குரங்குகளின் மூளையும் வளர்ச்சியடையும் எனத் தெரிவிக்கிறார்கள். அந்நாட்டின் தேசிய அறிவியல் மதிப்பாய்வு நிறுவனத்திடம், குரங்குகளில் மனித மரபணு குறித்த ஆய்வுகளைச் சீன விஞ்ஞானிகள் சமர்ப்பித்திருக்கிறார்கள். அதில் எவ்வாறு குரங்குகளில் மனித மரபணுக்களைச் செலுத்தினார்கள், அப்படி மனித மரபணுக்கள் செலுத்தப்பட்ட பிறகு, அந்தக் குரங்குகள் இப்போது இருக்கும் நிலை என அனைத்தையும் தெரிவித்துள்ளனர். மனித மூளையிலிருக்கும் மரபணுவான மைக்ரோசிபாலின் (microcephalin) MCPH1-ஐ சீன விஞ்ஞானிகள் 11 ரீசஸ் குரங்களுக்குச் செலுத்தியுள்ளனர். ரீசஸ் குரங்குகள் கிட்டத்தட்ட மனிதர்களைப் போன்று செயல்படக்கூடியவை என்பதால் அந்தக் குரங்குகளுக்குச் செலுத்தியுள்ளனர். இதன்மூலம் 'மனிதன் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தான்' என்பதைக் கண்டறியலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். Photos: Reuters குரங்குகள் கருப்பையில் கருவாக இருக்கும்போதே மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு, குட்டிகள் உருவாக்கும் வேலைகள் தொடங்கப்பட்டன. அவ்வளவு ஏன், குரங்குகள் கருத்தரிப்பதிலிருந்தே அவர்களின் ஆய்வு தொடங்கிவிடுகிறது. பெண் குரங்குகளின் கருமுட்டைகளுக்குள் இந்த MCPH1 என்ற ஜீனை ஒரு வைரஸ் மூலம் உள்ளே செலுத்துகிறார்கள். இது அந்த ஜீனை குரங்குகளில் மூளைக்குக் கொண்டு செல்கிறது. அதன் பிறகு தாய்க் குரங்குகளிடமிருந்து அறுவைசிகிச்சை மூலம் பிறக்க வைக்கும் குரங்குக் குட்டிகள் இன்குபேட்டரில் வைத்து வளர்க்கப்பட்டன. வளர்ந்த சில நாள்களுக்குப் பிறகு ஒரு சில விஷயங்களில் மனிதர்களைப் போன்றே குரங்குகள் செயல்படத் தொடங்கியுள்ளன. மூளை வளர்ச்சி, நினைவாற்றல், முடிவு எடுக்கும் திறன் போன்றவை மற்ற குரங்குகளைக் காட்டிலும் அதிகமாக இருந்தன. ஜீன் செலுத்தப்பட்டவுடன் 11 குரங்குகளில் ஆறு குரங்குகள் இறந்திருக்கின்றன. மீதமுள்ள ஐந்து குரங்குகளை வைத்து ஆராய்ச்சி நடத்தியுள்ளனர். இந்த மரபணுவைக் குரங்குகளுக்குச் செலுத்திய பின்னர், குரங்குகளின் மூளை வளர்ச்சி அடைவது அவற்றின் இயல்பான வேகத்தில் இல்லாமல், மனிதனின் மூளை வளர்ச்சிபோல நேரம் எடுத்துக்கொள்கின்றன என்பதும் சோதனை மூலம் தெரியவந்துள்ளது. மூளை வளர்ச்சியைக் கண்டறிய குரங்குகளுக்கு MRI ஸ்கேனும் செய்யப்பட்டுள்ளது. குரங்குகளின் மரபணுக்களில் மனித மரபணுக்களைச் செலுத்தி அவற்றின் தன்மையையே மாற்றியமைத்துள்ளார்கள் சீன ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆய்வு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், குரங்குகளுக்கு மனித மூளையின் மரபணுவைச் செலுத்தியது தொடர்பாகப் பல ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கண்டனங்களையும் பதிவு செய்து வருகிறார்கள். கோப்புப் படம் இந்த ஆராய்ச்சி தவறானது என்று ஒரு குழுவும், அறிவியலில் இதுவொரு முக்கியமான ஆய்வு என்றும் இரு வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்தப் பரிசோதனை பொறுப்பற்றது. மரபணு மாற்றத் தொழில்நுட்பத்துக்கான நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆச்சர்யம் என்னவென்றால் அந்தச் சீன விஞ்ஞானிகள் குழுவில் பணியாற்றிய ஓர் ஆராய்ச்சியாளரே அதைத் தவறு என்று விமர்சனம் செய்திருக்கிறார். ஆராய்ச்சியில் இருந்து பின்வாங்க முடிவெடுத்துள்ளார். மரபணு மாற்றம் என்பது என்ன? ஓர் உயிரினத்தின் மரபணுவில் உள்ள டி.என்.ஏ-வை நீக்குதல், சேர்த்தல் மற்றும் அழித்தல் என்று மரபணு அமைப்பையே மாற்றியமைப்பதை 'மரபணு மாற்றம்' என்று அழைக்கிறது அறிவியல். மனிதர்களுக்கு இருக்கும் நோய்களை விரட்டவும், நோய்களில் இருந்து மனிதர்களைப் பாதுகாக்கவும் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இது அசாத்திய திறன்களைக் கொண்ட சூப்பர்ஹீரோ மனிதர்களை உருவாக்கப் பயன்படும் என்பதும் சிலரது கருத்தோட்டமாக உள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் அதிகமான மோப்பத் திறனும், கூர்மையான இரவுப் பார்வையும் உருவாக்க முடியும். மரபணு மாற்றத்துக்காக உலக ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச விதிகளை வகுத்திருக்கிறார்கள். உலக அளவில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் இந்த விதிகளைப் பின்பற்றித்தான் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். ஆனால், உலக அளவில் அபாயகரமான ஆராய்ச்சிகளில் ஒன்றாக மரபணு மாற்ற ஆய்வு பார்க்கப்படுகிறது. மேலும், இது மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கிச் சமத்துவமின்மைக்கும் வழிவகுக்கும். இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவது விலங்குகளை அழிவுப்பாதையை நோக்கி அழைத்துச்செல்லும். இது விலங்குகள் துன்புறுத்தலை மேலும் அதிகரிக்கவே செய்யும். இந்தச் சோதனைகள் ஒருவிதமான ஆர்வத்தால் மட்டுமே செய்யப்படுகின்றன. உண்மையில் விலங்குகள் இயற்கையான வாழ்விடங்களில் மட்டுமே இருக்க வேண்டும். இப்போது உருவாக்கியிருக்கும் குரங்குகள் எங்கு தங்கும், எப்படிச் சிந்திக்கும், என்ன செய்யும் என்பது போன்ற கேள்விகளுக்கு விடையில்லை. ஒருவேளை இந்தக் குரங்குகளுக்கு மனிதர்களைப் போன்ற மூளை வளர்ச்சி ஏற்பட்டால் அவையும் மனிதர்களைப் போலவே வாழ முடிவுசெய்தால் அவை வாழ்வதற்கான இடம் இங்கு ஏது? மனிதர்களின் எண்ணிக்கையே சராசரி அளவைவிட அதிகமாகிவிட்ட நிலையில் குரங்குகளையும் மனிதர்களைப் போல் மாற்றிக்கொண்டிருந்தால் என்ன மாதிரியான விளைவுகளை நாம் சந்திப்போம் என்று யூகங்களின் அடிப்படையிலாவது ஏதேனும் திட்டமிடுதல் இருக்கின்றதா. இவையெல்லாம் நாளையே நடக்கக்கூடியதா என்றால், இல்லைதான். ஆனால், எதிர்காலம் நாம் யூகிப்பதைவிடவும் ஆபத்தானதாக இருந்தால் என்ன செய்வது என்ற அச்சமும் எழாமல் இல்லை. ஹாலிவுட்டில் 'தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்' என்றொரு திரைப்படம் உண்டு. அதில் இதே போன்றதொரு ஆராய்ச்சியால் குரங்குகள் தனி நாகரிக சமுதாயமாக மாறி மனிதர்களுக்கும் குரங்குகளுக்கும் வாழ்விடச் சண்டைகள் நிகழத் தொடங்கி அதுவே போர் வரைக்கும் இட்டுச்செல்லும். ஒருவேளை அறிவு வளர்ச்சியடைந்த குரங்குகள் மனிதர்களைத் தாக்கினால் என்ன ஆகும்? "உடனே இந்த ஆராய்ச்சியை நிறுத்த வேண்டும். சீன ஆராய்ச்சியாளர்கள் உயிரினங்களையும் அவற்றின் தன்மையையும் இன்னமும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அவர்களின் இதுபோன்ற ஆய்வுகள் நமக்குக் காட்டுகின்றன" என்று சமூக ஆர்வலர்களும் ஆராய்ச்சியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நன்றி விகடனுக்கு https://www.vikatan.com/news/miscellaneous/155269-chinese-scientists-placed-human-genes-into-monkeys-brain-for-research.html?fbclid=IwAR0jCGTJ4wqKPMm-mzMOYlgUCaDW07HOB7V5wc9lRXOjTq6bZcUTSweMqII
 6. எனக்கு ஒரு சந்தர்ப்பம் அந்த நாய்களுக்கு உணவளிக்க வந்தால் இந்த சிவசேனை அமைப்பின் வேலையை அந்த ஒரு நேர சாப்பாட்டுடன் முடித்து வைப்பன் . மனிசன் சொந்த இடத்துக்கு போக முடியவில்லை இன்னும் தெரு தெருவா பிச்சை எடுக்காத குறையில் சிறுவர்கள் சிறுமிகள் நேற்று பிள்ளயார் கோவிலாக இருந்தது விடிந்ததும் புத்தர் கோவிலாகுது அதை தடுக்க வக்கில்லை நாய் வளர்த்து விளையாடினம் .
 7. பாரியதொரு emb ஈபாம் ஒன்று வெடித்து சகல எலக்ரோனிக் கருவியும் உலகம் முழுக்க பழுதடைந்தால் மறுபடியும் குதிரை,மாட்டு வண்டில்கள் தான் தேவையில்லாத வாகன புகை இருக்காது மக்கள் பழையபடி நடந்து திரிய தொடங்கி சுத்தமான காற்று உடல் ஆரோக்கியம் பொழுது போக்குக்கு விளையாட்டு புத்தங்கங்கள் வாசிப்பு ,வீட்டுக்குள் இயந்திரமாய் திரியும் உறவுகள் உயிர் பெற்று உறவு முறை புன்னகையுடன் கொண்டாடுங்கள் பழையபடி வாழ்வு இனிக்கும் . செயற்க்கை நுண்ணறிவுதான் மனித குலத்துக்கு எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தல் என்று ஸ்டீபன் ஹாக்கிங் எதிர்வு கூறலுக்கு முதல் இந்த வதந்தி பரப்பும் சமூக ஊடகங்கள் மனிசனை நடைபிணமாக்கிவிடும் .
 8. அப்ப கொஞ்ச நேரம் சனம் நிம்மதியாய் இருந்து இருக்குதுகள் நல்ல விடயம் நடந்து இருக்கு .
 9. இங்கு இப்படி கொள்ளுபட கோவில்கள் பக்கம் கொஞ்சம் எட்டி பார்த்தால் சப்பாத்துக்கள் கழட்டி வைக்கும் ராக்குகள் நிரம்பி வழிகின்றன வெம்பிளி ஈழபதீஸ்வரர்க்கு அய்யர் மார் விழுந்து விழுந்து மணி அடிச்சு பூசை செய்வது வெளியில் இருந்தே பார்க்க கூடியதாக இருக்கு . நாங்கள் என்ன குத்தி முறிந்தாலும் சனம் கோவிலுக்கு தீபாவளிக்கும் போகுதுகள் ஆங்கில வருடபிறப்புக்கும் போகுதுகள் தைபொங்கலுக்கும் போகினம் சித்திரை வருசமான இன்றும் அய்யர் கூட்டத்தின் கல்லாவை நிரப்ப அடிபட்டுக்கொண்டு வரிசையில் நிக்குதுகள் . இதுகளை திருத்த நூறு சீமான் வந்தாலும் காணாது . போற போக்கிலை குருக்கள் எனும் ஐயரிடம் தைப்பூசம் எண்ணத்துக்கு கொண்டாடுறாங்கள் என்று கேட்டு துலைக்க ஐயர் எஸ்கேப் எனக்கும் உண்மயில் எனக்கும் தெரியாது இங்கு யாருக்கும் தெரியுமா ? மொரிசியஸ் தமிழை மறந்த தமிழர் ஒவ்வொரு வருடமும் ஆர்ச்வே முருகனுக்கு காவடி எடுப்பார் அவரிடமும் கேட்டன் அவரும் தனக்கு தெரியாது தன் பெற்றோர் தைபூசம் நாளில் கும்பிடுறவை நானும் கும்பிடுறன் என்கிறார் . இப்படித்தான் எங்கடை எதிர்கால சந்ததியும் இருக்கும் போல் தென்படுது . உங்களின் வருடபிறப்பு எப்ப என்று கேட்டால் முழித்துகொண்டு நிக்க வேண்டியது தான் .
 10. ஏற்கனவே கருங்குழி படம் ,நிலவு என்று ஒரு திரி சூடாய் போகுது இதுவேறையா ?