அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
எதற்காக சர்வகட்சி மாநாடு? வீரகத்தி தனபாலசிங்கம் பாராளுமன்றம் கடந்த திங்கட்கிழமை அரசியலமைப்பு சபை என்ற வகையில் கூடி அரசியலமைப்பு வரைபு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை விவாதிக்க ஆரம்பித்த சிலமணி நேரங்களில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய நல்லிணக்க மகாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய மகா நாடொன்றை விரைவில் கூட்டவிருப்பதாக அறிவித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பில் தப்பெண்ணத்தை உருவாக்கும் வகையிலான தவறான தகவல்களைத் தடுப்பதற்காக முன்னெடுக்க உத்தேசித்திருக்கும் மூன்று முக்கியமான செயன்முறைகளின் ஒரு …
-
- 0 replies
- 654 views
-
-
தேசிய இனங்களின் விடுதலைக்கு கற்றலோனியர்கள் முன்னுதாரமாணவர்களே! கற்றலோனியரின் தனிநாட்டுக் கோரிக்கை சர்வதேச மட்டத்தில் அதிக சர்ச்சைகளை தூண்டிவிட்டுள்ளது. சுயாட்சிக்குரித்துடைய அந்தஸ்த்தை அனுபவித்த கற்றலோனியர்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைக்க முயன்றனர். அதற்கான ஆதரவை தமது மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டாலும் உலக நாடுகளிடமிருந்து ஆதரவும் பெற வேண்டுமென்பதும் என்றுமே வலிமையான மூலக்கூறாக அமைந்துள்ளது. கற்றலோனியரின் தனிநாட்டுக்கான அணுகுமுறை எதிர்நோக்கியுள்ள பிரச்சனையை அலசுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும். முதலில் ஸ்பெயின் நாட்டின் அதிரடி முடிவுகளை அவதானிப்போம். கற்றலோனிய பிராந்திய நாடாளுமன்றத்தினை கலைப்பதாக ஸ்பெயின் பிரதமர் மரியானோ அறிவித்தார். ஸ்பெயினி…
-
- 0 replies
- 590 views
-
-
சுமந்திரனின் நோக்கத்தை நிறைவேற்றும் ‘சுரேஷ்’ எதிர்காலத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ், தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்- சுரேஷ் அணி) அறிவித்திருக்கின்றது. கடந்த சனிக்கிழமை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்த அறிவித்தலை வௌியிட்டார். 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எ…
-
- 0 replies
- 904 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது? http://epaper.virakesari.lk/
-
- 0 replies
- 368 views
-
-
தமிழ் அரசியலில் என்னதான் நடக்கிறது…? நரேன்- உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வருமா…?, வராதா…? என்ற பட்டிமன்றங்களுக்கு ஒரு மாதிரியாக விடை கிடைத்துள்ளது. இந்த தேர்தலில் அணிகள் மாறுமா…? அல்லது பழைய அணிகளே தொடருமா…? என்ற கேள்விகளுக்கு முழுமையாக பதில் கிடைக்காவிட்டாலும், ஒரளவுக்கு ஊகிக்கக் தக்க வகையில் சூழ்நிலை அமைந்திருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்காக அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 19 ஆவது திருத்தத்தின் போதும் அதன் பிறகு அண்மையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான சட்டதிருத்தங்களும் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அவை நிறைவேறுமா..?, நிறைவேறாதா…
-
- 0 replies
- 745 views
-
-
சிலுவை சுமக்கக் கடமைப்பட்டவர்கள் யார்? தமிழ் அரசியல் கைதிகளை, அரசாங்கம் விடுவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்குக் காரணமாக இருந்த தூண்டல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் மதியரசன் கிருஷாந்தி என்பவர், பகிரங்கமாக எழுதிய ஒரு கடிதமாகும். தன்னுடைய சகோதரர் ஒருவர், அரசியல் கைதியாக அநுராதபுரம் சிறைச்சாலையில், வழக்கு விசாரணையை எதிர்கொள்வதில் சந்தித்து வரும் நெருக்கடிகளை வெளிப்படுத்தி, அந்தக் கடிதத்தை, மதியரசன் கிருஷாந்தி எழுதியிருந்தார். மிகவும் உணர்வு பூர்வமாக எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில், தமிழ் அரசியல் கைதி ஒருவர…
-
- 0 replies
- 525 views
-
-
சம்பந்தன் பதவி துறக்க வேண்டும் 2004 ஏப்ரல் மாதம் முடிவுக்கு வந்திருக்க வேண்டிய யுத்தம் விடுதலைப்புலிகளின் பூரண செயலிழப்புடன் 2009 மே மாதம் வரை ஐந்து ஆண்டுகள் எவ்வாறு நீடித்தது? யுத்தத்தின் விளைவால் பல்வேறு இனங்களைச் சார்ந்த அப்பாவி பொதுமக்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கொல்லப்பட்டார்கள் என்பது இரகசியமல்ல. யுத்தம் முடிந்தவுடன் ஓர் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தால், தேசத்துரோகம் உட்பட பல்வேறு குற்றங்களுக்கு ஆளாகவேண்டியவர்கள் தாம் பெரும் வீரர்கள் என எடுத்துக்காட்ட மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. யுத்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 50- – 60 ஆ…
-
- 0 replies
- 669 views
-
-
புதிய அரசியல் யாப்பு தொடர்பான விவாதங்கள் சொல்லும் செய்தி என்ன? யதீந்திரா புதிய அரசியல் யாப்பு தொடர்பான பாராளுமன்ற விவாதங்கள் நிறைவுபெற்றிருக்கின்றன. வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை முன்வைத்து விவாதிப்பதாக கூறப்பட்ட போதிலும் கூட, ஒவ்வொருவரும் வழமையாக பேசுவது போன்றே பேசியிருக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பலர் பேசியிருந்தாலும் சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோரது உரையே கவனிப்புக்குரியது. சுமந்திரன் மிகவும் தர்க்க பூர்வமாக விடயங்களை பேசியிருக்கின்றார். சுமந்திரன் தனதுரையில் ஒரு புது வாதத்தை முன்வைத்திருக்கின்றார். 2015இல் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் போது நாட்டின் 97 சதவிகிதமான மக்கள் புதிய அரசியல் யாப்பு ஒன்றிற்கா…
-
- 0 replies
- 425 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M. A. சுமந்திரன் பங்குபெறும் நேரடி அரசியல் கலந்துரையாடல்.
-
- 1 reply
- 413 views
-
-
எவரும் அற்ற முஸ்லிம் சமுகம்! http://epaper.virakesari.lk
-
- 0 replies
- 364 views
-
-
கட்டலோனியா சுதந்திர பிரகடனம் சாதிக்குமா? சோதிக்குமா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) கட்டலோனியா மாநில அரசாங்கம் 27.10.2017 இல் தனிநாடாக சுதந்திரமான அரசாக பிரகடனம் செய்துள்ளமை உலகம் பூராகவும் இலத்திரனியல் ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும் தற்போதைய சூழ்நிலையில் பிரதான பேசுபொருளாக இடம்பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக ஐப்பசி திங்கள் முதலாம் திகதி கட்டலோனியா மாநில அரசாங்கம் அம்மாநில மக்களிடையே தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்வைத்து சர்வஜன வாக்கெடுப்பை நிகழ்த்தியது. அவ்வாக்கெடுப்பை ஸ்பெயின் மத்திய அரசு சட்டவிரோதமானது எனப் பி…
-
- 1 reply
- 531 views
-
-
அமெரிக்க போர்க்கப்பல்களின் படையெடுப்பு இலங்கையும் அணுஆயுத தாக்குதலுக்கு இலக்காகும் ஆபத்து இருப்பதாக, கடந்தவாரம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண, எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அணுவாயுத நாடான வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில், எந்த நேரத்திலும் போர் வெடிக்கக் கூடிய பதற்றமான சூழல் நிலவுகின்ற நிலையில் தான், அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். இலங்கையை அமெரிக்கப் படைகள் ஒரு தற்காலிக தளமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாலேயே இவ்வாறான எச்சரிக்கையை திஸ்ஸ விதாரண விடுக்க நேரிட்டது. அமெரிக்க கடற்படையின் நிமிட்ஸ் விமானந்தாங்கி தாக்கு…
-
- 0 replies
- 624 views
-
-
புதிய யுக்தி பயனளிக்குமா? இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்குரிய இறுதிச்சந்தர்ப்பம் இது மட்டுமன்றி இறுதி அரசாங்கமும், ஆட்சியும் இதுவாகத்தான் இருக்க முடியுமென்பது உணரப்படுமுண்மை. காரணம் இலங்கையிலுள்ள இரு பெரும்பான்மைக் கட்சிகள் ஒன்றுகூடி, ஆட்சி அமைக்கக்கூடிய இன்னுமொரு சந்தர்ப்பம் இலங்கை அரசியலில் உருவாகுமா? என்பது எதிர்பார்க்கக்கூடிய விடயமல்ல. புதிய அரசியல் சாசனத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு புதிய யுக்தியைக் கையாளப்போவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக காணப்படும் சில தவறான அபிப்…
-
- 0 replies
- 685 views
-
-
"ஒருமித்த நாடு" யோசனையை அகற்றுவதற்கு தீவர முயற்சி நீண்டகாலத்தின் பின்னர் நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டத்தை அடைவதற்கு கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பம் கைநழுவிப்போய்விடுமோ என்ற கேள்வி பரவலாகவே எழ ஆரம்பித்திருக்கின்றது. குறிப்பாக தென்னிலங்கையிலிருந்து சரியான தீர்வு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு முன்வைக்கப்படுமா என்று வரலாறு முழுவதும் இருந்துவரும் சந்தேகப் பார்வை மீண்டும் ஒருமுறை வலுப்பெற்றிருக்கின்றது என்று கூறலாம். அந்தளவுக்கு நிலைமைகள் பாரதூரமடைய ஆரம்பித்துள்ளன. அதாவது புதிய அரசியலமைப்பை கொண்டுவந்து அதனூடாக தேசிய இ…
-
- 0 replies
- 791 views
-
-
நியாயமான சந்தேகம் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய சுமந்திரன், பௌத்தத்திற்கு எதிர்ப்பில்லை என கூறியிருக்கின்றார். அவர் மட்டுமல்ல பௌத்த மதத்தை தமிழ் மக்கள் எவருமே எதிர்க்கவில்லை. பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பில் மேன்மையான இடம் வழங்கப்படுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. அதைத்தான் அவர்கள் எதிர்க்கின்றார்கள். அரசியலமைப்பு விடயத்தில் இது முக்கியமானதொரு பிரச்சினையாகும். இடைக்கால அறிக்கை தொடர்பிலான விவாதம் இனப்பிரச்சினை தீர்வுக்கான அரசியல் வரலாற்றில் அதிமுக்கிய நிகழ்வாகப் பதிவாகியிருக்கின்றது. ஆனால், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பிரச்சினைகளு…
-
- 0 replies
- 530 views
-
-
சாய்ந்தமருது - கல்முனை விவகாரம்: இயலாமையின் வலி தனித்துவ அடையாளம் என்றும் அபிவிருத்தியோடு சேர்ந்த உரிமை அரசியல் என்றும் பல வருடங்களாகப் பேசி வருகின்ற முஸ்லிம்களின் அரசியல் இயலாமை, கிழக்கில் மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகி இருக்கின்றது. வரலாற்றில் இருந்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதையும், அரசியலில் இன்னும் அவர்கள் பக்குவப்படவில்லை என்பதையும், மக்களை உசுப்பேற்றி விடுவதில் கைதேர்ந்த அளவுக்கு காரியம் முடித்துக் காட்டுவதில் அவர்களுக்கு ஆற்றல் கிடையாது என்பதையும், சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் வெளிக்காட்டியிருக்கின்றது. இங்கே இருக்கின்ற பிரச்சினை, சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்ச…
-
- 0 replies
- 542 views
-
-
மோட்சத்துக்கு வழிகாட்ட வேண்டியவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? அரசியல் என்பது வேறு, மதம் என்பது வேறு இந்நிலையில் அரசியலில் மதம் ஊடுருவுமானால் அது பல்வேறு சிக்கல்களையும் தோற்றுவிப்பதாகவே அமையும். எனவேதான் உலக நாடுகள் மதச்சார்பற்ற அரசியல் தொடர்பில் அழுத்தம் கொடுத்தும் கவனம் செலுத்தியும் வருகின்றன. அந்தவகையில் இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் மதத்துக்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பு நிலை காணப்படுகின்றது. மதகுருமார் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பல்வேறு விமர்சனங்களும் இருந்து வருகின்றன. மதகுருமார் அரசியலில் ஈடுபடுவது சரியானதா? தவறானதா என்று கேள்விக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
குழம்பிப் போயுள்ள வடக்கு அரசியல் புதிய கட்சிகளின் உருவாக்கம், உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள், ஏட்டிக்குப் போட்டியான விமர்சனங்கள், எதிர்கால முதலமைச்சர் யார் என்ற அனுமானங்கள் போன்றவை, வடக்கின் அரசியல் களத்தை மீண்டும் சுவாரசியப்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. அடுத்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் என இரண்டு தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. எனவே கொள்கை, கோட்பாடுகளுக்கு அப்பால், எல்லாக் கட்சிகளும், அதற்குத் தயாராக வேண்டிய நிலையில் உள்ளன. ஜனவரி மாதம் நடக்கவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் முறையில், மாற்றங்கள் அறிமுகமாக இருப்பதாலும், மாகாண சபைத் தேர்தலும் கூட, தொகுதிவாரி முறையுடன் கூடியதாக நடக்க இருப்பத…
-
- 0 replies
- 661 views
-
-
திருத்தப்பட வேண்டிய தவறுகள் இலங்கைத் தீவில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களில் கூடுதலானவர்கள், வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களே என்று சனத்தொகை, புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களே கடுமையான வறுமைச் சூழலுக்குள் சிக்கியுள்ளன. அதிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 18.2 சதவீதமான மக்கள், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய இது ஓர் அபாய அறிவிப்பே. சனத்தொகை, புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் இந்த மதிப்பீட்டுத் தகவலுக்கு முன்பே, இந்தப் பத்தியாளர் உள்படப் பலரும் செய்திகள், ஆய்வறிக்கைகள், பத்திகள், நேர்காணல்கள், கட்டுரைகள் மூலமாக,…
-
- 0 replies
- 590 views
-
-
இடைக்கால அறிக்கையில் என்ன இருக்கிறது? புதிய அரசமைப்பு ஒன்றை வகுப்பதற்காக அரசாங்கம், கடந்த வருடம், முழு நாடாளுமன்றத்தையும் அரசமைப்புச் சபையாக மாற்றியது. அதன் கீழ், பல்வேறு துறைகள் விடயத்தில் அரசமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களைச் சிபாரிசு செய்வதற்காக, ஆறு உப குழுக்களும் அவற்றுக்கு மேல், வழி நடத்தல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டன. அந்த ஆறு உப குழுக்களிலும் வழிநடத்தல் குழுவிலும் ஒன்றிணைந்த எதிரணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் அங்கம் வகித்தனர்; வகிக்கின்றனர். அந்தக் குழுக்களின் அறிக்கைகள், கடந்த நவம்பர் மாதம், வழிநடத்தல் குழுவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன. அவற்றை ஆராய்ந்த, …
-
- 0 replies
- 481 views
-
-
ஐ.நா நிபுணரின் அறிக்கையும் மக்கள் போராட்டங்களும் நரேன்- ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 வது ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற 2 வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. கால அவகாசம் வழங்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஐ.நாவின் நிலைமாறுகால நீதிக்கான விசேட நிபுணர் பப்லோ டி கிரீப் இரண்டு வார கால பயணம் மேற்கொண்டு இலங்கை விஜயம் செய்திருந்தார். ஏனைய நிபுணர்களைப் போல் அன்றி இவர் இந்த நாட்டின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை சரியாக படம் பிடித்து சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சந்தித்து தனது அவதானிப்புக்களையும் வெளிப்படுத்தி இருந்தார். அரசாங்கத்தின் அதியுச்ச அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முதல்…
-
- 0 replies
- 673 views
-
-
தமிழ்த் தரப்பின் மௌனமும் சுமந்திரனின் உரையும் கடந்த இரண்டு வருடங்களாக வடக்கு- கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெற்றுவந்த புதிய அரசமைப்பை முன்னிறுத்திய உரையாடல்கள், தற்போது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டன. சில அரசியல் பத்திகளுக்குள்ளும் ஒரு சில தொலைக்காட்சி விவாதங்களுக்குள்ளுமே ‘சேடம் இழுக்கும்’ நிலையில், புதிய அரசமைப்புத் தொடர்பில் தமிழ்த் தரப்பு பேசிக்கொண்டிருக்கின்றது. புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. இந்த விவாதத்தைத் தமிழ்த் தரப்பு அவ்வளவு கரிசனையோடு நோக்குவதாகத் தெரியவில்லை. தமிழ் ஊ…
-
- 1 reply
- 800 views
-
-
இடைக்கால அறிக்கையும் யதார்த்த நிலைமையும் – பி.மாணிக்கவாசகம்:- பதட்டமும் பரபரப்பும் மிக்க ஒரு சூழலில் ஆரம்பித்துள்ள புதிய அரசியலமைப்புக்கான விவாதம் எந்த வகையில் சென்று முடிவடையும் என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. அரசியலமைப்பு என்பது நாட்டின் வருங்கால ஆட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் செல்நெறியின் முதுகெலும்பாகும். எனவே, மிகுந்த பொறுப்போடும், நிதானமாகவும் நேர்மையாகவும் நாட்டு மக்கள் அனைவருக்கும் விசுவாசமான முறையிலும் அது உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய பொறுப்புணர்ச்சியுடன், அனைத்துத் தரப்பினராலும் இதற்கான முயற்சி முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான விவாதம் நடத்தப்படக…
-
- 0 replies
- 544 views
-
-
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? அடுத்த வருடத் தீபாவளியை (2018) நல்லதொரு தீர்வுடன், மன நிம்மதியாகத் தமிழ் மக்கள் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது என, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த, தீபாவளிப் பண்டிகை, அலரிமாளிகையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் தற்போதைய தலைவர் என்று கூறப்படும் சம்பந்தன் அவர்களின், மிக அண்மைய கண்டுபிடிப்பு இது ஆகும். இவ்வாண்டு தீபாவளியை மு…
-
- 0 replies
- 649 views
-
-
தமிழர்கள் பேசுவது இனவாதம் என்றால் சிங்களவர்கள் பேசுவது இனவெறியாகும் யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் கூறிய விடயங்களே இவ்வாறானதொரு கட்டுரையை எழுதத் தூண்டியது. அவர் தன்னை ஒரு ஓய்வு பெற்ற இராஜதந்திரியாக அடையாளப்படுத்திக் கொண்டார். இந்த யாழ்ப்பாணத்தான் இப்படித்தான். சும்மா இனவாதம் பேசிக் கொண்டிருப்பான். தமிழ் அரசியல் எண்றாலே இனவாதம்தானே! எங்கட ஆக்களிட்ட வேறு என்ன இருக்குது? இப்படியான நபர்களை எதிர்கொள்ளும் போது, அவர்களுக்கான ஆகச் சிறந்த பதில் மௌனம் மட்டுமே! ஆனால் தமிழர்கள் மத்தியில் இப்படியான ஒரு தரப்பும் உண்டு. தமிழ்ச் சூழலில் இடதுசாரிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோரில் சிலரும் இப்படிப் பேசுவதுண்டு. …
-
- 0 replies
- 1.4k views
-