அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
போராட்டத்தின் அவசியம் அரசியல் உரிமை சார்ந்த பிரச்சினைகள் காரணமாகவே, இந்த நாட்டில் தமிழ் மக்கள் போராடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். போராட்டம் என்பது அவர்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒரு விடயமல்ல. நாட்டில் உள்ள சக இனத்தவர்களுடன் சமநிலையிலான உரிமைகளோடு, ஐக்கியமாகவும், நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் என்பதே அவர்களுடைய ஆழ் மன விருப்பமாகும். அரசியல் உரிமை சார்ந்த பிரச்சினைகளாயினும்சரி, அதனையொட்டி கிளை பரப்பியுள்ள அடிப்படை உரிமைகள், அரசியல் பிரச்சினைகள், அன்றாடப் பிரச்சினைகளாயினும்சரி, தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்பதே இந்த நாட்ட…
-
- 1 reply
- 1k views
-
-
கலப்பு முறை கை கொடுக்குமா? உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் தொடர்பில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. கட்சிகள் இது குறித்து கலந்துரையாடி வருவதோடு வேட்பாளர் தெரிவிலும் கவனம் செலுத்தி வருகின்றமையையும் அறியக் கூடியதாக உள்ளது. இம்முறை உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் முதன் முறையாக கலப்பு முறையில் இடம்பெற உள்ளமையும் தெரிந்த விடயமாகும். இந்நிலையில் இக்கலப்பு முறையானது மலையக மக்களை பொறுத்தவரையில் எதிர்பார்த்த சாதக விளைவுகளை ஏற்படுத்தமாட்டாது என்று பரவலாக கருத்துக்கள் எதிரொலித்து வருகின்றன. மேலும் கலப்பு முறையிலான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் செல்வாக்கு உள்ளவர்களுக்கே வெற்றிவாய்ப்பு அதி…
-
- 0 replies
- 963 views
-
-
விதண்டாவாதத்திற்கும் விவாதத்திற்குமான நேரமல்ல – பி.மாணிக்கவாசகம் அனுராதபுரம் அரசியல் கைதிகளின் அடுத்த கட்டம் சிக்கல்கள் நிறைந்த ஒரு விடயமாகியிருக்கின்றது. இந்த சிக்கல்களில் இருந்து விடுபட்டு, எவ்வாறு அவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்பது தெளிவற்றதாகவே காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினைக்கு யார் தீர்வு காணப் போகின்றார்கள்? யாரிடம் இருந்து தீர்வைப் பெறுவது என்பது போன்ற கேள்விகள் இப்போது எழுந்திருக்கின்றன. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இராசதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று அரசியல் கைதிகளும், எட்டு வருடங்களாகச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு எதிரான வழக்குக…
-
- 0 replies
- 503 views
-
-
ஜனாதிபதியின் வடக்கு விஜயமும் நீதி கோரிய கறுப்புக்கொடி போராட்டமும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அரசியல் கைதிகள் பல தடவைகள் போராட்டங்களை முன்னெடுத்து இருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக சிறைச்சாலைகளுக்கு வெளியிலும் தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இருப்பினும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், அரசியல் கைதிகள் விவகாரம் கடந்த சில வாரங்களாக மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் தமது வழக்கு விசாரணைகளை வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அனுராதபுரத்திற்கு மாற்றுவதற்கு எத…
-
- 0 replies
- 490 views
-
-
ஈராக்கின் நெருக்கடி தொடர்கதையா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) ஈராக்கின் வடபகுதியில் அமைந்திருக்கும் குர்திஸ்தான் மாகாணத்தில் தொன்றுதொட்டு ஒரு தேசிய இனமாக வாழ்ந்த குர்தீஸ் இனமக்கள் ஓட்டமான் அரசாட்சிக்குப் பின்னர் தமக்குத் தனிநாடு வேண்டும் என்கின்ற அபிலாஷைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தினார்கள். அவர்களுடைய தனிநாட்டு முஸ்தீபுகள் சதாம் ஹுசைன் ஆட்சிக்கு முன்னரும், சதாம் ஹுசைன் ஆட்சிக்காலத்திலும் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட்டன. சதாமின் காலத்தில் குர்தீஸ் கிளர்ச்சிகளை அடக்குவதற்கு சதாமின் இராணுவம் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி கிளர்ச்சிகள…
-
- 0 replies
- 647 views
-
-
எச்சரிக்கை மணி ! தமிழ் மக்கள் தமது நீண்ட காலப் போராட்டத்தில் சமஷ்டி என்ற தீர்வை நோக்கியே நகர்ந்து வந்துள்ளனர். இடையில் ஏற்பட்ட ஆயுதப் போர் காலத்தில் தனி ஈழம் என்ற தீவிரப்போக்கு உண்டாக்கியதற்கான அடிப்படைக் காரணம் சமஷ்டி மறுக்கப்பட்டதன் எதிர்விளைவே. இன்றைய சூழ்நிலையில் அவற்றிலிருந்து இறங்கிவந்து பிளவுபடாத பிரிக்கப்படாத நாட்டுக்குள் (ஒருமித்த) அதிகாரப்பகிர்வை வேண்டி நிற்கின்ற போதும் அவற்றையும் இல்லாது ஆக்கும் நடவடிக்கையில் தென்னிலங்கை சமூகம் மும்முரம் காட்டுவது ஆத்திரத்தை ஊட்டுகிறது. புதிய அரசியல் யாப்பு இலங்கைக்கு ஆபத்தை கொண்டு வரவிருக்கிறது. நாடு பிரிந்து செல்வதற்குரிய வழிசமைத்துக் கொடுக்கப்போகிறது. மக்…
-
- 0 replies
- 474 views
-
-
திடிரென வந்து விழுந்த பேரிடி அரசாங்கம் இந்த அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்காகவும் பொறுப்புக்கூறல் பொறிமுறை அழுத்தத்திலிருந்து விலகிச் செல்வதற்காகவும் இந்த அரசியலமைப்பினை உருவாக்கும் பணியை முன்னெடுத்து வருகிறது. அதாவது அரசியலமைப்பை உருவாக்கி அதனூடாக ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்து விட்டால் அதனை சர்வதேசத்திற்கு காட்டி பொறுப்புக்கூறல் பொறிமுறையிலிருந்து ஏதோ ஒரு வகையில் விடுதலை பெறலாம் என அரசாங்கம் எண்ணுகிறது. இந்தப் பின்னணியிலேயே அரசாங்கம் பாரிய சிரத்தை யெடுத்து அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலிலேயே அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் அறிவிப்பு வெ ளியாகியுள்ளதுடன் அது அரசியலமைப்பை தயாரிக்கும் முயற்சியில் கடும் அதிர்ச்சியை…
-
- 1 reply
- 975 views
-
-
ஊழலால் உருவாகும் வறுமை; வறுமையால் வரும் வன்முறை ஒக்டோபர் 17 ஆம் திகதி உலக வறுமை ஒழிப்பு தினம் - நடராஜன் ஹரன் “உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டால், அங்கு அவரது மனித உரிமை மீறப்படுகிறது” என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர் சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் உலக வறுமை ஒழிப்பு தினம், 1987 ஒக்டோபர் 17 ஆம் திகதி உருவாக்கப்பட்டு, ஐ.நா சபையால் அங்கிகரிக்கப்பட்டது. உலக வாழ்க்கையை உருவாக்கிய மனிதர்களுக்கு, உலகத்தில் வாழவும் தெரிய வேண்டும்; உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication o…
-
- 0 replies
- 1.1k views
-
-
எத்தனை ஹர்த்தால்கள் அதிகமானவை? வடக்கு, கிழக்கில் - முக்கியமாக வடக்கின் யாழ்ப்பாணத்தில் - வாழ்ந்தவர்களுக்கு, ஹர்த்தால் என்ற இச்சொல், பெருமளவுக்குப் பழக்கமான ஒரு சொல்லாக இருந்து வந்திருக்கிறது. அவர்கள் எக்காலத்தில் இருந்தாலும், இதனுடைய தாக்கத்தை, உணர வேண்டிய நிலை காணப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தான், வடக்கில் கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தால், இது தொடர்பான எங்கள் பார்வையை மீளச்செலுத்த வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது. ஹர்த்தாலின் அதிகபட்சத் தாக்கத்தை, இறுதிக்கட்ட யுத்தத்தின் முனைப்புகள் தென்பட்ட 2005, 2006ஆம் ஆண்டுகளில், யாழ்ப்பாணம் அனுபவித்திருந்தது. படையினரின் வாகனங்கள் மோதி, பொதுமக்கள் பலியாகும் சந்தர்ப்பங்களில்…
-
- 0 replies
- 300 views
-
-
நெம்புகோல் தத்துவத்தை புரிந்து கொள்ளுமா கூட்டமைப்பு…? வசந்தன்- ஒரு சதாப்த காலமாக நடைபெற்று வரும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான தீர்வாக அவ்வப்போது இரு தரப்புக்கும் இடையில் உடனபடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு பின்னர் அதது சிங்கள பெரும்பான்மையினரால் கிழித்தெறியப்பட்மையே வரலாறு. ஒரு கட்டத்தில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக முழுமையாக தீர்வு இல்லாவிட்டாலும் தமிழ் தேசிய இனத்தின் தாயகக் கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டு இணைந்த வடக்கு, கிழக்கில் ஒரு மாகாணசபையும் உருவாக்கப்பட்டது. சிங்கள தேசியம் இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தையும் சீர்குலைப்பதில் முனைப்பு காட்டி அதில் வெற்றியும் பெற்றது. அதன்பின்னர் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்…
-
- 0 replies
- 616 views
-
-
அரசியல் கைதிகளை மறந்து மோதிக்கொள்ளும் அரசியல்வாதிகள் அநுராதபுர சிறைச்சாலையில், மூன்று அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், மூன்றாவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், அதை வைத்து அரசியல் நலன் தேடுவதற்காக இன்னொரு போராட்டமும், தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது. வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த தமது விசாரணைகள், திடீரென அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்தும், மீண்டும் தமது வழக்குகள் வவுனியாவிலேயே விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரியே, மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கடந்த 13ஆம் திகதி, வடக்கில் முழு …
-
- 0 replies
- 412 views
-
-
உளம் சார்ந்த பிரச்சினைகளால் வளம் குன்றும் மக்கள் ஆரோக்கியம் என்றால் என்ன? “நான் ஆரோக்கியமாக இருக்கின்றேன்” என ஒருவர் கூறினால், அது வெறுமனே உடல் சார்ந்த ஆரோக்கியமா? அதன் உள்ளார்ந்த பொருள் என்ன? ஆகவே, இது தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் பின்வருமாறு விளக்கம் தருகின்றது. ஆரோக்கியம் என்பது, நோயினால் பீடிக்கப்படாததும் இயலாமையில் இருந்து விடுபட்டதுமான நிலை மாத்திரமல்ல; ஒருவர் தம் உடல், உளம், சமூகம் மற்றும் ஆன்மீகத் தளங்களில், அடையக்கூடிய அதி உயர்ந்த நிலையே ‘ஆரோக்கியம்’ எனலாம். ஆரோக்கியம், மனிதனின் அடிப்படைப் பிறப்புரிமைகளில் ஒன்று ஆகும். இந்த வியாக்கியானத்தின் அடிப்படையில் தற்போது ஈழத் தமிழ் மக்கள் ஆரோக்கியமான …
-
- 0 replies
- 492 views
-
-
மைத்திரி- ரணில் அரசாங்கமும் தமிழ் அரசியல் கைதிகளும் ருத்திரன்- ஒரு சதாப்த காலமாக உரிமைக்காக போராடி வரும் தமிழ் தேசிய இனத்தின் ஆயுதவழிப் போராட்டமானது மௌனிக்கப்பட்டு 8 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்கள் முன்னுள்ள பிரச்சனைகனள் இன்னும் தீர்க்கப்படவில்லை. முன்னைய மஹிந்தா ஆட்சிகாலமாக இருந்தாலும் சரி, தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மை வாக்குளால் உருவான மைத்திரி – ரணில் கூட்டரசாங்கமாக இருந்தாலும் சரி அதனை தீர்ப்பதற்கு காட்டும் கரிசனை என்பது உளப்பூர்வமானதாக இல்லை. இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுதல் என்பது ஒருபுறமிருக்க, அவசியமானதும், அவசரமானதுமான பல பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய நிலையில்…
-
- 0 replies
- 372 views
-
-
மைத்திரியின் யாழ். வருகையும் எதிர்வினையும் புறக்கணிப்புகள், சத்தியாக்கிரகங்கள், ஊர்வலங்கள் என்பவற்றை மேற்கொள்வதற்கு என்று சந்தர்ப்பங்கள் உள்ளன. எடுத்ததற்கெல்லாம் அவற்றை செய்யப்போனால், அவற்றுக்குரிய மதிப்பும் பெறுமானமும் குறைந்துவிடும். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் என்னுடைய ஆட்சியில்தான் நடைபெறுகின்றன. முந்தைய ஆட்சியில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றிருந்தால், வெள்ளை வானில் வந்து பிடித்துக் கொண்டு சென்றிருப்பார்கள்”. கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‘ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்’ நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். வடக்கு மாகாண ஆளுநர் …
-
- 0 replies
- 610 views
-
-
யாழ்ப்பாணத்தில் அரங்கேறிய ‘பசில்’ நாடகம் சர்ச்சைக்குரிய விடயங்களைப் பற்றி, குறிப்பாக இன ரீதியாக, முக்கியமான விடயங்களைப் பற்றி அறிக்கையிடும் போது, ஊடகங்களின் நடத்தை, பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைக்குரியதாகி விடுகிறது. ஏனெனில், தேசிய கடமையை நிறைவேற்றி வருவதாகப் பறைசாற்றிக் கொள்ளும் பல ஊடகங்கள், தேசியளவில் மிகவும் முக்கியமான விடயங்களை மக்களிடமிருந்து மறைக்க முற்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் அவ்வாறு மறைப்பதில் அர்த்தம் இல்லை என்பது தெளிவாக இருக்கையிலும், அவை அச்செய்திகளை மறைக்கவே செய்கின்றன. உதாரணமாக, அண்மையில் உயர் நீதிமன்றம் வழங்கிய மிக முக்கிய இரண்டு தீர்ப்புகளை, ஊடகங்கள் எவ்வாறு கையாண்டன என்பதைச் சுட்டி…
-
- 0 replies
- 329 views
-
-
அனுராதபுரம் அரசியல் கைதிகளின் அடுத்த கட்டம் சிக்கல்கள் நிறைந்த ஒரு விடயமாகியிருக்கின்றது. இந்த சிக்கல்களில் இருந்து விடுபட்டு, எவ்வாறு அவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்பது தெளிவற்றதாகவே காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினைக்கு யார் தீர்வு காணப் போகின்றார்கள்? யாரிடம் இருந்து தீர்வைப் பெறுவது என்பது போன்ற கேள்விகள் இப்போது எழுந்திருக்கின்றன. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இராசதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று அரசியல் கைதிகளும், எட்டு வருடங்களாகச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு எதிரான வழக்குகள் கடந்த நான்கு வருடங்களான வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கா…
-
- 0 replies
- 773 views
-
-
தப்பிப் பிழைக்குமா தமிழ் தேசியக் கூட்டமைப்பு…? நரேன்- தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானதில் இருந்து அன்றைய மிதவாத கட்சிகளின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலும் அதன் பின்னர் வீட்டுச் சின்னத்திலும் தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றது. இந்தக் கூட்டமைப்பில் மிதவாத கட்சியும், ஆயுதப்போராட்ட அமைப்புகளும் அங்கத்துவம் வகிக்கின்றன. இவர்கள் அனைவருமே தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து போரடியவர்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பாக அணிதிரண்டு தேர்தல்களில் போட்டியிட்டதன் பின்னர் இணைந்த வடக்கு, கிழக்கில் ஒரு சமஸ்டி அரசியலமைப்பு முறையை உருவாக்கி அதன் மூலம் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சியை மேற்கொண்டிருந்தனர். இதனையே அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்…
-
- 0 replies
- 574 views
-
-
குப்பை மேட்டு கொள்ளிவால் பேய்கள் மட்டக்களப்பு மாநகர கழிவகற்றல் முகாமைத்துவமும் திருப்பெருந்துறை கிராமத்தின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் - ஒரு நேரடி றிப்போர்ட் “....... கொக்கட்டி மரத்துக்குக் கீழே முனிவர் ஒருவர் தவமிருந்தவராம். முனிவருக்கு யாரோ தீங்கு செய்ததாகவும், அந்த முனிவர சாபக்கேடால ‘கோதாவாரி’ என்று சொல்கின்ற அம்மைநோய் வந்து, கனக்கப்பேர் செத்து, குடிக்கத்தண்ணி இல்லாமல் ஆக்கப்பட்டு, எல்லாரும் திருவெந்தியன் மேடு, கல்லடித்தெரு, சிங்களவாடி- போய் குடியேறினதாக சரித்திரம் இருக்கிறது”. “இந்த இடப்பெயர்வுக்குப் பிறகு, மூன்று தினப் பூசையும் இல்லாமல் திருப்பெரும்துறை என்ற கிராமமே காடாகிப் போயிற்று; இதற்குரிய ஆதாரம் இ…
-
- 2 replies
- 1.4k views
-
-
முஸ்லிம் அரசியல்: சண்டையில் கிழியாத சட்டை யாரும் தவறாக நினைத்து விடுவார்களோ என்பதற்காகத் தமது கருத்துகளை, ஒளித்து வைத்திருப்பது, புத்திசாதுரியமான செயற்பாடு அல்ல; அப்படிச் செய்வது சந்தர்ப்பவாதத்தின் உச்சமமாகும். ஒரே நேரத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள், நம்மை நயவஞ்சகர்களாக மாற்றி விடக்கூடும். சொல்ல வேண்டிய விடயத்தைச் சொல்ல வேண்டிய தருணத்தில், சொல்லாமல் விடுவதென்பது, நமக்கு நஷ்டத்தையே கொண்டு வரும். புதிய அரசமைப்புக்கான செயற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழ் அரசியல் தரப்புகள், தமது சமூகம் சார்பில், தமக்கான தேவைகளை உச்சபட்சம் முன்வைத்துள்ளன. இலங்கையானது, மாகாணங்களின் அல்லது மாநிலங்களின் ஒன்றியமாக இருத்தல…
-
- 0 replies
- 932 views
-
-
அரசியல் கைதிகளின் போராட்டம் சொல்லும் செய்தி என்ன? யதீந்திரா அரசியல் கைதிகளின் விவகாரம் இதற்கு முன்னரும் பல தடவைகள் வீதிக்கு வந்திருக்கிறது. அதே போன்று இம்முறையும் வந்திருக்கிறது. வழமைபோல் தமிழ் அரசியல் வாதிகளது உருக்கமான அறிக்கைகளும், நாடாளுமன்ற போச்சுக்களும் முன்ரைப் போன்றே அதன் காரம் குறையாமல் வெளிவந்திருக்கிறது. அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பான செய்திகளை சக்தி தெலைக்காட்சி காட்சிப்படுத்தியிருந்தது. அதன் போது ஒரு விடுதலையான கைதி இவ்வாறு கூறுகின்றார். நாங்கள் முன்னர் போராடியபோது சம்பந்தன் ஜயா குறுக்கிட்டு எங்களுக்கான தீர்வை பெற்றுத் தருவதாக கூறியிருந்தார். ஒரு வேளை முடியாவிட்டால் நானும் உங்களோடு வந்து போராடுவேன் என்றும் கூறியிருந்தார…
-
- 0 replies
- 439 views
-
-
எங்கே செல்லும் இந்தப் பாதை? “வடக்கு மாகாணத்தில், தூரத்து இடங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் செல்ல மறுக்கும், வசதி குறைந்த பாடசாலைகளை மூடுவதுடன், நகர்ப் புறத்து பாடசாலைகளையும் ஆசிரியர்கள் வந்து செல்லக் கூடிய வசதிகள் உள்ள பாடசாலைகளையும் மட்டும் இயக்குவதே, ஆசிரியர்கள் வளப் பங்கீட்டுப் பிரச்சினைக்கான தீர்வு" என, வடக்கு மாகாண அமைச்சர் யோசனை தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை அமர்வில், அமைச்சர் இவ்வாறான ஆலோசனை பகர்ந்துள்ளார். மேலும் அமைச்சர், தான் சொன்னது என்னவென்று முழுமையாக ஆராய்ந்து பாராமல், நுனிப்புல் மேய்ந்து விட்டு, ஆசிரியர் சங்கங்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளன எனவும் மறுப்பு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். ஆனாலும் அமைச்சர் அவ்…
-
- 0 replies
- 648 views
-
-
பொருத்து வீட்டுத் திட்டத்தில் மறைமுக நிகழ்ச்சிநிரல் புலனாய்வு - நிர்மலா கன்னங்கர பொருத்து வீடுகளை நிர்மாணிப்பதற்காக, பிரான்ஸ் நிறுவனமொன்றுக்கு, சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தை வழங்குவதற்கு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சால் முன்மொழியப்பட்டுள்ள திட்டத்துக்குப் பின்னால், மறைமுக நிகழ்ச்சிநிரல் ஒன்று காணப்படுகிறது என்ற ஊகம், பரந்தளவில் ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில், போரால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படவுள்ள இந்தப் பொருத்து வீடுகள், அதிக செலவில், குறைந்த தரமுடைய பொருட்களைக் கொண்டு நிர்மாணிக்கப்படவுள்ளன என்ற கரிசனையும் ஏற்பட்டுள்ளது. குறை…
-
- 0 replies
- 436 views
-
-
யாழ். இளைஞர்கள் சோம்பேறிகள் என்ற புனைவு Ahilan Kadirgamar / சிறிது காலத்துக்கு முன்பு, போர் முடிவடைந்ததன் பின்பு, யாழ்ப்பாணச் சமூகம் பற்றித் திரும்பத் திரும்பக் கூறப்பட்ட ஒரு விடயமாக, அந்த மக்கள், எவ்வளவு கடின உழைப்பாளிகள் என்பதுவும் சிக்கனமாகச் செயற்படுவர்கள் என்பதுவும் மதிநுட்பம் கொண்டவர்கள் என்பதுவும் காணப்பட்டது. ஆனால் இன்று, யாழ்ப்பாணச் சமூகம், சோம்பேறித்தனமாக வந்துவிட்டது எனவும், ஊதாரித்தனமாகச் செலவுசெய்து, கடனில் மூழ்குகிறது எனவும் மக்கள் கதைப்பதைக் கேட்கக்கூடியதாக உள்ளது. யாழ்ப்பாணச் சமூகம், கடனில் சிக்கியுள்ளமை உண்மைதான், ஆனால், அவ்வாறான கடன் நிலைமை ஏற்படக் காரணங்கள் என்ன? கடந்த சில ஆண்டுகளுக்குள், ய…
-
- 0 replies
- 575 views
-
-
கூட்டு அரசினை வீட்டுக்கு அனுப்பல் கூட்டு எதிரணியின் தலையாய எண்ணம் ‘‘எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சகல பிரிப்புக்களையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன். எனது வாழ்நாள் பூராவும் நான் அதற்கு எதிராகப் போராடினேன். தற்போது மட்டுமன்றி எனது உயிர் பிரியும் வரை அதற்காகப் போராடுவேன்’’ என நெல்சன் மண்டேலா பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார். நூறு ஆண்டுகள் காலமாக ஐரோப்பாவின் குடியேற்ற நாடாகஇருந்த தென்னாபிரிக்க நாட்டில் நிலவிய அடிமைத்தன நிறபேதத்துக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய நெ…
-
- 0 replies
- 407 views
-
-
குண்டுச் சட்டிக்குள் ஓடும் தமிழ் அரசியல் குதிரைகள் நீங்கள் ‘விஐபி’யாக வேண்டுமா? யோசிக்காமல் அரசியலில் ஈடுபடுங்கள். அதிலும் போராட்டம், புரட்சி, காந்தி, காந்தியம், சேகுவேரா, பிடல், பிரபாகரன், புலிகள், தமிழ்த்தேசியம், சுயாட்சி, தனிநாடு, தமிழீழம், மாவீரர்கள், எரித்திரியா, தீபெத், கொசோவா என்று சில பெயர்ச் சொற்களைச் சொல்லத் தெரிந்து விட்டால்போதும்; உங்களுடைய காட்டில் மழைதான்....” என்று சொல்லிச் சிரிக்கிறார் நண்பர் ஒருவர். இந்த நண்பர், 28 ஆண்டுகள் போராளியாக இருந்தவர். அதிலும் விடுதலைப்புலிகள் அமைப்பில் 1980 களின் நடுப்பகுதியில் இணைந்து, 28 ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செயற்பட்டவர். போராட்டத்தின்போது, ஒரு காலை இழந்திருப்பவர். போரின் …
-
- 0 replies
- 441 views
-