அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9224 topics in this forum
-
ஓர் அரசியல்த் தீர்வை நோக்கித் தமிழ் மக்களை விழிப்பூட்ட வேண்டியதன் அவசியம் ஒளிப்படம்-அமரதாஸ் கடந்த திங்கட்கிழமை சம்பந்தர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்திருக்கிறார். இச் சந்திப்பின்போது யாப்புருவாக்கம் பற்றி கதைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரையாடலில் சம்பந்தர் அண்மை மாதங்களாக திரும்பத் திரும்பக் கூறிவரும் ஒரு விடயத்தை க்கதைத்திருக்கிறார். அதாவது அனைத்து இன மக்களினதும் பங்களிப்போடு உருவாக்கப்படும் ஒரு யாப்பு இதுவென்று மகிந்தவிற்கு சுட்டிக்காட்யிருக்கிறார். எல்லாவற்றையும் கேட்டபின் மகிந்த சாதகமாகப் பதிலளிக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மை வாரங்களில் சம்பந்தர் மகிந்தவைச் சந்தித்திருப்பது இது இரண்டாவது தடவை. அவ்வாறு சந்திக்…
-
- 0 replies
- 555 views
-
-
ஜனநாயகத்திற்கு வலுச்சேர்க்கும் உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளூராட்சி மன்றங்கள் குறித்து இப்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்தாது வெகுவிரைவில் நடத்த வேண்டுமென அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. உள்ளூராட்சி தேர்தல்களை பிற்போடுவதென்பது ஜனநாயகத்திற்கு முரணான செயலாகுமென்றும் கட்சிகளும், அமைப்புகளும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களை அதிகரிக்க தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து கோரிக்கைகளுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக கூட்டணி மார்தட்டி கொள்கின்றது. இது மகிழ்ச்சியான செய்திய…
-
- 0 replies
- 842 views
-
-
பாலஸ்தீன சுதந்திரநாடு உருவாகுமா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) இன்று ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டு எழுபது ஆண்டுகள் பூர்த்தி செய்த நிலையில் பலவித சாதனைகளை ஐ.நா. அமைப்பும் அதன் முகவர் நிலையங்களும் நிகழ்த்தியுள்ளன என்பதை பொது வெளியில் மறைக்கவோ மறுக்கவோ முடியாது என்பது யதார்த்தமானது. இரண்டு உலக யுத்தங்களை எதிர்கொண்டு மானிட இனம் அனுபவித்த இன்னல்களால் மீண்டும் ஒரு உலகயுத்தம் ஏற்படக் கூடாதென்ற அடிப்படையில் ஐ.நா. சபை தாபிக்கப்பட்டது. பிரதான நோக்கமாக சமாதானமும் பாதுகாப்புமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. எனினும் மூன்றாம் உலகமகா யுத்தம் உருவாகவில்ல…
-
- 1 reply
- 788 views
-
-
தற்போதைய தேவை என்ன !விழித்துக்கொள்ளுமா பேரவை? கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட், தமிழரசுக் கட்சி அதிருப்தியாளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பவற்றைக் உள்ளடக்கியதாகவும், கல்வியியலாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் என பல்துறை சார்ந்தவர்களையும் உள்ளடக்கிய மக்கள் இயக்கமாக தமிழ் மக்கள் பேரவை உருவெடுத்தது. இன்று அதன் உருவாக்கம் இரண்டாம் வருட முடிவை நோக்கி நகர்கிறது தமிழ் தேசிய இனம் தனது உரிமைக்காக ஒரு சதாப்த காலத்திற்கு மேலாக போராடி வருகின்றது. அகிம்சை வழியாக தமிழ் தலைவர்கள் போராடிய போது அப…
-
- 0 replies
- 567 views
-
-
20 ஆவது திருத்தமும் தமிழ்கூட்டமைப்பும் 18 ஆவது சீர்திருத்தத்தைக் கொண்டு வந்ததன் மூலம் மஹிந்த ராஜபக் ஷ மக்கள் ஆணையை மீறியுள்ளார். ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விட்டாரென்று போர்க்கொடி தூக்கியவர்கள் இன்று 20 ஆவது சீர்திருத்தத்தை மாகாண சபைகளில் நிறைவேற்றுவதற்காக யாசகம் கேட்கும் நிலை உருவாகியுள்ளது. வடமாகாண சபையின் தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கிறார் மஹிந்த. இது வடமாகாணத்துக்கு செய்யும் ஜனநாயகத் துரோகம் என விமர்சித்தவர்கள் மாகாண சபைகளின் ஆயுட் காலத்தை நீடிக்கக் கோரும் 20 ஆவது திருத்தத்தை ஆதரிக்கவும் அனுசரித்துப் போகவும் மறைமுகமாக, முன்னிற்பது எந்தவகை ஜனநாயகமாகும் என மக்கள் கேள்வி கேட்கும் அளவி…
-
- 0 replies
- 565 views
-
-
சம்பந்தனின் நகர்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை பல்வேறு ஊகங்களை வெளிப்படுத்தியிருக்கிறது. கடந்த புதன்கிழமை மாலை கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கின்றது. இரண்டு மணி நேரம் வரையில் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் இருதரப்பினருமே இரகசியத்தை பேணி இருந்தபோதிலும் அந்த தகவல் வெளியில் கசிந்ததையடுத்து சந்திப்பு தொடர்பில் இருதரப்பினரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சந்திப்பின்போது புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று தான் க…
-
- 0 replies
- 317 views
-
-
பாரம்பரியங்களும் சட்டங்களும் எதிர்காலமும் இந்திய வரலாற்றில் மாத்திரமல்ல, அண்மைக்கால உலக வரலாற்றிலும், மிக முக்கியமான தீர்ப்பொன்றை, இந்திய உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் வழங்கியிருக்கிறது. ‘முத்தலாக்’ என்று அழைக்கப்படுகின்ற விவாகரத்து முறை, இந்திய அரசமைப்புக்கு முரணானது எனவும், அந்நடைமுறையைத் தடை செய்வதாகவும், அந்நீதிமன்றம் அறிவித்தது. இது, மிகவும் முக்கியமான தீர்ப்பாக அமைந்தது. அதைவிட, எதிர்காலத்தில் பல முக்கியமான தீர்ப்புகளுக்கான முன்னோடியாகவும் கூட, இது அமையக்கூடும். இதனால்தான், இது பற்றியும் இதைப் போன்ற வேறு சில விடயங்கள் பற்றியும் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. ‘முத்தலாக்’ என்ப…
-
- 0 replies
- 326 views
-
-
கேற் குரோனின் பேர் மான் செவ்வாய் அதிகாலை பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவர் நாட்டை விட்டு சென்றுவிட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் அவரின் பயணம் திட்டமிடப்பட்ட ஒன்று என்று இலங்கை அரசாங்கம் பின்னர் அறிவித்திருந்தது. தூதுவர் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் அவர் புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்தக் காலகட்டமானது ஐயுறவை தோற்றுவித்திருக்கிறது. அதற்கு முதல் நாள் தூதுவர் ஜகத் ஜயசூரிய போர்க் குற்றங்களுக்கான பொறுப்பாக இருந்தார் என்று மனித உரிமைக் குழுக்கள் குற்றம்சாட்டி அவருக்கெதிராக குற்றவியல் முறைப்பாட்டை தாக்கல் செய்திருந்தன. ஜயசூரிய வேறு ஐந்து இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் தூதுவராக விளங்குகிறார். அவர் முன்னாள் இராணுவ ஜெனரல். 200…
-
- 0 replies
- 512 views
-
-
சரி, விஜயதாச போய்விட்டார்; ஊழல் போய்விடுமா? கடந்த வாரம், வடக்கிலும் தெற்கிலும் இரண்டு முக்கிய பதவி நீக்கங்கள் இடம்பெற்றன. தெற்கில், நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த 23ஆம் திகதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். வடக்கில், வட மாகாண போக்குவரத்து அமைச்சராகவிருந்த ப. டெனிஸ்வரன் அம்மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இருவருக்கும், அவர்களின் கட்சிகளால் தமது பதவியை இராஜினாமாச் செய்ய அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அவர்கள் பதவி விலகாததனாலேயே, பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகவும் ஒரே குற்றச்சாட்டையே அவர்களது க…
-
- 0 replies
- 440 views
-
-
பிராயச்சித்தம் கண்களைத் திறந்து கொண்டு குழிக்குள் விழுவதென்பது சில அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலையாகும். ‘குழி’ என்று தெரிந்து கொண்டே விழுந்து விட்டு, அதற்கான பழியை வேறொருவரின் தலையில் சுமத்தி விடுவதில், சில அரசியல்வாதிகள் விற்பன்னர்கள். குழிக்குள் தானும் விழுந்து, தான் சார்ந்த சமூகத்தையும் சேர்த்துத் தள்ளி விட்ட, அரசியல்வாதிகளும் நமக்குள் இல்லாமலில்லை. தங்கள் பலவீனங்கள் காரணமாக, அரசியல் எதிராளிகளிடம் சிக்கிக் கொள்கின்றவர்கள், பின்னர் எதிராளிகளின் மகுடிச் சத்தங்களுக்குப் படமெடுத்தாட வேண்டிய நிர்ப்பந்தங்களுக்குள் மாட்டிக்கொள்வதுண்டு. கண்களைத் திறந்து கொண்டு குழிக்குள் விழு…
-
- 0 replies
- 809 views
-
-
இருண்ட சூனியவெளிக்குள் அரசாங்கம் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக பதவி வகித்து வந்த விஜயதாச ராஜபக்ஷ, கடந்த வாரம் பதவி விலகியிருக்கின்றார். அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்புகளை அவர் தொடர்ந்தும் மீறி வருகின்றார் என்கிற குற்றச்சாட்டுகளை முன்வைத்தே, அவரை பதவி விலக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஐக்கிய தேசியக் கட்சி பரிந்துரைத்தது. தான் அங்கம் வகிக்கும் கட்சியே, தன்னை பதவி நீக்குமாறு பரிந்துரைத்தமை தொடர்பில், விஜயதாச ராஜபக்ஷ ஊடகங்களிடம் பெரும் சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. மற்றப்படி, தான் தனி ஆவர்த்தனம் செய்து வந்தமை தொடர்பில் அவர் வெளிப்படையாகவே இருந்தார். மறைமுகமாக பெருமையாகவும் உணர்ந்தார். மஹ…
-
- 0 replies
- 516 views
-
-
காணாமல் போனோருக்கான செயலகம் வெறும் கண்துடைப்பு நடவடிக்கையா? http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-30#page-22
-
- 0 replies
- 331 views
-
-
பிலிப்பைன்ஸ் - சீன பொருளாதார உறவு - ஜனகன் முத்துக்குமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பைன்ஸ், பிராந்திய வல்லரசான சீனாவின் தென் சீனக் கடல் எல்லை தொடர்பான ஆக்கிரமிப்புக்கு எதிராக, டேவிட் எதிர் கோலியாத் பாணியிலான வழக்கைதத் தொடுத்திருந்த போதிலும், பிலிப்பைன்ஸ் - சீன உறவானது அண்மைக்காலத்தில் சுமூகமான நிலையை அடைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறாக பிலிப்பைன்ஸ் தனது எதிர்ப்புக் கொள்கைகளைத் தளர்த்துவதற்கும் சீனாவுடன் இணைந்து போதலுக்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் சீனாவுடனான பொருளாதாரத் தொடர்புகளின் வகிபாகம் முக்கியமென பிலிப்பைன்ஸ் உணர்ந்தமையே காரணமாகும் என, அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பி…
-
- 0 replies
- 853 views
-
-
தத்தளிக்கும் பிள்ளையை தத்தெடுக்க தயாராவோம் - பா. சிவரஞ்சன் “பணி செய் அதற்கு பெயர் தவம். தன்னலமற்று மக்களுக்கு உழைக்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதை தாழ்வாக எண்ண வேண்டாம். அது தெய்வத்துக்குச் செய்யும் தொண்டு போன்றது” - சுவாமி விவேகானந்தர் குழந்தைகளை கடவுளின் பிள்ளைகள் என அழைக்கின்றார்கள். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள். ஆனால், அப்பேற்பட்ட பல குழந்தைகளும் சிறுவர்களும் தாயகத்தில் தற்போதும் அடுத்த வேளை உணவுக்கே தத்தளிக்கின்றார்கள். நாளாந்த பத்திரிகைச் செய்திகளில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான செய்திகள் இல்லாத நாட்களே இல்லை எனக் கூறலாம். …
-
- 0 replies
- 805 views
-
-
ஊழலில் சிக்கிக் கொண்ட அரசாங்கமும் விஜயதாசவும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, கடந்த 10 ஆம் திகதி, அப்பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தார். இப்போது, நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கும் ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்தில் இருக்க முடியாத நிலைமை உருவாகியிருக்கிறது. தமது அரசாங்கத்தில் உள்ளவர்களின் நெருக்குவாரத்தினாலேயே, அவர்கள் இந்த நெருக்கடி நிலையை எதிர்நோக்க வேண்டியதாயிற்று. உண்மையிலேயே, ரவி கருணாநாயக்க விவகாரமே, இம்முறை விஜயதாசவுக்கும் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு முன்…
-
- 1 reply
- 413 views
-
-
வன்னியிலும் வாகரையிலும் வாடும் மக்களுக்கு ஆதரவளிப்பது யார்? Co மாவை சேனாதிராஜா தலைமையில், தமிழரசுக்கட்சியின் அணியொன்று கனடாவுக்குப் பயணமாகியுள்ளது. இந்த அணியில், நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, வட மாகாணசபை உறுப்பினர் ஆனோல்ட், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான துரைராஜசிங்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கனடாவில் உள்ள தமிழரசுக் கட்சி அனுதாபிகள், அபிமானிகள், ஆதரவாளர்கள் போன்றவர்களை, இந்த அணியினர் சந்திக்கச் செல்வதாகவே, அதன் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கப்பால், அங்குள்ள த…
-
- 0 replies
- 527 views
-
-
சீனா வைக்கும் பொறி இலங்கையில் சீனாவின் முதலீடுகளுக்கு எதிராக உள்ளூரில் நடத்தப்படும் போராட்டங்களையிட்டு சீனா கவலை கொள்ளவில்லை என்று, சீன தூதுவர் யி ஷியான்லியாங் முன்பொரு தடவை கூறியிருந்தார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா வின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு, குத்தகைக்கு வழங்கும், உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்ட பின்னரே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார். மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட கூட்டு எதிரணியினரின் எதிர்ப்பையும் கூட சீனத் தூதுவர் பெரிய விடயமாக அப்போது எடுத்துக் கொண்டிருக்கவில்லை.…
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வருமா? பரபரப்பான அரசியல் காட்சிகள் திரைப்படத்தின் அந்த ‘க்ளைமாக்ஸ்’ காட்சி, தமிழக அரசியலில் அரங்கேறி விட்டது. சசிகலாவின் ஆதரவு பெற்ற 19 சட்டமன்ற உறுப்பினர்களை, ‘ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது’ என்று தமிழக சட்டப் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ஏழு தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கும் சபாநாயகர், கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின்படியான ஒரு நடவடிக்கையை முன்னெடுத்துச் சென்று, இப்போது இருக்கின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்தைத் தக்க வைத்து விட முடியுமா என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். …
-
- 0 replies
- 480 views
-
-
அமெரிக்க ஆட்சிமுறை ஆட்டம் காண்கின்றதா? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-08-27#page-8
-
- 0 replies
- 372 views
-
-
வளைகுடாவில் கட்டார் வளைந்து கொடுக்குமா? இலங்கையர்களாகிய நாம் கட்டார் என்னும் போது எம்மவர் தொழில் செய்யும் நாடு என்பது தான் ஞாபகத்துக்கு வரும். இலங்கையின் வடபகுதியைப் போன்று கட்டாரும் ஒரு குடாநாடுதான். அதன் ஒரே ஒரு தரை எல்லை சவூதி அரேபியாவுடனானதாகும். மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டது. தொன்று தொட்டு மீன்பிடித்தலுக்கு பெயர் போன நாடாகும். எழுபதுகளின் இறுதியில் அரேபிய எண்ணெய் வளநாடுகள் OPEC அமைப்பின் தோற்றத்தாலும் தீர்மானங்களாலும் செல்வந்த நாடுகளாக நிமிர்ந்தன. இதற்கு முன்னர் இந்நாடுகளின் எண்ணெய்வளம் ஐரோப்பிய, அமெரிக்க கம்பனிகளால் சுரண்டப்பட்டது. இவ்வாண்டு ஆனிமாதம் சவூதி அரேப…
-
- 1 reply
- 607 views
-
-
எஞ்சி உள்ள ஒரு வருடத்தை அமைதியாக கொண்டு செல்ல என்ன வழி? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-08-27#page-10
-
- 0 replies
- 341 views
-
-
மலையகமும் உள்ளூராட்சி மன்றங்களும் இவ்வாரம் பேசுபொருளாக தொடர்ந்து பல தரப்பினாலும் 'உள்ளூராட்சி மன்ற' விடயங்கள் பற்றி அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்களை விகிதாசார, வட்டார முறை என்ற கலப்பு முறையில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இது இவ்வாறிருக்க உள்ளூராட்சி தேர் தல்கள் சட்டமூலமும் பாராளுமன்றத்தில் ேநற்று 120 வாக்குகளால் நிறைவேற்று பட்டுவிட்டது. இது உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டமூலமே தவிர 'பிரதேச சபைக்கான திருத்த சட்டமூலம்' அல்ல. பிரதேச சபை திருத்தம் தொடர்பில் இன்னும் சரியான முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையி…
-
- 0 replies
- 722 views
-
-
முஸ்லிம்களின் இனவிகிதாசாரத்துக்கு ஏற்ப காணி இல்லை மரணித்த பிறகு, எல்லோருக்கும் அதிகபட்சம் ஆறடி நிலம்தான் சொந்தம். என்றிருந்தாலும், உலகத்தில் வாழ்கின்றபோது, தனிமனிதர்களும் குழுக்களும் அரசாங்கங்களும் நாடுகளும் நிலத்துக்காக நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. சர்வதேச அளவில் மண்ணுக்காக நடந்த யுத்தங்கள்தான் அதிகம். காணிப் பிரச்சினையும் நிலப்பற்றாக்குறையும் உலக அளவில் பொதுவாக எல்லா நாடுகளிலும் எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினை என்றாலும், இன, மத அடிப்படையிலோ அல்லது ஆளுகைக் கட்டமைப்பு ரீதியாகவோ வேறுபட்டுள்ள மக்கள் கூட்டத்தாரிடையே இந்நிலைமை தீவிரமாகக் காணப்படும். அந்த வகையில், இலங்கையிலும் காணிப்பிரச்சின…
-
- 2 replies
- 567 views
-
-
அரசியலமைப்பின் பராமுகம் மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் இந்த நாட்டில் அதிருப்தியுடன் வாழ்வதற்கு அரசியலமைப்பும் காரணமாக அமைந்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. சமகால அரசியலமைப்பும் கடந்தகால அரசியலமைப்பும் இதில் உள்ளடங்கும். பல்லின மக்கள் வாழுகின்ற ஒரு நாட்டில் அரசியலமைப்பு என்பது பக்கச்சார்பு இல்லாததாக காணப்படுதல் வேண்டும். எனினும் இலங்கையின் அரசியலமைப்புகளில் இந்த நிலையை காண முடியவில்லை. ஒரு இனத்தை, ஒரு மதத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைந்த அரசியலமைப்புகளினால் நாட்டின் ஐக்கியம், அபிவிருத்தி என்பன சீர்குலைந்துள்ளன. மக்களின் பிரச்சினைகள் நாளாந்தம் அதிகரித…
-
- 0 replies
- 2.3k views
-
-
பெளத்த மேலாதிக்கத்தில் தீர்வு சாத்தியமாகுமா? இன்றைய சூழலில் தமிழ் மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்துக்கும் அரசியல் மயப்பட்ட தீர்வொன்று காணப்பட வேண்டுமென்ற உண்மைநிலை அனைத்து தரப்பினராலும் உணரப்பட்டிருக்கின்றபோதும் அவற்றுக்கான சவால் எங்கிருந்து பிறந்து வருகிறதென்றால் மத பீடங்களிலிருந்து பிறந்து வருவதே ஜீரணிக்க முடியாத ஒரு விடயமாக காணப்படுகிறது. பௌத்த மதமென்பது இலங்கையில் ஒரு மதமாக மாத்திரம் பேணப்படுவதற்கு அப்பால் அரசியலை வழிநடத்தும் சூத்திரமாகவும் சிங்கள மொழியை காக்கும் காப்பாகவும் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. இதற்கு ஆதாரந்தான் இவ்வாரம் இடம்பெற்ற முக்கிய…
-
- 0 replies
- 573 views
-