Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சம்பந்தன் ஏன் ரவியை பாதுகாக்க போனார்? வெளிநாட்டு அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, அப்பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துவிட்டு, கடந்த வியாழக்கிழமை, நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக உரையாற்றினார். அப்போது, எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆற்றிய உரை, சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது. உண்மையிலேயே சம்பந்தன், பிரச்சினையின் அரசியல் மற்றும் தார்மிக அம்சங்களை மறந்து, சட்ட அம்சத்தை மட்டும் கருத்தில் கொண்டு உரையாற்றியதனாலேயே, அந்த நிலைமை உருவாகியது. ரவி கருணாநாயக்க, நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் கண்டு பிடிக்கும் வரை நிரபராதி எனச் சம்பந்தன் கூறினார். எல்லோருமாகக் கூடி, ஒருவரைத் தாக்கக் கூடாது என்ற…

  2. சம்பந்தன் இன்று வந்திருக்கும் இடம் கடந்த இரண்டு வாரங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருகின்றது. ஆனாலும், ஜனாதிபதியினால் அதற்கான நேரம் இன்னமும் ஒதுக்கப்படவில்லை. வடக்கில் இடம்பெற்ற சில வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து இடம்பெறும் கைதுகள் பற்றியும், புதிய அரசியலமைப்புப் பற்றியும் அவசரமாகப் பேசுவதற்காகவே மைத்திரியிடம் கூட்டமைப்பு நேரம் கேட்டிருந்தது. கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளையோ, குறைகளையோ கேட்பது என்பது மைத்திரி, ரணிலுக்கு மாத்திரமல்ல, தென்னிலங்கையிலிருந்து வருகின்ற அனைத்துத் தலைவர்களுக்கும் பெரும் ஒவ்வ…

  3. Started by நவீனன்,

    சவால் “நான் ஒரு திருடனல்ல” என்று, இந்த நாட்டிலிருக்கும் எத்தனை அரசியல்வாதிகளால் கூற முடியும் என்று, அமைச்சர் மனோ கணேசன் கேள்வியொன்றை முன்வைத்திருக்கின்றார். சில நாட்களுக்கு முன்னர் நிகழ்வொன்றில் உரையாற்றும் போது, இதை அவர் கேட்டிருந்தார். மேலும், தன்னால் அவ்வாறு கூற முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மனோ கணேசனின் கேள்வியிலுள்ள தீவிரத் தன்மையும் நையாண்டியும் கவனத்துக்குரியன. அரசியல்வாதிகளிடையே மலிந்து கிடக்கும், ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து, அதேதுறைக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவரின் சாட்சியமாகவும் இதைப் பார்க்க முடிகிறது. அரசியல் என்பது இப்போது, பெரும் வியாபாரமாக மாறிவிட்டது.…

  4. மஹிந்தவுடன் சேர்ந்தியங்க சம்பந்தன் ஆர்வமா? இலங்கையில் தமிழ்த்தரப்பின் எதிர்கால அரசியல் போக்கு நாட்டின் நலனுக்காகவும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்காகவும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து, செயற்படத் தயாராக இருப்பதாக, சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். ஜூலம்பிட்டியே மங்களதேரர் எழுதிய ஒரு நூல் வெளியீட்டில், கடந்த வாரம் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மிக நீண்டகாலத்துக்குப் பிறகு, சம்பந்தனும் மஹிந்த ராஜபக்ஷவும் ஒரு நிகழ்வில் இணைந்து கலந்து கொண்டிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் …

  5. சீனா: இந்திய - ஜப்பான் அணு ஆயுத ஒப்பந்தம் - ஜனகன் முத்துக்குமார் கடந்த ஆறு வருட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த, இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் ஒன்று, அண்மையில் கைச்சாத்திடப்பட்டது. உலக வரலாற்றில், முக்கியத்துவம் மிக்கதாக நோக்கப்படும் இந்த ஒப்பந்தம், இருதரப்பு பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை, அதிகரிக்க வசதி செய்வதற்கான, நடவடிக்கை என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும், இந்த உடன்படிக்கையானது, அமெரிக்க - இந்திய அணுசக்தி உடன்படிக்கையின் இணைப்பாகவே பார்க்கப்படுகின்றது. கடந்த வருடம், இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜப்பான் பிரதமர் ஷ…

  6. கொழும்பின் கைக்கு மாறும் மாகாணங்களின் மூக்கணாங்கயிறு http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-08-13#page-5

  7. முதலமைச்சரின் ஆட்டம் முடிவுக்கு வந்து விடுமா? கூட்­ட­மைப்­புக்கு விரோ­ த­மா­கச் சகல வகை­யி­லும் செயற்­பட்­டுக்­கொண்டு, நான் அந்த அமைப்­புக்கு எதி­ரா­ன­வன் அல்­ல­வென வடக்கு முத­ல­மைச்­சர் கூறு­வ­தைக் கேட்டு அழு­வதா? அல்­லது சிரிப்­பதா? எனத் தெரி­ய­வில்லை. இவர் இனி­யும் ஒன்­று­ம­றி­யாத அப்­பா­வி­போன்று வேடம் புனை­வது தேவை­யற்ற ஒன்­றா­கும். ஏனென்­றால் , அவ­ரது இரட்டை வேடம் ஏற்­க­னவே அம்­ப­ல­மாக்­கப்­பட்­டுள்­ளது. உயர்­நீ­தி­மன்ற நீதி­ப­தி­யாக இருந்த ஒரு­வர், ஒரு மாகா­ணத்­தின் முத­ல­மைச்­சர் பத­வியை ஏற்­ப­தென்­பது அவ­ருக்­குக் கௌர­வக் குறை­வான தொன்­றென நீதித்­து­றை­யு­டன் தொடர்­பு­பட்­ட­வர்­கள் கூறு­ கின்­ற­னர். …

  8. வடக்கில் தீவிரமடையும் பொலிஸ் கெடுபிடிகள் வடக்கு மாகா­ணத்தின் அர­சி யல் சூழலைப் போலவே, பாது­காப் புச் சூழலும், பர­ப­ரப்புமிக்­க­தா ­கவே மாறி­யி­ருக்­கி­றது. துன்­னாலை இளைஞன் பொலிஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் கடந்த மாதம் மர­ண­மான பின்னர், நல்­லூரில் நடந்த துப்­பாக்கிச் சூடு, கொக்­குவில் வாள்­வெட்டு மற்றும் சில வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள் என்று அடுத்­த­டுத்து நடந்த சம்­ப­வங்கள் குடா­நாட்டின் பாது­காப்புச் சூழலைக் கேள்­விக்­கு­றி­யாக்­கி­யி­ருந்­தன. கொக்­கு­விலில் பொலிஸார் மீது நடத்­தப்­பட்ட வாள்­வெட்டைத் தொடர்ந்து, ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரைக் கள­மி­றக்­கிய பொலிஸ் மா அதிபர், தொடர் சுற்­றி­வ­ளைப்­புகள், சோத…

  9. அம்பாந்தோட்டையில் சீனாவின் பிரசன்னம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-08-13#page-9

  10. பரபரப்புக்கு பஞ்சமில்லாத வடக்கு அரசியல் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகிப் போனது போல, வடக்கு மாகாணசபையின் அமைச்சரவை விவகாரமும் இப்போது, அதுபோன்றதொரு நிலைமைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறது. வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான, தமிழரசுக் கட்சியினரின் நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்துக்குப் பின்னர், அமைச்சரவையை மாற்றியமைப்பதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அக்கறை காட்டி வந்தார். அரசியல் குழப்பங்கள் தீர்க்கப்பட்டதை அடுத்து, அமைச்சரவையில் தனக்குச் சாதகமானவர்களை உள்ளீர்த்துக் கொண்டு, தன்னைப் பலப்படுத்துவதில் அவர் தெளிவான நிலைப்பாட்டில் இருந்தார். ஐங்கரநேசன் மற்றும் குருகுலராசா ஆகியோரின் பதவி வ…

  11. வடமாகாணசபையின் அடுத்த கட்டம்? – நிலாந்தன்:- கடந்த மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் ஒரு கூட்டம் நடந்தது. ஒரு மாற்று அணியைக் குறித்து சிந்திக்கும் தரப்புக்கள் அதில் பங்குபற்றின. அதே நாள் மாலை மேற்படி சந்திப்பில் பங்குபற்றிய அரசியற்கட்டுரை எழுதுபவர்கள் சிலரும், ஓர் ஊடகவியலாளரும் முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்தார்கள். அச்சந்திப்பை ஒழுங்குபடுத்தியவரும் அதில் பங்குபற்றினார். சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக சந்திப்பு நடந்தது. பலதைப் பற்றியும் உரையாடப்பட்டது. ஒரு மாற்று அணியைக் குறித்தும் உரையாடப்பட்டது. விக்னேஸ்வரன் மிகவும் வெளிப்படையாகப் பேசினார். ஐக்கியத்தைக் குலைப்பது இப்பொழுது நல்லதல்ல என்பதே அவருடைய பதிலின் சாரா…

  12. மஹிந்தவும் சம்பந்தனும் – நிக்ஸன்:- புதிய யாப்பு நடைமுறைக்கு வருதில் சிக்கல் ஏற்படலாம் என்ற எதிவு கூறலின் அடிப்படையில் 20ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்து மாகாண சபைகளை இலகுவாக கலைக்கும் அதிகாரத்தை நல்லாட்சி அரசாங்;கம்உருவாக்குகின்றதா? -அ.நிக்ஸன்- இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை அது பயங்கரவாத செயற்பாடுகள்தான் என்று அடித்துக் கூறிய முன்னாள் மஹிந்த ராஜபக்ச தொடர்ச்சியாக அந்த நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்பதை அவருடைய பேச்சுக்கள் காண்பிக்கின்றன. ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய காலம் முதல் இன்று வரை இனப்பிரச்சினை தீர்வுபற்றி எந்தவொரு இடத்திலும் எவுதும் பேசியதில்லை. இந்த நிலையில் அரசியல் தீர்வுக்கு மஹிந்த ராஜபக்ச ஒத்துழைப்பு வ…

    • 2 replies
    • 647 views
  13. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதித்தது என்ன? 2009 ஆம் ஆண்டு முள்­ளி­வாய்க்கால் பேர­வ­லத்­துடன் தமிழ் மக்­க­ளுக்­கான உரிமைப் போராட்டம் வேறு வடி­வத்தை பெற்­றி­ருந்­தது. கடந்த காலத்தில் அஹிம்சை ரீதி­யாக போரா­டிய தமிழ் தேசிய இனத்தின் கோரிக்­கை­க­ளையும், அபி­லா­ஷை­க­ளையும் தென்­னி­லங்­கையின் இரு பிர­தான கட்­சி­களும் கண்­டு­கொள்­ள­வில்லை. மாறாக தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட ஜன­நா­யக ரீதி­யான போராட்­டங்­களை அடக்­கு­வ­திலும், அவற்றை இழி­வு­ப­டுத்­து­வ­தி­லுமே கவனம் செலுத்­தி­யி­ருந்­தனர். இதன்­கா­ர­ண­மாக தென்­னி­லங்கை ஆட்­சி­யா­ளர்கள் மீது அதி­ருப்தி அடைந்த இளை­ஞர்கள் ஆயு தம் ஏந்திப் போராட வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. ஆய…

  14. இறங்கி வந்த ரவி இராஜினாமா உணர்த்துவது என்ன? ரொபட் அன்­டனி பல்­வேறு அர­சியல் சல­ச­லப்­பு­க­ளுக்கு மத்­தியில் ரவி கரு­ணா­நா­யக்க தனது வெளி­வி­வ­கார அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­தி­ருக்­கிறார். அழுத்­தங்கள், எதிர்ப்­புகள், விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தி­யிலும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டலாம் என்ற எதிர்­பார்ப்­பிலும் ரவி கரு­ணா­நா­யக்க தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­தி­ருக்­கிறார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி உரு­வாக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஸ்தாபிப்­பதில் முக்­கிய பங்­க­ளித்­தவர் என்ற வகை­யிலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது­வேட்­பா­ள­ராக…

  15. காலம் கடத்தும் சந்தர்ப்பம் பிறழ் நடத்­தைகள் கார­ண­மாக கட்­டுக்­க­டங்­காமல் அதி­க­ரித்துச் செல்­கின்ற குற்­றச்­செ­யல்­க­ளையும், சமூ­க­வி­ரோதச் செயற்­பா­டு­க­ளையும் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளாக உரு­வ­கப்­ப­டுத்தி, அதன் மூலம் பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முதன்­மைப்­ப­டுத்தி, இரா­ணு­வத்தின் வெளி­யேற்றம், இரா­ணு­வத்தின் வச­முள்ள காணி­களை விடு­வித்தல், உள்­ளிட்ட அவ­ச­ர­மாகத் தீர்க்க வேண்­டிய பிரச்­சி­னை­க­ளையும் அர­சியல் தீர்வு காணும் அவ­சி­யத்­தையும் புறந்­தள்ளி, காலம் கடத்­து­வ­தற்­கு­ரிய சந்­தர்ப்­பத்தை அர­சாங்­கத்திற்கு ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்கும் இந்த நிலை­மைகள் துணை­பு­ரியக் கூடும். வாள்­வெட்டுக் கு…

  16. அடக்குமுறையை நியாயப்படுத்திய போராட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிலும், அவர் அந்தப் பொறுப்பை சரியாக நிறைவேற்றுவதில்லை என்று சிங்கள மக்கள் மத்தியில், குறிப்பாகத் தெற்கிலுள்ள எதிர்க்கட்சிகள் மத்தியில், ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. அது முற்றிலும் பிழையான கருத்தும் இல்லை. நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமல்லாது, நாட்டில் முக்கியமான சகல விடயங்கள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சம்பந்தனும் அவரது கட்சியும் பொதுவாகத் தமிழ் அரசியல் கட்…

  17. அபிவிருத்தியை நோக்கி கட்டமைக்க வேண்டிய காலம்: வெற்றிடத்தை யார் நிரப்புவார்? குழப்பமான சிந்தனையுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகமாகவே தமிழ்ச்சமூகம் இருந்து கொண்டிருக்கிறது. முன்வைக்கப்படுகிற குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களைப்பற்றி யாரும் சிந்திப்பதாயில்லை என்ற கவலை அநேகமானோரிடம் இருக்கிறது. இருந்த போதிலும், அதை நிவர்த்திப்பதற்கு முயற்சிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். அதற்குக் கடந்த கால யுத்தம் காரணம். ஆனாலும், தொடர்ந்தும் அதையே சொல்லிக் கொண்டிருக்க முடியுமா என்பது குறித்தும் கவனத்தில் எடுக்க வேண்டும். ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பு முனைப்புகளும் போராட்டங்களும் குரோதமான கருத்து வெளிப்பட…

  18. வடக்கு முதலமைச்சரை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னேஸ்வரனை ஆதரித்தவர்கள் ஏமாற்றங்களைச் சந்தித்திருக்கின்றனர். எதிர்பார்ப்புகளுடனேயே தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மைத்திரி – ரணில் (சு.க – ஐ.தே.க) கூட்டு முன்னணிக்குக்கு ஆதரவளித்திருந்தனர். ஆனால் இந்த மக்களிடத்திலே பாதுகாப்பற்ற மனநிலையும் பதற்றங்களுமே அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்கே முடியாத நிலையில்தான் அரசாங்கம் இருக்கிறது. பொதுவாகவே சிறுபான்மைத் தேசிய இனங்கள் குறித்த உயர்வான – சரியான எண்ணம் இந்த அரசாங்தத்தின் மனதிலும் உருவாகவில்லை. …

  19. காந்திகளுக்குச் சோதனைக் காலம்? இந்திய அரசியலில், தவிர்க்கப்பட முடியாத ஓர் அங்கமாக, நேரு - காந்தி அரசியல் வரலாறு காணப்படுகிறது. காந்தி என்ற பெயரைக் கேட்டதும், மகாத்மா காந்தி தான் ஞாபகத்துக்கு வந்தாலும், இந்தக் காந்திகளும், சிறிதளவுக்கும் குறைவான தாக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. தற்போதைய நேரு - காந்தி பரம்பரையின் மூத்தவராக, மோதிலால் நேரு காணப்படுகிறார். இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் அங்கமாக இருந்தவர். காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தவர். இவர் வழியில் போராடிய ஜவஹர்லால் நேரு, அதே காங்கிரஸின் தலைவராக இருந்ததோடு மாத்திரமல்லாது, பின்னர் சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராகவும் மாறினார். இவரைத் தொடர்ந்து தான், நேர…

  20. பாப்பரசர்: ஆண்டகையின் அரசியல் அரசியலில் மதமும், மதத்தில் அரசியலும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்தவை. இவ்விரண்டுக்கும் இடையிலான உறவு, உலக வரலாற்றின் திசைவழியில் தவிர்க்கவொண்ணாச் செல்வாக்குச் செலுத்தியது. சிலுவைப் போர்களில் தொடங்கி, புனிதப் போர்கள் வரை, இலட்சக்கணக்கானோரைக் காவு கொண்ட பெருமையும் இவ்விரண்டுக்கும் இடையிலான உறவுக்குண்டு. இன்றும், அரசியலில் மதத்தின் செல்வாக்கு இருக்கிறது. அது ‘நாகரிகமடைந்த’ ஜனநாயக நாடுகள் தொட்டு, ‘நாகரிகமடையாத’ மூன்றாமுலக நாடுகள் வரை அனைத்துக்கும் பொருந்தும். கடந்த மாதம் 30 ஆம் திகதி, வெனிசுவேலாவில் நடைபெற்ற அரசமைப்புச் சபைக்கான தேர்தலில், ஹியுகோ சாவேஸின…

  21. தென்னாசிய வட்டகை ஆதிக்கப் போட்டியில் இந்தியாவும் சீனாவும் 1987 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24 ஆம் திக­திய நடா­ளு­மன்ற அமர்வு கடும் வாதப் பிர­தி­வா­தங் கள் மத்­தி­யில் சூடு பிடித்திருந் தது. அந்த வேளைய அரச தலை­வர் ஜே.ஆரின் தலைமை யிலான ஐ.தே.கட்சி அரசு, இந்­தி­யா­வு­டன் செய்து கொள்ள விருந்த ஒப்­பந்­தம் குறித்த விவ ரங்­களை நாடா­ளு­மன்­றத்­துக்­குத் தெரி­விக்க வேண்­டு­மென எதிர்க்­கட்­சி­யி­னர் சபை­யில் கடும் வற்­பு­றுத்­தல் மேற்­கொண்­ட­னர். நில­மை­யைச் சமா­ளிக்­கும் நோக்­கில் அரசு நாடா­ளு­மன்ற அமர்வை ஓகஸ்ட் 18 ஆம் திக­தி­வரை ஒத்­தி­ வைத்து எதிர்க்­கட்­சி­யி­ன­ரது எதிர்ப்­பைத் தற்­கா­லி­க­மாக முறி­ய­டித்­தது. நான்கு நாள்­கள் கழித்து ஜுலை 28…

  22. தமிழரசுக் கட்சியின் தீர்மானம் – செல்வரட்னம் சிறிதரன் வடமாகாண சபையின் அமைச்சரவை விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுப்பதற்கான நிலைமையை நோக்கி நகர்ந்திருக்கின்றது. அமைச்சர்களை மாற்றி புதிய அமைச்சர்களை நியமிப்பதற்காக முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்துள்ள தீர்க்கமான முடிவுகளே இதற்குக் காரணம் என தமிழரசுக்கட்சியினர் குற்றம் சுமத்தியிருக்கின்றனர். பிடிவாதப் போக்குடனும், தமிழரசுக் கட்சிக்கு அமைச்சர் பதவியை வழங்குவதில் பழிவாங்கும் நோக்கத்துடன் முதலமைச்சர் நடந்து கொள்வதாகக் குறிப்பிட்ட தமிரசுக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சரவையில் தாங்கள் எவரும் பதவி ஏற்பதில்லை என ஏகமனதாகத் தீர்மானித்திருக்கின்றனர். …

  23. தமிழரசுக் கட்சியையும் விக்னேஸ்வரனையும் பிடித்திருக்கும் கோளாறு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண அமைச்சரவையில் அங்கம் வகிப்பதில்லை என்கிற முடிவுக்குத் தமிழரசுக் கட்சி வந்திருக்கின்றது. அதன் பிரகாரம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த மருத்துவர் ப.சத்தியலிங்கம், தன்னுடைய பதவியிலிருந்து நேற்றுமுன்தினம், திங்கட்கிழமை விலகியிருக்கின்றார். தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்று, நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள அனந்தி சசிதரன், தமிழரசுக் கட்சியின் அனுமதியில்லாமலேயே முதலமைச்சர் விக்னேஸ்வரனால் அண்மையில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அனந்தியைத் தமது கட்சி ச…

  24. குற்றத்தைக் கண்டும் காணாமல் இருப்பது பாவத்துக்கு நிகர் நல்லாட்சி என்பது, உலக வங்கியின் எண்ணக் கருவாகும். 1989ஆம் ஆண்டு, இந்த எண்ணக் கரு, முதன் முதலாகப் பயன்பாட்டுக்கு வந்தது. ஆபிரிக்க நாடுகளின் ஆட்சி நெருக்கடியை அடையாளப்படுத்துவதற்காக அது பயன்படுத்தப்பட்டது. இந்த எண்ணக்கருவானது, 1990களில் நன்கொடை அமைப்புகளினதும் நாடுகளினதும் முக்கிய கவனத்தைப் பெற்றது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், 1990களின் நடுப்பகுதியில் இந்த எண்ணக்கருவின் உள்ளடக்கத்தை விருத்தி செய்தது. ஐ.நா சபை 1992ஆம் ஆண்டு வெளியிட்ட, ‘ஆட்சியும் அபிவிருத்தியும்’ எனும் ஆவணத்தில் இந்த எண்ணக்கரு மேலும் தெளிவுபடுத்தப்பட்டது. …

  25. அ.தி.மு.க அரசியல்: பிரதமர் நரேந்திர மோடி விரும்பும் ராஜீவ் வழிமுறை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளை; இன்னொரு புறம், திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா; மூன்றாவது பக்கம், திராவிடக் கட்சிகள் தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்த, பொன் விழா ஆகும். ஆனால், இந்த விழாக்களை எல்லாம், இப்போது அ.தி.மு.கவுக்குள் நடந்து கொண்டிருக்கும் ‘பேட்டிப் போர்’ மற்றும் ‘அறிக்கைப் போர்’ ஆகியன மிஞ்சி விட்டன. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை, ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாடிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, இது எதிர்பாராத சோதனை. ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்கொண்டு வந்த எடப்பாட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.