அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9222 topics in this forum
-
மகிந்தாவுக்காக பேசும் மகாசங்கம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-09#page-11
-
- 1 reply
- 334 views
-
-
இலங்கையின் சக்தி வாய்ந்த பௌத்த மத பீடங்களான சியாம், அமரபுர, ராமாண்ய ஆகிய மூன்றும், இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பொன்று தேவையில்லை என்று, ஒரு மனதாக தீர்மானித்திருக்கின்றன. மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் யோசனையையும் மாகாநாயக்கர்கள் நிராகரித்திருக்கின்றனர். இந்த நிலையில், புதிய அரசியல் யாப்பு தொடர்பான எதிர்பார்ப்புக்கள் மீது ஒரு பெரிய கேள்விக் குறி விழுந்துள்ளது. சிங்கள அரசியல் என்பதும், சிங்கள பௌத்தம் என்பதும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றே. இதுவே இத்தீவின் சிங்கள அரசியல் வரலாறு. இந்த வரலாற்றுப் போக்கை முன்னிறுத்தி சிந்தித்தால் தற்போது, மகாநாயக்கர்கள் நிறைவேற்றியிருக்கும் தீர்மானம் தொடர்பில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தெற்கின் அரசியல் விகாரைகளுடன் பின்னிப்பிணைந்து க…
-
- 0 replies
- 501 views
-
-
பௌத்த பீடங்களின் நிலைப்பாடும் சு.கவின் சூழ்ச்சியும் தேசியப் பிரச்சி னைக்கு அரசியல் தீர்வு என்றொரு வேலைத் திட்டம் என்று தொடங்கப்பட்டதோ, அன்றிலிருந்தே அதற்கான எதிர்ப்பும் சமாந்தரமாகத் தொடங்கப்பட்டுவிட்டது.அந்த இரண்டும் இன்றுவரை சமாந்தரமாகவே பயணித்துக்கொண்டு இருக்கின்றன.இதனால் அந்த எதிர்ப்பை இலகுவில் முறியடிப்பதற்கோ அல்லது அரசியல் தீர்வை உடனடியாக வழங்குவதற்கோ முடியாமல் இருக்கின்றது. ஆட்சிக்கு வருகின்ற அரசுகள் அரசியல் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதும், அந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள்-,பேரினவாதிகள் முட்டுக்கட்டைகளாக இருப்பதும் இன்று வரை…
-
- 0 replies
- 336 views
-
-
தேவையற்றதாக மாறி விட்டதா வடமாகாண சபை? இந்தியத் தூதுவர் புத்திமதி கூறும் அளவுக்கு வடக்கு மாகாணசபையின் ஒற்றுமை சந்தி சிரிக்க வைத்துள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்தியத் தூதர் தரன்ஜித்சிங்º, வடக்கு முதலமைச்சரையும் சந்தித்து உரையாடியுள்ளார். இதன் போதே வடக்கு மாகாண சபையில் ஒற்றுமையாகச் செயற்படுமாறும், அப்போது தான் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும், வடக் கின் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் முன்னேற்றத்தைக் காணமுடியுமெனவும், முதலமைச்சருக்கு இந்தியத்தூதுவர் அறிவுரை கூறியுள்ளார். ஆனால் தன்னிச்சையாகச் செயற்…
-
- 0 replies
- 439 views
-
-
சோதனைக்களம் தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக புதிய அரசிய லமைப்பில் அரசியல் தீர்வு கிட்டுமா என்பது சந்தேக மாக உள்ள நிலையிலேயே புதிய அரசியலமைப்பும் அவசி யமில்லை. அரசியலமைப்புத் திருத்தமும் தேவையில்லை என்ற பௌத்த மத பீடத் தலைவர்களான மகாநாயக்கர்களின் கருத்து வெளியாகியிருக்கின்றது. மகாநாயக்கர்களின் இந்தக் கருத்தானது, அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியை ஆட்டம் காணச் செய்திருப்பதைப் போலவே கூட்டமைப்பின் தலைமையையும் அதிர்ச்சிக்கும் தவிப்புக்கும் உள்ளாக்கியிருக்கின்றது. புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்புக்கான திருத்தமோ இப்போது அவசியமில்லை என்று பௌத்த மகாசங்க…
-
- 0 replies
- 641 views
-
-
புஷ்வாணமாகிப்போகும் தமிழர்களின் எதிர்பார்ப்பு http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-08#page-3 புஷ்வாணமாகிப்போகும் தமிழர்களின் எதிர்பார்ப்பு ரொபட் அன்டனி "பதவியில் இருக்கின்ற அரசாங்கத்துக்கு உண்மையிலேயே இந்தப்பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்ற அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு காணப்படின் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை. இதற்கு அரசியல் தலைமையிடம் அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு இருக்கவேண்டும்" – மூத்த ஊடகவியலாளர் அமல் ஜயசிங்க தமிழ் மக்களின் அரசியல் ரீதியான அபிலாஷைகள் மற்றும் நியாயமான அதிகாரங்கள் அது தொடர்பான எதிர்பார்ப்புகள் என்பன மீண்டுமொருமுறை புஷ்வாணமாகிவிடும் நி…
-
- 0 replies
- 422 views
-
-
காலதாமதமும் காத்திருப்பும் – செல்வரட்னம் சிறிதரன் காணாமல் போனோருக்கான செயலகச் சட்டம் திருத்தத்துடன் நாடாளுமன்றத்தி;ல் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் காணாமல் ஆக்கப்பட்;டவர்களின் உறவினர்கள் அந்தச் சட்டத்தை ஏற்கப்போவதில்லை என தெரிவித்திருக்கின்றார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என கோரி நூறு நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்ற உறவினர்களே இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றார்கள். நிலைமாறுகால நீதிக்கான …
-
- 0 replies
- 402 views
-
-
தளர்வடையும் வடபகுதி மீதான நம்பிக்கை கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின்போது மே 18 ஆம் திகதி வடக்கில் பதற்றத்தை ஏற்படுத்தும் நாளாயிருந்தது. அத்தினத்தில் முன்னைய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் வென்றெடுத்த நாளாக கொண்டாடுகையில் வடபகுதி போரில் உயிரிழந்தவர்களுக்காக அவர்களது உறவினர்களும் நண்பர்களும் அப்பகுதியில் பொது துக்க அனுஷ்டானங்களை மேற்கொள்வதனை தடையும் செய்திருந்தது. யுத்தம் முடிவுற்றதாகக் கருதப்படும் மே 18 ஆம் திகதி யன்று முள்ளி வாய்க்காலில் இடம்பெறவிருந்த நினைவு தின அஞ்சலியை நிறுத்துமாறு நீதிமன்றத்திடம் பொலிஸார் பெற்றிருந்த தடையுத்தரவினால் அது வடபகுதியில் பொதுமக்களது கவனத்தை பெருமளவு ஈர்த்து சஞ்சலப்படுத்தியிருந்தது. ஆனால் அதில் நினைவஞ்சலி தடைய…
-
- 0 replies
- 498 views
-
-
இந்தியா - சீனா: எல்லையில்லா எல்லைகள் எல்லைப்பிரச்சினைகள் எப்போதும் சிக்கலானவை. இரண்டு வீட்டாருக்கிடையேயான எல்லைப் பிரச்சினைகளே தீராத பகையாகி தலைமுறைகள் தாண்டி நிலைத்திருக்கிறபோது, நாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்சினைகளின் தன்மைகளைச் சொல்லவேண்டியதில்லை. எல்லைப் பிரச்சினைக்கு எல்லையில்லை; அது எவ்வகையான வடிவத்தையும் தன்மையையும் எடுக்கவியலும். இதுதான் எல்லைகளின் எல்லையில்லாத தன்மை. நாடுகளுக்கிடையிலான எல்லை தொடர்பான சிக்கல் அதன் புவியியல் தன்மைகளுக்கும் மேலாக, அயலுறவுக் கொள்கை, தேசிய அரசியல், வரலாற்றைத் திரித்தல் போன்ற பல காரணங்களுக்காக தீர்ப்பதற்கு கடினமானதாகியுள்ளது. 1962 இல் நடந்து முடிந்த இந்திய-சீனப் போருக்குப் பின்னர், இந்திய-…
-
- 0 replies
- 886 views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அருணாசலம் தங்கத்துரை அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் ஆகின்றன. அவரது படுகொலை நடைபெற்ற போது நான் 7ஆம் வகுப்பிலே யாழ்ப்பாணத்திலே படித்துக்கொண்டிருந்தேன். படுகொலைக்குச் சில நாட்களுக்கு முன்னர் தான் இடப்பெயர்வினை அடுத்து வவுனியாவில் ஒன்றரை வருட காலம் வாழ்ந்த பின்னர் மீளவும் திருகோணமலை ஊடாகக் கப்பலிலே யாழ்ப்பாணம் வந்தடைந்திருந்தேன். திருகோணமலையில் உள்ள சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பாடசாலை மாணவிகள் பார்த்துக்கொண்டிருக்கும் போது இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அப்போதைய அதிபர், நாமகள் வித்தியசாலை அதிபர் உள்ளடங்கலாக வேறு சிலரும் கொல்லப்பட்டனர். இந்தச் சம…
-
- 0 replies
- 586 views
-
-
நீரும் நெய்யும்போல் நவாலி - பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன் நவாலிக் கிராமத்தின் சிறப்புகள் குறித்து, பாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வரலாற்றுத்துறைத் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் கருத்துரைக்கும் போது கூறியதாவது: “மேலைத்தேய கலாசாரத்தை உள்வாங்கிய அதேவேளை, பாரம்பரிய கலாசார அம்சங்களைப் பேணிக்கொள்ளும் ஒரு கிராமமாக நவாலி காணப்படுகின்றது. வடபகுதியில் இருந்த யாழ்ப்பாண இராசதானி காலத்தில் வௌியிடப்பட்ட நாணயங்கள் பெருமளவில் நவாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஓர் இடமாக, நவாலி காணப்படுகிறது. அதுமட்டுமல்ல, பொலன்னறுவை இராசதானி கால வணிக நடவடிக்கைகள் நடைபெற்ற ஓர் இடமாகவும் நவாலி இருந்துள்ளதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு சிறப்புகள…
-
- 1 reply
- 1.9k views
-
-
டொனால்ட் ட்ரம்ப்பின் ஊடக மோதல்கள் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைப் பற்றி, வேறு மாதிரியான எதிர்பார்ப்புகள் பல இருந்திருந்தாலும், அவரது முழுமையான இயல்பு பற்றிய முழுமையானறிவு இருந்திருக்காவிட்டாலும், வழக்கமான ஜனாதிபதிகளைப் போல் அவர் இருப்பார் என, எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவரை எதிர்த்தவர்களும் ஆதரித்தவர்களும், இந்த விடயத்தில் ஒற்றுமையை வெளிப்படுத்தியிருந்தனர். வெற்றிபெறுவார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஹிலாரி கிளின்டனைத் தோற்கடித்து, நாட்டின் ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்று, 6 மாதங்கள் தாண்டியிருக்கின்றன. அவரது பதவிக்காலத்தில் இதுவரை அவர் ஆற்றியுள்ள பணிகள் தொடர்பாக, முரண்பாடான கருத்தே நிலவுகிற…
-
- 0 replies
- 386 views
-
-
இலங்கை தமிழ் தேசியவாத அரசியலின் தோல்வி! அகிலன் கதிர்காமர் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மீது, வடக்கு மாகாண சபையின் ஒரு பிரிவினர் கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் இலங்கைத் தமிழ்த் தேசியவாத அரசியலில் ஆழமான பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில், ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இரண்டு அமைச்சர்களை ராஜினாமா செய்யச் சொல்லி முதல்வர் விக்னேஸ்வரன் கோரியிருந்தார். மேலும், இருவரைக் கட்டாய விடுப்பில் செல்லுமாறும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்துதான் இந்தச் சிக்கல் எழுந்திருக்கிறது. இதற்கிடையே தமிழ்த் தேசியவாதக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, விக்னேஸ்வரன் தொடர்ந்…
-
- 0 replies
- 673 views
-
-
அரசியலாக்கப்படும் இரத்ததானம் http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-05#page-22
-
- 0 replies
- 311 views
-
-
தமிழ், முஸ்லிம் இன அடையாள கட்சிகளின் செல்வாக்கில் வீழ்ச்சி? வடக்கு, கிழக்கின் அரசியல், ‘எதிர்நிலை’ மாற்றங்களை நோக்கிச் செல்கிறதா? இந்தப் பிராந்தியங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் முன்னரை விட, வாய்ப்பானதொரு சூழல் ஒன்று உருவாகி வருகிறதா? பிராந்தியக் கட்சிகள் அல்லது இன அடையாளக் கட்சிகள் என்பவற்றின் செல்வாக்கு வீழ்ச்சியடைகிறதா? அதாவது, தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியவாதக் கட்சிகளின் ஆதிக்கம் வலுவிழக்கிறதா? மக்கள் தமது தேவைகளுக்குப் பொருத்தமானது என நம்பும் புதிய வழிகளைத் தேடுகின்றனரா? அதற்கான காரணம் என்ன? பிராந்தியக் கட்சிகளை விட, தேசியக் கட்சிகள் என்று குறிப்பிடப்படும் சு.கவும் ஐ.தே.கவும் வடக்…
-
- 0 replies
- 333 views
-
-
தலைமைகளின் பிளவு தமிழரின் ஆணையையே தோல்வியாக்கும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- யுத்தமும் முரண்பாடுகளும் கொடியவை. அத்துடன் யுத்தத்திற்குப் பிந்தையை அமைதியும் இணக்கமும்கூட கொடியவைதான். 2002இல் மாபெரும் வெற்றிகளைக் குவித்த விடுதலைப் புலிகள் இயக்கம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்தது. போருக்குப் பிந்தைய அமைதிக் காலத்தில், அதாவது இரண்டு வருடங்களுக்குள்ளேயே ரணில் – சந்திரிக்கா அரசால், விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியாக இருந்த கருணா பிரிக்கப்பட்டார். அப்படியானதொரு காலத்தைத்தான் தமிழ் மக்கள் இன்று சந்திக்கிறார்கள் போலவே இருக்கிறது. ஈழத் தமிழ் மக்களின் சுய உரிமைக்காகவும், சுய கௌரவத்திற்காகவும…
-
- 0 replies
- 426 views
-
-
‘ஒரே நாடு, ஒரே வரி’ சட்டம்: ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்கு ஒப்பாகுமா? இந்திய நாட்டுக்கு ‘நள்ளிரவில் சுதந்திரம்’ கிடைத்து, இப்போது மீண்டும் நள்ளிரவில் இந்தியாவுக்கு ‘வரிச் சுதந்திரம்’ கிடைத்திருக்கிறது. ஜூலை முதலாம் திகதி நள்ளிரவு முதல், நாடு முழுவதும் ‘ஒரே வரி’ என்ற கோட்பாட்டை அமுல்படுத்தியிருக்கிறது இந்திய மத்திய அரசாங்கம். சுதந்திரம் பெற்று 70 ஆவது வருடத்தில், இப்படியொரு வரிச்சட்டத்தில் அரசாங்கத்தின் பலமுனை வரிகளில் இருந்து, வர்த்தக நிறுவனங்களுக்கு, நுகர்வோருக்கு சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது மத்திய அரசாங்கம் என்பதுதான் இப்போது வந்திருக்கும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் சிறப்பம்சம். “கூட்டு…
-
- 0 replies
- 585 views
-
-
கூட்டமைப்பின் சஞ்சலம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-02#page-11
-
- 0 replies
- 476 views
-
-
கற்றுக்கொண்ட நல்ல பாடத்திலிருந்து முதலமைச்சருக்கான சோதனை பெரும் குழப்பங்களில் இருந்து மீண்டிருக்கின்ற வடக்கு மாகாண சபையில், வெளிப்படையாக அமைதி தோன்றியிருப்பது போலக் காணப்பட்டாலும், உள்ளுக்குள் நெருப்புக் கனன்று கொண்டுதான் இருக்கிறது. எரிமலையில் இருந்து அவ்வப்போது சாம்பலும் புகையும் வந்து கொண்டேயிருக்கும்; அதுதான் எரிமலையின் அடையாளம். எப்போதாவது ஒரு தருணத்தில்தான், அது வெடித்து நெருப்புக் குழம்பைக் கக்கும். அதுபோலத்தான், வடக்கு மாகாண சபையிலும் நெருப்புக் குழம்பை வெளியேற்றும் ஒரு வெடிப்புக்குப் பின்னர் இப்போது, சாம்பலும் புகையுமாக வெளியேறும் நிலை காணப்படுகிறது. வடக்கு மாகாண சபையி…
-
- 0 replies
- 277 views
-
-
எங்கெல்லாம் போராட்டங்கள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் கிளர்ச்சிகள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் புரட்சிகள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் போர்கள் நிகழ்கின்றனவோ, அங்கெல்லாம் கருப்பையில் பிள்ளைகளைச் சுமந்த தாய்மார்களின் இதயங்கள் நெருப்பை சுமக்கும் துயரம் நிகழும். ஆதலாற்தான் போர்ச்சூழலை பிரதிபலிக்கும் இலக்கியங்கள், சிந்தனைகள் என்பன தாய்மாரை தலையாய பாத்திரங்களாக சித்தரிக்கத் தவறுவதில்லை. ரஷ்ய புரட்சியின் போது மாக்கியம் கொக்கி எழுதிய “தாய்” என்ற நாவல் இதற்கு நல்லதொரு உதாரணம். ஈழப் போராட்டக் காலத்தின் ஆரம்பத்தில் திரு.ரஞ்சகுமார் எழுதிய “கோலைசலை” என்ற சிறுகதையும் இந்த வகையில் இலக்கியவாதிகளால் நல்லுதாரணமாய்க் கூறப்படுவதுண்டு. இந்தவகையில் தாய்மார்களின் துயரங்களைப் பற்றிப் பேசாமல…
-
- 0 replies
- 488 views
-
-
கிழக்கு மாகாண சபை தேர்தலும் அரசியல்வாதிகளின் எதிர்காலமும் நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களும் சிலவேளை, அதற்கு முன்னதாகவே மாகாண சபைத் தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமது வெற்றியில் நம்பிக்கையில்லாத பல அரசியல்வாதிகளின் மனது படபடக்கத் தொடங்கியுள்ளது. பரீட்சைக்கு முன்கூட்டியே படித்துத் தயாராகாத மாணவனின் மனநிலை போல, ஒருவித அச்சமும் பதற்றமும் அவர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது. குறிப்பாக,கிழக்கு மாகாண சபைத் தேர்தல், இவ்வருட இறுதிக்குள் அல்லது அதிகபட்சமாக அடுத்த வருட முற்பகுதியில் இடம்பெறலாம் என அனுமானிக்கப்படுகின்ற ஒரு பின்னணியில், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கடந்த முறை ‘குதிரையோடி’ வெற்றிபெற்ற பல அரசி…
-
- 0 replies
- 402 views
-
-
முதல்வருக்கு வைக்கப்படும் செக் மழை விட்டாலும் தூவானம் நிற்காதது போன்று, வடக்கு மாகாணசபையில் ஏற்பட்ட பெருங் குழப்பம், பல்வேறு தலையீடுகளின் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டாலும், அதனைச் சார்ந்த பிரச்சினைகள் அவ்வப்போது எழுந்து கொண்டேயிருக்கின்றன. முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற பிரச்சினை மாத்திரம் தீர்க்கப்பட்டுள்ளதே தவிர, அதற்கு அடிப்படைக் காரணியான பல்வேறு பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. அதில் முக்கியமானது, சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இரண்டு அமைச்சர்கள் தொடர்பாக நடத்தப்பட வேண்டிய புதிய விசாரணை. சுகாதார மற்றும் போக்குவரத்து அமை ச்சர் …
-
- 0 replies
- 679 views
-
-
விக்னேஸ்வரனை ஏன் பலப்படுத்த வேண்டும்? நிலாந்தன் கடந்த வாரம் நடந்து முடிந்த கம்பன் விழாவில் வடக்கிலுள்ள கணிசமான அரசியல்வாதிகளையும் துறைசார் படிப்பாளிகளையும் காணமுடிந்தது. மாகாணசபைக்குள் கீரியும் பாம்புமாகக் காணப்படும் அரசியல்வாதிகள் பலரும் கம்பன் விழாவில் முன்வரிசையில் காணப்பட்டார்கள் . அவர்கள் மட்டுமல்ல விக்னேஸ்வரனின் தலையைச் சுற்றி ஒளிவட்டத்தை வரையும் ஒரு பத்திரிகாதிபரும் விக்னேஸ்வரன் எங்கே பிழைவிடுவார் என்று கண்டுபிடிக்க காத்திருக்கும் மற்றொரு பத்திரிகாதிபரும் கூட கம்பன் விழாவில் காணப்பட்டார்கள். விழாவின் இறுதிநாள் உரைநிகழ்த்திய கம்பன் கழக நிறுவுனர் ஜெயராஜ் பின்வரும் தொனிப்பட உரையாற்றியிருந்தார் ‘இங்கே மாகாணசபை உறுப்பினர்களைக் கண்டபோது இ…
-
- 0 replies
- 517 views
-
-
அரசாங்கத்தின் போக்கும் மக்களின் சந்தேகமும் நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர், பௌத்த மதத்தை மேலாதிக்கம் கொண்டதாக ஆக்கி, அரசுகள் தமது மனம் போன போக்கில் ஆட்சி நடத் தின. மதச்சாரர்பின்மை கடைப்பிடிக்கப்பட வில்லை. அதேபோன்று சிங்களம் மட் டுமே அரச மொழியென்றும். அதற்கு விசேட அதிகாரமும், உரிமையும் வழங்கப்பட்டிருந்தது. ஏனைய மொழியில் குறிப்பாக தமிழ் மொழி, இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது. அத்துடன், சிறு பான்மை தேசிய இனங்களின் உரிமைகளை, அந்த அரசுகள் மதித்து செயற்படத் தவறியிருந்தன. மோசமான ஒரு யுத்த நிலைமைக்கு நாடு முகம் கொடுப்பதற்கு இத்த கைய ஆட்சிப் போக்கே வழிவகுத்திருந்தது. அனைவரும் சமம். மதச…
-
- 0 replies
- 361 views
-
-
இலங்கையில் நிலக்கண்ணிவெடி அகற்றல்: குதிரைக் கொம்பு எடுக்கப்படுகிறதா? குதிரைக்கொம்பு முயற்சியாக, இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு நாட்டில் நிலவிய மோதல் நிலைவரத்தைத் தொடர்ந்து, மீள்குடியேற்றச் செயன்முறையை முன்னெடுப்பதில் தாக்கம் செலுத்திய மிக முக்கிய தடைக்கல்லாக நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கை இருந்துவருகிறது. இதை வெற்றிகரமாக முன்னெடுத்து, நிலக்கண்ணிவெடி அபாயமற்ற ஒரு வலயமாக மட்டக்களப்பு மாவட்டம் மாற்றப்பட்டுள்ளமை ஒரு மைல்கல் முன்னேற்றமாகப் பார்க்கப்படவேண்டும். இது தொடர்பான நிகழ்வு, கடந்த வாரம் (21.06.2017) மட்டக்களப்பு நகரில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் வரவேற்ப…
-
- 0 replies
- 478 views
-