Suresh

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  30
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About Suresh

 • Rank
  புதிய உறுப்பினர்

Contact Methods

 • Website URL
  http://
 • ICQ
  0

Profile Information

 • Location
  இடர்காடு
 1. வரவேற்ற வல்வை சகாறா, பாபா, தமிழ்த் தம்பி ஆகியோருக்கு நன்றி.
 2. ஒரே வெட்டும் குத்துமாக இருந்தால் எப்படி அழைப்பதாம் குழந்தாய்? அது மனித வாழ்வுக்கு 'இடர்'தானே சுட்டிப்பொண்ணு?
 3. வருக இரும்பொறை. நல்ல பெயர்.. "இடர்காடு" என்பது காரணப்பெயர் தான். உண்மையான பெயர் உம்மிரிக்காடு, நெல்லை அருகே.
 4. வாங்கையா கண்ணப்பன் வாத்யாரையா! உம்மை வரவேற்க வந்தோமைய்யா!!
 5. வருக, நன்றி..சுரேன்16 & கண்ணப்பன்! என்னாச்சு கண்ணப்பன்? உங்களை உள்ளே உடலையா? யாரது அங்கே? எடுத்து வாருங்கள் அந்த வீச்சறுவாளை! வீரகளம் பார்த்து கனகாலமாகிவிட்டது...!! அப்படியே..அப்பால ஒதுங்கு நயினா!!!
 6. அப்பாடா, உலகையே உலுக்கிகொண்டிருந்த ஒரு தலையாய பிரச்னை, தமிழ் மக்களை சுனாமி போல தாக்காமல் பனிபோல் கரைந்து வெண்ணையாய் உருகியோட, அனைத்து மக்களின் அன்றாட வயிற்றுப் பசியை, இந்த இனிய செய்திமூலம் போக்கியுள்ளார் இந்த நயன்தாரா..! அவருக்கு பெரிய ஒரு "ஓ" போடலாமே!
 7. வரப்போகும் பெண் திருமண பந்தத்தை மதித்து, ஒருவனுக்கு ஒருத்தி/ஒருத்திக்கு ஒருவன் என்ற பண்பாட்டில், இருவரும் விட்டுக்கொடுத்து வாழ்வதாக இருந்தால் எந்த நாட்டுப் பெண்களும் தங்கங்களே! இதில் இலங்கையென்ன, இஸ்ரேலென்ன, எல்லாமே ஒன்றுதான்.
 8. இங்கிலீஷ் படம் மாதிரி சேஸிங் ஸீன் - "கிழக்கு கடற்கரை சாலை" பற்றி தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த், பாவனா, 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ், கஞ்சா கருப்பு, முத்துகாளை நடிக்க எஸ்.எஸ்.ஸ்டேன்லி இயக்கும் படம் கிழக்கு கடற்கரைசாலை.மொத்தப் படமும் சென்னை டூ பாண்டிச்சேரி சாலைகளில் படமாக்கியிருக்கிறார்கள். பாடல் காட்சிகள் மட்டும் மூணாறு, ஆழியார் பகுதிகளில் படமாக்கி விட்டு திரும்பியிருக்கிறார்கள். ஹீரோக்களை பிரதானப்படுத்துகிற மாதிரி தலைப்பு வைத்து படங்கள் வந்து கொண்டிருக்கிற நேரத்தில்... இதென்ன கலாட்டா? விசாரிக்கலாம் என்று போனால் இயக்குனர் ரீ ரெக்கார்டிங்கில் பிஸியாக இருப்பதாக தகவல் வந்தது. பெரிய தயாரிப்பாளர்களே தடுமாறிக் கொண்டிருக்கிற நேரத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் மொத்தப் படத்தயும் முடித்திருகிறார் அறிமுக தயாரிப்பாளர் ஆர்.எஸ்.அந்தணன். பட ரிலீசுக்கான பரபரப்புக்கு நடுவே..நமக்காக கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனார். "தயாரிப்பாளரா பெரிய அனுபவம் கிடையாதே தவிர...பத்திரிகையாளரா, பத்திரிகை தொடர்பாளரா பதினைந்து ஆண்டுகளா சினிமாவில் இருக்கேன்.ஒரு படம் பண்றதுல உள்ள கஷ்டம்.. அதிலுள்ள பிரச்சினைகள் என்னங்கிறது எனக்கு நல்லாவே தெரியும். அதனால படம் தொடங்கறதுக்கு முன்னாடியே பக்காவா ப்ளான் பண்ணிட்டு அப்புறம்தான் படத்தை ஆரப்பிச்சோம். சின்னச் சின்ன பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருந்தது. நினைச்சதைவிட பட்ஜெட்டும் அதிகமாகிடுச்சு.. பட தயாரிப்புக்கு வந்தபிறகு இதுகூட இல்லேன்னா எப்படி! அதையெல்லாம் தாண்டி படம் ரொம்ப நல்லா வந்திருக்கு..எனக்கு அதுபோதும்." என்று முதல் பட அனுபவத்தைச் சொன்னார் அந்தணன். கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும் அவரே தொடர்ந்தார். "சின்ன வயசிலேருந்து சினிமான்னா...அதுக்கப்புறம்தா
 9. எல்லோரும் நலமா? பிந்நாளில் வரவேற்ற எரிமலை, ஈழவன்85, சூரன்16, பெரியவர் சின்னப்பு மற்றும் சுட்டி உள்ளிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!
 10. வருக, வணக்கம் எரிமலை! கொதிப்பாக இருக்கிறீர்களா? அருகில் வரலாமா?
 11. யாழ் நங்கையின் புதுப்புடவை நன்றாகவேயுள்ளது..ஆனால் இந்த பழமையான எழுத்துரு(font) இந்த களத்தின் கவர்ச்சியை சிறிது குறைத்தே காண்பிக்கின்றது. கருத்துக்களங்களுக்கான இந்த புரோகிராமில்(Invision Power Board) சில குறைகள்(bugs & Vulnerability) இருப்பதாக கேள்வியுற்றேன்.
 12. முதலில் இந்தியர்கள், இலங்கையர்கள் என்ற பிரிவினையே தவறு. நாம் தமிழர்கள், நம்மை இணைக்கும் பாலம் அதுவே. தற்போது சார்ந்திருக்கும் எல்லைகளையிட்டு தமிழர்களை பிரித்தாளும் கயமைக்கு இடம்கொடுக்கக் கூடாதுதென்பது என் பணிவான எண்ணம்.
 13. விரிவான விளக்கத்திற்கும் தகவல்களுக்கும் நன்றி "சும்மா..!" என்னுடைய அனுபவம் ஒன்றை இங்கே கூற விரும்புகிறேன்..சில காலங்களுக்கு முன்னால் நாகையில் நான் பணியாற்றியபோது, நாகை துறைமுகத்திற்கு எதிரிலுள்ள சுங்க இலாகாவில் ஒரு அதிகாரியை சந்திக்க நேர்ந்தது..அவர் இலங்கைத் தமிழில் சரளமாக உரையாடியவிதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவரிடம் சென்று ஈழத்தமிழர்களின் துயரம் பற்றி பேச்சுக்கொடுத்தபோது, அவர் இலங்கைத் தமிழருக்கும் இந்திய வம்சா வழியினருக்கும் இடையேயுள்ள கருத்து வேறுபாடுகளையும்,மனத்தாங்கல்-களையும் மிகுந்த வருத்தமுடன் பேசினார். எனக்கு முதலில் இதை நம்பவே முடியவில்லை. அவர் சில இலங்கைத் தமிழர்களை அழைத்து காண்பித்தபோது, மனதில் நெருடல் ஏற்பட்டதென்னமோ உண்மையே.
 14. உற்சாகப்படுத்தி வரவேற்ற சாணக்கியன், புத்தன், ஈழப்பிரியன், சகேவன், கறுப்பி, வன்னி மைந்தன், குமாரசாமி, சந்தியா, தூயா, மதன், இலக்கியன், ஆதிவாசி, எரிமலை மற்றும் அனைத்து நல்லிதயங்களுக்கும் நன்றி..!நன்றி!!
 15. விளக்க முடியுமா? எமக்கு பல நாட்களாவே சில விடயங்களை கேட்டுத் தெளிவு பெற எண்ணியிருந்தேன். கிராமத்தில் எமது நண்பர்களிடமோ இல்லை உறவினர்களிடமோ அளாவும்போது இந்த வினாவை எழுப்பியும் சரியான விடை கிடைக்கவில்லை. இணையத்திலும் குழப்பமான பதில்களே கிடைக்கின்றன. சில தமிழ் நண்பர்கள் இங்கே(தமிழகத்தில்) கூறுவதுண்டு-இது அறியாமையால் கூட இருக்கலாம். "நம் தமிழர்கள் இங்கிருந்து பிழைக்கபோனவர்கள் சிங்களவனிடம் ஒற்றுமையாக இருப்பதைவிட்டு ஏன் தனிநாடு கேட்டு அநியாயமாக உயிரிழக்க வேண்டும்?" இந்தக்கேள்விகளைக் கேட்டு எமக்கு சிரிப்பும் வருத்தமுமே வரும். எங்கோ பல மைல்கள் தூரத்திலுள்ள, அதுவும் நம் இரத்தத்தில் சம்பந்தமே இல்லாத லெபனான், இஸ்ரேலியர்களுக்காக வக்காலத்து வாங்கவரும்போது வரும் எரிச்சல் இருக்கே, அதை வார்த்தைகளால் சொல்ல இயலாது. இங்கே, எம் அருகே பதினைந்தே கல் தொலைவில் மனிதாபமானமே இல்லாமல் நடத்தப்படும் தமிழர்களின் நிலை பற்றி பல தமிழக தமிழர்கள் அதிகம் கண்டுகொள்வது இல்லை. காரணம் மேற்கூறிய அறியா வாதமாகவே இருக்க முடியும். விசயன் என்ற சிங்கள மன்னன் தன் தந்தையால் வடஇந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு தன் தோழர்களுடன் இலங்கையின் தென்பகுதியை அண்டியபோது "குவேணி" என்ற தமிழ்ப்பெண் வரவேற்றதாக அறிகிறேன். பின்னாளில் எற்பட்ட விசயன் மற்றும் சிங்களவனின் சூழ்ச்சியால் தென்பகுதியிலிருந்த தமிழர்கள் விரட்டபட்டதாக அறிகிறேன். ஆகவே தமிழர்கள் சிங்களவனுக்கு முன்னதாகவே குடியிருந்த இனமாக இருந்தபோது, எப்படி அவர்கள் சிறுபான்மை குடிகளாக மாறினார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. இந்த வரலாற்று விடயங்களைப்பற்றி தெரிந்துகொள்ள மிகுந்த விருப்பமாக உள்ளேன். மேலும் ஈழத்தமிழர் வரலாற்றைப்பற்றி அறியாத தமிழக தமிழர்களுக்கு இது விளக்கமாகவும் அமையும் என்பது என் கருத்து. கள உறவுகள் யாரேனும் இதுபற்றிய நம்பகமான விளக்கம் கிடைக்கும் இடங்கள்(இணைய தளங்கள்) சொல்ல முடியுமா? நன்றி..