• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

mayooran

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  60
 • Joined

 • Last visited

Community Reputation

1 Neutral

About mayooran

 • Rank
  புதிய உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

843 profile views
 1. வணக்கம், வந்த இடத்தில கதைச்சிட்டுப் போகலாம் என்டுதான். எப்பிடி இருக்கிறியள்?. என்ன இண்டைக்கு விசேசம்?. ட்ரம்ப் என்னவாம்?
 2. ஆமா எனக்கு ஒரே ஒரு டவுட்டு சுறா படத்தில தமன்னா எதுக்கு வாராங்க?
 3. கதர்ர்றா! முதலில் கதற கதற ஒரு கதை சொல்கிறேன். ஒரு ஊரில் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் ஏழைகள் இருந்தனர். அவர்கள் குடிசையில் இருந்தனர். ஏழைகளில் ஒரு ஏழைப்பங்களான் இருந்தான். மக்களுக்கு கக்** வந்தாலும் அவன் துணை வேண்டும். அதே ஊரின் ஊரில் பணக்காரன் இருந்தான். அவனுக்கு ஹோட்டல் கட்ட இடம் கிடைக்காமல் குடிசைகளை அகற்ற வேண்டியிருந்தது. குடிசைக்கு தீ வைத்தான். நடுவில் காதலியோடு நாலு பாட்டு , அம்மாவோடு சென்டிமென்ட். மக்கள் கதறல் சோகம். ஏ.பங்களான் கோபப்பட்டான். வஞ்சகமாக பணக்காரனை ஏமாற்றி பணம் சம்பாதித்து ஏழைகளுக்கு கொடுத்தான். பின் மகிழ்ச்சியாக காதலியோடு டூயட் பாடினான். சுபம். பார்ர்றா! தமிழ்சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் இந்த முற்போக்கு சிந்தனை நிரம்பிய கதை சுறா படத்தில் காணக்கிடைக்கிறது. விஜய்யின் மேன்மையான ஹீரோயிச நடிப்பும் அவர் பேசும் பஞ்ச் வசனங்களும் இதுவரை தமிழ்கூறும் சினிமா உலகம் கண்டிராதது. இது விஜயின் ஐம்பதாவது படமாம். 49 படங்களில் நடித்ததை விட இதில் பல மடங்கு கடுமையாக நடித்திருக்கிறார். பார்ப்பவர்கள் வாயில் விரலை வைத்துக்கொண்டு பார்க்கிறார்கள். விஜய் பஞ்ச் டயலாக் பேசுகிறார் . பேசுகிறார்.. பேசிக்கொண்டே இருக்கிறார்.. விட்டால் ஸ்கரீனிலிருந்து இறங்கி வந்து மடியில் அமர்ந்து பேசுவார் போலிருக்கு! பேசி முடித்ததும் கையை பின்புறம் கட்டிக்கொண்டு சுலோ மோஷனில் நடக்க.. நமக்கு இனிமா கொடுக்காமலேயே இனிமையான லூஸ் மோசன்!. டாக்டர் விஜயல்லவா! இந்த பையனுக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பார்ர்ரேன். வுட்ட்ட்றா! படத்தில் இனிமையான காதல் காட்சிகள் உண்டு. தமன்னா தற்கொலைக்கு முயல்வதும் , அதை காமெடி என்ற பெயரில் விஜயும் வடிவேலுவும் தடுப்பதும்.. நமக்கே தற்கொலை செய்து செத்து செத்து விளையாட வேண்டும் என்கிற ஆவலை தூண்டுகிறது. அதிலும் கண் தெரியாதவர்களை ரோட் கிராஸ் பண்ண வைக்கும் விஜயைப் பார்த்து அப்படியே காதலில் விழுந்து இடுப்பில் நிக்காத பேண்டோடு தமன்னா ஆடுகிற ஆட்டம் உங்க வீட்டு ஆட்டமல்ல எங்க வீட்டு ஆட்டமல்ல,.. உலக ஆட்டம். படம் பார்க்கும் நமக்கே நாம ஒரு வேளை பைத்தியகார கூமுட்டையோ என்று தோன்று கிறது. அதே மாதிரி கூட ஆடும் பெண்கள் கறுப்பு ஜட்டியோடு ஆடுகின்றனர். லோ பட்ஜட் படம் போலிருக்கிறது. நடன சீகாமணிகளின் நடனம் மானாட மயிலாட ஜோடி நம்பர் ஒன்னு ராஜாயாரு ராணி ஆறுக்கு இணையாக இருக்கிறது. ஆனால் இதை பார்க்க காசு நிறைய செலவாகும்! காசுறா காசு! அட்ட்ட்றா! சுத்தி சுத்தி சண்டை போட்டாலும் உருட்டு கட்டையால் பொடணியில் அடித்தால் எப்பேர்பட்ட சூப்பர் மேனும் மயங்கிவிடுவான் என்பது உலக நியதி. விஜய் மண்டையில் அடித்து படுக்க வைத்து அவருக்கு ஆப்படிக்கின்றனர். இடைவேளை. மகதீரா வில்லன் மண்டைக்கு ரெண்டு சைடில் வெள்ளை சாயம் அடித்து வயதானவராக வந்தாலும் இளமையாக அழகாக இருக்கிறார். பாவம் அவர் என்ன செய்வாரு விஜய் பஞ்ச் பேச அவர் ஈ போகுமளவுக்கு பப்பரப்பாவென திறந்து கொண்டு நிற்கிறார் வாயை. விஜய் போனபின் ஏய்.. ஓய்.. என கதறுகிறார்.. வடிவேலு படம் முழுக்க வந்தாலும் வெண்ணிற ஆடையார் ஒரே காட்சியில் மொத்தமாக அள்ளுகிறார். மற்றபடி வடிவேலுவுக்கு வயசாகிருச்சு! இசை மணிசொர்மா.. பாட்டெல்லாம் படுமட்டம். ஓப்பனிங் நல்லாதான் இருக்கு பினிசிங்தான் ம்ஹூம். படத்தின் இயக்குனர் எஸ்.பி. ராஜ் குமார் விஜய ஏமாத்தினாரா இல்ல இவரு அவர ஏமாத்தினாரானு தெரில.. பஞ்சர்ரா! எப்படி நடித்தாலும் படம் ஹிட்டாகிடும் என்கிற ஆணவமும் அகம்பாவமும் அதிகமா இருந்தா எப்பேர்பட்ட சூப்பர் ஸ்டார் படமும் படுத்துரும் என்பது குசேலபடிப்பினை. இதுவும் அதே கேட்டகிரியில் அடங்கும். மக்களை மாக்கான்களாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள் சன்பிக்சர்ஸ் மற்றும் சங்கிலிமுருகன் கூட்டணியினர்.. ஒருபக்கம் யதார்த்த வெறிபிடித்த கூட்டமொன்று ரத்தம் வழிய வழிய படமெடுத்து உயிரை வாங்குது.. இன்னொரு பக்கம் இப்படி மசாலா படமெடுக்கிறேனு கி.மு காலத்து கதையெல்லாம் எடுத்து பஞ்ச் பேசி ரத்தம் கக்க வைக்குது.. இந்த அநியாயத்த தட்டிக்கேக்க யாருமே இல்லையா! சுர்ர்ர்றா! முதலில் சொன்ன பஞ்ச் என்னோப்போல படம் பார்த்தவர்களுக்கும் , விஜய்க்கும் சன்பிக்சர்ஸ்க்கும் சமர்ப்பணம்! படம் பார்த்து தியட்டர் வெளியே வரும் போது நண்பன் கேட்டான்? why blood ? Same blood
 4. இலங்கையில் புதையல் .. தமிழ் குழந்தைகளின் இளம் கைகள் கிடைத்தன ... ................................................................. காட்டுக்குள் கடுமையான போர் ... பறவைகள் பத்திரமாய் உள்ளன நல்லவேளை அவைகள் தமிழ் பேசவில்லை ...
 5. கொஞ்சகாலமா எங்கட பக்கம் இன்ரநெற் பாவிக்கிறது கொஞ்சம் கஸ்டம் அதுதான் யாழ் பக்கம் வரல
 6. நீண்ட நாளைக்குப் பின் களத்திற்கு வந்திருக்கிறன். எல்லாம் மாறிக்கிடக்கு பாப்பம் எல்லாருக்கும் வணக்கம்.
 7. BlazeVideo HDTV Player is a full-featured and easy to use BlazeVideo HDTV Player software, combining HDTV playback, FM receiving, video record and DVD playback functions. You can make advantage of PC monitor's high resolution, watch, record, playback high definition HDTV program or teletext broadcast program. BlazeVideo HDTV Player also acts as your multi-media center, with superior video and audio quality, it supports DVD, VCD, SVCD, MP3, MPEG and Pictures playback. The more advanced features, such as video/audio record, video capture, bookmark preview, picture slideshow, screen control, special audio effect, optional skin, bring you an infinite wonderful multi-media world. BlazeVideo HDTV Player has wide compatibility, supporting most popular TV Card with BDA interface on market, runs stably and smoothly on Windows 98 SE/Me/2000/XP/Vista operating system. Mirror Mirro2 Portable BlazeVideo HDTV Player 2.5 | 8.09 MB
 8. 2004-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது: சிறந்த நடிகர்-நடிகையாக ஜெயம்ரவி-ஜோதிகா 2003-ம் ஆண்டு விருது விக்ரம் - லைலா தமிழ் திரைப்பட தொழிலுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது. 2003 மற்றும் 2004-ம் ஆண்டுகளுக்கான விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்கள், சிறந்த இயக்குனர்கள், சிறந்த நடிகர்கள்- நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகி யோர்களின் பெயர்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். 2004-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் விவரம்:- ஆட்டோ கிராப் சிறந்த படம்-முதல் பரிசு- ஆட்டோகிராப். சிறந்த படம்-இரண்டாம் பரிசு-விஷ்வ துளசி. சிறந்த படம்- மூன்றாம் பரிசு-கண்ணாடி பூக்கள். சிறந்த படம்-சிறப்புப் பரிசு-எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி. பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் திரைப்படம்-உப்பு. அளவான திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதி பலிக்கின்ற திரைப்படம் முதல்-பரிசு-அம்மா அப்பா செல்லம். இரண்டாம் பரிசு-ரைட்டா தப்பா. மூன்றாம் பரிசு-டான்சர். ஜெயம்ரவி-ஜோதிகா சிறந்த நடிகர்-ஜெயம் ரவி (எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி). சிறந்த நடிகை-ஜோதிகா (பேரழகன்). சிறந்த நடிகர்-சிறப்பு பரிசு-குட்டி (டான்சர்). சிறந்த நடிகை-சிறப்புப் பரிசு-சந்தியா (காதல்). சிறந்த வில்லன் நடிகர்- ராபர்ட் (டான்சர்). சிறந்த நகைச்சுவை நடிகர்- மயில்சாமி (கண்களால் கைது செய்). சிறந்த நகைச்சுவை நடிகை-காந்திமதி (ஒருமுறை சொல்லிவிடு). சிறந்த குணசித்திர நடிகர்-ராதாரவி (ஒருமுறை சொல்லிவிடு). சிறந்த குணச்சித்திர நடிகை-சீதா (ரைட்டா தப்பா). சிறந்த இயக்குநர்-சேரன் (ஆட்டோ கிராப்). சிறந்த கதையாசிரியர்- ஹரிராம் (உயிரோசை). சிறந்த உரையாடலாசிரியர்-பிரசன்ன குமார் (எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி). சிறந்த இசை அமைப்பாளர் -ஸ்ரீகாந்த் தேவா (எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி). சிறந்த பாடலாசிரியர்- சிநேகன் (பேரழகன்). சிறந்த பின்னணிப் பாடகர்-ஹரிஹரன் (பேரழகன்). சிறந்த பின்னணிப் பாடகி-சித்ரா (ஆட்டோ கிராப்). சிறந்த ஒளிப்பதிவாளர்- பி. கண்ணன் (கண்களால் கைது செய்). சிறந்த ஒலிப்பதிவாளர்-லட்சுமி நாராயணன் (வானம் வசப்படும்). சிறந்த திரைப்பட தொகுப்பாளர் (எடிட்டர்)- அந்தோணி (மதுர). சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்)-ஆனந்த் சாய் (நிï). சிறந்த சண்டை பயிற்சியா ளர்-பீட்டர் ஹெய்ன் (போஸ்). சிறந்த நடன ஆசிரியர்-சிவ சங்கர் (விஷ்வ துளசி). சிறந்த ஒப்பனைக் கலைஞர்-புஜ்ஜி பாபு (பேரழகன்). சிறந்த தையற் கலைஞர்- முரளிதரன் (போஸ்). சிறந்த குழந்தை நட்சத்திரம்-மாஸ்டர் அருண்குமார் (காதல்). சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)-கதிர் (ஜனனம்). சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)- ரேணுகா (சிங்காரச் சென்னை). 2003-ம் ஆண்டு விருது சிறந்த நடிகர்-நடிகையாக விக்ரம் - லைலா தேர்வு 2003-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள். சிறந்த படம் (முதல் பரிசு)- ஈரநிலம் சிறந்த படம் (இரண்டாம் பரிசு)-பவர் ஆப்உமன் சிறந்த படம் (மூன்றாம் பரிசு)-பார்த்திபன் கனவு. சிறந்த படம் (சிறப்பு பரிசு)-காமராஜ் பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் திரைப் படம்-உன்னைச் சரணடைந்தேன். அளவான திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதி பலிக்கின்ற திரைப்படம் (முதல் பரிசு)-காதலுடன். இரண்டாம் பரிசு- றெக்கை மூன்றாம் பரிசு - அன்பே அன்பே. சிறந்த நடிகர்- விக்ரம் (பிதாமகன்) சிறந்த நடிகை- லைலா (பிதாமகன்) சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு)-ஸ்ரீகாந்த் (பார்த்திபன் கனவு) சிறந்த நடிகை-மீரா வாசு தேவன் (உன்னைச் சரணடைந்தேன்) சிறந்த வில்லன் நடிகர்- ரியாஸ்கான் (பவர் ஆப் உமன்) சிறந்த நகைச்சுவை நடிகர்- விவேக் (பார்த்திபன் கனவு) சிறந்த நகைச்சுவை நடிகை- தேவதர்ஷினி (பார்த்திபன் கனவு) சிறந்த குணச்சித்திர நடிகர்- அலெக்ஸ் (கோவில்பட்டி வீரலட்சுமி) சிறந்த குணச்சித்திர நடிகை- சங்கீதா (பிதாமகன்) சிறந்த இயக்குனர்- கரு. பழனியப்பன் (பார்த்திபன் கனவு) சிறந்த கதையாசிரியர்- சமுத்திரக்கனி (உன்னைச் சரணடைந்தேன்) சிறந்த உரையாடலாசிரியர்-தேன்மொழி (ஈரநிலம்) சிறந்த இசையமைப்பா ளர்-ஹாரீஸ் ஜெயராஜ் (காக்க காக்க) சிறந்த பாடலாசிரியர்- கபிலன் (பார்த்திபன் கனவு) சிறந்த பின்னணிப் பாட கர்-உன்னிகிருஷ்ணன (ராமச்சந்திரா) சிறந்த பின்னணிப் பாடகி- ஹரிணி (பார்த்திபன் கனவு) சிறந்த ஒளிப்பதிவாளர்- ஏகாம்பரம் (இயற்கை) சிறந்த ஒலிப்பதிவாளர்-எம்.ரவி (புன்னகைப் பூவே) சிறந்த திரைப்பட தொகுப் பாளர் (எடிட்டர்)- ஜெயசங்கர் (அரசு தர்பார்) சிறந்த ஆர்ட் டைரக்டர்-கதிர் (திருமலை) சிறந்த சண்டை பயிற்சியா ளர் - தளபதி தினேஷ் (உன்னைச் சரணடைந்தேன்) சிறந்த நடன ஆசிரியர்- அசோக்ராஜா (திருமலை) சிறந்த ஒப்பனைக் கலை ஞர்-சிவக்குமார் (காதலுடன்) சிறந்த தையற்கலைஞர்- சாய்பாபு (விருமாண்டி) குழந்தை நட்சத்திரம் சிறந்த குழந்தை நட்சத்திரம் - என். மதன்குமார் (றெக்கை) சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)-ராஜேந்திரன் (சாமி) சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)- ஜெய்கீதா (திருமலை) 2003-2004 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில் நுட்பப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் விவரம்:- 1. சிறந்த இயக்குநர்-ஜி.கருணாநிதி (பாராமுகம்) 2. சிறந்த ஒளிப்பதிவாளர்-எஸ்.சஞ்சீவி சத்தியசீலன் (நீலவானமும் பச்சை பூக்களும்) 3. சிறந்த ஒலிப்பதிவாளர்-எம்.வேல்முருகன் (பொம்மலாட்டம்) 4. சிறந்த படத் தொகுப்பாளர்- எஸ்.பிரகாஷ் (சக்தி) 5. சிறந்த படம் பதனிடுபவர்-எஸ்.கணேசன் (கே.அகல்யா)