என்னுடைய தனிப்பட்ட கருத்தாக நிதர்சனம், நெருப்பு, பரபரப்பு ஊடகங்கள் மீது காட்டப்படும் அதிருப்தி நியாயமாகப் படவில்லை.
அவை புலிகளின் உத்தியோகபூர்வதளம் என்று உரிமை கூறவில்லை.
எனவே அவற்றின் நன்மை தீமை எந்த பின்புலத்தையும் பாதிக்கப் போகிறது என்று சொல்லமுடியாது.
நாம்பார்கின்ற தளத்தில் இருந்து அல்லாமல் வேறுதளங்களில் இருந்து அவற்றின் செயற்பாடுகள் போராட்டதுக்கு உபயோகப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
அரசின் நிழல் ஊடகங்கள் புலிகள் பேச்சுத்தீர்வின் துவக்கத்தில் நிற்க்கும் போதே "ஒன்றுமே இல்லாத தீர்வை பெற இணங்கி விட்டார்களே" என்று புலம்புவார்கள்.
அதில் இருந்து விலகினால் "போராட்டம் மக்களுக்காகவா, மண்ணுக்காகவா மக்கள் அவலத்தைக் கருத்தில் கொண்டு இறங்கிப் போகக்கூடாத?"
என்று புலம்புவார்கள்.
சண்டைப் படாமல் பொறுத்துக் கொண்டு போனால் "சண்டையைத் துவங்கினால் இருக்கின்ற கட்டுப்பாட்டு பிரதேசங்கள் எல்லாம் இராணுவம் பறித்து விடும் என்ற பயத்தினால்தான் போகவில்லை"
என்றும் புலம்புவார்கள்.
எனவே இவர்களே பல ஊடகவேடங்களில் ஊடகயுத்தம் செய்யும் போது அதை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பும் எமது ஊடகங்களுக்கு உண்டு.
முள்ளை முள்ளால் எடுக்கின்ற மருந்து போல் எம்முடைய ஊடகங்களும் பலவிதமான தளங்களில் பலவிதமான எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய அவசியம் இருக்கின்றது.
எனவே நீங்கள் இவைமேல் கொள்ளும் மனவிசனம் தேவை அற்றது என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம் ஆகும்.
தவிர ஏகலைவன் காலத்து போர்த்தர்மம் எம்மை வாழ்த்த வேண்டும் என்ற ஆசையும் எமக்கு வேண்டியதில்லை.