எல்லோரும் பரபரப்பாய் தான் கருத்து எழுதுகின்றீர்கள். மின்னல் முதல் பண்டிதர் , என்று தொடர்கின்றது. பண்டிதர் அவர்களே, உங்கள் ஊடகத்துக்கான வரை விலக்கணம் என்ன என்பதை கொஞ்சம் எழுதினால் அதை கருத்தில் எடுத்து பத்திரிகை உலகம் செயற்ப்பட வாய்பாயிருக்கும். அதே போல ஊடகங்கள் எல்லாவற்றையும் வழமர்சிப்பதாய் எடுத்துக்கொண்டாலும், விமர்சனம் என்பது இலகுவாய் வைக்கப்படக்கூடியது. உங்களில் எத்தனை பேர் ஊடகத்துக்குள் செயற்ப்பட தயாராய் இருக்கின்றீர்கள்? அப்படியிருக்கையில் எப்படி அச் செயற்ப்பாடுகளில் இருப்பவர்கள் நீங்கள் விமர்சிக்க முடியும்? உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.
அடுத்து, கனடாவில் முழக்ம், ஈழமுரசு, சுதந்திரன், இன்னும் ஏராளம் பத்திரிகைகள் வருகின்றன. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு காலத்தில் ரிஷி அவர்கள் தமிழ்நாதத்தில் செய்த புலனாய்வு அரசியை எழுத்தாக்கியே இப்பத்திரிகைகள் பிரிசுரித்திருந்த. நீங்கள் சொல்லும் இந்த பத்திரிகைகளில், (முழக்கம், ஈழமுரசு தவிர) எந்தப்பத்திரிகையில் 20 விகிதத்துக்கு அதிகமாக சமூக சார்ந்து இருக்கின்றன? எத்தனை பக்கங்களில் அவர்கள் விளம்பரம் போடுகின்றனர். பரபரப்பு பணத்திற்க்காய் விற்கப்பட்டாலும், அதன் தரம் பத்திரிகை என்ற தொனியிலே இருக்கின்றது. வெள்ளிக்கிழமை பத்திரிகையை வெளியிட, வியாழக்கிழமை இரவு ஆயிரம் எழுத்துப்பிழைகளுடன், பத்திரிகை என்ற பெயருக்கும் வரும் பத்திரிகைகளை எல்லாம் கேவலமாக தான் என்னால் பார்க்க முடியும். மேலும், இணையங்களிலிருந்து பிரதி செய்து ஏNதூ கனடாவில் இருப்பவர்கள் எல்லாம் கணினிப்பக்கமே போகாதவர்கள் போல பத்திரிகை முழுக்க இணையத்திலிருந்து பிரதி செய்து போடுபவர்கள், அதற்க்கு ஆசிரியர் வேறு, கேவலமான பத்திரிகைகளாகவே என்னால் கணிக்க முடியும்.
களத்தில் விடுதலைப்புலிகள் பின்னகர்வில் ஏற்ப்பட்ட போது அதைப்பற்றிய ஆய்வுகளை செய்யாது, அன்று வென்றார்கள், நேற்று வென்றார்கள் என்று தமிழ் மக்களை ஏமாற்றி கொண்டிருந்த ஊடகங்களுக்கு மத்தியில் பரபரப்பு வித்தியாசமே, நான் பரபரப்பின் அபிமானியாக இதைச் சொல்லவில்லை. நீங்கள் சொல்லும் அந்த ஊடகம் தொடர்பாக எங்களுக்கும் கொஞ்சம் தெரிந்திருப்பதால் சொல்கின்றேன்.