-
வேல்டெக் கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழா
ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் 23-ஆவது பட்டமளிப்பு விழா 07/02/2026 அன்று காலை 10.30 மணிக்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது. கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவைக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் கர்னல் டாக்டர் வேல் ஸ்ரீ ஆர்.ரங்கராஜன் அவர்கள் தலைமை தாங்கித் துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.வி.கே.சாந்தி அவர்கள் வரவேற்புரை நல்கிக் கல்லூரி ஆண்டறிக்கையினை வாசித்தார். அவர் பேசும்பொழுது, “கல்லூரி என்பது உலகின் “கல்லூரி என்பது உலகின் முன்னேற்றத்தோடு தனிநபர் வாழ்க்கையை ஒன்றிணைக்கும் மாபெரும் இடமாக இருக்கிறது. அதனை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். கல்லூரித் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திருமதி.ரங்கராஜன் மகாலட்சுமி கிஷோர் அவர்கள் மற்றும் வேல்டெக் கல்விக் குழுமத்தின் துணை இயக்குநர் Ms.எஸ்கந்த கிஷோர் வேல் ஆகியோர் முன்னிலை உரையாற்றினார். சென்னை டி சி எஸ் நிறுவனத்தின் வணிக அலகு துறையின் பொதுமேலாளர் மற்றும் தலைவர் திரு.தீபக்நாதன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு, பட்டமளிப்பு தினச் சிறப்புரை ஆற்றி, பட்டதாரிகளுக்குப் பட்டச் சான்றிதழ்களை வழங்கித் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசும் பொழுது, “மாணவர்கள், ஸ்மார்ட் ஃபோனைப் போல காலத்திற்கு ஏற்றவாறு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.“ என்றார். இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் 389 பேர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. கணினியியல் துறை மாணவர்கள் 85 பேர்களுக்கும், கணினிப் பயன்பாட்டியல் துறை மாணவர்கள் 113 மாணவர்களுக்கும், வணிக நிர்வாகவியல் துறை மாணவர்கள் 43 பேர்களுக்கும், வணிகவியல் துறை மாணவர்கள் 132 பேர்களுக்கும் இளங்கலைப் பட்டங்கள் வழங்கப் பெற்றன. முதுகலை வணிகவியல் துறை மாணவர்கள் 16 பேர்களுக்கு முதுகலைப் பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில் பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் பெருமளவு கலந்து கொண்டனர். பேராசிரியர் டாக்டர் S.தீர்த்தமலை அவர்களும் பேராசிரியை டாக்டர் D.ஹேமலதா அவர்களும் பட்டமளிப்பு விழாவினை ஒருங்கிணைப்புச் செய்தனர்.
-
-
அறிஞர் நாகரத்தினம் புஸ்பநாதன் அவர்கள் எழுதிய ஆன்மீகத் தேடல்- பாகம்- நூல் வெளியீட்டு விழா.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா
-
அறிஞர் நாகரத்தினம் புஸ்பநாதன் அவர்கள் எழுதிய ஆன்மீகத் தேடல்- பாகம்- நூல் வெளியீட்டு விழா.
அறிஞர் நாகரத்தினம் புஸ்பநாதன் அவர்கள் எழுதிய ஆன்மீகத் தேடல்- பாகம்- நூல் வெளியீட்டு விழா. தமிழின் மிகச்சிறந்த நூல்களில் இதுவும் ஒன்று. இக்காலகட்டத்தில் ஆன்மீகத்தில் ஏற்பட்டுள்ள சிறு சிறு பிழையான எண்ணப் போக்குகளை மாற்றி இதுதான் சரியான ஆன்மீக எண்ணம் என்பதை உலகுக்கு சொல்ல நினைக்கின்ற அற்புதமான நூல்..... உண்மையான ஆன்மீகம் எது என கூறுகின்ற ஒப்பற்ற ஆன்மீக செய்திகள் அடங்கியிருக்கின்ற நூல் இந்த நூல்.,... ஆன்மீகத்தில் கரை கண்ட நபர்கள் இல்லை எனலாம். அதனை மாற்றுவதற்கு முயற்சி செய்த நபராக இந்த நூலின் ஆசிரியர் மரியாதைக்குரிய நாகரத்தினம் புஷ்பநாதன் அவர்கள் இருக்கின்றார்கள்...... திருநின்றவூர் #கவியமுதுபதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த நூல் தற்பொழுது லண்டனில் வெளியிடப்படுகிறது.....
-
அண்ணா நகர் தமிழ்ப்பேரவையின் தமிழ்ப்பேருரை- 21/9/25
அண்ணா நகர் தமிழ்ப்பேரவையின் தமிழ்ப்பேருரை- 21/9/25 அண்ணா நகர் தமிழ்ப்பேரவையின் இலக்கியக் கூட்டமான, 21 9 25 ஞாயிற்றுக்கிழமை அளவில்மாலை 5 மணி சென்னை அண்ணாநகர் லியோ ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளியில் தமிழ் இலக்கியப் பேருரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. பேராசிரியர் முனைவர் ரூபா எம்..ஏ., எம்.பில்., பி.எச்டி., அவர்கள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாட, அதை அடுத்து மதிப்பிற்குரிய பாவலர் சீனி பழனி அவர்கள் வரவேற்பு ஆற்றினார்கள். பின்னர் பேராசிரியர் முனைவர் மா. இளங்கோவன் (க்ஷ தலைவர்) அவர்கள் மிகச் சிறப்பாகத் தலைமை உரையாற்றினார்கள். பின்னர் பேரவையின் இணைச் செயலாளரும், இந்துக் கல்லூரியின் பேராசிரியருமான,பேராசிரியர் முனைவர் ஜா. திரிபுர சூடாமணி அவர்கள், பெருங்கதை காப்பியம் தொடர் சொற்பொழிவின் தொடக்க உரையாக றற்யமிகச் சிறப்பாக சொற்பொழிவு ஆற்றினார்கள். பேராசிரியர் முனைவர் ம.இளங்கோவன் சிற்றுரை ஆற்றிய பிறகு, ஆவடி வேல்டெக் கலைக் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் செ.சு. நா.சந்திரசேகரன் அவர்கள் இணையத் தமிழ் என்பது பற்றி மிகச் சிறப்பாகப் பேசினார்கள். அவர் உரையாற்றும் பொழுது, ”உலகளாவிய நிலையில், தமிழ் வளர்ச்சிநிலை பெற்றுள்ளதை தமிழ் ஆர்வலர்கள் இன்னும் வளர்க்க முயலவேண்டும்” என்றார். இணையத்தமிழ் என்ற தலைப்பில் மிகச் சிறப்பான இச்சொற்பொழிவில் பல துறைகளின் மேம்பாடுகள் விளக்கப்பட்டன. பிறகு, பேராசிரியர் முனைவர் ரூபா அவர்கள் தொகுப்புரை வழங்கினார்கள்.பின்னர் பேரவையின் ப் யங்தொண்டர் திலகம் திரு சுதாகர் அவர்கள் தனக்கே உரித்தான முறையில் பெருங்கதையின்பெருமையைப் பற்றியும், இணையத் தமிழ்ப் பற்றியும் பேசிய பிறகு, நன்றி உரையாற்றினார்கள். இத்துடன் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நிறைவடைந்தது. கூட்டத்தில் பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
பாரதிசந்திரன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited