Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Jet Tamil

புதிய உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

  1. நாடளாவிய பொருளாதார மையங்களில், பச்சை மிளகாயின் விலை ஒரு கிலோக்கு 750 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த நிலையில், நாரஹேன்பிட்டி சிறப்பு பொருளாதார நிலையத்தில் நேற்று, ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1000 ரூபாயாக பதிவாகியுள்ளது. மேலும், நாடு முழுவதும் பல சில்லறை விற்பனைக் கடைகளில், 100 கிராம் பச்சை மிளகாயின் விலை 120 ரூபாயிலிருந்து 150 ரூபாயினால் விற்கப்படுகிறது. https://jettamil.com/the-price-of-green-chilies-has-reached-its-peak
  2. நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தின் லொபுசே என்ற பகுதியின் வடகிழக்கில் 93 கி.மீ. தொலைவிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் என்ற பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியுள்ள நிலையில், இதனை தொடர்ந்து இந்தியாவின் புதுடில்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://jettamil.com/powerful-earthquake-in-nepal
  3. நாட்டை தூய்மைப்படுத்தும் நோக்குடன் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று (06) சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால், சுன்னாகம் நகரப் பகுதியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, தலைக்கவசம் இன்றி வாகனம் செலுத்துபவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. அதுபோல வீதியோரங்களில் சட்டரீதியற்ற நடமாடும் வியாபாரிகள், வாகனங்களில் தேவையற்ற அலங்கரிப்புகள் செய்தவர்கள், வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை வீதியில் காட்சிப்படுத்துபவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு அவற்றை சீர் செய்யுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டது. https://jettamil.com/jaffna-police-launches-clean-sri-lanka-project
  4. 2019இல் சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரசின் பரவல், உலகெங்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது சீனாவில் புதிய HMPV வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இதன் காரணமாக உலக நாடுகள் பல அச்சத்தில் உள்ளன. எச். எம். பி. வி (HMPV) என அழைக்கப்படும் இந்த வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் முதன்முறையாக மனித மெட்டா நியூமோ வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண் குழந்தைக்கு HMPV வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இந்த குழந்தைகள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எந்த பயணமும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், குழந்தையின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். HMPV வைரசானது, கொரோனா வைரஸ் போன்ற பல அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இதில் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன. மேலும், சீனாவின் வடக்கு மாகாணங்களில் இந்த வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன, சிறுவர்கள் பலர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://jettamil.com/hmpv-virus-spreading-in-china-infection-spreading-in-india-too
  5. கம்பளை – குருந்துவத்தை நகரில் உள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் ஒரு வேனொன்று பிரேக் இல்லாமல் அங்கு இருந்த ஊழியரை மோதிய சம்பவம் CCTV கமெராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ஊழியர் கம்பளை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குருந்துவத்தை பொலிஸார் கூறினர். https://jettamil.com/the-tragedy-at-the-petrol-filling-station-cctv-footage
  6. யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் வசிக்கும் 42 வயதான யுவானிஸ் நேசராசா என்பவர், மூன்று பிள்ளைகளின் தந்தையாக, நிமோனியாக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். இவர் 30ஆம் தேதி முதல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். வெள்ளிக்கிழமை இரவு, அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது உடலைப் பரிசோதனை செய்து, திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் விசாரணைகளை நடத்தினார். நிமோனியாக் காய்ச்சலே உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கின்றது என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதியாக கண்டறியப்பட்டுள்ளது. https://jettamil.com/young-family-member-dies-of-pneumonia-in-jaffna/
  7. இன்று (04), யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் 5ஆவது வருடமாக திருவெம்பாவைப் பாராயணம் இசைக்கப்பட்டது. பரமேஸ்வரா ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து, கலட்டிச்சந்தி ஊடாக யாழ். பல்கலைக்கழக பாலசிங்கம் விடுதியைக் கடந்து, தபாற்பெட்டிச் சந்தி வழியாக பரமேஸ்வராச்சந்தி வழியாக மீண்டும் யாழ். பல்கலைக்கழகத்தை திருவுலா வந்தடைந்தது. இந்த பாராயணத்தில் யாழ். பல்கலைக்கழக இந்து மன்ற பெரும் பொருளாளரும், சிரேஸ்ட விரிவுரையாளருமான திரு. சி. ரமணராஜா, கலைப்பீட மாணவர் ஒன்றியச் பெரும் பொருளாளரும், சிரேஸ்ட விரிவுரையாளருமான திரு. சு. கபிலன் மற்றும் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டனர். திருவெம்பாவை விரதம் மற்றும் மார்கழி விழா ஒவ்வொரு நாளும் திருவெம்பாவை பாராயணம் நடைபெற்று, இறுதி நாள் யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரா முன்றலில் இருந்து மாணிக்கவாசகர் எழுந்தருளி, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம், திருநெல்வேலி சந்தி, பரமேஸ்வரா சந்தி ஊடாக மீண்டும் யாழ். பல்கலைக்கழகத்தினை வந்தடையும். மேலும், திருவெம்பாவை விரத நாளை முன்னிட்டு, கடந்த 2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மார்கழி விழா இந்த வருடமும் சிறப்பாக நடைபெறவுள்ளது. https://jettamil.com/jaffna-university-students-thiruvembawai-recitation/
  8. தென் ஆப்பிரிக்கா அணி, பாகிஸ்தானுக்கு எதிரான 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இப்போது தென் ஆப்பிரிக்காவில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதால், தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இன்று, கேப்டவுனில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதன்போது, டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங்கை தெரிவு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பந்துவீச உள்ளது. இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன்: தென் ஆப்பிரிக்கா: மார்க்ரம், ரியான் ரிக்கல்டான், வியான் முல்டர், ஸ்டப்ஸ், பவுமா (கேப்டன்), பெடிங்காம், கைல் வெர்ரைன், மார்கோ ஜான்சன், கேஷவ் மகராஜ், ரபடா, குவேனா மபகா பாகிஸ்தான்: ஷான் மசூத் (கேப்டன்), சைம் அயுப், பாபர் அசாம், கம்ரான் குலாம், சாத் ஷகீல், ரிஸ்வான், சல்மன் ஆகா, ஆமீர் ஜமால், மிர் ஹம்சா, குர்ரம் ஷாசாத், முகமது அப்பாஸ் https://jettamil.com/2nd-test-south-africa-win-toss-elect-to-bat-against-pakistan
  9. அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான கல்வித் தவணைகள் மற்றும் 2024 க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான கல்வி அமைச்சின் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கல்வித் தவணைகள் ஒழுங்காக நடத்தப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 2025 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நடத்தக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதே சமயம், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2025 ஆம் ஆண்டு அக்டோபர்/நவம்பர் மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் தமிழ் பாடசாலை கல்வித் தவணைகள்: முதலாவது தவணை: முதல் கட்டம் – 2025 ஜனவரி 27 - மார்ச் 14 இரண்டாம் கட்டம் – 2025 ஏப்ரல் 1 - ஏப்ரல் 11 மூன்றாம் கட்டம் – 2025 ஏப்ரல் 21 - மே 9 இரண்டாவது தவணை: முதல் கட்டம் – 2025 மே 14 - ஆகஸ்ட் 7 மூன்றாவது தவணை: முதல் கட்டம் – 2025 ஆகஸ்ட் 18 - ஒக்டோபர் 17 இரண்டாம் கட்டம் – 2025 நவம்பர் 17 - டிசம்பர் 19 முஸ்லிம் பாடசாலை கல்வித் தவணைகள்: முதலாவது தவணை: முதல் கட்டம் – 2025 ஜனவரி 27 - பெப்ரவரி 28 இரண்டாம் கட்டம் – 2025 ஏப்ரல் 1 - ஏப்ரல் 11 மூன்றாம் கட்டம் – 2025 ஏப்ரல் 21 - மே 23 இரண்டாவது தவணை: முதல் கட்டம் – 2025 மே 28 - ஆகஸ்ட் 19 மூன்றாவது தவணை: முதல் கட்டம் – 2025 ஆகஸ்ட் 25 - ஒக்டோபர் 31 இரண்டாம் கட்டம் – 2025 நவம்பர் 17 - டிசம்பர் 19 https://jettamil.com/announcement-regarding-the-2025-school-term-exams
  10. இப்பொழுது தான் புதிதாக இணைந்துள்ளேன். தங்களின் வழிகாட்டுதலில் கூடிய சீக்கிரம் சரியான முறையில் பதிவிடுவேன். நன்றி. ஏதேனும் தறவுகள் இருப்பின் தெரிவியுங்கள். நன்றி.
  11. Jet Tamil changed their profile photo
  12. மன்னிக்கவும். அப்படி தவறான மருத்துவ குறிப்புக்களை இணையத்தளத்தில் பதிவு செய்யவில்லை. அந்த பதிவுகள் அனைத்தும் பிரபல்யமான இணையத்தளங்களில் இருந்து எடுத்து பிரசுரிக்கப்பட்டவை. அதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள். நன்றி
  13. 2025 ஆம் ஆண்டை ஆர்ப்பரிப்போடு எதிர்நோக்கி இருக்கும் அதே வேளையில் என்னவெல்லாம் நடக்கும் பாபா வங்கா என்ன கணித்துள்ளார் என கணிப்புகள் மீது நம்பிக்கை கொண்ட பலரும் ஆர்வத்தோடு தேட ஆரம்பித்திருக்கிறார்கள். ஜோதிடர்கள், தீர்க்கதரிசிகள், நாஸ்ட்ரடாமஸ் போன்றவர்கள் உலகில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்து பல்வேறு கணிப்புகளை பல ஆண்டுகளாக வெளியிட்டு அதிர்ச்சியூட்டி வருகின்றனர். இவர்களில் ஒருவரான பல்கேரியாவைச் சேர்ந்த பாபா பங்கா (Baba Vanga) தனது பல கணிப்புகள் மூலம் உலகை ஆச்சரியப்படுத்தியவர். குறிப்பாக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் மரணம், இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானா மரணம் என முன்கூட்டியே கணித்தவர்தான் இந்த பாபா பங்கா என சொல்லப்படுகிறது. இதையெல்லாம் விட தனது மரணத்தைக் கூட முன்கூட்டியே கணித்தவர் பாபா பங்கா என அவர் பற்றி சொல்லப்படும் தகவல்கள் எல்லாமே அமானுஷ்யங்கள் நிறைந்த ஆச்சரியங்களாகவே இருக்கின்றன. அமெரிக்கா மீதான இரண்டு எக்கு பறவைகளின் தாக்குதல் என பாபா பங்கா முன்கூட்டியே கணித்திருக்கிறார். எக்கு பறவைகள் என்பது இரட்டை கோபுர தாக்குதலில் பயணிகளின் விமானம் மூலம் நடந்த தாக்குதலைத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்கிறார்கள் நிபுணர்கள். அதுபோல அமெரிக்காவின் 44வது அதிபராக கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர்தான் வருவார் என கணித்தபடியே பராக் ஒபாமா அதிபரானார். பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு 85 வது வயதில் காலமானாலும் வரும் 5079 ஆம் ஆண்டு வரை என்னவெல்லாம் நடக்கப்போகிறது என முன்கூட்டியே கணித்து விட்டதாக கூறப்படுகிறது. அதாவது அடுத்த 3000 ஆண்டுகளுக்கு என்னவெல்லாம் நடக்கும் என இவர் கணித்து வைத்துள்ளாராம். அப்படிப்பட்ட பாபா வங்கா அடுத்த 2025ல் என்னவெல்லாம் நடக்கும் எனக் கூறியுள்ளார் அவர் கணித்தவற்றை தெரிந்து கொள்வதற்கு முன் யார் இந்த பாபாவங்கா என்று தெரிந்து கொள்ள ஆரம்பித்தால் கூடுதல் ஆச்சரியங்கள் தொற்றுக் கொள்கின்றன. முழுமையான கட்டுரை : https://jettamil.com/what-will-happen-in-2025-baba-vangas-predictions-that-were-accurate-in-advance
  14. தற்போது அரிசி விலைகளில் ஏற்பட்டுள்ள உயர்வு, எதிர்காலத்தில் உணவு பொதிகளின் விலைகளின் அதிகரிப்பை தூண்டும் என அநுராதபுரம் மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று அநுராதபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், சங்கத்தின் தலைவர் இந்திக்க அருண குமார கூறியதாவது, "அரிசி நெருக்கடி காரணமாக, பல உணவகங்கள் மூடப்படுவதுடன், உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்தார். இந்த நிலையில், அரசாங்கம் இறக்குமதி செய்த 5,200 மெற்றிக் தொன் அரிசியின் முதல் தொகுதி மற்றும் 580 மெற்றிக் தொன் கொண்ட இரண்டாவது தொகுதி நேற்று நாட்டை வந்தடைந்துள்ளன. கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில், அரச வர்த்தக சட்ட ரீதியான கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ, "விநியோக நடவடிக்கைகள் இன்று நிறைவடையும்" என அறிவித்தார். News : https://jettamil.com/risk-of-price-increases-for-packaged-food
  15. போக்குவரத்து விதிமீறல்களை தொடர்புபடுத்தி முறைப்பாடு அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தளமான E-Traffic செயலியை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி, நேற்று (01) பொலிஸ் தலைமையகத்தில், பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. E-Traffic செயலி பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமீறல்களை மற்றும் சம்பவங்களை நிகழ்நேரத்தில் புகாரளிக்க அனுமதிக்கின்றது. இந்த செயலியின் மூலம், பயனர்கள் கேமரா மற்றும் வீடியோ விருப்பங்களைப் பயன்படுத்தி குற்றங்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பதிவேற்ற முடியும். இந்த சமர்ப்பிப்புகள் உடனடியாக காவல்துறை தலைமையகத்திற்கு நேரடியாக அனுப்பப்படும். இச் செயலியை இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் www.police.lk பதிவிறக்கம் செய்யலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.