Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

jdlivi

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

  1. யார் இந்த கிழவன்...? +++++++++++++++++++++++ தள்ளாத வயதில் தமிழினத்தின் ஒட்டுமொத்த சுமைகளையும் தன் தோளில் சுமந்துகொண்டு தாங்குவாரில்லாமல் தடுமாறும் இந்த கிழவன் யார்? தான் நினைத்திருந்தால் தன் மக்கள் ..தன் குடும்பம்....தனது தொழில்...தனது பாரம்பரிய அரசியல் என தனக்கான பாதையை வகுத்து பயணித்திருக்கலாம் ... ஆனால் யார் இந்த கிழவன் ?...தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ...அனாதையாய் அதிகாலை பொழுதில் தாங்குவாரில்லாமல் தனியாளாய் ...தமிழக காவல்துறை கைக்கூலிகள் முன் களமாடுகின்றார் ... இப்படி நடக்கும் என்பது இக்கிழவனுக்கு எம் மாவீரர்கள் உணர்த்தி இருப்பார்களோ?... என் கடைசி துளி இரத்தம் என் உடம்பில் இருக்கும்வரை "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை " இடிக்க அனுமதிக்க மாட்டேன் என்று...... அதனால் தான் என்றும் எக்காலத்திலும் பேசாத கோபக்கனல் பேச்சு இக்கிழவன் வாயிலிருந்து எறிகனைஎன முற்றம் நினைவு நிகழ்ச்சியில் வெளிப்பட்டதோ.... மாறி மாறி மாற்றினத்தலைமைகள் எம்மினத்தை வேடிக்கைப்பொருள் என விளையாடிவரும் காலக்கட்டத்தில் எம்மின விடுதலைக்கு தோள்கொடுத்த ....துணைநின்ற ...தோல்விக்கு பிறகும் ...துணிந்து களமாட எம்மிளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் இந்த கிழவன் யார்?.. "இட்ட சாபம் முட்டும் "-என ஒரு கிழவன் வயிறு எரிய "அறம் " பாடினான்....விளைவு-உலகறியும்...... இந்த கிழவன் சாபம் விட்டால் ......யார் யாரை முட்டும் என்று ..... யாருக்கு தெரியும்?.................................. விஜயராகவன் தமிழன் and ஈழம் நோக்கி shared Kaandhan Malai Saami's photo.
  2. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச்சுவர் இடிக்கப்பட்டது கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 நவம்பர், 2013 - 08:49 ஜிஎம்டி Facebook Twitter Google+ பகிர்க நண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்-- சுற்றுச்சுவர் இடிப்பு இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான மோதல்களின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் இன்று புதன் அதிகாலை மாவட்ட நிர்வாகத்தால் இடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசாருக்கும் அப்பகுதி மக்களுக்குமிடையே நிகழ்ந்த மோதலின் பின்னணியில் நினைவுச் சின்னத்தை அமைத்த உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். முள்ளிவாய்க்கால் முற்றத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா அரசு நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி மாநில வருவாய்த் துறை அதிகாரிகள் பெரும் இயந்திரங்களை வைத்து சுற்றுச் சுவரைத் தகர்த்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் மூண்டது, முற்றத்தை ஒட்டிய நெடுஞ்சாலையில் ஆர்வலர்கள் குவிந்தனர். சுவர் தகர்க்கப்பட்ட பின் அங்கே நிறுவப்பட்ட, இது அரசுக்குச் சொந்தமான இடம் என்று கூறும், இரு அறிவிப்பு பலகைகளை ஆர்வலர்கள் அப்புறப்படுத்தினர். அதிகாரிகள் அங்கே அமைத்த கம்பிவேலியையும் அவர்கள் பிய்த்தெறிந்தனர். அந்நிலையில் போலீசாருக்கும் ஆர்வலர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஓரிருவர் காயமடைந்தனர். பின்னர் நெடுமாறன் உட்பட இருபது பேர் தஞ்சையில் ஒரு மண்டபத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது இன்றைய நிகழ்வுகள் குறித்து எதுவும் பேச இயலாது, ஆனால் மாலைக்குள் அடுத்த கட்ட நடவடிக்கை தெளிவாகிவிடும் என்று நம்மிடம் கூறினார். நெடுமாறன் தரப்பினர் உரிய அனுமதி பெற்றபிறகே முற்ற வளாகம் அமைக்கப்பட்டது. ஏதோ உள்நோக்கங்களுக்காக இவ்வாறு அரசு நடந்துகொள்கிறது, இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம் என்கின்றனர். முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் முற்றத்தை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஜெயலலிதா அரசியலில் நுழைந்தபோது அவருக்கு மிக நெருக்கமானவராகக் கருதப்பட்டவர் நடராஜன். ஆனால் பின்னர் இருவருக்குமிடையே பெரும் பிணக்கு உருவானது, நடராஜனைக் கடுமையாகத் தாக்கி அறிக்கைகளெல்லாம் வெளியிட்டார் ஜெயலலிதா. முள்ளிவாய்க்கால் முற்றம் தொடக்கத்திலிருந்தே பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியது, உயர்நீதிமன்ற ஆணையைப் பெற்றே கடந்த வாரம்தான் அதனைத் திறக்க முடிந்தது. இப் பின்னணியிலேயே இன்றைய நிகழ்வுகள் என்கின்றனர் நோக்கர்கள். http://www.bbc.co.uk/tamil/india/2013/11/131113_mullivaykkal.shtml
  3. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் இடிப்பு கண்டிக்கத் தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் நினைவாகவும், போரில் கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் தமிழ் சொந்தங்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையிலும் தஞ்சாவூரை அடுத்த விளாரில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவரை தமிழக அரசு இடித்துத் தள்ளியிருக்கிறது. தமிழக அரசின் இந்த செயல் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருந்த இடம் நெடுஞ்சாலைக்கு சொந்தமானது என்பதால் அது இடிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் அடையாளமாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அப்போது முற்றத்தின் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது என்பதால் தமிழக அரசை அணுகி, அவ்விடத்தை பயன்படுத்தி கொள்ள அனுமதி பெறப்பட்டது. சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைத்து அதை உலகத் தமிழர் பேரமைப்பே பராமரிப்பது என்றும், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதியை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்வது என்றும் தமிழக அரசுடன் உடன்பாடு செய்து கொள்ளப் பட்டது. அதன்படி கடந்த சில ஆண்டுகளாக அனுமதி புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. நடப்பாண்டிற்கு அனுமதியை புதுப்பிக்கக் கோரி பல மாதங்களுக்கு முன்பே மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அனுமதி முடிவடைந்ததும், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகக் கூறி முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்திருக்கிறது. உலகத் தமிழர் பேரமைப்பால் அமைக்கப்பட்ட பூங்காவும் சிதைக்கப் பட்டிருக்கிறது. சுற்றுச்சுவரை இடித்த அதிகாரிகள் நினைவு முற்றத்திற்கு செல்வதற்கான முதன்மை வாயிலை கம்பி வேலி அமைத்துத் தடுத்திருக்கின்றனர். முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு ஈழத்தமிழர்கள் எப்படி முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டார்களோ, அதேபோல் இப்போது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமும் கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறது. நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதால் தான் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டதாக கூறப்படுவதை ஏற்கமுடியாது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள நிலங்கள் பல்வேறு தரப்பினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் அகற்றுவதில் அவசரம் காட்டாத தமிழக அரசு, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவரை மட்டும் அதிகாலையில், 500க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்புடன் இடித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதும் கண்டனத்திற்குரியது. தமிழர்களுக்கான நினைவுச் சின்னங்கள் எதுவுமே தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்ற முதல்வரது எண்ணத்தின் வெளிப்பாடு தான் இந்த நடவடிக்கை ஆகும். கடந்த ஆட்சியில் கண்ணகி சிலையை அகற்றிய முதலமைச்சர், இப்போது முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரை அகற்றியிருக்கிறார். இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை இராஜபக்சே அழிப்பதைப் போலவே, தமிழகத்தில் ஜெயலலிதா செய்து வருகிறார். தமிழர்களின் எதிரிகள் யார், யார்? என்பதை இப்போதாவது தமிழக மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். http://dinamani.com/latest_news/2013/11/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/article1888476.ece
  4. தஞ்சையில் கட்டப்பட்டுள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு FILE இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது. தஞ்சை விளார் சாலையில் 2 ஏக்கர் பரப்பளவில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடந்த 8 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு முன்பே 6 ஆம் தேதி முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தை உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் திறந்து வைத்தார். ஆனாலும் திட்டமிட்டபடி திறப்பு விழா நிகழ்ச்சி 8 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்படைத்துறையினர், தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1311/13/1131113010_1.htm
  5. புதன்கிழமை, 13 நவம்பர் 2013 08:57 முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் பகுதியில் உரிய அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் பூங்கா இன்று (13-11-2013) அதிகாலை 5.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினரால் சட்டவிரோதமாக இடித்துத் தகர்க்கப்பட்டது. முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரை சுற்றுச் சுவரும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெயர்ப்பலகையும் தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டது. இப்படத்தில் காணப்படும் நீரூற்று வரை வந்து அதையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்ட காவல்துறையினர் அதற்குள் தோழர்கள் கூடியதால் தற்காலிகமாக இடிப்பதை நிறுத்தியுள்ளனர். ஆனால் முற்றத்திற்குள் செல்லும் பாதையை வேலி போட்டு அடைத்துள்ளனர். “சட்டவிரோதமான முறையில் முற்றத்தில் எதுவும் அமைக்கப்படவில்லை. சட்ட ரீதியாகவே எதிர்கொள்வோம். அனைத்துத் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைக் குறித்து முடிவெடுக்கப்படும்” என பழ. நெடுமாறன் அறிவிப்பு. http://tamil.thenseide.com/seide/index.php?option=com_content&view=article&id=614%3A2013-11-13-03-41-04&catid=28%3Aspecialnews&Itemid=2 நினைவு முற்றம் இடிப்பு: ஹைகோர்ட்டில் வழக்கு தொடரும் பழ.நெடுமாறன்! சென்னை:தஞ்சையில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக பழ.நெடுமாறன் கூறியுள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ''இலங்கையில் நடந்த போரின்போது, உயிரிழந்த தமிழர்களின் நினைவாக தஞ்சை, விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. இந்த நினைவு முற்றத்தை அமைப்பதற்காக சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. முறையாக அனுமதி பெற்றே நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. ஆனால், எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல், தமிழக அரசு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டது குறித்து மற்ற கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்'' என்றார். -தற்ஸ் தமிழ்- 2009 ஈழத்தில் நடந்த இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாகவும் இனப்படுகொலையை நினைவு கூறும் வகையிலும் தஞ்சை விளார் சாலையில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டு 8 -ம் தேதி திறக்கப்பட்டது. கற்சிற்பங்கள், ஓவியங்கள் என காண்போர் மனதை நெருடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த முற்றத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 500 -ம் அதிகமான போலீசாரின் மேற்பார்வையில் முற்றம் இடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தஞ்சையில் பதட்டம் எழுந்துள்ளது. "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் பகுதியில் உரிய அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் பூங்கா இன்று அதிகாலை 5.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினரால் சட்டவிரோதமாக இடித்துத் தகர்க்கப்பட்டது. முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரை சுற்றுச் சுவரும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெயர்ப்பலகையும் தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டது. இப்படத்தில் காணப்படும் நீரூற்று வரை வந்து விட்ட காவல்துறையினர் அதற்குள் தோழர்கள் கூடியதால் தற்காலிகமாக இடிப்பதை நிறுத்தியுள்ளனர். ஆனால் முற்றத்திற்குள் செல்லும் பாதையை வேலி போட்டு அடைத்துள்ளனர். அனைத்துத் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைக் குறித்து முடிவெடுக்கப்படும் என பழ. நெடுமாறன் அறிவிப்பு." என்ற தகவலைத் தருகிறார் நெடுமாறன் அவர்களின் புதல்வியான பூங்குழலி இவர்கள் முற்றத்தினுள்ளேயே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamilworldtoday.com/home முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் இடிப்பு!... தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி!! தஞ்சாவூர்: தஞ்சை, விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சை, விளார் சாலையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த 8 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்று, கடந்த 10ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவடைந்தது. விழாவில் பேசிய பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆகியோர் நினைவு முற்றத்தை அகற்ற நினைத்தால் போராட்டம் வெடிக்கும் என்று பேசினார்கள். இந்நிலையில், இன்று காலை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை, சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் முன்னிலையில் இடிக்கும் பணி நடந்து வருகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதால் அதை இடிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. -தற்ஸ் தமிழ்- தமிழகத்தில்.... பல‌ அரசியல் வாதிகள், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான... காணிகளைத் தானே... ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பியுள்ளார்கள். அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா... உலகத் தமிழனுக்கு பொதுவான இடத்தை, இடித்து.... உங்கள் கரங்களில்.... கரியை பூசிக் கொண்டுள்ளீர்களே.... உங்களுக்கே... இது நியாயமாகப் படுகின்றதா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.