-
கறுப்புப் பட்டியல்
4. ஈழம் ஈ நியூஸ் (eelamenews) குறித்த இணையத்தளம் யாழ் இணையத்தில் தடை செய்யப்படுகிறது. பிற இணையத்தளங்களின் செய்திகளை திருடி இணைத்தமை, சரியான மூலத்தைக் குறிப்பிடாமல் அவற்றை பயன்படுத்தியமை போன்ற காரணங்களால் தடை செய்யப்படுகிறது. எனவே, யாழ் இணைய உறவுகளே, குறித்த இணையத்தளத்திலிருந்து செய்திகளையோ, ஆக்கங்களையோ இங்கு இணைக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
-
கறுப்புப் பட்டியல்
1. அதிர்வு 2. தமிழ் வின் 3. தினமுரசம்
-
கறுப்புப் பட்டியல்
யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம். இன்று விரிந்து வரும் தமிழ் இணைய ஊடகப் பரப்பில் பல்வேறுபட்ட போக்குகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது செய்தி/கட்டுரை/எழுத்தாக்க திருட்டு. உரிமையாளர் வேறொருவராக இருக்க, அதை பிரதியெடுத்து தமதாகக் காட்டிக்கொள்ளும் மிகக் கீழ்த்தரமான செயல் இன்று பரவலாக இடம்பெறுகிறது. ஆக்கங்களைத் திருடி, உரிய மூலத்தைக் குறிப்பிடாது தமது இணையத்தளங்களில் இணைப்பதும் - அதனூடாக தமது இணையத்தளங்களுக்கு விளம்பரம் தேடுவதும் இவர்களின் வேலை. இதன் விளைவாக அதிக வாசகர்களை தமது தளத்துக்கு திருப்பி - கூகிள் போன்ற விளம்பர சேவைகளினூடாக பணம் சம்பாதிப்பதும் நடைபெறுகிறது. ஒரு செய்தியைப் பெறுவதற்கு பின்னால் உள்ள உழைப்பு அல்லது ஒரு கட்டுரையை எழுதுவதற்கு பின்னால் உள்ள உழைப்பு - இவைபற்றி இவர்கள் யோசிப்பதில்லை. ஊடக அறத்தை மீறியவர்களாக - நேர்மையற்ற செயல்களை இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை முழுமையாக எம்மால் தடுக்க முடியாது - எனினும் யாழ் இணையத்தில் இதுபோன்ற - ஊடக அறத்தை மீறி செயற்படும் - இணைய ஊடகங்களை தடைசெய்ய எண்ணியுள்ளோம். தடைசெய்யப்படும் ஊடகங்கள் இங்கு பட்டியலிடப்படும். அப்படிப் பட்டியலிடப்படும் இணைய ஊடகங்களிலிருந்து செய்திகளையோ ஆக்கங்களையோ யாழ் கருத்துக்களத்தில் இணைக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். இதன்மூலம் கீழ்தரமான - ஊடக அறத்தை மீறும் செயல்களை - யாழ் இணையத்திலாவது மட்டுப்படுத்த முடியுமென நம்புகிறோம். குறித்த ஊடகங்களை இனங்காண யாழ் கள உறவுகளாகிய நீங்கள் உங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நன்றி.
-
பெயர் மாற்றங்கள்.
பெயரை தமிழில் எப்படி மாற்றவேண்டும்? நீண்ட பெயராக இருந்தால் தமிழில் மாற்றும்போது சில பிரச்சனைகள் எற்படும். எனவே பெயர் எப்படி அமையவேண்டும் என்பதைக் குறிப்பிடவும். நன்றி.
-
பெயர் மாற்றங்கள்.
குகதாசன், உங்கள் பெயர் தமிழில் "விசுகு" என்று மாற்றப்பட்டுள்ளது. தாமதத்திற்கு வருந்துகிறோம்.
-
பெயர் மாற்றங்கள்.
பூமகள், உங்கள் பெயர் தமிழில் மாற்றப்பட்டுள்ளது.
-
பெயர் மாற்றங்கள்.
மன்னிக்கவும். குட்டித்தம்பி, ஈழப்பிரியன் ஆகிய பெயர்கள் இரண்டும் தமிழில் மாற்றியமையால் (unicode) பிரச்சனை தருவதால் மீண்டும் ஆங்கிலத்தில் மாற்றியுள்ளோம். விரைவில் இந்த பெயர்ப் பிரச்சனையைத் தீர்க்க வழிகாண்போம். புரிந்துணர்வுக்கு நன்றி.
-
பெயர் மாற்றங்கள்.
இத்தலைப்பு பெயர்மாற்றம் செய்தால் அதைக் குறிப்பிடுவதற்காகத் தொடங்கப்பட்டது. கருத்துக்கள உறவுகள் தனிமடலில் தெரிவிக்கும்போது அது அதிகம் கவனம் பெறுகிறது. இத்தலைப்பில் மாற்றப்படாமல் இருந்த பல பெயர்கள் தமிழில் மாற்றப்பட்டுள்ளன. தமிழில் பெயர்கள் மாற்றப்பட்டதால், உள்நுழைவதிலோ கருத்துக்கள் எழுதுவதிலோ பிரச்சனைகள் இருப்பின் எமக்கு உடனடியாகத் தெரியப்படுத்தவும்.
-
பெயர் மாற்றங்கள்.
வணக்கம் கபிலன், ஏற்கனவே கருத்துக்களத்தில் ஒரு கபிலன் உள்ளார். அதனால் உங்கள் பெயரை தமிழில் மாற்றுவதிலும் சிக்கல் உள்ளது. இதுபற்றி களப்பொறுப்பாளர் மோகன் அண்ணாவுக்கு அறியக் கொடுத்துவிடுகிறேன். நன்றி