Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகானா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by சகானா

  1. Requesting all Tamils who are protesting and supporting students struggle pls Hold this flag in our shoulders to show to this world that we need TamilEelam, தமிழீழ விடுதலை மாணவர் கூட்டம்மைப்பு சார்பாக அணைத்து மாவட்டங்களுக்கும் தமிழீழ வரை படத்தை கொடியாக மாற்றி அதை நாம் நடத்தும் அணைத்து போராட்டங்களிலும் ஏந்தி செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். சென்னையை தலைமை இடமாக கொண்டு தகவல் தொழல் நுட்ப ஊழியர்கள் மற்றும் இளைஞர்களால் நடத்தபடும் Save Tamil Movement நாளை (20.03.2013) புதன் அன்று ஒ எம் ஆர் சாலையில் (பழைய மகாபலிபுரம் சாலை) உள்ள டைடல் பார்க் முன்பு மனித சங்கிலி போராட்டம் அறிவித்து உள்ளது, தொழல் நுட்ப ஊழியர்களும் மற்ற துறைகளில் உள்ளவர்களும், பொது மக்களும் பெரும் அளவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது உள்ளது.
  2. தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் வலுத்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் மாணவர்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கூடிய 1,000-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் இலங்கைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
  3. விருத்தாசலத்தில் திட்டமிட்டபடி இன்று காலை 11.30 மணி அளவில் வந்தடைந்த குருவாயூர் ரயிலை ஒரு மணி நேரம் மறித்து தங்களது எதிர்ப்பை மத்திய அரசிற்கு காட்டினார்கள் ( மேலும் குருவாயூர் ரயில் இந்த ஒரு மணிநேர தாமதத்தினால் 5மணி நேரம் காலதாமதமாக செல்லும் என்று எதிர்பார்க்க படுகிறது ) 6 கல்லூரியை சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் , அவர்களை கைது செய்த காவல்துறை ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்து மாலை 6 மணிக்கு விடுவித்தது
  4. ஈழத்தை வென்று எடுப்போம் எனும் உறுதியுடன் இடிந்தகரை இளையோர்கள் ஈழ தமிழர்களின் இரத்தம் இன்னும் காயவில்லை என அதே ரத்த சுவடுகளுடன் ஈழத்தை வென்று எடுப்போம் எனும் உறுதியுடன் இடிந்தகரை இளையோர்கள் நாளை காலை 9 மணிக்கு மெரீனா கடற்கரையில் சென்னையின் முக்கிய கல்லூரி 10,00000 மாணவர்கள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்(மொத்தம் 16 கல்லூரிகள்). மருத்துவ கல்லூரிகளும் கலந்துகொள்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
  5. அனைத்து பொறியியல் கல்லூரிகள் மாணவர்கள் தஞ்சையில் தொடர் உண்ணாவிரத போராட்டம். தஞ்சை பகுதி நண்பர்கள் நேரில் சென்று மாணவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கவும் நண்பர்களே மாணவர்களை வாழ்த்த தொடர்பு எண்கள் விஸ்ணு வரதன் 7598167241 அருண் உதயா 7373169407 சதிஷ்குமார் 8122616410
  6. மாணவர்கள் போரட்டத்திற்கு ஆதரவாகவும், மத்திய இலங்கை அரசுகளை கண்டித்தும் சென்னை ராமபுரம் தகவல் தொழில்நுட்ப பூங்காவின்(DLF IT Park) வாயிலில் 600 க்கும் மேற்பட்ட கணினி பொறியாளர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டோம். ஐ.நா இலங்கை மீது கடுமையான தீர்மானத்தை கொண்டுவரவும் தொடர் முழக்கமிட்டோம். Human chain protest by IT professionals for support students strike and roaring against Sri lankan govt. https://www.facebook.com/tamilnaduhungerstrike
  7. "தமிழ்த்தேசியத்துக்காக நெறிபிறழாத நீண்ட பயணத்தை (நிலை) நிறுத்திய நல்லதம்பி ஐயா (G3 ஐயா) 1930 -2012" கொண்ட கொள்கைக்கும், இலட்சியத்திற்கும் களங்கமின்றி பயணித்த, மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் நல்லதம்பி ஐயா அவர்கள் 06 .08 .2012 அன்று சாவடைந்து விட்டார். இவரின் இழப்பு தமிழ்த் தேசியப் பற்றளார்களை தாக்கியுள்ளது. எதையும் தாங்கும் இதயத்தைக் கொண்டவர்களான நாம் இதையும் தாங்கிக் கொண்ட போதும் இவருடைய நினைவுகளில் மூழ்கி, அழியாத பதிவாக எமது நெஞ்சினில் உறைந்துள்ள சிலவரலாற்று நிகழ்வுகளை எமது மக்களோடு பகிர்ந்து கொள்ளுகின்றோம். கந்தையா நல்லதம்பி என்னும் பெயர் கொண்ட G3ஐயா, சு.ம என்றும் அழைக்கப்பட்டார். இவர் 1930.04.18 நாள் அன்று வாழைச்சேனையில் பிறந்தார். தந்தை பெரியாரின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு, தனது நண்பர்களுடன் சேர்ந்து சுயமரியாதைக்கழகம் என்னும் பகுத்தறிவு அமைப்பை தோற்றுவித்தார். இதனால் இவரை மக்கள் சு.ம. நல்லதம்பி என்று அழைக்கக் தொடங்கினர். 1960களில் தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் ஏற்பட்ட தமிழர் எழுச்சியில் தன்னையும் இணைத்துக்கொண்டு பல போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார். அக்காலத்தில் வாழைச்சேனை காகித ஆலையில் பணியிலிருந்துகொண்டு தமிழரசுக் கட்சி சார்ந்த தொழிற்சங்க வளர்ச்சியில் முக்கிய பங்காளராக செயல்பட்டதனால் பணிநீக்கம் செயப்பட்டார் .அப்போதும் மனம் தளராது தனது வழியில் தொடந்து தேசியத்தை காத்துநின்றார். தாய்த்தமிழகத்தின் தமிழ்த்தலைவர்களான அறிஞர் அண்ணா அவர்களையும், கலைஞர் கருணாநிதி அவர்களின் அன்றையதமிழ் உணர்வையும் நேசித்ததனால் தனது மூத்த மகனுக்கு கருணாநிதி எனப் பெயர்வைத்தார். இதேபோல் தனது பிள்ளைகளான இளங்செழியன், தயாளு, மேகலா, முத்தழகு ஆகியோருக்கும் தமிழில் பெயர் சூட்டி அழகு பார்த்தார். இந்தியப்படையினர் எமது மண்ணில் நிலைகொண்டிருந்த வேளையில் தமிழ் தேசிய உணர்வுமிக்க மூத்தமகன் கருணாநிதி தமிழ் தேசிய விரோதிகளாக செயற்பட்ட EPRLF குழுவினரால் கொல்லப்பட்டார். இக் காலத்தில் G3 ஐயா இந்தியப் படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தியப் படை எமது மண்ணை விட்டு வெளியேறிய நிலையில் விடுதலை செய்யப்பட்டார். விடுதலைப் போராட்டம் வீறு கொண்டெழுந்தபோது போராட்டத்திற்கு தம்பிள்ளைகளை போராளியாக ஈந்து 1984ம் ஆண்டிலிருந்து இறுதிவரை தேசிய விடுதலை இயக்கத்தோடு பயணித்து முள்ளிவாய்க்கால்வரை சென்று திரும்பிய தீரர் G 3 ஐயா அவர்களாகும். G3என்பது எமது போராளிகள் ஏந்திய போர்க்கருவிகளில் ஒன்றாகும். இதன் பெயர் கொண்டுஅழைக்கப்பட்ட நல்லதம்பி ஐயா போராளிகளோடு ஒன்றித்து நின்றதற்கான அடையாள அழைப்பாக இதனை எடுத்துக்கொள்ளமுடிகிறது. ``முத்தழகு`` இவரின் மகன்களில் ஒருவர். 24 . 10 .1987 அன்று கப்டன். ரதீஷ் ஆக களத்தில் வீழ்ந்தார். மட்டக்களப்பின் முதல் பாசறையில் பயிற்சி பெற்றவர். தன் மகனின் பயணத்தில் பாதம் பதித்த நல்லதம்பி ஐயா தளம்பாது, தடம்புரளாது தொடந்தார். இவரைத் தேசியத் தலைவரும் நன்றாக அறிந்திருந்தார். தளபதிகளும் நன்றாக தெரிந்து வைத்திருந்தார்கள்,போராட்ட வரலாற்றில் பல குடும்பங்கள் தங்களை அர்பணித்து விடுதலையில் செயல்பட்டிருக்கின்றது. இக்குடும்பங்களில் ஒரு குடும்பமாக இவர் குடும்பமும் உள்ளடங்கியிருந்தது. மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்தின் முதல் மாவீரர் லெப். பரமதேவா இனங்கண்ட இனப்பற்றாளர் . இவருடன் இணைந்ததாக விடுதலைப் போராளிகளுக்கு வழிகாட்டியாக மாறி பணிசெய்த பற்றாளன். இவரை அறியாத நிலையில் மட்டு -அம்பாறை மாவட்டத்தில் செயல்பட்ட ஆரம்பகால போராளிகள் எவரும் இருந்ததில்லை. ஏனெனில் வாகரை மண்ணில் கிருமிச்சை என்ற ஊரில் இவரைக் கடந்துதான் இவரின் உதவியுடன் போராளிகள் பயணத்தை மேற்கொண்டனர். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப வளர்ச்சியில் மட்டக்களப்பில் இவரின் பங்கு முக்கியமாக இருந்ததைக் குறிப்பிடமுடியும். தமிழை நேசித்தார், தமிழீழ மண்ணை நேசித்தார், அந்த மண்ணின் விடுதலையை நேசித்தார், இதனால் விடுதலைப் புலிகளோடு சங்கமித்தார். மனைவியோடு மறைவிடம் தேடி விடுதலைப் புலிகளோடு இணைந்து பல காலம் வாழ்ந்து இறுதிவரை பயணித்தார். எண்ணற்ற வீரமறவர்களை இழந்து, ஏங்கி நிற்கின்ற எமது மண்ணின் வீரத் தமிழ்ப் பெற்றோர்கள் என்ற நிலையிலும் இவரைப் பார்க்கமுடிகின்றது. ஆயிரமாயிரம் போராளிகளிகளால் அன்பாக G3 ஐயா என்று அழைக்கப்பட்ட இவரைப் பற்றி தெரிந்தவர்கள் எல்லோரும் இவருடைய உணர்வை எண்ணி பெருமிதம் கொள்கின்றனர் .இவர் பிறந்த மண்ணில் இன்று அந்நிய ஆதிக்கம் தலைவிரித்தாடுகின்றது. எங்கும் தமிழ் , எதிலும் தமிழ் என்றிருந்த காலம் மாறிப்போகின்றது. தள்ளாத வயதில் இதை எண்ணி வேதனை கொண்டிருந்தார். தாய் மண்ணின் விடுதலைக்கு வித்தாக வீழ்ந்த மகனின் வீரத்தை எண்ணி கடைசி நேரத்திலும் கலங்காமல் விழி மூடியுள்ளார் என்பது உறவினர்கள் மூலமாக நாம் அறிந்த உண்மையாகும். அமைதியாகக் கண் மூடியுள்ள நல்லதம்பி ஐயா அவர்களை நினைவு கூரும் வேளையில் அவர் இழப்பால் தவிர்க்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவிக்கின்றோம். ஒருநிமிடம் கண்முடி, தலைதாழ்த்தி ,வணங்குகின்றோம். எமதுதேசிய விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் இவரின் சாவு நிகழ்ந்துள்ளதால் தேசியப் பற்றாளரான இவருடைய சேவைகளை தேசிய விடுதலை இயக்கத்தால் நினைவுகூர முடியவில்லை. என்றாலும் போராட்டத்தோடு இணைந்திருந்த பலரால் இவர் நினைவுபடுத்தப்படுகின்றார். காலத்தின் மாறுபாட்டால், களத்தில் பயணித்த பலர் மறைக்கப்படுகின்ற நிலையில் இவரை நாம் நினைவு படுத்துகின்றோம். எண்ணற்ற தேசியப்பற்றாளர்களுடன் இவரையும் இணைத்துக்கொள்வோம். இவருடைய மகன்களின் அர்ப்பணிப்பும், இவருடையதமிழ் தேசிய செயல்பாடும் என்று வீண் போகாது என்று நம்புவோம். நம்பிக்கையுடன் எமதுபணியைத் தொடர்வோம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.