Jump to content

Search the Community

Showing results for tags 'அ.நிக்ஸன்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. தமிழர்கள், முஸ்லிம்கள் ஜனாதிபதியாக வர முடியுமா? இலங்கைத்தீவின் வடகிழக்கில் வாழும் ஈழத் தமிழர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர். மக்களின் இந்த விரும்பங்களுக்கு ஏதுவாக சிவில் சமூக அமைப்புகள் ஒன்று கூடி கலந்துரையாடி வருகின்றன. இது 95 சதவிகிதம் இணக்கமாகத் தெரிகிறது. யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு உள்ளிட்ட வடக்கு கிழக்கிலிருந்து மொத்தம் 46 சிவில் அமைப்புகள் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்து வருகின்றன. ஆரம்பக் கலந்துரையாடல்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைத்துக் கொள்ளப்படவில்லை. 'பொது பொறிமுறை'யை அமைத்த பின்னரே சிவில் அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சந்தித்து தமிழ் பொது வேட்பாளர்கள் விவகாரம் தொடர்பாக உரையாடவுள்ளன. ஜனாதிபதியாக வரமுடியுமா? இந்த முயற்சியைச் சிலர் இனவாத செயற்பாடு என்று கூற முற்படுகின்றனர். ஆனால் அது இனவாத ஏற்பாடு அல்ல. அது ஈழத்தமிழர்களுக்குரிய ஜனநாயக உரிமை. இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் ஒரு தமிழரோ அல்லது முஸ்லிமோ ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை வகிக்க முடியாது என்று நேரடியாகக் கூறவில்லை. ஏனெனில் 75 வீதமானவர்கள் சிங்களவர்கள். தமிழ் முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழர்கள் அனைவரும் ஏகமனதாக வாக்களித்தாலும் தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்கு தேவையான குறைந்தபட்ச 51 சதவீத வாக்குகளை பெற முடியாது. அப்படியானால் கணிசமான சிங்கள மக்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். ஆனால் ஒரு தமிழருக்கு சிங்களவர்கள் வாக்களிக்கும் அரசியல் கலாச்சாரம் இலங்கைத்தீவில் இன்னும் உருவாகவில்லை. ஆனால் தமிழ் - முஸ்லிம் மக்கள் பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். அரசியலமைப்பின் விதி தமிழ் முஸ்லிம் மக்கள் தாங்கள் விரும்பும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது இலங்கை அரசியலமைப்பில் எழுதப்படாத விதியாகும். எனினும், இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மலையகத் தமிழர்களும், முஸ்லிம்களும் தங்கள் பிராந்தியங்களில் போட்டியிடும் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். அவர்கள் தங்கள் மக்களின் பிரதிநிதிகளாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். ஆனால் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் தமது தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள். வடக்கு - கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் சிங்களப் பிரதிநிதிகள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது. இதன் காரணமாகவே வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிடப்படுகின்றன, ஆனால் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு சிங்களப் பிரதிநிதிகளும் அது சிங்களக் குடியேற்றம் அல்ல என்றும் வடக்கு கிழக்கு சிங்கள மக்களின் வரலாற்று வாழ்விடமாகும் என்றும் கூறுகின்றனர். 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தில், வடக்கு-கிழக்கு 'வரலாற்று வாழ்விடங்கள்' என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயேர் ஆட்சியில் தொடங்கியது இது தமிழர்களின் பாரம்பரிய தாயகம் அல்லது தமிழ் முஸ்லிம் மக்களின் தாயகம் என்று குறிப்பிடப்படவில்லை. 13வது திருத்தச் சட்டத்தை அரசியல் தீர்வாக தமிழர்கள் ஏற்க மறுத்ததற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் தமிழ் முஸ்லிம் மக்கள் வடக்கு கிழக்கு தமது பாரம்பரிய பிரதேசம் என்று கூறி வருகின்றனர். தமிழர்கள் இன்றும் வடக்கு கிழக்கு தமது பாரம்பரிய தாயகம் என்று நம்புகிறார்கள். விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தினால் வடக்கு - கிழக்குப் பிரச்சனை உருவானது என்று சிங்கள அரசியல் கட்சிகள் இன்னமும் சிங்கள மக்களுக்குக் காரணம் காட்டி வருகின்றன. ஆனால் இந்த பிரச்சனை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கியது. 1920இல் 'இலங்கைத் தேசிய இயக்கம்' பிளவுபட்டு 1921இல் 'தமிழ் மகா சபை'உருவானபோது எழுந்த சிங்கள-தமிழ் முரண்பாடு 1930இல் டொனமூர் மற்றும் 1947இல் சோல்பரி அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது மேலும் விரிவடைந்தது. பாடசாலை மாணவர்களுக்கான வரலாற்று பாடப்புத்தகங்களில் கூட இது பற்றிய கதைகள் உள்ளன. இப்போது நீளம் கருதி இந்த வரலாறுகளை முழுமையாக ஆராய விரும்பவில்லை. ஆனால் இந்த வரலாறுகளின் பின்னணியில்தான் வடகிழக்கு தமிழர்கள் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முதல் முறையாக பொது வேட்பாளரை நிறுத்த நினைக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும். தமிழ் வாக்காளர்கள் தேவை 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் பின்னர், முதன்முறையாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் தேவை என்று தமிழர்கள் உணர்ந்தனர். ஏனெனில் 2009க்குப் பிறகு 15 வருடங்களில் குறைந்தபட்ச அரசியல் தீர்வைக் கூட வழங்க இலங்கை அரசு விரும்பவில்லை என்பது தமிழர்களின் குற்றச்சாட்டாகும். 1960களில் வி.நவரத்தினம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தைச் செல்வா), அமிர்தலிங்கம் போன்ற தமிழ்த் தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அகிம்சைப் போராட்டம் எந்த அரசியல் தீர்வையும் காணத் தவறியது. அதன் பின்னர் 1970களில் தமிழ் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தினால் தமிழர்களின் அரசியல் அதிகாரப் பகிர்வைப் பெற முடியவில்லை. போராட்டமும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழர்கள் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டதாக உணர்கிறார்கள். 2009ல் அமெரிக்கா, இந்தியா போன்ற வல்லரசு நாடுகள் இறுதிப் போருக்கு இலங்கை அரசுக்கு ஆதரவளித்தன. இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நிதியுதவியும் வழங்குகின்றன. அரசியல் தீர்வை முன்வைக்காத இலங்கை அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு இச் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு கடும் அழுத்தத்தை மட்டுமே கொடுத்து வருகின்றன. பொருளாதார உதவிகளை வழங்கும்போது அரசியல் தீர்வையும் முன்வைக்க வேண்டும் அல்லது இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் இலங்கைத்தீவில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மாத்திரமே அறிக்கை விடுவார்கள். 2012ஆம் ஆண்டு முதல் ஜெனிவா மனித உரிமைச் சபையில் போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் அரசியல் தீர்வுகளுக்கு இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் என்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் 2009 ஆம் ஆண்டு முதல் 15 வருடங்களாக இலங்கை அரசாங்கம் எந்தவொரு அரசியல் தீர்வையும் முன்வைக்கவில்லை. பொறுப்புக்கூறல் இல்லை. 2020ல் அப்போதைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் ஜெனிவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தைப் பகிரங்கமாக நிராகரித்தது. ஆனால், 2009ல் நடந்த போரை ஆதரித்த அமெரிக்கா, இந்தியா போன்ற சர்வதேச நாடுகள் தீர்மானம் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக கோட்டாபய அரசாங்கத்திடம் எதுவுமே கேட்கவில்லை. மாறாகத் தமக்குரிய பிராந்திய புவிசார் அரசியலில் கவனம் செலுத்தி, வடக்கு கிழக்கில் தங்களுக்குத் தேவையான இயற்கை வளங்களையும் அரசியல் பொருளாதார நலன்களையும் பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமே இந்த நாடுகளின் பிரதான நோக்கமாக இருந்து வருகின்றது. கவலை தெரிவித்த சம்பந்தன் ஆனால், இலங்கைத் தீவிற்குள் நிரந்தர அரசியல் தீர்வும் இல்லை, தமிழர்களுக்கு நீதியும் இல்லை.எனவே, சர்வதேச நீதி கிடைக்கும், குறிப்பாக 2009க்குப் பிறகு, சர்வதேச நீதி வேண்டும் என்ற வலுவான நம்பிக்கையுடன், தமிழர்கள் சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அது அவர்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் என்றும் நம்புகின்றனர். 2020 ஜனவரியில் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய ஆர்.சம்பந்தன், 2009ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள அமெரிக்க-இந்தியத் தூதுவர்கள், விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்ட பின்னர், தமிழர்களுக்கு நிரந்தரமான, நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார். எவ்வாறாயினும் பத்து வருடங்கள் கடந்த பின்னரும் இன்று வரை அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லை எனவும் சம்பந்தன் தனது உரையில் கவலை தெரிவித்துள்ளார். அந்த உரையில் சம்மந்தன் தான் ஏமாற்றம் அடைந்ததாகவும் சுட்டிக்காட்டினார். ஆனால் 2009க்குப் பின்னரான சூழலில் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் இலங்கையில் பொருத்தமான அரசாங்கத்தை அமைப்பதில் முழுக் கவனத்தையும் செலுத்துகின்றன. 2010, 2015 மற்றும் 2020 ஆட்சி மாற்றங்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. குறிப்பாக 2015ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அனைவரின் நம்பிக்கையையும் வீணடித்தது. ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த வல்லரசுகள் கூட மைத்திரி - ரணில் அரசாங்கத்திடம் இருந்து தாம் நினைத்த எதையும் சாதிக்க முடியவில்லை. சந்திரிக்கா ஆட்சி 1994 இல் வடகிழக்கு தமிழர்கள் ஏகமனதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வாக்களித்திருந்தனர். ஆனால் அவரது பதினொருஆண்டு கால ஆட்சியில் போர் மாத்திரமே நடந்தது. 2000 ஆம் ஆண்டு சந்திரிகாவின் பலவீனமான ஆட்சி பல அரசியல் நெருக்கடிகளையும் கண்டது. எனவே இலங்கைத் தீவிற்குள் முழுமையான அரசியல் அதிகாரப் பகிர்வு மாத்திரமே நிலையான சமாதானத்திற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் உகந்தது என்பதைச் சர்வதேச நாடுகள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டன. எனினும், இந்த வரலாறுகள் பற்றிச் சர்வதேச சமூகம் அறியாதவை அல்ல. எனவே இந்த வரலாறுகளைப் புரிந்து கொண்டு வேறு மாற்று அணுகுமுறைகளை கையாளாமல் மறைமுகமாகவும் நேரடியாகவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு சாதகமான ஒருவரை இந்த நாடுகள் தேடி வருகின்றன. ஆனால் இந்த நாடுகள் இலங்கை அரசியலில் தலையிடுவதில்லை என அவ்வப்போது மறுத்தும் வருகின்றன. இந்தப் பின்னணியில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்து சர்வதேச நீதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த சிவில் அமைப்புக்கள் கலந்துரையாடி வருகின்றன. இங்கு தமிழ் பொது வேட்பாளர் எத்தனை வாக்குகளைப் பெறுகிறார் என்பதை விட, தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் முக்கியமானவை. சர்வதேச நீதியே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வாகும் என்பதை அக் காரணங்கள் பகிரங்கப்படுத்துகின்றன. அது்துடன் இது தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துகிறது. இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் தன்மை பற்றி உலகுக்கு உணர்த்துகிறது. தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சேர்ந்த சிலர் கொழும்பை மையப்படுத்திய சிங்கள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஆதரவாகவும் சில வெளிநாடுகளின் விருப்பத்துக்கு ஏற்பவும் செயற்படுவது உண்மைதான். அதை மறுக்க முடியாது. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் சில தமிழ் உறுப்பினர்கள் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர். தமிழர்களின் அரசியல் விடுதலை உணர்வு இதனால் தமிழ் தேசிய கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ள இந்த சந்தர்ப்பங்களைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சில சக்திகள் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் தமிழர்களின் அரசியல் விடுதலை உணர்வுகளை முடக்க முயற்சிக்கின்றனர். அதே சமயம் தமிழர்கள் உண்மையான அரசியலை ஏற்க வேண்டும் என்று சில தமிழ் முற்போக்கு சிந்தனையாளர்கள் வலியுறுத்துகின்றனர். இருப்பதை எற்க வேண்டும் என்கிறார்கள், இணக்க அரசியலுக்குள் செல்ல வேண்டும் என்கின்றனர். ஆனால் 'உண்மையான அரசியல்' மற்றும் 'இணக்க அரசியல்' ஆகியவற்றின் வரையறை எப்போதும் கேள்விக்குரியது. தமிழீழ விடுதலைப் புலிகளால் நிலையான அரசியல் தீர்வை முன்வைக்க முடியவில்லை என்று கடந்த முப்பது வருடங்களாக இலங்கை அரசு வாதிட்டு வருவது உலகம் அறியாதது அல்ல. ஆனால் விடுதலைப் புலிகள் இல்லாத கடந்த 15 வருடங்களில் என்ன நடந்தது என்பதைச்சர்வதேச சமூகத்திற்கு உணர்த்துவதற்காகவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தீர்மானத்திற்கு சிவில் சமூக அமைப்புக்கள் தயாராகி வருவதாக யாராவது கூறினால் அதில் மாற்றுக் கருத்து இல்லை. அ.நிக்ஸன் https://oruvan.com/sri-lanka/2024/05/10/can-tamils-and-muslims-become-president
  2. சர்வதேச நீதிமன்ற விவகாரம் நுட்பமாக கையாளும் இலங்கை சர்வதேச நீதி என்பது உலக நாடுகளின் புவிசார் அரசியல் நலன்களில் தங்கியுள்ளது. ரோஹிகின்ய முஸ்லிம்களுக்கு நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்கும் பிரித்தானியா, காசாவில் நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்கத் தயங்கும் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு சர்வதேச அரசியலை இலங்கை நன்கு கையாளுகின்றது, காய் நகர்த்துகின்றது. ஆனால் தமிழ்த்தரப்பு? அ.நிக்ஸன் காசாவில் நடப்பது இன அழிப்பு என்று தென்னாபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்துள்ளதை அமெரிக்கா கண்டித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் அமைதியாக இருக்கின்றன. ஆனாலும் அமெரிக்காவை விடவும் ஐரோப்பிய நாடுகள் காசாவில் நடக்கும் மனிதப்படுகொலைகளை கண்டிப்பதுடன் இஸ்ரேல் அரசு மீதும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. காசாவில் தொடரும் உயிரிழப்புகள் ஏற்க முடியாதவை என நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் இந்தியா அறிவித்துள்ளது. பலஸ்தீன காசா பகுதியில் நிலவும் சூழல் குறித்து இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை தெரிவித்து உரையாற்றும் போது இந்தியாவின் ஐ.நாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் இவ்வாறு கூறியிருக்கிறார். ஆனாலும் இஸ்ரேல் அரசுடன் இந்திய மத்திய அரசு கொள்கையளவில் கைகோர்த்திருக்கிறது. தென்னாபிரிக்க அரசு இன அழிப்பு என்று வழக்குத் தாக்கதல் செய்திருப்பதை இந்திய மத்திய அரசு இதுவரையும் பகிரங்கமாக வரவேற்கவில்லை. மதில்போல் பூனை போன்று உள்ளது. ஆகவே அமெரிக்க – இந்திய அரசுகள் இஸ்ரேலுடன் நிற்பதை அறிந்தே தென்னாபிரிக்கா தாக்கல் செய்த வழக்கை தமிழ்த்தேசிய அரசியலில் ஈடுபடும் தமிழ்க் கட்சிகளும் பகிரங்கமாக வரவேற்கவில்லை என்பது தெரிகிறது. தமிழ் சிவில் சமூக அமைப்புகளும் பாராட்டவில்லை. இஸ்ரேலுடன் இணைந்து கமாஸ் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்பதில் அமெரிக்க இந்திய அரசுகள் ஓரணியில் நிற்கின்றன. தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் வல்லரசுகளிடையே எழுந்துள்ள அரசியல் போட்டியில் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா முற்று முழுதாக மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பாளனாக மாறியிருக்கிறார். அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளின் எதிராலியாக தென்னாபிரிக்கா, சர்வதேச நீதிமன்றத்தில் பலஸ்தீன மக்கள் சார்பில் காசாவில் நடப்பது இன அழிப்பு என்று பகிரங்கப்படுத்தி வழக்கும் தாக்கதல் செய்திருந்தாலும் அதனை பலஸ்த்தீன புலம்பெயா் அமைப்புகள் நன்கு பயன்படுத்தி வருகின்றன. சென்ற வியாழக்கிழமை ஆரம்பித்த முதல் நாள் விசாரணையில் தனது தரப்பு வாதங்களை தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. காசாவில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தென்னாபிரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க மாநில அரசுகளின் உறுப்பினர்கள் இருநூறு பேர் காசாவில் போர் போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். சென்ற ஒக்ரோபர் ஏழாம் திகதி போர் ஆரம்பிக்கப்பட்ட நான்கு மாதங்களுக்கும் குறைவான நிலையில் காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தையும் கடந்துள்ளதாகவும் இதனால் போரை நிறுத்துமாறும் அமெரிக்க உள்ளூர் பொது அமைப்புகளும் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியிருக்கின்றன. சர்வதேச நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க எழுநூறு இஸ்ரேல் மக்கள் விரும்பம் தெரிவித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்களே செய்தி வெளியிட்டிருக்கின்றன. இஸ்ரேலிய மக்களின் எழுபத்து ஐந்து சதவீதமான மக்கள் காசாவில் போர் நடப்பதை விரும்புகின்றனர் என்றும் இந்த நிலையில் எழுநூறு பொது மக்கள் பலஸ்தீன மக்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுகின்றன. இன அழிப்பு என்று தென்னாபிரிக்கா வழக்குத் தாக்கதல் செய்துள்ளதால் கணிசமான அளவு இஸ்ரேலிய மக்களுக்கு அச்சம் ஏற்பட்டு விட்டதாக அரபு ஊடகமான நியுஅரப் (newarab) என்ற ஆங்கில செய்தி இணையத்தளம் கூறுகின்றது. மியன்மாரில் ரோகின்கிய முஸ்லிம் மக்களுக்கு நடப்பது இன அழிப்பு என்று சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்கு விசாரணைக்கு முழுமையான ஆதரவு வழங்கி வரும் பிரித்தானியா, காசாவில் நடப்பது இன அழிப்பு என்று தென்னாபிரிக்கா தாக்கல் செய்துள்ள வழக்குத் தொடர்பாக அமைதியாக இருக்கின்றது. சட்ட ஆதாரங்களை தேட வேண்டும் என்று மாத்திரம் பிரித்தானியா கூறியிருக்கிறது. அதேபோன்று கனடாவும் கூறுகின்றது. காசாவில் நடப்பது இன அழிப்புத் தொடர்பான சா்வதேசச் சட்டங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கனடா வலியுறுத்தியிருக்கிறது. தென்னாபிரிக்க அரசு மேற்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது என்பதால், பிரித்தானிய, கனடா போன்ற நாடுகள் தென்னாபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குக்கு ஆதரவு வழங்கத் தயங்குகின்றன. ஆகவே ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலில் குழப்பியிருந்த உலக அரசியல் ஒழுங்கு தற்போது இஸ்ரேல் – கமாஸ் போர் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து மேலும் குழப்பமடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. தென்னாபிரிக்கா வழக்குத் தாக்கல் செய்த பின்னர் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையேயான உலக அரசியல் அணுகுமுறையில் முன்னுக்குப் பின்ன முரணான வாதங்கள் எழுந்துள்ளதையும் அவதானிக்க முடியும். இந்த அரசியல் சூழ்நிலையை இலங்கை நன்கு பயன்படுத்துகிறது குறிப்பாக முள்ளிவாய்க்கால் போரில் சுமார் நாற்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டும் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் காணாமல் போயிருப்பதாகவும் 2010 இல் வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனாலும் இன அழிப்பு என்று எந்த ஒரு நாடும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முன்வரவில்லை. இதற்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச இந்தியாவைக் கையாண்ட அணுகுமுறையே காரணம் என்பது வெளிப்படை. நான்கு மாதங்களில் 23 ஆயிரும் மக்கள் கொல்லப்பட்ட பின்னர் காசாவில் நடப்பது இன அழிப்பு என்று தென்னாபிரிக்கா வழக்குத் தாக்கல் செய்ததை உணர்ந்தும் அச்சமடைந்த நிலையிலும் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. சர்வதேசத்தை நுட்பமாகக் கையாள ஆரம்பித்திருக்கிறார். தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதை மத்திய கிழக்கு நாடுகள் வரவேற்றுள்ளன. இப் பின்னணியில் மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களுடன் ரணில் விக்கிரமசிங்க சென்ற புதன்கிழமை பேச்சு நடத்தியிருக்கிறார். தூதுவர்களுடன் பேசப்பட்ட விடயங்கள் எதுவும் ஊடகங்களில் வெளிவரவில்லை. ஆனால் மத்திய கிழக்கு பிராந்தியம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பாக ரணில் தூதுவர்களிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, ஏனைய கொழும்பில் உள்ள மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளின் தூதுவர்களையும் ரணில் சந்தித்துக் கலந்துரையாடுவார் என்று கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில் குழப்பியுள்ள உலக அரசியல் ஒழுங்குச் சூழலில் எந்த ஒரு சிறி நாடுகளின் ஒத்துழைப்புகளும் அமெரிக்கா போன்ற வல்லரசுகளுக்கு தேவைப்படுகின்றன. அதேபோன்று சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் ஏதாவதொரு சிறிய நாடுகளைப் பயன்படுத்தக் கூடும் என்ற அச்ச நிலை இலங்கைக்குத் தற்போது உருவாகியுள்ளது. குறிப்பாக கனடா, இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று கூறி வருகின்றது. அதுவும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியாக கனடா புலம்பெயர் தமிழர்களின் வாக்குகளை மையமாகக் கொண்டு பேசி வருகின்றன. சில சமயங்களில் கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் தமிழ் இனஅழிப்பு என்பது இணைக்கப்பட்டால் அதனை மையமாகக் கொண்டு வேறு சில சிறிய நாடுகளைப் புலம்பெயர் தமிழர்கள் பயன்படுத்துவார்கள் என்று கருதியே அதனைத் தடுக்கும் முன்னேற்பாடுகளில் இலங்கையின் வெளியுலக இராஜதந்திர சேவை அதிகளவு கவனம் செலுத்துகின்றது. மத்திய கிழக்கு நாடுகளைச் சந்தித்து பலஸ்தீன மக்களுக்கு இலங்கை முழு ஆதரவு என்று ரணில் உறுதியளித்திருந்தாலும், அமெரிக்க – இந்திய அரசுகளைப் பகைத்துகொள்ளாத முறையில் இஸ்ரேல் அரசுடன் இலங்கை முழு அளவில் மறைமுகமாகக் கைகோர்த்திருக்கிறது என்பதுதான் உண்மை. 1983 இல் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் வடக்குக் கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து இஸ்ரேல் ஆலோசனை வழங்கியிருந்தமையும் தற்போது ஆதரவு வழங்கக் காரணம். இலங்கையைப் பொறுத்தவரை தற்போதைக்குச் சீனாவை ஓரளவுக்குத் தூரத் தள்ளிவைப்பது போன்றதொரு தோற்றத்தைக் காண்பித்தாலும், சீனாவுக்குத் தாக்கம் எழாத முறையில் அமெரிக்க – இந்திய அரசுகளை இலங்கை அரவனைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கான காரண – காரியம் என்பது குழப்பியுள்ள உலக அரசியல் ஒழுங்கு நிலைமைக்குள் கனடா ஊடாக வேறு சிறிய நாடுகளை புலம்பெயர் தமிழர்கள் நாடிவிடக் கூடும் என்ற அச்சமே. இலங்கையும் முற்று முழுதாகச் சீனாவின் பக்கம் செல்வதைத் தடுக்கும் நோக்கிலேயே ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்பதைக் கனடாவின் பிரதான அரசியல் கட்சிகள் மூலமாக அமெரிக்கா சொல்ல வைக்கிறது என்ற அவதானிப்புகளும் இல்லாமில்லை. அதேநேரம் காம்பியா என்ற ஆபிரிக்காவின் சிறிய நாடு ஒன்றுதான் ரோஹின்கிய முஸ்லிம் மக்களுக்கு நடப்பது இனஅழிப்பு என்று சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறது. இதனை பிரித்தானியா முழுமையாக ஆதரித்து வருகின்றது. ஆகவே இவ்வாறான ஒரு பின்னணி புலம்பெயர் அமைப்புகளுக்கு வந்துவிடும் என்ற அச்சம் மற்றும் எதிர்வுகூறல் இலங்கைக்கு உண்டு. இதற்கு ஏற்ப பல அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இலங்கைத்தீவுக்குள்ளும் வெளியுலகத்திலும் ஆரம்பிக்கப்பட்டு அரங்கேறி வருகின்றன. இலங்கையின் இத் திட்டத்திற்கு ஜேர்மன், சுவிஸ்லாந்து போன்ற நாடுகளும் ஒத்துழைகை்கின்றன. ஆனால் தமிழ்த்தரப்பில் இந்த உத்திகள் எதுவுமே இல்லை. தமிழரசுக் கட்சியின் தலைவர் போட்டி, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது மற்றும் போலித் துவாரகா பற்றிய ஆய்வுகளையே தமிழ்த்தரப்பு செய்து கொண்டிருக்கிறது. பல தமிழ் ஊடகங்களும் இதற்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கின்றன. குறைந்தபட்சம் தென்னாபிரிக்க அரசைப் பாராட்டி ஜனாதிபதி சிறில் ரமபோசாவுக்குக் தமிழ்த்தேசியக் கட்சிகள் கடிதம் எழுதியிருக்கலாம். இன அழிப்பு என்று கூறிவரும் கனடாவின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளான கென்சர்வேற்டீவ், லிபரல் கட்சி ஆகியவற்றின் தலைவர்களுக்குக் கடிதத்தின் மூலம் பாராட்டிருயிருக்கலாம். ஆகவே அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகவும் இந்தியாவின் வஞ்சக அரசியல் செயற்பாட்டுக்குள்ளும் தமிழ்த்தேசியக் கட்சிகள் முடங்கியுள்ளன என்பதையே இது பகிரங்கப்படுத்துகின்றது. 2006 இல் விடுதலைப் புலிகளைத் தடை செய்த கென்சர்வேற்றீவ் கட்சி ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்புத்தான் என்று கூறுவதுடன், பதவிக்கு வந்தால் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே பலஸ்த்தீன மக்களை ஆதரிப்பதாகக் காண்பித்துக் கொண்டு இஸ்ரேல் அரசின் பக்கம் இலங்கை நிற்பது போன்று அமெரிக்க இந்திய அரசுகளுக்குக் இரட்டை வேடம்போடுகின்றது. ஆனால் அரசு அற்ற சமூகமாகக் கடந்த எண்பது வருடங்கள் அரசியல் போராட்டம் நடத்தி வரும் ஈழத்தமிழ்த் தரப்பு, 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஏன் அமெரிக்க – இந்திய அரசுகளுக்கு மாத்திரம் விசுவாசமாக இருக்கின்றன? 2014 வரையும் தென்னாபிரிக்க அரசு ஈழுத்தமிழர் பக்கம் நின்றது. ஆனால் அதனைத் தமிழர் தரப்பு உரிய முறையில் கையாளவில்லை. பிரதிதி ஜனாதிபதியாக இருந்த சிறில் ரமபோசா 2020 இல் தென்னாபிரிக்க ஜனாதிபதியாக வரக்கூடும் என்று கணித்து அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச சிறிரமபோசவை இலங்கைக்குப் பல தடவைகள் அழைத்துப் பேசியிருக்கிறார். ஈழத்தமிழர் பிரச்சினை 2009 இல் முடிவடைந்து விட்டது என்றும் இலங்கையில் இன நல்லிணக்கமே அவசியம் என்றும் போதித்திருக்கிறார். இன்று இமாலயப் பிரகடனத்துக்கு தென்னாபிரிக்கா முழு ஆதரவு வழங்குவதுடன் ஈழத்தமிழர்கள் இலங்கையர்களாக வாழ முடியும் என்றும் கூற ஆரம்பித்துள்ளது. ஆகவே உல அரசியல் விவகாரங்களை அறிந்து நுட்பமாகக் கையாள்வதற்குரிய புதிய இளம் தலைமை ஒன்று ஆங்கில அறிவுடன் உருவாக வேண்டும். இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் வல்லரசாகத் தன்னைக் காணிப்பிக்க முற்படும் இந்தியா, சர்வதேச விவாகாரங்களில் இரட்டை வெளியுறவுக் கொள்கைகளோடு எவ்வாறு பயணிக்கிறது என்பதற்கும், சிறிய நாடான இலங்கை ஈழத்தமிழர் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் இருந்து முற்றாக நீக்கம் செய்ய, மேற்கு மற்றும் ஐரேப்பிய நாடுகளையும் இந்தியாவையும் அதேநேரம் பொருளாதார உதவிகளைப் பெற சீனாவையும் எவ்வாறு நுட்பமாகக் கையாள்கின்றது என்பதற்கும் கண்முன்னே பல உதாரணங்கள், படிப்பினைகள் உண்டு. சர்வதேச நீதி என்பது உலக நாடுகளின் புவிசார் அரசியல் நலன்களில் தங்கியுள்ளது. ரோஹிகின்ய முஸ்லிம்களுக்கு நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்றுக்கொள்ளும் பிரித்தானியா, காசாவில் நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்கத் தயங்கும் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு சர்வதேச அரசியலை இலங்கை நன்கு கையாளுகின்றது, காய் நகர்த்துகின்றது. ஆனால் தமிழ்த்தரப்பு? http://www.samakalam.com/சர்வதேச-நீதிமன்ற-விவகாரம/
  3. இமாலயப் பிரகடனம் – பின்னணியும் வரலாறும் –கூட்டங்களில் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பல தாயக அரசியற் தலைவர்களும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என்ற பெயரில் இயங்குபவர்களும் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன், பிரித்தானியத் தமிழர் பேரவையின் தலைவர் ரவி குமார் (ரூட் ரவி) மற்றும் தாயக சிவில் சமூகச் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான கலாநிதி குமாரவேல் குருபரன் உள்ளிட்டோர் பங்குபற்றியிருக்கின்றனர்— அ.நிக்ஸன்- அதிகளவு சிங்கள உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை ஒற்றை ஆட்சி நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் தேசியச் சிக்கலுக்குரிய தீர்வை முன்வைக்க முடியாது என்பதாலேயே ‘ஈழத்தமிழர் தேசியம்’ என்ற கோட்பாடு எழுந்தது. சிங்களவர் ஈழத்தமிழர் ஆகிய இரு அரசியல் சமூகங்களும் தேசங்களாக ஒற்றையாட்சி நாடாளுமன்றத்திற்கு வெளியே கூட்டாக நின்று நிர்வாக அதிகாரத்தை அல்ல ஆட்சி அதிகாரத்தைப் பங்கிடுவதன் மூலமே இனப்பிரச்சினைக்குரிய நிரந்தர அரசியல் தீர்வை எட்ட முடியும். இதற்கான கூட்டுச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தமிழ்த் தேசியக் கட்சிகள் தனித்தனியாகச் செயற்பட்டு ஒற்றையாட்சி நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றும் வியூகங்களுடன் மாத்திரம் இயங்கி வருவதால் மிகவும் பலவீனமான நிலைமை அதலபாதாளமாக வெளித் தோற்றத்துக்குத் தெரிகிறது. ஆனால், மக்கள் மட்டத்தில் நீறுபூத்த நெருப்பாக தேசிய நிலைப்பாடு வேரூன்றியுள்ளது. இந்தச் சூழலில் புலம்பெயர் அமைப்புகளின் கூட்டு என்று தவறாகக் என்று கூறிக் கொள்ளும் சில தனிநபர்களின் கூட்டு ஒன்று வல்லாதிக்க நாடுகளின் புவிசார் அரசியல் – பொருளாதார நலன்களைக் கருத்திற்கொண்டு இயங்கும் தன்னார்வ சக்திகளால் தயார்ப்படுத்தப்பட்டு மக்கள் மயப்பட்ட தேசிய நிலைப்பாட்டை நிலைமாறச் செய்யும் கைங்கரியத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதுவே உலகத் தமிழர் பேரவை. ‘யதார்த்த அரசியல்’ என்று பேசுவோரும் ‘முற்போக்குத் தமிழர்’ மற்றும் ‘மிதவாத அரசியல் தலைவர்கள்’ என்று மார் தட்டுவோரும் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் மிதமிஞ்சியுள்ள சூழலைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை நுட்பமாக மறுதலிக்கவும், ‘இன நல்லிணக்கம’ ‘மத நல்லிணக்கம்’ என்ற போர்வையில் மீண்டும் இணக்க அரசியற் பொறிக்குள் ஈழத்தமிழர் தேசிய அரசியலைத் தள்ளிவிடவும் வெளிப்பட்டுள்ளார்கள். இது ஒன்றும் புதிய போக்கு அல்ல. பழைய பொறிகளின் புதிய தொடர்ச்சியே. 2015 மைத்திரி-ரணில் அரசாங்கத்தில் ஆரம்பித்த இந்த ‘நல்லிணக்கப் பொறி’ கோட்டாபய ராஜபக்ச 2020 இல் ஜனாதிபதியான பின்னர் வேறொரு வடிவை எடுத்தது. தமது திட்டங்களுக்கு ஒத்துழைக்க கோட்டபாய மறுத்தபோது ஆட்சிமாற்ற வேலைத்திட்டத்துக்கு சிங்களத் தரப்புகள் தயார்ப்படுத்தப்பட்டன. அதற்கு தமிழர்களுக்கான சர்வதேச நீதியும் அரசியல் தீர்வும் கிடப்பில் போடப்பட்டது. போலித் தன்மையுள்ள நல்லிணக்கம் என்ற பொருத்தமற்ற கதைக்கும், சென்ற மாதம் போலியாக சித்திரிக்கப்பட்ட துவாரகாவின் பெயரில் வெளியான மாவீரர் நாள் அறிக்கைக்கும் ஒரே பின்புலம் இருப்பது வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ தெரியாது விட்டாலும் இவை இரண்டுக்கும் பின்னால் மறைமுகமான சக்திகள் பின்னணி என்பது பட்டவர்த்தனம். குறிப்பாக 2009 இற்குப் பின்னரான சூழலில் மேற்குலகின் புவிசார் அரசியல் பொருளாதார நலன்களைக் கருத்திற்கொண்டு அரசுகளுக்கும் அவற்றின் தூதரகங்களுக்கும் அப்பால் ஆனால் அதே நலன்களுக்கு ஏற்பச் செயற்படும் பிராந்திய, சர்வதேச மற்றும் உளவு மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் செயற்பாடுகள் ஊடாக விளைந்ததுதான் இந்த இமாலயப் பிரகடனம். சுரேன் சுரேந்திரன் என்பவரின் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை என்ற தனிமனிதர் குழு இந்தச் சர்வதேச தன்னார்வ நிறுவனங்களின் தேவைக்கு இயைந்துள்ளது கண்கூடு. சிறந்த இலங்கைக்கான சங்கபீடம் (Sangha for Better Sri Lanka) என்ற அமைப்பும் சுரேந்திரனின் திட்டத்துடன் இணைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் அப்போதைய அமைச்சரான மறைந்த மங்கள சமரவீரவின் மறைமுக அனுசரணையுடன் இலங்கைக்கு வந்து சில பௌத்த துறவிகளுடன் சுகாதார வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட புலம்பெயர் ஈழத்தமிழர் தனிநபர்ச் செயற்பாட்டாளர் குழுக்கள் அப்போதே தயார்ப்படுத்தப்பட்டிருந்தன. சுயநிர்ணய உரிமையைக் கைவிடுதல், இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை தொடர்பான கோரிக்கைகளைத் தவிர்த்தல், இலங்கை அரச கட்டமைப்புக்குள் ஐக்கியம் என்ற பெயரில் ஒற்றையாட்சிக்குள்ளும் ஒத்துப்போதல் மற்றும் ஈழத்தமிழர் என்ற அடையாளத்தைக் கைவிட்டு இலங்கையர் என்ற அடையாளத்தைத் தழுவுதல் போன்றவற்குத் ஈழத் தமிழ்த்தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை இணங்க வைப்பது இந்தத் தன்னார்வ நிறுவனங்களின் உத்திகளில் ஒன்று. இதனை அடிப்படையாகக் கொண்டு வெளிநாடுகளில், குறிப்பாக ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, ஒஸ்ரியா, ஸ்கண்டிநேவிய நாடுகளில் 2009 ஆம் ஆண்டின் பின்னர் அவ்வப்போது கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டிருக்கின்றன. இக் கூட்டங்களில் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பல தாயக அரசியற் தலைவர்களும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என்ற பெயரில் இயங்குபவர்களும் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன், பிரித்தானியத் தமிழர் பேரவையின் தலைவர் ரவி குமார் (ரூட் ரவி) மற்றும் தாயக சிவில் சமூகச் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான கலாநிதி குமாரவேல் குருபரன் உள்ளிட்டோர் பங்குபற்றியிருக்கின்றனர். இவர்களில் ஒரு சாரார் மேற்கின் நலன்களுக்கு ஒத்துப்போய் தமிழர் நலன்களை ஆகுதியாக்கக் கூடியவர்கள் மறுசாரார் மேற்கின் நலன்களோடு ஒத்துப்போய் பேரம் பேசக் கூடியவர்கள். இரண்டு முனைகளுக்கும் மாறி மாறிப் பயணித்து தாம் யார் என்பதைத் தெளிவாகச் சமுதாயத்துக்கு அடையாளம் காட்டாதவர்களும் இவர்களுள் அடங்குவர். ஆகவே, எவர் எவர் எப்படிப்பட்டவர் என்ற விவாதம் இங்கு அவசியமற்றது. என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக விளங்கிக்கொள்வதே அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அவசியமானது. 2009 ஆம் ஆண்டின் பின்னர் நடந்த இக் கூட்டங்கள் வெவ்வேறாகவும், கூட்டாகவும் தனித் தனியாகவும் மிக இரகசியமான முறையில் மேற்கு நாடுகளின் நகரங்களில விமானப் பயண மற்றும் தங்குமிட வசதிகளை வழங்கி நடத்தப்பட்டன. இக் கூட்டங்களில் பேசப்பட்ட விடயங்கள் எந்த ஒரு ஊடகங்களிலும் நேரடியாக வெளிவராது. ஏனெனில், அவ்வாறு எழுதப்படக்கூடாது என்பது அக்கூட்டத்தை நடாத்திய தன்னார்வ நிறுவனங்களின் ஏற்பாட்டாளர்களால் நிலைப்பாடாக இருந்தது. எங்கே ஒளிவு மறைவாக இருக்கவேண்டும் என்கே வெளிப்படைத் தன்மை பற்றி பேசவேண்டும் என்பதை ஏற்பாட்டாளர்களே கையாளுவர். ஆனாலும் கூட்டங்களில் பேசப்பட்ட விடயங்களை இந்தத் தன்னார்வ நிறுவனங்களின் ஏற்பாட்டாளர்கள் ஒரு விடயத்தில் குறியாக இருப்பர். பேசி உடன்பட்டவற்றை, அல்லது உடன்படாதவற்றைக் கூட ஏதோ ஒரு வகையில் ஒரு அறிக்கையாகத் தொகுத்துக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரின் ஒப்புதலைப் பெற்றது போல ஆவணப்படுத்திக் கொள்வர். இருந்தபோதும், இக் கூட்டங்களில் நடந்த பல விடயங்கள் வெளியே அரசல் புரசலாக அவ்வப்போது கசிந்திருக்கின்றன. இக் கூட்டங்களில் கலந்துகொண்ட சுரேன் சுரேந்திரன் போன்ற சிலரைத் தவிர்ந்த ஏனைய ஈழத்தமிழர் பிரதிநிதிகளுள் பலர் ஈழத்தமிழர்களின் அரசியல் பயணம் தொடர்பான பிரதான காரண-காரியங்களை விட்டுக்கொடுக்காமல் வலியுறுத்தியும் வந்துள்ளார்கள். ஆனாலும் ‘உங்கள் இலக்கு’ அதாவது சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட அரசியற் தீர்வு என்ற இலக்கை அடைவதற்கு கூட்டத்தில் தங்களால் முன்மொழியப்பட்ட விடயங்களை ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் பின்னர் பையப்பைய உங்கள் இலக்கை அடைய முடியும் எனவும் இந்தத் தன்னார்வ நிறுவனங்கள் தமது போதனைகளாக அவ்வப்போது அறிவுறுத்தி வந்துள்ளன. சுயநிர்ணய உரிமையைக் கைவிடுதல், இன அழிப்பை சர்வதேச விசாரணைக்கு உள்ளாக்கவேண்டும் என்ற கோரிக்கையை நழுவவிடுதல், இலங்கையர் என்ற அடையாளத்தை ஒப்புக்கொள்ளுதல் என்ற பிரதான நோக்கங்களை சுமந்திரன், சுரேன் சுரேந்திரன் ஆகிய சிலரைத் தவிர ஏனையோர் ஏற்க மறுத்திருந்தனர். இதன் காரணமாக இத் தன்னார்வ நிறுவனங்களின் இத்தகைய செயற்பாடுகள் பிசுபிசுத்துப் பேயிருந்தன. 2009 இற்கு முன்னர் அல்லது 2009 இல் உருவாகி உலகம் முழுவதிலும் மக்கள் ஆதரவோடு செயற்பட்டு வந்த பதினான்கு புலம்பெயர் அமைப்புகளை இணைத்து கூட்டாக உலகத் தமிழர் பேரவை 2009 இல் உருவாக்கப்பட்டது. அந்தக் கூட்டின் முதல் தலைவராக இலங்கையில் கடந்த காலத்தில் ஒலிம்பிக் வீரராக புகழ்பெற்று பின்னர் அமெரிக்காவில் வதிந்துவரும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் என்பவர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவரின் நண்பர்கள் பலரும் இவரை ‘எதிர்’ என்று அழைப்பர். இவர் ரவி குமாருடைய நெருங்கிய நண்பராகவும் பல காலத் தொடர்புடையவர் என்று இவர்கள் இருவரையும் நன்கு அறிந்த பிரித்தானிய வட்டாரங்கள் கூறுகின்றன. 2010 இல் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியபோது தமிழர்கள் சார்பான பொது வேட்பாளராக எதிரைப் போட்டியிடுமாறு அமெரிக்கத் தரப்புகள் அறிவுரை வழங்கியிருந்தன. இது அப்போதிருந்த உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பின் அங்கத்துவ அமைப்புகள் பலவற்றுக்கும் கேள்வியை எழுப்பியது. இலங்கையின் கட்சி அரசியலுக்குள் செல்லுமாற வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி உள்ளிட்ட தமிழர் தரப்புக் கட்சிகளை எதிர்வீரசிங்கம் நாடியிருந்தார். ஆனால் கஜேந்திரகுமார் போன்றோர் அதை நுட்பமாக மறுத்துவிட்டனர். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வைப்பதன் மூலம் இலங்கையர் என்ற அடையாளத்துக்குள் ஈழத்தமிழர்களைத் தள்ளிவிட்டு நல்லிணக்க அரசியலைத் தனது நலன்களுக்கு ஏற்றவாறு முன்னெடுக்கலாம் என்ற ஒரு எதிர்பார்ப்புடன் அமெரிக்கத் தரப்பு எதிருக்கு இதை அறிவுறுத்தியிருந்ததாக தகவல் அறிந்த வட்டாரஙகள கூர்மைக்குத் தெரிவித்தன. இந்த நிலையில் எதிரை உலகத் தமிழர் பேரவையில் இருந்து ஓய்வு பெறுமாறு புலம் பெயர் அமைப்புகளால் வலியுறுத்தப்பட்டதால் அவர் நாகரீகமாக ஒதுங்கிக்கொண்டதாகவும் தகவல். இப்படிப் பல முயற்சிகள் தோல்வியடைந்த பின்னணியிலேதான் 2013 இல் முன்னாள் அமைச்சர் அமரர் மங்கள சமரவீரவை மையப்படுத்தி சிங்கப்பூரில் நடத்தப்பட்ட மாநாட்டில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன. இந்த மாநாட்டில் சுமந்திரன், சுரேன் சுரேந்திரன் மற்றும் கொழும்பில் இருந்து நிமல்கா பெர்ணாண்டோ போன்ற சிங்கள மிதவாதிகள், உள்ளிட்ட பலர் பங்குபற்றியிருந்தனர். இலங்கையர் என்ற அடையாளத்துடன் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பதை மையமாகக் கொண்ட சிங்கப்பூர் தீர்மானங்கள் ஏறத்தாழ இரண்டுவருடங்களாக இரகசியமாகப் பேணப்பட்டன. இருந்தபோதும் 2015 இல் இவை மெதுவாகக் கசிய ஆரம்பித்தன. காலப் போக்கில் சிங்கப்பூர் தீர்மானமும் பிசுபிசுத்துப் போகவே சுரேன் சுரேந்திரன் உள்ளிட்டவர்கள் தமிழ்த் தரப்பின் வெறுப்புக்கு மேலும் உள்ளானார்கள். இதையெல்லாம் அறிந்து கொண்ட தன்னார்வ நிறுவனங்கள் தமது திட்டங்களை மீளாய்வு செய்து மேலும் இரகசியமாக செயற்பட்டனர். அந்த முயற்சியின் தற்போதைய வெளிப்பாடுதான் இமாலய பிரகடனம். ஒருபுறத்தில் உலகத் தமிழர் பேரவை எனும் தனிநபர்க்குழுவின் நகர்வுகள் மேற்கு நாடுகளில் இருக்கின்ற தன்னார்வ நிறுவனங்களையும் தென்னாபிரிக்காவையும் மையப்படுத்தி செயற்படும்போது, மறுபுறத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையானது பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்திய ஆளும் தரப்பான பா.ஜ.கா வையும் நோக்கிச் செயற்படுகின்றது. அதுமட்டுமல்ல, பிரித்தானியத் தமிழர் பேரவை பிரிக்க முடியாத இலங்கை தான் தீர்வு என்று வெளிப்படையாகச் சொல்லத் தயங்கும். ஆனால் உலகத் தமிழர் பேரவை அவ்வாறு வெளிப்படையாகவும் கூறத் தயாராக இருக்கும். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஈழத்தமிழர் தொடர்பான விவாதத்தை ஏற்படுத்துவதில் பிரித்தானிய தமிழர் பேரவையும் பின்னணியில் இயங்கியிருந்தது. இந்த விவாதத்தில் சுயநிர்யணய உரிமை, இன அழிப்பு மற்றும் பொறப்புக் கூறல் தொடர்பாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இலங்கை அரசு என்பவை சுட்டிக்காட்டப்பட்டுக் கேள்விகள் எழுப்பப்ட்டபோதும் பிரித்தானிய அரசின் பிரதிநிதி அவற்றுக்குப் பதிலளிக்காமல் சுற்றிவளைத்துப் பதிலளித்தார். குறிப்பாக போர்க்குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டப்படும் இராணுவத் தளபதிகளில் ஒருவரான சவேந்திர சில்வா போன்றவர்கள் மீது தடைகளைக் கொண்டுவரவேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்குப் பகிரங்கமாகப் பதலளிக்க முடியாது என்ற தோரணையில் அவரது பதில் அமைந்திருந்தது. பிரித்தானிய தமிழர் பேரவையையும் உலகத் தமிழர் பேரவை என்ற தனிநபர்க் குழுவையும் ஒப்புநோக்கினால், இரண்டும் ஏறத்தாழ சிறுமைப்பட்டுப் போயுள்ளன என்பதும், இவை இரண்டில் ஒன்று முழுமையாகவே தனிநபர்க் குழு என்பதும் மற்றையது ஓரளவுக்காவது மக்கள் தளத்துக்குக் கட்டுப்படும் போக்குடையது என்பதும் வெளிப்படும். ஆனால், அடிப்படைக் கோரிக்கைகளில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அடகுவைக்கும் சர்வதேச தன்னார்வ நிறுவனங்களின் நோக்கங்கள் இந்த அமைப்புகளைக் குறிவைக்கும் போது ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படும் ஒரு மனநிலையை இந்த இரண்டு அமைப்புகளைச் சார்ந்த முக்கிய நபர்களிடம் காண முடியும். இந்தப் பின்னணியில் தான் சுரேன் சுரேந்திரன் உலகத் தமிழர் பேரவையின் ஊடாக இமாலயப் பிரகடனம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். எதிர்வீரசிங்கம் தலைமைப் பதவியில் இருந்து விலகிச் சென்றதும் அப்போது ஜேர்மனியில் இருந்த அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவல் 2010 இல் உலகத் தமிழர் பேரவைக்குத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். எதிர்வீரசிங்கம் இணக்க அரசியலுக்குள் செல்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே அப்போது அருட்தந்தை இமானுவல் உலகத் தமிழர் பேரவையின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை திரும்பியிருந்த எதிர், 2013 ஜனவரி மாதம் அப்போதைய வடமாகாண ஆளுநர் சந்திரசிறியின் கல்வி மற்றும் விளையாட்டுத்தறை ஆலோசகராக எதிர்வீரசிங்கம் பதவி ஏற்றிருந்தன் மூலம் அவரின் இணக்க அரசியல் அடுத்த படிநிலையில் வெளிப்பட்டது. அப்போது, இமானுவல் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டியிலும் தெளிவுடன் செயற்பட்டார். ஆனால் தலைவராகப் பதவியேற்று அவர் அமெரிக்காவுக்குச் சென்றபோது அங்கு அறிவுறுத்தப்பட்டதன் பிரகாரம் ‘ஐக்கிய இலங்கை’ ‘இலங்கையர் என்ற அடையாளம்’ ஆகியவற்றைப் பேணி ‘இன அழிப்பு’ விசாரணையைக் கைவிட வேண்டும் என்ற வல்லரசுகளின் புவிசார் அரசியல் – பொருளாதார வியூகங்களுக்கு ஏற்பச் செயற்படும் நிலைமைக்கு இமானுவல் அடிகளாரும் தள்ளப்பட்டார். அருட்தந்தை இமானுவல் வயது மூப்பின் காரணமாக செயற்பட முடியாமல் இருந்ததால் அதையும் சுரேன் சுரேந்திரன் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். பின்னாளில் தாயகம் திரும்பித் தற்போது யாழ் ஆயர் இல்லத்தில் இமானுவல் தங்கியுள்ளார். எதிர்வீரசிங்கமும் தாயகத்தில் குடியேறியுள்ளார். இந் நிலையில் தற்போது தனித்து இயங்கும் சுரேன் சுரேந்திரன் சர்வதேச தன்னார்வ நிறுவனங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப மிக இரசகியமாகத் தனிப்பட செயற்பட்டு இமாலயப் பிரகடனம் என்ற திட்டத்தை அரங்கேற்றியிருக்கிறார். அதன் முகவுரை மாத்திரமே ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. உண்மையான உள்ளடக்கத்தை வாசிப்பவர்களுக்குத் தான் அதன் ஆழமான சிக்கல்கள் தெரியவரும். முன்னர் சிங்கப்பூர் தீர்மானம் இரண்டு வருடங்களின் பின்னர் வெளியே கசிந்தது போன்று இந்தப் பிரகடனமும் ஒன்று இரண்டு வருடங்களின் பின்னர் கசிய முன்னதாக, தாமாகவே அதை அவர்கள் பகிரங்கமாக கையளித்து பேசி வருகிறார்கள். நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக்சொல்ஹேய்ம் காலநிலை மாற்றம் குறித்த விவகாரங்களுக்கான இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகராகக் கடமையாற்றினாலும் அவர் சீனாவை முன்னிலைப்படுத்தியே செயற்பட்டும் பேசியும் வருகிறார். தமிழ் நாட்டுக்குள் எரிக்சொல்ஹேய்ம் சில நகர்வுகளை சொல்ஹேயம் முன்னெடுத்தும் வருகிறார். புதுடில்லியுடன் உறவைப் பேணக்கூடிய முறையில் அவருடைய வியூகங்கள் அமைந்துள்ளன. சுரேன் சுரேந்திரனைப் பொறுத்தவரை ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்ற விடயத்தில் எவருடனும் பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கிறார். அந்த அடிப்படையில் அமெரிக்காவுடன் மட்டுமல்ல இந்தியா, தென்னாபிரிக்கா, சீனா போன்ற நாடுகளுடனும் சேர்ந்து பயணிக்கக் கூடிய ஒருவர். இமாலயப் பிரகடனத்தை அவர் எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லக்கூடியவர். இமாலயப் பிரகடனம் தொடர்பாக இந்தியாவுடனும் பேசக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. எவ்வாறாயினும் இத் திட்டம் இலங்கையை கையாளுவதற்கான இணக்க அரசியலை முன்னெடுக்கும் திட்டம்தான். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இத் திட்டம் உண்மையில் யாருக்கானது என்பது, சுரேன் சுரேந்திரனை இயக்கும் குறித்த சர்வதேச தன்னார்வ நிறுவனத்துக்கு மாத்திரமே தெரிந்திருக்கும். அதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மங்கள சமரவீரவின் முயற்சியைத் தொடருகிறார் என்பதற்கும் இத் திட்டம் சிறந்த உதாரணம். சுமந்திரன் பின்னணியாக இல்லாதது போலக் காட்டிக்கொண்டு இருக்கிறாரா என்ற கேள்விகளும் ஐயங்களும் எழுப்பப்பட்டுள்ளன. ஏனெனில் 2015 இல் ரணில் பிரதமராக இருந்தபோது ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி சாத்தியம் என்ற தோரணையில் முன்வைக்கப்பட்ட தீர்வுப் பொதிக்கு ஒப்பானதாகவே இமாலயப் பிரகடனத்திற்குரிய அணுகுமுறை அமைந்துள்ளது. பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டுமென மார் தட்டிய மிலிந்த மொறகொட, இலங்கை ஒற்றையாட்சி அரசின் அமைச்சர்களுக்குரிய முழு அந்தஸ்துடனும் இந்தியாவில் இலங்கைக்கான தூதுவராகக் கடமையாற்றுகிறார். இவர் எரிக்சொல்ஹேய்முடன் மிக நெருக்கமானவர். ஆகவே இலங்கை ஒற்றையாட்சி என்ற கட்டமைப்புக்கு ஏற்றவாறும் வல்லாதிக்க நாடுகளின் புவிசார் அரசியல் – பொருளாதார நோக்கிலும் இமாலயப் பிரகடனம் அமைந்துள்ளது என்பது பகிரங்கமான உண்மை. உலக அரசியல் ஒழுங்கு இன்று குழப்பியுள்ள நிலையிலும் பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் இன அழிப்பு வெளிப்படுள்ளது. இதனால் ‘இரு அரசுகள்’ என்பதுதான் தீர்வு என்ற கருத்து உலகில் தற்போது பலமாகப் பேசப்பட்டு வருகின்றது. இப் பின்னணியில் ஏற்கனவே புஸ்வாணமாகிப் போய்விட்ட போலித் துவாரகா பற்றி இன்னும் தொடர்ச்சியாகப் பல முனைகளில் ஆராய்ந்து கொண்டிருக்கும் சில தமிழ் ஆய்வாளர்கள், இமாலயப் பிரகடனத்தின் பின்புலம் பற்றி ஆராயாமல் அமைதியாக இருப்பதன் நோக்கம் தான் என்ன? இத் திட்டத்தை அமெரிக்காவும் சுவிஸ்லாந்து மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளும் பகிரங்கமாக வரவேற்றிருக்கின்றன. தென்னாபிரிக்க வாழ்த்தியுள்ளது. அமெரிக்கா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நலன்கள் சார்ந்து செயற்பட்டு வரும் ஜேர்மன். சுவிஸ் நாடுகளை மையமாக் கொண்ட சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள், ஈழத்தமிழர் விவகாரத்தில் ஆங்கில மொழி பேசும் நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் நபர்களையே இந்தத் திட்டத்தின் முதற்சுற்றில் ஈடுபடுத்தியிருப்பதையும் இங்கு நோக்க வேண்டும். இத் தன்னார்வ நிறுவனங்களின் தேவைக்கும் அந்த நிறுவனங்களில் தலைமையிலும் நடத்தப்படும் கூட்டங்களில் பங்கொள்ளாமல், தமிழ்த் தேசியக் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் புலம்பெயர்த் தமிழ் அமைப்புகளும் ஒரு புள்ளியில் ஒருமித்த குரலில் செயற்பட்டால் வல்லாதிக்க சக்திகளையும் இலங்கை அரசையும் தமது நலன்களுக்கேற்ப ஒருசேர எதிர்கொள்ள முடியும். மாறியுள்ள உலகச் சூழலில், ஈழத்தமிழர் அரசியல் பேரம் பேசுவதற்கான ஏதுநிலை மீண்டும் தோன்றவுள்ளது என்பதை ஈழத்தமிழர்கள் உணர்ந்து செயற்பட முன்னரே, உளவு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மறுமுனையில் செயற்பட ஆரம்பித்துவிட்டன என்ற ஆபத்தின் அறிகுறியே இந்த இமாலயப் பிரகடனம். தனித்தனியே இதை எதிர்கொள்ளாது, கூட்டாக எதிர்கொள்வதிலேயே ஈழத்தமிழர் அரசியற் பலம் சர்வதேச, பிராந்திய அரங்குகளில் மீண்டும் கருக்கொள்ள முடியும். http://www.samakalam.com/இமாலயப்-பிரகடனம்-பின்னண/
  4. கூட்டுப் பொறுப்பும் முன்கூட்டிய தயாரிப்புமற்ற புதுடில்லிச் சந்திப்பு — சிறிதரன், விக்னேஸ்வரன் குழுவினர் கடந்த வாரம் டில்லிக்குச் சென்றிருந்தமை எந்த நிகழ்ச்சி நிரல்? அதாவது ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் சில புலம்பெயர் அமைப்புகளை அழைத்து கடந்த ஜனவரி மாதம் டில்லியில் மாநாடு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு யூன் மாதம் ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகள் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தன. 2021 இல் பழநெடுமாறன் “வட்டுக்கோட்டைத் தீர்மானம் 2” என்ற மாநாட்டை நடத்தி மோடிக் கடிதம் அனுப்பினார். ஆகவே இச் சந்திப்புகள், மாநாடுகளின் தொடர்ச்சியாகவா அல்லது பிரித்தாளும் உத்தியா? அ.நிக்ஸன்- ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகள் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு ஏற்புடையதல்ல. ஆனால் கட்சி அரசியலுக்குரிய அத்தனை பண்புகளையும் ஜே.வி.பியின் அடித்தள உறுப்பினர்கூட பின்பற்றும் ஒழுக்கம் முதன்மை பெறுகின்றது. கட்சித் தலைமைக்குத் தெரியாமல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்திப்பதில்லை. நாடாளுமன்ற விவாதங்களில் ஒவ்வொரு விடயதானங்களிலும், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மாத்திரமே உரையாற்றுவர். எல்லா விடயங்களையும் எல்லா உறுப்பினர்களும் தாம் நினைத்தபாட்டிற்குப் பேச முடியாது. தேர்தலில்கூட போட்டியிடும் உறுப்பினர்கள் கட்சியின் சின்னத்தை மாத்திரமே பிரச்சாரப்படுத்துவர். விருப்பு இலக்கங்களை ஜே.வி.பி வேட்பாளர்கள் எவரும் தேர்தல் பிரச்சாரத்தின்போது விளம்பரப்படுத்துவதில்லை. கட்சியின் கூட்டுப் பொறுப்பும் கட்சிக்கான முன்னுரிமையும் மட்டுமே தேர்தல் பிரச்சாரங்களில் பிரதான வகிபாகமாக இருக்கும். ஆயுதப் போராட்டம் ஒன்றின் ஊடாக வளர்ச்சியடைந்த கட்சி என்ற கட்டுப்பாடும் ஒழுக்கமும் ஏனைய பிரதான சிங்களக் கட்சிகளைவிடவும் ஜே.வி.பியிடம் புனிதமடைகிறது. ஆனால் எண்பது வருட அரசியல் விடுதலைப் போராட்ட அனுபவம் கொண்ட ஈழத் தமிழ்ச் சமூகத்தின் பழமைக் கட்சியான தமிழரசுக் கட்சியில் “கட்டுப்பாடு” “ஒழுக்கம்” என்ற முதன்மைப் பண்பு இருப்பதாகத் தெரியவில்லை. யாரும் யாருக்கும் கட்டுப்படுவதில்லை. ஆயுதப் போராட்டம் நடத்திப் பின்னர் ஜனநாயக வழியில் அரசியலில் ஈடுபடும் ரெலோ, ஈபிஆர்எல்எப், புளொட் போன்ற இயக்கங்களிடமும் தத்தமது நோக்கங்களுக்குரிய ஒழுக்கத்தைக் காணவில்லை. மாறாகத் தனித்தனி அரசியல் ஈடுபாடும், இந்திய அரசின் சுழிவு நெழிவுகளுக்கு அமைவாக வளைந்து கொடுக்கும் வியூகங்கள் மாத்திரமே விஞ்சிக் கிடக்கின்றன. 2009 இற்குப் பின்னரான சூழலில் தனித்தனிக் குழுக்களாகவும் தனி நபர்களாகவும் பிரிந்து நிற்பதன் பின்னணி என்ன? வல்லாதிக்கச் சக்திகளின் பிரித்தாளும் தந்திரங்களுக்குள் உட்பட்டமைக்கான உள் நோக்கம் என்ன? ஒவ்வொரு தமிழ்த்தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களும் தத்தமது தலைமைக்குத் தெரியாமல் அல்லது தத்தமது கட்சிகளின் மத்திய குழுக் கூட்டங்களில் தீர்மானம் அல்லது குறைந்தபட்சம் உரையாடாமல் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களைத் தனியாகச் சந்திப்பதற்குரிய காரண காரியம் என்ன? “தமிழ்த்தேசியம்” என்பதைக் கருப் பொருளாகக் கொண்டு தனிநபர் முயற்சியுடன் சில புலம்பெயர் அமைப்புகளின் விருப்பங்கள் தேவைகளுக்கு ஏற்பச் செயற்பட்டு பிரபல்யம் அடைவது மாத்திரமே இங்கு முதன்மை நோக்கமாகிறது. இதன் மூலம் தத்தமது செல்வாக்குகளை அதிகரித்து இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்ற ஆசனத்தைக் கைப்பற்றும் தனிப்பட்ட உத்தி என்ற வியூகங்களைத் தவிர ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை என்ற ஒட்டுமொத்தச் சிந்தனை எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. வெவ்வேறு கட்சிகளாக இயங்கினாலும் தமிழர் விவகாரத்தைக் கையாள பொதுப் பொறிமுறை ஒன்றை அமைத்து ஒருமித்த குரலில் செயற்பட வேண்டுமென இப் பத்தியில் ஏற்கனவே பல தடவைகள் ஆலோசனைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. வேறு சில அரசியல் பத்தி எழுத்தாளர்கள் மற்றும் தமிழ்ப் புத்திஜீவிகள் எனப் பலரும் ஒருமித்த குரலில் செயற்பட வேண்டுமென வலியுத்தியுமுள்ளனர். சென்ற 19 ஆம் திகதி கட்சிகளின் ஐக்கியத்தை வலியுறுத்தி யாழ் நகரில் கூட்டம் ஒன்றும் நடைபெற்றிருந்தது. தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் பலரும் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர். ஆனாலும் மீண்டும் மீண்டும் தனித்தனிச் செயற்பாடுகளே மேலோங்கி வருவதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக “வடக்கு கிழக்கு அரசியல் சிவில் புலம்பெயர் அமைப்பு” என்ற பெயரில் சென்ற வாரம் புதுடில்லிக்குச் சென்ற குழு ஒன்று அங்கு பல சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளது. இக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறிதரன், க.வி.விக்னேஸ்வரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சென்றிருக்கின்றனர். இவர்களுடன் அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் தலைவர் கிருஸ்ணபிள்ளை இளங்கோ அமெரிக்க தமிழர் ஐக்கிய அரசியல் செயற்குழுவின் செயலாளர் கலாநிதி. தமோதரம்பிள்ளை சிவராஜ் அமெரிக்கத் தமிழ் செயற்குழுவின் செயலாளர் சுந்தர் குப்புசுவாமி, உலக சமூக சேவை மையத்தின் அறங்காவலர் ஆர்.சி.கதிரவன் மற்றும் ஏற்கனவே சிவில் சமூக அமைப்பாக இயங்கி வரும் துரைசாமி, வேலன் சுவாமிகள் ஆகியோரும் பங்குபற்றியதாக கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழ் கடந்த வியாழக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது. ஆகவே சிறிதரன் இக் குழுவுடன் புதுடில்லிக்குச் சென்றமை தமிழரசுக் கட்சியின் தலைமைக்குத் தெரிந்திருந்ததா? தமிழர்களின் விவகாரம் பற்றிப் பேசப் போகிறார் என்றால் கட்சியின் மத்திய குழுவில் அல்லது கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் கலந்துரையாடினாரா? அல்லது சிறிதரனைத்தான் இச் சந்திப்புக்கு அனுப்புவது என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானம் எடுத்ததா? அதேபோன்று விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் கூட்டணியின் பிரதிநிதிகளுடன் புதுடில்லிக்குச் செல்வது பற்றிக் கலந்துரையாடினாரா? வேறு எவரிடமாவது ஆலோசனை பெற்றாரா? சிறிதரனுக்கும் விக்னேஸ்வரனுக்கு இடையே டில்லியில் சந்திப்பது பற்றிய புரிதல் ஏலவே இருந்ததா? அல்லது ஏற்கனவே இருவரிடமும் ஒருமித்த இணக்கம் இருந்ததா? திடீரென எப்படி புரிதல் ஏற்பட்டது? அல்லது சென்ற 19 ஆம் திகதி யாழ் நகரில் கட்சிகளின் ஐக்கியத்தை வலியுறுத்துவதாக மார்தட்டி நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்குபற்றிய சிறிதரன் யாரிடமாவது டில்லிச் சந்திப்புப் பற்றிக் கசியவிட்டார? சிறிதரனும் விக்னேஸ்வரனும் டில்லிச் சந்திப்புப் பற்றி இரகசியம் காத்ததன் பின்னணி என்ன? டில்லிக்குச் செல்வதற்கு முன்னர் சிறிதரனும் விக்னேஸ்வரனும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உட்பட அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய தமிழ்ப் பிரமுகர்கள் எவருடனும் கலந்துரையாடினரா? இக்குழுவில் சென்ற ஏனைய பிரநிதிகள்கூட இது பற்றிச் சிந்தித்தார்களா? எந்த அடிப்படையில் டில்லியில் பேசுவது? அரசியல் தீர்வாக முன்வைக்க வேண்டிய பிரதான கருப்பொருள் என்ன என்று ஏதேனும் முன்கூட்டிய ஒழுங்குபடுத்தல், தயாரிப்புகள் இருந்ததா? பதின்மூன்றை நடைமுறைப்படுத்துமாறு கோரவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்தவும் ஏன் டில்லிக்குப் போக வேண்டும்? இந்திய இலங்கை ஒப்பந்தத்தை இரண்டு அரசுகளும் தத்தமது தேவைக்கு ஏற்ப 2009 இற்குப் பின்னர் அவ்வப்போது மிக இரகசியமாகப் பயன்படுத்தி வரும் நிலையில், அந்த ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோர இவர்கள் யார் என்று புதுடில்லி தன் மனதுக்குள் கிண்டலாகக் கேட்டிருக்கும் அல்லவா? ஆகவே எண்பது வருட அரசியல் போராட்டத்திற்கான தீர்வு பற்றிய கூட்டுத் தயாரிப்புகள் எதுவுமே இல்லாமல் ஆங்காங்கே குறிப்பிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் மற்றும் வேறு சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் தனித்தனியாக அழைத்துக் கொண்டு புதுடில்லிக்குச் சென்றமை நேர்மையான தமிழ்த் தேசிய நிகழ்ச்சி நிரலா? இந்த வருடம் ஜனவரி மாதம் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் மற்றும் சில புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் டில்லிக்குச் சென்று ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான மாநாடு ஒன்றை நடத்தியிருந்தனர். அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் பேசப்பட்ட விடயங்கள் பற்றிய தொடர்ச்சி என்ன? வெறுமனே ஒரு மாநாட்டோடு மாத்திரம் அந்த நிகழ்ச்சி நின்று விட்டதா? அல்லது இந்த மாநாட்டின் தொடர்ச்சியாகத்தான் சென்றவாரம் புதுடில்லியில் சிறிதரன் விக்னேஸ்வரன் குழுவினர் இந்திய அதிகாரிகளைச் சந்தித்தனரா? பதின்மூன்றை ஆரம்பப் புள்ளியாக ஏற்று அதனை நடைமுறைப்படுத்துமாறு கோரி கடந்த ஆண்டு யூன் மாதம் ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகள் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தன. மோடிக்குக் கடிதம் எழுதும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சட்டத்தரணிகளான சுமந்திரன் கனகஈஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் அமெரிக்காவுக்குச் சென்று பேச்சு நடத்தியிருந்தனர். மீண்டும் கொழும்புக்குத் திரும்பிய சுமந்திரன், ”மோடிக்குக் கடிதம்” எழுதும் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார். புதிய விடயங்களைக் கடிதத்தில் புகுத்தினார். ஆனால் அந்தக் கடிததத்திற்கு இன்றுவரையும் கிடைத்த பதில் என்ன? அதன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட அரசியல் வேலைத் திட்டம் என்ன? 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் “வட்டுக்கோட்டைத் தீர்மானம் இரண்டு” என்று மாநாடு சென்னையில் இடம்பெற்றது. பழநெடுமாறன், காசி ஆனந்தன் மற்றும் தமிழகத்தின் பிரபல தமிழ்த்துறை சார்ந்த பேராசிரியர்கள், வல்லுநர்கள் பலரும் பங்குபற்றினர். சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு கோரி மோடிக்குக் கடிதமும் அனுப்பியிருந்தனர். ஆகவே இந்த மாநாட்டு முடிவின் தொடர்ச்சியாகவே புதுடில்லியில் மேற்படி சந்திப்புகள் இடம்பெற்றதா? அல்லது இவை ஒவ்வொன்றும் வெவ்வேறுபட்ட தனித்தனி நிகழ்ச்சி நிரல்களா? ஆனால் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய பேச்சு என்பது ஒற்றை வார்த்தையில் உள்ளதே! அதாவது 1958 இல் இருந்து 2009 மே மாதம் வரையும் அதன் பின்னரான பௌத்த மயமாக்கல், காணி அபகரிப்புகள் போன்ற தொடர்ச்சிகளைப் பிரதானப்படுத்தி ‘இன அழிப்பு’ என்பதற்கான சர்வதேச விசாரணையை ஒற்றை வார்த்தையில் ஒரு மித்த குரலாக வற்புறுத்தினால் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரம் இயல்பாக வெளிப்படும். ஆனால் இவை பற்றிய பேச்சுக்கள் கைவிடப்பட்டுள்ளன. குறைந்த பட்சம் ஜெனீவா மனித உரிமைச் சபைத் தீர்மானத்துக்கு ஏற்ப சர்வதேச கலப்புமுறைப் போர்க்குற்ற விசாரணைக்குரிய அழுத்தங்களைக் கூட ஒருமித்த குரலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் தொடராக வலியுறுத்தத் தவறியுள்ளன. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் நாடாளுமன்ற ஆசனங்களை அதிகரிக்கும் வியூகங்களில் மாத்திரமே கவனம் செலுத்துகின்றது. ஆகவே குறைந்த பட்சம் கட்சி அரசியலுக்குரிய பண்புகள்கூட இல்லாத நிலையில் கூட்டுச் செயற்பாடுகளை தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் மக்கள் எதிர்பார்க்கவே முடியாது என்பது இங்கே பட்டவர்த்தனமாகிறது. இப் பலவீனங்களை மதிப்பீடு செய்தே சில குழுக்கள் தமிழ்த்தேசியக் கட்சிகளையும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப்படும் சில உறுப்பினர்களையும் நன்கு திட்டமிட்டுப் பிரித்தாளுகின்றன. இப் பின்னணியிலேதான் புதுடில்லியில் அவ்வப்போது இடம்பெறும் தனித்தனிச் சந்திப்புக்களையும் மாநாடுகளையும் அவதானிக்க வேண்டும். துவாரகாவின் பெயரில் வெளியான போலி மாவீரர் உரை பற்றிய பரபரப்புகளும் இப் பலவீனங்களை மையமாகக் கொண்டே தயாரிக்கப்பட்டிருப்பதையும் நோக்கலாம். ஆகவே “தமிழ்த்தேசியக் கோட்பாடு” என்பதை “சிதைப்பது” “திசை திருப்புவது” என்ற நச்சுத் திட்டங்கள் மாத்திரமே 2009 இற்குப் பின்னரான சூழலில் பல வடிவங்களில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்படுகின்றன. இந்த நிலையில் “இலங்கை அரசு” என்ற கட்டமைப்பைத் திருப்திப்படுத்தித் தமது புவிசார் அரசியல் பொருளாதார நலன்களுக்கு ஏற்ப இந்திய மத்திய அரசு இயங்கி வருகிறது. தமிழர்களின் கூட்டுப் பொறுப்பற்ற அரசியல் செயற்பாடுகளை இந்தியா தமக்கேற்ற முறையில் நன்கு பயன்படுத்தியும் வருகின்றது. இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் வல்லரசாக மாறத் துடிக்கும் இந்தியா, தன்னிலை சார்ந்துதான் செயற்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆகவே இந்தியாவைத் தமக்கேற்ற முறையில் கையாள வேண்டியது தமிழ்த்தரப்பின் கூட்டுப் பொறுப்பு. 1987 இல் இந்திய – இலங்கை ஒப்பந்த்தின் போதும் 2009 போரின் போதும் சிங்கள அரசியல் தலைவர்கள் இந்தியாவைத் தமக்கு ஏற்ற முறையில் கையாண்டனர். 2009 மே மாதத்தின் பின்னரான கடந்த பதின் நான்கு வருடங்களிலும் சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியாவை ஈழுத்தமிழர் பக்கம் சென்றுவிடாமல் காய் நகர்த்துகின்றனர். டில்லியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியமை பற்றி மகிந்த ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க நேர்காணல் ஒன்றில் கூறியமை பற்றி இப் பத்தியில் ஏலவே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் எனக் கூறிய மிலிந்த மொறெகாட அமைச்சவை அந்தஸ்துடன் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராகப் பதவி வகிக்கிறார். தமிழ் நாட்டையும் புதுடில்லியின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் பல அரசியல் வேலைகளில் மிலிந்த மொறகொட ஈடுபடுகிறார் என்பதை டில்லியில் சந்திப்பு நடத்திய பிரதிநிதிகள் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் வேடிக்கை. புரிந்திருந்தால் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் பதின்மூன்றுக்கு ஏற்ப மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறும் புதுடில்லிச் சந்திப்புகளில் இவர்கள் கோரியிருக்க மாட்டார்கள். டில்லியில் நடந்த பல சந்திப்புகளிலும் பிரதமர் மோடியை அல்லது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க எவருக்குமே அனுமதி வழங்கப்படவில்லை. ஆகவே மூன்றாம் தரச் சந்திப்புகள்தான் (Third-Class Encounter) இவை. பா.ஜ.க முகவர்கள் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்பதும் பகிரங்கமானது. http://www.samakalam.com/கூட்டுப்-பொறுப்பும்-முன்/
  5. சீன திட்டங்களை தமிழ்த்தேசியகட்சிகள் ஏன் எதிர்க்க வேண்டும்? –ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை உணர்வை டில்லி புரிந்துகொள்ளாதவரை எந்த ஆலோசனையும் பயனற்றவை. சீன – இந்திய வர்த்தகம் உலகில் முன்னணியாக இருக்கும் நிலையில் இலங்கைத்தீவில் அதுவும் வடக்குக் கிழக்கில் சீனா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களை மாத்திரம் இந்தியா விரும்பாமல் இருப்பதன் பின்னணி என்ன? எதிர்ப்பை நேரடியாக வெளிக்காட்டாமல் மறைமுகமாக அல்லது வேறு அழுத்தங்கள் மூலம் இந்தியா தனது விருப்பம் இன்மையை உணர்த்தி வருகிறது– அ.நிக்ஸன்- ரசிய – சீனக் கூட்டை மையப்படுத்திய பிறிக்ஸ் நாடுகளின் மொத்த வர்த்தகத்தின் மதிப்பு ஒன்று தசம் பதினான்கு ரில்லியன் அமெரிக்க டொலர் என்று சர்வதேச நாணய நிதியத்தின் சென்ற ஓகஸ்ட் மாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளடங்கலாக பிரேசில், ரசியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை மையப்படுத்தியே அறிக்கை வெளியாகியுள்ளது. இந்திய வர்த்தக முறைகளும் இந்தியாவின் பங்களிப்பும் பிறிக்ஸ் கூட்டமைப்புக்குள் பிரதானமானது எனவும் சீன, இந்திய வர்த்தகச் செயற்பாடுகள் பிறிக்ஸ் கூட்டமைப்புக்குள் அதிகரித்த நிலையில் இருப்பதாகவும் புள்ளி விபரங்கள் காண்பிக்கின்றன. இதன் காரணமாக பிறிக்ஸ் நாடுகள் உலகளவில் புறக்கணிக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதாக சின் ஹவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வர்த்தகப் பங்களிப்பு பற்றியும் இந்தச் செய்தி நிறுவனம் விபரிக்கிறது. ஆகவே சீன – இந்திய வர்த்தக உறவுக்குப் பிரச்சினை இல்லை என்பது தெளிவாகிறது. இந்திய அரச செய்தி நிறுவனங்களும் சீன இந்திய வர்த்தகச் செயற்பாடுகளைப் பாராட்டியிருக்கின்றன. இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவுடன் சீனாவுக்குப் போட்டியில்லை. பிராந்தியத்துக்குச் சம்பந்தப்படாத அமெரிக்கா மாத்திரமே இப்போது சீனாவின் நேரடிப் போட்டியாளர் என்று சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான குளோபல் ரைம்ஸ் (globaltimes) புவிசார் அரசியல் பொருளாதார விமர்சனங்கள் ஒவ்வொன்றிலும் கருத்துக்களை முன்வைத்து வருகிறது. இந்தியாவுடன் சீனாவுக்கு இருப்பது எல்லைப் பிரச்சினை மாத்திரமே என்றும் குளோபல்ரைமஸ் வர்ணிக்கிறது. அதேநேரம் இந்தியாவில் நூற்று ஐம்பது சீன நிறுவனங்கள் இயங்குகின்றன, அவை இந்தியாவில் செய்துள்ள முதலீடு மட்டும் எட்டு பில்லியன் டொலராகும். இதனால் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் இந்திய மக்களுக்குக் கிடைத்துள்ளதாக டில்லியில் உள்ள சீனத் தூதரகம் தெரிவிக்கிறது. சீனாவிற்கு இந்தியா செய்யும் ஏற்றுமதி கடந்த ஐந்து ஆண்டுகளில் இருபது சதவிதம் அதிகரித்துள்ளது. சீனாவில் இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் பிரகாரம் சுமார் நாற்பத்து ஐயாயிரம். அதில் இருபதாயிரம் மாணவர்கள். சீன பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா ஏழாவது இடம் வகிக்கிறது. சீனாவில் இருந்து, அதிகப்படியான உரம், ரசாயனம், எதிர்ப்பு சக்தி மருந்துகளை இந்தியா இறக்குமதி செய்கிறது. அத்துடன் ஏழு இந்திய வங்கிகள் சீனாவில் கிளைகளைத் திறந்துள்ளன. சீனாவின் கைத்தொழில் வர்த்தக அபிவிருத்தி வங்கி (Industrial and Commercial Bank of China – ICBC) வங்கி மட்டும் மும்பையில் ஒரு வங்கிக் கிளையைத் திறந்துள்ளது. இந்திய சீன வர்த்தகத்தை மேம்படுத்த, சீனாவில் இருந்து இந்தியா செல்பவர்களுக்கு 2017இல் இருந்து இலத்திரனியல் அடையாள அட்டை (Electronic Business Cards) முறையை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. இந்திய சீன வர்த்தகம் 2000 ஆம் ஆண்டில் இருந்து மூன்று பில்லியன் டொலராக அதிகரித்து 2008 இல் 52 பில்லியன் டொலர்களாகவும் 2011 இல் 73.9 பில்லியன் டொலர்களாகவும் 2018 இல் இருந்து 90 பில்லியன் டொலர்களாவும் உயர்வடைந்துள்ளது. தற்போது இதன் எண்ணிக்கை இரண்டு மடங்குகளாக அதிகரித்துள்ளதாக டில்லியில் உள்ள சீன தூதரக இணையத்தின் வர்த்தக உறவுகள் தொடர்பான பகுதியில் விபரிக்கப்பட்டுள்ளது. 2014 இல் ஷி ஜிங்பிங் இந்தியா வந்த போது, ரயில்வே, விண்வெளி, மருந்து, தொழில்நுட்ப பூங்கா போன்றவற்றை மேம்படுத்த பதினாறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. 2015 இல் நரேந்திர் மோடி சீனா சென்ற போது, இரு நாடுகளுக்கு இடையே இருபத்து நான்கு ஒப்பந்தங்களும், இரு நாட்டு நிறுவனங்களுக்கு இடையே இருபத்து ஆறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. 2016-ல் அப்போதைய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சீனா சென்ற போது உயர்கல்வி தொடர்பாக பத்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2018 இல் சீனாவின் யூஹானில் பிரதமர் மோடி, ஷி ஜிங்பிங்கை சந்தித்தார். இதன் தொடர்ச்சியாகவே தமிழகம் மாமல்லபுரம் சந்திப்பை அவதானிக்க முடியும். இதன் தொடர்ச்சியாக 2023 இல் பிறிக்ஸ் மாநாட்டோடு வர்த்தக உறவு மேலும் விரிவடைந்துள்ளது. ஆகவே சீனாவுடன் நல்லுறவுகளைப் பேணிக் கொண்டு இலங்கை, மியன்மார், மாலைதீவு போன்ற நாடுகளில் சீனா மேற்கொண்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா ஏன் ஓரக் கண்ணால் பார்க்கிறது என்ற கேள்வி எழாமலில்லை. சீனா இலங்கைக்கு வழங்கும் உதிவிகளை இந்தியாவினால் தடுக்கவும் முடியவில்லை. இலங்கையும் இந்தியாவின் அழுத்தங்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் சீனாவிடம் இருந்து தேவையான உதவிகளை பெறுகிறது. இலங்கைத்தீவில் சீனாவுக்குத் தேவையான நிலங்களையும் குத்தகைக்கு வழங்கி வருகிறது. சீன உதவிகள் என்பது இலங்கையின் உள்ளக விவகாரம் என்று இந்திய இராஜதந்திரிகள் அவ்வப்போது பட்டும் படாமலும் கூறியிமிருந்தனர். இரு நாடுகளுக்கிடையிலான உறவு என்று இப்போதும் அப்படித்தான் கூறி வருகின்றனர். இரண்டாயிருத்து முந்நூற்று முப்பது ஹெக்ரேயர் கடல் பரப்பை மூடி 2014 இல் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு போட் சிற்றித் திட்டம் கூட இந்தியாவின் பாதுகாப்புக்கு பிரச்சினை இல்லை என்று இந்தியா அப்போது கூறியிருந்தது. சீனாவிடம் இருந்து நிதியுதவி பெறுவதையோ இலங்கையில் சீனா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியோ இந்தியா கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று முன்னாள் பிரதமர் ரட்ண சிறி விக்கிரமரட்ன 2010 இல் நாடாளுமன்றத்தில் தெளிவாக எச்சரித்துமிருந்தார். இலங்கையில் சீனத் திட்டங்களுக்கு எதிர்ப்பு வெளியிடுவதைவிட இந்தியத் திட்டங்களுக்கு மாத்திரமே சிங்கள அமைப்புகளும் பௌத்த குருமாரும் கடும் எதிர்ப்பு வெளியிடுகின்றன. சிங்கள அரசியல் தலைவர்களும் சீனாவுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இருந்தாலும் சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்து வருவதையிட்டு இந்தியா சில வருடங்களாக அதுவும் கடந்த சில மாதங்களாக அதிகளவு கவலையடைந்துள்ளமை பகிரங்கமாகி வருகின்றது. குறிப்பாக வடக்குக் கிழக்கில் சீனா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியே இந்தியா அதிகளவு கவலை கொண்டுள்ளது போல் தெரிகிறது. ஆனால் சீன – இந்திய வர்த்தகம் உலகில் முன்னணியாக இருக்கும் நிலையில் இலங்கைத்தீவில் அதுவும் வடக்குக் கிழக்கில் சீனா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களை மாத்திரம் இந்தியா விரும்பாமல் இருப்பதன் பின்னணி என்ன? எதிர்ப்பை நேரடியாக வெளிக்காட்டாமல் மறைமுகமாக அல்லது வேறு அழுத்தங்கள் மூலம் இந்தியா தனது விருப்பம் இன்மையை உணர்த்தி வருகிறது. 2009 மே மாதத்திற்கும் பின்னரான சூழலில் கடந்த பதினான்கு வருடங்கள் சென்றுவிட்ட நிலையிலும்கூட ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்துக்கு நிரந்தத் தீர்வு ஏற்படாத ஒரு நிலையில், குறைந்தபட்சம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தைக் கூட நடைமுறைப்படுத்த முடியாத ஒரு சூழலில் சீன அபிவிருத்திகளை இந்தியா விரும்ப மறுப்பதன் அடிப்படைக் காரண காரியங்கள் என்ன? கொழும்பு போட் சிற்றி தொடர்பான பேச்சுக்கள் 2011 இல் ஆரம்பித்து 2014 இல் ஒப்பந்தம் கைச்சாத்திட்டபோதுகூட இந்தியத் தேசிய பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தல் இல்லை என்று மார்தட்டிய இந்தியா, தற்போது இந்தியத் தேசிய பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தல் என்ற தொனியில் பேச ஆரம்பித்துள்ளது. ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்குரிய நிலையான தீர்வை ஏற்படுத்தினால் மாத்திரமே இந்தியாவுக்குப் பாதுகாப்பு என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் 2009 இற்குப் பின்னரான சூழலில் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வருகின்றன. சம்பந்தன் நாடாளுமன்ற உரையில் பகிரங்கமாக விபரித்துமிருக்கிறார். ஆனால் அது பற்றி இந்தியா கவனத்தில் எடுக்கவில்லை. போரில் தோல்வி கண்ட தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகளின் கருத்துக்கள் முக்கியமானதல்ல என்ற பார்வையில் செயற்பட்டு சிங்கள ஆட்சியாளர்களை மாத்திரம் நம்பிச் செயற்பட்ட இந்தியா, தற்போது வடக்குக் கிழக்கில் சீனா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களை ஏன் பின்கதவால் எதிர்க்க வேண்டும்? வடக்குக் கிழக்கில் தமிழர்களின் பாரம்பரியக் காணிகளை துண்டு துண்டாக்கி நிலத் தொடர்பற்ற தமிழ்சமூக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் 1949 இல் திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா திட்டத்தின் நோக்கங்கள் 2009 இற்குப் பின்னரான சூழலில் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. வடக்குக் கிழக்கு “தமிழர் தாயகம்” என்ற கோட்பாட்டை உடைக்கவே அபிருத்தி என்ற போர்வையில் சீனாவுக்கு நிலங்கள் கையளிக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் அமெரிக்க – இந்திய அரசுகளுக்கு இலங்கை கையளித்துள்ள நிலங்கள், இயற்கைத் துறைமுகங்கள்கூட அதன் அடிப்படைதான். ஆகவே தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் துண்டாடப்படும் என்ற நோக்கில் சீன அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா விரும்பவில்லையா? அல்லது தமிழர் பிரதேசங்களில் இந்தியாவின் புவிசார் அரசியல் பொருளாதார நோக்கங்களுக்கு அது ஆபத்து என்ற நோக்கிலா? 2009 இற்குப் பின்னரான சூழலில் இருந்து இன்றுவரையும் தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல் திட்டங்களை இந்தியா ஏன் எதிர்க்கவில்லை? கண்டிக்கவில்லை? ஆகவே எந்த எதிரி நாடென்றாலும் தமிழர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முன் வந்தால் நல்லது என்ற “ஒற்றைச் சிந்தனை” மாத்திரம் தற்போது தமிழ் மக்களிடம் உருவாக்கக் கூடிய பரிதாபகரமான நிலைமை உண்டு. ஏனெனில் 2009 இல் போருக்கு ஒத்துழைத்த அமெரிக்க இந்திய அரசுகளும் சீனாவும் சிங்கள தலைவர்களுடன் மாத்திரம் பேச்சு நடத்தும் நிலையில் கொழும்பின் அனுமதி ஊடக வரும் அபிவிருத்தித் திட்டங்களை தமிழர்கள் எதிர்க்க வேண்டும் என எந்த வல்லரசு நாடுகளும் எதிர்பார்க்கவே முடியாது. தமிழ் ஈழம் அமைந்தால் அதனை முதலில் எதிர்ப்பது சீனாதான் என்று 1979 இல் கொழும்பில் இருந்த சீனத் தூதுவர், பேராசிரியர் வில்சனிடம் அப்போது கூறியிருந்தார். இது பற்றிய காரண காரியங்களை அரசியல் – இராணுவ ஆய்வாளர் டி சிவராம் 2003 இல் வீரகேசரி ஞாயிறு வார இதழில் விபரித்திருந்தார். ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டத்தை இந்தியா ஆதரித்திரிக்கும். ஆனால் “ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை” என்பதை அங்கீகரிக்க முடியாதென அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1983 இல் தன்னிடம் கூறியதாக கவிஞர் புலமைப் பித்தன் 2008 இல் வழங்கிய நேர்கணால் ஒன்றில் தெளிவாக விளக்கியுள்ளார். ஆகவே 1979 இல் தமிழ் ஈழம் என்பதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த சீனா 2009 இற்குப் பின்னரான சூழலில் வடக்குக் கிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் தனக்குரிய புவிசார் அரசியல் தேவைகளை நிறைவேற்றுகிறது என்பது பகிரங்கம். எனவே ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை உணர்வுகளை அமெரிக்க – இந்திய அரசுகள் புரிந்துகொள்ளும் வரை தமிழ்த் தேசியக் கட்சிகள் சீன அபிவிருத்த்தித் திட்டங்களை எதிர்க்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் சுயமரியாதையோடு நின்று பிடிக்கக்கூடிய அரசியல் தலைமை ஒன்று உருவாக வேண்டும். http://www.samakalam.com/சீன-திட்டங்களை-தமிழ்த்த/
  6. தமிழ்க் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்று கூறி நழுவிச் செல்லும் இந்தியா –பதின்மூன்றை நடைமுறைப்படுத்தத் தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்று கூறி மிக இலகுவாக இந்தியா தட்டிக் கழித்துத் தமக்கு ஏற்ற முறையில் இந்தியத் தூதரகம் மேற்கொள்ளும் நகர்வுகள் பற்றியும் பதின்மூன்று தொடர்பாக ஜனாதிபதி ரணில் ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி நிகழ்த்திய விசேட உரையை மேற்கோள் காண்பித்து அதிகாரங்கள் இல்லை என்பது குறித்தும் சிறிய விளக்கத்தை இக் கட்டுரை தருகிறது- அ.நிக்ஸன்- பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழ்த்தேசியக் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை. ஏனெனில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் பிரதான திருத்தமாக உள்ள இந்த அரசியலமைப்புச் சட்டத்தில் இருப்பதை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒரு வர்த்தமானி அறிவித்தல் போதுமானது. ஆனால், 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் பதின்மூன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற விருப்பம் சிங்கள ஆட்சியாளர்கள் எவருக்கும் இல்லை என்பதே உண்மை. சர்வதேசத்தின் வார்த்தையில் அடிக்கடி உச்சரிக்கப்படும் “நல்லிணக்கம்” என்பதை வெளிப்படுத்த பதின்மூன்று 2009 இற்குப் பின்னர் சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். ஆனால் அவர்கள் பதின்மூன்றைக்கூட எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்? இப் பின்னணி இந்தியாவுக்கு நன்கு தெரியும். அமெரிக்காவுக்கும் இது புரியும். ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை அல்லது ஒற்றுமையில்லை என்று கூறுகின்ற இந்தியா, சிங்கள ஆட்சியாளர்களின் விரும்பத்திற்கு அமைவாகவும் தமது புவிசார் அரசியல் பொருளாதார நோக்கிலும் செயற்பட்டு வருகின்றது. இருந்தாலும் பதின்மூன்றை நடைமுறைப்படுத்தலாம் என்று விளக்கமளித்துத் தமக்கு விசுவாசமான ஒரு சில தமிழர்களைப் பயன்படுத்தி அவர்கள் ஊடாக இந்தியத் தூதரகம் படாதபாடுபடுகின்றது. துணைத் தூதரகம் இதற்கான ஏற்பாட்டைச் செய்கிறது. வடக்குக் கிழக்கில் பலமான சிவில் சமூக அமைப்புகள் இல்லை. சில சிவில் சமூக அமைப்புகள் ஏதோ சில அரசியல் கட்சிகளின் பின்னால் செல்கின்றன. இந்தப் பலவீனங்களை அறிந்து புதிய முயற்சி எடுப்பதாகக் கூறிக் கொண்டு வேறொரு திசைக்கு தமிழர் அரசியல் விடுதலை விவகாரம் இழுத்துச் செல்லப்படுகின்றது போல் தெரிகிறது. வடக்குக் கிழக்கில் இந்திய அரசியல் – பொருளாதார நலன்கள் என்ற அடிப்படையில் மாத்திரம் இயங்குவதற்கான கருத்திட்டங்கள் துல்லியமாக வகுக்கப்படுகின்றன. இதற்கான துரும்புச் சீட்டுதான் தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்ற கதை. கொழும்பை மையமாகக் கொண்ட சிங்களப் பகுதிகளில் சீனத் திட்டங்கள் ஏற்கனவே வியாபித்துள்ள நிலையில், தற்போது வடக்குக் கிழக்கிலும் சீனா தனது திட்டங்களை விஸ்த்ரித்து வருகின்றது. இதன் காரணமாகவே தமிழர் தாயகத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகளைக் கடந்து வேறு கோணத்தில் அரசியல் பொருளாதார வியூகங்களை இந்தியா வகுக்க ஆரம்பித்துள்ளது எனலாம். இதற்கேற்ப தமிழ்த்தேசியக் கட்சிகளின் ஒற்றுமையின்மைதான் காரணம் என்பதை ஈழத்தமிழர்கள் பலமாக நம்ப வேண்டும் என்ற வியூகத்திலும் இந்தியத் தூதரகம் காய் நகர்த்துகின்றது. இதற்காக இரு வகையான அணுகுமுறைகள் மிகச் சமீபகாலமாகக் கையாளப்பட்டு வருகின்றன. ஒன்று, தமிழ்த்தேசியக் கட்சிகள் மீது முழுமையாகக் குற்றம் சுமத்திவிட்டு இந்திய நலன்களுக்கு ஏற்ற முறையில் தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையை மாற்றியமைப்பது. இரண்டாவது, சிங்கள மக்கள் கோபப்படாத முறையிலும் சிங்கள மக்கள் இந்தியா மீது வெறுப்படையாமலும் நோகாத அரசியல் ஒன்றைச் செய்யும் முயற்சிகள். 2009 இன் பின்னரான சூழலில் பதின்மூன்றை நடைமுறைப்படுத்த தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று இந்திய – இலங்கை அரசுகள் கூட்டாகக் குற்றம் சுமத்தி வருகின்றனமைகூட ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையை மலினப்படுத்தும் உத்திகள் என்பதும் பகிரங்கம். தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் ஒருமித்த குரலில் நிரந்தர “அரசியல் தீர்வுக்கான திட்டங்கள்” “பொறிமுறைகள்” இல்லை என்பது உண்மைதான். ஆனால் பதின்முன்றை நடைமுறைப்படுத்தத் தமிழ்த்தேசியக் கட்சிகள் தான் தடையாக இருக்கின்றன என்ற பிரச்சாரம் திசை திருப்பும் அரசியல் உத்தி. அதேநேரம் மாகாண சபைகளுக்கான பதின் மூன்றாவது திருத்தச் சட்டம் இந்தியாவினால் திணிக்கப்பட்டது என்றும் சர்வஜன வாக்கெடுப்பின்றி அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டாம் என்றும் கோரி எல்லே குணவன்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் ஜனாதிபதி ரணில், பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடந்த யூன் மாதம் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். கடிதத்தில் மகாநாயக்கத் தேரர்களின் ஒப்புதல் வாக்குமூலமும் இருந்தது. அது மாத்திரமல்ல பதின்மூன்றை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு பற்றிய பேராசியர் ரொகான் குணரட்ன கடந்த ஆண்டு இலங்கை இராணுவத்தின் ஜேனல் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். பதின்மூன்றை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிப்பதே ஜனாதிபதி ரணிலின் நோக்கம் என்ற தொனியில் மூத்த இராஜதந்திரி தயான் ஜயதிலக கடந்த வருடம் டிசம்பர் மாதம் த ஐலண்ட் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் இதுபற்றியெல்லாம் இந்திய தூதரகம் பேசுவதில்லை. மாறாக சிங்கள ஆட்சியாளர்கள் நேர்மையானவர்கள் என்ற தொனியிலும் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் பதின்மூன்றை நடைமுறைப்படுத்த முடியும் என்ற நச்சுக் கருத்தையுமே இந்தியத் தூதரகம் திட்டமிட்டு விதைக்கிறது. மாகாண சபைகளிடம் முழுமையான அதிகாரங்கள் ஒப்படைக்கப்படவில்லை என்பதை கடந்த ஓகஸ்ட் மாதம் ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் தனது விசேட உரையில் ஒப்புக் கொண்டிருக்கிறார். பதின்மூன்று பற்றிய சில விதப்புரைகளை ரணில் முன்மொழிந்துள்ளதன் மூலம் இந்த விடயங்களை அறிந்துகொள்ள முடியும். ரணில் பரிந்துரைத்த மூன்று உத்தேசத் திட்டஙகளும் வருமாறு. 1) மாகாண பட்டியலில் உள்ள விடயங்கள் தொடர்பான தேசிய கொள்கைகளை வகுப்பதில் மாகாண சபைகளின் பங்களிப்பைப் பெறுதல். 2) மாகாண பட்டியலில் உள்ள விடயங்கள் தொடர்பான தேசியக் கொள்கைகளை உருவாக்குவதன் மூலம் மத்திய அரசாங்கத்திற்கு பரவலாக்கப்பட்ட அதிகாரங்களை கையேற்பது அல்லது மாகாண சபையால் செயல்படுத்தப்படும் நிறைவேற்று மற்றும் நிர்வாக அதிகாரங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது. 3) மேற்படி பரவலாக்கப்பட்ட விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிறைவேற்று மற்றும் நிர்வாக அதிகாரங்கள் மாகாண சபைகளிடமே இருக்கும். ஆகவே மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்கள் இல்லை என்பதையே ரணில் முன்வைத்த இத்திட்டங்கள் காண்பிக்கின்றன. அத்துடன் தனது உரையில் மாகாண சபை பற்றிய மற்றொரு கருத்தையும் ரணில் பின்வருமாறும் கூறுகிறார். “மாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான விடயதானங்கள் பொருந்தாமல் இருக்கிறது என்று கூறும் நபர்களும் இலங்கைத்தீவில் இருக்கின்றார்கள்” என்று ரணில் தனது உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதேநேரம் பொலிஸ் அதிகாரங்களைக் கையளிக்க முடியாது அது உணர்வுடன் கூடிய விவகாரம் என்றும் ரணில் தனது உரையில் விபரிக்கிறார். ஆகவே பொலிஸ் அதிகாரங்கள் இல்லை என்பதும் காணி அதிகாரம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்பதும் இங்கே தெரிகிறது. காணிக் கொள்கை தொடர்பாக தேசிய காணி ஆணைக்குழு ஒன்றை உருவாக்க வேண்டும். ஆனால் இதுவரையும் மாகாண சபைகளை உள்ளடக்கிய தேசிய காணி அதிகார சபை உருவக்கப்படவில்லை. இந்த நிலையில் பதின்மூன்றாவது திருத்தம் பற்றியும் அதனை நடைமுறைப்படுத்தத் தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் ஒற்றுமையில்லை என்ற கதைகளும் எப்படிப் பொருத்தமாகும்? அதேநேரம் பதின்மூன்றை நடைமுறைப்படுத்த ரணில் கூறிய விதப்புரைகள் மூன்று மாதங்கள் சென்றுவிட்ட நிலையிலும் செயலில் வரவில்லை என்பது பற்றி எதிர்க்கட்சிகள்கூட கேள்வி கேட்கவில்லை. ஏனெனில் 2009 இற்குப் பின்னர் பதின்மூன்றும் தேவையில்லை என்ற உணர்வு சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பி உள்ளிட்ட சிறிய சிங்கள் கட்சிகளிடம் உண்டு. இதனையே ரணில் தனது நாடாளுமன்ற உரையின் மூலம் நாசூக்காக வெளிப்படுத்தியிருந்தார் ஆகவே 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் “தமிழ் இன அழிப்பு” பற்றிய சர்வதேச விசாரணையை ஒற்றை வார்த்தையில் தமிழ்த்தேசியக் கட்சிகள் கூட்டாக் கோரியிருந்தால் இன்று இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது. அத்தோடு பதின்மூன்று என்ற அரை குறைத் தீர்வை விடவும் முழுமையான தீர்வுக்குரிய பொறிமுறை தயாரிக்கப்பட்டிருந்தால் இந்த அவமானம் ஏற்பட்டிருக்காது. அமைச்சர்களுக்கான முழு அந்தஸ்த்துடன் புதுடில்லியில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராகக் கடமைபுரியும் முன்னாள் அமைச்சர் மிலிந்த கொறகொட பதின்மூன்று இனிமேல் தேவையில்லை என்று 2020 மார்ச் மாதம் கொழும்பில் பகிரங்க அறிக்கை வெளியிட்டிருந்தர். நாடாளுமன்ற உறுப்பினரும் இறுதிப் போரில் பங்கெடுத்தவருமான முன்னாள் இராணுவ அதிகாரி சரத் வீரசேகர பதின்மூன்று பற்றிப் பேச வேண்டிய அவசியமே இல்லை என்று நாடாளுமன்றத்திலேயே அடித்துக் கூறியிருக்கிறார். ஆகவே இவை பற்றியெல்லாம் கொழும்புக்குப் பல தடவைகள் வந்து சென்ற இந்திய வெளிவிவார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வாய்திறந்தாரா? மாறாகத் தமிழ்த்தேசியக் கட்சிகள் மீது மிக இலகுவாகக் குற்றம் சுமத்திவிட்டு பதின்மூன்றை விட்டால் வேறு தீர்வு இல்லை என்று தவறான நச்சுக் கருத்துக்களை விதைப்பதன் பின்னணி என்ன? இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வடக்குக் கிழக்கில் இந்தியாவுக்குத் தேவையான பொருளாதார நலன்களை பெற முடியும் என்றால் பதின்மூன்று விடயத்தில் ஏன் அழுத்தம் கொடுக்கக்கூடாது? சீனாவுக்கு எதிராக இந்தோ – பசுபிக் விகாரத்தில் அமெரிக்கவுடன் கூட்டுச் சேர்ந்து மேற்கொள்ளும் நகர்வுகள், அமெரிக்காவுடனான பனிப் போருக்கு மத்தியில் இலங்கையில் அமெரிக்க – இந்திய கூட்டுப் பொருளாதார முறைகள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்புக்கும் வியூகங்கள் வகுக்க முடியுமென்றால் பதின்முறை நடைமுறைப்படுத்த ஒரு தொலைபேசி அழைப்புப் போதுமானது. இந்தியப் பிராந்தியத்துக்குப் பாதுகாப்புத் தேவை என்றால் ஈழத்தமிழர்கள் விவகாரம் தீர்க்கப்பட வேண்டும் என்று சம்பந்தன் நாடாளுமன்றத்தில் பல தடவைகள் ஆவேசமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் தன்னுடைய அரசியல் அனுபவத்தில் இந்தியாவை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றிய பொறிமுறையை சம்பந்தன் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் வகுக்கத் தவறிதயன் விளைவுகள்தான் தற்போதைய இந்த இழி நிலைக்குப் பிரதான காரணம். 2009 இல் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தியா ஈழத்தமிழர்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுத்துவிடலாம் என்ற சந்தேகத்தில், துரொய்க்கா (troika) எனப்படும் மூவர் கொண்ட உயர்மட்டக் குழுவை இலங்கை உருவாக்கியது. கோட்டபாய ராஜபக்ச, மிலிந்த மொறகொட, பசில் ராஜபக்ச ஆகியோா் அதில் அங்கம் வகித்திருந்தனர். இதனை மகிந்த ராஜபக்சவின் செயலாளராகப் பதவி வகித்திருந்த லலித் வீரதுங்க பிற்.எல்கே என்ற இணையத்தளத்துக்கு .வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். (இது பற்றி இப் பத்தியில் முன்னரும் குறிப்பிடப்பட்டிருந்தது) இந்தியா ஈழத்தமிழர் பக்கம் சென்றுவிடாமல் இன்றும் கூட இவ்வாறான பொறிமுறையை இலங்கை கையாளுகின்றது. ஆகவே 2009 இற்குப் பின்னரான சூழலில் அமெரிக்காவும் இந்தியாவும் சொல்வதைக் கேட்டுச் செயற்பட்டதன் விளைவுதான் இன்று தமிழ்த்தேசியக் கட்சிகள் சுயமரியாதையை இழந்து நிற்பதற்கும் இந்திய நலன்களுக்கு ஏற்ப வியூகங்கள் வகுக்கப்படுகின்றமைக்கும் காரணம். 1979 இல் கொழும்பில் இருந்த சீனத் தூதுவர் பேராசிரியர் வில்சனிடம் கூறிய கருத்தின் பிரகாரம், இந்தியச் செல்வாக்கைத் தடுக்க அதுவும் 2009 இற்குப் பின்னரான சூழலில் சீனா வடக்குக் கிழக்கில் கால் பதிக்கிறது என்றால், அதனை இந்தியா புரிந்துகொள்ளாத வரையும் சீன அபிவிருத்தித் திட்டங்களைத் தமிழ்த்தேசியக் கட்சிகள் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் – இராணுவ ஆய்வாளர் டி.சிவராம் “தமிழர் போராட்டமும் பெருஞ் செஞ்சீனமும்” என்ற தலைப்பில் 2003 இல் வீரகேசரி ஞாயிறு வார இதழில் எழுதிய கட்டுரையில் தமிழ் ஈழம் அமைந்தால் சீனா அதனை ஏன் எதிர்க்கும் என்பது பற்றி பேராசியர் வில்சனிடம் சீனத் தூதுவர் கூறிய விடயங்கள் பற்றி எழுதியுள்ளார். http://www.samakalam.com/தமிழ்க்-கட்சிகளிடம்-ஒற்ற/
  7. புலிகள் பாசிசவாதிகளா? இலங்கை அரசை பார்த்துச் சொல்ல முடியுமா? — 2009 இன் பின்னரான கடந்த பதினான்கு வருடங்களில் எந்த ஒரு அரசியல் தீர்வும் இல்லாமல், இருப்பதையும் பறிகொடுத்து வரும் சூழலில் “புலிகள் பாசிஸ்ட்டுகள்” என்று கூறி யாருடைய குரலாக இந்த மாற்றுக் கருத்தாளர்கள் செயற்படுகிறர்கள் என்பதில் பலந்த சந்தேகங்கள் உண்டு.1947 இல் இந்தியா சுதந்திரமடைந்தபோது ஆர்.எஸ்.எஸ் ஏற்றிய கொடி எது?– அ.நிக்ஸன்- 1920 இலங்கைத் தேசிய இயக்கம் பிளவுபட்டு 1921 தமிழர் மகாசபை உருவாவதற்குக் காரணம் யார்? ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்தில் ‘இலங்கை அரசு’ என்ற கட்டமைப்பு 1948 இல் இருந்து 2009 மே மாதம் வரையும் நடந்து கொண்ட முறை சரியானதா? 2009 மே மாதத்திற்குப் பின்னரான கடந்த பதினான்கு வருடங்களில் அதாவது விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான சூழலில் செயற்பட்ட முறை நீதியானதா? இங்கே நீதி தவறியது யார் புலிகளா? இலங்கை அரசா? வன்முறையை முதலில் ஆரம்பித்தது யார? புலிகளா? இலங்கை அரசா? தமிழ் முற்போக்குவாதிகளுக்கும் தமிழ் மாற்றுக் கருத்தாளர்களுக்கும் புத்தி எங்கிருந்து பிறக்கிறது? பாதிக்கப்பட்டவன் பக்கம் நின்று பேசாமல் பாதிப்புக்கு உட்படுத்தியவன் பக்கம் நின்று நியாயம் கற்பிக்க முற்படுவது மாற்றுக் கருத்தா? ‘இலங்கை அரசு’ என்ற கட்டமைப்புச் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டுவதாக கூறி மாற்றுக் கருத்தாளர்கள் சிலவேளை தங்கள் செயற்பாடுகளை நியாயப்படுத்தவும் கூடும். ஆனால் நீதி எங்கிருந்து தவறியது யாரால் தவறவிடப்பட்டது என்று மாற்றுக் கருத்தாளர்கள் எவரும் சிங்கள ஆட்சியாளர்களின் நெஞ்சை நோக்கிக் கைநீட்டிச் சொல்லவில்லை. மாறாக புலிகளை மாத்திரமே “பாசிஸ்ட்டுகள்” என்று மிகச் சுலபமாகக் கூறித் தங்களுக்கு ஆங்கில மொழி தெரியும் என்பதை வெளிப்படுத்தி வருகின்றனர். இறுதிப் போர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு 2010 இல் வெளியிட்ட அறிக்கைகூட, இலங்கைத்தீவில் நீதி எங்கிருந்து தவறியது என்பதை ஒப்பிட்டளவில் (Comparatively) காண்பிக்கிறது. ஆனால் விடுதலைப் புலிகளைப் பாசிஸ்ட்டுகள் என்று அந்த நிபுணர்குழு அறிக்கை முத்திரை குத்தவில்லை. ஆகவே தமிழ்ச் சமூகத்தில் பிறந்து தங்களை மாற்றுக் கருத்தாளர்கள், புத்திஜீவிகள் என்று மார்தட்டுவோர் புலிகளை ‘பாசிஸ்ட்’ என்று எந்த அடிப்படையில் வரையறை (Definition) செய்ய முடியும்? “கருத்து” “மாற்றுக் கருத்து” என பல கருத்தாடல்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு இனத்தின் அரசியல் விடுதலைக்கான நியாயத்தை கொச்சைப்படுத்துவது, மலினப்படுத்துவது போன்ற தீங்கிழைக்கும் கருத்துக்களை மாற்றுக் கருத்து என்று வரைவிலக்கணம் கொடுக்க முடியாது. ஆகவே “கொலை” “அடக்குமுறை” என்ற ஒற்றைக் காரணத்தையும் ஒருபக்க, வாததத்தையும் மையமாகக் கொண்டு புலிகள் ‘பாசிசவாதிகள’ என கற்பிதம் செய்ய முற்படுகின்றமை “தமிழ்த்தேசியம்” மீதான வன்மமே. ஓன்றில் இருந்து மற்றொரு வகையான முன்னேற்றத்துக்குரிய உரையாடல்களை மாற்றுக் கருத்து என்று பொருள்கொள்ள முடியும். குறிப்பாகப் பாதிக்கப்பட்ட தரப்பில் நின்று கொண்டு திருத்தம் அல்லது சீர்திருத்தம் செய்ய முற்படுவது மாற்றுக் கருத்தாகும். மற்றொரு கோணத்தில் சிந்திப்பதையும் குறிக்கும். இவ்வாறான மாற்றுச் சிந்தனைகளைத் தடுப்பதுதான் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான செயற்பாடு என்று அர்த்தப்படும். ஆனால் இங்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பேசுவோரின் மாற்றுக் கருத்து அல்லது மாற்றுச் சிந்தனை என்பது இலங்கை ஒற்றையாட்சி அரசை நியாயப்படுத்துவதாகவுள்ளது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஏற்ப கற்பிதம் செய்வதையும் வழமையாகக் கொண்டுள்ளது. ஆனால் 1958 இல் இருந்து 2009 மே வரையும் இலங்கை அரசு என்ற ‘பௌத்த கட்டமைப்பு’ நடத்திய தமிழ் இன அழிப்பு மற்றும் ஆயுதப் போராட்டத்துக்கு முன்னர் 1981 இல் யாழ் நூலகம், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்பட்டு நடந்தேறிய வன்முறைகள் பற்றியெல்லாம் இந்த மாற்றுக் கருத்தாளர்கள் ஏன் துணிவுடன் வாய்திறப்பதில்லை? இன்று மட்டக்களப்பு மேய்ச்சல் நிலமான மயிலத்தன மாதவன்மடுவில் சிங்களக் குடியேற்றத்துக்காகப் பசுமாடுகளைக் குண்டு வைத்து கொலை செய்கிறார்கள். பௌத்த குருமார் ஒத்துழைக்கின்றனர். இது மாற்றுக் கருத்தாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா? கொலைகளில் “நல்ல கொலை” “கெட்ட கொலை” என இரண்டு வகைகள் இல்லை. கொலை என்றால் அதனை யார் செய்தாலும் அது கொலைதான். ஆனால் இங்கே புலிகள் செய்ததுதான் கொலையென மாற்றுக் கருத்தாளர்கள் என்போர் கற்பிதம் செய்கின்றனர். இலங்கை அரசு செய்த தமிழ் இனக் கொலைகள் எல்லாம் நல்ல கொலைகள் என்ற தொனியில் நியாயம் கற்பிக்கப்படுகின்றது. பாசிசம் என்பதற்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு காலங்களில் பெரும்பாலும் தவறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்பது பாசிசம் என்ற கொள்கையை உறுதியாக ஆதரித்திருக்கிறது. பாசிசம் தான் இந்தியாவில் ‘இந்து இராஷ்டிரம்’ அதாவது “இந்துத்துவா” என்ற கனவை நனவாக்கச் சரியான கொள்கை என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1931 இல் கருதியது. இத்தாலியில் முசோலினி உருவாக்கியதைப் போல, இந்தியாவில் ஒரு சர்வாதிகாரத்தை உருவாக்கி மக்களின் கருத்துரிமைகளைப் பறித்து இராணுவப் பயிற்சிக்கு இந்துக்களைத் தயார் செய்து இந்தியாவில் வாழ்கின்ற இஸ்லாமியர்களை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாசிசத்தை வெளிப்படையாகவே ஆதரித்து. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான ‘மூஞ்சே’ 1931 இல் இத்தாலிக்குச் சென்று அங்கே முசோலினி நடத்திய பாசிசக் கல்லூரிகள் இராணுவக் கல்லூரிகள் அனைத்தையும் பார்வையிட்டிருக்கிறார். “இது ஒரு சிறப்பான கட்டமைப்பு. மக்களை தயார்படுத்தும் சிறப்பான முறை. இதேபோன்றுதான் இந்தியாவிலும் அமைக்க வேண்டும்” என்று அந்த கல்லூரிகளின் வருகைப் பதிவேடுகளில் மூஞ்சே குறிப்புகளை எழுதி வைத்துள்ளாதாக மார்சியோ காசலோரி (Marzia Casolari) என்ற ஒரு இத்தாலி ஆய்வாளர் கூறுகிறார். இந்தியாவில் இந்துத்துவா பற்றி பேசுகிற நிறுவனங்களின் வெளிநாட்டு தொடர்புகளைப் பற்றி ஆராய்ந்து “இந்திய தேசியத்திற்கும் நாஜி – பாசிசத்திற்கும் இடையிலான தெளிவற்ற உறவு” (Ambiguous Relationship between Indian Nationalism and Nazi-Facism) என்ற ஒரு ஆய்வு நூலை மார்சியோ காசலோரி 2000 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். எக்கனமிக் பொலிற்றிகல் வீக்லி (Economic and political weekly) என்ற ஆங்கிலப் வார இதழில் 2000 ஆம் ஆண்டு ஜனவரி இருபத்திரண்டாம் திகதி இந்த நூல் குறித்த விமர்சனம் வெளியாகியிருக்கிறது. 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்தியாவில் தேசியக் கொடி ஏற்றப்படடது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1947 ஓகஸ்ட் பதினைந்தாம் திகதி “சுவஸ்திகா” கொடியை நாக்பூரில் ஏற்றியது. அப்போது காவிக் கொடியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்தவில்லை. இப் பின்புலத்திலேதான் நரேந்திர மோடியின் ஆட்சியை பாசிச ஆட்சி என்று தற்போது பலரும் விமர்சிக்கின்றனர். 2002 இல் மோடி குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தபோது முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளை ஒப்பிட்டும் பேசுகின்றனர். இங்கே நாசிசம் – பாசிசம் மட்டுமில்லாமல் ஜியோனிசம் (Zionism) என்ற சித்தாந்தம் பற்றியும் நோக்க வேண்டும். ஜியோனிசம் – யூதர்கள் சட்ட விரோதமாக பலஸ்தீனர்களிடமிருந்து அபகரித்து உருவாக்கிக் கொண்ட இஸ்ரேல் என்ற யூத நாட்டுக்கான மதம். “ஜியோனிசம்” என்ற சொற்றொடரை வியட்னாம் நாட்டைச் சேர்ந்த பிர்ன்பவும் (Nathan Birnbaum) என்ற யூதர் 1855 இல் உருவாக்கினார். இப்போது இஸ்ரேல் – பலஸ்தீன போரில் என்ன நடக்கிறது? போர், என்றால் போர் என்றுதான் இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்கா கனடா போன்ற மேற்கு நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் கமாஸ் இயக்கத்துடன் சமாதானப் பேச்சுக்கே இடமில்லை என்கின்றன. ஆகவே இந்த நாடுகள் பாசிசக் கொள்கையைத் பலஸ்தீன விவகாரத்தில் கையாளுகின்றன என்று அர்த்தப்படுத்த முடியுமா? ஏன் 1983 இல் இஸ்ரேலின் ஆதரவுடன் ஈழத்தமிழ் போராளிகளை அழிக்கத் திட்டமிட்டபோது சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லையென அன்று ஜே.ஆர் மார்தட்டினார் அல்லவா? 1990 இல் பிரேமதாச என்ன சொன்னார்? போர் என்றால் போர்தான். இராணுவ தேவைகளுக்காக சாக்குகளையும் உரப் பைகளையும் வீட்டுக்கு வீடு சென்று சிங்கள மக்கள் சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டு போர்ப் பிரகடணம் செய்தார் அல்லவா? சமதானத்துக்கான போர் என்று 1995 இல் சந்திரிகாவும் பகிரங்கமாகக் கூறினார் அல்லவா? இனப்பிரச்சினையென ஒன்று இல்லை என்றும் புலிகள்தான் பிரச்சினை எனவும் 2005 இல் கூறிய மகிந்த ராஜபக்ச, தனது மகனையும் போருக்கு அனுப்பி போர் பிரகடனம் செய்தார் அல்லவா? ஆகவே இலங்கை மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா. பிரித்தானியா போன்ற நாடுகளிடம் ‘பாசிசவாதத் தன்மை’ ‘அரச பயங்கரவாதம்’ ஒழிந்திருக்கின்றது என்பதை தமிழ் மாற்றுக் கருத்தாளர்களினால் துணிவுடன் வெளிப்படுத்த முடியுமா? ஆனால் புலிகள் பாசிஸ்ட்டுகள் என்று அன்றில் இருந்து இன்றுவரையும் அதுவும் 2009 இற்குப் பின்னரான கடந்த பதினான்கு வருடங்களிலும் தொடராகச் சுட்டிக்காட்டிக் கொண்டேயிருக்கின்றனர். ஆனால் இவர்கள் கூறும் பாசிசம் என்பது இத்தாலியில் இருந்த பாசிசத்தை போன்றதா என்ற கேள்வி எழுகிறது. பாசிஸ்ட்டுகள் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் பலருக்கும், அது பற்றிய போதிய விளக்கம் இல்லை. மாறாக பாசிசம் மற்றும் பாசிஸ்ட்டுகள் என்ற வார்த்தை இத்தாலிய பாசிசம் மற்றும் ஜெர்மனியில் நடந்த நாசிசத்தை ஒப்பிடும் வகையிலேயே அமைந்துள்ளன. “பாசிசம் ஒரு மிகச் சிறிய அறிமுகம்” (Fascism: A Very Short Introduction) என்ற நூலை எழுதியுள்ள வரலாற்று அறிஞரான கார்டிஃப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கெவின் பாஸ்மோர் (Kevin Pasmore) பாசிசம், நாசிசம் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்துச் செல்பவை அல்ல என்கிறார். இனவெறி மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவை நாசிச சித்தாந்தத்தின் முக்கிய புள்ளியாக இருந்தது. ஆனால், இத்தாலியில் இருந்த பாசிசம் என்பது அவ்வாறு ஒரு குறிப்பிட்ட விடயத்தைக் கொண்டு வரையறுக்கும் வகையில் இல்லை. ஆகவே ஒரு விடுதலை இயக்கத்தின் செயலில் இனவெறி இருப்பதால் மட்டும் அவர்களை பாசிஸ்ட்டுகள் என்று அடையாளப்படுத்த முடியாது என்று இவர் விளக்குகிறார். இத்தாலியில் இருந்த பாசிசத்தில் (Cooperativism) கோர்ப்பரேட்டிசம் எனப்படும் கூட்டுப் பிழைப்புவாதம், அரசியல் ரீதியாக கலந்தே இருந்தது என்றும் வாதிடுகிறார். மக்கள் தங்களுக்கு இருக்கும் திறமையின் அடிப்படையில் ஒரு தலைமையின் கீழ் குழுக்களாக இணைந்து செயல்படுவதை வகைப்படுத்தப்படுவது எனவும் கெவின் பாஸ்மோர் மேலும் கற்பிதம் செய்கிறார். ஆகவே இந்தப் புரிதல் இல்லாத ஒரு பின்னணியில் விடுதலை இயக்கங்கள் மீதான கண்டனத்தை வெளியிட வசதியான வார்த்தையாகப் பெரும்பாலும் “பாசிஸ்ட்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது எனப் பொருள்கொள்ள முடியும். இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். போன்ற சில அரசியல் கட்சிகள் பாசிசத்தில் உள்ள பல கருத்துகளோடு ஒத்துப்போகும் சூழலிலும், தங்களைப் பாசிஸ்ட் என்று அழைத்துக் கொள்வதில்லை. ஏனென்றால், பாசிசத்திற்கு எதிரான மாற்றுக் கருத்தாளர்கள் அனைவரும் பாசிசத்தை நாசிசத்துடன் ஒப்பிட்டே வாதிடுகின்றனர். இதற்கான துல்லியமான விளக்கம் என்ன என்பது பற்றி உலகில் இன்னும் விவாதம் தொடர்கிறது. ஆகவே மாற்றுக் கருத்தாளர்கள் மீதான கொலைகளை மாத்திரம் மதிப்பீடு செய்து பாசிஸ்ட் என்ற முடிவுக்கும் வர முடியாது. அப்படியானால் தற்கால நவீன அரச கட்டமைப்புகளுக்குள்ளும் பாசிஸ்ட் இருப்பதாகவே அர்த்தம் கொள்ள வேண்டும். 2009 இன் பின்னரான கடந்த பதினான்கு வருடங்களில் எந்த ஒரு அரசியல் தீர்வும் இல்லாமல் இருப்பதையும் பறிகொடுத்து வரும் சூழலில், “புலிகள் பாசிஸ்ட்டுகள்” என்று கூறி யாருடைய குரலாக இந்த மாற்றுக் கருத்தாளர்கள் செயற்படுகிறர்கள் என்பதில் பலந்த சந்தேகங்கள் உண்டு. http://www.samakalam.com/புலிகள்-பாசிசவாதிகளா-இல/
  8. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் –தேர்தல் விதிகளின் பிரகாரம் பிரதான கட்சிகளின் இரு சிங்கள வேட்பாளர்கள் ஐம்பத்து ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றும் நிலை ஏற்பட்டால், விருப்பு வாக்குகளை எண்ணும் நிலை எற்படும். இதனைக் கருத்தில் எடுத்து ஏனைய சிங்கள வேட்பாளர்கள் எவருக்கும் விருப்பு வாக்களிக்கும் முறையை புகுத்தாமல், தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களியுங்கள் என்று தெளிவான முறையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும். பேரம் பேசும் பலத்தை இது அதிகரிக்கும்– அ.நிக்ஸன்- 2009 மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்டு பதின் நான்கு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்ந்தும் பேசுபொருளாக இருக்கின்றது. ஆனால் புவிசார் அரசியல் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப நகர்வுகளை முன்னெடுக்கக்கூடிய தமிழ் அரசியல் கட்டமைப்புகள் ஒழுங்கான முறையில் இல்லை. குறிப்பாக ரசிய – உக்ரெயின் போர், இஸ்ரேல் பலஸ்தீனியப் போர் ஆகிய புவிசார் அரசியல் பொருளாதாரப் போட்டிச் சூழலுக்குள் ஈழத் தமிழர்கள் மிக நுட்பமாகக் கையாள வேண்டிய திட்டங்கள் பல உண்டு. தற்போதைய உலக அரசியல் ஒழுங்குக் குழப்ப நிலைமையை இலங்கை உரிய முறையில் பயன்படுத்தி வருகின்றது. இந்த நிலையிலேதான் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கிறார். தமிழ்த்தேசியக் கட்சிகள் குறிப்பாக 2001 இல் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயலிழந்து காணப்படும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாகப் பல கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், ரெலோ. ஈபிஆர்எல்எப், புளொட் ஆகிய இயக்கங்களை மையப்படுத்திய புதிய ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் எவ்வாறு எந்தப் புள்ளியில் ஒன்று சேர்ந்து பயணிக்கவுள்ளன என்ற கேள்விகளும் நம்பிக்கையீனங்களும் விஞ்சியுள்ளன. தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்விகள் பல சிந்தனைகளையும் கவலைகளையும் தூண்டிவிடுகின்றன. கொழும்பை மையமாகக் கொண்ட எந்த ஒரு பிரதான சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்களும் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விவகரங்களில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்பது பட்டறிவு. அதுவும் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கையில் இனப் பிரச்சினை என ஒன்று இல்லை என்ற நிலைப்பாடு சிங்கள கட்சிகள் அனைத்திடமும் உண்டு. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சிங்கள ஊடகங்களும் அவ்வாறான கருத்துக்களையே முன்வைத்தும் வருகின்றன. இது “சிங்கள நாடு“ என ஒரு பகுதியும் இது ”சிங்கள பௌத்த நாடு” என பெரும்பான்மையான சிங்கள மக்களும் கருதுகின்ற சூழல் சிங்களப் பிரதேசங்களில் மேலோங்கி வருகின்றன. இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் வடக்குக் கிழக்கில் உள்ள அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து முரண்பாட்டிலும் உடன்பாடாகப் ”பொது வேட்பாளர்” ஒருவரை நிறுத்தி அவருக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்ய வேண்டும். அனைத்துத் தமிழ் மக்களும் குறித்த தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களித்தாலும் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் பிரகாரமும் அதன் தேர்தல் முறையின் மூலமாகவும் வெற்றிபெற முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் பொது வேட்பாளருக்குக் கிடைக்குமானால் ”தமிழ்த்தேசியம்” என்ற நிலைப்பாட்டை சர்வதேச அரங்கில் நிறுவ முடியும். அத்துடன் பிரதான சிங்கள வேட்பாளர்களில் எவரும் ஜனாதிபதியாவதற்குரிய ஆகக் குறைந்தது ஐம்பத்து ஒரு சதவீத வாக்குகளை பெறமுடியாத நிலை ஏற்பட்டால் தமிழ்ப் பொது வேட்பாளரின் வாக்குப் பலத்தினாலோயே இந்த நிலை ஏற்பட்டது என்றும் அதன் மூலம் ஈழத்தமிழர்களின் பலத்தையும் காண்பிக்க முடியும். பேரம் பேசவும் முடியும். ஆகவே இதனைப் புரிந்துகொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் தமிழ் ஊடகங்கள் என்று பல்வேறு தரப்பினரும் ஒருமித்த குரலில் இப்போதிருந்தே செயலாற்ற வேண்டும். 1994 ஆம் ஆண்டு சந்திரிகாவில் இருந்து 2010 இல் சரத் பொன்சேகா, 2015 இல் மைத்திரிபால சிறிசேன, 2020 இல் ரணில் – சஜித் கூட்டு என தொடர்ச்சியாக நம்பி வாக்களித்துத் தமிழர்கள் எதுவும் கண்டதேயில்லை. கடந்த எண்பது வருட அரசியல் போராட்டத்தில் தமிழர்களுக்கு அழிவுகளும் ஏமாற்றங்களும் விஞ்சியுள்ள பின்னணியில் அவற்றைப் படிப்பினையாக எடுத்து, ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தி தமிழ்த்தேசிய நிலைப்பாட்டையும் சிங்களக் கட்சிகள் மீதான நம்பிகையீனங்களையும் உலகத்துக்கு வெளிப்படுத்த வேண்டிய நேரமிது. பொய்யான, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கும் பிரதான சிங்களக் கட்சி ஒன்றின் வேட்பாளருக்கு வாக்களிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். மாறாக ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பதாலோ அல்லது யாரேனும் ஒரு சிங்கள வேட்பாளரை ஆதாரிப்பதாலோ எந்தப் பயனும் இல்லை. தமிழ் மக்கள் தங்கள் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களித்தால் அவருக்குரிய வாக்குகள் நேரடியாகவே எண்ணப்படும். உதாரணமாக தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிப்பதாக இருந்தால் 1 என்ற இலக்கத்துக்கு முன்பாக அல்லது (X) வாக்களித்தால் மட்டும் போதும். வேறு வேட்பாளர்கள் எவருக்கும் விருப்பு வாக்களிப்பது பற்றித் தமிழ் மக்கள் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. தேர்தல் விதிகளின் பிரகாரம் பிரதான கட்சிகளின் இரு சிங்கள வேட்பாளர்கள் ஐம்பத்து ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றும் நிலை ஏற்பட்டால், விருப்பு வாக்குகளை எண்ணும் நிலை எற்படும். இதனைக் கருத்தில் எடுத்து ஏனைய சிங்கள வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்களிக்கும் முறையை புகுத்தாமல், தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களியுங்கள் என்று தெளிவான முறையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனக் கட்சி மற்றும் ஜே.வி.பி போன்ற சிங்களக் கட்சிகளின் தமிழ் முகவர்கள் வடக்குக் கிழக்கில் தத்தமது கட்சிகளின் வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபடுவர். அத்துடன் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைச் சிதைத்து தமிழ் மக்கள், சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அல்லது இலங்கை இராணுவத்துடன் சேரந்து இயங்கும் தமிழ் ஆயுதக் குழுக்களின் தவறான வியூகங்களுக்கு ஏற்ப வாக்குகள் சிதறும் முறையில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கபடக்கூடிய ஆபத்துக்களும் உண்டு. இவற்றையெல்லாம் முறியடித்து ஒருமித்த குரலாகத் தமிழ்த் தேசிய அரசியலை நிலை நிறுத்தக்கூடிய அளவுக்குப் பொது வேட்பாளா் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும். அந்தப் பொதுவேட்பாளர் தமிழ்த்தேசியக் கட்சிகளின் உறுப்பினராக அல்லது ஏதேனும் ஒரு தமிழ்க் கட்சியின் முக்கிய பிரமுகராகவும் இருக்கக் கூடாது. கட்சி அரசியல் சார்பில்லாத, தமிழ்த்தேசியத்தை ஒருமித்த குரலில் செயற்படுத்தக்கூடிய மற்றும் பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கக்கூடிய ஆற்றல் மிக்க ஒருவரையே பொது வேட்பாளராக நியமிக்க வேண்டும். கிழக்கில் இருந்து பொதுவேட்பாளர் தெரிவாவது தமிழ்த் தேசிய அரசியலுக்கு மேலும் ஆரோக்கியமானதாக அமையும். பொது வேட்பாளர் நியமனத்தின் மூலம் அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒரே கட்சியாக இயங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அவசியமற்றவை. ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் தங்கள் நிலைப்பாட்டுடன் நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயற்படலாம். தற்போதைய உலக புவிசார் அரசியல் – பொருளாதாரப் போட்டிச் சூழலுக்குள் தேர்தல் அரசியலும் முக்கியமானது என்ற கருத்தை மறுக்க முடியாது. இருந்தாலும் கட்சி அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை ஒருமித்த குரலாக முன்னெடுக்கக்கூடிய பொதுப் பொறிமுறை அல்லது தேசிய இயக்கம் போன்ற செயற்பாடுகளில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றித்துச் செயலாற்றக்கூடிய வியூகங்களை வகுக்க வேண்டும். மாறாக இனஅழிப்பு விசாரணைக் கோரிக்கைகள் மற்றும் சர்வதேச போர்க் குற்ற விசாரணை பற்றிய அழுத்தங்கள் கட்சி அரசியலுக்குள்ளும் தனிப்பட்ட கருத்துக்கள், அறிக்கைகள் அல்லது தனிப்படக் கடிதம் எழுதுதல் என்ற ஒருமித்த குரல் அற்ற வியூகங்களுக்குள் அமுங்கி விடக்கூடாது 2009 இற்குப் பின்னர் பதின் நான்கு வருடங்கள் கடந்துவிட்ட சூழலில் கூட்டுச் செயற்பாடும் கூட்டுப் பொறிமுறையும் அவசியம் என்பதைத் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சியின் மூலம் தமிழ்த்தரப்பு உறுதிப்படுத்த வேண்டும். இப் பின்புலத்துடன் ”தமிழ்ப் பொதுவேட்பாளர்” என்ற முடிவு உறுதியானால், சிங்களக் கட்சிகளுக்கும் கொழும்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலருக்கும் அது கசப்பாக இருக்கும். இதனால் பிரித்தாளும் தந்திரோபாயங்கள் கொழும்பில் இருந்து கையாளப்படக்கூடிய ஆபத்துகள் உண்டு. வெளிநாட்டு தூதுவர்கள் அடிக்கடி வடக்குக் கிழக்குக்குச் சென்று வரும் நிலையும் உண்டு. யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகம் ஒன்றும் வியூகங்களை வகுக்கலாம். ஆகவே இவ்வாறான தந்திரோபாயங்களுக்குள் சிக்குப்படாமல், தற் துணிவோடும் சுயமரியாதையுடனும் ஒவ்வொரு தமிழ்த் தேசியக் கட்சிகளும் பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்பட வேண்டும். இல்லையேல் ”தமிழ் பொது வேட்பாளர்“ என்ற சிந்தனையைக் கைவிடுவது நல்லது. ஏனெனில் தமிழ்த்தேசியப் பரப்பில் ஏற்கனவே உள்ள பலவீனங்களை அது மேலும் விரிவுபடுத்திவிடும் ஆபத்தும் இல்லாமலில்லை. http://www.samakalam.com/ஜனாதிபதித்-தேர்தலில்-தம-3/
  9. விடுதலை புலிகளை அழித்த பின்னர் தீர்வு என்ற கதை இப்போது பலஸ்தீனர்களுக்கு —வன்னிப் போரில் மக்களைப் பாதுகாக்க ஐ.நா. தவறியதாக 2010 நிபுணர் குழு அறிக்கை கூறியது. ஆனால் இப்போது பலஸ்தீனத்தில் நடப்பதென்ன? ஐ.நா.எங்கே? ஆகவே உலகில் பயங்கரவாதம் என ஒன்று இல்லை. அதனை உருவாக்குவது அல்லது அதற்குக் காரணமாக இருப்பது வல்லாதிக்க நாடுகள்தான். ஆனால் விடுதலை இயக்கங்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, அந்த இயக்கங்கள் எந்த அரசுக்கு எதிராகப் போரிடுகின்றதோ அந்த அரசைக் காப்பாற்றுவதே அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளின் வேலை— அ.நிக்ஸன்- விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அவர்களை அழித்த பின்னர்தான் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று ஜே.ஆர்.ஜயவர்த்தனாவில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரையும் அன்று மார்தட்டியிருந்தனர். புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு எனவும் நியாயம் கற்பித்திருந்தனர். இதனை உள்வாங்கியே புலிகளை அழிக்க 2002 பெப்ரவரியில் சமாதானப் பேச்சு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் திட்டம் வகுப்பட்டிருந்தமை இஸ்ரேல் – பலஸ்தீன போர் ஆரம்பமானதில் இருந்து வெளிச்சத்துக்கு வருகிறது. 2020 ஜனவரியில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் உரையாற்றிய இரா. சம்பந்தன், விடுதலைப் புலிகளை அழித்துப் போரை முடிவுக் கொண்டு வந்த பின்னர் நிரந்த அரசியல் தீர்வு வழங்கப்படும் என்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அமெரிக்க இந்தியத் தூதுவர்கள் 2009 ஜனவரி மாதம் தன்னைச் சந்தித்து கேட்டிருந்தாக விபரித்தார். அரசியல் தீர்வு ஏற்படும் என்ற உறுதிமொழியை நம்பியதாகவும் ஆனால் பத்து ஆண்டுகள் சென்ற பின்னரும்கூட தீர்வு ஏற்படவில்லை எனவும் அமெரிக்க இந்திய அரசுகள் தன்னை ஏமாற்றியுள்ளதாகவும் சம்பந்தன் கவலை வெளியிட்டிருந்தார். இப்போது இஸரேல் – பலஸ்த்தீனம் போர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கனடா பிரதமர் யஸ்ரின் ட்ரூடோ என்ன சொல்கிறார்? ஹமாஸ் இயக்கம் வேறு பலஸ்தீன மக்கள் வேறு என்கிறார். ஹமாஸ் அழிக்கப்பட்ட பின்னரே பலஸ்தீனயர்களுக்கு தீர்வு என்றும் நாடாளுமன்றத்தில் சென்ற வியாழக்கிழமை ட்ரூடோ கூறியிருக்கிறார். இதனையே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சொல்கிறார். பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் என்று பகிரங்கமாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் காசா மருத்துவமனை மீது இஸரேல் நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்காக நூறு மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக ஜோ பைடன் அறிவித்திருக்கிறார். ஐரோப்பிய நாடுகளும் நிதியுதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்திருக்கின்றது. ஆனால் இஸ்ரேல் காசா மீது நடத்தும் தாக்குதலை எனவும் பகிரங்கமாகக் கண்டிக்கவேயில்லை. முதன் முதலில் கடந்த ஏழாம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைக் கண்டித்த மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் பலஸ்தீனம் மீது கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மேற்கொண்ட அத்துமீறல்களைக் கண்டுகொள்ளவில்லை. கண்டிக்கவுமில்லை. இந்த அத்து மீறல்களை எதிர்ப்பதற்கான அதி உச்ச ஏற்பாடாகவே ஹமாஸ் இஸ்ரேல் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தது. ஆகவே நியாயம் மூடி மறைக்கப்படுகின்றது? அரசியல் நியாயம் என்பது இஸ்ரேல் அரசுக்குச் சாதகமாகவும் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் புவிசார் அரசியல் – பொருளாதார நோக்கிலும் அமைந்துள்ளதை இந்த போர் பட்டவர்த்தனமாகக் காண்பிக்கிறது. வன்னி பெருநிலப்பகுதியில் 2009 இல் இலங்கை அரசாங்கம் நடத்திய போர் சாட்சியங்கள் இன்றி நடத்தப்பட்டதாகச் சம்பந்தன் 2010 இல் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். கிளிநொச்சியில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்கள் அனைத்தும் முற்றாக மூடப்பட்டு அங்கு பணிபுரிந்த அனைத்து வெளிநாட்டவர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் சம்பந்தன் எடுத்துக் கூறியிருந்தார். கிளிநொச்சியில் அலுவலகங்கள் மூடப்பட்டபோது அங்கு ஒன்றுகூடிய மக்கள் தங்களைத் தனியாகக் கைவிட்டு வெளியேற வேண்டாம் என்று கோசம் எழுப்பி அழுது புலம்புலம்பினர் என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியிருந்தார். ஆகவே சாட்சியங்கள் இன்றி வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த அத்தனை கொலைகளுக்கும் இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று சம்பந்தன் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகக் கோரியிருந்தார். ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் இதுவரை பொறுப்புக்கூறவில்லை. அத்துடன் அமெரிக்க இந்திய அரசுகள் தங்கள் மனச்சாட்சியை இதுவரை தொட்டுப் பார்க்கவுமில்லை இந்த நிலையில் பலஸ்தீனம் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களைக் கண்டுகொள்ளாமல் ஹமாஸ் இயக்கத்தை அழிப்பதிலேயே மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் குறியாக இருக்கின்றன. பலஸ்தீனம் தனிநாடு என்ற நிலைப்பாட்டை ஏற்று 139 நாடுகள் 2012 இல் ஐ.நா சபையில் வாக்களித்திருக்கின்றன. இந்தியா ஆதரித்தாலும் இஸ்ரேல் மேற்கொள்ளும் இனஅழிப்புகள் பற்றி வாய்திறக்கவில்லை. மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சாதகமான முறையிலும் அதேநேரம் ரசிய- சீனக் கூட்டுக்கு ஏற்ற முறையிலும் இரட்டை நிலைப்பாட்டுடன் இந்தியா இயங்குகின்றது. இதேபோன்றுதான் ஈழத்தமிழர் விவகாரத்திலும் இந்தியா இரட்டை நிலைப்பாட்டை முன்னெடுக்கிறது. ஆகவே விடுதலை இயக்கங்களைத் தலையெடுக்கவிடக் கூடாது என்ற வன்மம் ஏன் இந்திய மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்படுகின்றது? ஐக்கிய நாடுகள் சபை, ஹமாஸ் இயக்கத்தைக் கண்டித்தளவுக்கு இஸ்ரேல் அரசை ஏன் கண்டிக்கவில்லை. ஹமாஸ் தாக்குதல்களில் இஸ்ரேலில் சாதாரண அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறுக்க முடியாது. ஆனால் அதனையும் விட மிக் கொடூரமாக பலஸ்தீன மக்கள் கடந்த எழுபது வருடங்களாக இன அழிப்புக்குள்ளாகி வருகின்றனர். அவர்களின் பாராம்பரிய பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. பலஸ்தீன பொருளாதார வளங்கள் இஸ்ரேல் அரசினால் அபகரிக்கப்பட்டும் அழிக்கப்பட்டுமுள்ளன. ஆனால் சர்வதேச நீதி என்ன? ஒரு கட்டத்தில் பலஸ்தீன மக்களுக்காக மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்காவுடன் இணங்கிப் போகவும் தயாராக இருந்தன. எண்ணெய்வளங்களைப் பரிமாறவும் அதற்குரிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவும் இணங்கியிருந்தன. ஆனால் பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான இன அழிப்பினால் மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்காவுடனான உறவைத் தொடருவதற்குத் தயக்கம் காண்பித்திருந்தன. 2012 இல் ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனம் தனிநாடாக இருக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டபோது அமெரிக்கா ஆதரவு வழங்கிவில்லை. ஆனாலும் அமெரிக்காவுடன் மத்திய கிழக்கு நாடுகள் உறவைப் பேணி வந்தன. 2016 இல் அமெரிக்காவில் பதவிக்கு வந்த டொனால்ட் ட்ரமப் மேற்கொண்ட பலஸ்தீன எதிர்ப்பு நடவடிக்கைகள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தன. ஆனால் 2020 ஜனவரியில் பதவிக்கு வந்த ஜோ பைடன் நிர்வாகம் அதனைச் சீர்ப்படுத்தியிருக்க வேண்டும். மாறாக மத்திய கிழக்கு நாடுகளுடன் மென்போக்கு நகர்வைக் கையாண்டு டொனால்ட் ட்ரமப் மேற்கொண்ட அனைத்துச் செயற்பாடுகளையும் அப்படியே முன்னெடுத்து இஸ்ரேலுக்கு ஜோ பைடன் வலுச் சேர்த்திருக்கிறார். இப் பின்புலத்திலேயே பலஸ்த்தீனம் மீது ஆரம்பிக்கப்பட்டுள்ள போர், மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை அதன் கீழ் இயங்கும் அனைத்துச் சர்வதேச பொது அமைப்புகள் மீதும் சந்தேகத்தை ஏற்பட்டுத்தியுள்ளன. ஏனெனில் ஈழத்தமிழர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை தவறிழைத்திருக்கிறது என ஐ.நா.நிபுணர்குழு 2010 இல் வெளியிட்ட அறிக்கையில் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டியிருந்தது. பொதுமக்கள் கொல்லப்படுவதை சர்வதேசம் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஜெனீவா மனித உரிமைச் சபை அறிக்கைகளிலும் பொதுமக்கள் கொல்லப்பட்டபோது தடுத்து நிறுத்த சர்வதேசம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்று சுட்டிக்காட்டப்பட்ருந்தது. முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை குற்றம் சுமத்தியிருந்தார். ஆனால் தற்போது ஹமாஸின் தாக்குதலையடுத்து பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தும் அவலப்படுகின்றனர். அதனைத் தடுக்க ஐ.நா கடந்த பன்னிரெண்டு நாட்களாக நடவடிக்கை எடுக்கவில்லை. வன்னி பெருநிலப்பரப்பில் இலட்சக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்ட போது அதனைத் தடுக்கத் தவறிய ஐ.நா ஏன் பலஸ்தீனத்தில் தடுக்க முற்படவில்லை? முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட போர் தொடர்பாக ஐ.நா 2010 இல் வெளியிட்ட நிபுணர்குழு அறிக்கையை ஒரு பாடமாக எடுத்துப் பலஸ்தீனத்தில் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கலாமல்லவா? ஐ.நாவில் அங்கீகாரம் உள்ள பலஸ்தீன மக்கள் இஸ்ரேலினால் கொல்லப்படுவதை ஐ.நா ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறது? ஆகவே ஐ.நா சபையின் பின்னால் செயற்படுவது யார்? இக் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு யாருடையது? வல்லரசு நாடுகளின் புவிசார் அரசியல் – பொருளாதார நலன் என்பது இதுதான். அதாவது மனித உரிமை, ஜனநாயகம் என்று தமது தேவைக்கு ஏற்ப அளந்து பேசுவது. அத்துடன் புவிசார் அரசியல் – பொருளாதார நலன்களைப் பெறும் நோக்கில் மனித உரிமை மீறல், இன அழிப்பு என்று காண்பித்து குறித்த அரசுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதும் இந்த வல்லாதிக்க நாடுகளின் வழமை. இதற்கு வசதியாக ஐ.நா சபையும் ஜெனீவா மனித உரிமைச் சபையும் பக்கபலமாக இயங்குகின்றன. விடுதலை இயக்கங்கள் மீதான தவறுகள் கண்டுபிடிக்கப்படுதல் அல்லது திட்டமிட்டு தவறுகளை உருவாக்குதல் என்பதன் பின்னணியையும் இங்கிருந்துதான் நோக்க வேண்டும். 2009 இல் விடுதலைப் புலிகளுக்கு நடந்ததையும் தற்போது ஹமஸ் இயக்கத்துக்கு நடந்து கொண்டிருப்பதையும் இப் பின்புலத்தில் இருந்துதான் ஆராய வேண்டும். உலகில் பயங்கரவாதம் என ஒன்று இல்லை. அதனை உருவாக்குவது அல்லது அதற்குக் காரணமாக இருப்பது இந்த வல்லாதிக்க நாடுகள்தான். ஆனால் விடுதலை இயக்கங்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, அந்த விடுதலை இயக்கங்கள் எந்த அரசுக்கு எதிராகப் போரிடுகின்றதோ அந்த அரசைக் காப்பாற்றும் நகர்வுகளிலேயே அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் முனைப்புக் காட்டும். குறிப்பாக இஸ்ரேல் அரசை வேறு பார்வையிலும் சிறிய நாடான இலங்கையை இந்தோ – பசுபிக் விவகாரத்திலும் அமெரிக்கா கையாள்வதை அவதானிக்க முடியும். இதற்கு இந்தியாவும் பின்னணியாகச் செயற்படுகிறது. ஏனெனில் இந்திய மாநில அரசுகளுக்கு, உரிய அதிகாரங்கள் இல்லை. இந்திய மத்திய அரசிடமே அனைத்து அதிகாரங்களும் உண்டு. இதனை மையமாகக் கொண்டு தமது இந்தியப் பிராந்தியப் பாதுகாப்புக் கருதி ஈழத்தமிழர்களுக்கும் அரைகுறைத் தீர்வான பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து 1987 இல் உருவாக்கியிருந்தது. அதற்கு எதிராக இந்திய இராணுவத்துடன் இடம்பெற்ற போரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். 1987 இல் இந்திய இராணுவம் யாழ் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி 187 பொதுமக்களையும் வைத்தியர்கள் தாதியர்கள் பலரையும் கொலை செய்தது. 2009 இல் வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த இறுதிப் போரில் கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு மாத்தளன் மருத்துவ மனைகள் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தி பல்லாயிரக்கணக்கில் பொதுமக்களைக் கொலை செய்தது. இப்போது காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்கியுள்ளது. ஆனால் இதுவரையும் சர்வதேசக் கண்டனங்கள் வெளிவரல்லை. முப்பது வருட ஆயுதப் போரை இல்லாதொழிக்க இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்க இந்திய அரசுகளும் சீனாவும் மற்றும் சில நாடுகளும் முரண்பாட்டில் உடன்பாடாக ஒத்துழைப்பு வழங்கியதாகப் பிரதமராக இருந்த அமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா 2009 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் பெருமையாகக் கூறியிருந்தார். இதன் காரணத்தினால் வல்லாதிக்க நாடுகளின் நலன் சார்ந்து தமிழ் இனஅழிப்பு என்பதைச் செவிமடுக்காமல் சர்வதேச போர்க் குற்ற விசாரணைக்கு மாத்திரம் ஜெனிவா மனித உரிமைச் சபை பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால் அமெரிக்க இந்திய அரசுகளுக்கிடையே நிலவும் பனிப்போர் மற்றும் சர்வதேச விவகாரங்களில் இந்திய அரசின் இரட்டைத் தன்மைப் போக்கை அவதானித்து இலங்கை சர்வதேச போர்க் குற்ற விசாரணையை நிராகரித்துப் பொறுப்புக் கூறலில் இருந்து முற்றாகவே விலகி நிற்கிறது. இதுபோன்ற ஆபத்தான நிலைமைதான் சர்வதேச அங்கீகாரம் உள்ள பலஸ்தீன மக்களுக்கும் ஏற்படும் என்பது பட்டவர்த்தனம். அதாவது விடுதலைப் புலிகளை அழித்த பின்னரே தீர்வு என்று வாக்குறுதி வழங்கப்பட்டு இதுவரையும் எந்த ஒரு தீர்வும் இல்லாமல் ஈழத்தமிழர் தொடர்ந்து இன அழிப்புக்கு உள்ளாவது போன்று, ஹமாஸ் இயக்கம் அழிக்கப்பட்டால் பலஸ்தீன மக்களும் தொடர்ந்தும் இஸ்ரேல் அரசினால் இன அழிப்புக்கு உள்ளாவர் என்பது பரகசியம். http://www.samakalam.com/விடுதலை-புலிகளை-அழித்த-ப/
  10. விடுதலைப் புலிகளும் கமாஸ் இயக்கமும் —பலஸ்தீனம் தனி நாடாக இருக்க வேண்டும் என்ற தீர்மானம் ஐ.நாவில் உண்டு. இந்தியா. இலங்கை உட்படப் பல நாடுகள் அதனை ஏற்றுள்ளன. அமெரிக்கா மாத்திரம் ஏற்கவில்லை. ஆனால் பலஸ்தீனம் போன்று ஈழத்தமிழர்களுக்கான அங்கீகாரம் ஐ.நாவில் இதுவரை கிடைக்கவில்லை. இஸ்ரேல் – கமாஸ் போர் ஈரான் அரசின் அணுசக்தியை அழிப்பதற்காக ஈரான் மீதான போராக மாறக் கூடிய ஏது நிலை தென்படுகின்றது— அ.நிக்ஸன்- பலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையும் பலஸ்தீனம் தனி நாடாக வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் பதினொரு வருடங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அத்துடன் கமாஸ் இயக்கத்துக்கு ஐ.நா.வில் பார்வையாளர் அந்தஸ்தும் வழங்கப்பட்டிருக்கிறது. பலஸ்தீனத்திற்கு ஆதரவாக 139 நாடுகளும், எதிராக ஒன்பது நாடுகளும் அன்று வாக்களித்திருந்தன. 41 நாடுகள் வாக்களிப்பில் பங்கெடுக்கவில்லை. ஐரோப்பிய நாடுகள் உட்பட இந்திய, இலங்கை போன்ற பல நாடுகளும் ஐ.நா சபையில் இதனை ஏற்றுமுள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட ஒன்பது நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன. இஸரேலுக்கு ஆதரவாக அமெரிக்க செயற்பட்டு வரும் பின்னணியிலேயே மீண்டும் கமாஸ் இஸரேல் மீது போரைத் தொடுத்துள்ளது. அமெரிக்கா மீது அல்கைதா இயக்கம் 2011 செப்ரெம்பரில் நடத்திய தாக்குதலுடன் கமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை மேற்கு நாடுகள் ஒப்பீடு செய்கின்றன. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பென்ஜமீன் நெதன்யாகு உரிய முறையில் செயற்படவில்லை என்றும் தான் மீண்டும் ஜனாதிபதியாகப் பதவியேற்றால் இஸ்ரேல் நாட்டை முழுமையாகப் பாதுகாப்பேன் எனவும் டொனால்ட் ட்ரமப் கூறியிருக்கிறார். பென்ஜமீன் நெதன்யாகுவுக்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார். ஆகவே பலஸ்தீனம் என்ற தேசத்தை இல்லாதொழிப்பதே அமெரிக்காவின் நோக்கம் என்பது பட்டவர்த்தனமாகிறது. ஐ.நா.வில் அங்கீகாரம் இருந்தும் அதனைக் கடந்து அமெரிக்காவும் இஸ்ரேலும் இவ்வாறு செயற்படுகின்ற என்றால், சர்வதேச அங்கீகாரம் இல்லாத நிலையில் ஒரு நிழல் அரசாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளை அழிக்க 2009 இல் அமெரிக்கா எவ்வாறான வியூகங்களை வகுத்திருக்கும் என்பது இங்கே பகிரங்கமாகிறது. ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் குறிப்பாக 1983 இல் வடக்குக் கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற உத்திகள் இஸ்ரேல் அரசினால் வகுக்கப்பட்டது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. தற்போது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி ஈரான் அணுசக்தி திறன்களில் முன்னேறி வரும் நிலையில் இஸ்ரேல் மீது கமாஸ் தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஆனால் இஸ்ரேல் நடத்தும் பதில் தாக்குதல்களை தாக்குப் பிடிக்கக்கூடிய நிலையில் கமாஸ் இல்லை. ஆனாலும் ஈரான் உட்பட மத்திய கிழக்கு நாடுகளின் நேரடி ஆதரவு கமாஸுக்கு பலத்தைக் கொடுக்கலாம். சர்வதேச இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் ஈரான் அணுசக்தித் திட்டத்தில் முன்னேறி வருவதாக ஜிஜோபொலிற்றிகல்மொனிற்றர் (geopoliticalmonitor) என்ற ஆய்வுத்தளம் கூறுகின்றது. ஈரானின் அணுசக்தி முன்னேற்றத்தைத் தடுக்கச் சர்வதேசம் கையாண்ட வியூகங்கள் வெற்றியளித்தாக இல்லை. இந்த நிலையில்தான் இஸ்ரேல் பலஸ்தீன மோதல் ஆரம்பித்திருக்கிறது என்ற தொனியில் அந்த ஆய்வுத் தளம் சுட்டிக்காட்டுகிறது. அதேவேளை இஸ்ரேல் அரசு நீதித்துறையில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் இஸ்ரேலிய இராணுவத்தின் மன உறுதியைப் பாதித்துள்ளது எனவும் இஸ்ரேலிய இராணுவத்திற்குள் ஏற்பட்டுள்ள மனக் கசப்புகள் பலஸ்தீனியர்களுடனான போர்க் களத்தில் பாதிப்பை உருவாக்கலாமென மொடேன்டிப்ளேமேசி என்ற மற்றொரு ஆங்கில ஆய்வுத் தளம் கூறுகின்றது. இலங்கைத்தீவில் தற்போது ஜனாதிபதி ரணில் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் போன்றே இஸ்ரேலியப் பிரதமரும் உள்ளக அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையிலேதான் போரும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. டெனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் கைச்சாத்திடப்பட்ட ஆபிரகாம் உடன்படிக்கைக்குப் பின்னர் ஜோ பைடன் நிர்வாகம் மத்திய கிழக்கில் மோதல்கள் மற்றும் சிக்கல்களை இயல்பாக்குவதில் முக்கிய கவனம் செலுத்தி வந்தது. இது இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவுக்கும் அமெரிக்கா தலைமையில் மும்முனை பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தது. இந்த நிலையில் சவூதி அரேபியா இஸ்ரேலுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும் தயாராக இருந்தது. ஆனாலும் பலஸ்த்தீனம் மீதான இஸ்ரேலின் பிற்போக்குத்தனமான அத்துமீறல்கள் மத்திய கிழக்கு நாடுகளை கோபமடையச் செய்திருக்கின்றன. ஆகவே பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணாமல், மத்திய கிழக்கை நிலைநிறுத்துவது கடினம் என்பதை இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் அமெரிக்காவுகுக்கு உணர்த்தியிருக்கும். ஆனாலும் கமாஸின் தாக்குதலையடுத்து இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளது. இதனால் சவூதி அரேபியா, கட்டார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது குற்றம் சுமத்திக் கமாஸ் தாக்குதலை நியாயப்படுத்தியுமுள்ளன. இதனால் இந்திய – மத்திய கிழக்கு – ஐரோப்பா வழித்தடத் தாழ்வாரத் திட்டம் (India-Middle East-Europe Economic Corridor – IMEEC) கேள்விக்குள்ளாகியுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் பிறிக்ஸ் மாநாட்டுத் தீர்மானங்கள் மற்றும் உலகில் உள்ள பிரதான ஆறு எண்ணெய்வள நாடுகள் பிறிக்ஸில் அங்கத்துவம் பெற்றமை போன்ற காரண – காரியங்கள் அமெரிக்கா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சவாலாக இருந்த நிலையில்தான் IMEEC எனப்படும் திட்டம் பற்றிய அறிவிப்பை புதுடில்லி, ஜீ 20 மாநாட்டில் வெளியிட்டிருந்தது. மத்திய கிழக்கில் சீனாவின் செல்வாக்கை வலுவிழக்கச் செய்வதற்காக மோடியின் வாயினால் ஜோ பைடன் இத் திட்டத்தை அறிவித்திருந்தார் என்று கருதலாம். ஆனாலும் ரசிய – சீனக் கூட்டுக்குள் குறிப்பாக பிறிக்ஸ் கட்டமைப்புக்குள் இந்தியா இருந்துகொண்டு மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்ற முறையில் புதுடில்லியினால் முன்வைக்கப்படும் திட்டங்கள், அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்களுக்குத் திருப்தியாக இருப்பதாகக் கூற முடியாது. இஸ்ரேல் பலஸ்தீன மோதலில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவு என்பது பட்டவர்த்தனம். ரசிய உக்ரெயன் போரிலும் இந்திய நிலைப்பாடு ரசிய ஆதரவை நோக்கியே உள்ளது. ஆகவே அடுத்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வரவுள்ள நிலையிலும் ஈரானின் அணுசக்தித் திறன் முன்னேறி வரும் பின்னணியிலும் மேலும் புவிசார் அரசியல் மோதல்களை இது உருவாக்கலாம். குறிப்பாக மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளைத் திருப்திப்படுத்தும் இந்தியத் திட்டங்களும் ஆபத்துக்களை ஏற்படுத்தலாம். ஆனால் ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை இல்லாதொழிப்பதற்கு 2009 இல் இந்தியாவை மையப்படுத்திய புவிசார் அரசியல் – பொருளாதார சூழல் வசதியாக இருந்தமை போன்று, கமாஸை இல்லாதொழிக்கக்கூடிய புவிசார் அரசியல் பொருளாதார சூழல் இஸ்ரேல் அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியா போன்ற ஒரு நாடு பலஸ்தீனியர்களுக்கு அருகிலும் இல்லை. உதாரணமாக இந்தியா என்றொரு சக்திக்குத் தேவையான ஒரு முனையில் வடக்குக் கிழக்குப் பிரதேசம் அமைந்துள்ளதாலேயே ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டம் வெற்றிபெற முடியவில்லை என்ற கருத்து இன்றும் நிலவுகிறது. அக் கருத்தில் உண்மை இல்லாமலுமில்லை. அன்று அமெரிக்காவுடன் பனிப்போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்தியா குறிப்பாக இந்திராகாந்தி, 1983 இல் ஆயுதப் போராடடம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அமெரிக்காவுடனான இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைச் செய்தமைக்கான காரண காரியங்களும் புரியாமலில்லை. ஆகவே அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் குறிப்பாக ஈரான் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் கமாஸ் இயக்கத்துக்கு ஆதரவளிக்கும். ஈரான் ஆயுதங்களை வழங்கும் சாத்தியங்களும் உண்டு. ஆனாலும் இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு அழிவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக இன அழிப்பு போரின் தொடர்ச்சியாக இது மாறாலாம். ஏற்கனவே இஸ்ரேல் இன அழப்புப் போரைத்தான் நடத்தியிருந்தது. அந்த இன அழிப்புப் போர் உச்சம்தொட்டுப் பலஸ்தீனியர்களுக்கு நியாயம் கிடைக்கவிருந்த போதுதான் 1992 இல் நோர்வே சமாதானப் பணியில் ஈடுபட்டு யாசீர் அரபாத்தைக் கட்டிப்போட்டது. 1994 இல் அமைதிக்கான நோபல் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் 1987 இல் ஆரம்பிக்கப்பட்ட கமாஸ் இயக்கம் தமது நிலைப்பாட்டில் இருந்து மாறாது தொடர்ந்து போராட்டம் நடத்தியிருந்து. பலஸ்தீனியர்களின் நிலைப்பாடு நியாயமானது என்று தெரிந்தும் இன்றுவரையும் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் இஸ்ரேல் அரசின் பலஸ்தீன இனஅழிப்பைக் கண்டுகொள்ளாது, வெறுமனே கமாஸ் இயக்கத்தைப் பயங்கரவாதமாகச் சித்தரித்து வருகின்றன. பலஸ்த்தீனம் மற்றும் ஈழத்தமிழர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையும் அதன் கீழ் செயற்படும் ஜெனீவா மனித உரிமைச் சபை மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையும் அமெரிக்கா போன்ற நாடுகளின் நலன்சார்ந்தே செயற்படுகின்றன. இதற்குள் இந்தியாவும் புகுந்துகொண்டு தமக்குரிய புவிசார் அரசியல் பொருளாதார நோக்கில் லாபங்களைப் பெறுகிறது. 2006 இல் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்காட்டர் தலைமையில் பலஸ்தீனத்தில் நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், கமாஸ் இயக்கத்துக்கு பலஸ்தீனம் சார்பில் ஐ.நா சபையில் பார்வையாளர் அந்தஸ்து பதினொரு வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது. ஆனால் கமாஸ் இயக்கத்தின் இராணுவக் கட்டமைப்பை அமெரிக்கா பயங்கரவாத பட்டடியலிலேயே தொடர்ந்தும் வைத்திருக்கிறது. இதனால் இந்தியாவும் கமாஸின் இராணுவக் கட்டமைப்பைப் பயங்கரவாதமாகவே பார்க்கிறது. இந்த நிலையில் டொனால்ட் ட்ரமப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது ஜெரிசலேம் நகரில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை அமைத்திருந்தார். அன்று ட்ரம்ப் மேற்கொண்ட அணுகுமுறையைத் தான் அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் இஸ்ரேல் அரசுடன் இன்றும் பேணி வருகின்றது. ஆகவே அரசுக்கு அரசு என்ற அணுகுமுறையைத்தான் வல்லரசு நாடுகள் கையாளும் என்பதை இது உணர்த்துகிறது. ஆனால் விடுதலை கோரிப் போராடும் கமாஸ் போன்ற இயக்கங்கள் மரபுவழி இராணுவக் கட்டமைப்புடன் சுயமாக வளர்ந்து வருவதை வல்லரசு நாடுகள் ஏற்றுக்கொள்ளாது. இதற்கு 2009 முள்ளிவாய்க்கால் போர், சா்வதேச போர் விதிகளுக்கு மாறாக நடத்தப்பட்டு முடிவுறுத்தப்பட்டமை உதாரணமாகும். அந்த உதாரணங்கள் மூடிமறைக்கப்பட்டு ‘விடுதலைப் புலிகள் அனுசரித்துப் போகவில்லை’ ‘சந்தர்ப்பங்களைத் தவறிவிட்டனர்’ ‘தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடவில்லை’ என்று பல கதைகளைத் தெரிவு செய்து ஈழப்போரை மலினப்படுத்தும் விமர்சனங்கள் இன்று வரை கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. வடக்குக் கிழக்கில் 2009 இற்குப் பின்னர் சாதி, மத மற்றும் பிரதேச வேறுபாடுகள் தூண்டிவிடப்பட்டுப் போராட்டத்தையும் போரடிய தமிழ்ச் சமூகத்தையும் கொச்சைப்படுத்தும் விமர்சனங்கள் வேண்டுமென்றே விரிவாக்கம் செய்யப்படுகின்றன. அதற்குச் சில தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் என்று சொல்லப்படுவோரும் காரணமாகவுள்ளனர். சர்வதேச அங்கீகாரமற்ற விடுதலை இயக்கங்களின் இராணுவச் செயற்பாடுகளில் தீவிரத்தன்மை இருக்கும். அதன் அரசியல் கட்டமைப்புகள் இறுக்கமாகவும் இருக்கும். ஜனநாயகம் வேறொரு வகிபாகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அரசு என்ற அந்தஸ்த்தைப் பெற்ற அரசுகளும் அதன் இராணுவக் கட்டமைப்புகளும் தேவையானபோது ஜனநாயக விழுமியங்களை மீறிச் செயற்படும். இருந்தாலும் விடுதலை இயக்கங்களில் மாத்திரமே அரசுகள் குறிப்பாக வல்லரசுகள் பிழை பிடிக்கும். விடுதலை இயக்கங்களைப் பிரிக்க அல்லது உள்ளக முரண்பாடுகளை ஏற்படுத்த இந்த வல்லரசுகள் தமக்குச் சாதகமான முறையில் அரச பயங்கரவாதங்களைக் கட்டவிழ்த்தும்விடும். 2009 இல் குறிப்பாக 2002 சமாதானப் பேச்சு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் விடுதலைப் புலிகள் மீது தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சில தவறுகள் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுப் புலிகள் மீது பழியும் போடப்பட்டுப் பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் 2006 இல் தடையும் செய்தது. இப்போது பலஸ்தீனியர்களின் நியாயமான நிலைப்பாட்டைப் பயங்கரவாதமாக்கி கமாஸின் செயற்பாடுகளையும் முற்று முழுதாக முடக்க இஸ்ரேல் எடுக்கும் முயற்சிக்கு மேற்குலகம் ஆதரவு வழங்குகிறது. இந்த ஆதரவின் ஊடாகவே ஈரான் அணுசக்தி முன்னேற்றத்தையும் தடுத்து ஈரான் மீதும் போர் தொடுத்து ஏற்கனவே ஈராக் நாட்டை அழித்தது போன்று ஈரானையும் அழிக்கவுள்ள அமெரிக்கா வியூகம் வகுக்கிறது போல் தெரிகிறது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ இந்த வியூகம் அரங்கேறலாம். http://www.samakalam.com/விடுதலைப்-புலிகளும்-கமாஸ/
  11. ரணில் சீனாவுக்கு செல்வது ஏன்? ஜேர்மன் பயணம் தோல்வியா? -ஜேர்மன் ஜனாதிபதி ஓலாஃப் ஷோல்ஸூடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைப் பற்றிப் பேசியதுடன், இலங்கையின் வேலைத் திட்டத்தை விரைவுபடுத்த பரிஸ் கிளப்பின் உதவியைப் பெறுவதற்கு ஜேர்மன் அரசின் ஆதரவை ரணில் கேட்டிருந்தார். ஆனால் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர பரிஸ் கிளப் ஒக்டோபர் மாதக் கடைசி வரை கால அவகாசம் கேட்டுள்ளது- அ.நிக்ஸன்- சீனாவைக் கடந்து இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கும் விடயத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகள் முற்படுவதாகத் தெரிகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவிகளை எந்த வழியிலாவது பெற முற்படுகிறார். அதேநேரம் சீனாவிடமும் இருந்து அதிகளவு நிதியைப் பெறும் முயற்சிகளும் தீவிரமாக இடம்பெறுகின்றன. அமெரிக்கச் செய்தி ஊடகமான புளும்போர்க் (Bloomberg) தகவலின் பிரகாரம், ரணில் சீனாவிடம் சென்று உதவிகளைப் பெறுவதைவிடவும் அமெரிக்க, பிரான்ஸ், ஜேர்மன், மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து நிதியுதவிகளைப் பெறுவதே மேல் என்ற தொனி தென்படுகின்றது. இப் பின்னணியோடுதான் ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியமும் இலங்கைக்கு வழங்கவிருந்த இரண்டாம் கட்ட நிதியுதவிகளை வழங்க முடியாதென அறிவித்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் ரணில் அரசாங்கத்திடம் மேலோங்கியுள்ளன. இலங்கைத்தீவு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த ஆண்டு எந்த ஒரு தேர்தலையும் நடத்த முடியாதென அதிகாரபூர்வமற்ற முறையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.எம்.எப்.பின் நிதி வழங்கல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை அவதானித்தே தேர்தல் பற்றித் தற்போதைக்குச் சிந்திக்க முடியாதென்ற கருத்தை ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ளது போல் தெரிவிகிறது. கொழும்பில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பி உறுப்பினர்களைச் சந்தித்து உரையாடியிருக்கின்றனர். சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் பரிந்துரைகளை அரசியலாக்கி குழப்ப வேண்டாம் என்றும், கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்குரிய பொதுப் பொறிமுறை ஒன்றை வகுத்துச் செயற்பட வேண்டுமெனவும் ஐ.எம்.எப் பிரதிநிதிகள் கேட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக அதிகாரபூர்வமாக ஐக்கிய மக்கள் சக்தியும் ஐ.எம்.எப் உம் எதுவுமே கூறவில்லை. சந்திப்பு இடம்பெற்றதாக மாத்திரமே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐ.எம்.எப். உடனான சந்திப்பில் ரணில் அரசாங்கம் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியதுடன் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் என ஐ.எம்.எப் பிரதிநிதிகளிடம் உறுதியளித்ததாகச் சஜித் பிரேமதாச கூறியிருக்கிறார். அதாவது நிலையான அரசாங்கம் ஒன்று அமைய வேண்டிய அவசியத்தை சஜித் வலியுறுத்தியிருக்கிறார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டங்களை ஜே.வி.பியும் மறுக்கவில்லை. ஆனால் பரிந்துரைகளைச் செயற்படுத்த நிலையான அரசாங்கம் தேவை என்று ஜே.வி.பி சுட்டிக்காட்டியிருக்கிறது. ஐ.எம்.எப் பிரதிநிதிகளைப் பொறுத்தவரை உள்ளூர் கட்சி அரசியல் போட்டிகளுக்கு இடமளியாமல் பொருளாதார மீட்சிக்கான பொதுப் பொறிமுறை பற்றியே அதிகளவு கவனம் செலுத்தியிருக்கின்றனர். குறிப்பாகத் தமது பரிந்துரைகளை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கக் கூடாது என்பது ஐஎம்எப் பிரதிநிதிகளின் எதிர்ப்பார்ப்பு. எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பின் பின்னணியில்தான் இலங்கை தொடர்ந்து ஆபத்தான பொருளாதாரப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவே ஐ.எம்.எப் கருதுகின்றது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (Extended Fund Facility – EFF) ஒரு பகுதியாக இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்தின் மீதான சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய மதிப்பாய்வின் படி இலங்கைத்தீவில் எதுவுமே சரியாக இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவு மக்கள் தற்போது பொய்யான பாதுகாப்பு உணர்வை எதிர்கொள்வதாகக் கடன் வழங்கும் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் கருதுவதாக தமொனிங்(themorning) என்ற ஆங்கில செய்தித் தளம் கூறுகிறது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தான், EFF திட்டத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை மீளாய்வு செய்த ஐ.எம்.எப் பிரதிநிதிகள் இரண்டாவது தவணைக்குரிய நிதியை வழங்குவது பற்றி அறிவிப்பதில்லை எனத் தீர்மானித்துள்ளனர் என்ற முடிவுக்கு வரலாம். வருமானம் ஈட்டும் இலக்குகள் மற்றும் கடன் மறுசீரமைப்புத் திட்டம் ஆகிய இரண்டு முக்கிய பகுதிகள் குறித்து ஐ.எம்.எப் கவலை வெளியிட்டுள்ளது. வருமானப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான கலந்துரையாடல்கள் ஐ.எம்.எப் உடன் தற்போது நடந்து கொண்டிருக்கும் வேளையில், ரணில் இந்த மாத நடுப் பகுதியில் சீனாவுக்குப் பயணம் செய்வதில் கவனம் செலுத்தியுள்ளார். சீனாவிடம் இருந்து சில உறுதியான அர்ப்பணிப்புகளை ரணில் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சீனா முழுமையான ஆதரவை வழங்கும் என்றும், இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை வெற்றிகொள்ள சீனா உதவும் எனவும் ரணில் நம்புகிறார் போல் தெரிகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையான 330 மில்லியன் டொலர்கள் வழங்கப்படக்கூடிய நிலைமை இல்லை என்பதை அறிந்த பின்னணியிலேயே ரணில் சீனாவிடம் சரணடைந்திருக்க வேண்டும். முதற் கட்ட கணிப்புகளில் இருந்து 15% வருமானம் பற்றாக்குறையாகவுள்ளது. வருமான நோக்கங்களை நிறைவேற்றுவது வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பது குறித்து இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான மூத்த தூதுவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வருமானத்தில் 12% என்ற நோக்கத்தை எட்டுவது மற்றும் அடுத்த ஆண்டு மற்றொரு பற்றாக்குறையைத் தவிர்ப்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் சில புதிய வரி சீர்திருத்தங்களை ஐ.எம்.எப் பரிந்துரை செய்துள்ளது. அத்துடன் 2019 ஆம் ஆண்டு செய்யப்பட்ட வரி குறைப்புகளை மாற்றியமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட வரி சீர்திருத்தங்கள் வருமானத்திற்கும் செலவினத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கப் போதுமானதாக இல்லை எனவும் பீட்டர் ப்ரூயர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையே அமெரிக்காவுடன் இலங்கையின் நிதி நிலைமை குறித்துப் பேசி மேலும் சில அலோசனைகளைப் பெற முடியுமென ஐ.எம்.எப் நம்புவதாக ரொய்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது. ஐ.எம்.எப் பிரதிநிதிகளைச் சந்தித்த பின்னர், ஜனாதிபதி ரணில் செப்ரெட்பர் 26 ஆம் திகதி ஜேர்மனிக்குச் சென்றிருந்தார். அங்கு இடம்பெற்ற ‘பேர்லின் குளோபல் உரையாடலில்’ ஜனாதிபதி கலந்துகொண்டார். ஜேர்மன் ஜனாதிபதி ஓலாஃப் ஷோல்ஸை சந்தித்தார். இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைப் பற்றிப் பேசியதுடன், இலங்கையின் வேலைத் திட்டத்தை விரைவுபடுத்த பரிஸ் கிளப்பின் உதவியைப் பெறுவதற்கு ஜேர்மன் அரசின் ஆதரவை கேட்டிருந்தார். ஆனால் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர பரிஸ் கிளப் ஒக்டோபர் மாதக் கடைசி வரை கால அவகாசம் கேட்டுள்ளது. பரிஸ் கிளப்பின் ஒத்துழைப்பை பெற்று இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ரணில் ஜேர்மனியில் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை. ஆனாலும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை அணுகுவது குறித்தும் ரணில் பரிசீலிக்கிறார். இருந்தாலும் அந்த அணுகுமுறைகள் வெற்றியளிக்குமா என்று கூற இயலாது. இப் பின்புலத்திலேதான் ரணில், இம்மாத நடுப்பகுதியில் சீனாவிற்குப் பயணம் செய்யவுள்ளாதாகத் தெரிகிறது. ஆனால் இங்கே வேடிக்கை என்னவென்றால் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ரணில் அகக்றை செலுத்தி வரும் நிலையில் அதற்கு எதிராகப் பிரதான எதிர்க்கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளன. பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரால் இந்த மனு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை உருவாக்குவதில் சீனாவுக்குப் பெரும் பங்களிப்பு உண்டு. அத்துடன் இலங்கையின் பொருளாதார எதிர்காலத்தின் நிலைத் தன்மையிலும் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. பலதரப்பு நிதியளிப்பவர்கள் உட்பட இலங்கைக்கான அனைத்து கடன் வழங்குநர்களும் கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்று சீனா எதிர்பார்க்கிறது. கடன் மறுசீரமைப்புத் திட்டத்தில் கடன் வழங்குநா்கள் ஏன் இணைய முடியாது என்ற கேள்வியையும் சீனா முன்வைத்திருக்கிறது. ஆனால் சீனாவைக் கடந்து மேற்கு மற்றும் ஐரோப்பியக் கடன் வழங்குநா்களிடம் இலங்கை வர வேண்டும் என்ற அழுத்தங்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதையே அவதானிக்க முடிகிறது. ரணில் கடும் அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் வழக்குத் தொடுத்தமை என்பது பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே என ஹர்சா டி சில்வா கூறுகிறார். குறிப்பாக வங்கிகளில் வட்டி வீதங்கள் குறைக்கப்படுவதால் அரச மற்றும் தனியார்துறை ஊழியர்கள் பாதிக்கப்படுவார் என்ற வாதத்தை அவர் முன்வைத்திருக்கிறார். ஆகவே மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளாக இருக்கலாம் அல்லது இந்தியா சீனாவாக இருக்கலாம் இலங்கைக்குக் கடன் கொடுத்து மீள முடியாத நிலைமைக்குள் கொண்டு செல்கின்றனா் என்பதை மறுக்க முடியாது. கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் வங்கிகளில் வட்டி வீதக் குறைப்பும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட சகல சேவைகளுக்குமான வரி அதிகரிப்புகளும் பொது மக்களுக்குப் பாரிய ஆபத்து. ஆனால் இலங்கைத்தீவின் வருமானத்தை அதிகரிப்பதற்கான மாற்றுத் திட்டங்கள் அரசாங்கத்திடமோ எதிர்க்கட்சிகளிடமோ இல்லை. வரி அதிகரிப்புகளைத் தவிர்த்து இலங்கைத்தீவின் வருமானத்தை அதிகரிக்க இனப் பிரச்சினை முதலில் தீர்க்கப்பட வேண்டும். நல்லிணக்கம் ஊடாகவே பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் அவ்வப்போது பரிந்துரைத்தபோதும், அதனை ஏற்றுச் செயற்படுத்த வேண்டும் என்ற மன நிலை சிங்கள அரசியல் தலைவர்கள் எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. இதனைப் பகிரங்கப்படுத்தச் சிங்கள ஆங்கில ஊடகங்களும் தயாராக இல்லை என்பதுதான் வேதனை. http://www.samakalam.com/ரணில்-சீனாவுக்கு-செல்வது/
  12. ஹர்த்தால் பயனற்றது. சர்வதேச நீதியை நோக்கிச் செய்ய வேண்டியது என்ன? அ.நிக்ஸன்- ஹர்த்தால் நடவடிக்கை வடக்குக் கிழக்கில் சாதாரண மக்களையே பாதிக்கும். இலங்கை அரசாங்கத்துக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. வெறுமனே எதிர்ப்பை மாத்திரமே ஹர்த்தால் வெளிப்படுத்தும். 2009 மே மாதத்தின் பின்னரான கடந்த பதின்நான்கு வருடங்களிலும் செய்ய வேண்டிய தேசியக் கடமை ஒழுங்குபடுத்தப்படவில்லை என்பதையும் பலவீனங்களையுமே இந்தக் ஹர்த்தால் அறிவிப்பு வெளிப்படுத்தியிருக்கிறது. ஆகவே சர்வதேச நீதியை நோக்கிச் செய்ய வேண்டியது என்ன? 1) இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் தமிழர்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றனர் என்பது பற்றிய ஆவணம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். குறிப்பாக 1948 ஆம் ஆண்டு சோல்பரி யாப்பில் இருந்து தற்போது நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு குடியரசின் இரண்டாவது யாப்பு வரையும் எப்படிப் புறக்கணிக்கப்பட்டு வருகிறோம் என்பது பற்றிய சட்டங்களை மேற்கோள்காண்பித்து ஆவணம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். 2) நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழர்களுக்கு எதிராக குறிப்பாகப் படுகொலைகளில் ஈடுபட்ட இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்டமை மற்றும் கொலை ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகள் பிணையில் விடுதலை செய்யப்படுகின்றமை. அதுவும் இராணுவத்துடன் சேரந்து இயங்கிய இராணுவக் குழுக்களில் இயங்கிய பலர் தற்போது அமைச்சர்களாகப் பதவி வகிக்கின்றமை போன்ற விபரங்கள் ஆதாரங்களுடன் தயாரிக்கப்பட வேண்டும். 3) கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையாள பொதுப் பொறிமுறை ஒன்றை வகுக்க வேண்டும். அந்தப் பொறிமுறையைக் கையாள உள்ளூர் மற்றும் உலக அரசியல் பொருளாதார நிலைமைகளை அவதானித்து அதற்கு ஏற்ப செயற்படக்கூடிய துறைசார்ந்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும். 4) அரசியல் தீர்வு எது என்பதைத் தீர்மானித்து அனைத்துக் கட்சிகளும் ஒரு குறிப்பிட்ட ஆவணத்தில் கையொப்பமிட்டு அதனையே தேசியக் கோரிக்கையாகவும் பொது நிலைப்பாடாகவும் பிரகடனப்படுத்த வேண்டும். 5) கொழும்புக்கு வருகின்ற வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகள் சார்பிலும் ஒருமித்த குரலில் பேசுவதற்காகக் குறிப்பிட்ட சிலர் நியமிக்கப்பட வேண்டும். கட்சிகளாகப் பிரிந்து சென்று சந்தித்தால் அது பிரித்தாளும் தந்திரத்துக்கே வழி சமைக்கும். ஒருமித்த குரல் செயற்பாட்டுக்கும் அது தடையாக அமையும். 6) வடக்குக் கிழக்கில் இராணுவத்தினர் வசமள்ள காணிகள் பற்றிய விபரங்கள், 1948 இல் இருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள் குடியேற்றங்கள், 2009 மே மாதத்திற்குப் பின்னர் இலங்கை ஒற்றையாட்சியின் சட்டங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்கள், அமைக்கப்பட்டு வரும் விகாரைகள் பற்றிய விபரங்களை ஆவணப்படுத்த வேண்டும். 7) அதாவது இலங்கைச் சட்டங்கள் அனைத்தும் பௌத்த சமயத்துக்குரியது, தொல்பொருள் திணைக்களம் பௌத்த சமயத்தை மாத்திரம் மையப்படுத்தியது என்ற விரைவிலக்கணங்கள் கொடுக்கப்பட்டு ஆவணங்கள் தயாரிக்கப்பட வேண்டும். இது பற்றிய சாட்சியங்கள் வாக்கு மூலங்களைப் பெற வேண்டும். 😎 இவை பற்றி வடக்குக் கிழக்கில் மக்கள் அனைவருக்கும் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக ஏன் எங்களைப் பிரித்தாள முற்படுகிறார்கள், ஏன் எங்களுக்குள் சாதி. சமய மற்றும் பிரதேசவாத எண்ணங்களைக் கிளறி முரண்பாடுகளை தோற்றிவிக்கிறார்கள் என்பது பற்றிய விளக்கங்களைக் கொடுக்க வேண்டும். 9) சாதி, மத பிரதேச வேறுபாடுகளுக்கும் அது பற்றிய சின்னச் சின்ன உணர்வுகளுக்கும் இடமளிக்காத முறையில் ஒரு தேசமாகத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும் என்பது பற்றிய அறிவுசார்ந்த விழிப்புணர்வுகளை அரசியல் – பொருளாதார நோக்கில் வழங்க வேண்டும். 10) சிங்கள ஆட்சியாளர்களின் திட்டமிடப்பட்ட புறக்கணிப்புகளுக்கு மத்தியிலும் வடக்குக் கிழக்கில் உள்ள வளங்களைப் பயன்படுத்தியும் உள்ளூராட்சி சபைகள் மூலமாகவும் குறைந்த பட்ச அபிவிருத்திகளை இயல்பாகவே செய்ய முடியும் என்ற அறிவுசார்ந்த விடயங்களை மக்களுக்குப் போதிக்க வேண்டும். குறிப்பாக உள்ளூர் பொருளாதார உற்பத்தி முறைகள் பற்றி அறிவூட்ட வேண்டும். 11) கல்வியின் அவசியம் பற்றியும் உலக நடப்புகள் பற்றியும் அறிவூட்ட வேண்டும். அத்துடன் பொழுதுபோக்கு என்று அரசாங்கம் அல்லது சிங்களக் கட்சிகளின் தமிழ் முகவர்கள் அறிமுகப்படுத்துகின்ற களியாட்ட நிகழ்வுகளினால் எழக்கூடிய ஆபத்துகள் பற்றி அறிவூட்ட வேண்டும். 12) பொதுழுதுபோக்கும் களியாட்ட நிகழ்வுகளும் உலக மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தேவைதான். ஆனால் அது எத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதைத் தமிழர் தேசத்துக்கு ஏற்ற பொதுப் புத்தியாக வகுக்க வேண்டும். 13) நவீன தொழிநுட்பங்களைக் குறிப்பாகச் சமூகவலைத்தளங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வுகளை ஊட்ட வேண்டும். இவற்றைச் செய்ய வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும் உண்டு. சிவில் சமூக அமைப்புகள் இதற்கான அழுக்ககக் குழுக்களாக இயங்க வேண்டும். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று தத்தமது ஆசனங்களையும் தமது கட்சிகளுக்குரிய ஆசனங்களையும் அதிகரிப்பதுதான் முதன்மை நோக்கம் என்றால் மேற்குறித்த பரிந்துரைகள் எதுவுமே செல்லுபடியாகாது. அது உப்புச் சப்பில்லாத ஹர்த்தால்களை மாத்திரமே நடத்த வசதியாக இருக்கும். http://www.samakalam.com/ஹர்த்தால்-பயனற்றது-சர்வ/
  13. அமெரிக்க இந்திய சமரசமும் கனடாவும் –இந்தியாவின் உள்ளக ஜனநாயக மீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருந்த அமொிக்கா கனடா போன்ற மேற்கு நாடுகள், வேறு நாடுகளுக்குள் அத்துமீறித் தமக்கு எதிரான தீவிரவாத நபர்களைச் சுட்டுக் கொண்டனர் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாமலில்லை. ஆகவே தமது நலன்களுக்காக மாத்திரம் இந்த வல்லாதிக்க நாடுகள் ஒன்றில் ஒன்றாகத் தங்கி வாழும் அரசியல் பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஈழத்தமிழர்கள் கருத்தில் எடுக்க வேண்டும்— அ.நிக்ஸன்- இந்தோ – பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியாவின் ஒத்துழைப்பை நாடிநிற்கும் அமெரிக்கா, மோடி அரசாங்கத்தால் தொடர்ச்சியாக இந்தியாவில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் இந்து சமயம் அல்லாத ஏனைய சமயத்தவர்கள் மீதும் வேறு சமூகங்கள் மீதும் நடத்தி வரும் மிக மோசமான மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை இதுவரை கண்டித்ததாகத் தெரியவில்லை. தனக்குரிய புவிசார் அரசியல் – பொருளாதார நோக்கில் அமெரிக்கா, இந்தியாவுடன் இணைந்து பயணிக்க முற்பட்டு அதற்காக ஜனநாயக மற்றும் தாராளவாத நற்சான்றிதழ்களைச் சமரசம் செய்கிறது. சீன விகாரத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்கா தேவை. 2005 ஆம் ஆண்டு முதல், அமெரிக்க – இந்தியா கூட்டு, விரைவான வேகத்தில் வளர்ந்தது. ஆனால் இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஒரு கட்சி ஜனநாயகத்தின் சாதனைகளைப் பார்க்கும்போது, இந்தியாவின் ஜனநாயக விரோதப் போக்குகளை அமெரிக்க – இந்திய அரசுகளின் பகிரப்பட்ட மதிப்புகளாக வகைப்படுத்துவதன் மூலம் அமெரிக்கா தனது ஜனநாயக உருவத்தை இந்தியாவுடன் சமரசம் செய்திருக்கிறது என்றே பொருள் கொள்ள முடியும். டொனால்ட் ட்ரம்ப், மோடிக்கு வழங்கிய முக்கியத்துவம் ஜோ பைடன் ஆட்சியில் மாற்றமடையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அமெரிக்கா மோடியின் ஜனநாயக விரோதங்களை ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு இந்தியாவுடன் தொடர்ந்தும் சமரசம் செய்திருக்கிறது. இப் பின்புலத்திலேயே கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அவதானிக்க முடியும். தாக்குதலுக்கு இந்தியா காரணம் என்று கனடா பிரதமர் நேரடியாகக் குற்றம் சுமத்தியிருந்தாலும் அதனை இந்தியா மறுத்திருக்கிறது. ஆனால் பின்னணியில் இந்தியாதான் என்று கனடா நம்புகிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இது தெரியாததல்ல. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா கனடாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தாலும் இந்தியாவை நேரடியாகப் பகைத்துக்கொள்ளும் நிலையில் இல்லை என்பதை அமெரிக்க ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தம்மை மனித உரிமைகளின் பாதுகாவலர்கள் என்று மார்தட்டுகின்றன. அதற்காகத் தெற்காசியா உள்ளிட்ட ஏனைய நாடுகளைத் தினமும் கிண்டலாகவும் விமர்சிக்கின்றன. ஆனால் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று கூறப்படும் இந்தியாவில் மோடியின் மனித உரிமை மீறல் செயற்பாடுகளைக் கண்டுகொள்ளாமல் அமெரிக்கா, இந்தியாவைப் பாராட்டுவதாக சீனாவின் குளோபல்ரைம்ஸ் (globaltimes) ஆங்கிலச் செய்தி இணையத் தளம் குற்றம் சுமத்தியுள்ளது. புவிசார் அரசியல் – பொருளாதார நலன்கள் மற்றும் சீனாவுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலில் இந்தியாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விரும்பத்தினால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகள் இந்தியாவைப் பாராட்டும் நிலைக்குத் தூண்டப்படுவதாகவும் குளோபல் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. ‘மத சுதந்திரத்தின் கடுமையான மீறல்களுக்காக’ பிரதமர் நரேந்திரமோடிக்கு ஒருமுறை அமெரிக்கா விசா வழங்க மறுத்திருந்தது. 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளைக் கண்டித்து அமெரிக்கா மோடி மீது அப்போது கடும் விமர்சனத்தையும் முன்வைத்திருந்தது. ஆனால் தற்போது அமெரிக்கா மோடியை அரவணைக்கிறது. 2002 இல் இருந்து இன்றுவரை மோடியின் செயற்பாடுகளை நோக்கினால் மோடி அரசாங்கம் மத மற்றும் இன ரீதியில் சிறுபான்மையினரைக் குறிவைத்துக் கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது. அச் சட்டங்கள் மூலம் சிவில் சமூகக் குழுக்களின் மீதான பிடியையும் மோடி அரசாங்கம் இறுக்கி வருகின்றது. பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் இணைய முடக்கங்களைம் மோடி அரசு திணித்ததுள்ளது. குறிப்பாக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் மேலோங்கியிருப்பதாக ஜியோபொலிற்றிகல்மிரர் (geopoliticalmonitor) என்ற ஆய்வுத்தளம் குற்றம் சுமத்துகிறது. மோடியை அமெரிக்கா அனைத்துக்கொண்ட முறை என்பது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் உள்ள பாசங்குத் தன்மையின் வெளிப்பாடு எனவும் அந்த ஆய்வுத்தளம் ஆதாரங்களோடு சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்க அரவணைப்பு அல்லது இந்தியாவின் இரட்டைத் தன்மை கொண்ட வெளியுறவுக் கொள்கையை விரும்பியோ விரும்பாமலோ மேற்கு நாடுகள் குறிப்பாக அமெரிக்கா ஏற்றுக்கொள்கிறது என்ற காரண காரியங்களினால் இந்தியா உலக அரங்கிற்கு உயர்ந்து வரும் நிலையில் இருப்பது போன்ற தோற்றப்பாடு தென்படுகிறது. ஆனால் இந்தியாவில் மிகச் சமீபகாலமாக நடந்து வரும் வகுப்புவாத வன்முறைகள், பாரபட்சமான நடைமுறைகள், மதமாற்றச் சட்டங்கள் மற்றும் துன்புறுத்தல்களால் இந்தியாவின் ஜனநாயக அந்தஸ்து குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது என்றே கூறலாம். ஜயோபொலிற்றிகல்மிரர் ஆய்வுத் தளத்தின் தகவல்களின் பிரகாரம் 2016 மற்றும் 2020 இற்கு இடையில் இந்தியாவில் வகுப்புவாதச் செயற்பாடுகளினால் ஐம்பதுக்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை சமீபத்திய காலத்தில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வுத்தளம் ஆதாரங்களை முன்வைக்கிறது. சர்ச்சைக்குரிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது, இந்தியாவில் மத சுதந்திரம் மற்றும் பன்மைத்துவம் குறித்த சூடான விவாதங்களையும் மேலும் தூண்டியுமுள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் ஜனநாயக நெறிமுறைகள் கணிசமான அளவு மோசமடைந்துள்ளன. அதன் ஜனநாயக மதிப்பெண் 2014 இல் 7.92 என்ற உச்சத்தில் இருந்து 2020 இல் 6.61 ஆக குறைந்துள்ளதாகவும் ஜியோபொலிற்றிக்கல்மிரர் தளம் சுட்டிக்காட்டியுள்ளது. உலகளாவிய தரவரிசையில் 27 வது இடத்திலிருந்து 53 வது இடத்திற்கு இந்தியாவின் ஜனநாயகச் செயற்பாடுகள் வீழ்ச்சியடைய வழிவகுத்ததுள்ளன. இந்தச் சரிவுக்கு மோடியின் தலைமையிலான அரசாங்கமே காரணம் என்றும் அந்த ஆய்வுத் தளம் கூறுகிறது. அப்படிப் பார்த்தால் இந்தியாவை ‘ஜனநாயகத்தின் தாய்’ என்று மோடியின் அரசாங்கத்தில் கூறக்கூடிய நம்பகத்தன்மை இருப்பதாகத் தெரியவில்லை. மோடியின், பிரதமர் அலுவலகம் மற்றும் தனிப்பட்ட பிரபலத்தை மத மற்றும் இன வெறுப்பை பரப்புவதற்கு பயன்படுத்தியதாகக் கூறப்படுவதாக செய்டா சபா பட்டூல் (Syeda Saba Batool) என்ற அரசியல் ஆய்வாளர் ஜியோபொலிற்றிகல்மிரர் என்ற ஆய்வுத் தளத்தில் எழுதிய கட்டுரையில் விபரிக்கிறார். இந்தியாவை இந்து நாடாக மாற்ற மோடி முற்படுகிறார். இது இந்துக்கள் அல்லாதவர்களைத் துன்புறுத்துவதற்கும், மீறுவதற்கும் வழிவகுக்கும். அவர்களின் மனித உரிமைகள். இந்துத்துவா சித்தாந்தத்தின் மேலாதிக்க வடிவமைப்பு தெற்காசியாவின் பிராந்திய பாதுகாப்பை எவ்வாறு சீர்குலைக்கிறது என்பதையும் காட்டுகிறது. தற்போதைய இந்திய ஆட்சியின் ஜனநாயக விரோத நற்சான்றிதழ்கள், ஜனநாயக நெறிமுறைகளில் மோடியின் அர்ப்பணிப்பு இல்லாததற்கு போதுமான சான்றாகவே உள்ளது. ஆனாலும் மோடியின் தொடர்ச்சியான ஜனநாயக மீறல் செயற்பாடுகளின் பின்னணியோடுதான் கனடா தற்போது இந்தியாவுடன் முரண்படுவதாகக் கூற முடியாது. இருந்தாலும் காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர் கொலை செய்யப்பட்டமைக்கு இந்தியா காரணம் என்ற கனடா பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் தடம் புரண்டுள்ளன என்பது உண்மை. இச் சூழலில் மேற்குலக நாடுகளுக்குச் சவால்விட சீனாவுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பு என்று கருதலாம். கனடா – இந்தியா சர்ச்சையைச் சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்று கனேடிய ஊடகங்கள் எதிர்வு கூறுகின்றன. இந்தியச் செயற்பாட்டுக்கு எதிரான தனது நடவடிக்கைகளுக்குக் கனடா சர்வதேச ஆதரவைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் புதுடில்லியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன. கனேடிய செய்தி இணையதளமான டொராண்டோ ஸ்டாரில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், வில்லனோவா பல்கலைக்கழகத்தின் சார்லஸ் விகர் சட்டக் கல்லூரியின் சர்வதேசச் சட்டத்தின் உதவிப் பேராசிரியரான பிரஸ்டன் ஜோர்டன் லிம், இந்தச் சர்ச்சை மீது சீனா எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை விபரிக்கிறார். கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகரித்து வரும் முரண்பாட்டினால் மேற்கத்திய நாடுகளிடையே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஏனெனில் சீனாவுக்கு எதிரான ஒற்றுமையை அது குறைத்துவிடும் என்று ஜோர்டன் லிம் விமர்சிக்கிறார். அமெரிக்கத் தலைமையை மையமாகக் கொண்டு பேசப்படும் பிராந்திய பாதுகாப்பில், இந்தியாவின் பலவீனமான நிலை காரணமாக சீனாவுக்கு பலன் கிடைக்கும் என்றும் அவர் நம்புகிறார். இந்தியாவுக்கு எதிராகக் கனடா உறுதியான ஆதாரங்களை வழங்கினால் அது வெளிநாட்டுத் தலையீட்டை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்லும் என்று பிரஸ்டன் ஜோர்டன் லிம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தோ பசிபிக் விவகாரத்தில், சீனாவும் கனடாவும் எதிரும் புதிருமாக உள்ளன. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைப் போலவே, கனடாவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவை ஒரு முக்கிய சக்தியாக நோக்குகிறது. இந்தோ-பசிபிக் தந்திரோபாயத்தில், ‘சீனா ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் உலக சக்தியாக உள்ளது’ என்று ஏற்கனவே கனடா கூறியுள்ளது. ஆகவே சீனாவை எதிர்கொள்ளத் தன் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதே கனடாவின் சமகால உத்தியாக இருக்கின்றது. இந்த உத்தியில் இந்தியாவைத் தனது இயல்பான கூட்டாளியாகக் கனடா கருதுகிறது. ஆனால் காலிஸ்தான் தீவிரவாதத் தலைவரின் கொலைச் சர்ச்சைக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் தூரம் கனடாவின் இந்த வியூகத்தைப் பலவீனப்படுத்தும். சீனாவை எதிர்கொள்வதற்காகக் கட்டமைக்கப்பட்ட ஒற்றுமைக்கு அது ஆபத்தையும் ஏற்படுத்தலாம். இப் பின்னணியில் கனடா – இந்திய மோதல் விவகாரத்தில் ஈழத்தமிழர்கள் ஒரு விடயத்தை கவனத்தில் எடுப்பது நல்லது. அதாவது காலிஸ்தான் தீவிரவாதிகளுக்காகக் கனடா குரல் கொடுப்பதாக நம்பக்கூடாது. தனது நாட்டுக்குள் இந்திய உளவுத்துறை ஊடுவியுள்ளது என்பதே கனடாவுக்குள்ள பிரச்சினை தமது புவிசார் அரசியல் பொருளாதார நோக்கில் இந்தியா போன்ற நாடுகளின் உள்ளக ஜனநாயக மீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருந்த அமொிக்கா கனடா போன்ற மேற்கு நாடுகள், வேறு நாடுகளுக்குள் அத்துமீறி தமது நாடுகளுக்கு எதிரான தீவிரவாதிகளைச் சுட்டுக் கொண்டனர் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாமலில்லை. ஆகவே ஒன்றை ஒன்று உதாரணமாக வைத்துக் கொண்டு தமது நலனுக்காக மாத்திரம் இந்த வல்லாதிக்க நாடுகள் ஒன்றில் ஒன்றாகத் தங்கி வாழும் அரசியல் பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதையே ஈழத்தமிழர்கள் நன்கு கருத்தில் எடுக்க வேண்டும். கனடாவுக்குள் புகுந்து காலிஸ்தான் தலைவரை இந்தியா கொலை செய்தமைபோன்று, புலம்பெயா் நாடுகளில் ஜனநாயக வழியில் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ்ப் பிரதிநிதிகள் மீது இலங்கை குறிவைத்தால் கனடா போன்ற நாடுகள் குரல் கொடுக்குமா என்பது கேள்வியே. ஏனெனில் இலங்கைதான் நேரடியாக ஈடுபட்டது என்று தொிந்தாலும் அதன் பின்னால் நிச்சயம் இந்தியா இருந்திருக்கும். அல்லது இந்தியாவுக்கு அப்படியொரு சம்பவம் நடந்தமை தெரிந்திருக்கும். இதன் காரணமாக ஈழத்தமிழர்களுக்காக இந்தியாவுடன் முரண்பட கனடா உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகள் முன்வரக்கூடிய வாய்ப்புகள் இல்லை என்பதே பட்டவர்த்தனம். 2009 இற்கு முன்னரும் அதற்குப் பின்னரான சூழலிலும் இதுதான் நடக்கிறது. நடந்து கொண்டுமிருக்கிறது. மோடியின் ஜனநாயக மீறல் இந்துத்துவாச் செயற்பாடுகளைக் கண்டிக்காமல் இந்தியாவுடன் அமெரிக்கா சமரசம் செய்வதுபோன்று, வடக்குக் கிழக்கில் பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட தமிழர்களுக்கு எதிரான சிங்கள ஆட்சியாளர்களின் அத்தனை அநீதிகளையும் அமெரிக்கா போன்ற உலக நாடுகள் கண்டுகொள்ளாமல் இலங்கையுடன் தொடர்ந்தும் உறவை பேணுகின்றன. ஆகவே ஒவ்வொரு தமிழ்த்தேசியக் கட்சிகளும் தத்தமது தேர்தல் அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் ஒரு தேசமாகச் சிந்தித்து ஒருமித்த குரலில் அரசியல் விடுதலைக் கோரிக்கையை முன் நிறுத்தினாலேதவிர, எந்த ஒரு வல்லாதிக்க நாடும் “இலங்கை அரசு” என்ற கட்டமைப்பை மாத்திரமே பலப்படுத்தும். இதற்குப் பல உதரணங்கள் உண்டு என்பதைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அறியாதவர்கள் அல்ல. http://www.samakalam.com/அமெரிக்க-இந்திய-சமரசமும/
  14. குற்றவாளிகளுக்கு மன்னிப்பா? பேராயர் மல்கம் ரஞ்சித்திற்குப் பகிரங்கக் கடிதம் –வத்திகானில் உள்ள திருத்தந்தையின் ‘கார்தினால்’ என்ற சர்வதேச அந்தஸ்தில் (International Excellence) இருந்து கொண்டு, இலங்கைத்தீவில் உள்ள ஏனைய சமூகங்களை ஓரக் கண்ணால் பார்க்கும் சிறுமைத் தனத்தில் (Smallness) இருந்து முதலில் தாங்கள் வெளியே வர வேண்டும்– அ.நிக்ஸன்– 1991 ஆம் ஆண்டு யூன் மாதம் பதினேழாம் திகதி தாங்கள் கொழும்பு துணைப் பேராயராக திருநிலைப்படுத்தப்பட்டுப் பின்னர் 1995 இல் இரத்தனபுரி மறை மாவட்ட ஆயராகவும் 1995 முதல் 2001 வரை இரத்தினபுரி ஆயராகவும் பணிபுரிந்தீர்கள். அதன் பின்னர் 2001 ஒக்ரோபர் முதலாம் திகதி உரோமை மறைபரப்பு பேராயத்தின் துணைச் செயலராகவும் நியமனம் பெற்றிருந்தீர்கள். வத்திக்கானில் உள்ள உலகக் கத்தோலிக்கத் திருத்தந்தையின் (Pope) இந்தோனேசிய மற்றும் கிழக்குத்தீமோர் நாடுகளுக்கான தூதுவராக 2004 ஏப்ரல் முதல் 2005 டிசம்பர் வரை பணியாற்றியபோதுதான் தாங்கள் பேராயராகவும் தரமுயர்த்தப்பட்டீர்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. இப் பின்புலத்திலேதான் 2009ஆம் ஆண்டு யூன் மாதம் 16ஆம் திகதி திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ற் தங்களை கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் பேராயராக நியமனம் செய்தார். அதே ஆண்டு யூன் 29ஆம் திகதி புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்றின் கரங்களினால் பேராயருக்குரிய சிறப்புச் சின்னமாகிய ‘கம்பளித் தோள்பட்டை’ ((Pallium) தங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. பின்னர் கொழும்பு உயர் மறைமாவட்டப் பொறுப்பை அதே ஆண்டு ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி ஏற்றீர்கள். உங்கள் சேவை மற்றும் இனமத பேதமற்ற ‘மனிதகுலம்’; என்ற பொது மனப்பாங்கு ஆகியவற்றைக் கணிப்பீடு செய்தே 2010 ஆண்டு ஏப்ரல் மாதம் தங்களுக்குக் ‘கர்தினால் என்ற சர்வதேச தரம்வாய்ந்த அந்தஸ்த்துக் கிடைத்தது. அதாவது எதிர்காலத்தில் திருத்தந்தையாகவதற்குரிய அங்கீகாரம் என்றால் அது மிகப் பொருத்தம். உலகக் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் திருத்தந்தை (Pope) வத்திக்கானில் இருக்கிறார். வத்திக்கான் என்பது இத்தாலி நாட்டின் ஒரு நகரமாக இருந்தாலும் வாத்திக்கான் திருத்தந்தையின் இறை அரசசாட்யின் கீழ் தனித்தே இயங்குகின்றது. ஆகவே இனமத பேதங்களைக் கடந்து உலக மக்கள் நலனுக்காக மாத்திரம் குறிப்பாக புவிசார் அரசியல், புவிசார் பொருளாதார நிலைமைகளைக் கற்றுணர்ந்து அவதானித்து உலக வல்லரசுகளின் தவறுகளைச் சமநிலையில் சுட்டிக்காட்டிச் சீர்திருத்தக்கூடிய உயர்தரமிக்க ‘திருத்தந்தை’ (Pope) ஆவதற்குரிய அங்கிகாரத்துக்கான ‘கர்தினால் என்ற அந்தஸ்தில் தாங்கள் இருப்பது இலங்கைத்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆயராக இருந்து கர்தினால் வரையும் தாங்கள் தரமுயர்ந்தமைக்கு வத்திகானில் உள்ள திருதந்தையின் அவதானிப்புத்தான் காரணம் என்பதைத் தாங்கள் அறியாதவருமல்ல. தரமுயர்வதற்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் அல்லது வேறு உயர்நிலையில் உள்ளவர்களின் செல்வாக்குகள் அவசியமற்றவை. ஆகவே நன்னடத்தைகள் கல்வித் தகுதிகள் கணிக்கப்பட்டுத் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்தரப் பதவிகளை வைத்துக் கொண்டு திருதந்தையின் உண்மைப் பிரதிநிதியாகச் செயற்பட்டிருக்கலாமே? தனிப்பட்ட குடும்ப அரசியல், உள்ளூர் கட்சி அரசியல் செயற்பாடுகளுக்கு இடமளியாமல், உலக மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் வாழ்வியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் பணிகளிலேயே திருத்தந்தையும் அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் கர்தினால்களும் ஈடுபட்டு வருகின்றனர். தாங்கள் ஆயராகப் பதவியேற்ற 1991 ஆம் ஆண்டுதான் ஈழப் போர் இரண்டாம் கட்ட நிலையில் உக்கிரமடைந்தது. அப்போது யாழ் ஆயராக இருந்த மறைந்த தியோகுப்பிள்ளை இலங்கைத்தீவு மக்கள் என்ற உணர்வுடனும் வடக்குக் கிழக்கு ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை, ஈழத்தமிழ் மரபு பண்பாடு என்பதிலும் உறுதியர்க இருந்தார். அப்போது கொழும்பு உயர்மறை மாவட்ட பேராயராக இருந்த மாக்கஸ் பெர்னாண்டோ ஈழத்தமிழர்கள் சார்ந்து எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை. மாறாக இலங்கை ‘ஒற்றையாட்சி அரசு’ என்ற கட்டமைப்பைப் பாதுகாக்கும் பேராயராகவே அவரும் செயற்பட்டிருந்தார். இத்தனைக்கும் அவர் சிலாபத்தைச் சேர்ந்த ஒரு தூயதமிழர். மாக்கஸ் பெர்ணான்டோ ‘இலங்கைத்தேசியம்’ என்ற வரையறைக்குள் செயற்பட்ட காரணத்தினால் கத்தோலிக்கச் சமயப் பணிகள் பற்றிய விவகாரங்களில்கூட யாழ் ஆயர் தியோகுப்பிள்ளை கொழும்பு உயர் மறை மாவட்டத் திட்டங்களுக்கு கட்டுப்படாமல் வடக்குக் கிழக்கு ஆயர்கள் என்ற சிந்தனையை வரையறுத்துச் செயற்பட வேண்டிய சூழல் உருவாகியிருந்தது. 1992 இல் மன்னார் மறை மாவட்டத்துக்கு ஆயராகத் தெரிவு செய்யப்பட்ட இராஜப்பு ஜோசப், ஆயர் தியோகுப்பிள்ளை செய்த பணியின் தொடர்ச்சியை மேலும் தீவிரப்படுத்தியிருந்தார். ஆனால் இனவாதமற்ற மற்றும் ஒட்டுமொத்த இலங்கைத்தீவு என்ற உயர் நிலையிலும் ஈழத்தமிழர்களின் தனித்துவமான அரசியல் விடுதலையைச் சாத்தியப்படுத்தும் வியூகங்களோடும் செயற்பட்டிருந்தார் என்பது தங்களுக்குத் தெரியாததல்ல. 2009 இறுதி யுத்தத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதுடன் சுமார் ஒரு இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருப்பதாக ஆயர் இராஜப்பு ஜோசப் ஜெனிவாவில் கூறியிருந்தார். எண்பது வருட அரசியல் விடுதலைப் போராட்டத்தில் அரசியல் நீதி கிடைக்கவில்லை என்றும் ஆயர் விரிவாகக் கூறியிருந்தார். ஆனால் தாங்கள் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்தும், சிங்களத் தலைவர்கள் 2009 இற்குப் பின்னர் கடந்த பதினான்கு ஆண்டுகளாக நிரந்தர அரசியல் தீர்வை முன்வைக்கவில்லை என்பது பற்றியும் இதுவரை எதுவுமே பேசவில்லையே! இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணத்தை அடுத்து சர்வதேச விசாரணையைக் கோரியுள்ளீர்கள். ஆனால், 2009 போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆயர் இராயப்பு ஜோசப் கோரியபோது ஏன் மௌனமாக இருந்தீர்கள்? ஜெனிவாவில் சர்வதேச விசாரணை அவசியம் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டபோதும் ஏன் வாய்திறக்கவில்லை? வடக்கு கிழக்கில் வாழும் கத்தோலிக்கராகிய தமிழர்களின் சமயப் பணிகளில் கூட ஒழுங்கான முறையில் தாங்கள் கவனம் செலுத்தி வருகிறீர்களா என்பது கேள்வியே. முப்பது வருடகாலப் போரில் இலங்கை இராணுவத்தால் குறைந்தது ஒன்பது அருட் தந்தையர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் கைதாகி விசாரிக்கப்பட்டனர். 1982ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் அருட்தந்தை .சிங்கராயர் கைது செய்யப்பட்டதில் இருந்து தமிழ் கத்தோலிக்க தேவாலயங்கள் பல அழிவுகளை எதிர்நோக்கி வருகின்றன. இது பற்றித் தாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் ஒரு தடவையேனும் பகிரங்கமாக நீதி கேட்டதாகத் தெரியவில்லை. இப் பின்புலத்தில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்தரதாரிகள் மனம் திருந்திக் குற்றத்தை ஏற்றுக்கொண்டால் மன்னிப்பு வழங்கப்படும் என்று எந்த அடிப்படையில் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டீர்கள்? மனந்திரும்புதலாகிய செயலின் மூலமாக ஒருவர் பாவமன்னிப்பைப் பெற முடியும் என்று அர்த்தமல்ல. இதனை விளக்கும் வாசகங்கள் பைபிளில் உண்டு. (கொரிந்தியர் பத்தாம் பதினொரம் அதிகாரங்கள்) இது பற்றி எந்த வாக்குவாதத்திற்கும் இடமில்லை. ஒன்றின் காரணமாக மற்றொரு காரியம் நிகழ்வதற்கும் (Cause – மூலம்) ஒன்றில்லாமல் இன்னொன்றிருக்க முடியாது என்று சொல்லுவதற்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு. பைபிளின் படி ஒருவன் நீதிமானாகிறபோது மாத்திரமே அவனுடைய பாவங்களுக்கு மன்னிப்பு கிடைத்து அவன் குற்றவாளி இல்லை என்ற நிலையை அடைய முடியும். அந்த நீதிமானாகுதலை ஒருவன் விசுவாசத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும் (Faith Alone). ஆகவே நீதிமான் என்ற தகுதியைப் பாவம் செய்தவனுக்கு வழங்குகின்ற கிருபையின் கருவியாக (Instrumental Means) இருப்பதே விசுவாசம். ஆகவே குற்றவாளிகளுக்கு விசுவாசம் எங்கிருந்து யாரை நோக்கி வரும்? உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குற்றம் மாத்திரமா? இல்லையே! போர்க்காலத்தில் நடந்த குற்றங்கள், ஊழல்மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகங்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு அல்லவா? இவை பற்றியெல்லாம் சுட்டிக்காட்டிப் பேச மறுக்கும் தாங்கள் முதலில் வடக்குக் கிழக்கு உள்ளிட்ட ஒட்டுமொத்த ‘இலங்கைத்தீவு மக்கள்’ என்ற விசுவாசத்தின் மூலம் நீதிமானாக மாற்றமடைய முற்படுங்கள். அதன் பின்னர் மற்றைய குற்றவாளிகளுக்கு மன்னிப்புக் கொடுப்பது பற்றி யோசிக்கலாம். சிங்களக் கத்தோலிக்க மக்கள், பௌத்த சிங்களவர்கள் என்ற உணர்வை மாத்திரம் முன்னிலைப்படுத்தி நீதிமானாகிவிட முடியாது இதனைப் புரிய மறுக்கத் தாங்கள் சிறுபிள்ளை அல்ல. வத்திகானில் உள்ள திருத்தந்தையின் ‘கார்தினால்’ என்ற சர்வதேச அந்தஸ்தில் (International Excellence) இருந்து கொண்டு, இலங்கைத்தீவில் உள்ள ஏனைய சமூகங்களை ஓரக் கண்ணால் பார்க்கும் சிறுமைத் தனத்தில் (Smallness) இருந்து முதலில் தாங்கள் வெளியே வர வேண்டும். தங்கள் தமிழர்களுக்காகச் செய்த உதவி ஒன்றேயொன்றுதான் 1995 இல் சந்திரிகாவின் அரசாங்கம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோது சுமார் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து வன்னி பெருநிலப்பரப்பில் உறவினர்களின் வீடுகளிலும் கொட்டகைகளிலும் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு உதவி செய்வதற்காக யாழ் மரியன்னை பேராலய பங்குத் தந்தை ஜெபநேசன் அடிகளார் கொழும்புக்கு வந்து உதவிப் பொருட்களையும் ஐந்து இலட்சம் ரூபா பணத்தையும் பெற்றுக் கொண்டு வன்னிக்குச் சென்றிந்தபோது வவுனியா சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார். வத்திகானில் உள்ள திருத்தந்தையின் ‘கார்தினால்’ என்ற சர்வதேச அந்தஸ்தில் (International Excellence) இருந்து கொண்டு, இலங்கைத்தீவில் உள்ள ஏனைய சமூகங்களை ஓரக் கண்ணால் பார்க்கும் சிறுமைத் தனத்தில் (Smallness) இருந்து முதலில் தாங்கள் வெளியே வர வேண்டும்@@ அப்போது இராணுவ உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அந்தப் பொருட்களும் பணமும் விடுதலைப் புலிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதல்ல, இடம்பெயர்ந்து வாழும் மக்களின் தேவைகளுக்காக என்று அடித்துக் கூறியிருந்தீர்கள். இதுதான் அன்று தாங்கள் நினைத்துச் செய்த ஒரு நல்ல காரியம். ஆனாலும் பல மாதங்கள் சிறையில் இருந்த பின்னரே அருட்தந்தை விடுதலை செய்யப்பட்டிருந்தார். சிறையில் நடத்தப்பட்ட பலமான அடி உதையினால் நோய் ஏற்பட்டே ஜெபநேசன் மரணமடைந்தாக மருத்துவர்கள் அன்று கூறியிருந்தனர் என்பதையும் ஞாபகமூட்ட விரும்புகிறோம். ஆயர் தியோகுப்பிள்ளை ஒய்வு பெற்றபோது வெள்ளி மற்றும் பொன் வைர விழாக்கள் ஒருமித்து 1992 டிசம்பரில் யாழ்ப்பாணத்தில் நடந்தபோதுதான், கொழும்புப் பேராயராக இருந்த மார்க்கஸ் பெர்ணான்டோ நீண்டகாலத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணத்துக்கு வந்ததுடன், முதன் முதலாக ஆயர் தியோகுப்பிள்ளையுடன் மனம் திறந்து பேசியுமிருந்தார். தமிழர்களுக்கு இழைக்கப்படும் அரசியல் அநீதிகள், இராணுவக் கெடுபிடிகள் பற்றியும் அதற்கு எதிராக ஆயர் தியோகுப்பிள்ளை மேற்கொண்டு வரும் சேவைகள் பற்றியும் பாராட்டியிருந்தார். அதேபோன்று தமிழ் ஆயர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்தித் தாங்கள் மனம் திறந்து பேச வேண்டும். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கொல்லப்பட்ட 269 பேரில் அதிகமானோர் தமிழர்கள். ஆகவே ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் அரசியல் அநீதிகளுக்குச் சர்வதேச நீதி அவசியம் என்ற முதன்மைக் காரணத்தைத் துணிவுடன் தங்களால் முன்மொழிய முடியுமா? நன்றி http://www.samakalam.com/குற்றவாளிகளுக்கு-மன்னிப/
  15. பேராயர் மல்கம் ரஞ்சித்தின் மனட்சாட்சி ஆயர் இராஜப்பு ஜோசப் சொன்னது என்ன? சிங்கள ஆட்சியாளர்கள், சிங்கள இராணுவ உயர் அதிகாரிகள் சிலரினால் கையாளப்பட்ட தமிழ் – முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் 2009 முள்ளிவாய்க்கல் போரின்போது தமிழர் தாயகப் பிரதேசங்களில் தேசியத்தை மலினப்படுத்தும் அசிங்கமான அரசியலில் (Ugly Treacherous Politics) ஈடுபடுத்தப்பட்டிருந்தன என்பதை சனல் 4 வெளியிடவில்லை. இந்த அசிங்க அரசியலின் தொடர்சிதான் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல். அங்கிருந்துதான் சனல் 4 ஆவணப்படத்தைத் தயாரித்திருக்க வேண்டும். அ.நிக்ஸன்- 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரி யாராக இருக்கும் என்பது தொடர்பான சந்தேகங்கள், ஊகங்கள், தாக்குதல் நடந்த சில மாதங்களிலேயே எல்லோர் மனதிலும் அவரவர் தன்மைகளுக்கு ஏற்ப எழுந்தன. இப் பின்புலத்தில் சனல் 4 தொலைக்காட்சி முழு விபரங்களையும் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது. பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என்று பலர் மீது போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் ஏற்கனவே சுமத்தப்பட்டிருந்தன. ஜெனீவா மனித உரிமைச் சபை அறிக்கைகளிலும் குற்றச்சாட்டு விபரங்கள் உண்டு. ஆனாலும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அத்தனை குற்றங்களையும் மூடி மறைத்து 2020 ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவைக் களமிறக்கி அவரை வெற்றிபெற வைப்பதில் இலங்கைக் கத்தோலிக்கத் திருஅவையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முழுமையாக ஈடுபட்டார் என்பது பகிரங்கமான உண்மை. இதனால் தமிழர்களின் அரசியல் விடுதலை மற்றும் இறுதிப் போரில் நடத்தப்பட்ட இன அழிப்பு மற்றும் போர்க் குற்றம் தொடர்பான எந்த ஒரு அக்கறையும் மல்கம் ரஞ்சித்திடம் இருந்திருக்கவில்லை என்பது அப்போதே பட்டவர்த்தனமாகியது. 2009 மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்டபோது, கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிப்படையாகவே நன்றியும் பாராட்டும் தெரிவித்திருந்த மல்கம் ரஞ்சித், தமிழர்களுக்கு நிதி கிடைக்க வேண்டும் என்பதைவிடவும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் நீட்சியிலேயே முழுக் கனத்தையும் செலுத்தியிருந்தார் என்பதும் பகிரங்கம். “இலங்கை அரசு” என்ற கட்டமைப்பும் அதன் சட்டங்களும் பல்லின சமூகங்களுக்கு ஏற்றதாக இல்லை என்பதைக்கூட மல்கம் ரஞ்சித் ஏற்கத் தயாராக இல்லை. இப் பின்னணியிலேதான் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்கியதோடு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். விசாரணைகள் இடம்பெற்றுக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்று மல்கம் ரஞ்சித் அப்போது உறுதியாக நம்பிக்கையும் வெளியிட்டிருந்தார். ஆனால் இறுதிப் போரில் நடந்த மனிதப் படுகொலைகள், தமிழ் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் எதிலும் மல்கம் ரஞ்சித் கவனம் செலுத்தியதாக இல்லை. 2012 இல் முதன் முறையாக இலங்கை குறித்த தீர்மானம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்டபோது, சர்வதேச விசாரணை தேவையில்லை என்று மல்கம் ரஞ்சித் நியாயப்படுத்தியிருந்தார். இலங்கைக்கு உள்ளேயே விசாரணைகளை நடத்த முடியும் என்றும் பரிந்துரை செய்திருந்தார். ஆனால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிய விசாரணைக்குக் கோட்டாபயவை நம்பியிருந்த மல்கம் ரஞ்சித், உரிய நடவடிக்கை எடுக்கத் தாமதமாகியதால் சர்வதேச விசாரணையைக் கோரியிருந்தார். 2022 இல் ஜெனீவா மனித உரிமைச் சபைக்கும் சென்றிருந்தார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குச் சர்வதேச விசாரணையைக் கோரிய மல்கம் ரஞ்சித், 2009 இறுதிப் போர் மற்றும் 1958 இல் இருந்து மேற்கொள்ளப்பட்ட தமிழர்கள் மீதான படுகொலைகள் பற்றிய விசாரணைகளுக்கு மாத்திரம் உள்ளக விசாரணை போதுமென்று பரிந்துரை செய்தமைதான் வேடிக்கை. கோட்டாபய ஜனாதிபதியாக இருந்தபோது பௌத்த சமயத்தை முதன்மை மதமாக ஏற்றுக்கொள்வதாகவும் மல்கம் ரஞ்சித் பகிரங்கமாக உறுதியளித்திருந்தார். இது மல்கம் ரஞ்சித்திடம் இருந்த சிங்களத் தேசிய உணர்வைப் பகிரங்கப்படுத்தியது. சமயத் தலைவராக அதுவும் சர்வதேச கர்த்தினால் அந்தஸ்துடன் இருந்தாலும் பேராயர் மல்கம் ரஞ்சித்திடம் தனது இனத்துக்குரிய தேசியச் சிந்தனை இருக்கலாம். அது தவறல்ல. ஆனால் அந்தச் சிங்களத் தேசிய உணர்வு இலங்கைத்தீவில் இருக்கின்ற தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் விடுதலையை நிராகரிக்கும் தன்மை கொண்டதாக இருக்க முடியாது. குறிப்பாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிய உண்மை விபரங்களை சனல் 4 தொலைக்காட்சி வெளிப்படுத்திய பின்னர் உடனடியாக மீண்டும் சர்வதேச விசாரணையைக் கோரியிருந்த மல்கம் ரஞ்சித், 2009 இறுதிப் போரில் ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டும் பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து காணாமல் ஆக்கப்பட்டுமுள்ளமை பற்றியும் எந்தக் கருத்தையும் கூறவில்லை இப் பின்புலத்திலேதான் ஈத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான நிரந்த அரசியல் தீர்வு பற்றிய உரையாடல் எல்லாமே தற்போது ஒட்டுமொத்த இலங்கைத்தீவு மக்களின் ஜனநாயக உரிமை அல்லது மனித உரிமைப் பாதுகாப்பு விவகாரமாக மாறி வருவதை அவதானிக்க முடியும். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 269 பேருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் முப்பது வருட போரிலும் அதற்கு முன்னர் 1958 இல் இருந்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொலைகள், வன்முறைகள் பற்றிப் பேசுவதைவிடவும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிக் குரல் கொடுப்போரின் பின்னணி பற்றியே அதிகளவு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்காகச் சிங்கள ஆட்சியாளர்கள், சிங்கள இராணுவ உயர் அதிகாரிகள் சிலரினால் கையாளப்பட்ட தமிழ் – முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் 2009 முள்ளிவாய்க்கல் போரின்போது தமிழர் தாயகப் பிரதேசங்களில் தேசியத்தை மலினப்படுத்தும் அசிங்கமான அரசியலில் (Ugly Treacherous Politics) ஈடுபடுத்தப்பட்டிருந்தன என்பதை சனல் 4 வெளியிடவில்லை. இந்த அசிங்க அரசியலின் தொடர்சிதான் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல். அங்கிருந்துதான் சனல் 4 தனது ஆவணப் படத்தைத் தயாரித்திருக்க வேண்டும். குறிப்பாக ஜே.ஆர் ஜயவர்த்தனாவில் இருந்து ரணில் வரையும் தமிழர்களின் போராட்டத்தைச் சர்வதேச அரங்கில் பயங்கரவாதமாகத் திசை திருப்பி முறியடிக்க, தமிழ் – முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்குச் சம்பளம் வழங்கி இலங்கை இராணுவம் ஈடுபடுத்தியிருந்தது. இதற்கு அமெரிக்க – இந்திய அரசுகளும் அப்போது ஒத்துழைத்த உண்மைகளை சனல் 4 ஆதாரங்களுடன் வெளியிட விரும்பவில்லை என்பதையே தாக்குதல் பற்றிய ஆவணப் படம் சித்தரிக்கிறது. ஆவணப் படத்தின் பின்னர், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்த மறு கணமே பேராயர் மல்கம் ரஞ்சித்தும் அவ்வாறு கோரியுள்ளார் என்றால், சிங்கள அரசியல் தலைவர்களும் மல்கம் ரஞ்சித் போன்றோரும் 2009 நடந்த இறுதிப் போரையும் ஈழத் தமிழர்களின் எண்பது வருட அரசியல் விடுதலைப் போராட்டத்தையும் எப்படிப் பார்க்கின்றனர் என்பது புரிகின்றது. இலங்கை சிறிய அரசு. ஊழல் மோசடி அதிகாரத் துஸ்பிரயோகம் நிறைந்த அரசு. அங்கு இன ஒடுக்கல் நடக்கிறது. இவை பற்றியெல்லாம் தெளிவாகத் தெரிந்தாலும், தமது புவிசார் அரசியல் – பொருளாதார நோக்கில் தெரியாதது போன்று அமெரிக்க – இந்திய மற்றும் சீன அரசுகள் இயங்குகின்றன. வல்லரசுகளின் இந்த அணுகுமுறைதான் சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த யோகம். ஆனால் வல்லரசுகளின் இந்தப் பிழையான அணுகுமுறைகள் பற்றி சனல் 4 தொலைக்காட்சி வெளிப்படுத்தவேயில்லை. ஏனெனில் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல்தான் இங்கு பிரதானமாகிறது. இந்த இடத்திலேதான் மல்கம் ரஞ்சித்தின் செயற்பாட்டையும் நோக்க வேண்டியுள்ளது. தமிழர்களின் அரசியல் நியாயத்தை முடக்க எண்பது வருடங்களாக வெ்வேறு வியூகங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளை வெளிப்படுத்தக் கூடிய “மூலங்கள்” வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ்க் கத்தோலிக்க ஆயர்கள், அருட் தந்தையர்கள் பலருக்கும் நன்கு தெரியும். அவர்கள் சர்வதேச அரங்கில் பகிரங்கப்படுத்தியுமுள்ளனர். சனல் 4 தொலைக் காட்சிக்கும் இந்த உண்மை புரியும். முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் முள்ளிவாய்க்காலில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக ஜெனீவா மனித உரிமைச் சபையில் வாக்குமூலம் வழங்கியபோது பேராயர் மல்கம் ரஞ்சித்தின் மனட்சாட்சி இழுத்து மூடப்பட்டிருந்தது. ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை மற்றும் இன அழிப்பு விசாரணைக் கோரிக்கை அல்லது ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாகப் போர்க்குற்ற விசாரணை நடத்துவது பற்றிய விவகாரங்கள் சூடுபிடித்தபோது மல்கம் ரஞ்சித் வாய் திறக்கவில்லை. பேராயர் என்ற அந்தஸ்த்தில் இருந்து கொண்டும், வத்திக்கான் திருத்தந்தையின் கர்த்தினால்களில் ஒருவர் என்ற சர்வதேச அங்கீகாரத்தோடும், பௌத்த சமயத்தை மையப்படுத்தித் தன் சிங்கள இனம் சார்ந்து மாத்திரம் மல்கம் ரஞ்சித் நியாயம் கோரியிருக்கிறார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 269 போரில் அதிகமானோர் தமிழர்கள். ஆகவே பாதுகாப்பற்ற தமிழ்ச் சமூகம் மீதுதான் தாக்குதல் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையைக் கூட மல்கம் ரஞ்சித் புரிந்து கொண்டவராக இல்லை. மாறாகத் தேவாலயங்கள் இலக்கு வைக்கப்பட்டமை என்பது மாத்திரமே மல்கம் ரஞ்சித்தின் கவனமாக இருந்தது. இதனை அவர் வழங்கிய நேர்காணல்கள் எடுத்துக் காட்டுகின்றன. 1982 இல் அருட்தந்தை சிங்கராயர் கைது செய்யப்பட்டதில் இருந்து 2009 போர் இல்லாதொழிக்கப்படும் வரை ஒன்பது அருட் தந்தையர்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் சில அருட் தந்தையர்கள் காயமடைந்துள்ளனர். பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். வேறு சிலர் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சமடைந்துள்ளனர். வடக்குக் கிழக்கில் நூற்றுக்கும் அதிகமான தேவாலயங்கள் குண்டுத் தாக்குதலினால் முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இராணுவ உயர் பாதுகாப்பு வலங்களுக்குள் சில தேவாலயங்கள் இன்மும் முடங்கியுள்ளன. முப்பது வருடப் போரின் அவலங்கள் இழப்புகளுக்கு மத்தியில் வடக்குக் கிழக்குத் தமிழ் ஆயர்கள், அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் பொறுப்புடன் செயற்பட்டனர். 2009 இன் பின்னரே வடக்குக் கிழக்கு ஆயர் மன்றம் உருவாக்கப்பட்டது. அது தமிழ் ஆயர் மன்றம் என்று வெளிப்படையாகக் கூறப்படுவதுமில்லை. இலங்கைக் கத்தோலிக்கத் திருஅவையின் கூட்டுப் பொறுப்பு மற்றும் சமய ஒற்றுமை என்ற பண்பின் அடிப்படையில் வடக்குக் கிழக்கு ஆயர் மன்றம் இயங்குகின்றது. சமகால அரசியல் விவகாரங்களில் சில தமிழ் அருட் தந்தையர்கள் பின்பற்றுகின்ற நிதானம், பொறுப்பு, பேராயர் மற்றும் திருத்தந்தையின் கர்த்தினால் என்ற முறையில் ரஞ்சித் மல்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை. அறுபது வருடங்களுக்கு முன்பு அமரர் சிறிமாவின் ஆட்சிக்கு எதிராகக் கறுப்புக்கொடிப் போராட்டத்தை நடத்தியவர் கொழும்பின் முதலாவது சிங்களப் பேராயர் தோமஸ் கூரே. 1965 இல் முதலாவது கர்த்தினாலாகவும் இவர் தெரிவாகியிருந்தார். இவருக்குப் பின்னர் இலங்கையில் கர்தினாலாக எவரும் நியமிக்கப்படவில்லை. 2009 யுத்தம் முடிந்ததும் 2010 இல் பேராயர் மல்கம் ரஞ்சித் இரண்டாவது கர்தினாலாகத் திருத் தந்தையினால் நியமிக்கப்பட்டார். கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கமே முதலில் செயற்பட்டது. 1960 ஜூலை மாதம் பதவிக்கு வந்தத அரசாங்கம் நன்கொடை பெறும் பாடசாலைகளை சுவீகரித்தபோது, கத்தோலிக்க பாடசாலைகளும் அரச உடமையாக்கப்பட்டன. இதனை எதிர்த்து இலங்கைத்தீவு முழுவதும் தமிழ் – சிங்கள கத்தோலிக்க மக்கள் ஒன்றுபட்டுப் போராடினர். தோமல் கூரே இதற்குப் பிரதான காரணமாக இருந்தவர். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உருவெடுத்து 2018 பெப்ரவரியில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவாக மாற்றம் பெற்ற ராஜபக்ச குடும்பத்திற்குக் குடைபிடிக்கும் அரசியலையே மல்கம் ரஞ்சித் முன்னெடுத்திருந்தார். ஆகவே ராஜபக்ச குடும்பத்தை ஆதரித்தமைக்காக சனல் 4 ஆவணப் படத்தின் பின்னர் பேராயர் பாவ மன்னிப்புக் கேட்டிருக்கலாம். ஆனாலும் கத்தோலிக்கர்கள் அல்லாத பௌத்த சிங்கள மக்களுக்காகக் குரல் கொடுத்தமைபோன்று, தமிழ்க் கத்தோலிக்க மக்களுக்கான பேராயராகக்கூட மல்கம் ரஞ்சித் செயற்படவில்லை என்பதை எவரும் மறுக்க முடியாது. தமிழர்கள் கோருகின்ற இன அழிப்பு விசாரணை அல்லது குறைந்த பட்சம் ஜெனீவா மனித உரிமைச் சபைத் தீர்மானத்தின் பிரகாரம் சர்வதேசப் போர்க் குற்ற விசாரணைக்கு மல்கம் ரஞ்சித், ஆயர் இராயப்பு ஜோசப்புடன் இணைந்து அப்போது கடும் அழுத்தம் கொடுத்திருந்தால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடந்திருக்காது. http://www.samakalam.com/235465-2/
  16. சனல் 4- கேள்விகள் – சந்தேகங்கள் ஜே.ஆர் ஜயவர்த்தனாவில் இருந்து ரணில் வரையும் தமிழர்களின் போராட்டத்தைப் பயங்கரவாதமாகத் திசை திருப்பி முறியடிக்க, தமிழ்-முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இலங்கை இராணுவத்தில் ஈடுபடுத்தப்பட்டன. இதற்கு அமெரிக்க – இந்திய அரசுகளும் ஒத்துழைத்த உண்மைகளை சனல் 4 ஆதாரங்களுடன் வெளியிட விரும்பியதா? அ.நிக்ஸன்- ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான நிரந்த அரசியல் தீர்வு பற்றிய உரையாடல் எல்லாமே தற்போது ஒட்டுமொத்த இலங்கைத்தீவு மக்களின் ஜனநாயக உரிமை அல்லது மனித உரிமைப் பாதுகாப்பு விவகாரமாக மாறி வருகிறது. 2015 ஜனவரியில் நல்லாட்சி என்று கூறிக் கொண்டு பதவிக்கு வந்த மைத்திரி – ரணில் அரசாங்கம் இதனைக் கன கச்சிதமாகச் செய்திருக்கிறது. அதற்கேற்ப 2019 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழி சமைத்துமுள்ளது. இதனையே சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த ஆவணப்படம் சித்தரிக்கிறது. தேவாலயங்கள், ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 269 பேரின் உறவினர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருதிதில்லை. ஆனால் முப்பது வருட போரிலும் அதற்கு முன்னர் 1958 இல் இருந்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொலைகள், வன்முறைகள் பற்றிப் பேசுவதைவிடவும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிக் குரல் கொடுப்போரின் பின்னணி பற்றியே அதிகளவு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சந்தேகங்கள் வருமாறு— 1) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் சிங்கள ஆட்சியாளர்கள், சிங்கள இராணுவ உயர் அதிகாரிகள் சிலரினால் கையாளப்பட்ட தமிழ் – முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் 2009 முள்ளிவாய்க்கல் போருக்கே பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டனர் என்ற உண்மையை சனல் 4 தொலைக்காட்சி முறைப்படி வெளியிட்டதா? 2) ஜே.ஆர் ஜயவர்த்தனாவில் இருந்து ரணில் வரையும் தமிழர்களின் போராட்டத்தைப் பயங்கரவாதமாகத் திசை திருப்பி முறியடிக்க, தமிழ்-முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இலங்கை இராணுவத்தில் ஈடுபடுத்தப்பட்டன. இதற்கு அமெரிக்க – இந்திய அரசுகளும் ஒத்துழைத்த உண்மைகளை சனல் 4 ஆதாரங்களுடன் வெளியிட விரும்பியதா? 3) இலங்கைப் புலனாய்வுத்துறையிடம் தமிழ் – முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் சம்பளத்துக்குப் பணியாற்றினர் என்பது பரகசியம். (Revealing or Publishing Secrets) 4) ஜெனீவா மனித உரிமைச் சபை ஆரம்பமாகவதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் அவ்வப்போது போர்க் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட்டு வரும் சனல் 4 தொலைக்காடசிக்கு, 2009 இற்குப் பின்னரும் ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தி இலங்கை இராணுவம் வடக்குக் கிழக்கில் மேற்கொண்டு வரும் அச்சறுத்தல்கள் மற்றும் காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் பற்றி ஏதேனும் விபரங்கள் தெரியாதா? 4) போர்க் குற்றம் பற்றியும் 2019 இல் நடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்தும் வெளிப்படுத்திய ஆர்வம், 2009 மே மாதத்திற்குப் பின்னரும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் தொடர் அநீதிகள் பற்றி ஏன் இல்லாமல் போனது? ஆகவே மேற்குலக நாடுகளின் தேவைக்கும் புவிசார் அரசியல் – பொருளாதார நோக்கிலும் சனல் 4 தொலைக்காட்சி செயற்படுகிறது என்று கூறலாமா? ஏனெனில், ஆவணப் படத்தின் பின்னர், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கிறார். சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கோரியுள்ளார். ஆகவே சிங்கள அரசியல் தலைவர்கள், சிங்கள மதத் தலைவர்கள் எல்லோருமே 2009 போரையும் ஈழத் தமிழர்களின் எண்பது வருட அரசியல் விடுதலைப் போராட்டத்தையும் எப்படிப் பார்க்கின்றனர் என்பது புரிகின்றதல்லவா? மேற்கு நாடுகளின் தேவையென்ன? இலங்கை சிறிய அரசு. ஊழல் மோசடி அதிகாரத் துஸ்பிரயோகம் நிறைந்த அரசு. அங்கு இன ஒடுக்கல் நடக்கிறது. இவை பற்றியெல்லாம் தெளிவாகத் தெரிந்தாலும், தமது புவிசார் அரசியல் – பொருளாதார நோக்கில் தெரியாதது போன்று இயங்குகின்றன. வல்லரசுகளின் இந்த அணுகுமுறைதான் சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த யோகம். ஆனால் வல்லரசுகளின் இந்தப் பிழையான அணுகுமுறைகள் பற்றி சனல் 4 தொலைக்காட்சி வெளிப்படுத்துமா? ஏனெனில் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல்தான் இங்கு பிரதானமாகிறது. தமிழர்களின் அரசியல் நியாயத்தை முடக்க எண்பது வருடங்களாக வெவ்வேறு வியூகங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளை வெளிப்படுத்தக் கூடிய ”மூலங்கள்” சனல் 4 தொலைக் காட்சிக்குத் தெரியாததல்ல. ஆனால்? http://www.samakalam.com/சனல்-4-கேள்விகள்-சந்தேகங்/
  17. இந்தியாவின் இரட்டைக் கொள்கையும் பிறிக்ஸ் மாநாடும் –பிறிக்ஸ் கூட்டமைப்பைக் கடந்து இந்தியா தொடர்பான நம்பிக்கை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு இன்னமும் உண்டு. குறிப்பாக இந்தோ – பசுபிக் விவகாரம் உள்ளிட்ட உலக அரசியல் ஒழுங்கு முறைகள் மற்றும் ஜனநாயகச் செயற்பாடுகளில் இந்தியா விரும்பியோ விரும்பாமலோ தம்முடன் நிற்கும் என முழுமையாக அமெரிக்கா நம்புகிறது. அதாவது மேற்கு மற்றும் ஐரோப்பிய முகமும் இந்தியாவிடம் உண்டு. இலங்கை தொடர்ந்தும் செல்லப்பிள்ளைதான்-– அ.நிக்ஸன்- பிறிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் பலவற்றில் இந்தியா உடன்படக்கூடிய வாய்ப்புகள் இல்லை, இருந்தாலும் பிறிக்ஸ் கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவ நாடான சீனாவுடன் முரண்பாட்டில் உடன்பாடு என்ற அணுகுமுறையை உருவாக்கிச் செயற்படுத்த இந்தியா திரைமறைவு நகர்வுகளில் ஈடுபடுகின்றது. ரசியாவுடன் மரபுவழி உறவின் மூலமாக சீனாவுடன் அணுகும் முறையை இந்தியா ஏற்கனவே பின்பற்றியிருந்தாலும் பிறிக்ஸ் நாடுகளிடையேயான பொதுநாணய உருவாக்கத்தில் இந்தியா உடன்பட மறுத்த பின்னரான சூழலில் பிறிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ளது. “இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் தகுதியின் அடிப்படையில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படுகின்றது. இதனால் இந்தியாவுக்குப் பிறிக்ஸ் நாணயம் தேவையில்லை. அப்படியொரு பொது நாணயப் பயன்பாடு பற்றி இந்தியா உரையாட விரும்பவில்லை” என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புதுடில்லியில் செய்தியாளர் மாநாட்டில் விபரித்ததாக ரைம்ஸ்ஒப்இந்தியா (timesofindia) நாளிதழ் கூறுகிறது. பில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தகம் மற்றும் இராணுவ ஒப்பந்தங்களுடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் இந்தியா, நல்லுறவைக் கொண்டுள்ளது. இன்னும் வெளியிடப்படாத பிறிக்ஸ் நாணயத்தை நம்பி, மேற்கத்திய நாடுகளுடன் தனது வர்த்தக உறவைப் பணயம் வைக்க இந்தியா விரும்பவில்லை என்று ரைம்ஸ்ஒப்இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. உலக விவகாரங்களில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் மேலாதிக்கத்தை ஈடுகட்டுவதை நோக்கமாகக் கொண்ட பிறிக்ஸ் கூட்டமைப்பின் விரிவாக்கம் குறித்து சீனாவும் ரசியாவும் கடந்த சில வாரங்களாக மிகத் தீவிரமாக விவாதித்து வருகின்றன. குறிப்பாகப் பிறிக்ஸ் கூட்டமைப்புக்குள் அதிக உறுப்பு நாடுகளை ஏற்றுக்கொள்வது என்று சீனாவும், ரசியாவும் முனவைத்த பரிந்துரைகளுக்கு இந்தியா சில வரையறைகளை விதித்துள்ளது. இது குறித்து சென்ற வியாழக்கிழமை தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவுடன் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாரயதாக ரைம்ஸ்ஒப்இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த உரையாடலின் பின்னரே பிறிக்ஸ் கூட்டமைப்புக்குள் சற்று விரிசல் உருவாகியுள்ளது. பிரேசில், ரசியா, இந்தியா மற்றும் சீனாவை உள்ளடக்கிய பிறிக்ஸ் கூட்டமைப்பு 2010 இல் தென்னாபிரிக்காவை சேர்த்ததிலிருந்து அதன் செயற்பாடுகள் விரிவடையவில்லை என்ற கடும் விமர்சனங்கள் உறுப்பு நாடுகள் மத்தியில் உண்டு. இப் பின்னணியில் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகள் பிறிக்ஸ் கூட்டமைப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன. சீனாவும் ரசியாவும் கையாளும், பரந்த தேசிய வளங்களை மையமாகக் கொண்டு சேர விரும்பும் இந்த நாடுகள், தமக்குரிய பொருளாதாரப் பலன்களையே கூடுதலாக எதிர்பார்க்கின்றன. ஆனால் இந்த நாடுகள் பிறிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்தால் அமெரிக்க மேலாதிக்கத்திற்குச் சீனாவும் ரசியாவும் மேலும் சவால்விடும் நிலை உருவாகும். இதன் காரணமாகவே புதிய உறுப்பு நாடுகளைச் சேர்க்கும் சீன – ரசிய நகர்வுக்கு இந்தியா சில வரையறைகளை விதித்துள்ளது என்பது கண்கூடு. ஆகவே மாநாடு ஆரம்பிப்பதற்கு இன்னமும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் இந்தியா மீண்டும் தன்னுடைய இரட்டைக் கொள்கையைப் பகிரங்கப்படுத்துகின்றது போல் தெரிகிறது. மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சார்ந்து நிற்பதா அல்லது சீனாவையும் ரசியாவையும் மையப்படுத்திய அரசியல் பொருளாதாரக் கூட்டில் நிற்பதா என்று இந்தியா இதுவரையும் முடிவெடுத்ததாகக் கூற முடியாது. ஆனால் மிகச் சிறிய தீவான இலங்கை, அமெரிக்கா அல்லது சீனா ஆகிய இரண்டிலும் ஏதேனும் ஒன்றிடம் முழுமையான பிடியில் சிக்கிவிடாமல் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான உத்தியை மாத்திரம் இந்தியா கன கச்சிதமாக வகுத்து வருகிறது. 1983 இல் இந்திரா காந்தி காலத்தில் அணிசேராக் கொள்கை என்று கூறிக் கொண்டு அப்போதைய சோவியத் யூனியன் நாட்டுடன் இந்தியா திரைமறைவில் உறவைப் பேணியிருந்தது. அன்று ஆரம்பித்த இந்தியாவின் இந்த இரண்டு வகையான சர்வதேசக் கொள்கை இன்றுவரை தொடருகின்றது. குறிப்பாகச் சீனாவுடன் அதிகளவு வர்த்தக உறவுகள் மற்றும் ரசியாவுடன் அரசியல் இராணுவ உறவுகள் ஆகியவற்றைப் பேணிக் கொண்டு அமெரிக்க மேற்குச் சார்பு நிலையையும் இந்தியா பின்பற்றுகிறது. புதுடில்லியில் உள்ள சில பிரதான ஊடகங்கள் இந்தியாவின் இக் கொள்கையை நியாயப்படுத்தி உலக அரசியல் பொருளாதார செயற்பாடுகளில் முன்னுதாரணமாகவும் சித்தரிக்க முற்படுகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலக வல்லரசு அந்தஸ்தை அனுபவித்த அமெரிக்கா, இன்று பிறிக்ஸ் கூட்டமைப்பினால் சவாலுக்கு உள்ளாகி வருகிறது என்பது உண்மை. குறிப்பாக 2050ஆம் ஆண்டுக்குள் உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் இலக்குடன் பிறிக்ஸ் கூட்டமைப்பை விரிவுபடுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. சீன – ரசிய கூட்டு இதற்கு முதன்மைக் காரணி என்பது புதுடில்லிக்குப் புரியாததல்ல. அதேநேரம் பிறிக்ஸ் மாநாடு பற்றி மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் அச்சமடைந்திருப்பதை சா்வதேச நாளிதழ்கள் செய்தி இணையத் தளங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. உலகப் பொருளாதார அமைப்பியல் மாறி வருகின்றது. ரசிய – உக்ரெயன் போர் மற்றும் பிற நாடுகளுக்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் காரணமாக உலகளாவிய அரசியல் – பொருளாதார அதிகார சமநிலையும் குழப்பமடைந்துள்ளது. இந்த நிலையில் சர்வதேசச் சந்தையில் அமெரிக்க டொலர் ஆதிக்கம் செலுத்தும் நிதி முறைக்கு பிறிக்ஸ் கூட்டமைப்பு, மாற்றாக இருக்கும் என்று பிறிலினியர் சிற்றங் என்ற (The Berliner Zeitung) ஜேர்மன் நாளிதழ் தெரிவிக்கின்றது. பிறிக்ஸின் இலக்கு டொலருக்கு மாற்றாக வேறு நாணயத்தைக் கண்டுபிடிப்பதாக இருக்க முடியாது. ஆனாலும் டொலர் பயன்பாட்டை பிறிக்ஸ் விரும்புவதாக இல்லை என்று உலகப் பொருளாதார உறவுகளின் நிபுணரும் ஆலோசகருமான கலாநிதி டான் ஸ்டெய்ன்போக் (Dr. Dan Steinbock) கூறியதாக ஜேர்மன் நாளிதழ் விபரிக்கிறது. அதாவது தற்போதைய உலகப் பொருளாதாரத்துடன் ஒத்துப்போகும் பணவியல் அமைப்பின் பல்வகைப்படுத்தல் பற்றி பிறிக்ஸ் கூட்டமைப்பு முடிவு செய்யக்கூடிய ஏது நிலை இருப்பதாகவே அந்த நாளிதழ் பலமாக நம்புகிறது. பிறிக்ஸ் கூட்டமைப்புடன் இணைந்து செயலாற்ற இருபது நாடுகள் விரும்புகின்றன. இலங்கை போன்ற சில சிறிய நாடுகளும் பிறிக்ஸ் நாடுகளின் பொருளாதார வியூகங்களுக்குள் இந்திய ஒத்துழைப்புடன் நகரக் காத்திருக்கின்றன என்ற கருத்து மிகச் சமீபகாலமாக இந்திய ஊடகப் பரப்பில் பேசப்படுகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடி மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிலையற்ற பொருளாதாரத் தன்மைக்கு வழிவகுத்தது. அத்துடன் அமெரிக்கா இன்னும் தீவிரமாக டொலரை தனது அமெரிக்க நலன்களை மாத்திரம் முன்னேற்ற ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே பிறிக்ஸ் கூட்டமைப்பின் பொருளாதார வியூகங்கள் மேலும் வலுப்பெறக் காரணமாகியது என்ற முடிவுக்கு வரலாம். மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பலவீனமான பொருளாதாரச் செயற்பாடுகள் காரணமாக 2008 ஆம் ஆண்டில் இருந்து பிறிக்ஸ் கையாண்டு வரும் பொருளாதார உத்தி இம்முறை வலுப்பெற்றுள்ளது என்ற கருத்தும் உண்டு. ரசிய – உக்ரெயன் போர்ச் சூழல் சமகால உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணம். இந்த நிலையில் இந்த மாதம் இருபத்தியிரண்டாம் திகதியில் இருந்து இருபத்தி நான்காம் திகதி வரை தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள பிறிக்ஸ் மாநாடு சீன – இந்திய, ரசிய – சீன உறவுகளுக்கு வலுச் சேர்ப்பதுடன், சர்வதேச சந்தையில் அமெரிக்க டொலருக்கு எதிரான புதிய வர்த்தக நடைமுறைகளை உருவாக்கும் என்ற அச்சம் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளதையே அமெரிக்கச் சார்பு ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக நிதி முறையின் முக்கிய நன்மை பண முறையின் அதிக பல் வகைப்படுத்தலாக இருக்கும் என்ற அச்சம் கலந்த தொனி மேற்கு மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில் வெளிப்படுகின்றன. அதேநேரம் உலக நடைமுறை விவகாரங்கள் சிலவற்றில் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஜேர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகள் குறிப்பாக ஜீ -7 அங்கத்துவ நாடுகளிடையே உருவாகி வரும் முரண்பாடுகளும் பிறிக்ஸ் கூட்டமைப்பின் செயற்பாட்டுக்கு உத்வேகம் அளித்துள்ளதாகவும் கூறலாம். இந்த இடத்திலேதான் அமெரிக்காவுடனும் மற்றும் ரசியா சீனா ஆகிய நாடுகளுடனும் உறவைப் பேணி வரும் இந்தியாவின் இரட்டைக் கொள்கை அல்லது சர்வதேச தேவைக்கு ஏற்ப இசைந்து செயற்படும் அரசியல் – பொருளாதார அணுகுமுறை பிறிக்ஸ் மாநாட்டில் முக்கியம் பெறுமா அல்லது சீனாவின் பொருளாதார ஆதிக்கத்துக்குள் இந்திய நிலைப்பாடு முடங்குமா என்பதை அவதானிக்க வேண்டும். இந்தோ – பசுபிக் விவகாரத்தில் இந்தியா தமக்குப் போட்டியல்ல என்றும் அமெரிக்கா வலிந்து உள் நுழைவதுதான் தமக்குப் பிரச்சினை எனவும் சீனாவின் அதிகாரபூர்வ ஆங்கில செய்தித் தளமான குளோபல் ரைம்ஸ் (globaltimes) சுட்டிக்காட்டி வரும் நிலையில், சீனாதான் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் தமக்குப் பிரச்சினை என்றும் போட்டி எனவும் இந்தியா மார்தட்டுகிறது. ஆனால் சீனாவின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாத ஒரு நிலையில்தான் இந்தியாவும் சர்வதேச அரங்கில் இரட்டைக் கொள்கையைப் பின்பற்றுகிற என்பது பகிரங்கமான உண்மை. அதாவது மேற்கு மற்றும் ஐரோப்பிய முகமும் இந்தியாவிடம் இருப்பதை மறுக்க முடியாது. ஆகவே ரசிய – உக்ரெயன் போரினால் ரசியப் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய, இந்திய ரூபாவைச் சர்வதேச வர்த்தகத்தில் ரசியாவின் ஒத்துழைப்புடன் ஈடுபடுத்த முற்படும் இந்தியாவின் பொருளாதார அணுகுமுறை முழு அளவில் வெற்றியளிக்க வேண்டுமானால் சீனா ஒத்துழைக்க வேண்டும். ரசியாவும் அதனை மனதார விரும்ப வேண்டும். ஆனால் இந்திய ரூபாவுக்குச் சர்வதேச அங்கீகாரத்தை முழு அளவில் வழங்க சீனா இணங்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லை. இந்த நிலையில்தான் சர்வதே அணுகுமுறை பற்றிய இந்திய இரட்டைக் கொள்கை அம்பலப்படலாம். பிறிக்ஸில் இந்தியாவின் பொருளாதார ஒத்துழைப்பு பிரதானமாக இருந்தாலும் மூலோபாய ஒழுங்குமுறையில் ரசியாவும் சீனாவும் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக ஒன்றிணைவது மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சவாலாகவே இருக்கும். ஆனாலும் பிறிக்ஸ் கூட்டமைப்பைக் கடந்து இந்தியா தொடர்பான நம்பிக்கை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு இன்னமும் உண்டு. குறிப்பாக இந்தோ – பசுபிக் விவகாரம் உள்ளிட்ட உலக அரசியல் ஒழுங்கு முறைகள் மற்றும் ஜனநாயகச் செயற்பாடுகளில் இந்தியா விரும்பியோ விரும்பாமலோ தம்முடன் நிற்கும் என்ற முழு நம்பிக்கை அமெரிக்காவுக்கு உண்டு. இந்தியாவின் இந்த இரட்டைப் போக்கு அரசியல் நன்கு தெரிந்த நிலையிலேதான் சீனா இந்தியாவைக் கிண்டலாகப் பார்க்கிறது. ரசியாவும் இராணுவ ரீதியாக இந்தியாவைப் பலப்படுத்த விரும்பவில்லை. இந்தியாவுக்கும் சீனாவைிட ரசியா பற்றிய முன் எச்சரிக்கை இல்லாமலில்லை. இந்த இடத்தில்தான் பிறிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்படும் பொருளாதாரம் தொடர்பான முழுமையான உடன்பாட்டுக்கு இந்தியா செல்லுமா என்ற கேள்விகள் விஞ்சியுள்ளன. ஆனால் இந்தியாவின் இத் தளம்பல் நிலை இலங்கைக்கு அரசியல் பொருளாதார ரீதியில் மேலும் சாதகமான சூழலை உருவாக்கும். குறிப்பாக சீன – இந்திய அரசுகளின் செல்லப் பிள்ளையாக இலங்கை தொடர்ந்து பயணிக்கும். இந்தியாவைக் கடந்து அமெரிக்காவும் இலங்கைக்கு அவ்வப்போது செல்லம் கொடுக்கும். இது ஈழத்தமிழர்களுக்கு மாறாத வலியாகவும் இருக்கும். மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பௌத்த மயமாக்கலின் பின்னணியில், தமது லாப நட்டங்கள் கருதி வல்லாதிக்க நாடுகள் அமைதியாக இருக்கின்றமையும் பட்டவர்த்தனம். இப் போட்டிகளுக்கு மத்தியில் ஈழத்தமிழ்த் தரப்பு எவ்வாறான நகர்வுகளையும் அரசியல் பொறிமுறைகளையும் வகுக்க வேண்டும் என்பது குறித்து இப் பத்தியில் ஏலவே விபரிக்கப்பட்டிருந்தாலும், பின்னா் மற்றொரு பத்தியிலும் விரிவாகப் பார்ப்போம். http://www.samakalam.com/இந்தியாவின்-இரட்டைக்-கொள/
  18. குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் சொல்வது என்ன? தமிழர்களுக்குச் சிங்கள அரசியல் தலைவர்கள் நேர்மையாக இல்லை என்பது வேறு. ஆனால் தமிழர் நிலங்களைப் பிரிக்கும் நோக்கில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் வாழ்வியல் மீது அவர்களுக்கு அக்கறையே இல்லை என்பதுதான் பெரும் வேடிக்கை. 1954 இல் குடியேற்றப்பட்டமைக்கான அரசியல் பின் புலம்கூட தற்போதைய இளம் சிங்களப் பிள்ளைகளுக்குத் தெரியாது- அ.நிக்ஸன்- ஊடக விரிவுரை ஒன்றுக்காக சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்ட , அனுராதபுரம் பதவியா, கிராமத்துக்குக் கடந்த யூன் 28, யூலை 08 ஆகிய திகதிகளில் இரண்டு தடவைகள் சென்று வந்தேன். அருகே பதவிசிறிபுர. வெலிஓயா கிராமங்கள் உள்ளிட்ட பல சிறிய கிராமங்கள் உண்டு. பதவிசிறிபுரவைத் தவிர ஏனைய கிராமங்கள் அனுராதபுரம் மாவட்ட நிர்வாகப் பிரிவில் அடங்கினாலும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான முல்லைத்தீவு. வவுனியா, மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்குரிய காணிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதாவது வடக்குக் கிழக்கு எல்லையை இணைக்கும் தமிழ்க் கிராமங்கள்தான் இவை. இக் கிராமங்கள் அனுராதபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைக்கப்படுவதற்கான எந்த ஒரு புவியியல் காரணிகளும் இல்லை. ஏறத்தாள பாலஸ்தீன பிரதேசத்தை இஸ்ரேல் அரசு அபகரித்த முறையை ஒத்தது எனலாம். ஆனால் நான் இப்போது அந்த அரசியல் பற்றி இங்கு பேச வரவில்லை. ஏனெனில் கொழும்பை மையமாகக் கொண்ட சர்வதேச அரசார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டுடன் வவுனியாவில் உள்ள இரு அரசசார்பற்ற நிறுவனங்களினால் நடத்தப்பட்ட ‘ஊடகம் – சமூகம் – தலைமைத்துவம்’ பற்றிய பயிற்சி விரிவுரை ஒன்றுக்காகவே அங்கு இரு தடவைகள் சென்று வந்தேன். அதன் காரணமாக ஈழத்தமிழர்களின் பிரதான அரசியல் கோரிக்கையின் மையப் பொருளோடு ஒப்பிட்டு இக் கட்டுரையை ஆழமாக எழுதுவதைத் தவிர்ப்பது தொழில் ஒழுக்கம் சார்ந்த பண்பு. இந்தக் குடியேற்றப் பகுதிகளுக்கு நேரில் சென்று வேறு சிலர் பார்த்தனரா, இந்த மக்களுடன் கதைத்துப் பேசினரா என்பது பற்றி எனக்குத் தெரியாது. இருந்தாலும் இக் கிராமங்கள் தொடர்பாகவும் சிங்களக் குடியேற்ற அரசியல் நோக்கங்கள் பற்றியும் பலருக்கும் தெரியும். இது பற்றிப் பல கட்டுரைகளை என்னைப் போன்ற வேறு சிலரும் எழுதியிருக்கின்றனர். ஆனால் நான் முதன் முதலில் இச் சிங்களக் குடியேற்றக் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள மக்களுடன் பேசிப் பழகியதுடன், அந்த மக்களின் வாழ்க்கைக் கஷ்டங்கள், புறக்கணிப்புகள், தண்ணீர்ப் பிரச்சினைகள் பற்றி அறிய முடிந்தது. குறிப்பாகக் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதுதான் இந்த மக்களின் பிரதான பிரச்சினை. அதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோபம் மக்களிடம் வெளிப்பட்டது. அதேநேரம் தாங்கள் இங்கு ஏன் குடியேற்றப்பட்டோம் என்ற அரசியலைக்கூடத் தெரியாதவர்களாகவே இந்த மக்கள் இருக்கிறார்கள் என்பதைச் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் பேச்சுக்கள் மூலமும் உணர முடிந்தது. 2009 மே மாதம் போர் இல்லாதொழிக்கும் காலம் வரையும் தங்களுக்குக் கிடைத்த வசதி வாய்ப்புகள் தற்போது இல்லை என்றும் சகல வசதிகளையும் கொண்ட பதவியா அரச வைத்தியசாலையின் அனைத்துக் கருவிகளும் தம்புத்தேகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இந்த மக்கள் கூறினார். மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள், தாதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுத் தற்போது பதவியா வைத்தியசாலை, வசதிகள் அற்ற நிலையில் இயங்குவதாகவும் சுட்டிக்காட்டினர். அங்கு நான் விரிவுரை நிகழ்த்திய இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் அனைவருமே எந்த வேறுபாடுகளும் இன்றி என்னுடன் பண்பாக உரையாடினர். குறித்த தலைப்பில் கற்பித்த பாடங்களைப் புரிந்துகொண்டனர். அவர்களுடன் ‘சமூகம் – ஊடகம் – தலைமைத்துவம்’ என்ற பாடப்பரப்பைத் தவிர சிங்கள – தமிழ் இன முரண்பாடுகள் பற்றி நான் எதுவுமே பேசவில்லை. அது பற்றி அவர்கள் அவ்வப்போது சொன்ன விடயங்களை மாத்திரமே என்னால் செவிசாய்க்க முடிந்தது. தமது பிரதேசக் கஷ்டங்கள் மற்றும் வசதியீனங்கள் பற்றியும் தமது பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் இல்லை எனவும் தமது பிரச்சினைகள் சிங்கள நாளிதழ்களில் வருவதில்லை என்ற விவகாரங்களையும் குறிப்பாகக் கொழும்பில் உள்ள அரச தொலைக் காட்சிகளைத் தவிர தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் தெளிவில்லை என்பதால் அவற்றைப் பார்க்க முடியாதென்றும் அவர்கள் கூறினர். அத்துடன் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைத்தனர். அப்போது தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்ற தொனி இளைஞர்கள் சிலரிடம் இருந்து எழுந்ததை அவதானித்தேன். ஆனால் இனப் பிரச்சினையின் தன்மை, சிங்களக் குடியேற்றங்கள் அதனால் தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி அவர்களுக்கு ஆழமாகத் தெரிந்திருக்கவில்லை. வடக்குக் கிழக்கில் தற்போதும் சிங்களக் குடியேற்றங்கள், புத்தர் சிலை வைத்தல் மற்றும் காணி அபகரிப்புகள் போன்ற ஆக்கிரமிப்புகள் பற்றியும் அவர்களுக்குத் தெரியாது என்பதையும் அவர்களின் பேச்சுக்கள் மூலம் நான் உணர்ந்து கொண்டேன். ஆனால் 1954 இல் இப் பிரதேசத்தில் உங்களைக் குடியேற்றியது போன்று 2009 இற்குப் பின்னரான சூழலிலும் தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை அரசாங்க ஆதரவுடன் பௌத்த குருமார் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி நான் எதுவுமே அவர்களிடம் சுட்டிக்காட்டவில்லை. குடியேற்றங்களினால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் வலிகள் பற்றியும் எடுத்துரைக்க விரும்பவில்லை. குறித்த பாடப்பரப்போடு மாத்திரம் நான் மட்டுப்படுத்திக் கொண்டேன். யூன்-28-2023 அன்று கெப்பெற்றிப்பொலாவ சந்தியில் இருந்து சுமார் முப்பத்தி ஐந்து கிலோமிற்றர் தூரத்தில் உள்ள பதவியா கிராமத்துக்கு இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தில் நான் காலை ஏழு முப்பதுக்குப் பயணம் செய்தேன். போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவு. இல்லை என்றே சொல்லாம். முன்னர் வவுனியா திருகோணமலை மாவட்டங்களின் எல்லையில் இருந்த கிராமங்கள், கெப்பெற்றிப்பொலாவ என்ற சிங்களப் பெயரில் அழைக்கப்படுகிறது. வவுனியாவில் இருந்து செல்லும்போது வவுனியா – திருகோணமலை பிரதான வீதியில் உள்ள கெப்பெற்றிப்பொலாவ சந்தியில் இருந்து இடதுபக்கமாக உட்புறம் நோக்கிச் சுமார் முப்பத்து ஐந்து கிலோமீற்றர் தூரமுள்ள பதவியா மற்றும் பதவிசிறிபுர கிராமங்களுக்கும் அதன் மூலம் வெலிஓயா கிராமத்துக்கும் செல்ல முடியும். வெலிஓயா முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் மனலாறு பிரதேசம் இதயபூமி என அழைக்கப்பட்டது. திருகோணமலையில் இருந்து புல்மோட்டை வழியாக சுமார் எமுபது கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பதவியா சந்திக்கு வந்து வெலிஓயா பிரதேசத்துக்கும் அதன் ஊடாக முல்லைத்தீவுக்கும் பேருந்து செல்வதை அவதானித்தேன். கெப்பெற்றிப்பொலாவயில் இருந்து பதவியாவுக்குப் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் இருந்தவர்கள் என்னை உற்று நோக்கினர். இப்படியான பயணப் பொதியுடனும் உடைகளோடும் இப் பிரதேசத்தில் யாரும் பயணிப்பதில்லை என்று பேருந்து நடத்துனர் கூறியதோடு, மேலும் என்னிடம் கதை தொடுத்தார். நான் செய்தியாளர் என்று என்னை அடையாளப்படுத்தவில்லை. விரிவுரையாளர் என்றே சொன்னேன். பதவியா போய் சேரும் வரை நாற்பது நிமிடம் அந்த வீதியில் எந்த ஒரு வாகனத்தையும் காண முடியவில்லை. இந்தப் பேருந்து மாத்திரமே சென்று கொண்டிருந்தது. வீதியில் ஆள் நடமாட்டங்கள்கூட இல்லை. அருகே காடுகளும் வயல் நிலங்களும் காணப்பட்டன. மிகச் சிறிய கொட்டில்களில் சிங்கள விவசாயிகள் வாழ்வதையும் காண முடிந்தது. எட்டாம் திகதி குறித்த நிறுவனத்தின் வாகனத்திலேயே பதவியாவுக்குச் சென்றேன். ஏனெனில் ஏதேனும் விபத்து நடந்தாலோ அல்லது எனக்கு ஏதும் ஆபத்து நேர்ந்தாலோ அந்த வீதியில் இருந்து என்னைத் தூக்கிச் செல்லக்கூட ஆட்கள் இல்லை. இருந்தாலும் வீதிகள் காப்பெற் இடப்பட்டுக் கொழும்பின் பிரதான வீதிகளைப் பார்ப்பது போன்று காட்சி தந்தன. ஆனால் அங்கு 1954 இல் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் வாழ்க்கைதான் மிகவும் பரிதாபத்துக்குரியது. பதவியா பிரதேசத்தில் உள்ள பதினைந்து கிராம சேவகர் பிரிவுகளில் எந்த ஒரு பகுதியிலும் உயர்கல்வி நிறுவனங்கள் இல்லை, பெரிய வர்த்தக நிலையங்கள் இல்லை. சிறிய கடைகள் மாத்திரமே உண்டு. பதவியா சுதர்சனபுரத்தில் பாடசாலை ஒன்று உள்ளது. அடிப்படை வசதிகள் போதியதாக இல்லை. முப்பத்து ஐந்து கிலோமீற்றர் தூரம் உள்ள கெப்பெற்றிப்பொலாவ சந்திக்கு வந்துதான் அவர்கள் அத்தியாவசியப் பொருட்களையோ அல்லது வேறு எந்தப் பொருட்களாக இருந்தாலும் கொள்வனவு செய்ய வேண்டும். அனுராதபுரம் நகருக்கு வருவதாக இருந்தால் சுமார் நூறு கிலோமீற்றர் தூரம் பயணம் செய்ய வேண்டும். சென்றுவர தொள்ளாயிரத்து ஐம்பது ரூபா செலவாகும் என்றும் அப்படிச் செலவு செய்து பயணிக்கத் தங்களிடம் பணம் இல்லை என்றும் கூறினர். பலரும் விவசாயிகள். ஆனால் அவர்களின் விவசாயச் செய்கைக்குரிய வசதி வாய்ப்புகள் அங்கு இல்லை. வெலிஓயா கிராமத்துப் பிள்ளைகள் பாடசாலை செல்ல பேருந்துகள் இல்லை. நடந்து செல்கின்றனர். இப் பிரதேசத்தில் இருபத்து பௌத்த குருமார் உணவுக்குப் பெரும் கஷ்டப்படுவதாக சமூகச் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். இராணுவச் சிப்பாய்களின் குடும்பங்களும் அவர்களின் உறவினர்களும் இக் கிராமங்களில் அதிமாக வாழ்கின்றனர். விவகாரைகள் பல உண்டு. ஆனால் 1995 இற்குப் பின்னர் பிறந்த பிள்ளைகளுக்குத் தாங்கள் இங்கு குடியேற்றப்பட்ட அரசியல் பின்னணியோ, அந்த அரசியலையோ அவர்களின் பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்ததாகவோ கூற முடியாது. அவர்களின் பெற்றோர்கள்கூட தாங்கள் குடியேற்றப்பட்ட அரசியல் பின்னணியை மறந்திருக்க வேண்டும். அல்லது 2009 இற்குப் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் தொடர் புறக்கணிப்பினால் வெறுப்படைந்திருக்க வேண்டும். இளம் பிள்ளைகள் மிகவும் அப்பாவிகளாகவுள்ளனர். உயர் கல்வி கற்க விரும்புகின்றனர். ஆனால் அவர்களிடம் வசதியில்லை. போக்குவரத்துச் செய்யக்கூடிய தூரத்தில் வசதியான நகரங்கள் அருகில் இல்லை. இணைய வசதிகூட ஒழுங்காக இல்லை. ஆக வட்ஸ்அப் பேசக்கூடிய அளவுக்கே அங்கு இணையம் செயற்படுகிறது. முகநூலை பார்ப்பதற்குப் பல மணிநேரம் சென்ற பின்னர்தான் இணையம் ஓரளவுக்கு வேலை செய்யும் எனவும் அந்தப் பிள்ளைகள்; கூறினார்கள். அவர்கள் மிகவும் அழகானவர்கள், என்னுடன் தொடர்ந்து பேச விரும்பினர். வகுப்பு முடிவடைந்ததும் மொழிபெயர்ப்பு இன்றி என்னிடம் தனியாகப் பேசினர். செயலமர்வுக்கு வந்திருந்த இளம் பிள்ளைகள் ஆங்கிலம் கற்க விரும்புகின்றனர். நான் கொழும்பில் பழகும் சிங்கள மக்கள் பேசும் சிங்கள மொழியை அவர்கள் பேசவில்லை. அவர்கள் பேசிய சிங்களம் கிராமிய இலக்கணத்துடன் கடுமையாக இருந்தது. எல்லோருமே பௌத்த சயமத்தவர்கள். இவர்கள் அனுராதபுரம் நகருக்கு வருவதற்குக்கூடத் தயங்குகின்றனர். தங்களைத் தாழ்த்தப்பட்ட மக்களாகக் கருதுவார்களோ என்ற கூச்ச உணர்வும் இவர்கள் சிலரிடம் இருந்தது. அவ்வளவு தூரத்துக்கு இவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை என்னால் உணர முடிந்தது. இந்த மக்கள் அனுராதபுரம், நுவரெலியா போன்ற இடங்களில் இருந்தே இங்கு குடியமர்த்தப்பட்டிருக்கின்றனர். புதவியா பிரதேசத்தில் 1954 ஆம் ஆண்டு தாங்கள் குடியேற்றம் செய்யப்பட்டதாகவும் இப் பிரதேசத்தில் உள்ள பதினைந்து கிராம சேவகர் பிரிவுகளிலும் வாழும் சுமார் நாற்பதாயிரும் மக்களின் பூர்வீகம் இப் பிரதேசம் அல்ல என்றும் கருத்தரங்கில் கலந்துகொண்ட ஒரு சமூகச் செயற்பாட்டாளர் கூறினார். ஆகவே தமிழர் பிரதேசங்களை நில அடிப்படையில் பிரிப்பதற்கு வடக்குக் கிழக்கின் எல்லைக் கிராமங்களில் பௌத்த விகாரைகள் கட்டுதல் சிங்களப் பெயர்களைச் சூட்டுதல் போன்ற செயற்பாடுகளுடன் மாத்திரம் சிங்கள அரசியல்வாதிகள் நின்று விடுகின்றனர் என்பது புரிகிறது. நிலங்களைப் பிரிக்கும் நோக்கில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களில்; இவர்களுக்கு அக்கறையில்லை என்பதும் தெரிகிறது. குடியேற்றப்பட்ட பின்னர் மக்கள் எப்படியாவது வாழட்டும் அல்லது அரசியல் – நாகரிக நோக்கில் அந்த மக்கள் சிந்திக்கக் கூடாது என்ற நிலைப்பாடும் சிங்கள அரசியல்வாதிகளிடம் இருப்பதுபோன்றும் தெரிகிறது. ஏனெனில் 2009 இற்குப் பின்னரான சூழலில் இந்த மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேற்படுத்த எந்த நடவடிக்கைகளும் இல்லையென மக்கள் ஆதங்கப்படுகின்றனர். போர்க் காலத்தில் மாத்திரம் தங்களுக்கும் இக் கிராம வைத்தியசாலைக்கும் ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்ற சந்தேகம் கூட இப்போது அவர்களிடம் மெதுவாக எழ ஆரம்பிக்கிறது. ஆகவே அறுபது வருடங்களுக்கு முன்னர் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் இப்படிப் புலம்புகிறார்கள் என்றால், 2009 மே மாதத்திற்குப் பின்னர் இன்று வரையும் வடக்குக் கிழக்கில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்களின் நிலை என்னவாக இருக்கும்? ஈழத் தமிழர்களின் மரபுவழி அடையாளங்களை பௌத்த அடையாளமாக மாற்றினால் போதும் என்பது சிங்கள அரசியல் தலைவர்களின் சிந்தனை. இதற்காக அப்பாவிச் சிங்கள மக்கள் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர். ஆனால் இந்த உண்மையை குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் தாங்களாகவே உணர்ந்து கொண்டால், எதிர்காலத்தில் சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் சிங்கள கட்சிகளுக்கும் பெரும் நெருக்கடி ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் இல்லாமில்லை. ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகள் அல்லது தமிழ்ப் பிரமுகர்கள் அந்த அரசியலைப் இந்த மக்களிடம் சென்று போதித்தால் அது இனவாதமாகக் கிளம்பும். அத்துடன் வடக்குக் கிழக்கைத் திட்டமிட்டுப் பிரிப்பதற்காகக் கொழும்பில் இயங்கும் அரச நிர்வாக இயந்திரமும் உசாரடைந்து விடும் இருந்தாலும் இந்த மக்கள் நன்றாகச் சிந்திக்கிறார்கள். எனது வகுப்பில் கொடுக்கப்பட்ட குழு வேலை ஒன்றின்போது, இன நல்லிணக்கம் பற்றி அவர்களிடம் இருந்து எழுந்த கருத்துக்கள் குறிப்பாக தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் பற்றிய உரையாடல் அவர்களின் குறைந்த பட்ச அரசியல் சிந்தனை வளர்ச்சியை வெளிப்படுத்தியது. ஆனால் தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய உள்ளீடுகள் குறித்து அங்கு எடுத்துரைக்க நான் விரும்பவில்லை. அந்தப் பிள்ளைகள் சுட்டிக்காட்டிய விடயங்களோடு மாத்திரம் மட்டுப்படுத்தி வகுப்பை முடிவுக்குக் கொண்டு வந்தேன். 1949 இல் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா குடியேற்றத் திட்டம் என்பது நிலங்களற்ற விவசாயிகளைக் குடியமர்த்தும் அரசியல் வேலைத் திட்டமாகும். சுமார் நாற்பதாயிரம் ஏக்கர் நிலம் சிங்கள மக்களின் விவசாயத்துக்காக மாற்றப்பட்டது. ஐம்பது புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டன. முன்னர் தமிழ்க் கிராமங்களாக இருந்த இடங்களில் பெரும்பான்மையான சிங்களவர்கள் குடியேற்றப்பட்டதனால் இன முரண்பாடுகள் அங்குதான் ஆரம்பிக்கப்பட்டன என்றுகூடச் சொல்லாம். இதன் தொடர்ச்சியாக வவுனியாவுக்கு அல்லது வன்னி மாவட்ட பிரதேசத்தில் இருந்த சில குளங்கள் 1954 இல் சிங்களப் பெயர்களுக்கு மாற்றப்பட்டுக் குடியேற்றங்களும் செய்யப்பட்டிருக்கின்றன என்பதற்குப் பதவியாக் குளம் சிறந்த உதாரணமாகும். பதவியா பிரதேச செயலகம் 1992 இல் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோதுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜே. றலியூதீன் (J. Raleeyutheen) என்ற முஸ்லிம் ஒருவர் 2020 ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2022 பெப்ரவரி மாதம் வரை பிரதேச செயலாளராகக் கடமையாற்றியிருக்கிறார். ஆனால் பிரதேசக் காணி விவகாரம் ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் முரண்பட்டதால் அவர் தனது பதவியில் இருந்து விலகியதாகக் கூறப்படுகின்றது. பதவியா பிரதேச செயலகத்துக்கு அருகில் சிறிய பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. சிங்கள மக்கள் இப்போதும் அங்கு தீபம் ஏற்றி வழிபடுவதை அவதானிக்க முடிந்தது. பதவிசிறிபுர பிரதேச செயலாளர் பிரிவு திருகோணமலை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வடக்கு எல்லையில் முல்லைத்தீவு மாவட்டமும், மேற்கு எல்லைக்கு அருகாக வவுனியா, அனுராதபுரம் மாவட்டங்களும், கிழக்கில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவும், தெற்கில் கொமரங்கடவலை பிரதேச செயலாலர் பிரிவும் அமைந்துள்ளன. தமிழர்களுக்குச் சிங்கள அரசியல் தலைவர்கள் நேர்மையாக இல்லை என்பது வேறு. ஆனால் தமிழர் நிலங்களைப் பிரிக்கும் நோக்கில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் வாழ்வியல் மீது அவர்களுக்கு அக்கறையே இல்லை என்பதுதான் பெரும் வேடிக்கை. http://www.samakalam.com/குடியேற்றப்பட்ட-சிங்கள-ம/
  19. புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் நம்பிக்கையற்ற தலைமைப் பதவியும் –ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை என்ற உண்மையான உணர்வு இவர்களிடம் இருக்குமானால், எந்த நோக்கத்துக்காகத் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார்களோ அந்த நோக்கத்துக்கு மாறாக மீண்டும் தமிழரசுக் கட்சி போன்று இந்த ஐந்து கட்சிகளும் தனித் தனிச் செல்வாக்கை வளர்க்க முற்படுகின்றனர் என்பது புரிகிறது– -அ.நிக்ஸன்- ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டம் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஒரு “தேசிய இயக்கம்” போன்ற அமைப்பையே எதிர்பார்த்திருக்கிறது. ஆனால் கடந்த பதினான்கு வருடம் சென்ற பின்னரும்கூட அது சாத்தியமாகவில்லை. தேர்தல் வியூகங்களுடன் கட்சி அரசியல் மாத்திரமே வளர்ந்து வருகின்றன. வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ்த்தேசிய அரசியல் இயங்கு நிலைக்குத் ‘தேசிய இயக்கம்’ அவசியம் என்றும் அந்தத் தேசிய இயக்கமே இலங்கை அரசாங்கத்துடனும் கொழும்புக்கு வந்து செல்கின்ற சர்வதேச அரசியல் பிரதிநிதிகளுடனும் பேச வேண்டும் எனவும் மக்கள் விரும்பியிருந்தனர். இந்த அரசியல் பத்தியில் பல தடவைகள் இது குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டும் வருகிறது. வேறு சில அரசியல் பத்தி எழுத்தாளர்கள் சிலரும் இந்த விடயத்தை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டு எழுதியுமிருக்கின்றனர். ஆனால் இதுவரையும் அவ்வாறான தேசிய இயக்கம் அல்லது பலமுள்ள சிவில் அமைப்புகள் கூட இதுவரை வடக்குக் கிழக்கில் உருவானதாக இல்லை. 2009 இற்குப் பின்னர் செயற்பட்டு வந்த சில சிவில் சமூக அமைப்புகளும் ஏதோ ஒரு அரசியல் கட்சியின் பின்னால் அல்லது அந்தக் கட்சிக்குத் தேவையானதையே செயற்படுத்தி வந்தன. 2010 இல் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஒரு “தேசிய இக்கம்” என்ற அளவில் செயற்படும் என்ற நம்பிக்கை 2015 வரை தென்பட்டிருந்தது. அரசியல் விடுதலையைப் பெறக்கூடிய முறையில் அதாவது அழுத்தம் கொடுக்கக்கூடிய அளவுக்கு முன்னணி அப்போது பிரதான அமுக்கக் குழுவாகச் செயற்பட்டிருந்தது. இப் பின்புலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு நாடாளுமன்ற ஆசனங்களும் மக்கள் செல்வாக்கும் குறைய ஆரம்பித்தது. 2010 இல் பதினெட்டு ஆசனங்களும் 2015 இல் 16 ஆசனங்களும் 2020 இல் பத்து ஆசனங்களும் பெறப்பட்டு மக்கள் செல்வாக்கும் பலமும் குறைவடைந்தது. இதற்கு முன்னணியின் அப்போதைய அரசியல் ஈடுபாடுகள் பிரதான காரணமாக இருந்தன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இச் சூழலில் 2020 இல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆசனங்கள் குறைவடைந்து உள்ளக முரண்பாடுகள் மேலும் விரிவடைந்தன. குறிப்பாகத் தமிழரசுக் கட்சிக்குரிய முக்கியத்துவம் சம்பந்தன் சுமந்திரன் ஆகியோரை மையமாகக் கொண்ட முடிவுகள் – செயற்பாடுகள் போன்ற காரணங்களினால், கூட்டமைப்பின் ஏனைய அங்கத்துவக் கட்சித் தலைவர்கள் விசனமடைந்தனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. 2015 இல் கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஈபிஆர்எல்எப் கட்சியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழரசுக் கட்சியினால் ஓரம்கட்டப்பட்டார். ஏனெனில் தமிழரசுக் கட்சித் தலைமையின் செயற்பாடுகள் குறிப்பாகச் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் தன்னிச்சையான முடிவுகளை அவர் துணிந்து வெளிப்படுத்தியிருந்தார். இதனால் நாடாளுமன்றத்தில் உரையாற்ற சிவசக்தி ஆனந்தனுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அதாவது பேச்சுரிமை அப்போது மறுக்கப்பட்டிருந்தது. இதனால் எதிர்க்கட்சிகள் தங்களுக்குரிய நேரத்தைப் பங்கிட்டு சிவசக்தி ஆனந்தனுக்கு வழங்கியிருந்தன. அப்போது கூட்டமைப்பில் அங்கம் வகித்திருந்த ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் சிவசக்தி ஆனந்தனுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவேயில்லை. ரெலோத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அப்போது நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராகப் பதவி வகித்திருந்தார். சிவசக்தி ஆனந்தன் தனக்குரிய பேச்சுரிமை மறுக்கப்பட்டமை குறித்து, செல்வம் அடைக்கலநாதனிடம் தனிப்பட்ட ரீதியில் முறையிட்டிருந்தபோதும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துக் கட்சியின் தலைவராக அன்றி நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் என்ற முறையில் கூட அவர் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுத்திருக்கவில்லை. 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பத்து ஆசனங்களைப் பெற்று அதில் ரெலோ மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது இதன் பின்னரான சூழலில் தமிழரசுக் கட்சியுடன் ரெலோவுக்கு முரண்பாடு ஏற்பட்டது. இதனால் செல்வம் அடைக்கலநாதனுக்கு நாடாளுமன்றத்தில் பேசுவதற்குரிய நேரத்தைச் சம்பந்தன் ஒதுக்கவுமில்லை. அதாவது அப்போது சிவசக்தி ஆனந்தனுக்கு ஏற்பட்ட நிலை இப்போது செல்வம் அடைக்கலநாதனுக்கு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் புளொட்டும் கூட்டமைப்புடன் முரண்பட்டது. இப் பின்புலத்திலேதான் ஈபிஆா்எல்எவ்வுடன் கூட்டுச் சேர்ந்து “ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு” என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. குறிப்பாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிப்புடன்தான் இந்த முரண்பாடு அதிகரித்துத் தனித்துச் செயற்பட வேண்டுமென்ற சிந்தனை ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளுக்கு உருவானது. 2017 இல் சிவசக்தி ஆனந்தனுக்குப் பேச்சுரிமை மறுக்கப்பட்டபோது ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் ஈபிஆர்எல்எப் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து, தமிழரசுக் கட்சியின் தலைமையைக் கண்டித்து வெளியேறியிந்தால், அப்போதே புதிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியிருக்கலாம். ரணில் பிரதமராக இருந்தபோது தமிழரசுக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து இணக்க அரசியலுக்குள் ரொலோவும் புளொட்டும் குறிப்பாக ரெலோ இணக்க அரசியலை நம்பியதால், சிவசகத்தி ஆனந்தனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்திப் புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போது தோன்றியிருக்கவில்லை. அன்று அவ்வாறு செயற்பட்டிருந்தால், 2020 பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் கண்டிருக்கலாம். இருந்தாலும் தற்போது அந்த முயற்சி கைகூடியுள்ளது. யாப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் யார் தலைவர் என்பதில் தான் தற்போது மனக் கசப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சந்தேகிக்கும் ஆபத்தும் நேர்ந்துள்ளது. இதனால் தலைவர் இல்லாமல் இணைத் தலைவர்கள் என்று நியமிக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்காக ஆறு மாதங்கள் வரை உரையாடி உருவாக்கப்பட்டுள்ள யாப்பின் பிரகாரம் பதினைந்துபேரைக் கொண்ட நிறைவேற்றுக் குழுவிடமே முழு அதிகாரங்களும் உண்டு. நிறைவேற்றுக் குழு விரும்பினால் தலைவர் ஒருவரைச் சுழற்சி முறையில் நியமிக்கும் ஏற்பாடுகளும் யாப்பில் உண்டு. தலைவராக வரக்கூடியவர் நிறைவேற்றுக்குழுவின் தீர்மானங்கள் இன்றித் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாத அளவுக்கு நிறைவேற்றுக் குழு பலமுள்ளதாகக் காணப்படுகின்றது. ஆகவே பலமுள்ள இப் பின்னணியில் கூட்டமைப்புக்குத் தலைவர் ஒருவரை நியமிப்பதே விடுதலை அரசியலுக்குச் சிறப்பானது. இணைத் தலைவர்கள் என்பது கட்சித் தலைவர்களிடையேயான சந்தேகத்தையும் நம்பிக்கையீனத்தையும் வலுப்படுத்துகிறதே தவிர கூட்டுப் பொறுப்பை அல்ல. தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி உருவாக்கப்பட்ட புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் யார் என்று கேட்டால், இணைத் தலைவர்கள்தான் இருக்கிறார்கள் என்று கூறலாமா? ஆகவே ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட், தமிழ்த்தேசியக் கட்சி, மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய ஐந்து கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பது பட்டவர்த்தனமாகிறது அல்லவா? இச் சந்தேகமே கூட்டமைப்புக்கான நம்பிக்கையுடைய தலைவர் ஒருவரை நியமிக்கத் தயங்குவதற்குக் காரணம் என்பதும் பகிரங்கமாகிறதல்லவா? ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை என்ற உண்மையான உணர்வு இவர்களிடம் இருக்குமானால், எந்த நோக்கத்துக்காகத் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார்களோ அந்த நோக்கத்துக்கு மாறாக மீண்டும் தமிழரசுக் கட்சி போன்று இந்த ஐந்து கட்சிகளும் தனித் தனிச் செல்வாக்கை வளர்க்க முற்படுகின்றனர் என்பது புரிகிறது. குறிப்பாக ஈபிஆா்எல்எப், ரெலோ, புளொட் மற்றும் தமிழ்த்தேசியக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளின் நகர்வுகளும் அதனை வெளிப்படுத்துகின்றன. அதாவது தேர்தல் வெற்றிக்காக வியூகங்களை வகுத்துத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கிப் பின்னர் தத்தமது கட்சிகளை வளர்த்துக் கட்சிச் செயற்பாடுகளோடும் சிங்கள ஆட்சியாளர்கள் மற்றும் இந்தியா சொல்வதைக் கேட்கின்ற கட்சிகளாகச் செயற்படவுமே இவர்கள் விரும்புகின்றனர் என்பதும் இங்கே வெளிப்படையாகிறது. கூட்டமைப்புக்காகத் தேசிய அமைப்பாளர், பேச்சாளர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் வடக்குக் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு உப தேசிய அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சி யாப்பின் பிரகாரம் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்றால், நிறைவேற்றுக்குழுவுக்குரிய அதிகாரத்தின் படி தலைவர் ஒருவரையும் நியமிப்பதுதானே சிறப்பு? ஐந்து கட்சிகளில் இருந்தும் மூன்று உறுப்பினர்கள் வீதம் பதினைந்து பேர் நிறைவேற்றுக் குழுவில் அங்கம் வகிக்கும்போது, தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதில் சந்தேகம் ஏன்? தாழ்வு மனப்பான்மை ஏன்? யாப்பின் பிரகாரம் நிறைவேற்றுக்குழுவின் கூட்டுப் பொறுப்பு உண்மையானதாக இருக்குமானால் தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதில் சந்தேகம் எழுவதற்கு வாய்ப்பில்லை. 1949 இல் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சியும், 1977 இல் உருவான தமிழர் விடுதலைக் கூட்டணியும், 2001 இல் உருவான தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் தலைமை இருந்தது. ஆனாலும் தலைமையும் மற்றும் சிலரும் எடுக்கின்ற முடிவுகள் கட்சி அரசியல் செயற்பாட்டுக்கு மாறானதாக அதுவும் விடுதலை அரசியல் செயல் முறைமைகளுக்கு மாறானதாகவே இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. “கூட்டுப் பொறுப்பு” “அரசியல் விடுதலை” என்ற சிந்தனைகளை மாற்றித் தமது விருப்பங்களுக்கு ஏற்ப இலங்கை அரசாங்கத்துடனும், இந்தியாவுடனும் தொடர்பு கொண்டு பேசுவது, பின்னர் அந்த முடிவுகளைக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மக்களிடமும் திணிக்க முற்படுவது போன்ற அணுகுமுறைகள் மேலோங்கியிருந்தமை உண்மைதான். இது “விடுதலை அரசியல்” இயங்கு தளத்துக்குப் பொருத்தமான செயற்பாடுமல்ல. அதுவும் 2009 இற்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர்களுக்கான தலைமைக் கட்சி என்று கூறப்பட்ட சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செற்பாடுகள் அதிருப்திகளையும், இந்தக் கூட்டமைப்பு வேண்டாம் என்று சொல்லுகிற அளவுக்கு மக்களிடமும் வெறுப்பு உணர்வுகளும் காணப்பட்டிருந்தன. குறிப்பாகச் சம்பந்தன் கூட்டுப் பொறுப்பைப் பேணத் தவறிவிட்டார் என்பதே பொதுவான குற்றச்சாட்டு. அதன் காரணமாகவே 2010, 2015, 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற ஆசனங்களும் படிப்படியாகக் குறைவடைந்தும் வந்தன. ஆகவே இப் பின்னணியில் உருவாக்கப்பட்ட மேற்படி ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தலைமை இல்லாத அல்லது தலைவராக வரக்கூடியவர் மீது சந்தேகம் கொள்கின்ற தன்மை இருக்குமானால், சுய விருப்பங்கள், தனிப்பட்ட கட்சி அரசியல் நலன்கள் தாராளமாகக் குடிகொண்டுள்ளன என்பதையே புடம்போட்டுக் காட்டுகிறன. இங்கு கூட்டுப் பொறுப்பு இல்லை என்பதும் பட்டவர்த்தனமாகிறது. தலைமை என்பது வழிகாட்டுதல். எவரையும் அடக்கி ஆள்வதல்ல. தன்னிச்சையாக முடிவெடுத்தல் என்பதுமல்ல. அதுவும் விடுதலை வேண்டி நிற்கும் இனம் ஒன்றின் கூட்டமைப்புக்குரிய அல்லது தேசிய இயக்கம் ஒன்றுக்குரிய தலைமை என்பது அதன் நிர்வாகக் கட்டமைப்புக்குக் கட்டுப்பட்டதாகவும் மக்களின் கருத்துக்களை அறிந்து நிறைவேற்றக் கூடியதாகவும் இருக்க வேண்டும். கூட்டுப் பொறுப்பைப் பேணும் ஆற்றலும் இருக்க வேண்டும். மாறாகக் குறிப்பிட்ட சில நபா்களுடன் இணைந்து மேலிருந்து முடிவுகளை எடுக்காமல், மக்களிடம் இருந்து அதாவது கிராமம் கிராமமாகச் சென்று மக்கள் கருத்தை அறிந்து முடிவுகளை எடுக்கக் கூடியவரே வழிகாட்டல் தலைமைக்குத் தகுதியானவர். இது ஆயுதப் போராட்டக் காலமல்ல. ஆகவே உலக அரசியல் ஒழுங்கு தற்போது மாற்றமடைந்து வரும் சூழலில் ஜனநாயக வழியில் புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வழிகாட்டக் கூடிய ஒருவரையே தலைவர் என்று அறிமுகப்படுத்த வேண்டும். அத்தகைய தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதில் ஐந்து கட்சிகளிடமும் சந்தேகம் நிலவுமானால், அல்லது நிறைவேற்றுக் குழுவுக்குரிய கூட்டுப் பொறுப்பில் நம்பிக்கை இல்லையானால் புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்று சொல்வதில் அர்த்தமேயில்லை. சம்பந்தன் தலைமையிலான அல்லது சுமந்திரனின் தனி ஆதிக்கத்தை மையப்படுத்திய தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடான புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்று சொல்வதானால், அதற்குரிய கூட்டுப் பொறுப்புப் பண்புகள் – தகுதிகள் மற்றும் தமிழ்த் தேசிய அரசியல் பணிகள் ஒன்றாக இருக்க வேண்டும். தமிழரசுக் கட்சியின் தனி ஆதிக்கத்தை வெளிப்படுத்தி, ஒரு கட்சியின் தலைமை எப்படி இயங்க வேண்டும், கூட்டுப் பொறுப்பு என்றால் என்ன என்பது பற்றிய முன்னுதாரணத்தைப் புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்த இது அரிய சந்தர்ப்பமல்லவா? ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் பாடம் கற்பிக்க முடியுமல்லவா? அத்துடன் அமெரிக்க – இந்திய அரசுகளுடன் பேரம் பேசும் அளவுக்குரிய வெளியுறவுக் கொள்கை பற்றிய தெளிவான சிந்தனைகளைப் புதிய கூட்டமைப்பு ஒருமித்த கருத்தாக அறிவிக்க வேண்டும். வெளியுறவுச் செயற்பாட்டின் வகிபாகத்தை பகிரங்கப்படுத்தவும் வேண்டும். வெறுமனே அமெரிக்காவும் இந்தியாவும் சொல்வதைக் கேட்பது, பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் ஆரம்பப் புள்ளி என்று மார்தட்டிக் கூனிக் குறுகி நின்று அரைகுறை அரசியல் தீர்வைக் கோருவதற்குப் புதிய கூட்டமைப்பு தேவையில்லை. “முழுமையான நிரந்தரமான அரசியல் தீர்வு” என்ற தயார்படுத்தலோடும் அதற்குரிய கூட்டுப் பொறுப்புடனும் புதிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிக்கப்பட வேண்டும். மாறாகத் தெளிவான வெளியுறவுக் கொள்கையற்ற அசியல் பார்வையும், புவிசார் அரசியல் – பொருளாதாரப் போட்டிகளுக்கு மத்தியில் நிரந்தர அரசியல் தீர்வுக்குரிய ஒழுங்குகள், ”இன அழிப்பு” விசாரணைக்குரிய வேலைத் திட்டங்கள் எதுவுமேயின்றியும் கட்சி அரசியல் நலன்களுடன் மாத்திரம் இப் புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தோற்றம் பெறுமானால், அது சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாக மாறும். இதுதான் புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலை என்றால், தமிழரசுக் கட்சியும் அதன் அரசியலும் போதுமானது. தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடாகவும் குறைந்த பட்சம் ஈழத்தமிழர் அரசியல் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் பேசுபொருளாக வைத்துக் கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் போதுமானது என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிடும் நிலை உருவாகும். என்னமோ, தமிழ்த்தேசிய விடுதலை அரசியலுக்கு இது வேதனையுடன் கலந்த சோதனைக்காலம். http://www.samakalam.com/புதிய-தமிழ்த்தேசியக்-கூட/
  20. பணிப்பாளரின் பதவி விலகலும் பௌத்த மயமாக்கல் வியூகங்களும் -புவிசார் அரசியல் – பொருளாதாரப் போட்டிச் சூழல் வாய்ப்புகளை உருவாக்கினாலும், ஒருமித்த குரலில் செயற்படும் அளவுக்கு அரசியல் – பொருளாதாரப் பொறிமுறைகள் வகுக்கப்படவில்லை. தமிழர் பிரதேசங்களில் 1950 களில் கல் ஓயா திட்டத்திலிருந்து 1970 களில் துரிதப்படுத்தப்பட்ட மகாவலி திட்டம் வரையிலான நீர்ப்பாசனத் திட்டங்களுடன் ஆரம்பித்த சிங்களக் குடியேற்றம், தற்போது தொல்பொருள் அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில், பௌத்த மயமாக்கலுக்கான வேறுபட்ட பாதையை நுட்பமாகக் கையாள ஆரம்பித்திருக்கிறது- -அ.நிக்ஸன்- 2009 இற்குப் பின்னரான சூழலில் இலங்கைத்தீவு ஒற்றையாட்சி அரசு என்பதை மேலும் உறுதிப்படுத்தும் சிங்களத் தலைவர்களின் அரசியல் வேலைத் திட்டங்கள் தற்போது, கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் முழுமையடைந்து வருகின்றன. அமெரிக்க, இந்திய மற்றும் சீன அரசுகள் தமக்கிடையே ஏட்டிக்குப்போட்டியான காரியங்களில் ஈடுபட்டாலும் இலங்கை ஒற்றையாட்சி என்பதை ஏற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சென்ற ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போதும் பகிரங்கமாகப் பெருமையோடு கூறியிருந்தார். 2021 இல் கண்டியில் ஞானசார தேரர், இலங்கை பௌத்த சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்தபோது, மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மாத்திரமே அதனைக் கண்டித்திருந்தார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட எந்த ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஞானசார தேரரின் அந்தக் கருத்தை அப்போது கண்டிக்கத் துணியவில்லை. இந்த நிலையில் இலங்கைத் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் அனுர மானதுங்கவுடன் முல்லைத்தீவு தொல்பொருள் அகழ்வாராய்ச்சி தொடர்பாக ரணில் தர்க்கப்பட்டார் என்றும், அதனால் பணிப்பாளர் தனது பதவியில் இருந்து விலகினார் எனவும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புகழாரம் சூட்டுவதுதான் வேடிக்கை. மகிந்த ராஜபக்ச வடக்குக் கிழக்குத் தயாகப் பகுதிகளுக்குச் செல்லும்போதெல்லாம் இலங்கைத்தீவில் உள்ள எந்த ஒரு மாகாணமும் மாவட்டமும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடாது என்று மார் தட்டியிருக்கிறார். அவ்வாறு கூறிய மகிந்தவின் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் நூற்று இருபத்து எட்டு உறுப்பினர்களின் ஆதரவுடன்தான் ரணில் அரசாங்கத்தை அமைத்துள்ளார். இந்த நிலையில் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் பதவி விலகியதும் கண்டி மகாநாயக்கத் தேர்களைச் சந்தித்த பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், ரணிலுக்குப் பௌத்த சமயத் தொல்பொருள் பற்றிப் பேச அருகதையில்லை என்று கூறியதுடன், வடக்குக் கிழக்கில் உள்ள பௌத்த தொல்பொருள் சின்னங்களைத் தமிழ்ப் பயங்கரவாதிகளிடம் அடகுவைக்கப் போகிறார் என்றும் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியிருக்கிறார். தமிழர் தாயகப் பிரதேசங்களில் 1950 களில் கல் ஓயா திட்டத்திலிருந்து 1970 களில் துரிதப்படுத்தப்பட்ட மகாவலி திட்டம் வரையிலான நீர்ப்பாசனத் திட்டங்களுடன் ஆரம்பித்த சிங்களக் குடியேற்றம், தற்போது தொல்பொருள் அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில், பௌத்த மயமாக்கலுக்கான வேறுபட்ட பாதையை மிக நுட்பமாகக் கையாள ஆரம்பித்திருக்கிறது. ஏறத்தாள பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய அரசு ஆரம்பித்த யூதக் குடியேற்றங்களுக்கு ஒப்பானதாகச் சிங்களக் குடியேற்றங்கள் அரங்கேறுகின்றன. அதுவும் 2009 மே மாதத்தின் பின்னரான குறிப்பாக நல்லாட்சி எனக் கூறப்பட்ட மைத்திரி – ரணில் அரசாங்கம் 2015 இல் இருந்து சிங்களக் குடியேற்றங்கள் உள்ளிட்ட பௌத்த மயமாக்கலை தொல்பொருள் திணைக்களம், காணி அபிவிருத்தி அதிகார சபை, மற்றும் வன வளத் திணைக்களம் ஆகியவற்றின் மூலம் சட்ட ரீதியானதாக மாற்றியிருந்தது. 2015 இல் ரணில் பிரதமராக இருந்தபோது அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் பௌத்த தொல்லியல் ஆராட்சியாளர்களுக்கு வடக்குக் கிழக்கு பௌத்த அகழ்வாராட்சிகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டிருந்தன.. சிங்கள நாளிதழ்கள் இந்தச் செய்திக்கு அன்று முக்கியத்தும் கொடுத்திருந்தன. இந்த நிலையில் கடந்த வாரம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பில் பங்குபற்றிய தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளருடன் ரணில் முரண்பட்டார் என்ற செய்தியும் அந்தச் செய்திக்குரிய மிகைப்படுத்தலும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளைப் பெறும் நோக்கம் கொண்டவை என்பது பட்டவர்த்தனமாகிறது. விவிலிய மற்றும் யூதத் தொன்மங்களின் அடிப்படையிலான தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளின் மூலம், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான மற்றும் சுதந்திரமான அரபு பாலஸ்தீனம் சியோனிச ஆக்கிரமிப்பால் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டதாகப் பேராசிரியர் அமீர் அலி சென்ற வெள்ளிக்கிழமை கொழும்புரெலிகிராப் (colombotelegraph) ஆங்கில செய்தித் தளத்தில் எழுதிய கட்டுரையில் விபரிக்கிறார். தமிழர் பிரதேச பௌத்த ஆக்கிரமிப்புக்குரிய வழிமுறைகள் பற்றிக் கொழும்பில் உள்ள இஸ்ரேல் தூதரகம் இலங்கைக்கு வகுப்பெடுத்து வருகிறதா எனவும் அந்தக் கட்டுரையில் பேராசிரியர் கேள்வி எழுப்பியுள்ளார். பாலஸ்தீனிய நிலங்கள் சியோனிச இஸ்ரேலால் தொடர்ந்து விழுங்கப்பட்டு வருகின்றன, அதுவும் ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலில் அமெரிக்கா போன்ற எந்த ஒரு மேற்கு நாடுகளோ அல்லது ஐரோப்பிய நாடுகளோ இஸ்ரேல் அரசிடம் எத்தகைய கண்டனங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. இதேபோன்ற ஒரு சூழல்தான் வடக்குக் கிழக்கிலும் சிங்கள பௌத்த மயமாக்கலை அமெரிக்க – இந்திய அரசுகள் கண்டிக்காமல் இலங்கை கேட்கின்ற அனைத்துப் பொருளாதார உதவிகளையும் செய்கின்றன. குறிப்பாக சர்வதேச நாணய நிதியம் மீள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வெறும் ஒற்றை வார்த்தையில் மாத்திரம் அழுத்தம் கொடுத்து விட்டு, நிதி உதவிகளை வழங்கி வருகின்றது. தமிழ் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல், மேலதிக இராணுவ முகாம்கள் ஆகியவற்றுக்கான செலவுகள் எங்கிருந்து எந்த அடிப்படையில் பெறப்படுகின்ற என்ற கேள்விகள் எதனையும் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்தாக இல்லை. இந்த நிதியுதவிகள் இலங்கை தனித்த ”ஒற்றையாட்சி அரசு” என்ற கட்டமைப்பையும் உறுதிப்படுத்துகிறது. இதை மையமாக் கொண்டே சரத்வீரகேசர, விதுர விக்கிரமநாயக்க போன்றோர் இலங்கை பௌத்த நாடு என்று துணிவுடன் சித்தரிக்கின்றனர். இந்தியாகூட இலங்கையிடம் எதுவுமே கேட்காது என்ற தொனியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயரட்ன கொழும்பின் புநகர் பகுதியான பியகம் பிரதேசததில் சென்ற வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசியிருக்கிறார். இந்த நிலையில் எதிர்வரும் ஜூலை 20 – 30 ஆம் திகதிகளுக்கிடையில் ரணில் இந்தியா செல்வார் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ரணில் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது அதிகாரபூர்வப் பயணம் இதுவாகும். பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்தியத் தேசிய பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரையும் மற்றும் இந்திய முதலீட்டாளர்களையும் ரணில் சந்திக்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. அதேநேரம் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள இயற்கைத் துறைமுகங்கள் மற்றும் அபிவிருத்திக்கும் தமது புவிசார் அரசியல் – பொருளாதார நோக்கிலும் பயன்படுத்தவுள்ள புதிய திட்டங்கள் பற்றியும் இந்திய மத்திய அரசு இலங்கையிடம் இருந்து வாக்குறுதிபெற்றிருக்கிறது. இப் பின்னணியிலேயே ரணில் புதுடில்லிக்குச் செல்கிறாரென கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா இந்தியாவைத் தன்னுடன் இணைத்துக்கொள்ள எடுத்துள்ள அத்தனை முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், பாகிஸ்தானுடன் தனது உறவைப் பலப்படுத்தி வரும் அமெரிக்கா, இலங்கை விவகாரத்தில் குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குரிய நிரந்த அரசியல் தீர்வு பற்றிய விடயத்தில் இந்தியாவைக் கடந்து வரக்கூடிய வாய்ப்புகள் இல்லை. இது குறித்து இப் பத்தியில் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீனாவுக்கு இலங்கையில் கூடுதல் முக்கியத்தும் கொடுக்கப்பட்டு வரும் திட்டங்களை, இந்தியாவைப் பயன்படுத்திச் சிங்களத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை அமெரிக்காவுக்கு உண்டு. ஆனால் சர்வதேச போர்க் குற்ற விசாரணை அல்லது இன அழிப்பு விசாரணை அவசியம் என்ற தமிழ்தரப்பின் கோரிக்கைகளை அமெரிக்கா பரிசீலிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லாமல் இல்லை. இருந்தாலும் அதற்குரிய ஏற்பாடுகள், உரிய ஆதாரங்களோடு தமிழ்த்தேசியக் கட்சிகள் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. அதுவும் குறிப்பிட்ட சில தமிழ்த்தேசியக் கட்சிகள் இலங்கை அரசாங்கத்துடனும் இந்திய மத்திய அரசுடனும் சேர்ந்து பயணிக்க அல்லது இந்தியா சொல்வதைக் கேட்கும் நிலையில்தான் இயங்குகின்றன. இந்த நிலையில் புவிசார் அரசியல் – பொருளாதாரப் போட்டிச் சூழல் ஈழத்தமிழர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கினாலும், ஒருமித்த குரலில் முன்கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு அரசியல் – பொருளாதாரப் பொறிமுறைகள் வகுக்கப்படவில்லை. ஆங்காங்கே சிறு குறிப்புகள் அல்லது ஆவணங்கள் இருந்தாலும் அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒருமித்த குரலில் அதனை ஏற்கும் மனப் பக்குவத்துடன் இருப்பதாகவும் கூற முடியாது. தமிழ்த்தரப்பின் இப் பலவீனங்களை அறிந்துகொண்ட நிலையில்தான் இந்தியா, ரணிலுடன் குறிப்பாகச் சிங்கள அரசியல் தலைவர்களுடன் முரண்பாடுகளிலும் உடன்படக்கூடிய புவிசார் அரசியல் பொருளாதார நலன்களில் கவனம் செலுத்துகிறது. இதற்கும் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலில், அமெரிக்கா போன்ற வல்லரசுகள் தெரிந்தும் தெரியாத நிலையில் இருக்கும் சூழலில், பாலஸ்தீன நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்து வருகின்றது. ஆனாலும் சர்வதேசத்தை நோக்கிய தமது அரசியல் விடுதலைக்குரிய வழிவரைபடத்துடன் நிதானமாகவும் ஒருமித்த குரலோடும் பாலஸ்தீன கமாஸ் இயக்கம் செயற்படுகின்றது. இதனால் விரும்பியோ விரும்பாமலே காலம் தாழ்த்தியேனும் பாலஸ்தீனயர்களின் கோரிக்கை சர்வதேச அரங்கில் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் விஞ்சிக் காணப்படுகின்றன. இவ்வாறான சூழல் அல்லது பின்னணி ஒன்றை தமிழ்த்தரப்பினர் எந்த வகையில் உருவாக்கவுள்ளனர்? அதனைக் கையாளக்கூடிய தகுதி யாரிடம் உண்டு? சிங்கள அரசியல் தலைவர்கள் போன்று சர்வதேச அரசியல் விவகாரங்களை குறிப்பாக இந்திய அரசியல் நகர்வுகளை அவதானித்துச் செயற்பட்டு வரும் தமிழ்த் தேசியக் கட்சி எது? தமிழ்த்தேசியக் கொள்கை மக்களிடம் இறுக்கமான நிலையில் உள்ளது. ஆகவே பாலஸ்தீனம் போன்று மக்களிடம் இருந்து வழி முறைகளையும் செயற்பாட்டுத் திட்டங்களையும் பெற முடியும். அதற்குரிய விழிப்புணர்களையும் வழங்க முடியும். ஆனால் தேர்தல் அரசியல் முறைமைக்குள் சிக்குண்டதால், இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் தமது கட்சி ஆசனங்களை அதிகரிப்பதிலும் வாக்குகளைப் பெறும் நோக்கில வியூகங்கள் வகுப்பதிலுமே காலம் செல்கிறது. கட்சி வளர்ச்சிக்குத் தேவையான வியூகங்களுக்குள் மக்களைக் கவரும் நோக்கில், இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு எதிரான பரபரப்புப் போராட்டங்களுக்குரிய அரசியல் வேலைத் திட்டங்களையே வடக்குக் கிழக்கில் காண முடிகிறது. நிவாரணம் வழங்கும் அரசியலுக்கும் குறைவில்லை. இதற்குத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் விதிவிலக்கல்ல. http://www.samakalam.com/பணிப்பாளரின்-பதவி-விலகலு/
  21. தமிழர்களின் அரசியல் உரிமை நீக்கமும் சர்வதேச முதலீட்டாளர்களை அழைக்கும் உத்தியும் -பிராந்தியப் பாதுகாப்பை மையப்படுத்தி அமெரிக்க – இந்திய மற்றும் அவுஸ்தி ரேலிய அரசுகளுக்கு ரணிலின் அணுகுமுறை கோபத்தை ஏற்படுத்தினாலும் அதனை வர்த்தகச் செயற்பாடுகள் அல்லது கடன் திட்டங்கள், நிதி நன்கொடைகள் மூலம் இலங்கையை தமக்குரிய வாறு மாற்றிவிடும் வாய்ப்புகள் உண்டு- அ.நிக்ஸன்- சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவிகள் பெற்றுள்ள நிலையிலும், மேலும் கடனுதவிகளை எதிர்பார்க்கும் பின்னணியிலும் இலங்கை தமது வர்த்தகச் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் திட்டங்களை வகுத்து வருகின்றது. ஜெனீவா மணித உரிமைச் சபையில் இலங்கை குறித்த தீர்மானங்களுக்கு உரிய பொறுப்புக் கூறப்படவில்லை. ஆனால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவதற்குரிய ஏற்பாடுகளை மாத்திரம் ஜனாதிபதி ரணில் துரிதமாக மேற்கொண்டு வருகிறார். ரஷ்ய – உக்ரைன் போரினால் ஏற்பட்டுள்ள சர்வதேசச் சிக்கல்கள் அதனால் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் போன்றவற்றைச் சாதகமாகப் பயன்படுத்திச் சிறிய நாடான இலங்கை, குறிப்பாக ரணில் கையாளும் உத்தி, ஈழத்தமிழர்களின் எழுபது வருட அரசியல் விடுதலை விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வற்ற ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் நோக்கத் தவறுகின்றன. ஜப்பானுக்குச் சென்றுள்ள ரணில், 2009 இற்குப் பின்னரான சூழலில் இலங்கையில் நல்லிணக்கம் உருவாகியுள்ளது என்ற தொனியை வெளிப்படுத்தியிருக்கிறார். இலங்கையில் சர்வதேச நாடுகள் முதலீடுகள் செய்ய வேண்டிய அவசியங்கள் குறித்தும், அபிவிருத்திச் செயற்பாடுகளின் மூலம் நல்லிணக்கத்தை அடைய முடியும் என்ற தொனியும் ஜப்பானில் வெளிப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை விவகாரம் எடுக்கப்பட்டுக் கடுமையான அறிக்கை வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், ரணில் சர்வதேச நாடுகளின் முதலீடுகளை இலங்கையில் உள்ளீர்க்கும் முயற்சியில் முனைப்புக் காட்டுவதன் பின்னணி என்பது, ஈழத் தமிழர் விவகா ரத்தை முற்று முழுதாகச் சர்வதேச அரங்கில் இருந்து நீக்கம் செய்யும் நோக்கம் என்பது பகிரங்கமாகியுள்ளது. இரண்டு தசம் ஒன்பது பில்லியன் நிதியை வழங்கியுள்ள ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியமும் அடுத்த உதவிகளுக்கு முன்னர் நல்லிணக்கத்தின் அவசியம் பற்றி எடுத்துக் கூறியுள்ளது. குறிப்பாக இனப் பிரச் சினைக்கான அரசியல் தீர்வையே ஐ.எம்.எப் நல்லிணக்கம் என்று அர்த்தப்படுத்துகிறது. நிதி வழங்குவதற்கான முழுமையான ஒப்பந்தத்தில் ஐ.எம்.எப் கைச்சாத்திடுவதற்கு முன்னர் இலங்கை அரச ஊழியர் மட்டத்தில் நடத்திய பேச்சுக்களில் இலங்கை அரசாங்கம் வழங்கிய பல உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்று ஆசியாவுக்கான மூலோபாயங்களை வழங்கும்; வெரிடே ரிசர்ச் ( (Verite Research) என்ற சுயாதீன சிந்தனைக்குழு சென்ற புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் ரணில் மீது குற்றம் சுமத்தியுள்ளது. சென்ற ஏப்ரல் 2023 இன் இறுதியில், இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் கண்காணிக்கக்கூடிய கடப்பாடுகளில் இருபத்து ஐந்து வீதத்தை மாத்திரமே இலங்கை நிறைவேற்றியுள்ளது. ஆனால், இரண்டு முக்கியமான கடமைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதனால் இலங்கையின் எதிர்காலப் பொருளாதாரச் செயற்பாட்டில் பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதியில், மதிப்பீட்டிற்குப் போதுமான தகவல்கள் இலங்கையிடம் இருந்து கிடைக்காததால், அடையாளம் காணப்பட்ட பத்துவீத உறுதிப்பாடுகளின் முன்னேற்ற நிலையைக் கண்டறிய முடியாதுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. 2023 ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் நிறை வேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இரண்டு உறுதிமொழிகளை இலங்கை தவறிவிட்டுள்ளது. இவற்றில் முதலாவது வரி அதிகரிப்புத் தொடர்பானது. வரிகளை அதிகரிப்பதற்கான திருத்தம் ஏப்ரல் நான்காம் திகதி பகிரங்கப்படுத்தப்பட்டது. இருப்பி னும், இந்தத் திருத்தம் இன்னும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை, இது செயல்முறை தாமதமாக இருப்பதைக் குறிக்கிறது. இரண்டாவது, மத்திய வங்கி சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் பெறுவது தொடர்பானது. வரித் திருத்த மசோதாவைப் போலவே, இந்த மசோதாவும் மார்ச் ஏழாம் திகதியன்று பகிரங்கப்படுத்தப்பட்டது, ஆனால் இன்னும் நாடாளுமன்றத்தில் விவாதிக் ப்பட்டு அங்கீகரிக்கப்படவில்லை. இப் பின்னணியிலேதான் சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ள அடுத்த கட்ட நிதி பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன. இரண்டாம் கட்டத்துக்குரிய பேச்சுக்கள் தற்போது அதிகாரிகள் மட்டத்தில் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. ஏனெனில் ஏற்கெனவே வழங்கப்பட்ட உறுதி மொழிகளை நிறைவேற்ற மேலும் வெளிப்படைத் தன்மைகள் இருக்க வேண்டுமென சர்வதேச நாணய நிதி யம் வலியுறுத்தியுள்ளது. இப் பின்புலத்தில் ஜப்பானுக் குச் சென்ற ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் முதலீடு செய்துள்ள இந்திய முதலீட்டாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். இலங்கையில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலமே வருமானத்தைப் பெற முடியுமெனச் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பரிந்துரைகளின் படி வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைப்பதில் ரணிலின் கவனம் திரும்பியுள்ளது. ஆனால் இலங்கை யின் இந்த அணுகுமுறை இந்தியாவுக்குத் திருப்தியளித் திருப்பதாகக் கூறமுடியாது. ஏனெனில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவுஸ் திரேலிய பிரதமர் அந்தோனி அல்போனீஸ் (Anthony Albanese) ஆகியோர் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலும் வர்த்தகச் செயற்பாடுகளை விரிவாக்கம் செய்வது பற்றியும் பேசியுள்ளதாகத் தகவல்கள் கசிந் துள்ளன. இலங்கையில் சீனாவின்; செல்வாக்கு அதிக ரித்துள்ள பின்னணியில் இப்பேச்சு இடம்பெற்றி ருக்கிறது. கனிமங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றில் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் கடந்த புதன்கிழமை கைச் சாத்திட்டுள்ளன. இதன் பின்னரே இது தலைவ களும் தெற்காசிய விவகாரங்கள் குறித்துப் பேச்சு நடத்தியிருக்கின்றனர். மோடியின் மூன்று நாள் அவுஸ்திரேலியா பயணத்தின் இறுதி நாளில் சந்தித்த இரு தலைவர்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு விரிவான பொருளாதார ஒத் துழைப்பு ஒப்பந்தம் (comprehensive economic cooperation agreement – CECA) ஒன்றை செய்ய தங்கள் உறுதிப் பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஒப்பந் தம் தொடர்பான அடுத்த இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் திட்டமி டப்பட்டுள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (Economic Cooperation and Trade Agreement -ECTA ) அல்லது கடந்த ஆண்டு முடிவடைந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை அவுஸ்திரேலிய இந்திய நாடு களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தியுள்ள தாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் கூறுகின்றன. பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள், குறிப்பாக உக்ரைன் பொருளாதார விளைவுகள், இந்தோ – பசுபிக், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவின் பசுபிக் தீவு நாடுகளுடன் கடல்சார் சவால்கள், உலகளாவிய தெற்கின் நன்மைக்கான சாத்தியமான ஒத்துழைப்பு மற்றும் ஐ.நா அமைப்புகளின் சீர்திருத்தங்கள் குறித்து இருவரும் விவாதித்திருக்கின்றனர். சீனாவில் இலங்கை அதிகளவில் செல்வாக்குச் செலுத்தும் விடயங்களும் பேசப்பட்டிருக்கின்றன. 2003 ஆம் ஆண்டில் இந்திய IOC எண்ணெய் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கும் வரை, இலங்கையில் சி லறை எரிபொருள் சந்தையில் CPC எனப்படும் இலங்கை பெற்றோலிய நிறுவனம் மட்டுமே இருந்தது. ஆனால் எதிர்வரும் யூலை மாதத்தில் இருந்து சீன சினோபெக் (Sinope) என்ற எண்ணெய் நிறுவனம் ஒன்று இலங்கை யில் பெற்றோல் விற்பனையில் ஈடுபடவுள்ளது. அதற்குரிய ஒப்பந்தம் ஒன்றை இலங்கை சீனா நிறுவனம் ஒன்றுடன் செய்துள்ளது. அவுஸ்திரேலியா, அமெரிக்காவின் ஆர்.எம் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் சில்லறை எரிபொருள் விற்பனை செய்வதற்குரிய உரிமங்களை வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியது. இருப்பினும் இப்போது வரை சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விவகாரங்களும் அவுஸ்திரேலியப் பிரதமர் அல்போனீஸ் மோடியுடன் உரையாடியதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அடுத்த இருபது ஆண்டுகள் எரிபொருள் விற்பனை செய்ய சீன நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறித்து அமெரிக்க, இந்திய மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கும் நிலையில் அதனைச் சமாளிக் கும் நோக்கில் ரணில் கையாளும் உத்தி இந்தியாவுக்குத் திருப்தியளிக்குமா? இல்லையா? என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால், ரணிலின் காய் நகர்த்தல்களையும் மீறி இலங்கையில் கூடுதல் முதலீடுகளை செய்து வர்த்தகச் செயற்பாடுகளை அதிகரிப்பதே இந்தியாவின் பிரதான மூலோபாயமாகவுள்ளது. பிராந்தியப் பாதுகாப்பை மையப்படுத்தி அமெரிக்க – இந்திய மற்றும் அவுஸ்தி ரேலிய அரசுகளுக்கு ரணிலின் இந்த அணுகுமுறை கோபத்தை ஏற்படுத்தினாலும் அதனை வேறு வர்த்தகச் செயற்பாடுகள் அல்லது கடன் திட்டங்கள், நிதி நன்கொடைகள் மூலம் இலங்கையை தமக்குரிய வாறு மாற்றிவிடும் வாய்ப்புகள் உண்டு. வீழ்ந்து கிடக்கும் பொருளாதார மீட்சிக்காகவும் ஈழத்தமிழர் விவகாரத்தில் சர்வதேசத்தின் அழுத்தங்களில் இருந்து தப்பும் நோக்கிலும் இலங்கையும் தேவையான அளவு வல்லரசு நாடுகளின் புவிசார் அரசியல் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப கீழ்ப்படியும் சூழலும் உண்டு. இது ரணிலுக்கு மாத்திரமல்ல புதிதாக பதவியேற்கவுள்ள எந்த ஒரு சிங்கள ஆட்சியாளருக்கும் பொருந்தும். ஆனால், ஈழத்தமிழர் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் சூடு தணியாமல் வைத்திருப்பதற்கு தமிழ்த்தரப்புக் கையாளும் நுட்பம் என்ன? வடக்குக் கிழக்கில் பௌத்த மயமாக்கல் பற்றி அமெரிக்க – இந்திய அரசுகள் இதுவரையும் பகிரங்கமாக வாய் திறக்காமல் இருப்பதன் பின்னணி குறித்தும் தமிழ்த்தரப்பு ஆழமாகச் சிந்திக்கத் தவறியுள்ளது. http://www.samakalam.com/தமிழர்களின்-அரசியல்-உரிம/
  22. இந்திய இலங்கை வர்த்தக உறவைச் சீர்ப்படுத்தும் முயற்சி -வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்கும்போது, தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரம் இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற ஏற்பாடுகளுடன், ரணில் தனது உத்தியை வகுக்கிறார். இந்த உத்தி ஏனைய சிங்கள ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும். இந்தியக் கொள்கை வாகுப்பாளர்களுக்கும் ஏற்புடையது- அ.நிக்ஸன்- பொருளாதார நெருக்கடிச் சூழலில் சர்வதேச நாயணய நிதியம் வழங்கிய நிதி போதாது. அத்துடன் அடுத்த கட்ட நிதி தற்போதைக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதனை உணர்ந்துகொண்ட இலங்கை அரசாங்கம், இந்தியாவின் தயவுடன் இந்திய – இலங்கை வர்த்தக உறவுகளை மீளவும் புதுப்பிப்பது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கின்றது. வடக்குக் கிழக்கில் இந்தியத் திட்டங்களுக்கு முன்னுரிமை என்ற வியூகத்துடன் இந்தியாவுடனான வர்த்தக உறவை விரிவுபடுத்தும் ஏற்பாடுகள் வகுக்கப்படுகின்றன. ரணிலின் புதுடில்லிப் பயணம் இதற்குப் பதில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கேற்ப மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, முன்னாள் பிரதி ஆணையாளர் டபிள்யு.ஏ.விஜயரட்ண, உள்ளிட்ட பொருளியல் நிபுணர்களிடம் ஆலோசனைகள் பெறப்படுகின்றன. ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலில் ஜனாதிபதி ரணில் இந்தியாவைக் கடந்து அமெரிக்க -சீன அரசுகளுடன் நேரடியாகக் கையாள முற்படும் நகர்வுகளில் புதுடில்லிக்கு அதிருப்தி உண்டு. அத்துடன் கொழும்பு போட் சிற்றித் திடடத்தை மையமாகக் கொண்டு சீனாவுக்குரிய சில முக்கிய காரியம் ஒன்றை ரணில் கடந்த வாரம் செய்திருக்கிறார். இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் முதுகெலும்பான பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் இலங்கை வெளிப்படுத்தும் மறுதாக்கங்களும் இந்தியாவுக்கு ஒத்துவரக்கூடியதல்ல. இதன் பின்னணியிலேயே இந்தியாவும் இலங்கையுடன் சில உத்திகளைக் கையாள ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக இலங்கையின் எதிர்பார்ப்புகள் விருப்பங்கள் போன்றவற்றுக்கு ஏற்ப வர்த்தகச் செயற்பாடுகளில் மீண்டும் சில இலகுவான நிபந்தணைகளை இந்தியா விதிப்பதற்குரிய ஏது நிலைகள் தென்படுகின்றன. அதனையே தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த ரணில் முற்படுகிறார். 2015 இல் பதவியில் இருந்த மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் போது எட்கா (Economic and Technology Cooperative Agreement – ETCA) எனப்படும் முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடுவதை ரணில் தவிர்த்திருந்தார். மகிந்த ஜனாதிபதியாக இருந்தபோது சீபா (Comprehensive Economic Partnership Agreement – CEPA) கைச்சாத்திடப்படவில்லை. 2015 இல் மைத்திரி – ரணில் அரசாங்கமும் அதனைப் புறக்கணித்திருந்தது. இந்த இரு ஒப்பந்த விவகாரங்களில் இலங்கையிடம் தோல்வி கண்ட இந்தியா, 2020 இல் கோடாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் அது குறித்த பேச்சுக்களை மீளவும் முன்னெடுத்திருந்தது. ஆனால் உரிய பயன் கிடைக்கவில்லை. சந்திரிகா ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது 1998 டிசம்பர் மாதம் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை வர்த்தக ஒப்பந்தம் (India-Sri Lanka Free Trade Agreement -ISFTA) முக்கியமானதென்றும் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததாகவும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆணையாளர் டபிள்யு. ஏ விஜயவர்த்தன பிற்.எல்கே (www.ft.lk) என்ற ஆங்கில இணையத் தளத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது எழுதிய கட்டுரையில் விபரிக்கிறார். இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் உரிய முறையில் இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை மேற்கொண்டிருந்தால், தற்போதைய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்ற தொனியில் அந்தக் கட்டுரையில் அவர் இடித்துரைக்கிறார். இந்த ஒப்பந்தம் தற்போதும் செயற்படுகின்றது. ஆனாலும் ஒப்பந்ததிற்குரிய உறுதிமொழிகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் விஜயவர்த்தன தனது கட்டுரையில் பரிந்துரைத்திருந்தார். இந்திய – இலங்கை பிராந்திய மற்றும் பலதரப்பு மட்டங்களில் அபிவிருத்தி செய்து ஊக்குவித்தல், மொத்த உற்பத்தி, வருமானம், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல். வேலை வாய்ப்புகள் மூலம் இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்குத் தீவிரமாக பங்களிப்புச் செய்தல் ஆகியவை அந்த ஒப்பந்தத்தின் அடிப்படை. இதன் பிரகாரம் தற்போது ஜனாதிபதி ரணில் மீண்டும் இந்தியாவுடன் வர்த்தக செயற்பாடுகள் பற்றிய பேச்சை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவின் எட்கா மற்றும் சீபா உடன்படிக்கை போன்றவற்றை வேறு வடிங்களில் செயற்படுத்துவது குறித்தே ஆலோசிப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிச் சூழலிலும் ரசிய – உக்ரெகய்ன் போரினால் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளின் பின்னணியிலும் மீண்டும் இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை உருவாக்கி விரிவுபடுத்த ரணில் முற்பட்டிருக்கிறார். இந்திய ரூபாய்ப் பயன்பாடு சர்வதேச வர்த்கத்தில் முழுமையாகப் பயன்படுத்தக்கூடிய சாதகமான நிலை தென்படுவதாலும் இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த வேண்டிய கட்டயச் சூழல் ரணிலுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும் கூற முடியும். இப் பின்னணியில் இலங்கை மற்றும் இந்தியாவின் வர்த்தக வசதிகளின் நிலையை மதிப்பிடுவது, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் செய்யும் நடைமுறைகள், ஒழுங்குமுறைகள், தொடர்புடைய ஆவணங்களில் உள்ள இடையூறுகளை கண்டறிதல் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து தற்போது புதிய ஆலோசனைகள் தயாரிக்கப்படுகின்றன. அதேநேரம் இந்தியா தொடர்பான சிங்கள மக்களின் அச்ச உணர்வுகள் குறித்தும் இந்தியாவுடன் வர்த்தக உறவுகளைக் குறிப்பாக தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற விடயங்களில் இலங்கைத் தொழிற் சங்கச் சங்கங்கள், இலங்கை மருத்துவர் சங்கம் ஆகியவற்றின் எதிர்ப்புகளைச் சமாளிப்பது அல்லது புரிய வைப்பது போன்ற அணுகுமுறைகளையும் கையாள சில உத்திகள் வகுக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பது பிரச்சினையல்ல. ஏனெனில் இது பொருளாதார மீட்சிக்குரிய இராஜதந்திரகள் மட்டத்திலான நகர்வு அதேவேளை இந்தியா இப்போது வல்லரசு என்ற தோற்றத்தைக் காண்பித்து வருகிறது. அத்துடன் தமிழ் நாடும் பெரிய மாநிலமாகும். இதன் காரணமாக சிங்கள மக்களுக்கு இந்தியா பற்றிய அச்சம் ஒன்று உள்ளது. குறிப்பாக ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா 1983 இல் இருந்து மூக்கை நுழைக்கிறது, சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கடும் அழுத்தம் கொடுக்கிறது என்ற அதிருப்தியும் சந்தேகங்களும் சிங்கள மக்களிடமும் சிங்கள ஊடகங்களிடமும் உண்டு. இலங்கையில் இந்திய அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிராக சிங்கள மக்களும் பௌத்த குருமாரும் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சிங்கள மக்களின் இந்தியா தொடர்பான விருப்பமின்மையை அறிந்துகொள்ள சிறந்த உதாரணங்களாகும். ஆனால் இக் கடும் எதிர்ப்புகளினால் இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் பாதிக்கப்பட்டு இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முழுமையாக வெற்றியடையவில்லை என்று விஜயரட்ணா தனது கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் மேம்படாமைக்கு இலங்கை மருத்துவர் சங்கம் மற்றும் சில தொழிற்சங்க அமைப்புகள் இடதுசாரிச் சிங்கள அமைப்புகள் போன்றவற்றின் மீது விஜயவர்த்தனா குற்றம் சுமத்துகிறார். குறுகிய அரசியல் சிந்தனைகள் மற்றும் இந்தியா குறித்த தேவையற்ற அச்சங்களே சீபா மற்றும் எட்கா போன்ற சிறந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தி விளக்கமளிக்கிறார். இந்த நிலையில் மீண்டும் இந்தியாவுடன் குறித்த ஒப்பந்தங்களை வேறு வடிவங்களில் மாற்றியமைத்து வர்த்தக உறவை மேற்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் ரணில் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். இப் பின்புலத்தில் இலங்கையில் இந்திய முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துதல் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதுவர் மிலிந்த மொகொட தெரிவித்துள்ளார். இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட இந்திய வர்த்தக முதலீட்டாளர்களைச் சமீபத்தில் புதுடில்லியில் சந்தித்து இது குறித்துப் பேசியிருக்கிறார். பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் உணவு, எரிபொருள், மருந்து கொள்வனவு உள்ளிட்டவற்றுக்காக சுமார் நான்கு பில்லியன் டொலர் கடனுதவியை இந்தியா கடந்த ஆண்டு வழங்கியிருந்தது. ஆகவே இலங்கையின் தற்போதைய பொருளாதாரப் பலவீனத்தை இந்தியா மேலும் தமக்குச் சாதகமாக மேலும் பயன்படுத்தலாம். அதேநேரம் சிங்கள மக்கள் விரும்புவது போன்று ஈழத்தமிழர் விவகாரம் பற்றி அழுத்தம் கொடுக்காமல், இந்தியாவின் புவிசார் அரசியல் – பொருளாதார நோக்கில் மாத்திரம் புதுடில்லி செயற்படுமானால் சிலவேளை இந்தியா நோக்கிய பார்வையில் ரணில் போன்ற சிங்கள ஆட்சியாளர்களிடம் மாற்றங்களும் ஏற்படலாம். அத்துடன் அமெரிக்க – சீன அரசுகளுடன் சிறிய நாடு என்ற நோக்கில் நேரடியாகவும், அதேநேரம் இந்தியாவுக்கும் இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கும் ஆபத்தில்லாமல் இலங்கை தனது பொருளாதாரச் செயற்பாடுகளை முன்னெடுத்தால், புதுடில்லிக்கு அதில் பிரச்சினையும் இருக்காது. ஏனெனில் ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலில் சிறிய நாடுகளையும் அரவனைத்துச் செல்ல வேண்டும் அல்லது சிறிய நாடுகளின் விருப்பங்களுக்கு உடன்பட வேண்டும் என்ற அரசியல் – பொருளாதாரப் பின்னணிக்குள் தற்போது வல்லரசு நாடுகள் சிக்குண்டுள்ளன. ஆகவே இந்த நெருக்கடிச் சூழலை குறிப்பாக இந்தியாவின் சிக்கலை ரணில் நன்கு அவதானிக்கக் கூடியவர். அதற்கு ஏற்ப இந்தியாவுடன் அணுகினால் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குரிய தீர்வை எட்ட முடியும் என்று ரணில் நம்பக்கூடும். ரணில் அடுத்த தோ்தலில் வெற்றிபெற முடியாதுபோனாலும், வரவுள்ள சிங்கள ஆட்சியாளர்களும் ரணில் தற்போது இந்தியாவை நோக்கி வகுக்கும் வியூகத்தை தொடரக்கூடிய நிலை உண்டு. அதேபோன்று இந்தியாவில் மோடியின் ஆட்சி மாறி காங்கிரஸ் பதவியேற்றாலும் இந்த வியூகம் தொடரக்கூய சந்தர்ப்பங்கள் உண்டு. அதற்குரிய முறையிலேயே இந்திய – இலங்கை வர்த்தக ஏற்பாடுகள் இராஜதந்திரிகள் மட்டத்தில் வகுக்கப்படுகின்றன. எனவே 2000 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டிருந்த சர்வதேசப் புவிசார் அரசியல் – பொருளாதாரக் குழப்பங்களைப் பயன்படுத்திக் குறிப்பாக அமெரிக்க இந்திய அரசுகளின் ஒத்துழைப்புடன் 2009 இல் மகிந்த போரை இல்லாதொழித்தார். ரசிய – உக்ரெயன் போரினால் தற்போது ஏற்பட்டுள்ள சர்வதேசக் குழப்பங்களைப் பயன்படுத்தி இலங்கையின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்க, ரணில் 2023 இல் முற்பட்டுள்ளார். அவ்வாறு பொருளாதாரத்தை மீட்கும்போது, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரம் இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற ஏற்பாடுகளுடன், ரணில் தனது உத்தியை வகுக்கிறார். இந்த உத்தி ஏனைய சிங்கள ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும். இந்தியக் கொள்கை வாகுப்பாளர்களுக்கும் ஏற்புடையது. எனவே தமிழ்த்தேசியக் கட்சிகளின் 2009 இற்குப் பின்னரான பலவீனமான அரசியல் போக்குகள் இந்தியாவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவும் நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கின்றன. ஆகவே இந்தியாவுடன் தொப்புள்கொடி உறவு உண்டென அடிக்கடி மார்தட்டும் தமிழ்த்தேசியக் கட்சிகள், தமது கட்சி அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் ஒழுங்கு சீரான அரசியல் திட்டம் ஒன்றைக் கூட்டாக வகுக்க வேண்டும். அதற்காகப் பதின்மூன்றை நடைமுறைப்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமெனக் கேட்பது அரசியல் வேடிக்கை. இந்துத் தமிழீழத்தை இந்தியா பெற்றுத் தருமமென நம்புவதும் தற்கொலைக்கு ஒப்பானது. . http://www.samakalam.com/இந்திய-இலங்கை-வர்த்தக-உற/
  23. காணிக் கட்டளைச் சட்டத் திருத்தமும் தமிழ்க் கட்சிகளுடனான பேச்சும். -மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அதிகாரங்களை காணிச் சீர்திருத்த ஆணைக்குழு கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. இந்த வல்லமையை இழக்கக்கூடாது என்ற கருத்தின் அடிப்படையில் இலங்கைத் தேசிய காணி ஆணைக்குழுவை அமைக்கச் சிங்கள ஆட்சியாளர்கள் விரும்பில்லை என்பது கண்கூடு ஜே.ஆர் வகுத்த சூழ்ச்சி வகிபாகத்தின் நீட்சியாக இன்றுவரை கையாளப்படும் அரசியல் உத்தி- -அ.நிக்ஸன்- வடக்குக் கிழக்குத் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் உள்ள காணிகளைக் கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கை ஒற்றையாட்சி அரசின் சில திணைக்களங்கள் அபகரித்து வரும் சூழலில், காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை உத்தரவிட்டிருக்கிறார். அதுவும் தமிழ்த்தேசியக் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கு முதல் நாள் இந்த உத்தரவை ரணில் பிறப்பித்திருக்கிறார். தமிழர் பிரதேசங்களில் பௌத்த மயமாக்கல் நாளுக்கு நாள் வெவ்வேறு வடிவங்களில் அரசியல் யாப்புச் சட்டங்களுக்கு மாறாகவும், சட்டங்களுக்கு அமைவானது என்று காண்பிக்கப் போலியாகத் தயாரிக்கப்பட்ட காணி உறுதிகளுடனும் பௌத்த மயமாக்கல் வேகமடைந்துள்ளது. 1988 இல் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி – பொலிஸ் அதிகாரங்கள் குறிப்பாகக் காணி அதிகாரங்கள் அமுல்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில் காணித் திருத்தக் கட்டளைச் சட்டம் குறித்து ரணில் பரிந்துரைத்திருக்கிறார். 2015 இல் மைத்திரி – ரணில் அரசாங்கத்தின்போதும் காணித் திருத்தக் கட்டளைச் சட்டம் குறித்து அப்போது பிரதமராக இருந்த ரணில் துரித நடவடிக்கைகளை எடுதிருந்தார். 1983 இல் போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் குறிப்பாக 1948 இல் இருந்து அரச அதிகாரிகளின் ஏற்பாட்டில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் காணிகள் அபகரிக்கப்பட்டுச் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இடையில் நடைபெற்ற முப்பது வருட போரினால் குடியேற்றங்கள் தடைப்பட்டிருந்தன. அல்லது தாமதமடைந்திருந்தன என்று கூறலாம். போரை இல்லாதொழித்த மகிந்த ராஜபக்ச, 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இராணுவத்தைப் பயன்படுத்தியே காணிகளை அபகரித்தார். ஆனால் கொழும்மை மையமாகக் கொண்ட தொல்பொருள் திணைக்களம், வன இலாகத் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகிய அரச நிறுவனங்கள் மூலம் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் உத்தியை ரணில் 2015 இல் பிரதமராக இருந்தபோது அறிமுகப்படுத்தியிருந்தார். இலங்கை ஒற்றையாட்சிச் சட்டத்தின் கிழ் காணிகளை அபகரிக்கும் இத் திணைக்களங்களுக்குப் பொலிஸார் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். இராணுவமும் ஆதரவு வழங்கியிருந்தது. 2020 இல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்சவும் ரணில் கையாண்ட அதே உத்தியைத்தான் தொடர்ந்தார். எனினும் 2022 யூலை மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில், காணி அபகரிப்புகளை முழுமையாகச் சட்டரீதியாக்கும் ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ள ரணில், பணிகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றை நியமிக்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளார். காணி முகாமைத்துவம் குறித்து நிறுவனங்களின் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் மேற்கொள்வது மற்றும் புதிய சரத்துகளை திருத்துவது உள்ளீடு செய்வது குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் சென்ற புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது ரணில் வலியுறுத்தியிருக்கிறார். காணிப் பயன்பாடுகள் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு பொருத்தமற்றதாக காணப்படுவதாகவும் ரணில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குக் காணிகளை பெறுவதில் காணப்படுகின்ற சிக்கல்களை நீக்கிப் புதிய தேசிய காணிக் கொள்கை ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவே ரணில் அதிகமாகப் பிரஸ்தாபித்திருக்கிறார். காணி ஆணைக்குழுவின் ஊடாக மாகாண சபைகளின் காணிகள் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்திக்குமாறும், கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள காணி உரிமையாளர்களின் விபரங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள காணிகள், பயன்படுத்தப்படாமல் இருக்கும் காணிகள் தொடர்பாகக் கண்டறிந்து பிரதேசச் செயலாளர் மட்டத்தில் அறிக்கையொன்றை தயாரிக்குமாறும் ரணில் அதிகாரிகளுக்கு உத்திரவுமிட்டுள்ளார். ஆனால் இலங்கைத்தேசிய காணி ஆணைக்குழு கடந்த முப்பத்தைந்து வருடங்களாக உருவாக்கப்படவில்லை என்பதுதான் இங்கே வேடிக்கை. இந்த நிலையிலேயே புதிய தேசிய காணிக் கொள்கை ஒன்றை வகுக்குமாறு ரணில் உத்திரவிட்டிருக்கிறார். காணிச் சட்டத் திருத்தம் பற்றித் தேசிய கொள்கை ஒன்றை வகுக்க வேண்டுமானால், வடக்குக் கிழக்கு மாகாண பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை எதுவும் இல்லாமல் ரணிலின் உத்தரவு அமைந்துள்ளது. அல்லது பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணங்களை உள்ளடக்கிய தேசிய காணி ஆணைக்குழுவை உருவாக்க வேண்டும். ஆனால் அவ்வாறான திட்டங்கள் எதுவுமேயில்லாமல் வெறுமனே தேசிய காணிக் கொள்கை ஒன்றை வகுக்குமாறு முற்றிலும் சிங்கள அதிகாரிகளைக் கொண்ட குழுவிடம் உத்திரவிட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் ரணில் பேச்சு நடத்தியிருக்கிறார். இனப்பிரச்சினை தீர்வுக்கான ஏற்பாடுகள் பற்றியே பேச்சு இடம்பெற்றதாகத் தமிழரசுக் கட்சி கூறினாலும், காணித் திருத்தச் சட்ட ஏற்பாடுகள் இந்தப் பேச்சுத் தொடா்பான சந்தேகங்களை எழுப்பியுள்ளன. மாகாணங்களுக்குரிய காணி அதிகாரங்களை மையப்படுத்தி இலங்கைத் தேசிய காணி ஆணைக்குழு ஒன்றை பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கலாம். ஆனால் இதுவரையும் மாகாணங்களை உள்ளடக்கிய இலங்கைத் தேசிய காணி ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக் குழுக்கள் உருவாக்கப்படாமல் கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள அதிகாரிகள் அங்கம் வகிக்கும் அரச திணைக்களங்களிடம் பொறுப்புகள் பகிரப்படுள்ளன. காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தைப் புதுப்பித்து அதன் செயற்பாடுகளை மறுசீரமைப்பதற்குத் தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிடம் (கோப் குழு) 2018 இல் ரணில் பிரதமராக இருந்தபோது உத்திரவிட்டிருந்தார். இந்த முயற்சியை 2020 இல் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்தார். 2020ஆம் ஆண்டுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழு குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் சமகாலச் செயலாற்றுகை குறித்து ஆராய கோப் குழு தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் அப்போது கூட்டம் ஒன்றும் நடைபெற்றிருந்தது. பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதுடன், இந்தப் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவது பற்றி ஆராய்ந்து பார்ப்பதற்குக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவை அடுத்தடுத்துக் கூட்ட வேண்டிய அவசியம் குறித்தும் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆணைக்குழு காணிகளைக் கையகப்படுத்தும்போது காணப்படும் பிரச்சினைகள் கோப் குழுவினால் கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்கமைய கடந்த இருபது வருடங்களில் காணி கையகப்படுத்தல் தொடர்பான விரிவான தகவல்கள் அடங்கிய அறிக்கையும் 2018 இல் சமர்ப்பிக்கப்பட்டிந்தது. அது மாத்திரமல்ல காணிகளை அடையாளம் காணுதல் மற்றும் பெறுமதியை மதிப்பீடு செய்தல் என்பவற்றுக்காக விசேட செயலணியொன்று அமைக்கப்பட வேண்டுமெனக் கோப் குழு அப்போது பரிந்துரை வழங்கியிருந்தது. குறிப்பாக வடக்குக் கிழக்கில் பௌத்த குருமார் விகாரைகளை அமைக்கும்போது ஏற்படுகின்ற தடைகள் குறித்தும், பௌத்த குருமார் அடையாளப்படுத்தியுள்ள காணிகள் பற்றியும் உரையாடப்பட்டிருந்தன. ஆகவே 2018 இல் கோப் குழு முன்வைத்த பரிந்துரைகளுக்கு ஏற்பக் கடந்த இரண்டு வருடங்களாக இலங்கைத்தீவின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள காணிகள் பற்றிய விபரங்கள் பெறப்பட்டாலும் வடக்குக் கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகள் பற்றிய விபரங்களே அதிகமாகப் பெறப்பட்டுத் தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இப் பின்னணியிலேயே காணிச் சட்டங்களைத் திருத்துவது தொடர்பாக ரணில் அதிகாரிகளுடன் உரையாடியிருக்கிறார் எனத் தகவல்கள் கசிந்துள்ளன. பத்துலட்சம் காணித் துண்டுகளைப் பகிர்ந்தளிக்கும் வேலைத் திட்டம் தொடர்பாகவும் காணி பகிர்ந்தளிப்பு தொடர்பான தேசிய கொள்கைக்குள் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை உள்ளடக்கித் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள கோப் குழு அப்போது பரிந்துரைத்தது. குறிப்பாக 1972 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தை தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையில் புதுப்பிக்க வேண்டும் என 2018 கோப் குழு வழங்கிய பரிந்துரைகளின் பிரகாரமே ரணில் சென்ற புதன்கிழமை காணிச் சட்டத் திருத்தங்கள் குறித்து விளக்கமளித்திருக்கிறார். அதுவும் வடக்குக் கிழக்கில் தமிழர்களின் பாரம்பரிய காணிகள் அபகரிக்கப்பட்டுச் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் புத்தர் சிலை வைத்தல், பௌத்த விகாரைகள் கட்டுதல் போன்ற செயற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், காணிச் சட்டங்கள் பற்றிய திருத்தங்கள் தொடர்பாக ரணில் ஆராய்ந்திருக்கிறார். பௌத்த மயமாக்கலைத் தடுப்பதற்குரிய எந்த ஒரு ஏற்பாடுகளும் இன்றி காணிச் சட்டங்கள் பற்றிய கூட்டத்தை ரணில் நடத்தியமை குறித்துத் தமிழ்த்தரப்பு எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. வடக்குக் கிழக்கில் உள்ள காணிகள் பற்றியும் அபிவிருத்தி என்ற போர்வையில் கொழும்மை மையமாகக் கொண்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களிடம் கைளிப்பது பற்றியும் இக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இவ்வாறான சூழலிலேதான், இரண்டு நாட்கள் தொடர்ச்சியாகத் தமிழ்த்தேசியக் கட்சிகளுடன் ரணில் பேச்சுவார்தையில் ஈடுபட்டிருந்தார். ஆனால் காணிகள் பற்றியோ குறிப்பாக பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள இலங்கைத் தேசிய காணி ஆணைக்குழுவை நியமிப்பது குறித்தோ பேசப்பட்டதாகத் தெரியவில்லை. புதின்மூன்றாவது திருத்தச் சட்டம் ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்பது பட்டவர்த்தனமாக வெளிப்பட்ட தகவல். ஆனாலும் ஒற்றையாட்சிச் சட்டத்தில் உள்ள மாகாணங்களுக்குரிய காணி அதிகாரங்கள்கூட கொழும்பில் உள்ள சிங்கள அதிகாரிகளை மையப்படுத்திய தொல்பொருள் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வன இலகாத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆகவே தமிழர் நிலங்களில் காணி அபகரிப்புகள் சட்டரீதியாக அதாவது தொல்பொருள் திணைக்களத்துக்குரிய பௌத்த மரபுரிமை சார்ந்தது என்ற அங்கீகாரத்தை ரணில் விக்கிரமசிங்க கன கச்சிதமாக உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தமிழ்த்தேசியக் கட்சிகளுடன் பேச்சு நடத்தியமைதான் இங்கே வேடிக்கை. தமிழர் பிரதேசங்களில் நிலங்களை அபகரித்துப் பௌத்த தேசிய மரபுரிமைகளைச் செயற்கையாக உருவாக்கிச் சிங்களப் பிரதிநிதித்துவத்தையும் சமப்படுத்தினால் வடக்குக் கிழக்கில் பதின்மூன்றை நடைமுறைப்படுத்தச் சிங்கள ஆட்சியாளர்களுக்குப் பிரச்சினை இருக்காது. அது இந்தியாவுக்கும் ஏற்புடையதாக இருக்கும். குறிப்பாகப் பதின்மூன்று என்ற தனது முதுகெலும்பு தொடர்பாக இந்தியா கடும் அழுத்தங்களைக் கொடுத்தாலும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு அதனைச் செயற்படுத்தப் பிரச்சினை இருக்காது. ஏனைய மாகாண சபைகள் போன்று, தமிழ். முஸ்லிம் மற்றும் சிங்களம் கலந்த மாகாண சபையாக வடக்குக் கிழக்கு மாகாண சபைகளும் இயங்கும். ”தமிழ்த் தேசியம்” – ”தமிழர் தாயகம்” என்ற கோட்பாடு இல்லாமல் போகும். எனவே ஜே.ஆர் அன்று நினைத்த காரியத்தை, ரணில் இன்று ஒழுங்கு முறையாகச் செய்து முடிக்கிறார். 2009 இல் மகிந்த போரை இல்லாதொழித்தார். 2023 இல் ரணில் அரசியல் ரீதியாகத் தமிழ்த்தேசியத்தை நீக்கம் செய்கிறார். அதாவது ”தமிழ்த்தேசியம்” – ”தமிழர் தாயகம்” என்பதன் முதுகெலும்பான காணி – நிலத்தைத் துண்டாக்கி இலங்கை ஒற்றையாட்சி முறைமைக்குள் ஒருங்கிணைக்க ரணில் சிங்கள அதிகாரிகளுடன் புதன்கிழமை பேச்சு நடத்தியிருக்கிறார் என்பதே உண்மை. மறுபுறத்தில் ”தமிழ்த்தேசியம்” – ”தமிழர் தாயகம்” என்பதை ஒற்றையாட்சிக்குள் விரைவாகக் கரைக்க வியாழக் கிழமையும் வெள்ளிக் கிழமையும் தமிழ்த்தேசியக் கட்சிகளுடன் ரணில் உரையாடியிருக்கிறார். ஆகவே பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் காணி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும், காணிச் சீர்த்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரங்கள் 1972 இல் இருந்து கொழும்மை மையப்படுத்தி இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வரும் காரண – காரியத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது சிங்களச் சூழ்ச்சிக் கருத்தியல் தற்போது பகிரங்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அதிகாரங்களை காணிச் சீர்திருத்த ஆணைக்குழு கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. இந்த வல்லமையை இழக்கக்கூடாது என்ற கருத்தின் அடிப்படையில் இலங்கைத் தேசிய காணி ஆணைக்குழுவை அமைக்கச் சிங்கள ஆட்சியாளர்கள் விரும்பில்லை என்பதும் கண்கூடு. ஆகவே 2009 மே மாதத்தின் பின்னரான சூழலில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சியே நிரந்த அரசியல் தீர்வு என்ற ஆழமான கருத்தை ஒரு வார்த்தையில் நிறுவாமல் பல கட்சிகளாகவும், பல குரல்களாகவும் தமிழ்த்தரப்பு சிதறுண்டு கிடப்பதை, ரணில் தனது அரசியலுக்குச் சாதமாகவல்ல “இலங்கைத் தேசியம்” என்ற கட்டமைப்பை மேலும் உறுதிப்படுத்த மிக நுட்பமாகப் பயன்படுத்துகிறார். http://www.samakalam.com/காணிக்-கட்டளைச்-சட்டத்-த/
  24. சிங்கள இடதுசாரிகளும் பௌத்த மயமாக்கலும் -தென் அமெரிக்க நாடுகளில் கடந்த பத்து ஆண்டுகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அதனை மீட்சி பெறச் செய்யும் முயற்சியில் இடதுசாரிகள் கவனம் செலுத்த வேண்டிய தேவையிருந்தது. இதனாலேயே அங்கு இடதுசாரிகள் தொடர் வெற்றிகளைக் கண்டு வருகின்றனர். ஆனால் இலங்கை இடதுசாரிகள் வெறுமனே சோசலிச சமத்துவம் என்ற கோசத்தை மாத்திரம் முன்வைக்கின்றன. -அ.நிக்ஸன்- உலக அரசியலில் வலதுசாரிக் கட்சிகளின் செல்வாக்குகள் சரிந்தவரும் நிலையில், இடதுசாரிகளின் செல்வாக்குகளும் ஆதரவும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாகத் தென் அமெரிக்க நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களில் இடதுசாரிகள் அடுத்தடுத்து ஆட்சியை அமைத்து வருகின்றன. ஆனால் இடதுசாரி என்பதன் உண்மையான அடிப்படை மற்றும் இடதுசாரி என்பதற்குரிய சரியான உள் நோக்கங்களைத் தற்கால இடதுசாரிகள் குறிப்பாக தென் அமெரிக்க நாடுகளில் ஆட்சி அமைத்து வரும் இடதுசாரிகள் கொணட்டிருப்பதாகக் கூற முடியாது. இந்த இடதுசாரிகள் தத்தமது நாடுகளின் தேசியச் சிந்தனைகளை அடிப்படையாகவும், வலதுசாரிகள் போன்று வர்த்தக நலன்களை மையமாகவும் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் தென் அமெரிக்காவில் இடதுசாரிகளின் எழுச்சியை சாதாரண அரசியலாகக் கணிக்க முடியாது. டொனால்ட் ட்ரம் அமெரிக்கத் தேசியவாதத்தை அடிப்படையாக் கொண்டு பதவிக்கு வந்தவர் என்றும் அதனால் இடதுசாரிகளும் அவ்வாறான தேசியக் கண்ணோட்டத்தில் மேலும் சிந்தித்தால் இடதுசாரி மற்றும் பொது உடமைக் கொள்கை என்ற அடிப்படையில் ஆபத்தான அரசியல் சிந்தனைகள் உலக அளவில் உருவாகி விடும் என்றும் அமெரிக்க வலதுசாரிகள் மத்தியில் ஒரு வகை பதற்றம் உண்டு. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் ரசிய உக்ரெயன் போர்ச் சூழலில் இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு உயர்வடைந்து வருவதாக மேற்குலக ஊடகங்களில் வரும் விமர்சனங்களை அவதானித்தால் புரியும். பெப்ரவரி மாதம் ஈக்குவடோரில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பு மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் இடதுசாரிக் கட்சியான குடிமக்கள் புரட்சிகரக் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அத்துடன் அரசியலமைப்புச் சட்டத்தில் சில மாற்றங்கள் கோரும் எட்டு அம்சத் தீர்மானங்கள் மீது பொது வாக்கெடுப்பும் நடைபெற்றது. இந்தத் தேர்தல்களில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான குடிமக்கள் புரட்சிகரக் கட்சி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. பாதுகாப்பை முன்னிறுத்துவது என்பது உள்ளிட்ட எட்டுக் கேள்விகளை மக்களிடம் சமர்ப்பித்து வலதுசாரி அரசு முன் வைத்தது. உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களோடு அதன் மீது பொது வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. எட்டு கேள்விகளுக்கும் எதிராக மக்கள் வாக்களித் திருக்கிறார்கள். வலதுசாரி அரசு முன்வைத்த எந்தத்திருத்தத்தையும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆளுங்கட்சிக்கு பலமான இடங்கள் என்று கருதப்பட்டவற்றிலும் இடதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளனர். ஈக்குவடோர் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரிகள் முழுமையாக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்று மேற்கு மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் கூறுகின்றன. அஞ்சுகின்றன. அதேபோன்று மற்றுமொரு தென் அமெரிக்க நாடான பிரேசில் கடந்த ஆண்டு நவம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரித் தலைவரான லூயிஸ் இனாசியோ வெற்றி பெற்றிருக்கிறார். இந்த வெற்றி பிரேசிலின் வெற்றியாக மாத்திரம் உலக நாடுகளால் அவதானிக்கப்படவில்லை. சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சில ஆண்டுகள் சரிவை சந்தித்து வந்த இடதுசாரிகளுக்குத் தென் அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் இந்த மாற்றம் உலக அளவில் இடதுசாரிகளுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் வலதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தியிருந்த நிலையில் அங்குள்ள இடதுசாரி கட்சிகள் மேற்கொண்ட தொடர் போராட்டங்களினால் வெற்றியைப் பெறமுடிந்தது. வலதுசாரி அரசாங்கத்தை மக்கள் நிராகரித்து, இடதுசாரி தலைவர்களிடம் ஆட்சி அதிகாரத்தைக் கையளித்திருக்கின்றனர். 2019 இல் மேலும் சில தென் அமெரிக்க நாடுகளான கியூபாவில் மைக்கேல் டியாஸ் கேணல், ஆா்ஜெண்டீனாவில் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர். பொலிவியாவில் 2020 இல் லுயிஸ் வெற்றி பெற்றார். 2021 இல் ஹோண்டிரஸ்ஸில் கேஸ்ட்ரோவும், நிகராகுவாவில் டேனியலும், பெருவில் பெட்ரோவும், சிலியில் கேப்ரியலும் வெற்றி பெற்றனர். இவ்வாறு படிப்படியாகத் தென் அமெரிக்கா இடதுசாரி தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி வருகின்றனர். தென் அமெரிக்க நாடுகளின் ஜனாதிபதிபதிகளாகத் வெற்றி பெற்றவர்களில் அதிகமானோர் தொழிலாள வர்க்கப் பின்னணியைக் கொண்டவர்கள். 2000 ஆம் ஆண்டு பின்லேடன் உள்ளிட்ட இஸ்லாமியக் குழுக்களின் தாக்குதல்கள் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்ததால் தேசியவாத கொள்கைகள் மூலம் வலதுசாரி தலைவர்கள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இந்தத் தேசியவாதச் செல்வாக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலும் தீவிரமடைந்தன. இதனால், இன விடுதலை வேண்டிப் போராடிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் உள்ளிட்ட விடுதலை இயக்கங்களையும் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் பயங்கரவாதப் பட்டியலில் இணைத்தன. ஆனால் இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் 2001 இல் விடுதலைப் புலிகள் ஒருதலைப் பட்ச போர் நிறுதத்தத்தை அறிவித்துப் பின்னர் 2002 நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சையும் ஆரம்பித்தனர். இருந்தாலும் புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்பட்டது. வலதுசாரித் தலைவர்கள் தங்கள் நாடுகளின் தேசியவாதக் கொள்கைகளை வலுப்படுத்தப் போரடிய விடுதலை இயக்கங்களின் அரசியல் கோரிக்கைகளையும் பயங்கரவாதமாகச் சித்தரித்து இலங்கை போன்ற உள்ளக மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நாடுகளின் அரசுகளின் இனவாத முகங்களுக்கு ஜனநாயகச் சாயம் பூசினர். இவ்வாறு தேசியவாதம் என்ற போர்வைக்குள் நின்று கொண்டு செயற்பட்ட காரணிகளினாலேயே மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வலதுசாரி தலைவர்கள், 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் பொருளாதார வளர்ச்சியைத் தவறிவிட்டனர். இது குறித்து அமொிக்கப் பொக்ஸ் தொலைக்காட்சி சமீபத்தில் விமர்சன நிகழ்ச்ச்சி ஒன்றை நடத்தியிருந்தது. பொருளாதாரத்தை வலுப்படுத்த செல்வந்தர்களுக்கு ஆதரவாக வலதுசாரி அரசாங்கங்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இப் பின்னணியில்தான் வலதுசாரிகளின் தேசியவாத கொள்கைகள் மக்களிடம் வலுவிழந்தன. ரசிய – உக்ரெயன் போரச் சூழலில், பணவீக்கம், வறுமை போன்றவை தற்போது உலகளவில் பெரும் பிரச்சினையாக அவதானிக்கப்படுகின்றது. உலகில் பண வீக்கம் குறித்து சர்வதேச நாணய நிதியம் சென்ற வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. 2010 இல் இருந்து 2022 வரையான பொருளாதார வீழ்ச்சிகளை இந்த அறிக்கை சுட்டிக்காடடியுள்ளது. இந்த நிலையில், வறுமையை நிச்சயம் ஒழிப்போம் என்ற தொனியில்; இடதுசாரிகள் தென் அமெரிக்க நாடுகளில் ஆட்சிகளைக் கைப்பற்றி வருகின்றமை அமெரிக்கா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் தாக்கத்தைச் செலுத்தலாம். ரசிய – உக்ரெய்ன் போரினால் உலகம் முழுவதும் பொருளாதாரச் சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மீட்டெடுப்பதற்கான தீவிரமான முயற்சி இடதுசாரி தலைவர்களுக்கு அவசியமாகின்றது என்ற கருத்து தற்போது உலக அளவில் பேச ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் கடந்த பத்து ஆண்டுகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அதனை மீட்சி பெறச் செய்யும் முயற்சியிலும் இடதுசாரிகள் கவனம் செலுத்த வேண்டிய தேவையிருந்தது. இதனாலேயே அங்கு இடதுசாரிகள் தொடர் வெற்றிகளைக் கண்டு வருகின்றனர். ஆனால் இடதுசாரிகளின் இந்த வெற்றி தென் அமெரிக்காவுடன் நிற்கப் போகிறதா அல்லது உலகம் முழுவதும் பரவப் போகிறதா என்பதைத் தற்போதைக்குக் கூற முடியாது. இடதுசாரிகள் தென் அமெரிக்க நாடுகளில் அடைந்துவரும் வெற்றி தேசியவாத நலனை முன்வைக்கும் கட்சிகளுக்குத் தடுமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இலங்கைத்தீவில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தித் தற்போது ஓய்ந்திருக்கும் இடதுசாரிகள் மீண்டும் ஒன்றினைந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்குரிய வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் இலங்கைத்தீவின் இடதுசாரிச் செயற்பாடுகள் என்பது வலதுசாரிகள் கையாளுகின்ற சிங்கள இனவாத உத்தியை ஒத்தது. பொருளாதார நெருக்கடி அதன் மூலமான வறுமை, இனச் சமத்துவமற்ற தன்மை, தொழிலாளர் பிரச்சினைகள் போன்றவற்றை இலங்கை இடதுசாரிகள் கையில் எடுத்துக் கடந்த சில மாதங்களாகப் போராடினர். பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவுடன் தொழிற் சங்கங்களையும் இணைந்துப் போராட்டம் நடத்தியிருந்தனர். ஆனால் இலங்கைத்தீவில் எழுபது வருடங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இன நெருக்கடிக்குரிய அரசியல் தீர்வாக அவர்களிடம் உறுதியான திட்டம் இல்லை. வெறுமனே சோசலிச சமத்துவம் என்ற கோசத்தை மாத்திரம் முன்வைக்கின்றன. இலங்கை ஒற்றையாட்சி அரசின் அதிகாரங்களைப் பங்கிட வேண்டும் என்பதில் இந்த இடதுசாரிகளுக்கு உட்னபாடுகள் இல்லை. தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற அங்கீகாரத்தை நிராகரித்து ”இலங்கையர்கள்” என்ற பொது அடையாளத்துடன் சோசலிச சமத்துவம் என்பதை மாத்திரமே இடதுசாரிகள் முன்னிலைப்படுத்துகின்றனர். இதன் பின்னணில் இந்த இடதுசாரிகளினால் நடத்தப்படும் போராட்டங்கள் தென் அமெரிக்காவில் ஏற்படுத்திய மாற்றங்களைப் போன்று இலங்கைத்தீவிலும் இடதுசாரிகளால் மாற்றங்களைச் செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையாண்ட சில உத்திகளினால் தற்போது இடதுசாரிகள் நடத்திய தொடர் போராட்டமும் ஓய்வடைந்துள்ளது. அல்லது நிறுத்தப்பட்டுள்ளது எனலாம். வேறு காரணங்களை முன்வைத்து இடதுசாரிகள் மீண்டும் ரணிலுக்கு எதிராகப் போராடினாலும், அந்தப் போராட்டங்களின் மூலம் எதிர்த்தரப்பில் உள்ள வலதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய வாய்ப்புகளே அதிகம். அப்படி எதிர்க்கட்சிகள் குறிப்பாக சஜித் அணி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால் அந்த ஆட்சியில் போராட்டம் நடத்திய இடதுசாரிகள் பங்களிப்புச் செய்யும் நிலை வரலாம். இலங்கைத்தீவின் வரலாற்றில் இடதுசாரிகள் வலதுசாரிக் கட்சிகளின் வெற்றிக்கு ஏதே ஒருவகையில் ஒத்துழைப்புச் செய்து பின்னர் அந்த ஆட்சியில் பங்கெடுத்துமுள்ளனர். உதாரணமாகத் தம்மை இடதுசாரி என்று கூறும் ஜே.வி.பி சந்திரிகாவின் ஆட்சியில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருந்தது. 2009 வரை போருக்கு ஒத்துழைத்து ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை முற்றாக நீக்கம் செய்யும் நோக்கில் ஜே.வி.பியுடன் இணைந்து ஏனைய இடதுசாரிகள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தன. தீவிர இடதுசாரியான வாசுதேவ நாணயக்கார மகிந்த அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்துப் போருக்கு ஒத்துழைத்திருந்தார். இப் பின்புலத்திலேதான், ரணிலுக்கு எதிராக இந்த இடதுசாரிகள் கடந்த சில மாதங்களாக நடத்திய போராட்டங்களில் வடக்குக் கிழக்குத் தாயக மக்கள் பெருமளவில் பங்கெடுக்கவில்லை. சிங்கள இடதுசாரிகள் உண்மையான மாற்றுக் கொள்கை குறிப்பாக இலங்கை ஒற்றையாட்சி என்ற அரச கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்து அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள முன்வந்தால் தமிழ்த்தரப்பு ஒன்றினைந்து போராடக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. வடக்குக் கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சமீபகாலமாக இராணுவ ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டு வரும் விகாரைகள், புத்தா் சிலைகள், தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களைத் திட்டமிட்டு அழிக்கும் செயல் எனத் தொிந்தும், சிங்கள இடதுசாரிகள் இதுவரையும் அதற்கு எதிராகப் போராட முன்வரவில்லை. ரணிலுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய இடதுசாரிகள், கொழும்பை மையப்படுத்திய பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் தமது போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு கோரி கடந்த மாதம் யாழ்ப்பாணம். மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களுக்கச் சென்று உரையாடியிருந்தனர். அப்போது தமது தரப்பு நியாயத்தைக் குறிப்பாக எழுபது வருட அரசியல் விடுதலைப் போராட்டம் பற்றி யாழ் பல்கலைக்கழக, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தெளிவுபடுத்தியிருந்தனர். தமிழ்த்தேசியக் கட்சிகளும் எடுத்தக் கூறியிருந்தன. ஆனாலும் இன்றுவரை பௌத்த மயமாக்கலுக்கு எதிராகக் குரல் கொடுக்க அவர்கள் முன்வரவில்லை. ஏனெனில் இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் அதிகார மாற்றங்களைச் செய்யவோ, தமிழர்கள் தேசிய இனம் என்பதை அங்கீகரிப்பதிலோ அவர்களுக்கு உடன்பாடு இல்லை. http://www.samakalam.com/சிங்கள-இடதுசாரிகளும்-பௌத/
  25. அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாவும் ரணிலின் உத்தியும் 1983 இல் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்ததும் காரண காரிய நோக்கில் அமெரிக்காவுடன் இந்தியா கூட்டாளி நாடாக மாறியதோ, அதேபோன்றதொரு பின்புலத்தில், ரணில் தற்போது அமெரிக்காவை நெருங்க முனைகிறார். இந்தியாவைக் கடந்து அமெரிக்க – சீன அரசுகளுடன் சமாந்தரமான – நேரடியான உறவைப் பேண வேண்டும் என்பதே சிங்கள ஆட்சியாளர்களின் நீண்டகால விருப்பம். அ.நிக்ஸன்- 1983 இல் ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கும் வரையும் அமெரிக்காவுடன் இணக்கமில்லாத பரம வைரியாக இருந்த இந்தியா, ஈழப் போர் தொடங்கியதும், அமெரிக்காவுடன் சுமூகமான அரசியலைப் பேண ஆரம்பித்தது. அதற்கேற்ப இந்திய வெளியுறவுக் கொள்கையை அன்று இந்திராகாந்தி வகுத்திருந்தார். அதன் பின்னரான சூழலில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு இந்திய ஆட்சியாளர்களும் அமெரிக்காவுடன் சீரான உறவைப் பேணி வந்தனர். 2016 இல் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியின்போது நரேந்திர மோடி அமெரிக்காவுடனான உறவை மேலும் இறுக்கமாகப் பற்றிப் பிடித்தார். இருந்தாலும் ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலில் ஜோ பைடன் நிர்வாகத்துடன் பனிப்போர் ஏற்பட்டுள்ளதால், ரசியாவுடனான இந்திய உறவு மேலும் நெருக்கமடைந்துள்ளது. உக்ரெயன் போரினால் ரசியாவின் ரூபிள் வீழ்ச்சியடைந்து பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருக்கும் சூழலில், அமெரிக்க டொலருக்கு எதிராகப் பதினெட்டு நாடுகளுடன் இணைந்து இந்திய ரூபாவில் சர்வதேச வர்த்தகத்தை மேற்கொள்ளும் ஏற்பாடுகளைப் புதுடில்லி முன்னெடுக்கிறது. இந்திய ரூபாவை சர்வதேசச் சந்தையில் பயன்படுத்துவது குறித்துக் கடந்த ஆண்டு யூலை மாதம் இந்திய ரிசவ் வங்கி (Reserve Bank of India) ஆரம்ப முயற்சியை மேற்கொண்டது. இந்திய மத்திய இணை நிதியமைச்சர் பகவத் காரத் நாடாளுமன்றத்தில் இதுபற்றி ஏற்கனவே அறிவித்திருந்தார். ‘சர்வதேச நாணயமாக மாறுவதன் முதற்படியாக இந்தியாவின் மத்திய வங்கி – ரசியா இலங்கை உட்பட பதினெட்டு நாடுகளில் உள்ள அறுபது வங்கிகளில் இந்திய ரூபாயில் பணம் செலுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடாக வோஸ்ட்ரோ (Vostro) கணக்குகளை ஆரம்பிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்க டொலர், யூரோ உட்பட அனைத்து வெளிநாட்டு நாணயங்களுக்கும் பதிலாக இந்திய ரூபாய் நாணயத்தில் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள இரண்டு இந்திய வங்கிகளில் ஒன்பது சிறப்பு வோஸ்ட்ரோ கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. “வோஸ்டோ” கணக்கு என்பது ஒரு உள்நாட்டு வங்கி வெளிநாட்டு வங்கிக்காக உள்நாட்டு வங்கியின் நாணயத்தில் வைத்திருக்கும் கணக்கு. ஏற்றுமதியை ஊக்குவித்து இறக்குமதியை எளிதாக்கும் ஒரு ஏற்பாடாகும். அதாவது சர்வதேச வர்த்தகத்தில் இந்திய ரூபாவைப் பயன்படுத்துவதற்குரிய வழிமுறை. இதனை இந்திய மத்திய வங்கி தயார்படுத்தியுள்ளது. சர்வதேசச் சந்தையில் அமெரிக்க டொலர் ஆதிக்கத்தில் இருந்து விடுபட விரும்பும் நாடுகளைக் கூட்டுச் சேர்க்கும் ரசிய – இந்திய அரசுகளின் முயற்சி தற்போது சாதகமாகியுள்ளன. இந்திய ரூபாய் பரிவர்த்தனை மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மேற்கொள்ளப்பட்டால், இந்தியாவிற்குக் கூடுதல் லாபம் கிடைக்கும். அந்த லாபம் ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கும். ரூபாய் – ரூபிள் வர்த்தகத்திற்கான வழிமுறையை எளிதாக்க இந்திய மத்திய வங்கி ஒப்புக் கொண்டுள்ளது என்றும் மேலும் சில தனியார் இந்திய வங்கிகளும் ஆர்வம் காட்டி வருவதாகவும் இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் (Federation of Indian Export Organizations- FIEO) தலைவர் ஏ.சக்திவேல் கூறியுள்ளார். கடந்த நிதியாண்டில் ரசியாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி சுமார் மூன்று தசம் முன்று பில்லியன் டொலர்கள் என்றும் இப் புதிய வர்த்தகம் நடைமுறைக்கு வந்தால் அந்த ஏற்றுமதி ஐந்து பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த வருடம் மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து ரசியாவை தனிமைப்படுத்தும் நோக்கில் ஸ்விஃப்ட் வங்கி (Swift Bank) நடைமுறைகளில் இருந்து ரசியாவின் பிரதான வங்கிகள் நீக்கப்பட்டன. இதனால் ரசியாவின் அதிகாரப்பூர்வ நாணயமான ரூபிள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. (ஸ்விஃப்ட் வங்கி என்பது சர்வதேச பணப் பரிமாற்றங்களை விரைவாகவும், எளிதாகவும் மேற்கொள்ளும் நிதிசார்ந்த வலைதளமாகும். (Worldwide Interbank Financial Telecommunication – Swift) 1973 ஆம் ஆண்டில் பெல்ஜியத்தில் நிறுவப்பட்டது. இந்த வங்கியில் நூற்நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பதினோராயிரம் வங்கிகள் தனியார் நிறுவனங்கள் இணைந்திருக்கின்றன) அமெரிக்க டொலருக்கு நிகரான ரசிய ரூபிள் மதிப்பு, எண்பதில் இருந்து நூற்றுப் பத்தொன்பதாக வீழ்ச்சியடைந்தது. ஒரு வாரத்தில் ஏறத்தாழ இருபத்தொன்பது வீத சரிவை ரசிய ரூபிள் சந்தித்தது. அணு ஆயுதங்களைத் தயாராக்கும்படி புட்டின் உத்தரவிட்டதில் இருந்து ரசியா ரூபிள் வீழ்ச்சியடைந்தது. இப் பின்னணியிலேயே அமெரிக்க டொலருக்கு எதிரான போரை புட்டின் ஆரம்பித்திருப்பதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. கடந்த வருடம் யூலை மாதம் ஆரம்பித்த இந்த முயற்சி தற்போது கைகூடும் நிலைக்கு எட்டியுள்ளது. தற்போது இந்திய ரூபாய் மூலம் வெளிநாட்டு வர்த்தகம் குறித்த வழிகாட்டுதல்களை மேற்கொள்ள ரசியாவின் மிகப்பெரிய வங்கியான ஷெபர் வங்கி (Sberbank – Sberbank Rossii PAO) மற்றும் இரண்டாவது பெரிய வங்கியான விரிபி (VTB Bank is a Russian majority state-owned bank VTB) வங்கி ஆகியவை இந்திய மத்திய வங்கியின் வோஸ்ட்ரோ கணக்குகளை ஆரம்பிப்பதற்கான ஒப்புதல் வழங்கியுள்ளன. காஸ்புறொம் (Gazprombank) என்ற ரசியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி ஒன்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பரிவர்த்தனைகளை இந்திய ரூபாயில் மேற்கொள்வதற்குரிய எற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. ஆகவே சர்வதேச வர்த்தகத்தில் இந்திய ரூபாவைப் பயன்படுத்துவது என்ற ரசியாவின் முடிவு உக்ரெய்ன் போரினால் வீழ்ச்சியடைந்திருக்கும் தமது நாணயத்தை மீளவும் புதுப்பிக்கும் நோக்கம் மாத்திரமல்ல, தங்கள் மீது தடை விதித்துவிட்டுத் தங்களிடம் பல வர்த்தகங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு (European Union – EU) சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதும் பிரதான நோக்கமும் உள்ளடங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அதிக எரிவாயுவை வழங்கிக் கொண்டிருந்த நாடு ரசியா. மொத்த எரிவாயு தேவையில் நாற்பது வீதத்துக்கு மேல் ரசியாவை, மாத்திரமே ஐரோப்பிய ஒன்றியம் நம்பியிருந்தது. ரசியாவின் எண்ணெய், எரிவாயு ஏற்றுமதிக்கு தடை விதிக்க அமெரிக்கா வலியுறுத்திய போது பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மறுத்துவிட்டன. ரசியாவைக் கைவிட்டால் எரிவாயுக்குச் சிக்கல் ஏற்பட்டுப் பொருளாதாரத்தின் மூலம் இழக்கப்படும் ஆபத்து நேரிடலாம் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கருதின. இதனை ரசியாவும் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளது. இச் சூழலை இந்தியாவும் நன்கு பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்ட சர்வதேச பொருளாதார லாபங்களைப் பெறும் முயற்சியை நுட்பமாகக் கையாண்டு வருகின்றது. இந்தியாவை நம்புவதால் ரசியாவுக்கும் இந்த வர்த்தகத்தில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் இதனால் அமெரிக்க டொலரை எதிர்க்க விரும்புகின்ற மேலும் பல நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து இந்திய ரூபாவைப் பயன்படுத்த ரசியா ஆரம்பித்துள்ளது. தனது நாணயத்தை மாத்திரம் பயன்படுத்திக் கூடுதல் வர்த்தகச் செயற்பாட்டில் ஈடுபட்டு வல்லரசுக்கான அங்கீகாரத்தைச் சீனா நெருங்கிவிட்டது. கடந்த ஒரு வருடமாக இடம்பெறும் போரினால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் ரசியா நிமிந்து நிற்பதற்குப் பின்னால் சீனா மூல காரணியாகவுள்ளது. இக் காரண காரியத்துடன் இந்திய ரூபா பயன்பாடும் ரசிய ஆதரவுடன் உலகில் அறிமுகமாகிறது. இப் பின்புலத்திலேதான், இந்திய ரூபாயில் இருதரப்பு வர்த்தகம் மேற்கொள்ள இலங்கை அரச வங்கி ஒன்றும் இந்திய மத்திய வங்கியில் வோஸ்ட்ரோ கணக்கைக் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்துள்ளது. வோஸ்ட்ரோ கணக்கைத் திறப்பதன் மூலம் இலங்கையிலுள்ள ஒருவர் பத்தாயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்திய ரூபாயை வைத்திருக்க முடியும் என அறிவிக்கப்பட்டுமிருந்தது. இந்திய – இலங்கை மக்கள் தமக்கிடையே சர்வதேச கொடுக்கல் – வாங்கல்களின் போது, இந்திய ரூபாவைப் பயன்படுத்த முடியும் எனவும் இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் இந்திய – இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்துக்கு மாத்திரமே இந்திய ரூபாவைப் பயன்படுத்த முடியுமெனப் பொருளியல்துறைப் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் கூறுகிறார். ஏனெனில் சீனாவுடனான வர்த்தகத்தில் இந்திய ரூபாவைப் பயன்படுத்த முடியாது என்று அவர் சுட்டிக்காட்டுகின்றார். ஆனால் டொலருக்குப் பதிலாக இந்திய ரூபாயில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடுவது தொடர்பாக தெற்காசிய நாடுகளுடன் இந்திய மத்திய வங்கி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்றும் மலேசிய அரசுடன் சென்ற வாரம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்றும் இந்திய மத்திய வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். டொலருக்குப் பதிலாக ரூபாயில் வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. இந்தக் கட்டமைப்பு வரும் ஆண்டுகளில் அதிக முக்கியத்துவம் பெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனினும் அமெரிக்காவினால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ரசியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா வர்த்தகத்தில் ஈடுபடுவதும் சிக்கல் நிறைந்ததாக இருக்கும் சூழலில், இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்து ஆளுநர் சக்திகாந்த தாஸ் நம்பிக்கை வெளியிட்டிருப்பது இந்தோ – பசுபிக் பிராந்திய அரசியலில் பெரும் தாக்கத்தைச் செலுத்தக்கூடிய ஆபத்துக்கள் உண்டு. இருந்தாலும் இந்த ஆபத்துக்களை இல்லாமல் செய்து ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பான பணப் பரிவர்த்தனையை ரூபாயிலேயே மேற்கொள்வதற்கான கட்டமைப்புகளை இந்திய மத்திய வங்கி மேலும் விரிவுபடுத்தியும் வருகின்றது. இந்த முயற்சி தற்போது கைகூடியுள்ளதாகவே இந்திய ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் நம்புகின்றனர். இதன் மூலம் இந்திய ரூபாய் சர்வதேச நாணயமாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் இந்தியாவுக்கு உண்டு. ஆனால் அமெரிக்க டொலருக்கு எதிராகச் சர்வதேச வர்த்தகத்தில் தமது நாணயங்களைப் பயன்படுத்திய ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன், லிபியத் தலைவர் கடாபி ஆகியோர் அதிகளவு லாபத்தைப் பெற்றிருந்தாலும் இறுதியில் அவர்கள் இல்லாமல் போன வரலாறுகளும் உலகின் கண்முன்னே தெரிகின்றன. அணுசக்தி ஆயுதங்கள் இருப்பதாகக் கூறியே ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்திருந்தது. ஆனால் அது பொய்க் குற்றச்சாட்டு என்றும் தாக்குதலுக்கான உண்மைக் காரணமும் பின்னர் பகிரங்கமாகியது. இச் சூழலில், இந்திய ரூபாவைப் பயன்படுத்துவது என்ற ரசிய – இந்திய கூட்டு முயற்சி தற்போது வெற்றியளித்து வருவது போன்ற தோற்றப்பாட்டைக் காண்பித்தாலும், அது எந்தளவு காலத்துக்கு நீடித்துச் செல்லும் என்ற கேள்விகளும் விஞ்சியுள்ளன. அதேநேரம் ஈராக், லிபியா ஆகிய சிறிய நாடுகளைத் தாக்கியது போன்று ரசிய – இந்தியக் கூட்டையும் அதற்கு ஆதரவு வழங்கும் நாடுகளையும் அமெரிக்கா இலகுவில் தாக்கிவிடவும் முடியாது. ஆனால் புவிசார் அரசியல் – பொருளாதார உத்திகளை வேறொரு வகிபாகத்தில் அமெரிக்கா கையாள முற்படுமாக இருந்தால், இலங்கை, நேபாளம் போன்ற சிறிய நாடுகள் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய சந்தர்ப்பங்களை மறுப்பதற்கில்லை. ஏற்கனவே பாகிஸ்தான் அமெரிக்கா பக்கம் நிற்கிறது. அத்துடன் சீன – இந்திய பகைமை என்பது இலகுவில் உடன்பாட்டுக்கு வரக்கூடியதுமல்ல. இருந்தாலும் வட இந்திய பாதுகாப்புக் கருதி ரசியா மூலம் சீனாவுடன் இந்தியா முரண்பாட்டில் உடன்பாட்டுக்கு வரக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. ஆனாலும் இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகத்தை மேற்கொள்ள சீனா உடன்படாது. எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகப் பிரித்தானியா இருந்தபோது, சர்வதேச வர்த்தகச் செயற்பாடுகளில் யூரோ நாணயத்தைப் பயன்படுத்தாமல் தமது பவுன்ஸ் நாணயத்தில் மாத்திரம் பிரித்தானியா ஈடுபட்ட உத்தியைச் சீனவும் கையாளக்கூடும். அதாவது தெற்காசியப் பிராந்தியத்தில் சீனா, தனது நாணயத்தில் மாத்திரம் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டுக் கொண்டு இந்திய ரூபாவில் ஏனைய நாடுகள் வர்த்தகத்தில் ஈடுபடுவதை அனுமதிக்க விரும்பக்கூடும். ஏனெனில் சீன – ரசிய உறவு என்பது ஆழமானது. இந்த உறவுதான் இந்தியாவுக்கும் பாதுகாப்பானது. இந்தப் பாதுகாப்புக்குள் இலங்கையும் இணையுமா இல்லையா என்பதைத் தற்போது அனுமானிக்க முடியாது. ஏனெனில் இந்தியாவைக் கடந்து அமெரிக்க – சீன அரசுகளுடன் சமாந்தரமான – நேரடியான உறவைப் பேண வேண்டும் என்பதே சிங்கள ஆட்சியாளர்களின் நீண்டகால விருப்பம். 1983 இல் என்ன காரணத்துக்காக அமெரிக்காவுடன் இந்தியா கூட்டாளி நாடாக மாறியதோ, அதேபோன்றதொரு காரண காரிய பின்புலத்தில் 2023 ஆம் ஆண்டில் ரணில் அமெரிக்காவை நெருங்க முனைகிறார். இந்திய ரூபாவைச் சா்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்தும் இந்திய – ரசிய வியூகம், டொலருக்கு ஆபத்து என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஐரோப்பிய ஒன்றியம் யூரோ நாணயத்தைப் பயன்படுத்துவதும் அமெரிக்க டொலருக்குத் தொடர்ச்சியான விழ்ச்சிதான். இருந்தாலும் வேறு வகையான அணுகுமுறைகள் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான உறவை அமெரிக்காவினால் பேண முடிகிறது. ஆனால் அதேபோன்று தெற்காசிய நாடுகளுடன் அமெரிக்காவுக்கு வேறு வழியிலான அணுகுமுறைகளைப் பின்பற்றுவது கடினம். இக் காரணங்களினால் அமெரிக்க – இந்திய உறவும், ரசிய இந்திய உறவும். சீன, இந்திய உறவும் எதிர்காலத்தில் பல பரிமாணங்களில் முரண்பாடான ஒழுங்கற்ற அரசியல் (Paradoxically Irregular Politics) தன்மையை உருவாக்கலாம். அந்த ஒழுங்கற்ற அரசியல் தன்மைக்குள் இலங்கை நிலையை தக்கவைப்பதில், ரணிலின் பார்வை அமெரிக்காவை நோக்கியதாகவே நீளுகிறது. சீனாவை நோக்கிய நம்பிக்கையும் ரணிலுக்கு உண்டு. அதேநேரம் இந்திய ரூபாய்களை சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்தி இலங்கைத்தீவின் தற்போதைய டொலர் நெருக்கடியைக் குறைக்கும் நுட்பங்களையும் மிகச் சாதுரியமாக டில்லியை ரணில் கையாளுகின்றார். அதாவது ஈழத்தமிழர் விவகாரம் உள்ளிட்ட இலங்கைத்தீவின் உள்ளக அரசியல் – பொருளாதார ரீதியில் சிந்தித்து, வல்லரசுகளின் புவிசார் அரசியல் – பொருளாதார போட்டிகளுக்குள் சிக்குப்படாமல் சிங்களத் தேசியத்தைக் காப்பாற்ற விளைகிறார். இப் பின்னணியில் சிங்களவர்களைக் கையாளக்கூடிய அளவுக்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் வழிகாட்டல் தலைமைக்குரிய (Guiding Leadership) அரசியல் வகிபாகம் இல்லை என்பது அமெரிக்க இந்திய அரசுகளுக்குப் புரியாததல்ல. ஏன் சீனாவுக்கும் அது தெரியும். இந்த இடத்தில் ஈழத்தமிழ்த்தரப்பு தமக்குள் உள்ளக மோதல்களிலும் சிலை வைப்புப் போட்டிகளிலும் ஈடுபட்டுத் “தமிழ்த்தேசிய அரசியல் விடுதலை” (Political Emancipation) என்ற பிரதான இலக்கைத் தவறவிட்டுக் கொண்டிருக்கின்றது. வெவ்வேறு உணர்வுகளுக்குள் மிகவும் இலாவகமாக எடுபட்டுத் தம்மை அறியாமலேயே தமிழ்ச் சமூகம் இலகுவாகப் பலியாகிக் கொண்டிருக்கிறது. http://www.samakalam.com/அமெரிக்க-டொலருக்கு-எதிரா/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.