Search the Community
Showing results for tags 'ஆண் பெண் சமத்துவம்'.
-
பார்வைகள் “Me Too” Movement அவுஸ்திரேலியாவை சுற்றி வளைத்து பிரதம மந்திரி இலிருந்து பாதுகாப்பு அமைச்சர் , Attorney General , பிரபல உதை பந்தாட்ட வீரர்கள், கடை நிலை அலுவலக ஊழியர்கள் என்று வாழ்வின் எல்லா நிலைகளிலும் இருக்கக் கூடியவர்களின் இருப்பினை கேள்விக் குறியாக்கிக் கொண்டிருக்கிறது. பெண் உரிமை என்று வாய் கிழியக் கத்தி கொண்டிருக்கும் நாம் உண்மையில் நடை முறையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்…? எனது அனுபவங்களின் தொகுப்பாக சில பதிவுகள் ………… பார்வை 1 கொஞ்ச நாட்களாகவே எனது கண் பார்வை சரியில்லை என்று ஒரு ஃபீலிங். இரவு நேரங்களில் டிரைவ் பண்ணும் போது முன்னாலிருக்கும் ரோடு மங்கலாக தெரிவது போல ஒரு பிரமை . போன கிழமை நிலைமை மேலும் மோசமாயிற்று. இரவு டிரைவ் பண்ணும் பொது முன்பு மங்கலாயிருந்த தெருக்களெல்லாம் இப்ப கறுப்பாகத் தெரியத் தொடங்கிற்று.இதென்னடா கொடுமை சரவணா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு ஹை பீம் ஐ தட்டி விட்டால் வீதி நன்கு தெரிந்தது. அத்துடன் எதிரே வந்த கார்க்காரனின் ஆட்சேப ஹார்ன் சத்தமும் கூடவே வந்தது. இருந்தால் போல் பொறி தட்டியது. வாகனத்தை நிற்பாட்டி விட்டு முன்னுக்கு ஹெட் லைட் ஐ போய்ப் பார்த்தல், சுத்தம் - இரண்டும் செத்துப் போய் இருந்தன . டொயோட்டா காரன் இப்ப இரண்டு வருடமாக முன்னும் பின்னமும் புது மொடலுக்கு மாத்தவில்லையோ என்று கேட்ட படி. அலுவலகத்தில் புதிதாக சேர்பவர்கள் முதல் தரம் எனது வாகனத்தைப் பார்க்கும் போது “என்ன ஒரு வருடம் இருக்குமா வாங்கி” என்று தான் கேட்பார்கள். ஏழு , எட்டு வருடம் என்று சொன்னால் நான் எதோ பகிடி விடுகிறேன் என்று அப்பால் போய் விடுவார்கள். இப்பிடி இருக்கும் போது அலுவலகம் தரும் வெஹிகிள் அலவன்ஸை திரும்பவும் கொண்டு போய் டொயோட்டா காரனிடம் கொட்டி அழ வேண்டிய அவசியம் இல்லை தானே. சொல்ல வந்த விஷயமே வேறு. எனது கார் ஓடும் 34 வருட கால அனுபவத்தில் -பழைய பியட் ஒன்றுடன் 1987 இல் திருகோணமலையில் தொடங்கியது- ஹெட் லைட் பல்பு பியூஸ் ஆகி மாற்ற வேண்டிய தேவை வந்தது இது தான் முதல் தரம். ஹெட் லைட் அப்பிடியே செட் ஆக மாற்ற வேண்டுமாக்கும் என நினைத்துக் கொண்டே டொயோட்டா சேவை காரனுக்கு அடிக்க , அவன் மாடல் நம்பரை கேட்டு விட்டு தங்களிடம் ரீபிளேஸ்மென்ட் பல்பு ஸ்டாக் இல் இல்லை என்றும் “சூப்பர் சீப் ஆட்டோ” போன்ற கடைகளில் இருக்கும் என்றும் சொன்னான் . அதனை வாங்கி வந்தால் போட்டுத் தருவானா என்று கேட்க, சில வினாடிகள் மௌனத்தின் பின்னர் “ ஓம் செய்யலாம், ஆனால் வாங்கிற இடத்திலேயேயே அவர்கள் போட்டும் தருவார்கள், இங்கே கொண்டு வந்தால் நாங்கள் சேவை சார்ஜ் எடுப்போம்” என்றான் . சோ “சூப்பர் சீப் ஆட்டோ “இற்கு போனேன். கவுண்டர் பெண்மணியிடம் கேட்க , இன்னொரு பெண்மணியிடம் என்னை அனுப்பி வைத்தா ள் , சிறு பெண்ணொருத்தி ,வயது இருபதுகளில் தான் இருக்கும் , பல்கலை மாணவியாக பகுதி நேர வேலை செய்பவராக இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன். கார் சமாச்சாரங்களில் அனுபவம் உடையவர்கள் யாரிடமாவது கூட்டிச் செல்வாள் என நினைத்துக் கொண்டேன். அந்த பெண்மணி என்னை ஒரு கம்ப்யூட்டர் திரைக்கு அழைத்துச் சென்று எனது வாகன மாடல் போன்ற விபரங்களை கேட்டு கம்ப்யூட்டருக்குள் அவற்றை தட்டி அனுப்பி இரண்டு விதமான பல்புகள் இருக்கின்றன என்று 30 செகண்ட்ஸ் நேரத்தில் சொல்கிறாள். இதே அலுவலை எனது கம்ப்யூட்டர் இல் 10 நிமிடங்களுக்கு மேலாக செலவழித்தது கண்டுபிடித்தது எனது ஞாபகத்திற்கு வந்தது. மூன்றாவதாக ஒரு LED பல்பும் இருந்தது. 6000K ரகம் 50% வெளிச்சம் கூட. அதை பற்றி கேட்டேன் , இருக்கின்றது, ஆனால் அது Off-Road பாவனைக்கு மட்டும் தான் அலவ்டு , Town ஓட்டத்திற்கு தர மாட்டோம் என்று தெளிவாக சொன்னாள். அந்த பல்புகளை பொருத்தி விடும் சேவையும் இருக்கா என கேட்டேன் . “ஆம் பத்து டாலர் சேவைக் கூலி” என்று பதில் வந்தது. “நல்லது , பொருத்துபவனை அழைத்துக் கொண்டு போய் இந்த பல்புகள் சரியாக பொருந்துகின்றதா என சரி பார்த்து விடலாமா” என கேட்டேன். “பிரச்சனை இல்லை செய்து விடலாம்” என்று பதில் வந்தது . அந்த இரண்டு செட் பல்புகளையும் எடுத்துக் கொண்டு வாகனம் நிற்பாட்டி இருக்கும் இடத்தை காட்டுமாறு சொல்லிக் கொண்டு முன்னே போனாள். பொருத்துபவனுக்கு அறிவித்திருப்பாளாக்கும் என உள்ளுக்குள்ளே நினைத்து கொண்டாலும் எதற்கும் உறுதி செய்து கொள்வோம் என்று பொருத்துபவன் அங்கே வருவான் தானே என்று கேட்டும் ( whether HE will come over there ) வைத்தேன். நிமிர்ந்து பார்த்து மெல்லிய புன்சிரிப்புடன் ஓம் என்றாள். வாகனத்தை நெருங்கியதும் Bonnet ஐ திறக்கச் சொன்னாள். கைக்கு கையுறையை மாட்டினாள். ஹெட் லைட் இன் பின் புறமாக கையை கொடுத்து வெகு இலாவகமாக சுட்டுப் போயிருந்த பல்பை கழற்றி எடுத்தாள். கையில் வைத்திருந்த இரண்டு வகைகளுடனும் ஒப்பிட்டுப் பார்த்தாள். அதில் ஒன்று தான் பொருந்தும் என்றாள். எல்லாம் ஒரு நிமிடத்துக்குள்ளேயே நடந்து முடிந்திருக்கும். நான் பேச்சிழந்து போய் அவள் செய்வதை பார்த்து கொண்டிருந்தேன். என் உள்ளேயிருந்து ஒரு குரல் எங்கேயேடா உனது “அவன்” என்று என்னை பரிகாசம் செய்து கொண்டிருந்தது, அவளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை தான். அடுத்த 10 செகண்ட்ஸ் இல் பல்பை மாத்தி விட்டு நிமிர்ந்தாள். மற்ற பக்கமும் மாத்த வேண்டும் என்றேன். இரண்டுக்குமென்றால் 15 டாலர் வரும் என்றாள். மௌனமாக தலையாட்டினேன். உள்ளுக்குள் ஒரேயடியாக வெட்கித்துப் போய் நின்றிருந்தேன். நான் இரண்டு வளர்ந்த பெண்பிள்ளைகளின் தகப்பன். இருவரும் மருத்துவ துறையில். வீட்டில் ஆண், பெண் சமத்துவம் பற்றி அடிக்கடி மனம் திறந்த உரையாடல்கள் இடம்பெறும் . தங்கள் அப்பா ஆண் பெண் சமத்துவம் பற்றி மிக நல்ல புரிந்துணர்வு கொண்டிருக்கிறார் என அவர்கள் முழுமையாக நம்புபவர்கள். அந்த பெண்ணுக்கு அந்த பல்புகளை மாற்றும் தத்துவம் இருக்கும் என்று யோசிக்கக் கூட இடம் கொடுத்திராத எனது ஆண் உயர்ச்சி மனப்பான்மை தடுத்துக் கொண்டிருந்த வெட்கக் கேடான விஷயத்தைப் பற்றி இளைய மகளுடன் கதைத்தேன் . “இதைத் தானே அப்பா நாங்களும் சொல்கிறோம் , எங்களையும் சமயங்களில் சில தூக்கி பறிக்கிற விடயங்களை நீங்கள் செய்ய விடுவதில்லை தானே; அதனுடைய நீட்சி தான் அப்பா இது.” “கவலைப்படாதீர்கள் எல்லாம் போக போக சரியாகி விடும். ரோம் கூட ஒரே நாளில் கட்டி முடிக்கப்பட்டதல்ல என்று நீங்கள் தானே அடிக்கடி சொல்வீர்கள்” என்று ஆறுதல் மொழியும் வந்தது…. பார்வை 2 வேறொரு சமயம் …..