Search the Community
Showing results for tags 'ஈவிகேஎஸ் இளங்கோவன்'.
-
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் 14 டிசம்பர் 2024, 05:53 GMT ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலமானார். அவருக்கு வயது 75. உடல் நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ''ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 13 நவம்பர் 2024 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14 டிசம்பர்) காலமானார்'' என்று மியாட் மருத்துவமனை கூறியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக பொறுப்பு வகித்த தனது மகன் திருமகனின் மறைவைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்த தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ''இளங்கோவன் வெளிப்படையாக பேசக்கூடிய ஒரு தைரியமான தலைவர். அவர் ஒருமித்த கருத்தை உருவாக்குபவர். காங்கிரஸ் கட்சி மற்றும் தந்தை பெரியாரின் முற்போக்கு கொள்கைகளை நிலைநிறுத்த தனது முழு வாழ்க்கையை அர்ப்பணித்தார். உறுதியான அர்ப்பணிப்புடனும் தமிழக மக்களுக்கு சேவை செய்தார்'' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது இரங்கலை தெரிவித்துள்ளார் அரசியல் பயணம் Getty Images மத்திய அமைச்சராக இருந்தபோது பிரதமர் மன்மோகன் சிங்குடன் இளங்கோவன் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் குடும்பத்தில் இருந்த வந்த இளங்கோவன், பெரியார் ஈ.வெ.ராமசாமியின் பேரன். பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வெ.கி.சம்பத். திமுக, காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கட்சி என அரசியல் பயணத்தைத் தொடர்ந்த சம்பத்தின் மகன் ஈவிகேஎஸ் இளங்கோவன். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய இணை அமைச்சர் என பல பதவிகளை இளங்கோவன் வகித்துள்ளார். அவரது தந்தை ஈவிகே சம்பத்தின் மரணத்திற்கு பிறகு, இளங்கோவன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அப்போது அவர் முக்கிய தமிழ் திரையுலக நடிகரும், ஈவிகே சம்பத்தின் நண்பருமான சிவாஜி கணேசனுடன் ஒன்றாக காங்கிரஸ் கட்சியில் பயணித்தார். 1984 ஆம் ஆண்டு, அதிமுக – காங்கிரஸ் கூட்டணியில், சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட இளங்கோவன் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு சென்றார். ஈவிகேஎஸ் இளங்கோவன் இதுவரை இரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும்(சத்தியமங்கலம், ஈரோடு கிழக்கு ) ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும்(கோபிசெட்டிபாளையம் தொகுதி,2004) வெற்றிபெற்றுள்ளார். இரண்டு முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளார். இளங்கோவன் இருமுறை தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்துள்ளார். கடந்த 2004–2009 காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராக பதவி வகித்துள்ளார் https://www.bbc.com/tamil/articles/clygqjp9k17o?at_campaign=ws_whatsapp
-
நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி! KaviMar 16, 2023 07:06AM நெஞ்சு வலி காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்காக திமுக அமைச்சர்கள் பட்டாளமே ஈரோடு கிழக்கில் முகாமிட்டு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தது. இந்நிலையில் ஈவிகேஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கடந்த வாரம் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவி ஏற்றார். இந்த சூழலில் நேற்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதயவியல் மருத்துவர்கள் நேற்று இரவு அவருக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மருத்துவமனை தரப்பிலிருந்தோ ஈவிகேஸ் இளங்கோவன் தரப்பிலிருந்தோ இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. https://minnambalam.com/political-news/evks-elangovan-hospitalized-in-chennai-porur/