ஒரே நேரத்தில் தாயும், அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த உலக அதிசயம்!
சிரியாவின் துருக்கிய மருத்துவமனையில், ஒரே நாளில் ஒரே நேரத்தில் தாயும் அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய துருக்கியின், கோனியாவைச் சேர்ந்தவர் பாதிமா பிரின்சி(42), அவரது மகள் காதா பிரின்சி(21). இவர்கள் இருவரும் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த செவ்வாய்கிழமை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் பிரசவ சிகிச்சை பார்த்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் ஒரே நாளில், ஒரே நிமிடத்தில், ஒரே நொடியில் ஆளுக்கொரு அழகான ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.
இதுபோன்ற அபூர்வ நிகழ்வு உலகிலேயே இது தான் முதன்முறை என்ற மருத்துவர்கள், இதுவொரு அதிசயம் என்று தெரிவித்துள்ளனர்.
இவர்களின் குழந்தைகளுக்கு துருக்கியின் குடியரசுத் தலைவர் ரஜப் தையிப் அர்துகான், தாயின் பிள்ளைக்கு ரஜப் என்றும், மகளின் குழந்தைக்கு தையிப் என்றும் பெயர்களைச் சூட்டியுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாதிமா பிரின்சியும், அவரது மகள் காதா பிரின்சியும் சிரியாவை விட்டு வெளியேறி துருக்கியில் அடைக்கலம் புகுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி